Pages

Thursday, April 1, 2010

பேன்களும் சில பெண்களும்.

Statutory Warning - இந்த பதிவை படிக்கும்போது தலை அரிப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருப்பதால் முன் ஜாக்கிரதையாக சீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.


ச்சே என்ன அநன்யா இவ்ளோ டிஸ்கஸ்டிங் டாப்பிக் போய் எடுத்துண்டு இருக்கேன்னு கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நான் எல்லாம் டிஸ்கஸ்டிங் தான். (இந்த வரியை பின்னூட்டத்தில் quote செய்தால்,  நாஞ்சில், LK போன்றவர்களின் கருத்துக்கள், Unconditional ஆக நிராகரிக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்)பெரிய சோஃபிஸ்ட்டிக்கேட்டட் ஒண்ணும் இல்லை. உள்ளது உள்ளபடி எழுதறேன். (இப்படி ஒரு சீரியஸ் ஸ்டார்ட்டிங் குடுத்தா தானே படிக்க தூண்டும் படி இருக்கும்?)


பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேரும் வரை பேன் என்றால் என்ன என்றே தெரியாது எனக்கு. அடர்த்தியான கூந்தலில்(அட, நிஜமாத்தாங்க) ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு மடித்துக்கட்டிக்கொண்டு கருப்பு ரிப்பனில் 4 இதழுள்ள பூ வருவதுபோல knot போட்டுக்கொள்வேன். பள்ளியில் சேர்ந்த பதினைந்து நாட்களில் பேன் தொல்லை ஆரம்பமாகியது. மெதுவாக பென்சில் பேனா கொண்டு தலையை சொறிந்த நான், நாள் பட, காம்பஸ், டிவைடர் போன்றவற்றால் சொறிய ஆரம்பித்தேன். செல்லவ்வாவிற்கு ஒரே கவலை. கண்ணாடியை போட்டுக்கொண்டு வாசலில் உட்கார வைத்து, வேர்க்க விறுவிறுக்க குனிய வைத்து பேன் பார்ப்பார்.


எந்த விஷயத்திலும் என்னுடன் ஒத்துப்போகாத தங்கைமணி இந்த பேன் பார்க்கும் படலத்துக்கு மட்டும் ஓடி வந்து விடுவாள். எல்லோருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் இருப்பது போல இவளுக்கு இந்த பேன் பார்க்கும் வீக்னெஸ். நன்றாக சிக்கு எடுத்து வாரிய பிறகு, ரெண்டு பேன்சீப்பால் ஆல்டர்னேட்டிவ்வாக,  செல்லவ்வா வாருவார்.  அவர், லாவகமாக அழுத்தி பேன் சீப்பை பிரயோகிக்க,தங்கை மணி, அந்த சீப்பை, வாழைப்பழத்தை பிடுங்கும் குரங்கு போல பிடுங்கி, பேன் தேடி சொடுக்குவாள். ஏன் உனக்கு இந்த ரத்த வெறி? என்று கேட்கத்தோன்றும் அளவுக்கு எல்லாப்பேன்களையும் சக்ரவ்யூஹம் அமைத்து கொல்லுவாள். சில பேன்ஸ் குடுகுடு என்று சீப்பின் பல்லிடுக்கில் நுழைந்து மறுபக்கம் ஓடி, தப்பிக்க பார்க்கும். இவளிடமா நடக்கும். ம்ஹூம். விரட்டி விரட்டி சொடுக்குவாள். சீப்பில் சாவட்டை எனப்படும் செத்த ஈர் இருந்தாலும் அதையும் விடாமல் சொடுக்கி பார்த்து பல்பு வாங்குவாள்.


