Saturday, April 24, 2010
சந்தை & அபுதாபி கார்னிஷ்
கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு சொல்றதை மாதிரி நாங்களும் வீக்கெண்டுக்கு வீக்கெண்டு கார்னிஷ் போயிடுவோம். கார்னிஷ்ன்னா என்னன்னு பலர் கேக்கலாம். கார்னிஷ்ன்னா கடற்கரையோரமா இவங்க, 6 கிலோமீட்டருக்கு மும்பாய் மெரீன் ட்ரைவ் மாதிரி கட்டி, அதை சுத்தி ஃபவுண்டெயின்ஸ், மரங்கள், பூச்செடிகள், புல்த்தரை இப்படி செயற்கையா செஞ்சு வெச்சு இருக்காங்க. இங்கேத்த ஷேக்குக்கு பசுமை, ஃபவுண்டெயின்னா ரொம்ப பிடிக்குமாம். அங்கே போனாலே ரொம்ப ரம்மியமா இருக்கும்.
யாரெல்லாம் கார்னிஷ் ரோடுல இருக்காங்களோ அவங்களெல்லாம் ரொம்ப குடுத்து வெச்சவங்க. ஒரு பத்து நிமிஷம் அங்கே இருக்கற காற்றை சுவாசிச்சாலே உடம்புல இருக்கற வியாதி எல்லாம் டாட்டா சொல்லிடும். அவ்ளோ தூய்மையான காற்று மண்டலம். பத்தாக்குறைக்கு லேசான அலைகளோட சலசலக்கற தண்ணீர், ஆங்காங்கே வசீகரமான கனோபிகள், நடக்க அழகிய அகலமான நீல நடைபாதை, ஸ்கேட்டிங், சைக்கிளிங் இதுக்கெல்லாம் தனி ட்ராக், மிகப்பெரிய குழந்தைகள் ப்ளே ஏரியா, வாட்டர் தீம்ஸ், பார்பிக்யூ ஏரியா இப்படி பல ஐடியாக்களால் இந்த இடம் தான் ஒட்டுமொத்த அபுதாபி வாசிகளுக்கு சுவர்க்கபுரி.
இதை முனிசிபாலிட்டி ரொம்ப நல்லா மெயிண்டெயின் பண்றாங்க. செடி பராமரிப்பு, நடக்கும் பாதையை சுத்தப்படுத்தறது இப்படி பல நடவடிக்கைகள் எடுத்து எப்போ போனாலும் மனம் கொள்ளை போகும் அளவுக்கு அருமையான ஒரு இடம். எத்தனை வாட்டி போனாலும் ஹை, இது போன வாட்டி நாம பார்க்கலையேன்னு தோணும். புதுசு புதுசா ஏதாவது ஒரு வால்யூ அடிஷன் பண்ணிண்டே இருக்காங்க. போன வாரம் போனப்போ புதுசா எக்ஸர்ஸைஸ் மெஷின்ஸ் வெச்சு இருக்காங்க. பார்க்க மேலே, படம். நிறைய பேர் ஃபுல்லார்ம் ஷர்டெல்லாம் போட்டுண்டு எக்ஸர்ஸைஸ் பண்றாங்க. அந்த அளவுக்கு ஈடுபாடு பார்க்க முடியுது.
நேத்திக்கி வழக்கம்போல கார்னிஷ் தான் போயிருந்தோம். புதுசு புதுசா ஸ்டால்ஸ், பட்டாணிகள் கூட்டம், குதூகலத்துடன் குழந்தைகள், பெரியவர்கள், பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னன்னு கவனிச்சா, ராயல் எமிரேட்ஸ் க்ரூப் நடத்தும் ஃபன் ஃபேர். அதாவது ஜாலி சந்தை.
குழந்தைகளுக்காகவே விதவிதமான பெரிய பெரிய ரைடுகள், ரயில், ரோலர் கோஸ்டர் போன்ற சமாச்சரங்கள் வந்திருக்கு. குழந்தைகள் ஸ்பெஷல் ஒரு ராட்சதப்பந்தை உள் வழியா உருட்டிண்டே போறது. நான் இதை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கேன்! பயங்கர ஆச்சிர்யம்.
