Pages

Monday, May 17, 2010

பதிவர்கள் சிந்தனை

(எனக்கு தெரிஞ்ச)எந்தெந்தபதிவர், இன்நேரம் எப்படி எழுதுவாங்க (அ) எழுதும்போது என்ன யோசிச்சுண்டு இருப்பாங்கன்னு சும்மா ஒரு கற்பனை

எல்.கே:
இன்னைக்கு நான் உங்களுக்கு புதுசா சொல்லிக்கொடுக்கப்போற ரெசிப்பீ கொத்தவரங்கா ரைஸ்

முதல்ல கொத்தவரங்காயை பச்சையா மிக்ஸியில நல்லா அரைச்சுக்கோங்க. 1ஸ்பூன் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணி விட்டு சாதம் ‘வடிச்சு’ வெச்சுக்கோங்க. இப்போ அந்த அரைச்ச விழுதை அந்த குழைசல்ல போட்டுக்கோங்க.  இதுல இப்போ உப்பு, சர்க்கரை போட்டுக்கோங்க. ஒரு 30-35 மிளகை நல்லா மிக்ஸியில போட்டு பொடிச்சுக்கோங்க. (கவனிக்க: காரம் அதிகமா விரும்பாதவங்க 29 (அ) 34 மிளகு மட்டும் போட்டுக்கோங்க, அப்புறம் எல்.கே ரொம்ப காரம்ன்னு பின்னூட்டம் போட்டு மைனஸ் வோட்டு போட்டுடாதீங்க ஆமா)அந்த கலவை சாததுல போட்டு சொதக் சொதக்ன்னு கையால பிசைஞ்சீங்கன்னா அருமையான சுவையான கொத்தவரங்காய் சாதம் (பேஸ்டு!!!) ரெடி. இதை குழந்தைகள் ஃபெவிக்காலுக்கு பதிலா விரும்பி யூஸ் பண்ணுவாங்க. சில சமயம் உங்க தங்கமணிகள் வாய்ல போட்டுட்டீங்கன்னா அவங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க. அப்புறம், அவங்க புலம்பல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.


தக்குடு:
(சிவப்பு மையில் இருப்பது தக்குடுவின் சிந்தனை)
குருநாதா சரணம்!
இப்போ எழுதப்போற கதைக்கு ஒரு டைட்டில் வெச்சுடறேன்.
வைஷ்ணவியின் குண்டலம்.
ச்சே.. சரியா இல்லையே... ஹ்ம்ம்..
காயத்ரியின் குண்டலம்.
இதுவும் நன்னாயில்லையே... 
ஸ்ரீவித்யாவின் குண்டலம்..
என்னமோ இடிக்குது.. 
சரி வேண்டாம்.. 
வைஷ்ணவியின் ஜிமிக்கி.
பரவாயில்லை.. 
காயத்ரியின் ஜிமிக்கி.
இல்லையே.. என்னம்மோ இடிக்குதே...
ஸ்ரீவித்யாவின் ஜிமிக்கி...

என்னம்மோ குழப்பமா இருக்கே.. .
சரி.. மறுபடியும் யோசிக்கறேன்.. ஃப்ரெஷ்ஷா ஒரு ஐடியா வேணும்.. 
குண்டலமும் ஜிமிக்கியும்..

தன்னைத்தானே தட்டிக்கொடுத்துண்டே,”ஆஹா.. தக்குடு,,, அருமைடா கண்ணா.. இப்போ பாரு.. ஒரு 300 பின்னூட்டத்தை அள்ளப்போறே... ”


