Pages

Tuesday, June 14, 2022

சிங்கவேள் குன்றமே....

அஹோபிலமா? அது எங்கே இருக்குன்னு கூட தெரியாது. ஏதோ ஒரு உள்ளுணர்வுல என் கஸின் எனக்கு வாட்ஸப்ப, நானும் அந்த விளையாட்டுக்கு வரேன்னு சொல்லியாச்சு. க்ரூப் டூவர்லாம் போய் வருஷக்கணக்காச்சு. ஏனோ அந்த கான்ஸெப்டையும் முற்றிலும் மறந்தாச்சு. கடைசியா 2008லஅப்பா கூட ஷீரடி மந்திராலயம், ஷனி ஷிங்கனாபுர் போய்ட்டு வந்ததோடு சரி. நாலு நாளைக்கு முன்னாடி பணத்தை கட்டிட்டு வாட்ஸப் க்ரூப்பில் ஆக்டிவிட்டிக்காக ஆவலுடன் காத்திருந்தேன். 

அதுக்குள்ளே ஆஃபீஸில் மூழ்கும் அளவுக்கு வேலை(யை) வளர்த்து விட்டுண்டுட்டேன். ஏன்னா ரிட்டன்ல நம்ம உடம்பு என்ன கண்டீஷன்ல இருக்கப்போறதோன்னு நமக்கே தெரியலையே? அதனால அவசர அவசரமா மாசக்கடைசியில் பண்ணி முடிக்கவேண்டிய வேலையை இப்போவே எடுத்து முடிச்சு ஹேண்டோவரும் ஆச்சு. சிக் லீவ் எதும் போட வேண்டி வந்துருமோ மொமெண்ட்!

அது தான் கஸின் டிஸைடு பண்ணியிருக்காளே, எல்லாம் சரியாத்தான் இருக்கும்ன்னு ஒரு குருட்டு நம்பிக்கை. அவ இன்டுவிஷன் & டெஸிஷன் மேக்கிங் ஸ்கில்ஸ் மேல அசராத நம்பிக்கை எனக்கு. அவ என்னாட்டம் எல்லாம் இல்லை. சூப்பர் ஸ்பிரிச்சுவல் & இண்டெலக்சுவல். (ஆனாலும் என் கஸின் தான், தெர்ர்ரியும்ல) 

எட்டு மணிக்கு அண்ணா நகர் வெஸ்டில் வண்டிக்கு எல்லாரும் அஸெம்பிள் ஆகிடணும்ன்னு நமக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன். அதே மாதிரி கோயம்பேடு ட்ராஃபிக்கில் நீந்திண்டு  8:03க்கு போயாச்சு. நல்ல அருமையான வால்வோ கோச். எல்லாரும் ஏறி செமி ஸ்லீப்பரில் செளகர்யமா தூங்கிண்டே போயாச்சு. விடிஞ்சா அஹோபிலம். ரம்யமான சூழலில் காட்டுக்குள்ளே ஒரு வேத பாடசாலையில் அறைகள். காட்டின் சத்தமே மனசுக்கு அவ்வளோ இதம். இந்த மாதிரி ஒரு இடம் இருக்கும்ன்னு நாமெல்லாம் நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டோம்.  ஐஞ்சரைக்கு எல்லாரும் இறங்கி அவா அவா ரூம்க்கு போய்ட்டு பல்லைத்தேய்ச்சு முடிச்சுட்டு பார்த்தா,  அரை மணியில் எல்லாருக்கும் சுடச்சுட காஃபி கொடுத்துட்டா. எனக்கானா ஆச்சர்யம். எதும் மேஜிக் ட்ரிக்கா இருக்குமோ? அடுத்தடுத்து எல்லாரும் குளிச்சு கிளம்பி 7:30க்கி கீழே வந்து பார்த்தா, சுடச்சுட பொங்கல் வடை, சேவை, சட்னி, சாம்பார் எல்லாம் ரெடி! மறுபடியும் மேஜிக்கா? 