ஒரு குறிப்பிட்ட இடம் வழியா போயிண்டு இருந்தோம். திடீர்ன்னு பார்த்தா நம்ம ரங்க்ஸ் ஆளைக்காணோம். பின்னாடி திரும்பி பார்த்தா அங்கே செருப்பு என்னமோ ஃபெவிக்கால் போட்டு ஒட்டி வெச்சாப்புல ’ஞ’ன்னு நின்னுண்டு இருந்தார். எதைப்பார்த்து இப்படி ஸ்தம்பிச்சு போயி நின்னுண்டு இருக்கார்ன்னு பார்த்தா, இதான்.
வாயில் டன் டன்னா ஜொள். கண் ரெண்டும் வெளியில, சுருட்டி வெச்ச பாயை பிரிச்ச மாதிரி நாக்கு வெளியில ரோல் அவுட்டாகி பஞ்சு மிட்டாயை பார்த்துண்டே நின்னுண்டு இருந்தார். ப்ளூக்கலர் பஞ்சு மிட்டாய் சூப்பரா இருந்ததே, அதுனால அந்த ஃபிலிப்பினோ கிட்டே பெர்மிஷன் கேட்டு ஃபோட்டோ எடுத்துண்டு ஒரு ’பஞ்சுமிட்டாய்க்கலர்’ பஞ்சு மிட்டாய் (:-P) வாங்கிண்டு, மேல நடந்தோம். நிறைய கடைகள், ஏகப்பட்ட பெப்ஸி வெண்டிங் மெஷின்கள், ரெஸ்டாரண்டுகள், சைனா எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வீட்டு அலங்காரப்பொருட்கள், (உலகின் எந்த மூலையாக இருந்தாலும்) பெண்கள் விரும்பி கூட்டம் போடும் ஃபேன்ஸிக்கடைகள், துணிக்கடைகள் இப்படி ஒரே கடைகள் மயம்! நாளையிலிருந்து தான் திறப்பார்களாம். வெள்ளியாதலால் அவர்கள் சாஸ்த்திரத்துக்கு திறந்த மாதிரி எனக்கு பட்டது. (ஹீ ஹீ)
இதையெல்லாம் பார்த்து ஒரு இனம் புரியாத சந்தோஷம் எனக்கு.
சின்ன வயசுல அவ்வாகூட வீரபாண்டித் திருவிழாவுக்கு போயிருக்கோம். புதுசா வளையல், ரிப்பன், எல்லாம் அவ்வா வாங்கிக்குடுப்பாங்க. பயங்கரக்கூட்டமா இருக்கும். மே திருவிழான்னா, அதுக்கு முன்னாடியே போடியில ரோட்ல ‘கொட்டு’ வரும். வித்தியாசமான மேள சத்தத்துடன் கரகம் எல்லாம் எடுத்து டான்ஸ் ஆடிண்டே போவாங்க. அதை பார்க்க அப்படி ஒரு ஆவல். அடிச்சு பிடிச்சுண்டு வாசப்பக்கத்துல இருந்து கொல்லைப்பக்கம் ஓடுவோம். (1கிமீ இருக்கும், ஹீ ஹீ). பயங்கரமான ‘கப்பு’ இருந்தாலும், (open drainage system) இந்த கொட்டு வந்தா கொல்லைப்புறக்கதவை திறந்துண்டு நின்னு வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே.. ஹ்ம்ம்.. இந்தக்கொட்டுக்கு ஒரு தீம் கலர் இருக்கும். Any guesses? கரெக்டு. மஞ்சள். எல்லாமே மஞ்சளா இருக்கும். அவங்க உடை, ஆக்ஸஸரீஸ், காவடி, கரகம், முகம் உட்பட! அதான் இத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் பசுமையா அப்படியே இருக்கு அந்த நினைவு.
வீரபாண்டித்திருவிழா கடைசியா போனது, 1992வில். சரோஜி அத்தை கூட்டிண்டு போனாங்க. அப்போவும் ரிப்பன் பஞ்சு மிட்டாய், சர்க்கரை மிட்டாய், தேன் மிட்டாய் எல்லாம் தான் வித்துண்டு இருந்தாங்க. சென்னையில படிச்சுண்டு இருந்த எங்களுக்கு அது ஒரு புதிய அனுபவமா இருந்தது. கோவிலுக்குள்ளே அம்மனை பார்க்கவே முடியல. கூட்டம் முண்டி அடிச்சது. அந்தக்காலத்துல முக்கியமா சந்தை/திருவிழாக்களுக்கு போனால் கண்டிப்பா பண்ற விஷயம் ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடுத்துக்கறது. தாஜ்மெஹல் ஸ்க்ரீன் முன்னாடி மணி மாமா என்னை தூக்கி வெச்சுண்டு எடுத்த போட்டோ ரொம்ப தெளிவா நினைவிருக்கு.
