Pages

Tuesday, April 27, 2010

கிரிலக்ஷ்மி மிஸ் -2 கற்றது தமிழ்

கிரிலக்ஷ்மி மிஸ் -2


ஹைத்ராபாதிலிருந்து சென்னை வந்தப்போ ஸ்கூல் அட்மிஷனுக்கு அம்மா அவஸ்தை படலை. ஏன்னா அம்மாவோட போடி,  பங்கஜம் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் ஹெட்மிஸ்ட்ரெஸா இருந்த அதே திருமதி அய்யாசாமி (ஆமாங்க, பெண் தான்) தான் இங்கேயும் பிரின்ஸிபால். ஏதோ சினிமா மாதிரி இருந்தது எனக்கு. போடி எங்கே ஹஸ்தினாபுரம் எங்கே? இருந்தாலும் கடவுள் எனக்கு இந்த இடத்துல தான் ரொம்ப சாதகமா பண்ணி வெச்சார். எந்த டெஸ்டும் இல்லாம,” லக்ஷ்மி குழந்தைகளா?”ன்னு உடனே சேர்த்துண்டாங்க. அம்மா தான் ஸ்கூல் ஃபர்ஸ்டாச்சே! அதுனால எங்க மேலையும் அப்படி ஒரு (தப்பான) நம்பிக்கை. தங்கைமணி 4லேயும் நான் 7லேயும் சேர்க்கப்பட்டேன்.

அட்மிஷன் அப்போ தான் அய்யாசாமி மேடம் கேட்டாங்க,” தமிழுக்கு என்ன பண்ணப்போறே”ன்னு. ஆமாம் எங்க ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. போடியில சண்முகன் அருள் நெறி ஸ்கூல்ல ஒண்ணாப்பு ஓபி அடிச்சதிலே(ஆமா, நான் அப்போவே அப்படித்தான்!) உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மட்டும் தான் தெரியும். விகடன்ல விட்டுக்கள் படிப்பேன், கோகுலம் முக்கி முனகி ஒரே ஒரு குட்டிக்கதை படிச்சுட்டு புஸ்த்தகத்தை தூக்கி எறிஞ்சுடுவேன். அவ்ளோ சுறுசுறுப்பு.

அப்படி அய்யாசாமி மேடம் கேட்டப்போ, எங்கம்மா, ”நான் பெர்ஸனலா கோச் பண்ணி எப்படியும் பிக்கப் பண்ண வெச்சுடறேன் மேடம்”ன்னு அபார நம்பிக்கையோட கமிட் பண்ணினாங்க. எனக்கா தலை சுத்திடுத்து. தங்கை மணிக்கு சுத்தமா தமிழே தெரியாது. அது தெலுங்கு படிச்சது. பாவம் தான்னாலும் 4வதுக்கு அவ்ளோ சிலபஸ் இருக்காது, இவளுக்கு ஈஸி தான்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் தான் வசம்மா மாட்டிண்டேன்.

முதல் நாள் ஸ்கூலுக்கு போனப்போ சிவப்பா, அழகா, நீளமான கூந்தலோட, கொஞ்சம் ஜெயா அத்தை ஜாடையா உயரமா இந்த மிஸ் க்ளாஸுக்கு வந்தாங்க. எல்லாரும் எழுந்து ”வணக்கம் ஆசிரியை”ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப புதுமையா இருந்தது. இது நாள் வரை ஆந்திராவில் டீச்சர், மிஸ், மேடம்ன்னு கூப்பிட்டு தான் பழக்கம்.

ரொம்ப எளிமையா,  இனிமையா அதே நேரம் ரொம்ப கண்டிப்பாகவும் நடந்துண்டாங்க. அவங்க பேர் தான் கிரிலக்ஷ்மி டீச்சர்.. டா.....ன்... (பின்னே ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் ஆச்சே! அதுக்கோசம் மிஸ்ஸை டான்ஸெல்லாம் ஆட சொல்லக்கூடாது) முதல் நாளே மிஸ்ஸை அம்மா மீட் பண்ணி என்னை பத்தி வத்தி வெச்சாச்சு. மஹா பயம் எனக்கு. நான் எழுத்து கூட்டி ஒரு வரி படிக்கறதையே சாதனையா நினைச்சுண்டு இருந்த நேரத்துல ஆசிரியை , உரைநடையில் ரா.பி. சேதுப்பிள்ளையின் பேச்சு வழக்கு பத்தி  முதல் பாடம் எல்லாம் நடத்த எனக்கு தலை சுத்திச்சு. என்ன தான் அம்மா கோச் பண்ணினாலும் என்னால இலக்கணம் எல்லாம் பிக்கப் பண்ணவே முடியல.