பத்மநாபன் அங்கிள்:
ஸ்ஸ்ஸ்பா... ஒரு தொடர் பதிவு ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகப்போகுது.. என்னமா வேலை இழுக்குது! மருதமலை முருகா.. இன்னிக்கி நல்ல படியா அருளுப்பா.. எப்படியாவது இன்னிக்கி... சொல்லிட்டா ஒரு வேளை நடக்காம போயிட்டா? . ப்ளீஸ் முருகா.. என்னை கை விட்டுடாதே.. எப்படியாவது ஜஸ்டு ஒரே ஒரு..
ஈச்சனாரி பிள்ளையாரப்பா.. நீயாவது உதவுப்பா.. பேரூர் சிவபெருமானே.. உன்னையும் நான் முழுமையா நம்புறேன்.. குலதெய்வம் சுஜாதா.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம ஜவஹராய. ஓம் நம ஜவஹராய.. எல்லாரையும் வேண்டிண்டாச்சு..
எப்படியாவது இன்னிக்கு ஒரு வரி தமிழ்ல டைப்படிச்சுட வேண்டியது தான்.. எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள பிடித்த ஐந்து பாடகர் தொடர் பதிவை எழுதி முடிச்சுட முடியாது??? இந்தக்கஷ்டத்துக்கு பின்னூட்டம் போடுறதே எவ்ளோவோ பெட்டர்டா சாமி!!!

மாத்தா கீத்தானந்த மயி:


(எழுதுகிறார்)க...
(இன்னோரு விண்டோவில் போய் கூகிள் பஸ்ஸில்)

க்ர்ர்... ஏய் தக்குடு, நீ கிடையாது..
ண்...
க்ர்ர்ர்.. திவா அண்ணா, ஒரு கமெண்டு போட்டேனே, எங்கே போச்சு..
ண...
க்ர்ர்... அநன்யா அக்கா, கு.ப.த எங்கே?
ன்...
க்ர்ர்... கூகிளின் சதி...
வ...
க்ர்ர்...
ரு...

ஹூஸைனம்மா:
ட்ரங்குப்பெட்டி சாவியை எங்கியோ வெச்சுட்டேனே.. காணோம்.. அப்போ அவசரத்துக்கு ஒரு பாலித்தீன் பையில பேக் பண்ணிக்கலாமே.. எப்படியும் மாசத்துக்கு ஒரு பதிவு தானே.. பரவாயில்லை.. அதுக்குள்ளே வேறு ஏதாவது மீட்டிங் கோஆர்டினேட் செஞ்சுட வேண்டியது தான்.

ஜெகநாதன்:
முதல்ல படம் வரைஞ்சு ரெடி பண்ணிடுறேன். நெக்ஸ்டு கதை எழுதிடுறேன். அதுக்கப்புறம் இந்த படத்துக்கும் கதைக்கும் ஏற்றார்போல ஒரு கவிதை எழுதிடுறேன். நெக்ஸ்டு ஒரு ட்யூன் போட்டு பேக்கிரவுண்டு மீசிக் போட்டு பாட்டு பாடி ரெக்காட் பண்ணிட வேண்டியது தான்.

அப்பாவித்தங்கமணி:
ஒரு வழியா பிரியமானவளே முடிச்சாச்சு. இப்போ என்ன பண்றது? தக்குடு, அநன்யா ப்ளாக்ல போய் கும்மி அடிக்க வேண்டியது தான். இல்லாட்டி ஒரு கவுஜ எழுதலாமே.. இல்லாட்டி இட்லிக்கு ஊறவெச்சு அரைச்சு பண்ணிப்பார்க்கலாம்!

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா:
என்ன தான் எழுத? நமக்கு எழுத்து ஒத்து வரமாட்டேங்குதுன்னு நினைச்சா யாராவது விடுறாங்களா? சும்மா தொடர்பதிவுக்கு கூப்பிடுறாங்களே? பேசாம நாட்டாமையா ஒரு அரச மரத்தடியில சொம்போட உக்காந்து 4-5 இத்துப்போன பெருசுங்களை உக்கார வெச்சு பஞ்சாயத்து.ப்ளாக்ஸ்பாட்.காம்ன்னு ஒரு சைட் ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

பொற்கொடி:
கருப்பு நிலா முஞ்சு போச்சு.. வேணா ப்ளூ எர்த்ன்னு புச்சா ஒரு கதை ஸ்டார்ட் பண்ணிக்கலாம். ஃப்ர்ஸ்டு எப்பிசோடு தானே வேணும்? எப்படியும் ரெண்டு மாசம் கழிச்சு தான் செக்கண்டு எப்பிசோடு போடணும். நோ ப்ராப்ளம் .. ஸ்டார்ட் மீஜிக். ப்ளூ எர்த். பாகம்-1....

