Pages

Monday, May 31, 2010

நைனா நைனா ஓ மை நைனா!!!

இந்தக்கட்டுரைக்கு ஏன் இந்த தலைப்புன்னா எங்கப்பாவுக்கு நைனான்னு கூப்பிட்டால் கெட்ட எரிச்சல் வரும். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவரை வெறுப்பேத்துவதே என் தலையாய கடமையாக இருந்திருக்கு. அதான் இப்படி வெச்சுட்டேன். சரிதானே?

அப்படி என்ன வெறுப்பேத்தி இருக்கேன்னு கேக்கலாம். அதையெல்லாம் சொல்றதுக்குத்தானே இந்த பதிவே!

அப்பாவுக்கு காலை சீக்கிரம் எழுந்து பழக்கம். எப்போவுமே எல்லாருக்கும் முன்னாடி எழுந்து ஹிண்டுவை மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சுடுவார். நான் வழக்கம்போல எல்லாருக்கும் அப்புறமா எழுந்து அப்பாவை பார்த்து ”யாரங்கே?” ரேஞ்சுக்கு கைதட்டுவேன். ஹிண்டுவில் மூழ்கி இருக்கும் டேரி மெதுவாக என்புறம் திரும்பிப்பார்ப்பார். அவசரமாக என் படுக்கையை காட்டி ‘இதையெல்லாம் எடுத்து வெச்சுடுங்க’ன்னு கைஜாடை காட்டிட்டு நான் பல் தேய்க்கப்போயிடுவேன். அப்பா கோபத்துல கண்டபடி திட்டோ திட்டுன்னு திட்டிண்டு இருப்பார். அப்பாடி! எனக்கு அப்போத்தான் காலை எழுந்த பயனை அடைஞ்சாப்புல ஒரு திருப்தி இருக்கும். ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுண்டே . கிச்சன்ல போய் அம்மாகிட்டே ஒரு குட்டி டோஸ் வாங்கிண்டு மரியாதையா என் படுக்கையை நானே எடுத்து வெச்சுடுவேன். இருந்தாலும் நைனா நான்ஸ்டாப்பா ஒரு அரைமணி நேரம் அஷ்டோத்திரம் வாசிப்பார். அதைஎல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா என்ன? காமெடியா இருக்கே?

எனக்கு ரொம்ப பெரிய குரல்ன்னு பாட்டி எல்லாம் டீஸண்டா சொல்லுவாங்க. உண்மை என்னான்னா, ரொம்ப ஹை டெஸிபெல் வாய்ஸ். கொஞ்சம் சந்தோஷம் ஆனேன்னா கத்தி தீத்துடுவேன். எல்லார் காதுலேயும் ரத்தம் வர அளவுக்கு. நான் பெங்களூர்ல இருந்தப்போ ஹாஸ்டல்ல இருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணேன். நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே? பேசாம மாடியில நின்னு சாதாரணமா பேசினாலே போறும். எங்களுக்கு கேட்கும்ன்னு சொன்னார்னா பார்த்துக்கோங்க. அவ்ளோ அலறல்! ஒரு வாட்டி சில நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தாங்க. நானும் வழக்கம்போல ஆம்ப்ளிஃபையர் மாதிரி கத்திண்டே இருந்தேன். நைனா செம்ம டென்ஷன் ஆயிட்டார். ”ஏய், என்ன தொண்டை?”ன்னு ரொம்ப கோபமா கத்தினார். நான் உடனே சுதாரிச்சுண்டு மேலே பார்த்துண்டே, கழுத்தைக்காட்டி, ”தெரியலையேப்பா, மனுஷத்தொண்டை தான், வேணாப்பாருங்க”ன்னு அப்பாவியா சொன்னேன்.. வெறுத்துட்டார்.

அப்பா பேங்க்ல வேலை பார்த்ததால பண விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டு. வெட்டிச்செலவு பண்ணமாட்டார். அவருக்கு பணத்தை அங்கே இங்கே வெச்சா பிடிக்காது. சிஸ்டமேட்டிக்கா தன் கைப்பையில் தான் வெச்சுப்பார். பத்திரமா செலவு பண்ணுவார்.