அடுத்தடுத்து சந்தை திருவிழா எல்லாம் பார்க்க சான்ஸ் கிடைக்காம போயிடுத்து. விஜயவாடாவில இருந்த போது எக்ஸிபிஷன் தான். அங்கே போனா அப்பா மசாலா அப்பளம், ரஷ், கோல்டுஸ்பாட் எல்லாம் வாங்கிக்கொடுப்பார். ஒரு பாட்டில் வாங்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதை குடிக்கும்போது இருக்காது. பயங்கர சோடா. அந்த காரம் மூக்குல ஏறும். ஒவ்வொரு வாட்டியும் அதை குடிக்கும்போது ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் இதை இனிமே வாங்கவே கூடாதுன்னு நினைச்சுப்போம், ஆனா டீவீயில கவாஸ்கர் வந்து ரஷ் குடிக்க சொன்ன உடனே மனசு சரின்னு சொல்லிடும்.
சென்னை வந்ததுக்கப்புறமா தீவுத்திடல் ரெண்டு மூணு வாட்டி போய் இருக்கோம். அப்படி ஒண்ணும் பெரிய இம்ப்ரஸிவ்வா இருக்காது. கூவம் கப்புல மூக்கை மூடிண்டு தான் ஃபன் ரைட்ஸ் எல்லாம் போக முடியும். அதுவும் எனக்கு, ஜெயண்ட் வீல் எல்லாம் ’வீல் வீல்’ன்னு கத்தற அளவுக்கு பயம். அதுனால அந்த வம்புக்கெல்லாம் நான் போனதே இல்லை. தங்கைமணி பயங்கர அட்வென்சரஸ். எல்லாத்துலேயும் போகும். எக்ஸிபிஷன்லஎல்லாம் இருக்கற அட்ராக்ஷனே லைட்டுகள் தான். நிறைய விதவிதமான கலர்ல வெளிச்சம் போட்டு இருப்பாங்க. லாஃபிங்ஹவுஸில் கண்ணாடிகள் இருக்கும். மேஜிக் ஷோ நடுத்துவார்கள். அந்த வயசுல எங்களுக்கு நிச்சியமாய் அது ஒரு வினோத உலகம் தான்.
சரி, சரி, புள்ளை குட்டியெல்லாம் கூட்டிண்டு அபுதாபி வரதா இருந்தா, கண்டிப்பா கார்னிஷ் ஒரு நடை போயிட்டு வாங்க. குழந்தைகள் ரசிக்கும்.
Labels:
abudhabi corniche,
exhibition,
fun fair,
veerapandi
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
///இங்கேத்த ஷேக்குக்கு பசுமை, ஃபவுண்டெயின்னா ரொம்ப பிடிக்குமாம். ///
எனக்கு பிடித்ததை தெரிஞ்சி வச்சிருக்கீங்களே..
நல்லா சுத்திபாத்திருக்கீங்க அனன்யா.. நல்ல பகிர்வு அனன்யா..
உங்களுடன் நாங்களும் பயணித்தது ரொம்ப சந்தோசம்.
:))
//ஏகப்பட்ட பெப்ஸி வெண்டிங் மெஷின்கள்//
கோக் நன்னாருந்துதா இல்லியா, அதை சொல்லவே இல்லியே?
அபுதாபி வந்தா கண்டிப்பா போறேங்க நன்றி...
Thank you for this post. Interesting. :-)
ஆஜர் அனன்யா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அடடா. என்ன அழகு . நான் அபுதாபி வந்தபோது உறவுகளைப் பார்த்துட்டு
வந்துடுவேன்.கார்னீஷ் இவ்வளவு அழகா இருக்கே. வெய்யில் எரிக்கலையோ~~
எல்லோருக்கும் விழா என்றால் மலரும் நினைவுகள் ஏராளம். உங்களது ரொம்ப இனிமையா இருந்தது. எனக்கும் ஒரு பதிவு,இது போல எழுத ஆசை.:) ரொம்ப ரொம்பப் பழய நினைவுகள். அருமையாக எழுதுகிறீர்கள். அநன்யா.