ட்ரீமர்:
எப்புடியோ ஹார்ரர், த்ரில்லர் எல்லாம் சேர்த்து கதை எழுதி கல்லா கட்டியாச்சு. இப்போ செண்டிமெண்ட், ஆக்‌ஷன்,ஹார்ரர் & த்ரில்லர் எல்லாம் சேர்த்து ஒரு நகுலன் கதை எழுதிட வேண்டியது தான்.

ஜிகர்தண்டா:
வேறு யாராவது நம்மை ஏதாச்சும் தொடர் பதிவுக்கு கூப்பிட்டா பரவாயில்லை.. ஹ... யாருமே நம்மளை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!!எவ்ளோ நேரந்தான் விட்டத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்கறது?


அநன்யா:
ஹ்ம்ம்ம்.. எவ்ளோ யோசிச்சாலும் ஒண்ணுமே தோணமாட்டேங்குதே! என்ன எழுதறது? மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாட்டி ப்ளாக் எக்ஸ்பயர் ஆயிட்டா? யாரை மொக்கை போடுறது?

46 comments:

ஹுஸைனம்மா said...

அப்டின்னா, இப்பல்லாம் ஜூனியர்ஸ்தான் சீனியர்ஸை ராகிங் பண்றாங்களா? ஹூம்.. பிளாக் எழுத வந்ததுல ஒலக நடைமுறையே தெரியாமப் போச்சு!!

நல்லாருக்கு!! (நீங்களும் என்ன எழுதன்னு தெரியாமத்தானே இருக்கீங்க என்ன மாதிரியே!!) குட்!குட்!

எல் கே said...

அருமை. அதுவும் கீதா பாட்டி நான் ரொம்ப ரொம்ப ரசிச்சேன் ..

தோழி said...

நல்லாருக்கு ரசித்தேன்... :))

Jaleela Kamal said...

ஹா ஹா நேரம் போகலண்டு இந்த பதிவா, இன்று ஒரு பதிவ பில் பண்ணின்றனுமுன்னு இந்த பதிவா?

ஹிஹி ஹுஸைனாம்மா டிரெங்கு பெட்டி சாவி தொலைச்சிட்டாஙகளா?

Jaleela Kamal said...

எல் கே வின் கொத்தவரஙக் ரைஸ் ,,
ஆ எடுங்க டைரிய ஒகே நோட்டட்.

Chitra said...

கலக்கல் பதிவுங்க. நல்லா சிரிச்சேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா எல்லோரையும் கலாய்ச்சிருக்கீங்க.. அருமை அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அநன்யா உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன். உடனே பார்க்கவும்.

sriram said...

:):) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பத்மநாபன் said...

ஆமாங்க...ஆமாம் ..கோனியம்மன், தண்டுமாரியம்மன் , அனுபாவி சுப்ரமணியர் வரைக்கும் வேண்டியாச்சு..இதோ இதோ ன்னு இழுத்துட்டே இருக்குது ..பேசாம சப்-காண்ட்ராக்ட் விட்டுருலாம் இருக்கிறேன்...டண் கணக்குல மொக்கைகளை வச்சுட்டு ஒரு அபுதாபி பார்ட்டி என்க்கொய்ரி போட்டுட்டே இருக்காங்க ...

(பின் அதிர்ச்சி குறிப்பு-- ஒரெ ஒரு பாட்டுக்கு விடியோ லிங் பாக்கி அவ்வளவு தான் ..எப்படியும் இந்த வருஷத்தில பதிவை ரிலிஸிருவோம்ல..)

ஆயில்யன் said...

கொத்தவரங்க ரைசு - டைட்டிலை பார்த்ததும் லைட்டா டவுட்டு கம்முச்சு இருந்தாலும் புது மெனு கத்துக்கிட்டு டக்கரா சமைச்சு துன்னலாம்ன்னு நினைச்சு படிச்சா....? அவ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

:)) kalakunga

Nathanjagk said...