சமீபத்துல க்ரூப் டூவர்ஸ் எல்லாம் இவ்ளோ டெவலப் ஆகியிருக்குன்னு சத்யமா தெரியாது. எந்த அசெளகரியமும் இல்லாம பரம செளக்கியமா எல்லா ஏற்பாடுகளையும்  பண்ணி அழைச்சுண்டு போய்ட்டு வர்றா. நமக்கு சோறு முக்கியம்ங்கறதுனால நன்றியுணர்ச்சி பொங்கியது. பொங்கல் வடையில் கண்ல ஜலம் வந்திருந்தது. 

எல்லாரும் ஒத்துழைக்க டிஃபன் ஆனதும் கிளம்பினோம். ஜீப்புன்னா எனக்கு ஜாலி. ஏன்னா மலையேத்தம் இறக்கத்துல வயத்தை குமட்டாது வாந்தி வராது. காத்தோட்டமா நன்னா இருக்கும். ஆனா ஜீப்புக்கு ரோடு தேவையில்லைன்னு அப்போ எனக்கு தெரிஞ்சிருக்கலை. காலி தீப்பெட்டிக்குள் ஏழே ஏழு குச்சியை போட்டு குலுக்கோ குலுக்குன்னு குலுக்கினா எப்படி இருக்குமோ அப்படி உணர்ந்தோம். கரடு முரடான பாதையில் மலையின் உள்ளும் புறமும் ஜீப்பை சர்ர் சர்ர்ன்னு கேசவ்வின் லாவகமான கரங்கள் செலுத்தித்து.

இறங்கிட்டு பார்த்தா கூட பயணித்த  அருணின் தலை, சட்டை பூரா செம்மண் புழுதி. மூஞ்சி பூரா முல்தானி மட்டி பேக் போட்டுண்டாப்புல அப்படி ஒரு அழகு அந்த ஜீப்புல போன ஏழு பேரும்.  அப்போத்தான் ஒரு உண்மை உறைச்சது. அடடா நாம திருமுகமும் இதே மாதிரி தானே இருக்கும்? ஓ அதுக்குத்தான் மாஸ்கை போட்டுக்கோன்னு பாலாஜி சார் சொன்னாரோ? பெரிவா சொன்னா பெருமாள் சொன்னாப்புலன்னு சும்மாவா சொல்லியிருக்கா? 

இறங்கின இடம் பாவன நரஸிம்மர் கோவில். மலை உச்சியில் ரொம்பவே குறுகலான பாதையில் ஒரு ஆயிரம் ட்ராக்டர்கள் நிக்கறது. சனிக்கிழமை அதோடு ஸ்வாதி நட்சத்திரம் வேறையாம்.  கூட்டம் அலைமோதுது. கிராமத்து ஜனங்கள். பெருமாளை சேவிக்க கூட்டம் கூட்டமா வந்திருந்தா. விசித்திரமா தோணின விஷயம் பலி கொடுக்கறச்சே ஆடு மாடுகளை பாதையிலேயே வெட்டி தெருவெல்லாம் ரத்த ஆறா ஓடறது. அப்படியே ஸ்வாமிக்கு நிவேத்யம். பார்க்க புதுமையா இருந்தது. அது அவா கலாச்சாரம். அந்த பக்தியை மெச்சாம இருக்க முடியலை. எந்த நிலையிலும் ஸ்வாமியை விட்டுக்கொடுக்காம நாள் கிழமைக்கு ட்ராக்டரை போட்டுண்டு கேஸ், சிலிண்டர் பாத்திரங்கள் சகிதம் வர்றது சாமானிய விஷயமில்லை. கூட்டத்தையோ வெயிலையோ யாரும் கண்டுண்டதா தெரியலை

எங்க யாத்திரா க்ரூப் மெம்பர்ஸ் பேட்ச் பேட்ச்சா போறவா எல்லாரையும் பிடிச்சு கோவில் விசேஷத்தை, தலபுராணத்தை  சுருக்கமா சுப்பையா சார்ங்கற கைடு சொல்லிண்டே வந்தார். 

அடுத்த டெஸ்டினேஷன் பார்கவ நரஸிம்மர் கோவில். நம்மூர் திரு நீர்மலையை ஞாபகப்படுத்தினது அந்த கோவில். கொஞ்சம் படிகள். ஏறிட்டு பார்த்தா நரஸிம்மர் கோவிலில் நிம்மதியையும் அமைதியையும் அள்ளித்தர்றார். 