இன்னைக்கே கார்னிஷ்
போறதா இருக்கேன்.
கனவுலதான்(ஹீ..ஹீ)
//கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு சொல்றதை மாதிரி நாங்களும் ///
இது இதுதன எனக்கு ரொம்ப பிடிச்சது
//ஏகப்பட்ட பெப்ஸி வெண்டிங் மெஷின்கள்// Pepsi kudicha atthimberta intha timemum Pepsi nanna irukka?? nu jaarichchelaa illaiyaa??....:) LOL
ஏதோதோ சொல்லி பழைய ஞாபகத்த எல்லாம் கெளறி விட்டுடீங்க.... நானும் கொசுவத்தி சுத்திட்டு இருக்கேன் இப்போ...
என்னாதான் பதிவை முழுசா நாலு வாட்டி படிச்சாலும், மனசு என்னவோ அந்த நீல கலர் பஞ்சு மிட்டாய் மேலயே இருக்கு....
அடுத்த வாரம் வருவேன்... கிடைக்குமா??
அடடா, மிஸ் பண்ணிட்டோமே, அடுத்த வாரம் வரை இருக்குமாமா?
//குழந்தைகள் ஸ்பெஷல் ஒரு ராட்சதப்பந்தை உள் வழியா உருட்டிண்டே போறது//
இது துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில உண்டு; ஆனா, அது தண்ணியில மிதக்கிறது. அதனால பயந்து, போகலை. கார்னிஷ்ல தரையிலதானே உருளணும்? போகணும் கண்டிப்பா. பாக்கலாம்.
//கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு சொல்றதை மாதிரி //
பாவம் கழுதையை ஏன் வம்பிழுக்கிறீங்க?
//வீக்கெண்டுக்கு வீக்கெண்டு கார்னிஷ் போயிடுவோம்//
தெரியாதே, இனி ஒரு மீட்டிங் போட்டுடுவோம்.
/ஒரு ’பஞ்சுமிட்டாய்க்கலர்’ பஞ்சு மிட்டாய் (:-P) வாங்கிண்டு, //
லொள்ளு!!
வரிசையில திடீர்னு கோயில் திருவிழாக் கூட்டப் படங்களைப் பாத்தவுடனே திகைச்சுட்டேன், அபுதாபிலதான் இருக்கோன்னு!!
@Starjan,
வருகைக்கு நன்றிஸ். ஆமா உங்க டேஸ்டும் அதேதான்னு எனக்கு முன்னமே தெரியும்.. சரி சரி, எனக்கு குடுக்க வேண்டிய பொற்கிழி எங்கே?
@மின்மினி,
ரொம்ப நன்றிங்க.
@பொற்ஸ்
@தக்குடு,
கோக் வாங்கலை.. இப்போ என்ன அதுக்கு? க்ர்ர்ர்...
@தோழி,
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றீஸ்
@சித்ரா,
டாங்க்கீஸ் பா..
@ஸ்ரீராமண்ணா,
வெல்கம். அட்டெண்டன்ஸ் மார்க்க்டு! டாங்க்ஸ்.
@வல்லிம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிம்மா.. கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம் அபுதாபி கார்னிஷ். ஒரு மாலை வேளை அதுக்கோசரம் ஒதுக்குங்க. ஜோரா இருக்கும்.
@LK,
அதிகப்பிரசங்கி! X-(
உனக்கு அடி ரெடி.. வந்து வாங்கிக்கோ..
@மதுமிதா,
:-) எங்களை மாதிரி ஆளுங்களுக்கு கார்னிஷ் தான் தற்காலிக சுவர்க்கம். மத்தபடி நிரந்தர சுவர்க்கம் நம்ம ஊர் தான்.. சொர்ர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?
எனிவே, கருத்துக்கும் வருகைக்கும் நன்றீஸ்.
@அப்பாவிதங்கமணி,
கொசுவத்தி சுத்தறது தான் எனக்கெல்லாம் பதிவு தேத்த ஒரே வழி! அதான்.. ஒரு ஈவெண்ட் கவரேஜ்+ஒரு ப்ளேஸ் டிஸ்க்ரிப்ஷன்+ஒரு மினி கொசுவத்தி இதை மூணும் கலக்கி ஒரு பதிவு தேத்திட்டேன்.. கண்டுக்காம விட்டுடு!
