Pages

Saturday, June 5, 2010

எண்ணச்சிதறல்கள்

கோவிலில் நல்ல கூட்டம். எந்தக்கோவில்ன்னு சரியாத்தெரியலை. உள்ளே நுழைந்ததும் ஜில்லுன்னு ஏசி, மக்கள் சலசலப்பு. கணீர்ன்னு தீபாராதனை காட்டிண்டு இருந்தாங்க. ஆஹா.. கற்பகவல்லித்தாயார். அப்போ இது மைலாப்பூராச்சே? மனமுருகி பிரார்த்திச்சுண்டேன். வழக்கமான பட்டர் தான். எனக்கு அரக்கு குங்குமமும் பூவும்  தந்தார். பிரகாரம் சுத்தும்போது தானா சப்தஸ்லோகி மந்திரத்தை வாய் சொல்லித்து. வெளீல வந்து பார்த்தா, அடேடே, இது மாங்காடு. ஆனா எப்படி உள்ளே கற்பகவல்லி இருந்தா? நடக்க ஆரம்பித்தேன். செருப்பு கவுண்டர் எங்கேன்னு தெரியலை. வரும்போது எங்கே வெச்சேன்னு தெளிவா நினைவில்லை. அப்படியே வெள்ளீசுவரையும்...

இன்னிக்கு பரீட்சை இருக்கு. ஆங், என்ன பேப்பர்? ஏன் தெரியவே மாட்டேங்குது? கொஞ்சம் பயம் இருந்தது. ரோட்டில் ஏன் இவ்ளோ கூட்டம்? எப்படி ஹாலுக்கு போறது? யாரோ துரத்துறாங்க. ஓடு ஓடுன்னு ஓடுறேன். நடுவுல பரீட்சை நினைவு. ஒரு அரைமணி நேரம் லேட்டானாலும் பரவாயில்லை, முடிஞ்ச வரை எழுதலாம். இவன் எதுக்கு நம்மை துரத்தறான்? பிரும்மஹத்தி. மூச்சிரைக்க ஓடுறேன். ஏதோ ஒண்ணு என் முதுகைக் கவ்வி பிடுங்கியது.

எனக்கு பிடிச்ச பிரம்பு நாற்காலி, 80களில் இருந்த ரவுண்டு பிரம்பு டீப்பாய். தந்தியாலா படங்களில் வருவது மாதிரி ராஜமுந்திரியோ வைஸாக்கோ இந்த இடம். நல்லா இருக்கு இல்லே? எனக்கே எனக்குங்கற மாதிரி போய் உக்காந்தேன். ஒரு சின்னப்பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான்.  ஹய்யோ.. இவன்.. இவன்... இவன் அந்த வீட்டு வேலைக்கார பையனாச்சே? இவனுக்கு.. ஆ......... கண்ணு.. கண்ணு வந்து வெள்ளையா இருக்கே.. இவனுக்கும் பேய் பிடிச்சுடுச்சா? ஹைய்யோ..ன்னு அலறிண்டே ஓட ஆரம்பிச்சேன். மஹா விகாரமா முகம் மாறி அந்த சின்ன பையனும் என்னை விறட்ட ஆரம்பிச்சான். மறுபடியும் ஓட்டம் ஓட்டம்.

ராதாநகரில் காஸெட் ரிக்கார்ட் பண்ண கொடுத்து ஒரு வாரமாச்சு. இன்னிக்கு தரேன்னு சொல்லி இருக்கான். வாங்கிடணும். அதுக்குள்ளே இவ்ளோ ரகளை.
அம்மா கூர்க் காபிப்பொடி வாங்க சொல்லி இருக்காங்க. அப்படியே நாடார் கடையில என்னமோ வாங்க சொல்லி.... மறந்துடுத்தே?