புழுதி பறக்கும் பாருன்னு பாடிண்டே ரூமுக்கு வந்தப்போ கண்ணை மறைச்சுடுத்து முல்தானி மட்டி பேக். சரின்னு மூஞ்சி அலம்பிண்டு கீழே வந்தா விஸ்தாரமான மெனு. அலைச்சலுக்கும் மெனுவுக்கும் என்ன ஒரு பொருத்தம்? அமோகம்! பெருந்தீனி சாப்பிட்டுட்டு அன்ன தாதா சுகி பவன்னு சொல்லிட்டு ரூமுக்கு வந்தா ஒரு மணிக்கூர் மயக்க நிலை. உண்ட களைப்பு தொண்டருக்குமுண்டோல்லியோ?

ஐஞ்சு மணிக்கு காட்டுக்குள்ளே இருக்கும் கோவில்கள் சாத்திடுவாளாம். அதனால நாலு மணிக்கு புறப்பட சொல்லிட்டார் பாலாஜி சார். மூணே முக்காலுக்கு சுடச்சுட டீ. கிளம்பி ரெடி ஆகி வடிவேல் மாதிரி தம்டீ கும் டீன்னு சவுண்டு விட்டுண்டு அந்த மசாலா டீயை குடிச்சுட்டு தெம்பா புறப்பட்டோம். அடுத்தது யோக நரஸிம்மர் & சத்ர வட நரஸிம்மர். ஆக ஒரே நாளில் எப்படியோ நாலு நரஸிம்மரை பார்த்து முடிச்சுட்டோம். சாயங்காலம் அழகிய சிற்பங்கள் இருக்கற கிருஷ்ணதேவராயர் கட்டின பெரிய கோவில் பார்க்க போனோம். லக்ஷ்மி நரஸிம்மர் க்ஷேத்திரம். பரம அழகு. திவ்யமா இருந்தது. காலாற தெருக்களில் நடந்தப்போ ஓமப்பொடியும் சீனிச்சேவும் பண்ணி வித்துண்டு இருந்தா. பசி நேரத்துக்கு கொஞ்சம் வாங்கிண்டு கொறிச்சேன். லோக்கல் ஃபூட் சாப்பிடாட்டா அதெல்லாம் ஒரு ட்ரிப்பா?

மறுபடியும் ரூமுக்கு வந்தா டின்னர் ரெடின்னு தான் எங்களுக்கே தெரியுமே? தோசை, நிலக்கடலை சட்னி தயிர் சாதம் மாங்கா ஊறுகாய் வெட்டு வெட்டுன்னு வெட்டிட்டு போய் தொபக்கடீர்ன்னு பெட்ல விழுந்துட்டோம். நாலு மணிக்கு எழுந்தாத்தான் எல்லாரும் குளிச்சு ரெடி ஆகி ஆறு மணிக்கு டிஃபனை பேக் பண்ணிண்டு ட்ரெக்கிங் போக முடியும்ன்னு க்ரூப்புக்கு இன்ஸ்ட்ரக்ஷன்.

என்னமோ ட்ரெக்கிங்காம், நம்மால எல்லாம் முடியுமாடீன்னு நானும் கஸினும் பேசிண்டோம். விடுறீ, எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்னு சொல்லிட்டா. நானானா நடக்கறச்சேயே குப்புறக்க விழற கேஸ். என் கஸின் என்பதனால்.. ஹீஹீ.. அவளும் அவ்வாறே.. என்ன பண்ணப்போறோமோன்னு திகிலான திகில். பாறையில் நடக்கணும்ன்னா பல்லு போய்டுமே ஆண்டவா? நான் வித்யாவுக்கு என்ன பதில் சொல்லுவேன்? ஜெய் நரஸிம்மான்னு நினைச்சுண்டேன். மவுண்ட் எவரெஸ்டில் ஏறி வெற்றிக்கொடி நட்டிட்டு வாகை சூடிண்டு வந்த வீராங்கனையா என்னையும் இவளையும் கனவுல பார்த்தேன். 

சரியான தூக்கம். காட்டுக்குள்ளே இருக்கோம்ங்கற பயமேதும் இல்லாம அடிச்சு போட்டப்புல தூங்கியாச்சு. கார்த்தால பரம ஃப்ரெஷ்.  சீக்கிரம் எழுந்துண்டு அஞ்சு மணிக்கே வந்த காஃபியை குடிச்சுட்டு ரெடி ஆகியாச்சு. 