இன்னோரு அதிர்ச்சி என்னன்னா, தமிழுக்கு ரெண்டு பேப்பராம். அடக்கஷ்டமே.. ஒரு பேப்பர் எழுதறதுக்கே சரக்கில்லை. 2 பேப்பர் என்னத்த எழுதப்போறேனோன்னு ஒரே டென்ஷன். எப்படியோ சமாளிச்சு முதல் மிட் டெர்ம் எழுதியாச்சு. மார்க்கு வந்தப்போ பயங்கர அதிர்ச்சி. முதல் பேப்பர் செய்யுள் உரைநடை 34/50, ரெண்டாவது பேப்பர், இலக்கணம், கட்டுரை, மெழி பெயர்ப்பு -18/50. ஃபெயில்! எனக்கு உலகமே இருட்டிண்டு வந்தது. பின்னே. இது நாள் வரைக்கும் பாலாமணி மாதிரி பண்ணினாலும் ஃபெயில் ஆனதா சரித்திரம் இல்லை. ஏதோ தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு ஒரு பார்டர்லயாவது பாஸ் பண்ணின ஆளு.. இப்படி கேவலமா வாழ்க்கையில தோத்துட்டோமேன்னு மனசு வெறுத்து போயிடுத்து. நமக்கெல்லாம் வாழத்தகுதியே இல்லைன்னு நினைச்சுண்டேன்.  அம்மா கிட்டே சொன்னா அவ்வளவு தான். திட்டி பிரிகட்டிடுவாங்கன்னு ஒரே பயம். ஒரு வாரம் கப்சிப்ன்னு இருந்தேன். அம்மா தினமும் கேட்டாங்க. பேப்பர் வரலைன்னு கூசாம பொய் சொன்னேன்.

அப்புறம் மனசு ரொம்ப குறுகுறுக்க பிராக்ரஸ் ரிப்போர்டு குடுத்த அன்னிக்கு சொல்லிட்டேன். அம்மா ரொம்ப கூலா சொன்னாங்க. அவ்ளோ தானே? நீ இந்த மார்க்கு கூட வாங்குவேன்னு நான் நினைக்கலை. பரவாயில்லை, எப்படியும் குவார்டர்லிக்குள்ளே உன்னை கோச் பண்ணிடுவேன் அப்படீன்னு சொன்னப்போ பெரிய ரிலீஃப்.

முதல்லே, ப்ளெயின் பேஜ்ல எழுதவே கஷ்டமா இருந்தது. தமிழ் ஆரம்பத்துல இருந்து எழுதிப்பழகாதது எப்பேர்ப்பட்ட பிழைன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். ஒற்றெழுத்து எல்லாம் ஒரேடியா தப்பு விடுவேன். இப்போவும் இந்த பிரச்சினை இருக்கு. தக்குடு மாதிரி ற,ர, ன,ண இண்டெர்சேஞ் இஷ்யூஸ். அநியாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். அம்மா ஸ்கேல் வெச்சுண்டு அடி போட்டு திருத்துவாங்க. சரி, பாடங்கள் எல்லாம் ஓரளவுக்கு படிச்சு, வேற்றுமை உருபுகள் எல்லாம் புரிஞ்சும் புரியாமலும் நெட்று அடிச்சு, குற்றியலுகரம், குற்றியலிகரம் எல்லாம் டப்பா அடிச்சு ஒரு மாதிரி குவார்டர்லி பரீட்சை எழுதிட்டேன்.