இந்த செல்லவ்வா இருக்காரே, பாவம். ரோடில் ஒரு குறத்தி விடாமல் எல்லோரிடமும் ஒவ்வொரு ஈர்க்கொல்லி எனப்படும் நீண்ட உபகரணத்தை வாங்குவார். இது சரியில்லை, ஈர் வரமாட்டேங்குது என்பார். அந்த குறத்தி இதான் பெஷ்ட்டு என்று விற்று விட்டு போவாள். வீட்டில் மொத்தம் பத்தோ பதினைந்தோ, ஈர்க்கொல்லி இருக்கும். எல்லாவற்றாலும் என் முடியை பிடித்து இழுப்பார். முடி தான் வருமேயோழிய ஈர் பெப்பே காட்டி விடும். ”பாவம் குழந்தை, சதா தலையை அரிச்சுண்டே இருக்கா, அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியறதில்லை” என்பார்..(ஐய்யோ பாவம்! செல்லவ்வா, பேன் தொல்லை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் தான் பத்தாவதில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கி இருப்பேனே, என்னத்த சொல்ல?)


அடுத்ததாக பேன் அத்தியாயத்தில் நாம பார்க்க இருப்பது, எங்க ஸ்கூல் பெண்களை. முதல் முறையா, ஒருத்தி தலையில இருந்து எடுத்த பேனை,  அவள் கையில் கொடுத்தப்போ மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்புறம் தான் தெரிந்தது, யார் தலையில் பேன் இருக்கோ, அவங்க தான் அதை சொடுக்கணும்ன்னு. அதான் பேனுலகின் எழுதி வைக்கப்படாத சட்டம்ன்னு தெரிஞ்சுண்டேன். அந்த பெண்களும் ஏதோ நோபல் பரிசை பெற்ற மாதிரி பெருமையுடன் வாங்கிக்கொள்வார்கள். சில ப்ரும்மஹத்திகள் ஜாமெட்ரி பாக்ஸில் போட்டு பத்திரப்படுத்தும். அப்புறம் சொடுக்குவதற்காம்! முடியல!
இந்த பேன் ஆப்ஸர்வேஷன் இருக்கே ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். நம்ம பெஞ்சுக்கு முன்னாடி உட்காரும் பெண்ணின் பின் தலையை நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தோமானால் சுமார் 30 பேன்கள் வாக்கிங் போய்க்கொண்டு இருக்கும். சிலதுகள், மேலிருந்து உள்ளே டைவ் அடித்துக்கொண்டு இருக்கும். சிலதுகள் மக்குசுப்பன் கணக்காக தேமே என்று ஒரே இடத்தில் இருக்கும். இந்த பெண்ணின் தலையில் இவர் அம்மா அழகாக எண்ணெய் தேய்த்து விட்டு மிகத்துல்லியமாக வகிடு எடுத்து சமமாக பிரித்து ஜடை பின்னி இருப்பார். ஆனால் பாருங்கள், இரு புறமும் நரைத்த முடியோ என்று பதறும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் சாவட்டை ஈர்களைப்பற்றி கவலையே பட்டிருக்க மாட்டார். இந்த சாவட்டை ஈர்கள் இரு புறமும் எழுந்து நின்று சல்யூட் அடிக்க, வகிட்டின் நடுவில் இருந்து பேன்கள் மார்ச்பாஸ்ட் பண்ணிண்டு இருக்கும்கள். வயல் வரப்பின் நடுவில் பாத்தி கட்டி இருப்பார்களே அதே மாதிரி வகிட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கும். சில பேன்ஸ் பின்னங்கழுத்தில் குடி கொண்டு இருக்கும். சிலது காதுகளின் பின்னாடி தஞ்சம் புகும்.


சில தில்லாலங்கிடிகள், பேன்ஸை தன் தலையில் தடவித்தடவியே பிடித்துவிடுவது வழக்கம்! அவர்களுக்கெல்லாம் சிலை வைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சில குரூர பெண்கள் பிடித்துத்தரும் பேன்ஸை அவர்களுக்கு பிடிக்காத எதிரி பெண்களின் தலை மேல் போட்டு விட்டு வருவார்கள்! ராட்சஸிகள்.