யம்மாடி... இப்படி பாதிப் பதிவுலகத்தை பஞ்சராக்கிட்டீங்க​ளே? எல்கே ரொம்ம்ம்ம்ப நல்லவருங்க - எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாரு.
பஞ்சாயத்து.காம்?? சுவாரஸியமா இருக்கும் போல. நசுங்கின சொம்புக்கு எல்கே உதவுவார் :)
பதிவர்கள் எப்படி திங்குகிறார்கள் என்று உலகறிய வைத்ததுக்கு அநன்யாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
சக (வாங்கிக் கட்டிக் கொண்ட) பதிவர்களே வேறுமாதிரி திங் பண்ணிச் சொல்லுங்களேன்!

Anonymous said...

எல்.கே ஓடது தான் க்ளாஸ். வயிறு வலிக்க சிரிச்சேன்.

Anisha Yunus said...

டேய் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா...

vanathy said...

இன்று தான் உங்கள் பக்கம் முதன் முதலாக எட்டிப் பார்க்கிறேன். அட எல்கே ( LK ) அப்பாவி என்றல்லவா நினைத்தேன். இந்த போடு போடறாங்க. அவங்க ரெசிப்பி செய்து என் ஹஸ் க்கு கொடுத்து விட்டு, என்ன நடந்திச்சு என்று வந்து சொல்றேன்.

உங்கள் ப்ளாக், எழுத்து நடை, உங்கள் பற்றிய அறிமுகம் எல்லாமே அருமை. நல்லா சிரித்தேன். இன்று கொஞ்சம் மூட் அவுட்டாக இருந்தேன் இப்ப பழைய தெம்பு வந்து விட்டது.

நேரம் கிடைக்கும் போது என் பக்கமும் வாங்கோ.
http://vanathys.blogspot.com/

எல் கே said...

//கொத்தவரங்க ரைசு - டைட்டிலை பார்த்ததும் லைட்டா டவுட்டு கம்முச்சு இருந்தாலும் புது மெனு கத்துக்கிட்டு டக்கரா சமைச்சு துன்னலாம்ன்னு நினைச்சு படிச்சா....? அவ்வ்வ்வ்வ் //
கவலை வேண்டாம் . உண்மையான சமையல் குறிப்பு விரைவில் என்னுடைய வலைப் பூவில் வரும்

@அனாமிகா

அப்படியா சேதி. பார்த்துகறேன்

தக்குடு said...

Hahahaha...:)) nice one ananya!! LK & Geetha pati part classic.

எல் கே said...

//எல்கே ( LK ) அப்பாவி என்றல்லவா நினைத்தேன். இந்த போடு போடறாங்க. அவங்க ரெசிப்பி செய்து என் ஹஸ் க்கு கொடுத்து விட்டு, என்ன நடந்திச்சு என்று வந்து சொல்றேன்.//

tappu tappu, naan appavithan. ivangalai nambatheenga. unmayana samayal kuripiruku en blogku vanga

Prasanna said...

:))

ஸ்ரீராம். said...

அப்பாவித் தங்கமணி ப்ரியமானவளேயை முடிச்சிட்டாங்கன்னு போட்டிருக்கறது உங்க விருப்பம்தானே...ஏன்னா அவங்க இன்னும் கண்டின்யூ பண்ற ஐடியால க்ளைமாக்ஸ் ஒண்ணு ரெண்டு மூணுன்னு நம்பர் கொடுத்துகிட்டு இருக்காங்களே...!

Jawahar said...

//குலதெய்வம் சுஜாதா.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம ஜவஹராய. ஓம் நம ஜவஹராய.. எல்லாரையும் வேண்டிண்டாச்சு..//

:)

கொஞ்சம் ஓவர்தான், ஆனாலும் ஜில்லுன்னு இருக்கு.

என்னை ஏன் விட்டுட்டீங்க?

என்னையும் கலாய்ச்சிருக்கலாமே?

http://kgjawarlal.wordpress.com

ambi said...