கிரிலக்ஷ்மி ஆசிரியை ஆன்ஸர் பேப்பர் கொடுக்க கொடுக்க, வயித்தக் கலக்கிடுத்து. ஏதோ ஒரு பையன் தான் க்ளாஸ் டாப்பர்ன்னு நினைவு. ஏதோ ஒரு ஆர்டர்ல கொடுத்த் மாதிரி எனக்கு பட்டது. ஆனா எப்போ என் பேப்பர் வரும்ன்னு ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆயிண்டு இருந்தேன். எல்லோருக்கும் கொடுத்து முடிச்சப்புறம் ஒரே ஒரு பேப்பர் வெச்சு இருந்தாங்க. எனக்கு கன்ஃபார்மா தெரிஞ்சு போச்சு.. இன்னைக்கு சங்கு தான் நமக்கு. ஸ்பெஷல் அர்ச்சனை, அடி எல்லாம் கிடைக்கப்போறதுன்னு ரொம்ப வேர்த்துக்கொட்ட ஆரம்பிச்சுடுத்து. ஆசிரியை சொன்னாங்க, ”தமிழே தெரியாம இருந்தாக்கூட நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கி இருக்கா” ன்னு என் பேர் சொன்னப்போ நான் வாயப்பொளந்ததுல ரெண்டு பூச்சி வாய்க்குள்ளே போயிடுச்சு. ”எல்லோரும் கைத்தட்டுங்க”ன்னு ஆசிரியை சொன்னப்போ நான் இது நிஜம் தானான்னு நம்ப முடியாம திணறினேன். அது வரைக்கும் மேக்ஸிமம் மார்க்கு 67ன்னு கேட்டது. நான் 73! பேப்பர் வாங்க கிட்ட போன போது மிஸ்,” இந்த வாட்டி பரவாயில்லை ஆனா அடுத்த முறை இந்த மாதிரி ஹாண்டுரைட்டிங் இருந்தா ஸீரோ தான் போடுவேன்”னு சொன்னாங்க. அதெல்லாம் எங்கே என் காதுல விழுந்தது? நான் பறந்துண்டுன்னா இருந்தேன்!

சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். மார்க்குக்கு இல்லை, ஆசிரியை கிட்டே கிடைச்ச அங்கீகாரத்துக்கு. அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும் பெண்டு நிமித்தினாங்களே. ஆனா ஆசிரியை என்கிட்டே ஒரு ஸ்பெஷல் கரிசனம் காட்டுவாங்க. ஒரு எம்பதி. அவங்க அப்ரோச்ல நிறைய தாய்மை இருக்கும். ஆசிரியை வெறும் தமிழ் மட்டும் சொல்லித்தரலை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் இப்படி எல்லா வாழ்க்கை நெறி முறைகள அழகாக எடுத்து சொல்லி இருக்காங்க. ஹ, அது சிலபஸ்ல இருக்கு, என்ன பெரிய விஷயம் எல்லா ஆசிரியர்களும் பண்றது தானேன்னு கேக்கலாம். ஆனா இவங்க இந்த விஷயங்களை மனசுல விதைச்ச விதம் இருக்கே.. இன்னிக்கும் கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்ன்னு நான் ஞாபகமா சொல்றேன்னா அதுக்கு காரணம் அவங்க தான். அது மட்டுமில்லை 7வது வகுப்பில் நிறைய கிரியேட்டிவ் ரைட்டிங் எழுத தூண்டியவர். கதை கவிதை, பட்டிமன்றம் இப்படி நிறைய பங்கு கொள்ள பண்ணினாங்க.  ஆக, இன்னிக்கி ஏதோ ஒரு சில ஸ்பெல்லிங் டவுட்டுகளை பாஸ்டன் ஸ்ரீராமண்னா கிட்டே கேட்டுண்டு எழுதினாலும், மத்தபடி ஏதோ இப்படி தத்தி தடுமாறி தமிழ்ல ப்ளாக் எழுத படிக்க முடியறதுன்னா அதுக்கு மூல காரணம் அம்மா & ஆசிரியை. இவங்க அன்னிக்கு போட்ட சுழி தான் இன்னைக்கும் நான் ஏதோ தெரிஞ்ச அளவுல கடை போட்டு கல்லா கட்டிண்டு இருக்கேன்.