டீவீ விஷயத்துல தான் எனக்கும் அப்பாவுக்கும் அதிகபட்ச சண்டை வரும். ஒண்ணு டிஸ்கவரி ம்யூட்ல பார்ப்பார் இல்லாட்டி படமே தெரியாத, அல்லது குத்துமதிப்பா அவுட்லைன் மட்டுமே தெரியக்கூடிய அளவுல இருக்கும் அதரப்பழைய மூக்காலேயே பேசி/பாடும் பாடாவதி படங்களையெல்லாம் ரொம்ப ரசனையோட உக்காந்து பார்த்துண்டு இருப்பார். ஒரு வாட்டி அப்படித்தான், எனக்கு இருப்பு கொள்ளலை, எப்படி இவர் கவனத்தை திசை திருப்பறதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். மெதுவா, இன்னோரு ரூமுக்குள்ளே போய், என்னப்பா இங்கே 100 ரூபாய் இருக்கே? யாருதுன்னு சும்மாங்காச்சுக்கு கேட்டேன். நைனா ”எங்கே டீ”ன்னு ஸ்லோ மோஷன்ல ரிமோட்டை வெச்சுட்டு ஓடிவர, நான் நைஸா ஹாலுக்கு ஓடிப்போய் ரிமோட்டை கபளீகரம் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் சுமார் ரெண்டு மணி நேரம் (அந்த டுபாக்கூர் பழைய படம் முடியுற வரைக்கும்) எனக்கு அஷ்டோத்திர அர்ச்சனை பண்ணிண்டு இருந்தார். ஹூ கேர்ஸ்!!

சும்மா தேமேன்னு உக்காண்டு இருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கறது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.ஒரு வம்பும் இல்லேன்னு வெச்சுக்கோங்க, பெரிய தொண்டையில தெலுங்குல ஏதாவது தப்பும் தவறுமா வேணும்னே உளறிக்கொட்டுவேன், செம டென்ஸ்ன் பார்ட்டியாகி, ருத்ரதாண்டவம் ஆடிடுவார். மீண்டும் எனக்கு பிறந்த பயனை அடைஞ்ச சந்தோஷம் கிடைக்கும். ஹிஹி!

பொழுதுபோகாத இன்னொரு சமயம், ”டாரி, அன்னிக்கு எனக்கு 500 ரூபாய்க்கி செக்(Cheque) குடுக்கறேன்னு சொன்னீங்களே? என்னாச்சு?”ன்னு கேட்டேன்னு வையுங்க? ஆராரோ ஆரிரரோ படத்துல வர்ற அதிர்ச்சி பைத்தியத்தை விட அதிகமான அதிர்ச்சி எஃபக்டு கொடுத்து,”நான் எப்போடீ சொன்னேன்? நான் சொல்லவே இல்லை”ன்னு ஒரு முக்கா மணி நேர சஹஸ்ரநாம அர்ச்சனை எல்லாம் நடக்கும். ஹைய்யா ஜாலி!

ஒரு வாட்டி அப்பாவுக்கு செம்ம கோபம். என்ன சண்டைன்னு நினைவில்லை. மத்யானம் சாப்பிடாம பாய்காட் பண்ணிட்டு உக்காண்டு சக்தி விகடனை பரீட்சைக்கு படிக்கற மாதிரி தரோவா கரைச்சு குடிச்சுண்டு இருந்தார். அம்மாவுக்கும் கோபம். ”சாப்பிட வரச்சொல்லு”ன்னு என்கிட்டே சொன்னாங்க. நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித்தட்டுல சந்தனம், வெத்தலை பாக்கு ஒரு பழம் எல்லாம் அரேஞ்சு பண்ணிண்டு, ”அப்பா எடுத்துக்கோங்க”ன்னு ரொம்பவும் பவ்யமா சொன்னேன். ”ஹ? என்னது? எதுக்கு”ன்னு அப்பாவியா கேட்டார். எடுத்துக்கோங்கப்பா, சொல்றேன்னு சொன்னேன். குழப்பத்தோட சந்தனத்தை எடுத்து நெத்தியில இட்டுண்டார். சிரிச்சுண்டே, ”சாப்பிட வர்றீங்களாப்பா? வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்”ன்னு சொன்ன உடனே டன் டன்னா அப்பா மூஞ்சியிலே அசடு வழிஞ்சுது. அம்மா தங்கைமணி கிட்டே சொன்னப்போ எல்லாரும் விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு!