முதுகுல பை, அதுல டிஃபன், ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுத்தா. எடுத்துண்டு புறப்பட்டாச்சு. அன்னைக்கு தெரியலை மறக்க முடியாத ட்ரெக்கிங் அனுபவம். வாய்ல நுரை வர்ற அளவுக்கு படியேறியாச்சு. வழுக்கும் பாறைகளுக்கு நடுவில் நடந்தாச்சு. கரையேத்தி விட்டுட்டார் நரஸிம்மர். 

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா uncertainities இருக்கே? எட்டு மணிக்கு சென்னைலேந்து பஸ்ன்னா ஒரு மாசம் முன்னாடி பணம் கட்டினவா வர முடியாம போய்டுத்து. ஒரு மணி நேரம் முன்னால விஷயம் தெரிஞ்சு அவாளுக்கு ரீப்ளேஸ்மெண்டா  ஒரு ஃபேமலி புறப்பட்டு வந்திருக்கா. ட்ரிப் ஜாய்ன் பண்ணிண்டவா பஸ்ல வயத்தை பிரட்டறதுன்னுட்டு ரேணிகுண்டாவுலேயே இறங்கி போய்ட்டா. மலையேறும் போது எதிரில் வந்த குடும்பத்தினர் ”600 மெட்லு உன்னையண்டி, ஈரோஜு குதரது”ன்னு சொல்லிட்டு (எங்களுக்கு பீதியை கிளப்பிட்டு) ரிட்டன் போய்ண்டு இருக்கா. அதாவது 600 படி இருக்கு, என்னால இன்னைக்கு முடியாதுன்னு சொல்லிட்டு திரும்ப போறா. ஆக, we were the chosen ones. என்ன தான் சோஸன் ஒன்ஸானாலும் வயத்துல திகில் தான். காட்டுக்குள்ளே பரபரப்பு இல்லாம கவனமா நடந்தோம். கூடவே டூவர் ஆர்கனைஸர் இருந்தார். க்ரூப் க்ரூப்பா பிரிச்சுண்டு ட்ரெக் க்ரூவுக்கு சப்போர்ட் ஸ்டாஃப். எவ்வளோ சப்போர்ட்டிவ் இந்த ஆர்கனைஸிங் க்ரூப்? அமைதியா யாருக்கு என்ன தேவைன்னு keen ஆ கவனிச்சுண்டு,  அங்கங்கே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துண்டு நிழல் மாதிரி தொடர்ந்து வந்தா. நடுவுல செல்ஃப்  மோட்டிவேஷன் வொர்க்‌ஷாப்பை  டாக்டர் நளினா கண்டக்ட் பண்ணினார்.  திக்கு முக்காடி, படியேறி ஜ்வாலா நரஸிம்மரை பார்த்துட்டு அக்கடான்னு பானகத்தை ரெண்டு டம்ப்ளர் வாங்கி வாய்ல விட்டுண்டுட்டு பார்த்தா மாலோல நரஸிம்மர் கோவில் பாருங்கோ எல்லாரும்ன்னு பாலாஜி சார் காமிச்ச இடமொண்ணும் எனக்கு தோதா படலை. அது என்னமோ நேரே அதல பாதாளத்துல இருக்கு! அழகா இங்கேந்து கவ்மெண்ட் ஒரு க்ரேன் வைக்கலாமோன்னோ? 23 புலிகேசியில் வடிவேல் படிக்கட்டுல சறுக்கறாப்புல ஜம்முன்னு கயித்தை பிடிச்சுண்டு பெரிய பெரிய லேடீஸெல்லாம் மாலோலனை பார்த்திருப்போம். effortless ஆ. ஆந்திர கவ்மெண்டுக்கு யாராவது எழுதிப்போடணும். I must write to the authorities you know?( immediate ஆ ச்செய்யுங்க இன் மனோபாலா வாய்ஸ்) 

இன்னும் இன்னும் இன்னும்ன்னு மைனஸ் ஒன் ஃப்ளோருக்கு மாலோலனை தரிசிக்க போறதுக்குள்ள சத்யமா தொண்டை காய்ஞ்சு நாக்கும் வெளீல வந்துடுத்து. கண்ணு ரெண்டும் வெளீல வந்தது முன்பே ஜ்வாலாகாரு காருண்யம். 