Training is an ungrateful profession ன்னு நிறைய பேரு அடிக்கடி சொல்ல, கேட்டு இருக்கேன். நானும் அதே துறையை சேர்ந்தவள்ங்கற முறையில என்னிடம் படிச்சவங்க எல்லாம் என்னை மறந்துட்டாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா நான், என்னை உருவாக்கிய ஆசிரியர்களை மறக்கவே இல்லை. ஏதாவது ஒரு வழியில அவங்களையும் அவங்க நினைவுகளையும் அசை போட்டுண்டே தான் இருப்பேன்.

நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியலை, ஆசிரியை. ஆனால் ஒரு அற்ப மாணவியின் நினைவுகள்ல நீங்க எப்போவும் இருக்கீங்க. வணக்கம் ஆசிரியை.

30 comments:

sriram said...

இதுக்கும் ஆஜராயிட்டேன் அநன்யா..

தமிழ் நல்லாத்தான் எழுதறீங்க, இதுக்கு என்ன குறைச்சல், ஏதோ ஒண்ணு ரெண்டு ஸ்பெல்லிங் உங்களுக்கு சொன்னதால எனக்கு எல்லாம் தெரியுமுன்னு அர்த்தமில்லை.

பத்தாவது வரைக்கும் தமிழ் மீடியத்தில் படித்ததால் தமிழ் கொஞ்சம் தெரியும், இன்னும் கூட ஆங்கில இலக்கியம் எனக்கு வராது..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

:)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அநன்யா அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நல்ல அருமையான இடுகை.

Porkodi (பொற்கொடி) said...

பதிவுல பாதி வார்த்தை புரியலன்னாலும், தமிழ் தெரியாத நீங்க ஆசிரியையால 73 வாங்கிட்டீங்க! சபாஸு!! (ஸாரி, நான் தமிழ் 'படித்தது' இல்லை, அதான் இந்த பதிவு கொஞ்சம் கஷ்டம்கா உந்தி!)

தோழி said...

சில ஆசிரியர்கள் வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.. உண்மைதான்... எனக்கு கற்பித்த ஆசிரியர்களையும் நினைக்க வச்சுட்டீங்க.. நன்றி...

LK said...

//அவ்ளோ தானே? நீ இந்த மார்க்கு கூட வாங்குவேன்னு நான் நினைக்கலை. பரவாயில்லை///

சூப்பர் உன் அம்மா உன்னை பத்தி நல்ல தெரிஞ்சு வச்சிருக்கா

இப்ப இந்த மாதிரி ஆசிரியை யாரும் இல்ல.. அதெல்லாம் ஒரு காலகட்டத்தோட முடிஞ்சு போச்சு

sriram said...

சாரி நான் சொல்ல வந்தது ஆங்கில இலக்கணம். இலக்கியம்னு தப்பா சொல்லிட்டேன்... பாருங்க அது கூட எனக்குத் தெரியல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chitra said...

////”தமிழே தெரியாம இருந்தாக்கூட நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கி இருக்கா” ன்னு என் பேர் சொன்னப்போ நான் வாயப்பொளந்ததுல ரெண்டு பூச்சி வாய்க்குள்ளே போயிடுச்சு. ”எல்லோரும் கைத்தட்டுங்க”ன்னு ஆசிரியை சொன்னப்போ நான் இது நிஜம் தானான்னு நம்ப முடியாம திணறினேன். அது வரைக்கும் மேக்ஸிமம் மார்க்கு 67ன்னு கேட்டது. நான் 73!////


.....wow! Thats pretty impressive!

நாஸியா said...

ராத்திரி கனவுல ஏதோ தேர்வெழுதுற மாதிரி கண்டேன்.. காலையில பார்த்தா உங்க பதிவு!

எனக்கும் பள்ளி நாட்கள்ல தமிழ் தான் ரொம்ப பிடிக்கும்..எப்படியும் முதல் மதிப்பெண் வாங்கிடுவேன்.. ஆனா எனக்கு ராஜலக்ஷ்மின்னு ஒரு மிஸ் இருந்தாங்க.. எங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது.. ஹிஹி..