நைனா எப்போவுமே பயங்கரமா மிகைப்படுத்துவார். எனக்கு 15 வயசா இருக்கும்போது, ரொம்ப ஓவரா மிகைப்படுத்தி இவளுக்கு 30 வயசாச்சு, இன்னும் இப்படி எல்லாம் பண்றான்னு எதையோ சுட்டிக்காட்டினார்! ஆடிப்போயிட்டேன்.
6.15 ஆகி இருக்கும் மணி, 8 மணி வரைக்கும் தூங்கறான்னு ஒரே காட்டுக்கத்தல் கத்துவார். எனக்கு கத்தல் கூட ப்ராப்ளம் இல்லே, 8மணின்னு பொய் சொல்லுவாரே, அதான் என் மனசு கேக்காது. உண்மை தான் எப்போவும் வெல்லும். நான் மறுபடியும் படுத்து தூங்கிடுவேன்! 8 மணி ஆகலையே.. நான் எழுந்துட்டா அப்பா சொன்னது பொய் ஆயிடாது? அதான்..  ஹி ஹி!

எங்க குடும்பத்துல இருந்து தெலுங்கை ஒழிச்சு கட்டுறேன்னு தெலுங்கு மொழிக்கு ban போட்டவரும் இவரே. இதுனால் நாங்க தெலுங்கும் இல்லாம தமிழும் தெரியாம ஒரு மாதிரி அரைவேக்காட்டுத்தனமா ஆயிட்டோம்ங்கறது இன்னோரு விஷயம்.

ஆயிரம் தான் நைனாவை வெச்சுண்டு காமெடி பண்ணினாலும் நைனா இஸ் நைனா.. பணத்தோட முக்கியத்துவம் அவர்கிட்டே இருந்து தான் படிச்சுண்டேன். கஷ்டப்பட்டு தானா முன்னேறிய ஆள்.குடும்பத்தையும் ஓரளவுக்கு செட்டில் பண்ணினார். எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்‌ஷன், பார்ப்பார், சிஸ்டமேட்டிக் லைஃப் இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்.

கொஞ்ச நாளா இந்த போஸ்டு எழுதணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. இன்னிக்கி தான், எழுதிடணும்ன்னு ஒரு பிடிவாதமா எழுதறேன். ஏன்னா இன்னிக்கி மே 31st. Happy Birthday darry..

35 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹை...நான் தான் first கமெண்ட்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐயோ...பாவம்...ஏன் இப்படி உங்க அப்பாவ ஓட்டுற அனன்யா... ஆனா நான் கூட இப்படி எங்க அப்பாவை டென்ஷன் பண்ற கேஸ் தான்....ஆனா எல்லாரையும் மிஞ்சறது என்னோட தங்கை தான்... உன்னோட லீலை எல்லாம் படிச்சதும் எனக்கு அவ ஞாபகம் தான் வந்தது... அப்பாவுக்கு என்னோட ஹாப்பி பர்த்டே.........

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எனக்கு ரொம்ப பெரிய குரல்ன்னு பாட்டி எல்லாம் டீஸண்டா சொல்லுவாங்க//

இன்னிக்கி என்ன உண்மை மட்டும் தான் பேசறதுன்னு முடிவா... நல்ல பழக்கம்... கீப் இட் அப்...

//எனக்கு 15 வயசா இருக்கும்போது, ரொம்ப ஓவரா மிகைப்படுத்தி இவளுக்கு 30 வயசாச்சு//

அப்பவேவா...அப்படின்னா இப்போ ஒரு 60 இருக்குமா? ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

தூங்கற விசியத்துல நான் உன்னோட கட்சி தான்... அது என்னமோ நேரத்துல எந்திரிக்கரவங்க எல்லாம் sincere சிகாமணிக மாதிரியும் நாம என்னமோ லோ க்ளாஸ் மாதிரியும் ஒரு லுக் வேற குடுப்பாங்க... செம கடுப்பா இருக்கும் போ

ஹுஸைனம்மா said...

