Pages

Wednesday, April 14, 2010

இறுக்கம்

அவசரமாக கடுகு வேண்டி இருந்தது. எப்போவும் இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருப்பாள். இன்று எதிர்பாராமல் தீர்ந்து விட, பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளலாம் என்று கிளம்பினாள். இன்னும் ஒரு மணி இருக்கிறது அவள் கணவன் சாப்பிட வருவதற்கு. அதற்குள் வாங்கிக்கொண்டு வந்து விடலாம். தலையை சரிபண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு கீற்று குங்குமம் வகிட்டில் தீற்றிக்கொண்டாள். கதவைப்பூட்டிக்கொண்டு வெளியில் லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.

ஒரு சில நொடிகளில் லிஃப்டு காலியாக வந்தது. புகுந்து கொண்டாள். 12வது மாடியில் மீண்டும் நின்றது. ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொண்டார்கள். எப்படியும் லிஃப்டு போகிறதே, இன்னும் இரண்டு பேர் வந்தால் ஒரே மின் செலவில் இத்தனை பேருக்கு உபயோகமாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டாள். அப்படி நினைத்தாலும், ஏதோ ஒரு அந்நிய உணர்வு! டெலிக்கேட்டாக இருக்கும். சில மைக்ரோ நொடிகள் தான் என்றாலும், முகம் தெரியாதவர்களுடன் செய்யும் இந்த லிஃப்டு பயணம் அவளுக்கு கிட்டத்தெட்ட மரணாவஸ்தையாக இருப்பதென்னமோ உண்மை தான்.

ஒரு வேளை தான், தான் கொஞ்சம் பட்டிக்காட்டுத்தனமாக இவ்வாறு உணர்கிறாளோ. இதோ இப்போது குழந்தையுடன் வந்தாளே, இந்த அராபிய பெண்மணி எப்படி உணர்கிறாள் என்று கூர்ந்து ஒரு நொடி கவனித்தாள். தண்ணீரில் இருந்து வெளியில் விழுந்த மீன் போல துடித்துக்கொண்டிருந்தாள். பாவம் என்ன கஷ்டமோ என்னமோ என்று நினைத்துக்கொண்டாள்.

லிஃப்டு இப்போது மீண்டும் 6வது மாடியில் நின்றது. இன்னேரம் பயங்கர பிஸி நேரம் போலுள்ளதே.. நிறைய பேருக்கு லிஃப்டு வேண்டியதாக இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். ஒரு பிலிப்பினோ இளைஞன் ஏறிக்கொண்டான். அவன் லிஃப்ட் கதவு மூடியதிலிருந்து, அந்த மேலே ஒளிரும் ஆரோ பட்டனையே பார்த்தவாறு ஜி எப்போது வரும் என்று நிம்மதி இல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

சரிதான் எல்லோருக்கும் அதே நிலை தான் போலுள்ளது என்று நினைத்து சிரித்துக்கொண்டாள். இந்த பில்டிங்கில் எப்போதும் ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். புதிய முகங்கள், பரிச்சயப்படாத மொழி, நிறம், கலாச்சாரம். யாரும் மற்றவருடன் பேசுவதில்லை.

எப்போது தான் ஜி வரும் என்று காத்திருந்தவர்கள் போல கீழ்த்தளம் வந்தவுடன் வெளியில் சிதறினார்கள். வெளியில் வந்தாளே ஒழிய, சோர்வாக இருந்தது. ஏன் இவ்வளவு இறுக்கம். சில மைக்ரொ வினாடிகள் தான் என்றாலும், எதற்கு இவ்வளவு சக்தி உடலில் விரயமாகிறது என்று எண்ணியவாறே நடந்தாள்.

கடுகு வாங்கிக்கொண்டு உள்ளே பில்டிங்கினுள் நுழையும் போது லிஃப்டுக்காக ஒரு மலையாளி பெண்ணும் அவள் மகனும் காத்துக்கொண்டு இருந்தார்கள். லிஃப்டு வந்தவுடன் மெதுவாக கதவை பிடித்தவாறே அவ்விருவரையும் உள்ளே அனுமதித்துவிட்டு இவளும் புகுந்து கொண்டாள். 14ஐ அமிழ்த்திவிட்டு “விச் ஃப்ளோர்?” என்று சிரித்தவாரே கேட்டாள். 10 என்றான் அந்த சிறுவன் பளிச்சென்று. ஒரு புன்னகையுடன், 10ஐ அமிழ்த்திவிட்டு, அந்த பெண்ணை நோக்கி சிநேகமாக சிரித்தாள்.