ஹஹா, நல்ல உள்வாங்கிட்டு அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. கீதா பாட்டி எபிசோட் சூப்பரோ சூப்பர். :))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடப்பாவி அனன்யா ... நானா இன்னைக்கி உங்க உப்புமா.... ? இருங்க இருங்க.... அடுத்த வாட்டி இந்தியா வர்றப்ப வழில அபுதாபில எறங்கி கொறைஞ்சது ஒரு மாசம் தங்கி தெனமும் உங்களுக்கு இட்லி செஞ்சு செஞ்சு சாப்டாம விட போறதில்ல கேட்டேளா.... (ஹா ஹா ஹா... இது எப்படி இருக்கு torture .... நாங்க எல்லாம் யாரு...???????????)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஸ்ரீராம். said...
அப்பாவித் தங்கமணி ப்ரியமானவளேயை முடிச்சிட்டாங்கன்னு போட்டிருக்கறது உங்க விருப்பம்தானே...ஏன்னா அவங்க இன்னும் கண்டின்யூ பண்ற ஐடியால க்ளைமாக்ஸ் ஒண்ணு ரெண்டு மூணுன்னு நம்பர் கொடுத்துகிட்டு இருக்காங்களே...!//

ஸ்ரீராம்... நான் ரெண்டு கிளைமாக்ஸ்ல முடிச்சுக்கலாம்னு தான் இருந்தேன்... இப்போ நீங்க மூணாவது கிளைமாக்ஸ்க்கு எனக்கு ஐடியா குடுத்ததுக்கு மிக்க நன்றி (என்னையா வம்பு இழுக்கறீங்க கிளைமாக்ஸ் எழுதியே பழி வாங்கறேன் இருங்க....ஹா ஹா ஹா )

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//vanathy said...
இன்று தான் உங்கள் பக்கம் முதன் முதலாக எட்டிப் பார்க்கிறேன். அட எல்கே ( LK ) அப்பாவி என்றல்லவா நினைத்தேன். இந்த போடு போடறாங்க. அவங்க ரெசிப்பி செய்து என் ஹஸ் க்கு கொடுத்து விட்டு, என்ன நடந்திச்சு என்று வந்து சொல்றேன்//

வானதி - LK அப்பாவியா... ஹலோ மேடம் ... அப்பவிங்கற பேரு patent right வாங்கி வெச்சுருகறது நானுங்க அம்மணி... அது எப்படி நீங்க LK வை அப்பாவின்னு நெனச்சீங்க... ஐயோ ஐயோ... இப்படி அப்பாவியா இருக்கீங்களே அம்மணி....LK recipe ய செஞ்சு வேற பாத்தீங்களா...அவரே செஞ்சு பாக்காம தான் போடுவாரு... அது எல்லாம் சும்மா படிச்சுட்டு... ஓகே சூப்பர் நன்னி கலக்கல்... அப்படின்னு கமெண்ட் போடறதோட விட்டுடனும்... அப்புறம் பின் விளைவுகளுக்கு யாரு பொறுப்பு...

வல்லிசிம்ஹன் said...

என்னவெல்லாம் எழுதலாம்னு நினைக்காம இப்படி எல்லாரையும் கலாய்ச்சாச்சு.

ரூம் போட்டு யோசிக்கறதுக்குப் பதில அரண்மனையே போட்டு யோசித்திருக்கீங்க. நல்ல வேளை நான் மாட்டலை:)

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, எல்கேயும், தக்குடுவும் டாப்போ டாப்! அப்படியே அம்பி அங்கிளையும் இழுத்துவிட்டிருந்தால் கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்! :P

க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைக் கிண்டல் செய்யறீங்க! இருங்க, இருங்க, குபதவை அலகு குத்திக் காவடி எடுத்து, மண் சோறுசாப்பிடச் சொல்லி, தீமிதி மிதிக்கச் சொல்றேன்! நீங்களும் கூடவே வரீங்க எல்லாப் பிரார்த்தனைக்கும்.

DREAMER said...

அதெப்படிங்க நான் கரெக்டா நகுலன் பொன்னுசாமி கதைதான் எழுதிட்டிருக்கேன்னு கண்டுபுடுச்சீங்க..! ஹ்ம்ம்! செம்ம கலாய்..!

-
DREAMER

ஷைலஜா said...

ரசித்து சிரிச்சேன் அனன்யா! பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இல்லைன்னு சொல்றவஙக் இதெல்லாம் படிச்சாலாவது திருந்தினா சரி!