ஹுஸைனம்மா said...

//நீ இந்த மார்க்கு கூட வாங்குவேன்னு நான் நினைக்கலை//

என்ன ஒரு புரிதல்!! அம்மாவாச்சே!!

அதையும் சவாலா எடுத்து, உங்களை முதல்மாணவியாக்கிக் காட்டினாங்க பாருங்க, ஸோ, த ஃப்ர்ஸ்ட் க்ரெடிட் கோஸ் டு யுவர் மதர்!!

ம்ம்.. சில ஆசிரியைகள் கண்டிப்பும், கனிவும் சேர்ந்தே இருப்பாங்க. இப்பவும் சிலர் உண்டு, அரிதாக.

LK said...

//நாஸியா said...

ராத்திரி கனவுல ஏதோ தேர்வெழுதுற மாதிரி கண்டேன்.. காலையில பார்த்தா உங்க பதிவு!/

appa oru test vachiralama

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான பதிவு ...நல்ல நினைவுகள்

தக்குடுபாண்டி said...

present teacher!!..:)

Maheshwaran said...

Present miss...

புதுகைத் தென்றல் said...

ஆஷிஷ் அம்ருதாவுக்கு இரண்டுவருஷம் முன்னாடி நான் சொன்னதும் அதேதான். ஹிந்திக்கு அவங்களுக்கு நான் கொடுத்த ஊக்கம் உங்க அம்மா சொன்ன வார்த்தைகள்தான்.

Kanchana Radhakrishnan said...

present Ananya.nalla pathivu.

Priya said...

அழகான நினைவுகள்!

பத்மநாபன் said...

பரவாயில்லை படிக்கிற காலத்திலேயே , டீச்சர் , அம்மா தயவுல ஒழுங்கா தமிழ் படிச்சிட்டிங்க . நன்றியும் தெரிவிச்சிட்டிங்க இந்த அழகான பதிவுல . நான் தமிழ் மிடியத்திலேயே படிச்சாலும் , பத்திரிக்கைகள், கதை புத்தகம் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் தமிழ் உட்கார ஆரம்பிச்சது ..

அப்பாவி தங்கமணி said...

நல்ல பதிவு. நானும் ஒரு வருஷம் டீச்சர் வேலை பாத்து இருக்கேன். அந்த மனநிறைவு எதுலயும் கிடைச்சதில்ல. Such a noble profession. உங்க பதிவு என்னோட teachers எல்லாம் ஞாபக படுத்திடுச்சு
நல்ல எழுதி இருக்கீங்க. உங்க தமிழுக்கு என்ன கொறை

திவா said...

//மெழி பெயர்ப்பு -18/50. ஃபெயில்! // ரெண்டாவது தரம் பெயில் பண்ண வேண்டியதுதான். :-)
//மத்தபடி ஏதோ இப்படி தத்தி தடுமாறி தமிழ்ல ப்ளாக் எழுத படிக்க முடியறதுன்னா அதுக்கு மூல காரணம் அம்மா & ஆசிரியை.//
அட்ரஸ் கொடுங்க. ஒரு நடை போய் நீங்க செஞ்ச காரியத்துக்கு என்ன பயங்கர விளைவெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டுட்டு வரணும். :P:P

ஜெகநாதன் said...

​ஜெயலஷ்மி பற்றிய இடு​கையில் சரஸ்வதி ​தேவியின் படம் ​போட்டதிலிருந்து நீங்கள் ஒரு நல்ல கல்விமான் என்று ​தெரிந்து விட்டது (பார்த்து இருங்க.. யாரும் கன் எடுத்திட்டு வந்திரப்​போறாங்க)
இலக்கண​மே இ​டையூ​றே கலக்கறி​யே அடிவயிற்​றை என்று இலக்கண வகுப்புகள் அறிமுகமாகின்றன.
மாத்தி​ரைகள் இனிப்பது ​கொடுக்கின்ற கரங்களின் ​தன்​மையால்தான் :))
படிப்பும் அப்படித்தான்.
பள்ளியில் பட்டிமன்ற​மெல்லாம் ​பேசியிருக்கீங்களா?? ​ப​லே!
ஆனா, அது எப்பிடி இருந்திருக்கும் என கற்ப​னை ​செய்யும் ​போது எங்களுக்கு ​லேசா கிலி எடுக்குது..!!