அந்த பெண்ணும் பதிலுக்கு புன்னகைத்தாள். அந்த சிறுவனை நோக்கி சிரித்துக்கொண்டே, ”வாட் ஈஸ் யூவர் நேம்?” என்றாள். “நிகில்” என்றே வெட்கத்துடன் சொன்னான். ஒரு சில கேள்விகளும் அந்த குழந்தையின் அழகு பதில்களும் அந்த லிஃப்ட் பயணத்தை இனிமையாக்கின. அவர்கள் இறங்கி போகும்போது,” பாய் ஆன்டீ” என்றான் நிகில். லிஃப்டு கதவை மூடி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை? மிகவும் குதூகலத்துடன் இருக்கிறோமே? ஏன்? அந்த சிறுவனா? இல்லை அவன் தாயா? இல்லை அவன் மழலைப் பேச்சா? என்ன? என்று யோசித்தாள்? விடை தெரிந்தது. அது - சிரிப்பு.


இனி லிஃப்டு பயணங்கள் அந்த பட்டனை நோக்கிய, இறுகிய முகப்பயணங்களாக இருக்காது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

அவள் வீட்டுக்கதவை திறக்கும்போது தான் அதை உணர்ந்தாள். இப்போது அவள் மனக்கதவும் திறந்து இருந்தது.

33 comments:

துபாய் ராஜா said...

அருமை. சில நிமிடப் பயணம் என்றாலும் முகம் தெரியாத, மொழி தெரியாதவருடன் மிகக்குறுகிய இடத்தில் பயணம் செய்வது மிகக்கொடுமை தான்.

sriram said...

ஐயா மீ தெ ஃபர்ஸ்ட்ட்டூ
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

Present Ananya

sriram said...

இப்போ என்னா சொல்ல வர்றீங்க??

எல்லோரும் எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்கணுமா? உங்க ஃப்ரொபைல் போட்டோவை ஒரு தடவ பாருங்க??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chitra said...

:-) Keep smiling!

Vidhoosh said...

அட ஒரு நிமிஷம் புன்னகைத்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றியது, ஆனாலும் ஜாக்கிரதைங்க.. நம்மூர் என்றாலே சொல்ல முடியாது!!! :))

R.Gopi said...

சிரிப்பு நல்ல மருந்து...

அதை எப்போதும் கை கொள்வோம்..

மன இறுக்கம் குறைப்போம்...

சித்ரா சொன்ன மாதிரி “கீப் ஸ்மைலிங்”...

pudugaithendral said...

எழுத்தில் நல்ல முன்னேற்றம் அனந்யா, பாராட்டுக்கள்

பனித்துளி சங்கர் said...

ஆஹா . மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

Unknown said...

Present Akka... இந்த பதிவு குறித்து சொல்ல பெரிதாக அபிப்பிராயம் இல்லை. நாகரீகம் வளர வளர Privacy, Busy, individuality என்ற பெயரில் தனித்துக்கொண்டதும், கிராமத்து மனிதர்களின் “கூட்டுறவை” nosey (poking nose into other's personal matter) என்று ஒதுக்கி வைத்துவிட்டு தனியாக இருக்கிறோம் என்று இந்த நிலைமையை ஏற்படுத்திக்கொண்டதும் நாமே...

Geetha Sambasivam said...

வெறும் அநன்யா,

சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோட்டாப் போட்டு வைங்க!

Geetha Sambasivam said...

//புதுகைத் தென்றல் said...

எழுத்தில் நல்ல முன்னேற்றம் அனந்யா, பாராட்டுக்கள்//

ம்ம்ம்ம் புதுகை சொல்றதை வழிமொழிகிறேன். நல்ல பதிவு, மனசைத் தொட்டது. எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்யத் தெரிஞ்சிருக்கு. பிச்சு உதறுங்க! கடுகு வாங்கியாச்சா?? கூடவே வேறே என்ன இல்லையோ அதையும் வாங்கிண்டு வந்திருக்கலாமே? :D

எல் கே said...

//சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோட்டாப் போட்டு வைங்க//

eduku neenga nalla nottu tara porela

எல் கே said...