ரொம்ப ப்ரயத்னம் பண்ணி வசம்பு தேய்த்து, வேப்பெண்ணை தேய்த்து, புஸ்தகத்தில் வரும் (ஏடாகூட) டிப்ஸ் எல்லாம் படித்து தலைகீழே நின்று பார்த்தாச்சு. பேன் தொல்லை ஒழியவில்லை. கென்ஸ் வாங்கிண்டு வா என்று என்னைத்தான் கேசவ முதலியார் கடைக்கு அனுப்பினார்கள். அவரும் தலை சொறிந்துகொண்டே எடுத்துக்கொடுத்த கென்ஸை என் தலை பேன்ஸ் தம் ப்ருஷ்ட பாகத்தால் சிரித்தே விரட்டின. கென்ஸும் என்னிடம் படுதோல்வி அடைந்தது. அப்போ தான் மார்க்கெட்டில் மெடிக்கர் வந்தது. ஒரு 30 வாட்டி தலை அலசியதலாலும், செல்லவ்வாவின் கடின உழைப்பாலும்  தலையில் அரிப்பு குறைந்தது. மெதுவாக பேன் தொல்லை ஒழிந்தது.


சரி இப்போ எதுக்கு பேன் பத்தின பதிவுன்னு தானே கேக்கறீங்க? எல்லாரும் ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம்ன்னு ஏடாகூட பதிவு போடுறாங்க. நான் ஒரு சின்ன விஷயம் சொல்றதுக்கு தான் இவ்ளோ பெரிய முன்னோட்டம்.


இரண்டாவது பத்தியில் தங்கை மணியை பத்தி சொன்னேன் இல்லையா? இதே மாதிரி ஏப்ரல் 1, 1989 என்று நினைக்கிறேன். லீவு விட்டு இருந்தார்கள். வீட்டில் என்ன செயவதென்று தெரியாமல் இருந்த போது தனது அசகாய திறமையினால் என்னை சுமார் 25 வாட்டி முட்டாளாக்கிய தங்கை மணி என்னிடம் ஒரு முறை கூட முட்டாளாகவில்லை. எனக்கு ரொம்ப மூட் அவுட். அதென்ன நாம் மட்டும் ஆவது இவள் தப்பிப்பது என்று தீவிரமாக யோசித்த நான், அவளை லாவகமாக முட்டாளாக்கும் முயற்சி தொடங்கினேன். கொஞ்ச நேரம் தலையை தடவுவது போல பாவலா செய்து கொண்டிருந்தேன். த.ம நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள். மெதுவாக ஆக்டு கொடுத்தேன். “அம்மா, அம்மா, நான் ஒரு பேனை பிடிச்சு இருக்கேன். கொழு கொழு பேன், நீங்க எடுத்துருவீங்களாம்மா? விட்ற மாடீங்களே?” என்று பில்டப்பு எல்லாப் பலம்மாக டெவலப் செய்தேன். ஸ்லோ மோஷனில், தங்கை மணி ஓடி வந்து என் தலையை தாக்கினாள். நானும் ஸ்லோ மோஷனில் என் கையை எடுக்க, பேன்......... காயப், ஹோத்தோ, போயிந்தே, போயேபோச்சு, சோலெகாச்சே, இட்ஸ் கான்! ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்...

33 comments:

எல் கே said...

schoola padikaratha tavirthu ella velaium panni iruka.. ippa un tangaimani bloggingla iruka so bloga paarthu pothu.. ethir pathivu potruva

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

ungalukku anubava arivu romba jasthinu theriuthu. hahahaha

aanalum thalaipuku thaan naan 5 star tharuven

துபாய் ராஜா said...

ஏப்ரல் பேன்... ஏப்ரல் பேன்னு நீங்க சிரிச்சிருந்தா சரியா இருந்திருக்கும். :)

R.Gopi said...

ஆஹா....

இதுவல்லவோ பதிவு....

தலைல தான் எப்போவுமே பேன் பட்டாளம் குடியிருக்கே... அதுக்காகவா இந்த போஸ்டிங்க ஏப்ரல் 1 வரைக்கும் வெயிட் பண்ணி போட்டீங்க... இவ்ளோ வெயிட் பண்ணினா, குட்டிகளோட எண்ணிக்கை இன்னும் ஜாஸ்தியாயிடும்...

உங்க மேல எனக்கு கோவம்... ஏன் தெரியுமா... இவ்ளோ நாள் கேட்டும் போடாத உங்க ஃபோட்டோவ, இப்போ லேட்டா இந்த பதிவுல போட்டதுக்கு..