ROTFL!!

Will comment in detail later!!

Thanks for a good hearty laugh!!

And my wishes too to your daddy!!

ஜெய்லானி said...

உங்க நைனவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!.நீங்களும் அவரிடம் நிறைய திட்டு வாங்க வாழ்த்துக்கள்!!!

:-))))

சீமாச்சு.. said...

அநன்யா,
Happy Birthday to your Daddy..

அப்பாவும் பொண்களும் பார்க்க ரொம்ப சமத்தா இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

சக்திவிகடன் படிக்கிற அப்பான்னா, கொஞ்சம் இளமையான அப்பாவாத்தான் தெரியுது..

எங்கப்பாவுக்கும் நைனான்னு கூப்பிட்டால் பிடிக்காது :)

Anonymous said...

அட பாவமே. பாவம் உங்க ரங்குஸ்னு சொல்லி சொல்லி அலுத்திடுச்சு. புது டயலொக் கண்டு பிடிக்கணும். உங்க அப்பாவோட சாயல் உங்களிடம் இருக்கு. இரண்டு சிறு பெண்களும் ரொம்ப அழகாக இருக்காங்கக்கா. அதுவும் உங்க தங்கச்சி ரொம்ப க்யூட். (இதுக்கு நீங்க டென்ஷனான அனாமிகாவுக்கு பெரும்பேறு கிடச்ச மாதிரி இருக்கும்) ஹி ஹி.

Happy Birthday to Your Dad.

Me the first நான் தானா? இல்லேன்ன முதல்ல வந்த கமன்ட் எல்லாத்தையும் டிலீட் பண்ணுங்கோக்கா. மீ த பெஸ்ட் சொல்லாட்டி பதிவருன்னு ஏத்துக்கமாட்டாங்களாம்.

எல் கே said...

இத மே முப்பது நைட் போட்டு இருக்கன்யும் கொஞ்சமாது இருக்கணும்

ஸ்ரீராம். said...

அதென்ன பிடிவாதமா எல்லா இடத்துலயும் Darry? தெலுங்கா?
நல்ல நினைவுகள்...பெண் குழந்தைகளுக்கெல்லாம் அம்மாவை விட அப்பாவதான் பிடிக்குமாமே..
அப்பாவுக்கு 'எங்களின்' இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

vanathy said...

அநன்யா, இப்படியா நைனாவை வெறுப்பேத்துவது. பாவம் நைனா. உங்கள் அப்பாவுடன் நீங்கள் இருக்கும் போட்டோ செம க்யூட் ( அது நீங்க தானே ). அது நீங்கள் இல்லை என்றால் என்னை மன்னிச்சு விட்டுடுங்கோ. ஓடிப்போயிர்றேன்....

DREAMER said...

தங்கள் அப்பாவின் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் எல்லாமே சூப்பர்..!

-
DREAMER

யாசவி said...

//நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித்தட்டுல சந்தனம், வெத்தலை பாக்கு ஒரு பழம் எல்லாம் அரேஞ்சு பண்ணிண்டு, ”அப்பா எடுத்துக்கோங்க”ன்னு ரொம்பவும் பவ்யமா சொன்னேன். ”ஹ? என்னது? எதுக்கு”ன்னு அப்பாவியா கேட்டார். எடுத்துக்கோங்கப்பா, சொல்றேன்னு சொன்னேன். குழப்பத்தோட சந்தனத்தை எடுத்து நெத்தியில இட்டுண்டார். சிரிச்சுண்டே, ”சாப்பிட வர்றீங்களாப்பா? வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்”ன்னு சொன்ன உடனே டன் டன்னா அப்பா மூஞ்சியிலே அசடு வழிஞ்சுது. அம்மா தங்கைமணி கிட்டே சொன்னப்போ எல்லாரும் விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு!//

:)

கௌதமன் said...

முதலில், உங்க நைனாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு, வளமுடன்.
இரண்டாவதாக - இப்போதான் தெரியுது என் பொண்ணு அவளுடைய படிப்பு காலங்களில் என்னோடு ஏன் ரொம்ப சண்டை போட்டாள் என்று!