இவ்ளோ கூட்டத்துல அருண் பாப்பா என்ன தனியா நடந்து போயிண்டு இருக்கான்? அம்மா எங்கே? அம்மா.. அம்மா.. கூப்பிட்டு பார்க்கறேன்.. யாரையும் காணோம். கூட்டத்தில் குழந்தையை நழுவ விட்டுட்டேனே.. அருண்ன்னு கத்தி கத்தி பார்க்கறேன்.. காணோம். குறுகலான பாதை தாண்டி, சைக்கிள் தள்ளிண்டு போறேன். சத்குரு சாயினாத் மஹராஜ்கீ ஜெய்ன்னு கோஷங்கள் கேக்கறது. யாரோ கோயில்ல ஆரத்தி நடக்கறது. எட்டிப்பார்க்கறேன். ஒரே புகை. ஒண்ணுமே தெரியலை. சைக்கிளோடு நான் அங்கே நுழையறேன், காலுக்கு கீழே தரையில்லை.. அப்போத்தான் அது மலை உச்சியில இருந்து கீழே.. கீ....................................ழே விழுந்துண்டே...... அம்ம்ம்ம்ம்மா........ன்னு கத்திண்டே..  ரங்கு உலுக்கி விழுந்து எழுந்து, ”என்னம்மா?”ன்னு கேக்கறார். அம்மா எங்கேன்னு கேக்கறேன். படுத்துக்கோன்னு ரங்கு ஆசுவாசப்படுத்தறார்.

ப்ச்.. என்ன கனவுகள். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா எதுவும் நினைக்காம தூங்க முடியறதா.. சின்ன வயசுல இருந்து எல்லாமும் ரீவைண்டு ஆகுது. இந்த லஷணத்துல பரீட்சை, மத்தியானம் பார்த்த பேய்ப்படத்தின் மிச்ச சொச்சம் எல்லாம் வருது. என்னத்த சொல்ல?நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா மாதிரி யாரோ என்னை துரத்துவதும், என் முதுகைக்கூச வைக்கும் பிளக்கும் உணர்வும் எப்போத்தான் போகுமோ? விபூதியை வெச்சுண்டு மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் கனகதுர்க்கம்மா கோவில் படிகளில் ஏறிண்டு இருக்கேன்.

35 comments:

sriram said...

வடை எனக்கா????
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Ashwin Ji said...

Rombavae rasiththaen.

எல் கே said...

என்ன ஆச்சு இப்படி ஒரு கனவு??

Kasu Sobhana said...

ஆமாம் இந்த மாதிரிக் கனவுகள் எப்பவாவது வரும், சில கனவுகள் நமக்கு எதையோ சொல்லும். ஆனா சில நிகழ்வுகளுக்குப் பின் தான் அந்தக் கனவுக்கும் - பிறகு வந்த நிகழ்வுக்கும் ஒரு தொடர்பு இருப்பது நமக்குத் தெரியவரும்.
அப்போ நாடார் கடை வாசலில் உலா போனது நீங்கதானா? நான் 'பக்கத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் சாமிதான் அங்கே உலா போகுது'ன்னு நெனச்சி கும்பிட்டேனே!

பத்மநாபன் said...

மைலாப்பூர் டு மாங்காடு போறப்பவே கனவுன்னு புரிஞ்சிரிச்சு....கனவுகள் சுவாரஸ்யமா கடைசி வரைக்கும் போயிட்டே இருந்துச்சு.
கனவுகள் சிலசமயம் அவஸ்தை ...சில சமயம் relief ..கனவுகள் ரொம்ப நேரம் ஞாபகத்தில் தங்காது ..

பத்மநாபன் said...

மைலாப்பூர் டு மாங்காடு போறப்பவே கனவுன்னு புரிஞ்சிரிச்சு....கனவுகள் சுவாரஸ்யமா கடைசி வரைக்கும் போயிட்டே இருந்துச்சு.
கனவுகள் சிலசமயம் அவஸ்தை ...சில சமயம் relief ..கனவுகள் ரொம்ப நேரம் ஞாபகத்தில் தங்காது ..

தக்குடு said...