Unknown said...

akka lice innum iruka or illaya. thangai manithan pavam

Vidhoosh said...

:)) ஹையோ.. சிரிச்சு மாலளைங்க. :))

Unknown said...

padikkumpodhu enakke thalai arikkira madhiri oru feeling... sottai vizhappora (ennoda) thalaiyila enna irukkapoguthu podugai thavirai... aanalum school days-la en thalaiyire paene thangaathu... Paen irunthaa niraiya kaasu serumnu yaaro kattivitta kadhaiyai nambinein.. adhanaala ennoda thangai thalaiyile paen eduthu en thalaiyile vittukkuvein.. aana adhu ennavo acid tub-la pottappula konja nerathula setthu poyidum.

vetti said...

ஒருத்தரோட விக்னேஸ்-ஐ வெச்சு அவங்களை ஏமாத்தி கவுக்கறது இன்னைக்கு நேத்தா நடக்குது? ராமாயணம் மகாபாரத காலத்துல இருந்தே நடக்கற ஒண்ணு தானே....இதை என்னமோ பெரிய்ய achievement மாதிரி சொல்லிண்டு இருக்கே...அற்ப மானிட பதரே ...

எல் கே said...

@mahesh
unga taliyla avlo powera
@vetti

aha ungalaithan romba nerama ethir paarthen inga..

Chitra said...

ச்சே என்ன அநன்யா இவ்ளோ டிஸ்கஸ்டிங் டாப்பிக் போய் எடுத்துண்டு இருக்கேன்னு கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நான் எல்லாம் டிஸ்கஸ்டிங் தான். (இந்த வரியை பின்னூட்டத்தில் quote செய்தால், நாஞ்சில், LK போன்றவர்களின் கருத்துக்கள், Unconditional ஆக நிராகரிக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

... I am not in that list . So I can quote .......... ha,ha,ha,ha....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான காமெடி.. நல்லா சிரிச்சி சிரிச்சி.. ஸ்ப்பா முடியல...

Porkodi (பொற்கொடி) said...

//தனது அசகாய திறமையினால் என்னை சுமார் 25 வாட்டி முட்டாளாக்கிய தங்கை மணி என்னிடம் ஒரு முறை கூட முட்டாளாகவில்லை. //

muttala irundha thaane aga mudiyum? ;-)

தி. ரா. ச.(T.R.C.) said...

பேன் தொல்லையிலிருந்து நீங்க விடுபட்டீங்க! ஆனா நாங்க மாட்டிடோம்ல 1 ஆம் தேதி அன்னிக்கி

Prathap Kumar S. said...

நீங்க ஒரு டிஸ்கட்டிங்னுதான் ஆரம்பத்துல நினைச்சேன்... படிக்கும் போது தலைல ஏதோ கடிக்கிற மாதிரிவேற இருந்துச்சு... கடைசில இவ்ளோ பெரிய பல்பு கொடுப்பீங்கன்னு நினைக்கலை.... பேன் பார்த்துட்டே யோசிச்சீங்களோ....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அட ஈஸ்வரா... என்ன நடக்குது எங்க (பேன் னு சொல்லிடாதீங்கோ.. நான் அழுதுடுவேன்)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஏன் உனக்கு இந்த ரத்த வெறி? என்று கேட்கத்தோன்றும் அளவுக்கு எல்லாப்பேன்களையும் சக்ரவ்யூஹம் அமைத்து கொல்லுவாள்.//

உங்க ரத்தத்தின் ரத்தம் உங்க ரத்தத்த காப்பாத்த துடிச்சுருக்கா.. அப்படியே விட்டுருந்தா தெரியும் கதை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பேன் தொல்லை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் தான் பத்தாவதில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கி இருப்பேனே//

சத்தியமா சொல்றேங்க. இப்படி ஒரு காரணத்த நான் வாழ்க்கைல இது வரைக்கும் கேட்டதில்ல... இனிமேலும் கேப்பேன்னு தோணல. எப்படி இப்படி எல்லாம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஸ்லோ மோஷனில், தங்கை மணி ஓடி வந்து என் தலையை தாக்கினாள். நானும் ஸ்லோ மோஷனில் என் கையை எடுக்க, பேன்......... காயப், ஹோத்தோ, போயிந்தே, போயேபோச்சு, சோலெகாச்சே, இட்ஸ் கான்! ஏப்ரல் ஃபூல்//

நெஜமா சொல்றேன், முடியல. காப்பாத்துங்க காப்பாத்துங்க

எல் கே said...