Jaleela Kamal said...

நைனா வ பற்றி ரொம்ப நேர்த்தியா எழுதி இருக்கேள்.
உங்கள் நைனாவிற்கு வாழ்த்துக்கள்.
குட்டி அநன்யா ரொம்ப கியுட்
இது வரை நான் என் நைனாவிடம் ஒரு திட்டு கூட வாங்கியதில்லை அதுக்கு பதில் சேர்த்து மார்த்து அம்மாவிடம் கொட்டோடு திட்டு நிறைய வாங்கியுள்ளேன்/

தமிழ் உதயம் said...

ரெம்ப நல்லா நைனாவை ரெம்ப தான் பாடு படுத்தி இருக்கீங்க.

SUFFIX said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

உங்க நைனவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!.நீங்களும் அவரிடம் நிறைய திட்டுதிட்டா வாங்கி குவிக்க வாழ்த்துக்கள்..

Ananya Mahadevan said...

@அப்பாவி தங்கமணி,
வெல்கம் யா.. யா, யூ தி ஃபர்ஸ்டு! வாழ்த்துக்கள். வடையை பெற்றுக்கொள்க!
ஐ லெள ஓட்டிங் மை டாரி. ஹீ இஸ் வெரி க்யூட். அதான். டாங்கீஸ். அப்பா கிட்டே சொல்லிடுறேன்.
//அப்பவேவா...அப்படின்னா இப்போ ஒரு 60 இருக்குமா? ஹி ஹி// ஆமா இப்போ அவருக்கு 68 எனக்கு 60! உஸ்ஸ்.. முடியலை இவரை வெச்சுண்டு!

தூங்கற மேட்டருக்கு நீயே சொல்லுப்பா, நான் பாட்டுக்கு 6.15 ல இருந்து 6.20 வரைக்கும் புரண்டு படுத்து எழுந்திருந்திருப்பேன். இவர் சும்மா இருக்காம 8 மணி அது இதுன்னு திட்டி திட்டி என்னை லேட்டா எழுந்துக்க பண்ணினா இதுக்கு நானா பொறுப்பு. எனக்கு எங்கப்பா பொய் சொன்னா பிடிக்காது. அதுக்காகவே என் படிப்பை ’தியாகம்’ பண்ணி, 8 மணிக்கு எந்திரிச்சேன்னா பார்த்துக்கோயேன்! ஹீ ஹீ!

@ஹுஸைனம்மா,
நீங்க தூங்காம உக்காந்து ப்ளாக்ஸ் படிக்கறீங்களா? எனிவே, தாங்க்ஸ்!

@ஜெய்லானி,
நீங்களும் தூங்கலையா? வாழ்த்துக்கு மிக்க நன்றி! கட்டாயம் சொல்றேன். ஊருக்கு போறதே நைனாவை கலாட்டா பண்ணுவதற்குத்தானே? ஜாலியா இருக்கும்.

@சீமாச்சு அவர்களே,
தங்கள் முதல் வருகைக்கும் கமெண்டுக்கும் மிக்க நன்றீஸ். அப்பா பர்த்டேக்கு விஷ் பண்ணினதுக்கும் ரொம்ப தாங்க்ஸ். சமர்த்து? நாங்க.. ஹி ஹி. இருக்கட்டும் இருக்கட்டும்! இளமையான அப்பாவா? எங்கப்பா ஆனந்த விகடன் படிக்கலை, சக்தி விகடன். ஆமாமா, நைனா ஒரு ஜிகு ஜிகு பாண்ட், டைட் சட்டை, நெத்தில பேண்ட் எல்லாம் கட்டிண்டு பாடுறார் ,” இளமை இதோ இதோ...” :)))
ஆக்சுவலா அது ஒரிஜினல் தெலுங்குல நான்னா, ஆனா இங்கே தமிழ்நாட்டுல செட்டில்டு தெலுங்கர்கள் என்னமோ நைனான்னு தான் கூப்பிடுறாங்க. மெட்றாஸ் தமிழிலும் அப்படியே! உஸ்ஸ்.. முடியலை!ஓ உங்க நைனாவுக்கும் நைனான்னு கூப்பிட்டா பிடிக்காதா? சேம் பின்ச்ச்! :P