LOL...:) 1/2 ticketum 1/4 ticketumaanaa irukku inga!!!( naan yenna sonnen!)..:)

ஹுஸைனம்மா said...

ஆமாப்பா, அப்பப்ப இப்படி குழப்பமான கனவுகள் வரும். மனசு குழம்பியிருந்தாலும் இப்படித்தான். அதுசும் இந்த பரிட்சைக்குப் படிக்காமப் போற மாதிரி கனவுகள் இருக்கே, ரொம்பத் திகிலக் கிளப்பும்!!

geethasmbsvm6 said...

இதை விட மோசமா எல்லாம் கனவுகள் வரும். நான் அதெல்லாம் கண்டுக்கறதே இல்லை. ஒரே கத்தல் தான், அக்கம்பக்கம் எல்லாம் அலறி அடிச்சுண்டு ஓடி வரும். இப்போவும் அப்படித்தான். பாவம், என்னோட ரங்கு தான் பயந்துக்குவார் நான் கத்தற கத்தல்லே. எழுப்பி விட்டுட்டு என்ன கனவுனு கேட்டாச் சொல்லத் தெரியாது. சில கனவுகளுக்கு விளம்பர இடைவேளைகள் கூட உண்டு. எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!! நீங்களாவது ஏதோ அலோபதி மருந்தினால் கனவு வருதுங்கறீங்க. இங்கே அப்படி எல்லாம் இல்லை! எதுவும் இல்லாமலே கனவுகள் வரும். நாங்கல்லாம் அப்துல் கலாமோட வழியைப் பின்பற்றுவோமில்ல?? :P:P:P

Anonymous said...

கனவா நான் இதென்ன இப்படி எழுதராளே என்று நினைச்சேன் .நல்லா இருக்கு ஏன் என்று தெரியலே லேடீஸ்க்கு தான் இந்த மாதிரி கனவு வரது .

geethasmbsvm6 said...

அதெல்லாம் இல்லை சந்தியா, ஆண்களுக்கும் இதை விட மோசமாக் கனவுகள் வரும், வருது! :)))))))))

geetha santhanam said...

என்னங்க கனவுலே(யும்) இவ்வளவு குழப்பறீங்க!
ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.
---கீதா

எல் கே said...

//அதெல்லாம் இல்லை சந்தியா, ஆண்களுக்கும் இதை விட மோசமாக் கனவுகள் வரும், வருது! :))///

+1000

ஜெய்லானி said...

படிக்க ஆரம்பிச்ச நாலாவது வரியே இது கனவுதான்னு தெரிஞ்சிது , தூங்குவதுக்கு முன்னால வர எதாவது உளறிகிட்டு இருந்தா இது மாதிரி பிட் பிட்டா கனவு வரும். நல்ல வேளை தூக்கத்தில ஓடுர வேகத்தில மாம்ஸ் மேல விழுந்து வைக்காம போனீங்க...ஹி..ஹி..

ஸ்ரீராம். said...

செடேஷன் மாத்திரை ஏதாவது முழுசா சாப்பிடாம உடைச்சி உடைச்சி சாப்பிட்டீங்கள என்ன? இப்படி துண்டு துண்டா கனவு வருது..!

Prathap Kumar S. said...

பரிட்சைக்கு லேட்டாப்போறது, எழுத டைம் கிடைக்காதது மாதிரி அடிக்கடி எனக்கு கனவு வரும்... \

வாழ்க்கையே ஒரு கனவுதாங்க... எதுவுமே நிரந்தரம் கிடையாது.... (தத்துவம் 1212121)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

ஸாதிகா said...

சுவாரஸ்யமான கனவுதான்.

வல்லிசிம்ஹன் said...