அடுத்த படியா இனி எல்லாம் சுகமே, இறக்கமேன்னு டபுள் கன்ஃபர்மேஷன் வாங்கிண்டு சர்வ ஜாக்கிரதையா பாறையில் இறங்கி படியிறங்கி கீழ் அஹோபிலம் வந்து சேர்ந்தோம். கூட்டமான பஸ்ஸில் ஏறி மத்த அஹோபில சேவார்த்திகளோட சேர்ந்து க்ரூட நரஸிம்ஹ க்ஷேத்திரத்துக்கு வந்து பார்த்துட்டு, கடைசியா கரஞ்ச நரஸிம்மரை சேவிச்சுட்டு ரூமுக்கு வந்து சேர்ந்தோம். 

திடீர்ன்னு சேஞ்ச் அஃப் ப்ளான்ஸ்.  ராத்திரி புறப்பட்டு கார்த்தால சென்னை வர்றாப்புல தான் இடினரி. ஆனா எல்லாரும் தக்க நேரத்துல வெற்றிகரமா ட்ரெக்கிங்கை முடிச்சதுனால லஞ்ச் முடிச்சுட்டு மூட்டையை கட்டிண்டு புறப்பட்டாச்சு. மத்யானம் 2:30க்கு புறப்பட்டு இரவு 11:30க்கு சென்னைக்கு கொண்டு வந்து விட்ட குழுவை என்னன்னு சொல்லி பாராட்டறது?

மொத்தத்துல மறக்க முடியாத ரெண்டு நாள் ஜெட் வேக பயணம். அருமையான ஏற்பாடுகள். தரமான சுவையான உணவு. எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை.  தகவல் களஞ்சியம் கைடு திரு சுப்பையா ஜி, எங்க ஜீப் சாரதி கேசவ், எங்க பஸ் ட்ரைவர், ட்ரெக்கிங்கில் கூட வந்த சாயி, முக்கியமா எல்லா நேரமும் அலர்ட்டா எனர்ஜிட்டிக்கா விஷயங்களை சொல்லிண்டே வந்த பாலாஜி சார், கூட வந்த டாக்டர் நளினா அவர்கள், குட்டிச்செல்லம் தாரக், அஸ்வினி,  ரெண்டே நாளில் அன்பை பொழிஞ்ச சுபா, பிரபா, ரேகா, சுகன்யா ஜி, ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர்ன்னு உணர்த்திய திரு பாஸ்கரன் ஜி , அருண், அறிவு ஜீவி ஆனந்த் மற்றும் க்ரூப் மெம்பர்ஸ் எல்லாருக்கும் அனந்த கோட்டி புண்ய நமஸ்காராலு. 

முக்கியமா இந்த மாதிரி ஒரு ட்ரிப்பை எனக்கு சொன்ன என் கஸின் இருக்காளே அவ தெய்வ மச்சான் மாதிரி தெய்வ கஸின் என்றால் அது மிகையன்று 

இந்த மாதிரில்லாம் என்னால ட்ரிப் நினைச்சு கூட பார்க்க முடியாது. எல்லாம் அவன் செயல். 

இவ்வளோ சவரணையா பதவிசு  நறுவிசா (எங்க செல்லவா வார்த்தைகள்) கூட்டிண்டு போன மந்த் ரா யாத்ரா குழுவினருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் & நமஸ்காரங்கள். 100% ரெக்கமண்ட் பண்றேன். குறிப்பா பெரியவா பரம இதமா மந்த்ரா யாத்ராவில் செளகர்யமா போய்ட்டு வர்லாம். பாலாஜி சார் 100% நன்னா பார்த்துப்பார். அதுக்கு நான் கேரண்டி.  Sri Balaji Davey - 9840188430





Friday, June 14, 2019

A crazy genius creator

உம்புருஷன் மாது இருக்கறவரை எனக்கு கல்யாணம் நடக்காதும்மா.

ஏன் அண்ணா?