Matangi Mawley said...

unga intha pathuvunaala enakku niraya nalla pathivukala paththitherinthukolla vaaipu kidaiththathu! azhaga ezhuthiyirukkeenga!

ஸாதிகா said...

uஉங்கலிடம் நேரில் கொப்புளிக்கும் குதுகோலம் பதிவிலும் கொப்புளிக்கின்றது.சபாஷ் அநன்யா.

தி. ரா. ச.(T.R.C.) said...

என்னை சேர்காமல் கேத மேடத்தை சேத்ததற்கு வன்மையா கண்டிக்கிறேன். ஆனாலும் கற்பனை ஜோர்
அநன்யா சிந்தனை;-
யாரக்கும் எழுதரது. கொஞ்சம் கூடி ஹாஸ்யமா எழுதனும். கேட்டேளா! ரங்குக்கு இன்னிக்கி வெளிலே சாப்பாடு ஆத்துக்கு வராதாம் அவா அத்ததங்கா வரலாம்! நல்லதா போச்சு ஷாப்பிங் போயிட்டு இரும்புகோட்டை சினிமா பாத்துட்டு வரலாம். தக்குடு என்ன சொன்னே1 ஊர் சுத்தேரேனா. வந்துட்டான்யா நாட்டாமைக்கு1 போய் ஜிமிக்கியும் லோலாக்கும் யார் போட்டுன்டு பாடரான்னு பாரு1 பொற்கொடி நீ வந்து நன்னா கேளு

vanathy said...

ஓ! அப்ப எல்கே அப்பாவி தங்கமணி சொல்வது போல அப்பாவி இல்லையா? . எனக்கு எப்பூடி தெரியும் ? நல்லவேளை எச்சரிக்கைக்கு நன்றி.

சீமான்கனி said...

அட நம்ம கூட்டமே இங்கதான் கும்மி அடிக்குதா கைபுள்ளே ஜோதில ஐக்கியமாகு......

Priya said...

ரசிச்சு படிச்சேன்... ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.

பனித்துளி சங்கர் said...

ம்ம்ம் நல்லா இருக்கு !

Ananya Mahadevan said...

@ஹுஸைனம்மா,
ஃப்ரீயா விடுங்க! கண்டுக்காதீங்க! :)))
என்ன எழுதன்னு தான் மண்டைய போட்டு உடைச்சுண்டு இதை எழுதி இருக்கேன்!

@எல்.கே,
ஹீஹீ.. உன்னைக்கேட்டா கீத்தா மாமி பகுதி அல்ட்டிமேட்டுன்னு சொல்றே, அவங்களைக்கேட்டா, எல்.கே பகுதி சூப்பர்ன்னு சொல்றாங்க! என்ன நினப்பு?

@தோழி,
ரொம்ப நன்றிங்க

@ஜலீலாக்கா,
வாங்க, கருத்துக்கு மிக்க நன்றீஸ், ஆமா இன்னிக்கி தேதிக்கி ஒரு பதிவு ரெக்காட் வேணும்ல? அதான் எழுதிப்போட்டேன்!

@சித்ரா,
மிக்க நன்றிப்பா.

@ஸ்டார்ஜன்,
ரொம்ப நன்றி!

@ஸ்ரீராமண்ணா,
டாங்கீஸ்

@பத்மநாபன்,
:)) வீடியோ லின்க் இன்னும் கிடைக்கலையா இல்லே கடைசி சொல் டைப்படிக்கறதுக்கு வெயிட்டிங்கா?

@ஆயில்யன்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இதெல்லாம் எளுதிவெச்சுக்கிட்டு பண்ணிப்பார்க்க போறீங்களா? வெளங்கிறும்!

@தென்றல் அக்கா,
மிக்க நன்றி!

@ஜெகன்,
பாதி பதிவுலகமா? டூமச்சான்னா இருக்கு? நல்ல வேளை, எதிர்வினை ஒண்ணும் வரலை!

@அனாமிகா,
டாங்கிஸ் மா.