செடேஷன் மாத்திரை ஏதாவது முழுசா சாப்பிடாம உடைச்சி உடைச்சி சாப்பிட்டீங்கள என்ன? இப்படி துண்டு துண்டா கனவு வருது..! //
:))))

அநியாயத்துக்கு பயந்து போயிருக்கேளே அநன்யா!
கனவுகளே குழப்பம் தான். நானே என் கனவுகளைச் சில சமயம் டைரக்ட் செய்வேன்.
எப்போப் பார்த்தாலும் கடலும்,கறுத்த மேகாமும் வீட்டுக்குள்ள தண்ணீர் வந்துடும்னு நிலைமையா ஒரு சொப்பனம்:) நடுல ''ஹலோ இது கனவுதான்''அப்டீனு ஒரு குரல் வேற சொல்லும்:))

சீனிவாசன் said...

எனக்கு வருகின்ற கனவுகள் மாதிரி ரொம்ப கொடுமையாக இல்ல...
பயங்கரமாக இருக்கும் தூங்கவேமாட்டேன் அந்த இரவு முழுவதும்....

சீமான்கனி said...

அட கனவா நான் கூட என்னவோ ஏதோனு பயந்து போயிட்டேன்...நல்லா கேளப்புடீங்க பீதிய....அப்றம் உங்கள் பக்கம் லோட் ஆக ரெம்ப நேரம் பிடிக்குது அத கொஞ்சம் என்ன எதுன்னு பாருங்க சரியா...

Porkodi (பொற்கொடி) said...

அடப்பாவிகளா.. கடையை மூடியாச்சு மக்களுக்கு விடுதலைன்னு எல்லாம் ஃபேஸ்புக்கிலே போட்டது டுபாக்கூரா??? இனிமே விட்டது எல்லாத்தையும் உக்காந்து மனப்பாடம் பண்ணி விடிஞ்சது..

Porkodi (பொற்கொடி) said...

//ப்ச்.. என்ன கனவுகள். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா எதுவும் நினைக்காம தூங்க முடியறதா.. சின்ன வயசுல இருந்து எல்லாமும் ரீவைண்டு ஆகுது. //

ஆஹா நான் மட்டும் தனின்னு நினைச்சேன்.. நிறைய பேரு இருக்காங்க போல! இதை பத்தி ஒரு பதிவே போடணும்னு 4 வருஷமா ட்ராஃப்ட்ல இருக்கு.. :D ஒருவேள‌ ராஹூகால‌த்துல‌ கிறுக்க‌ற‌ மாதிரி அப்ப தான் தூங்க‌வும் போறோமோ?!

திவாண்ணா said...

கனவிலே பரிட்சை எழுதாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்!
ஸ்ரீராம் கமென்ட் சுபெர்ப்!

Nathanjagk said...

கடைசி பாரா கனவுகளுக்கு அர்த்தம் சொல்கிற ஒரு சுயவிளக்கமா இருக்கு. ஒருவகையில் அது நல்லதுதான்.
கனகதுர்க்காவாக திரும்பவும் துவங்குகிற கனவுகள்... என்ற முடிவில் ஆறுதலும் பயமும் ஒருசேர இருக்கு.

இந்த எழுத்து வித்யாசமானது.. ப்ரத்யேகமானது.

Nathanjagk said...

கனவுகளை ஆராயும்போது அதன் வசீகரம் விடுபட்டு போவதாக உணர்வேன். கண்ட கனவுகளை திரும்ப யோசித்து யோசித்து ஒரு சில காட்சிகள் மட்டுமே நினைவுக்கு வரும். மறந்து போனவைகள் ஒரு மாதிரி மூச்சுத் திணறலாக இருக்கும்.

இங்கு அநன்யாவின் கனவுகளின் ஓட்டம் விறுவிறுப்பாக இருக்கிறது. சடார் சடாரென மாறும் சாலைகள், கோணங்கள், காட்சிகள் என ஒரு புரிந்துகொள்ள முடியாத மொழிப் படத்தை தனியாக உட்கார்ந்து பார்த்தது போலிருக்கு.

மூளை நம் நினைவுகளின் மிச்சங்களை ஒதுக்கித் தள்ளும் செயலின் பக்க விளைவுதான் கனவுகள் என்று படித்த ஞாபகம். இதை மறுக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. எழுந்தும் நினைவிலேயே நிற்கும் சில கனவுகள் மொத்த தினத்தையும் பதற்றமாக்கி விடுகின்றன.