இதான் மாப்பிள்ளை பையனா?ன்னு பொண்ணாத்துல கேட்டா. இவர் உடனே  இல்லை, மாப்பிள்ளை பெரியவர்ன்னு சொல்றார்மா

அந்த பொண்ணோட ஃப்ளாட் மாம்பலத்துல ஆறாவது மாடி. உங்கண்ணனுக்கு மூணாவது மாடி ஏறும்போதே வாய்ல நுரை தட்டி கீழே உக்காந்துடுத்து. அந்த பொண்ணோட ஃப்ளாட்டுக்கு போகறதுக்குள்ள உங்கண்ணன் ஃப்ளாட்

பர்னால் சிங்கா? என்னய்யா பேரே பொய்யா இருக்கே?
சைபால் சிங்க்ன்னு ஒரு மந்திரி இருந்தாரே?
(மீசையானாலும் மனைவி)

*******************

என்னுடைய ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான், பெரீய்ய கேடி, செல்வராஜ்ன்னு பேர். போன வாரம் அவன் மாறுவேஷம் போட்டுண்டு, ஒரு பேங்க்கை கொள்ளையடிச்சுட்டான். பதினைஞ்சு ரூபா.. பாவம் அவன் மேக்கப்புக்கே இருபது ரூபா செலவாம். அது புதுசா ஆரம்பிச்ச பேங்காம். இது தெரியாம கொள்ளையடிச்சுட்டான். ( ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது)

******************

பார்ரீ மைதிலி, உன் புள்ளை இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணியே ரிட்டயர் ஆயிடப்போறான்

நம்ம கோழியூர் கோவிந்தாச்சாரி சொல்லியிருக்கார், இன்னும் ரெண்டே வருஷத்துல நம்ப மாதுவை பிடிக்க முடியாதாம். ஆமாண்டி மைதிலி, உம்புள்ளை மாது ஆத்துலேயே உக்காண்டு தெண்டச்சோறு தின்னு தின்னு கட்டிப்பிடிக்க முடியாம குண்டாகப்போறான்( அலாவுதீனும் ஹண்ட்ரட் வாட்ஸ் பல்பும்)

aircrash at delhi airport, 200 feared dead - டெல்லியில் விமான விபத்தில் 200  பேர் பயத்திலே செத்தார்கள்

(அலாவுதீனும் ஹண்ட்ரட் வாட்ஸ் பல்பும்)

*********************

ஸ்டெல்லா ஜானகி : மாதுவை இந்த வருஷம் படிக்க வைச்சு பாஸ் பண்ன வைக்கறேனா இல்லியா பாருங்களேன்!
தாத்தா : அதெப்படிம்மா அவ்ளோ ஸ்ட்ராங்கா உன்னால சொல்ல முடியும்?
ஸ்டெல்லா: எனக்கு நம்பிக்கை இருக்கு, பிகாஸ் ஜீஸஸ் நெவர் ஃபெய்ல்ஸ்
தாத்தா : பட் யுவர் மாது ஆல்வேஸ் ஃபெயில்ஸ்
(ரிட்டன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ்)
**********
வீடு கட்டணும், உஷாக்கு கல்யாணம் நடத்தணும்..
அய்யீய்யோ...
என்னடா உப்பிலி..
அய்யிய்யோ..
சொல்லு
எல்லாரும் ஒண்ணை மறந்துட்டேளே?
என்ன?
எனக்கெப்போ கல்யாணம்
மூதேவி, உனக்கு பூணூல் போட்டதே வேஸ்டு!

(கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்)
*******
திருட்டுத்தொழில் கத்துண்டு முதல் வாட்டியா ஒரு அடையார்ல ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு திருடப்போனேன்
அம்ருத்தாஞ்சனம் இருக்கான்னு கேட்டேன்
இருக்குன்னான்.
எவ்வளோன்னேன்
ஆறு ரூபான்னான்.
பத்து ரூபாயை கொடுத்தேன்
அம்ருதாஞ்சனத்தை டேபிள்ள வைச்சுட்டு பில்லை போட்டுண்டு  வான்னேன். அவன் பில்லை போட்டுண்டு வர்றதுக்குள்ள நான் அம்ருத்தாஞ்சனத்தை திருடிண்டு ஓடி வந்துட்டனே

திருடன்: என் பேரென்னன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்! எவ்வளோ யோசிச்சாலும் இந்த மருதுவோட பேரை உங்களால கண்டு பிடிக்கவே முடியாது
மாது: உன் பேரு என்ன மருதுவா?
திருடன்: ஐ.. புத்சாலியா நீ.. எப்பிடிய்யா கண்டு பிடிச்ச?
மாது: கஷ்டம்.. இவனுக்கு எருதுன்னே வைச்சிருக்கலாம்! அறிவுல ஆடு மாடை விட மோசமா இருக்காண்டா!