@ஹூஸைனம்மா,
கவலை வேண்டாம். இன்னும் ஒரு மாசத்துக்கு இதான் கார்னிஷ் ஃபுல்லா இருக்கும். மே 22ன்னு போட்டு இருக்காங்க..
ஆமா கழுதைன்னு சொல்லி இருக்க கூடாது.. சங்கத்துல இருந்து ஆள் வந்துட்டாங்க கார்த்தால.. சொல்லி அனுப்புறதுக்குள்ளே எம்பாடு உம்பாடு ஆயிட்டது! :P
கண்டிப்பா..மீட்டிங்கி போட்டுட்டா போச்சு.. என்ன பெரிய பிரமாதம்..
ஹீ ஹீ.. ஆமாங்க.. எல்லாம் உங்க கிட்டே இருந்து தான்.. ஹீ ஹீ
இல்லை நெட்ல சுட்டேன்... தீவுத்திடலும் வீரபாண்டித்திருவிழாவும்.
அபுதாபி டு தீவுத்திடல் --- நல்ல ரௌன்டு கட்டிய பதிவு .... கார்னிஷ் பார்க்க தூண்டிய வர்ணனை ... பிரமாதம் .
வீக் எண்டுக்கு ஏத்த பதிவு. பஞ்சு மிட்டாய் படம் அருமை
ஆகா நல்லசுத்திட்டீங்களா நாங்களும் வந்து பாத்தோமுல்ல. உங்க பக்கத்துலதான் நின்னோம் நீங்க பார்க்கலையே .
மீட்பண்ணிடுவோம் மீண்டும்.
மாப்பு என்ன எக்ஸர்சைஸ் பண்ணிட்டு இருக்காறா?..... இந்த தடவை அடி கொஞ்சம் பலமோ?
ஏஏஏஏஏய்....நீ ஜயன்ட் வில்-ல ஏற மாட்டாயா? ஏறி என்னோட சுத்தி வாந்தி எல்லாம் எடுப்பயே...
ஓஓ....எல்லாரும் படிக்கறதுனால எடிட் பண்ணிட்டாய....ஓகே ஓகே....tension ஆகாம gtalk-la வா ...நாம out-of-court settlement pannikkalaam...
கழுதை கெட்டா குட்டி சுவருன்னுட்டு அங்கே யாருங்க ஒரு ஜோடி உக்கர்ந்திருக்கிரதுங்க.. ஹி ஹி சும்மா உங்க வீட்டில் நுழையும் போதே அடி வாங்கணும் இல்லை உதை வாங்கணும் என்ற ஒரு முடிவோடு தான் வந்தேனுங்க.
//**சின்ன வயசுல அவ்வாகூட வீரபாண்டித் திருவிழாவுக்கு போயிருக்கோம்//**
இதிலும் ஒரு சின்ன திருத்தமுங்க "அப்பாகூட" என்று இருக்கணுமுங்க (அடி வாங்கணும் என்று முடிவு பண்ணியாச்சுல)
--- ஏலே ஹரீகா பீலிங்கா.. குதிச்சு ஓடிப்போய்டு இல்லே அடிபட்டே ஒடிஞ்சு போய்டுவே!!!---
-----------------------------------
சரி கருத்து சொல்லணுமே அதையும் சொல்லிடுறேன். திருவிழாவுல ஓடி பிடிச்சு விளையாடுற சின்ன சின்ன குழந்தைகளை பார்த்திருக்கிறோம். அது போல ஓடி ஆட ஆசை வரும். இதோ ஓடி பிடிச்சு விளையாடி எங்க உள்ளங்களை அள்ளிகொண்டீங்களே அநன்யாக்கா. அமர்க்கள ஆசீர்வாதம் போங்கோ...
@பத்து அண்ணா,
கார்னிஷ் நிச்சியம் பார்க்கவேண்டிய இடம். நீங்க இங்கே வரும்போது கூட்டிண்டு போறோம், கேட்டேளா?
@ஸ்ரீராம் அண்ணா,
மிக்க நன்றீஸ். எனக்கு ப்ளு பஞ்சு மிட்டாய் பார்க்கவே ஜில்லுனு இருந்தது.
@அன்புடன் மலிக்கா,
வாங்க வாங்க, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீஸ்.. நெஸ்டு மீட் பண்ணிடலாம்.