அநன்யாவின் கனவோடையில் காசிப் படித்துறை பரபரப்பும், கங்கையில் மிதக்கும் உடல்களின் வேகமுமாக ஒரு அமானுஷ்ய வசீகரத்தை தருகிறது.

Unknown said...

Present Madam

Anonymous said...

தூங்கறதுக்கு முன்னாடி யாரு ப்ளாக் படிச்ச... ஹி ஹி ஹி (என்னோடதுன்னு சொன்னா பார்சல் வரும் ஆமா சொல்லிட்டேன்...ஹா ஹா ஹா ) Nice post .... இது என்ன கொத்து பரோட்டா கனவு.. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்... எனக்கும் சில சமயம் இப்படி வரும்... ஆனா கொஞ்சம் நேரத்துல மறந்து போய்டும்... உனக்கு செம மெமரி தான் போ... சூப்பர்

gopalan parthasarathy said...

nam vazhkkaiyin ottathil namakku nere prathyatchamaagira nigazhvugalin pin pulamaaga thoindhirukkum maraimuga vidhi mudichugalai avizhkka kanavugal udavugindrana polum. kalam urugi kuzhambaaga vadintha podhu oru pudhiya rasa vaadham nigazhndhu adhan mudivil oru pudhiya vaarpu petradhe pol irundhadhu. indha kanavugal meendum ungalukku thondraadhu.aenenil, ivai thondruvadharku mun irundha neengalai indha kanavugal meendum sendradaiya mudiyadhu. oru murai muzhugi ezhundha pin, namakku pazhaiya nadhi kidaikkaadhadhu polave idhu. kanavugalo illai kaleidoscoppukkul vizhundha nijathin bimbangalo? rasithathu unmai. anbudan, thamizhamizhdhu.blogspot.com

vanathy said...

very thrilling dream.
//பரிட்சைக்கு லேட்டாப்போறது, எழுத டைம் கிடைக்காதது மாதிரி அடிக்கடி எனக்கு கனவு வரும்... \// I have the same dream for years.

ஜிகர்தண்டா Karthik said...

அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா...
நீங்க தூக்கத்த குறைக்கணும்...
நிஜத்துல நெறைய நேரம் செலவு பண்ணனும்...

நான் கூட பெரிய சைகியார்டிஸ்ட் ஆக வாய்ப்பு இருக்கு போல இருக்கே...

Madhavan Srinivasagopalan said...

இரண்டாவது பாராவின் முதல் வரியிலேயே, நீங்கள் சொல்ல வருவது புரிந்துவிட்டது.
நான் கூட, இதன் மாதிரி கனவு, நினைவு-ஜம்பிங்-கற்பனைகளை கண்டு வந்திருக்கிறேன்..

Ananya Mahadevan said...

@பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா,
யெஸ்ஸு.. டேக் தி வடை..

@அஷ்வின் ஜி,
மிக்க நன்றீஸ்

@எல்.கே,
ஆல்வேஸ் லைக் திஸ் ஒன்லி ட்ரீம் கமிங். ஐ டோண்ட் நோ.

@காசு சோபனா,
கருத்துக்கு நன்றி. ஒரு பதினஞ்சு வருஷம் முன்னாடி பார்த்திருந்தீங்கன்னா அது நானாத்தான் இருக்கும். முக்கியமா மே மாச உச்சி வெயில் வேஸ்டு பண்ணாம பரணி வீடியோ, நாடார் கடை, காய்கறிக்கடை, கூறு கட்டி விக்கும் எலுமிச்சம்பழக்கடை இங்கெல்லாம் ஏதாவது வாங்கிண்டு இருப்பேன். நன்னி ஹை.

@பத்து அங்கிள்,
நன்றி நன்றி!