அனன்யா அருமை . இன்று நாகரீகம் , தனி மனித உரிமை/சுதந்திரம் என்ற பெயரில், பல பல விசயங்களை தொலைத்து விட்டோம் . இதுவும் ஒன்று

திவாண்ணா said...

////சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோட்டாப் போட்டு வைங்க////
40 பக்கமா 60 பக்கமா?

திவாண்ணா said...

mmmm! பரவாயில்லை. புன்னகைக்கலாம். ஆனா மத்தவங்க கண்ணைப்பாத்து சிரிக்ககூடாது.அது தப்பான அர்த்தத்தை எடுத்துக்க வாய்ப்பு கொடுத்துடும்.நம்ம முகத்தை சந்தோஷத்தோட வெச்சு கொண்டு இருந்தாலே பாக்கிறவங்களும் சந்தோஷம் வரும்.

Geetha Sambasivam said...

@திவா, என்ன தம்பி நீங்க?? அக்காவுக்குக் கொஞ்சமானும் சப்போர்ட் பண்ண வேண்டாமோ?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரி, சரி, அவங்க கொடுக்கலைனா நீங்க கொடுத்துடுங்க, ஆயிரம் ரூபாய் நோட்டுப் போதும், அதுதான் மாலையாக் கட்ட வருமாம், மாயாவதி சொல்லி இருக்காங்க! :P

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

Nice theme. Its clearly shows how we miss our human relationship in this mechanical world.

உங்கள் ப்ளாக் பார்த்தவுடன் எழுதிய எனது சிறு கவிதை உங்கள் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்

முகங்களற்ற விசித்திர சமூகம்
எல்லாவற்றுக்கும் ஒரே பதில்
மௌனம் .........
சிநேகம் மறந்த உலகத்தின்
வாசல் திறப்போம் சிறு இதழ்
புன்னகை கொண்டு.............

அண்ணாமலையான் said...

நடக்கட்டும்.....

Madhavan Srinivasagopalan said...

இறங்கிப் போகச்சே வீட்டை விட்டுப் போனதால.. 'Homesick ' -- இறுக்கம்.
வீடு (flat ) நோக்கி போகும் பொது.. 'Back-home ' - மகிழ்ச்சி..

HA. Ha.. Ha...('கடுகு' Matter..)

ஹுஸைனம்மா said...

ஒருவேளை போகும்போது வந்தவங்க வேற்று நாட்டவர்களா இருந்ததினால சிறுதயக்கம் இருந்துருக்குமாருக்கும்; அதுதான் இனி யாரா இருந்தாலும், புன்னகைக்க முடிவு பண்ணிட்டீங்களே!!

ஸாதிகா said...

இன்றுதான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன்.இறுக்கம் சில நிமிடம் நானே லிப்டில் பயணித்த உணர்வு கிடைத்தது.நன்றாக எழுதுகின்றீர்கள் அநன்யா.வாழ்த்துக்கள்.

Porkodi (பொற்கொடி) said...

:))))))

ஹுஸைனம்மா said...

கேக்க மறந்திட்டேன், வெறும் கடுகுக்காகவா கடைக்குப் போறா? தாளிக்கறதுக்குக் கடுகு அவ்வளவு அவசியமா என்ன? :-))

ஸ்ரீராம். said...

இதைப் படித்ததும் சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களிழ்க் எழுதியிருந்த லிஃப்ட் பற்றிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.

Nathanjagk said...

//லிப்ட் பயணம்​மைக்ரோ​நொடி மரண அவஸ்தை..//
இதை படிக்கும் போது.. லிப்ட் கதவுகள் ஒரு காஃபின் (coffin) மூடி​போலத் திறக்கின்றன என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
லிப்ட் -​வெர்ட்டிக்கலாக பயணிக்கும் ஒரு​நெரிசலான பஸ் பயணம்​போலத்​தோன்றுகிறது சிலசமயம்.

பரிச்சயப்படாத அரபுப் பெண், ஃப்லிப்பி​னோ இளைஞன் என்று கலாச்சார, தேச இடைவெளிகள் இல்லாத ஒரு குட்டி லிஃப்ட் பயணம் - வித்யாசமாயிருக்கு!
நிகிலின் குட்டிப் புன்னகை லிஃப்ட் முழுதும் நிரம்பி வீடு வரைக்கும் வந்து நிறைவது இதமளிக்கிறது.
லிஃப்ட் கதவுகள்.. சிறுவனின் குட்டி இதழ்கள்​போலவும் திறக்கின்றன!