@அனாமிகா,
எங்கப்பா சாயல் எனக்கு இருக்குன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான். நான் எங்கம்மா மாதிரி அழகாக்கும்! :P. என் தங்கைமணி க்யூட் தான். அதுல எனக்கு ஒரு டென்ஷனும் இல்லே. என்ன தான் என் எதிரியா இருந்தாலும் அது மாதிரி அழகான கண்களும் கெட்டிக்காரத்தனமும் எனக்கில்லைங்கற ஆற்றாமை தான் அந்த எரிச்சலுக்கு காரணம். (இப்படிக்கு உண்மை விளம்பி அநன்யா ஹிஹி)
மீ த ஃபர்ஸ்டுன்னு அடுத்த பதிவு போட்ட உடனே போடுங்க. இல்லாட்டி பொற்கொடி மாதிரி வடைய உங்க பேருக்கு அல்லாட் பண்ணிடுறேன். கோச்சுக்காதீங்க. 7, 8 பின்னூட்டம் வந்தாச்சு, இனி டிலீட் பண்ண முடியாது. இதுக்காக நான் ராத்திரி பூரா உக்காண்டு கமெண்டு மாடரேஷன்ல எட்டிப்பார்த்துண்டு ரிஃப்ரெஷ் பண்ணிண்டும் இருக்க முடியாதே! hope you understand. :))

@LK,
இங்கே கொஞ்சம் வேலை ஜாஸ்தி. (யாரது கிக்கீன்னு சிரிக்கறது?நிஜம்மாத்தான் வேலை ஜாஸ்தி) அதான் முந்தானேத்திக்கி நைட்டே போட முடியலை! நன்றிப்பா!

@எங்கள் அண்ணா,
//அதென்ன பிடிவாதமா எல்லா இடத்துலயும் Darry? தெலுங்கா?//
அருமையான கேள்வி.

எனக்கொரு 3 வயசா இருக்கும்போது அலிபாபா கதை, ச்சுமிக்கதை எல்லாம் என்னை சொல்ல வெச்சு ஒரு கேஸட்டுல ரெக்காட் பண்ணி வெச்சு இருந்தாங்க. அது ஒரு 20 வருஷம் கழிச்சு கிடைச்சது. அதுல நான் அப்பாவை டேரின்னு தான் சொல்லுவேன். அதை அப்பிடியே கேப்சர் பண்ணி மெயிண்ட்டைன் பண்ணிண்டு இருக்கேன். அதான் Darry. புரிஞ்சதா? ’எங்கள்’ வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

@வானதி,
மிக்க நன்றிங்க. யெஸ்ஸு, ஐ லெள வெறுப்பேத்திங் மை டாரி! ஏன்னா அவர் செம்ம க்யூட். ஆமாமா ஃபோட்டோவுல கிரீன் சுடிதார் நான். க்ரே சுடிதார், சாந்தமான முகம் தங்கைமணி. நடுவுல டேரி!

@ட்ரீமர்,
டாங்கூ!!!

@யாசவி,
ரொம்ப நன்றிங்க..

@கெளதம்ஜி,
மிக்க நன்றி ஃபார் தி பர்த்டே க்ரீடிங்க்ஸ். சொல்லிடுறேன். ஆஹா.. உங்க பொண்ணும் நம்ம கட்சியா.. சூப்பர்!

@ஜலீலாக்கா,
மிக்க நன்றி.. ஓ நீங்க அவ்வளோ சமர்த்தா.. உங்கம்மா எல்லாம் கொட்டிட்டு விட்டுடுவாங்களா? பாவம் ரொம்ப நல்லவங்க போல இருக்கு. எங்கம்மா முட்டிக்கு முட்டி தட்டிட்டு தான் விடுவாங்க.. ஹி ஹி, நானெல்லாம் திருந்தாத ஜென்மம். அதான்.

geethasmbsvm6 said...

//நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே? பேசாம மாடியில நின்னு சாதாரணமா பேசினாலே போறும். எங்களுக்கு கேட்கும்ன்னு சொன்னார்னா பார்த்துக்கோங்க. அவ்ளோ அலறல்!.//

hihihihi,ரசிச்சுச் சிரிச்சேன்,:)))))) எனக்கும் தொண்டை பெரிசு தான்னு சொல்வாங்க, சாதாரணமாப் பேசினாலே அடுத்த ஊருக்குக் கேட்கும்னு சொல்வாங்க.

உங்க அப்பா மாதிரியே இருக்கீங்க நீங்க. வாழ்த்துகள். உங்க அபபாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

geetha santhanam said...

உங்கள் தந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் சிறுவயது குறும்புகளை ரசித்தேன்.---கீதா

settaikkaran said...

எனக்கு அம்மாவை விடவும் அப்பா தான் பிடிக்கும். தாய்க்குலம் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை; அப்பா தி க்ரேட்! அதுனாலேயே உங்க நைனாவுக்கு, சாரி, அப்பாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பத்மநாபன் said...

அப்பாவிற்க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. ( நேற்று உங்க பதிவு ஒபன் செய்தால் பழைய பதிவுதான் வந்தது )இப்பவே எழுத்துல இந்த ரகளை விடரவங்க...அப்ப சும்மாவா இருந்திருப்பிங்க ? நை..நை தான்...
வெத்தல பாக்கு தட்டு..குறும்பின் உயரம்...

ஹுஸைனம்மா said...

உங்கப்பா, அம்மாவுக்கு இருந்த பொறுமையை நினைச்சு வியப்படைகிறேன்!! இந்தப் பாடு படுத்தியும் பொறுத்துகிட்டிருக்காங்களே!!

//அவரை வம்புக்கு இழுக்கறது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி//

//தெரியலையேப்பா, மனுஷத்தொண்டை தான்//

//வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்//

இப்படியெல்லாம் சொல்லி வெறுப்பேத்திட்டு,

//இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்//

இப்படியும் ஒரு ஐஸ் வச்சாச்சு!!

அப்றம், அந்த ஃபோட்டோவில நீங்க ஸோ க்யூட்; ஆனா அந்த கண்ணுல இந்த குறும்பெல்லாம் அப்படியே கொப்பளிக்குது!! உங்க தங்கை ரொம்ப ஸாஃப்ட் பேபிதான்னும் தெரியுது!!

ராத்திரி பல பதிவுகளைப் படிச்சு ஒருமாதிரி வெக்ஸ் ஆகியிருந்தப்போ, இந்தப் பதிவு படிச்சு ரொம்ப ரிலாக்ஸா ஆகிட்டேன்!! டேங்ஸ்!!

BalajiVenkat said...

My heartiest Wishes to your dad...

and your narration of events is awesome... actually im really jealous on you... ennala ipadi hasyama elutha eno varamatengrathu...

Matangi Mawley said...

b'day wishes to naina! :)

naan mattum appadinnu nenachchaen! but romba perumayaa irukku enakku.. intha post padikkarappa.. enna pola neengalum parents thittaratha nenappula vechchu ezhutharatha paakkum pothu.. thaniyaa nadu kadal-a methakkum pothu kooda innoruththar methanthu enkitta vanthathappola oru feeling! :D enga amma romba kora pattuppaa.. avanga thittaratha naan kekkarathey illannu.. ippa perumayaa solraen.. amma nee thittaratha naan kekkarathu mattum illa.. atha pathuvum panni vechchirukkaen-nu! :D avanga namla thittrathu avanga kadama.. namma over nalla psangalaa irunthaa avangalukkum seri.. nammalukkum seri.. bore adichchudum!

brilliant brilliant! :D

தக்குடு said...

//எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்‌ஷன், பார்ப்பார், சிஸ்டமேட்டிக் லைஃப் இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்// அந்த தெய்வத்தின் மகளா இவள்(ananya akka)??(சிவாஜி குரலில்)...:))அப்பாவுக்கு 'எங்களின்' இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

//@ஜெய்லானி,
நீங்களும் தூங்கலையா?//

நான் தூங்கும் நேரம் கம்மி. பாத்ததும் கமெண்ட் போட்டுட்டேன்.