@மஹேஷ்,
அடி பலம் இல்லை.. லேசா ரெண்டு தட்டு தான் தட்டினேன். ஆமா மாப்பு சைக்லிங் பண்ணிண்டு இருக்கார். நான் தான் அவரை மாடலிங் ஆஃபர் குடுத்து சைக்கிள் மேல உக்கார வெச்சேன். இவர் வாழைப்பழ சோம்பேறி. மாடலிங் அஸைன்மெண்டு முடிஞ்சதும் அருமையான ‘பேமெண்டு’ குடுத்தேன். ஹீ ஹீ
@வெட்டி,
ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கே.. பெண்களும் பேன்களும் கட்டுரைக்கி எதிர் பதிவு போடச்சொன்னா இந்த மாதிரி சில்லித்தனமா பிக்காலி வேலை எல்லாம் பண்ணிண்டு திரியுற நீ.. நான் ஏறினாத்தானே வாந்தி எடுக்க. இந்த மாதிரி டிஸ்கஸ்டிங் திங்ஸ் எல்லாம் இனிமே எழுதினேன்னா, சைனீஸ் தினமும் 1000 கமெண்டுக்கள் ஃப்ரீயா உன் ப்ளாக் ல எழுதட்டும்ன்னு சாபம் விட்டுடுவேன். க்ர்ர்...
@ஹரீகா,
முதல் வருகைக்கும் இவ்ளோ டீட்டெயில்டு கமெண்டுக்கும் ரொம்ப நன்றீஸ்
நாங்க தான் ஒத்துண்டாச்சே.. இன்னும் யார் யாருக்கு இதை வழி மொழியணுமோ எல்லாரும் வந்து சொல்லிடுங்க. (அப்புறம் கபாலி ஆசீர்வாதம் வாங்கிக்கலைன்னு வருத்தப்பட்டுக்கிறாதீங்கன்னு கவுண்டமணி ஏதோ ஒரு படத்துல சொல்ற மாதிரி ராகத்துல படிச்சுக்கோங்க)
சின்ன வயசுல நான் அவ்வா கூடத்தான் திருவிழாக்கு போனோம். அவ்வா = தெலுங்குல பாட்டின்னு அர்த்தம்.
ரொம்ப ரொம்ப நன்றி. மீண்டும் வருக. :-)
interesting
நல்ல வீக்கெண்ட் விசிட் கட்டுரை, ஃபோட்டோக்களும் அருமை...
//எனக்கு, ஜெயண்ட் வீல் எல்லாம் ’வீல் வீல்’ன்னு கத்தற அளவுக்கு பயம். அதுனால அந்த வம்புக்கெல்லாம் நான் போனதே இல்லை.//
என்னங்க, ஹாரர் படம்லாம் விரும்பி பாக்குறீங்க... ஜெயண்ட்வீல் த்ரில் மட்டும் பயமா..? சரி...
-
DREAMER
இந்த கார்னிஷ்க்காகவாவது அபூதாபி வரலாம், இரண்டு முறை நானும் வந்திருக்கிறேன், ரியலி சூப்பர். அதிலும் கமர்ஷியல் நுழைந்து காம்பவுண்டு சுவர் போட்டு ஹாலிடே ரிசார்ட்டுகள் வந்திடாம இருக்கணும், இங்கே ஜித்தாவில் அப்படிதான் செய்துட்டாங்க!
எனக்கு பிடித்ததை தெரிஞ்சி வச்சிருக்கீங்களே..
நல்லா சுத்திபாத்திருக்கீங்க அனன்யா.. நல்ல பகிர்வு அனன்யா..
அபுதாபி கார்னிச் அருமையான இடம். நகரத்து காற்றில் இருந்து மாலை வேளைகளில் சில மணி நேரம் நல்ல காற்றை சுவாசித்து வந்தால் சுகமே.
முன்பு நாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனி கார்னிச் பக்கம் இருக்கும். நல்ல காற்றை சுவாசித்தோம். தற்போது ஹம்தானில் வாழ்க்கை.
நல்லா எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
2,3 dharam vandhu iruken (btw im based in dubai) but car parking koncham problem irukumo?
aana nalla dhaan iruku corniche... aana dubai la innum koncham nalla idam irukunnu thaalmaiyudan solli kolgiren... family a vaanga thaayi... suthi kaaturen... :))
Post a Comment