@தக்குடு,
ஆராக்கும் ஆஃப் டிக்கெட்? ஆராக்கும் கால் டிக்கெட்? இதெல்லாம் சரியில்லை.. ஆமா.. :)) நாங்களும் தட்டிக்கேப்போமில்லே?

@ஹூஸைனம்மா,
இத்தனை வருஷம் கழிச்சும் இந்த பரீட்சைக்கனவாவது வராம இருந்தா தேவலாம்.. எங்கே.. அட்லீஸ்டு ஒன்ஸ் இன் எ வீக் பரீட்சை சம்பந்தப்பட்ட வித விதமான சினாரியோ வருது.. ஒண்ணு நான் படிச்சிருக்க மாட்டேன், இல்லே லேட்டாயிடும், இல்லே ஹால் எங்கேன்னு தெரியாது, ஹால்டிக்கெட்டு காணோம் இப்படி எக்கச்செக்க சிக்கல்ல மாட்டிண்டு இருப்பேன்.. உஸ்ஸ்.. ஐ நீட் ஏ ப்ரேக்!

@கீத்தா மாத்தா..
சில கனவுகளுக்கு விளம்பர இடைவேளை கூட உண்டு.. ஹா ஹா.. சூப்பர்பு.. இதுக்கே ஒரு கோஷம் போடலாம் போல இருக்கே.. மாத்தா வாழ்க.. மாத்தா வாழ்க.. :)))
@சந்தியா..
பொதுவாவே இந்த மாதிரி கனவுகள் அளவுக்கதிகமான ஸ்ட்ரெஸ்ஸினால தான் வருதுன்னு கேள்விப்படுறேன்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

@கீதா சந்தானம் ,
வருகைக்கும் கமெண்டுக்கும்
பஹூத் பஹூத் நன்னி ஹை..

@ஜெய்லானி ஜி,
கருத்து கே லியே நன்னி ஹை.

@ஸ்ரீராம் அண்ணா ஜி,
சூப்பர் கமெண்டு ஹைன்னு எல்லாருமே சொல்லியாச்சு. இனி அடிக்கடி இது மாதிரி கமெண்ட்டவும். பஹூத் பஹூத் நன்னி ஹை.

@நாஞ்சில் ஜி,
’ஆப்பு’க்கா தத்துவம் ஜி, புல்லரிச்சிங் ஹை.. அருமை ஜி!

@உலவு,
நன்றி

@ஸாதிகா அக்கா,
ஆமாம், ஹார்ரர், த்ரில்லர்,
செண்டிமெண்டு இப்படி தமிழ் சினிமா மாதிரி கனவு வரும்.. கஷ்டம்.. கார்த்தால எழுந்துக்கும்போதே அசதியா இருக்கும்..

@வல்லிம்மா,
“ஹலோ இது கனவுதான்''அப்டீனு ஒரு குரல் வேற சொல்லும்”
அல்டிமேட். உண்மை தான்..

@சீனிவாசன்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. என் கனவுகள் என்னை எழுப்பினாத்தானே.. கார்த்தால எழுந்தா அலுப்பா இருக்கும் பின்னே அவ்ளோ ஓட்டம் இருந்திருக்கே?

@சீமாங்கனி,
லோடு ஆக லேட்டாகுதா.. வேற யாரும் இதை ரிப்போர்ட்டவில்லையே.. இப்போ தான் இதுக்கு சட்டை மாத்தி விட்டேன்.. திருப்பியும் மாத்தணுமா? இன்னும் ஒரு வாட்டி முயற்சி பண்ணிட்டு சொல்லுங்களேன் பா? ப்ளீஸ்? டாங்க்ஸ் பா..

Ananya Mahadevan said...

@பொற்கொடி,
ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் காட்சி கொடுத்து அருளியமைக்கி நன்னி ஹை பேட்டி!
’’கடையை மூடியாச்சு மக்களுக்கு விடுதலைன்’’அதெல்லாம் ஒரு ஸ்டண்ட்டு.. அப்புடி சொன்னாத்தான் நம்ம மவுசு கூடும். இது கூட தெரியாம நீ 4 வருஷமா என்னத்த குப்பை கொட்டினே? வெரி பூவர்.. த்சோ த்சோ..