கவி அழகன் said...

அருமை

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப உண்மையான பதிவு .... ரசிச்சு படிச்சேன் ..அப்படியே என்னை இன்னும் ஒரு இருபது வருஷம் எப்படி இருப்பேன் என்று கற்பனை செய்து கொண்டேன் ( என் பெண் எட்டு வயது )...

Ananya Mahadevan said...

@மாத்தா கீத்தானந்தமயி,
நன்னி ஹை! நீங்களும் நான் நைனா மாதிரியே இருக்கேன்னு சொல்லிட்டீங்க.. ரொம்ப ஆச்சிர்யமா இருக்கு ஹை! ரொம்ப தாங்கீஸ் ஃபார் தி கிரீட்டிங்க்ஸ்.

@கீதா சந்தானம் அவர்களே,
பஹுத் பஹூத் நன்னி ஹை!

@சேட்டை,
டாங்கீஸ்பா..

@பத்து அங்கிள்,
ஐ டூ நை நை டு மை நைனா மீன்ஸு, ஹீ கெட் நற நற, அண்டு ஐ கெட் ஜாலி ஹை! டாங்கூ!

@ஹூஸைனம்மா,
மை பேரண்ட்ஸ் ஆர் ஏஞ்சல்ஸ்.. உண்மைதான். இல்லாட்டி என்னை வெச்சு குப்பை கொட்டி இருக்க முடியுமா? ஹீ.. முத்தாய்ப்பா கட்டுரையை முடிக்கணும்னா செண்டிமெண்டு வேணும்ல? அதேன்! ஹீஹீ.
சோக்யூட் - ஒன்ஸ் மோர் ரிப்பீட்டேய், அனாமிகா, கேட்டுக்கோப்பா.. :)))
தங்கைமணி சாஃப்ட்டா - :-O நோ கமெண்ட்ஸ்!
நன்னி ஹை!

@பாலாஜி,
நன்னிப்பா.. எழுத எழுத வரும்.. நிறைய எழுது. நாங்க படிப்போம்ல?

@மாதங்கி,
நன்னி ஹை டாலு.
யெஸ்ஸு, அவங்க திட்டுறதை எல்லாம் நாம் தான் ரெஜிஸ்டர் பண்றோமே ப்ளாக்ல அது போறாது? என்னத்துக்கு அனாவஸ்யமா மனசுல எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணணும்? வேஸ்டு ஆஃப் டைம் இல்லையோ? டாங்க்கூ!

@தக்குடு,
ஆமா, அதே தெய்வத்திண்டே மகளே தான்!
எங்களின் ஆ? நீயும் எங்கள் ப்ளாக் உறுப்பினர் ஆயிட்டியா? உன்னை எல்லாம் சேர்த்துக்க மாட்டாங்களே? :))

@ஜெய்லானி ,

ஓ! தெய்வம்..துக்கத்தை கூட சாக்ரிஃபைஸ் பண்ணிடுவேன் ஆனா பாருங்க, என்னால தூக்கத்தை மட்டும் சாக்ரிஃபைஸ் பண்ணவே முடியாது. பஹுத் பஹூத் நன்னி ஹை.

@யாதவன்,
ரொம்ப நன்றிங்க

@அது ஒரு கனாக்காலம்,
ஹாஹா.. சீக்கிரமும் உங்களுக்கும் இதே அனுபவங்கள் ப்ராப்தி ரஸ்து! :)))

Jawahar said...

படு சுவாரஸ்யம்.. இத்தனை நாள் இந்தப் பதிவை மிஸ் பண்ணிட்டேனே!

http://kgjawarlal.wordpress.com

Jawahar said...

படு சுவாரஸ்யம்.. இத்தனை நாள் இந்தப் பதிவை மிஸ் பண்ணிட்டேனே!

http://kgjawarlal.wordpress.com

Mala said...

செம !!!! சான்சே இல்ல...!நானும் இது மாதிரி போட்டே ஆகணும்..சரி எதுக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி போடணும்னு விட்டுட்டேன்...!

ரிஷபன் said...

அப்பப்பா...

Related Posts with Thumbnails