கதையை நிதானமாக வாசித்து முடிக்கும் போது என்னிடமும் ஒரு குட்டிப்புன்னகை :))

Ananya Mahadevan said...

@துபாய்ராஜா
ரொம்ப நன்றி!

@பாஸ்டன் அண்ணா,
வடை போச்சே! என் புரொஃபைல் போட்டோவுக்கென்ன, சும்மா ஜம்முன்னு இருக்கார் ஷிகாரி ஷம்பு! தொப்பி கண்ணை மறைச்சாலும் உதடு சிரிக்கிதே, கவனிக்கலையோ? என்னோட ப்ரதிபிம்பம் ஷம்பு.

@ஸ்டார்ஜன்,
ரொம்ப அருவையாக இருந்தாலும் உள்ளேன்னு சொல்ற உங்க நல்ல மனசை நினைச்சா .... ரொம்ப ரொம்ப நன்றி சார்.

@ சித்ரா,
நன்றி!


@விதூஷ்,
இங்கே யாரும் யாரையும் கவனிப்பதில்லை. நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கவே தான் சினேகம் ஒரு வழி. மத்தபடி லிஃப்டுக்கு வெளியே வேற வாழ்க்கை! கருத்துக்கு நன்றி!

@கோபி,
பாரா அமைத்ததில் இருந்த கோளாறை சுட்டியதற்கு நன்றிகள். கருத்துக்கும் தான். :)

@பனித்துளி,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

@தென்றல் அக்கா,
ரொம்ப ரொம்ப நன்றி! இது என் முதல் முயற்சி

@மஹேஷ்,
ரொம்ப சரியான கருத்து! இன்ஃபாக்ட், மனிதர்களுக்குள் ஒட்டுறவு இல்லாமல் போய்விட்டதன் அடையாளமே இந்த லிஃப்டு பயணங்கள்.

@தக்குடு,
:-)

@கீதா சாம்பசிவம் அவர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி படிச்சு இருக்கீங்க? அப்புறம் என்ன நல்ல முன்னேற்றம்? :P? கதையில் அந்த பெண், கருவேப்பிலை மறந்து விட்டாள். மறுபடியும் லிஃப்டில் போய் வாங்கிண்டா. போறுமா? 192 பேஜஸ் நோட்டு போறுமோ? ஆகட்டும் பார்க்கலாம்! :P (நன்றி திவா அண்ணா)

@எல்.கே,
பல மணி நேரம் யோசிச்சு போட்ட பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி!

@திவா அண்ணா,
சரியாச்சொன்னீங்க. Smile is always infectious!
//ஆயிரம் ரூபாய் நோட்டுப் போதும், அதுதான் மாலையாக் கட்ட வருமாம், மாயாவதி சொல்லி இருக்காங்க// இப்படி சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டுட்டீங்களே!

@குட்டிச்சாத்தான்,
கலக்கிட்டே போ! இதுவல்லவோ கவுஜ! சூப்பர்.
இவ்ளோ அருமையான கவுஜக்கெல்லாம் என் கதை காரணமா இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. keep it up!

@அண்ணாமலையான்,
நன்றிங்க!

@மாதவன்,
எப்புடியெல்லாம் யோசிக்கறாய்ங்க! ஜூப்பரு!

@ஹூஸைன்னம்மா,
இங்கே நம்ம பில்டிங்கல வீல்சேரில் ஒரு அரேபிய முதியவர் இருக்கார். எப்போ அவர் எங்களைப் பார்த்தாலும் சிரிச்சு, விஷ் பண்ணிட்டு, நலம் விசாரிக்காம போகவே மாட்டார். ஏதாவது உதவி வேணுமான்னு என் ரங்கு கேட்பார்.எங்கள் கிட்டே மட்டுமில்லை, யாரா இருந்தாலும் அதே டைப் தான். அவர் கிட்டே இருந்து தான் இந்த கதை பிறந்தது. Nationality க்கும் மனிதநேயத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் கருதவில்லை!நாட்டு நடப்பு, வெயிலின் கொடுமை, டஸ்டு ஸ்டார்ம் இதைப்பத்தி எல்லாம் பேசிண்டே வருவார். லிஃப்டு பயணம் கஷ்டமா இருக்காது அவர் கூட இருந்தா.
இந்த கதையில வரும் பெண்ணுக்கு நாக்கு நீளம், கடுகு தாளிக்காட்டி சமயல் ருசிக்காது! :)