யெஸ் யெஸ் யூ ஹேவ் கம்ப்னி.. ட்ராஃப்டுல இருக்கற பதிவை ரிலீஸ் பண்ணிடேன்.. நான் ஸ்கிப் பண்ணிடுறேனே.. :P :P :P

@திவா அண்ணா,
இந்த பரீட்சைக்கனவும் இந்த துரத்தல் கனவும் தான் மஹா தொல்லை. :))
நன்றி திவா அண்ணா.

@ஜெகன்,
எதையுமே எவ்ளோ ஆழமா பார்க்கறீங்க. ”மறந்து போனவைகள் ஒரு மாதிரி மூச்சுத் திணறலாக இருக்கும்.” ப்ரில்லியண்ட்! ரொம்பவும் சரி
”புரியாத மொழிப் படத்தை தனியாக உட்கார்ந்து பார்த்தது போலிருக்கு” - இதானே வேணாங்கிறது.. ஹிஹி.. எனக்கே அப்படித்தான் இருக்கு. இவை என் நினைவுகளாக இருந்தாலும்.
“ எழுந்தும் நினைவிலேயே நிற்கும் சில கனவுகள் மொத்த தினத்தையும் பதற்றமாக்கி விடுகின்றன. ” ஆமாம் சில மணி நேரத்துக்கு சம்மட்டியால் அடிச்ச மாதிரி அதிர்ச்சியா இருக்கும்.
//இந்த எழுத்து வித்யாசமானது.. ப்ரத்யேகமானது.// ஹிஹி.. எல்லாப்புகழும் கனவுக்கே.. எனக்கில்லை.

@மஹேஷ்,
அவ்ளோ தான் உன் ரீயாக்‌ஷனா? ரொம்ப டிஸப்பாயிண்டு பண்ணிட்டேனோ?

@அ.த,
ஆமாம், எப்போவுமே கொ.பரோட்டாக்கனவுகள் தான்.. முழு நீள கனவுகள் வரணும்னா என்ன பண்ணணும்? எனி ஐடியா? பட் நல்ல காமெடிக்கனவா வரணும். கிரேஸி கதை வசனம் எழுதி இருக்கணும். கமலஹாசன் ஹீரோ..நாகேஷும் இருக்கணும். ப்ளீஸ் லெட் மீ நோ.. :)))

@கோபாலன்,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கலைடாஸ்கோப் வர்ணங்கள்ன்னு டைட்டில் வெச்சு இருக்கலாமோன்னு உங்க கமெண்டு பார்த்த உடனே தோணித்து.
குறிப்பு: இந்த மாதிரி இலக்கியத்தரம் வாய்ந்த பின்னூட்டங்களை தமிழிலேயே போடலாமே? மறுபடியும் நன்றி

@வானதி,
ஆமாங்க இந்த மாதிரி ஹாரர், த்ரில்லர்,பக்தி, செண்டிமெண்டு, இப்படி ஒரு உணர்ச்சிக்கலவையா வரும் என் கனவுகள்.

@ஜிகர்,
நான் தூக்கத்தை குறைக்கணும் - சரி. அப்போ நீ? பேச்சைக்குறைக்கணும்.. ஹீஹீ.. டாங்கீஸ் பட்டி(patti லேது, Buddy)

@மாதவன்,
எல்லோருக்கும் கனவுகள் பொது தானே? கருத்துக்கு மிகவும் நன்றி.

ஜெய்லானி said...

//ஜெய்லானி ஜி,//

ஹாஞ் ஜி

//கருத்து கே லியே நன்னி ஹை.//

பஹுத் ஷுக்ரியா ஜி. ஆப் கா ஜவாப் தேக்கே பஹுத் குஷ் ஹுவா ஜி.

Related Posts with Thumbnails