@அன்னு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@வானதி,
ரொம்ப நன்றிங்க உங்க கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும். நான் படிக்கறதுல ரொம்ப சோம்பேறி.. ரொம்ப moody! ஏதாவது தோணிச்சுனா எழுதிடுவேன். சீக்கிரமே வரேன்.

@தக்குடு,
நன்னிடே!

@பிரசன்னா,
வருகைக்கு நன்றி!

@ஸ்ரீராமண்ணா,
உங்கள மாதிரி ஆளுங்க லொள்ளுக்காகவே, இன்ஃபைனட் நம்பர் ஆஃப் எண்டிங்க்ஸ் வெச்சு எழுதணும்ன்னு அப்பாவி தங்கமணியை உரிமையோடு கேட்டுக்கறேன்!

@ஜவஹர் அங்கிள்,
நீங்க வந்திருந்து விழாவை சிறப்பிச்சுட்டீங்க. மிக்க மிக்க நன்றீஸ்!
இல்லையோ பின்னே? இருக்கறதை தான் சொல்றேன். நம்ம பத்து அங்கிளுக்கு உங்க மேல டீப்பு லவ்வு! உங்களை என்ன சொல்லி கிண்டல் பண்ணலாம்ன்னு யோசிச்சேன்.. ஒண்ணுமே தோணலை அதான் போனாப்போறதுன்னு உங்களை மட்டும் விட்டுட்டேன்.. சீக்கிரம் முயற்சி பண்ணறேன். நன்றி நன்றி!

@அம்பி,
ஆஹா, விழாவுக்கு இன்னோரு சிறப்பு விருந்தினரா? கலக்கிட்டீங்க போங்க. தான்க்கீஸ்பா.. அடிக்கடி வாங்க.. எனக்கும் கொஞ்சம் பப்ளிசிட்டி கிடைக்கும்ல?

@அப்பாவி,
//அடப்பாவி அனன்யா ... நானா இன்னைக்கி உங்க உப்புமா.... ? இருங்க இருங்க.... அடுத்த வாட்டி இந்தியா வர்றப்ப வழில அபுதாபில எறங்கி கொறைஞ்சது ஒரு மாசம் தங்கி தெனமும் உங்களுக்கு இட்லி செஞ்சு செஞ்சு சாப்டாம விட போறதில்ல கேட்டேளா-// அப்போகூட எங்களை கனடாவுக்கு கூப்பிடலை பார்த்தீங்களா? ஏன் விசா எடுத்து ஃப்ளைட் அர்ரெஞ்சு பண்ணி, நயகரா ட்ரிப் ஏற்பாடு பண்னி இதெல்லாம் பண்ண்லாம் இல்லே? நான் என்ன வேண்டாம்னா சொல்லப்போறேன்? ஹ்ம்ம்..எப்போ வரணும்ன்னு சொல்லிடுங்க.. நான் ரெடியா இருக்கேன்.. நீங்க சரின்னு சொன்னா ரங்குவையும் இழுத்துண்டு வரேன்!

Ananya Mahadevan said...

@வல்லிமா,
உங்களுக்கும் சீக்கிரமே வரும்! அப்புறம் திட்டக்கூடாது கேட்டேளா?

@கீத்தா மாத்தா,
அம்பியை அடுத்த எப்பிசோடுக்கு வெச்சுண்டு இருக்கேன் மாமி! கு.ப.த தானே.. தாராளமா பண்ணவையுங்கோ.. நேக்கும் கொஞ்சம் திருப்தியா இருக்கும்! ஹீ ஹீ!

@ட்ரீமர்..
ஆஹா.. அடுத்து நகுலன் கதையா.. ஐ அம் ரெடி ரெடி ரெடி.. சீக்கிரம் ஆவட்டும்!

@ஷைலஜா,
அக்ஸ், உங்க பாராட்டு எனக்கு பயங்கர ஆஸ்கார் கிடைச்ச சந்தோஷம். டாங்கீஸ்.. ஏய் எல்லாரும் கேட்டுக்கோங்க நானும் நகைச்சுவை பதிவர் தான்!