கே.ரவிஷங்கர் said...

அருமையான பாசாங்குத்தனம் இல்லாத நடை.பொருத்தமான தலைப்பு.
ரசித்தேன்.நானும் குரோம்பேட்டை
(புருஷோத்தம நகர்).ஆனால் உங்களை விட ரொம்ப ரொம்ப சீனியர்.

பார்ட் -1

//”மேனிக்குள் டாஷு வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”னு பாடினா. கொல்லுன்னு எல்லாக் குழந்தைகளும் சிரிச்சுட்டாங்க//

சூப்பர்.காதல் அப்போது கெட்ட வார்த்தை. “காதலிக்க நேரமில்லை படம் போறோம்” எனச் சொல்லாமல் நாகேஷ் படம் என்று சொல்லுவார்கள்.
என் அக்காக்கள் என் பெற்றோரிடம்.

DREAMER said...

உங்களோட இந்த இடுகையைப் படிச்சதும், நான் அப்படியே டைம் ட்ராவல்ல என் தமிழ் வகுப்புக்கு போயிட்டேன். நான் 9th படிக்கும்போதுதான் தமிழ் வகுப்புல ஃபர்ஸ்ட் வந்தேன். அப்போ எனக்கும் சங்கீதா என்கிற ஒரு பொண்ணுக்கும்தான் ஃபர்ஸ்ட் மார்க்குக்கு போட்டி நடக்கும். ஆனா, பெரும்பாலும் நான்தான் ஜெயிச்சிட்டிருந்தேன். அப்புறம் 10thல ஒரு பையன் வந்தான் சந்திரபிரகாஷ்-னு பேரு... அவன் என் மார்க்கையெல்லாம் தூக்கி சாப்டுட்டு எங்கேயோ போயிட்டான். எனக்கு ஆரம்பத்துல அவன்மேல பொறாமையா இருந்தாலும், என் பர்த்டே அன்னிக்கி காலையில ஃபோன் பண்ணி, 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'டா ன்னு சொல்லி, இப்பத்தான் உன் பேருக்கு கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்-னு சொன்னதும், சே! இவனைப்போயி தப்பா நினைச்சிட்டோமேன்னு நான் ரொம்ப வெட்கப்பட்டேன், அவன்தான் எனக்கு, தமிழ்மொழியை மார்க்குக்கு மட்டும் படிக்ககூடாது, அதுல ஒரு ஈடுபாடு, ஒப்புதல் வேணும்னு எனக்கு வாழ்ந்து காட்டினவன், அப்புறமா நாங்க ஒரு தேவா-சூர்யா, கர்ணன்-துரியோதனன் போல நல்ல நண்பர்களாயிட்டோம்.

சாரி, உங்க 'கற்றது தமிழ்' இடுகை படிச்சதால இவ்ளோ பெரிய ஃப்ளாஷ்பேக் ஞாபகம் வந்துடுச்சு..! உங்க ப்ளாக்குல வந்து ஃப்ளாஷ்பேக்கை கொட்டிதீர்த்துட்டேன்! மன்னிக்கவும்.

-
DREAMER

geethasmbsvm6 said...

மெழி பெயர்ப்பு -18/50. //

இதைச் சுட்டிக்காட்டலாம்னு வந்தா ஏற்கெனவே திவா சொல்லிட்டுப் போயிட்டார். நானும் தமிழ் அறிஞர் எல்லாம் இல்லை. ஏதோ தமிழில் அதிகம் புத்தகங்கள் படிச்சிருக்கேன் அம்புடுதேன். மற்றபடி இலக்கணம் எல்லாம் சுட்டுப் போட்டாக்கூட வராது! அப்படி ஒரு பாடத்திட்டமே நான் எடுத்த கோர்சில் கிடையாது. ஏற்கெனவே எட்டு பாடங்கள் படிச்சோம், இதிலே தமிழ் இலக்கணம் எங்கே படிக்கிறது?? தப்பில்லாமல் தமிழ் எழுதத் தெரியும்! நல்ல நினைவு கூரல்.