//... I am not in that list . So I can quote .......... ha,ha,ha,ha...//

ithai nan vanmayaga kandikiren

ஜிகர்தண்டா Karthik said...

நீங்க கோல்கேட் பேஸ்ட் ல பல்லு தேயிப்பெள் போல இருக்கே...
அதுதான் ஈருகளை பலப்படுத்தும்....

பத்மநாபன் said...

பேன்...பேன் ..பேன் ....தேடி பிடிப்பேன் ....பாடி அடிப்பேன் ...பே ...ன் என்று பாடாத குறைதான் .. படிப்பவர்கள் அனைவர் கையும் ஒரு முறையாவது தலைக்கு போகாமல் இருந்திருக்காது... ஜிகரின் ஈறு ( ஈரு ) கோல்கேட் ஜோக் அடி-தூள்

மின்மினி RS said...

பேன் ரொம்ப கடிக்குதே.. :)))

தி. ரா. ச.(T.R.C.) said...

@மின்மினி இவுங்க கடிக்கு பேன்கடி எவ்வளவோ தேவலாம்.

Ananya Mahadevan said...

@Lk,
கருத்துக்கு நன்றி
@குட்டிச்சாத்தான் சிந்தனைகள்,
முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி
@துபாய்ராஜா,
:-), நன்றி!
@கோபி,
பேன் தொல்லை ஒழிஞ்சதுன்னு சொல்லி இருக்கேனே, சரியா படிக்கலையோ?நோ பேன்ஸ் இன் மை ஹெட்டு. கருத்துக்கு நன்றி.
@வித்யா,
முதல்வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.
@ஜெயஸ்ரீ ,
முதல்வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. எப்போ கேர்ள்ஸ் ஸ்கூலல இருந்து வெளீல வந்தேனோ அப்போவே பேன் எல்லாம் போயே போச்சு!
@மஹேஷ்,
உன் கருத்தை படிச்சு படிச்சு சிரிச்சேன். இந்த கட்டுரை படிக்கும்போதே அரிச்சதுன்னு நீ சொன்னது ரொம்ப ரொம்ப சரி. எல்லோருக்கும் அதே அனுபவம் தான். எழுதும்போது எனக்கு அரிச்சு பிடுங்கித்து! அதிருக்கட்டும், ப்ரியா தலையில இருந்து பேன் எடுத்து உன் தலையில விட்டுப்பியா? அந்த சின்ன வயசுல உனக்கென்ன காசு ஆசை? பாவம் அந்த பேனை விட்டு வெச்சு இருக்கலாம்ல? என் தங்கை மாதிரி உனக்கும் ஒரு வகையில கொலை வெறி தான். அவள் அதை சொடுக்கினா, நீ அதை உன் தலையில போட்டுண்டு கொன்னே. தட்ஸால் டிஃபரன்ஸ்!
@வெட்டி,
நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ், இந்த அல்ப விஷயத்துக்கு, இருந்தாலும் நீ ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் quote பண்றது உனக்கே கொஞ்சம் ஓவராத்தெரீல?
@சித்ரா ,
முதல் வருகைக்கு மிகவும் நன்றிங்க. அதென்னான்னா, உங்களைப்பத்தி முன்ன பின்னே தெரியாதே.. இனி முழிச்சுண்டு உங்க பெயரையும் டிஸ்கிலேயும் சேர்த்துடணும்.

Ananya Mahadevan said...

@ஸ்டார்ஜன் அண்ணா
ரொம்ப நன்றிங்க

@பொற்ஸ்
குரூப் குரூப்பா தான் கெளம்பி இருக்காய்ங்க!