@ஸாதிகா அக்கா(எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க, ஆகவே, நானும்)
முதல் வருகைக்கு நன்றி! என்ன ஒரு கோயின்ஸிடென்ஸ் பாருங்க, நான் முதன் முறையா கதை(மாதிரி) ஒண்ணை எழுதி இருக்கேன், நீங்களும் என் ப்ளாகுக்கு முதன் முறையா வந்திருக்கீங்க. எனக்கென்னமோ ஆஸ்கர் அவார்டு வாங்கின மாதிரி இருக்கு..ரொம்ப ரொம்ப நன்றி! அடிக்கடி வாங்க.

@பொற்கொடி,
இன்னாம்மா, வந்தே, ஸ்மைலி போட்டே, போயிண்டே இருக்கே? இன்னா மேட்டர்?

@’எங்கள்’ ஸ்ரீராமண்ணா,
லிஃப்டு பயணங்களைப்பற்றி சுஜாதா என்னன்னு எழுதி இருக்கார்ன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை.. நினைவுக்கு வந்ததே, இங்கே போட்டு இருக்கலாம்ல?

@ஜெகநாதன்,
அருமையான விளக்கம். காஃபின்னு சொன்னது கிட்டத்தெட்ட ஒரு கசப்பான உண்மை. உயிரற்ற மனிதர்கள் தான் லிஃப்டு தூக்குகிறது. அதிலும் காலை அவசரத்தில் லிஃப்டின் இறுக்கம் இன்னும் அதிகம். நம்ம வீட்டு ரங்கு லிஃப்டுல வரவங்களை சிரிச்சு எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்லி குஷி படுத்துவார். கருத்துக்கு நன்றி!

Geetha Sambasivam said...

நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி படிச்சு இருக்கீங்க? அப்புறம் என்ன நல்ல முன்னேற்றம்? :P? //

நறநறநறநற(ஒரு சேஞ்சுக்கு க்ர்ர்ர்ர்ரை விட்டுட்டு இது போட்டிருக்கேன்) உங்க பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்கலைனா படிக்கலைனு அர்த்தமா?? முன்னேற்றம்னு சொன்னதே தப்பாப் போயிடுச்சே!

வெறும் அநன்யா, யோசிக்க வைக்கறீங்களாக்கும், என்னவாக்கும் இது??? நன்னாவே இல்லையே, கேட்டேளா??? :P:P:P

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை? மிகவும் குதூகலத்துடன் இருக்கிறோமே? ஏன்? அந்த சிறுவனா? இல்லை அவன் தாயா? இல்லை அவன் மழலைப் பேச்சா? என்ன? என்று யோசித்தாள்? விடை தெரிந்தது. அது - சிரிப்பு//

very nice.. keep smiling.. :-)

தக்குடு said...

//@கீதா சாம்பசிவம் அவர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி படிச்சு இருக்கீங்க? அப்புறம் என்ன நல்ல முன்னேற்றம்? :P? கதையில் அந்த பெண், கருவேப்பிலை மறந்து விட்டாள். மறுபடியும் லிஃப்டில் போய் வாங்கிண்டா. போறுமா?// ROFTL...:)

Anonymous said...

உண்மைதான். தெரியுதோ தெரியாதோ யாரைப் பார்த்தாலும் ஒரு சின்ன புன்னகை வீசுவதற்கு ஏன் கஞ்சத்தனம் என்று நான் நினைப்பதுண்டு. அதுவும் லிப்டில். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். =))

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா மொக்கை அநன்யா கிட்டருந்து இப்படிலாம் பீலிங் பதிவை எதிர்பாக்கவே இல்ல, கலக்கலா இருக்கு!

அன்னிக்கு ஸ்மைலி போட்டது அந்த கூட பயணம் பண்ணவங்க மைண்ட்வாய்ஸ் நினைச்சு.. :P

ஜெய்லானி said...

ஒரு கடுகுக்கே கதையா ?. போன் பண்ணிணா குரேசரி ஆள் வீட்டிலே வந்தே தருவானே!!. ஏன் இவ்வளவு டென்ஷன்.

Related Posts with Thumbnails