Ms.Chitchat said...

"நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியலை, ஆசிரியை. ஆனால் ஒரு அற்ப மாணவியின் நினைவுகள்ல நீங்க எப்போவும் இருக்கீங்க. வணக்கம் ஆசிரியை"
These words brought couple of drops in my wide eyes. Very well written post. Took us back to our school days. Thanks for taking us through our memory lane.

அநன்யா மஹாதேவன் said...

Thankyou all, for your comments, I am away from home, I will reply to all your comments tomorrow morning.

Thankyou for your overwhelming response.

asiya omar said...

அநன்யா நாங்களும் வந்திட்டோமில்ல,எனக்கும் அபுதாபியில் ஒரு பள்ளியில் 2 வருட ஆசிரியை அனுபவம் மறக்க முடியாத ஒன்று.இப்பமும் அபுதாபியில் ஏதாவது மாலில் என் கூட்டீஸை பார்த்தால் ஐ ஆசியா மிஸ் என்று ஓடி வரும் அழகே தனிதான்.

அநன்யா மஹாதேவன் said...

@ஸ்ரீராம் அண்ணா,
கருத்துக்கு நன்றி, என்ன தான் சொன்னாலும் நீங்க அடிக்கடி ஸ்பெல்லிங் சொல்லிக்கொடுக்கறது ரொம்ப உதவியா இருக்கு.

@ஸ்டார்ஜன்,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீஸ்

பொற்ஸ்,
ஓ நானாவது பரவாயில்லைம்மா, நீ சுத்தமா ஸ்கூல படிக்காமலேயே இப்படி கதை எல்லாம் பின்னி எடுக்கறியே? இருந்தாலும் செய்யுட்பகுதியை நீ மிஸ் பண்ணிட்டேன்னு தான் சொல்லுவேன். என்ன அருமையா இருக்கும் தெரியுமோ?

@தோழி,
ரொம்ப நன்றிங்க.நான் எப்போவும் என்னுடைய ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் நினைச்சுண்டே தான் இருப்பேன். சிலரை ரொம்ப அடிக்கடி நினைச்சுக்கறதுண்டு. அவர்களில் இவர் முதன்மையானவர்.
ஆசிரியர்களே இப்படித்தாங்க ரொம்ப பாதிப்புக்குள்ளாக்குபவர்கள். (Influential people)

@LK,
அப்படியா? நிச்சியம் இருந்துண்டே தான் இருப்பாங்க. நமக்கு தெரியலையா இருக்கும்.

@சித்ரா,
ரொம்ப நன்றி! மிஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டு. Tough Correction. தமிழ்ல மேக்ஸிமம் 75 தான் போடுவாங்க.

@நாஸியா,
ஓ, தேர்வுக்கனவுகள் எனக்கு பயங்கர டென்ஷன். பேப்பர் பத்தாது, மணி ஆயிடும், நான் லேட்டா போவேன், பேப்பர்ல (வழக்கம்போல) ஒண்ணுமே தெரியாது, பேக்கு மாதிரி முழிச்சுண்டு இருப்பேன் இப்படி நிறைய ஸ்ட்ரெஸ்ஃபுல் ட்ரீம்ஸ் வரும். நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.
ராஜலக்‌ஷ்மி மிஸ்.. ஒரு பதிவு போடுங்களேன். :)

@ஹூஸைனம்மா,

நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சரி. ஆனா அம்மாவுக்கு பெத்த பொண்ணு மேல பாசம் இருந்தது. ஆனா ஜெயலக்‌ஷ்மி மிஸ்ஸூக்கு அப்படி இருக்கத்தேவையில்லை. இருந்தாலும் அவங்க ரொம்ப கருணையோட சிரத்தையா எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தாங்க. ரொம்ப டவுட்ஸ் கேப்பேன். மிஸ் முகம் சுளிக்கவே மாட்டாங்க. ரொம்ப பெருந்தன்மையோட நிதானமா எனக்கு ஸ்பெஷலா க்ளாஸுக்கு வெளியில எல்லாம் சொல்லி குடுத்து இருக்காங்க. அதான் மிஸ்ஸுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

@சுந்தர் சார்,
நன்றிகள் பல.