@TRC அவர்களே,
ஹீ ஹீ, கருத்துக்கு ரொம்ப நன்றி சார்.

@நாஞ்சில்,
என் போஸ்ட்டை விட உன் கமெண்டு டாப் ராசா.. கண்டின்யூ பண்ணு! தலை அரிக்கலாம் சீப்பு பக்க்த்துலேயே வெச்சுக்கோங்கன்னு டிஸ்கி போட்டு இருக்கேனே. பார்க்கலையோ?

@அப்பாவி தங்கமணி,
இவ்ளோ பெரிய பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி!
ஆமாமா, என் ரத்தத்தை காப்பாத்த தான் துடியா துடிப்பாள்.. நம்பிட்டேன். நீங்களும் அதே பொற்ஸ் குரூப்பா? சொல்லவே இல்ல? எங்க பாட்டிக்கு ரொம்ப யோசிக்கும் திறன் ஜாஸ்தி. எதையெல்லாமோ எதுகூடவோ லிங்க் பண்ணி ரீஸனிங்கவுட் பண்ணுவாங்க. அதுனால தான் அந்த வரி.

@ஜிகர்,
வயித்தவலிக்க சிரிச்சேன். ரொம்ப நன்றி.. அப்பப்போ இந்த மாதிரி நகைச்சுவயை அள்ளித்தெளிக்கவும்.

@பத்மநாபன் அங்கிள், ச்சே, சாரி சாரி, அண்ணா,
பாட்டு சூப்பர்.. ரொம்ப க்ரியேட்டிவிட்டி உங்களுக்கு. வரும்போது விஜய் நடிச்ச சுறா படம் பார்த்துட்டு தான் வரணும் என்ன?

@மின்மினி,
வாங்க, கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.
நானும் ரொம்ப பேன் கடிச்சு கஷ்டப்பட்டேங்க! அதான் இப்படி ஒரு பதிவு போடும்படி ஆயிடுச்சு!

@ TRC அவர்களே,

x-(

Starjan (ஸ்டார்ஜன்) said...

அநன்யா மேடம், உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

செந்தில்குமார் said...

அருமை அநன்யா

லேசான வயிரு வலி ( சிரிப்பினால் )
நான் எனது பள்ளிநாட்களுக்கு சென்றுவிட்டேன்.என் வகுப்பறை தோழி பேன் தொல்லையாள் அவதி பட்டது நினைவுக்கு வந்தது...

செந்தில்குமார்.....

வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

அந்த உங்க பேமிலி போடோ சூப்பருங்க

Ahamed irshad said...

சிரிப்பு தாங்கலை...


மங்குனி அமைச்சர்
//அந்த உங்க பேமிலி போடோ சூப்பருங்க//

கருத்துகளை கச்சிதமாக கவ்வுகிறீர்கள் போங்கள்..

ஹுஸைனம்மா said...

உங்க தங்கைக்கு உங்களத்தான் எதுவும் பண்ணமுடியல, உங்க தலையில உள்ளதையாவது கொல்லலாம்னு நினைச்சாங்க போல. (சிலர் பொண்டாட்டிய நினைச்சுட்டு, ஸ்கூட்டரை உதைப்பாங்களே அத மாதிரி)

pudugaithendral said...

ஏதோ தீர்வு சொல்லியிருப்பீங்க போலன்னு படிக்காம போயிட்டேன். தங்காச்சியை ஏப்ரல் பூல் செஞ்சிருக்கீங்க. அதுக்கு இப்படி ஒரு கொசுவத்தியா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆனாலும் நல்லா காமெடியா இருந்துச்சு.

Anonymous said...

Ananya Akka mudiyala, epadi ungala matum ipadi elam yosika thonudu?
avvvvvvvv

வெங்கட் said...

நான் இன்னும் பதிவை
முழுசா படிக்கலை..
அதுக்குள்ள தலை அரிக்குற
மாதிரி இருக்கு..

இருங்க சீப்பை எடுத்துட்டு
வந்து மீதியை படிக்கிறேன்.

Related Posts with Thumbnails