ஏன்யா மருது, இந்த பேங்குக்கு சுரங்கம் தோண்டப்போறேன்னு சொல்லிண்டு இருக்கியே, கடப்பாரை மம்பட்டி எல்லாம் வைச்சு தோண்டினா சத்தம் வருமேய்யா.. போலீஸ்ல மாட்டிக்கப்போறே!
இதெல்லாம் யோசிக்காமலா சுரங்கம் தோண்டுவோம்? காதுல பஞ்சை வைச்சுண்டு தோண்டுவோம்!

அப்பண்ணா சாஸ்திரிகள் : நான் பத்து சாவு சவுண்டி கருமாதி காரியத்க்கெல்லாம் தான் வழக்கமா போறது. நடூவுல ஒரு சேஞ்சுக்கு கல்யாணம் சீமந்தம்ன்னு போவேன். சீனு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பையன், தட்ட முடியலை வந்துட்டேன்.
குப்புசாமி ஐங்கார் தாத்தா : நல்ல மங்களகரமான சாஸ்திரிகள் தான். வீடெங்கே உங்களுக்கு?
அப்பண்ணா சாஸ்திரிகள்: கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு பக்கத்துல
அதாவது இந்த நிச்சியதார்த்தம் இருக்கே.. மஹா அனாவஸ்யமான ஃபங்ஷன். எழவெடுத்த மாதிரி இழுத்துண்டே போகும்னேன்.
 சீக்கிரம் ஃபங்ஷனை முடிச்சு என்னை சீக்ரம் அனுப்புச்சு விட்ரு. நீ பாட்டுல டிலே பண்ணி என் தாலி அறுத்துடாதேப்பா..  இன்னைக்கு ஜட்ஜ் பரமேஸ்வரன் ஆத்துக்கு நான் போயாகணும்.
எதுக்கு?
அவன் மண்டையை போட்டு இன்னைக்கு எட்டாம் நாள். நான் போய் தான் எல்லாம் பண்ணியாகணும்
மாது, இந்த சாஸ்திரிகள் வாண்டாம்டா.. நீ தாலி கட்ற சமயத்துல கைல அட்சதைக்கு பதிலா எள்ளை கொடுத்தாலும் கொடுப்பான்
இந்த கல்யாணம் சவுண்டிக்கெல்லாம் மந்திரம் ஒண்ணே தான்.. என்ன கொஞ்சம் ட்யூனை ஏத்தி இறக்கி மாத்தி மாத்தி சொல்லணும். அவ்ளோ தான். நீ கவலையே படாதே.. கல்யாணத்தை பொணப்புரட்டு புரட்டிப்புடறேன்.
மாது, இந்த வாத்தியார் வேண்டாம்டா..வாயதிறந்தா கோவிந்தா எழவுன்னு அபசகுனமா பேசறதுக்கே அவதாரம் எடுத்திருப்பான் போல்ருக்கே டா..
(ரிட்டன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ்)

கல்யாணத்துக்கு என்ன ஸ்வீட் தெரியுமா?
திரட்டிப்பால்...
பாலுக்கு என்ன பண்றது இப்போ?
கவலையே படாதேப்பா.. நான் திருவான்மியூர் பூத்லேந்து திருடிண்டு வந்துர்ரேன்
ஆஹா.. தெரட்டிப்பால் பண்றதுக்கு திருட்டுப்பாலா? ஓஹோ!

A droplet in an ocean - எத்தனை சொன்னாலும் போறாது. எத்தனை சிரிச்சாலும் இனிமே அதுல ஒரு சோகம் இழையோடும். என்ன அவசரம் அதுக்குள்ள உங்களுக்கு?
Related Posts with Thumbnails