@தக்குடுபாண்டி,
அட்டெண்டன்ஸ் மார்க்குடு!

@மஹேஷ்,
அட்டெண்டென்ஸ் மார்க்குடு!

@புதுகைத்தென்றல்,
கருத்துக்கு நன்றி அக்கா..

@காஞ்சனா அவர்களே,
என் பதிவு படிச்சு கருத்து போட்டதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.

@ப்ரியா,
நன்றீஸ்

@பத்மனாபன்,
:-) கருத்துக்கு நன்றீஸ்

@அப்பாவி தங்கமணி,
அப்போ நீங்களும் மிஸ்ஸா. சூப்பரு.
இவ்ளோ நம்பிக்கை எம்மேல வெச்சதுக்கு தாங்க்ஸ் பா.. ஏதாவது தவறு இருந்தா சுட்டிக்காட்டவும்.

@திவா அண்ணா,
:(( மிஸ் அட்ரெஸ் தெரியாம தானே பதிவு போட்டு இருக்கேன்.. இல்லாட்டி நேர்ல போய் இருக்க மாட்டேன்? நன்றி சொல்ல?
:)

அநன்யா மஹாதேவன் said...

@ஜெகன்,
ஆமா, என்னைப் பொருத்த வரை, ஜெயலக்ஷ்மி மிஸ் தான் அ, ஆ சொல்லிக்கொடுத்த சரஸ்வதி தேவி. கல்விமான் ஜோக்கு- :)
ஆமாம் பட்டிமன்றம் பேசி இருக்கேன். கர்ணனுக்கும் வீமனுக்கும் என்னமோ கம்பாரிஸன். தலைப்பு நினைவில்லை.
கார்த்திகேயன்னு ஒரு பையன் வேகமா பெஞ்சுக்கு கீழே குனிஞ்சு தண்ணி எடுத்து குடுத்தான். கொஞ்சம் விட்டா நான் சாமியாடினத்துக்கு கற்பூரம் ஏத்தி மலையேத்தி இருப்பான். அவ்ளோ டென்ஷன் ஆயிட்டேன். :P

@ரவிஷங்கர் அவர்களே,
நீங்க என் பதிவுக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க ப்ளாக் படிச்சேன். நிறைய சுவாரஸ்யமான பதிவுகள். ரசனையா இருந்தது. வாழ்த்துக்கள். ஓ நீங்களும் புருஷோத்தம் நகரா.. நாங்க பஞ்சவர்ணம் அரிசி மண்டி கிட்டக்க கொஞ்ச வருஷம் இருந்தோம். அப்புறம் மாறியாச்சு.
ஆமா, காதலே கெட்ட வார்த்தை தான். மிஸ்ஸுக்கு பிடிக்கிற மாதிரி பாடணும்ன்னு நான் மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி இந்த மாதிரி பாட்டெல்லாம் தான் பாடுவேன். :) உங்கள் நாகேஷ் படம் கருத்து ரசிச்சேன்.

@ட்ரீமர்,
உங்க ஃப்ளாஷ்பேக்கும் ரொம்ப சுவையா இருந்தது. அதுனால நீங்கள் பகிர்ந்தது நல்லதே.. :)இப்போவும் டச் ல இருக்கீங்களா சந்திரப்பிரகாஷோட? :)அருமையான கமெண்ட்.

@கீத்தா மாமி,
ரொம்ப நன்றீஸ்

@மிஸ் சிட்சாட்,
ரொம்ப நன்றிங்க. ஆத்மார்த்தமா எழுதி இருக்கீங்க. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். :)

Madhavan said...

//அம்மா தான் ஸ்கூல் ஃபர்ஸ்டாச்சே! அதுனால எங்க மேலையும் அப்படி ஒரு (தப்பான) நம்பிக்கை//

You have humorous sense..

Related Posts with Thumbnails