@மாதங்கி மாலி(சரியாப்பா?)தமிழ் ஸ்பெல்லிங் தெரியலை!
ரொம்ப நன்றி! எல்லாருமே சூப்பர் பதிவர்கள்.. நான் கலாட்டா பண்ணினதும் அதுக்கு தான்.. எல்லாருக்கும் இவங்களை தெரியணுமே. கட்டாயம் எல்லாரையும் படிங்க. நன்றி!

@ஸாதிகா அக்கா,
:)) மிக்க நன்றி ! உங்க ஜெனராஸிட்டி யாருக்கு வரும்.. பளிச்சுன்னு புகழ்ந்துடுறீங்க..

TRC மாமா,
அடுத்த பதிவுல உங்களையும் ஆட் பண்ணிடுறேன்! கொஞ்சம் கூடி ஹாஸ்யமா எழுதணும் கேட்டேளா? அப்படியே ஆகட்டும்.. நேக்கு தோணினதை எழுதிட்டேன்!

Ananya Mahadevan said...

@வானதி,
எல்.கே எழுதற ரெஸிப்பீ படிக்கறோம் பாருங்க, நாம தான் அப்பாவி! பார்த்து..

@சீமாங்கனி,
வாங்க வாங்க.. உங்களை ட்ரீமர் ப்ளாக்ல பார்த்திருக்கேன். அப்பிடியே ஐக்கியம் ஆயிடுங்க!

@ப்ரியா,
ரொம்ப நன்றிங்க.

@பனித்துளி,
வாங்க, ரொம்ப நாளாச்சே இந்தப்பக்கம் வரதில்லையோ?
கருத்துக்கு மிக்க நன்றீஸ்!

அப்பாதுரை said...

இத்தனை வலைப்பூ பெயர்களைப் போட்டிருக்கீங்க profile pageல... (நிஜமாவே படிக்கிறீங்களா இத்தனையும்...? :-)

Ananya Mahadevan said...

டியர் அப்பாதுரைஜி,
உங்கள் வருகைக்கு நன்றி!ப்ரொஃபைல் பேஜ்ல வலைத்தள முகவரிகளை நான் போடலை, நான் ஃபாலோ பண்ணும் ப்ளாகுகளை ஆட்டோமேட்டிக்காக கூகிள் போட்டுள்ளது. வீட்டில் வேலை இல்லாமல் இருப்பதால், எல்லா வலைத்தளங்களையும் படிப்பதே இப்போதைக்கு வேலை! நான் மஹா சோம்பேறி, என்னை படிக்க வைப்பத்து ரொம்ப ரொம்ப கஷ்டம். ஏதாவது டைட்டில் பளிச்சுன்னு இருந்தா உடனே எடுத்து படிச்சுடுவேன்.

sury siva said...

// நான் மஹா சோம்பேறி, //

!!!!!!!

Ananya Mahadevan said...

@சுப்புத்தாத்தா,
உள்ளதை சொல்ல என்ன வெக்கம் வேண்டிக்கிடக்கு. அதான் பளிச்சுன்னு போட்டு உடைச்சுட்டேன்! ஹிஹி.. நான் வலைத்தளங்களை சப்ஸ்கிரைப் பண்ண ஏதாவது ஒரு இண்ட்ரெஸ்டிங் காரணம் இருக்கும். எங்கேயாவது ஒரு catchy knot இருக்கும்.ஆனா எல்லாத்தையும் படிச்சே தீருவேன்னு சொல்ல முடியாது. எல்லா ப்ளாக் ஃபாலோயர்ஸும் அப்படியே!

சாந்தி மாரியப்பன் said...

எல்.கேயை விட நீங்கதான் கொத்தவரங்கா ரைஸ் சூப்பரா பண்றீங்க :-))))))).

Mala said...

ஆஹா..அனன்ஸ்...நீ கலாய்க்கிற அளவு நான் இன்னும் ரொம்ப வளரணும். நிறைய காம்ப்ளான் குடிக்கணும்..நிறைய படிக்கணும்..பெருமாளே....!
என்னமா கவனிக்கிறடா?!
அப்டியாப்பட்ட ஜவஹர் சாரே...என்னையும் கலாய்ச்சிருக்கலாமே ன்றாரே! யே யப்பா !!

Related Posts with Thumbnails