அன்புப் பெரியோர்களே, அருமை ப்ளாக் வாசகர்களே, புல்லுருவி நண்பர்களே,
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நான் ஆன்னுவல் வெக்கேஷனுக்கு அடுத்த வாரம் கிளம்பி, ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.
(பலத்த கைதட்டு) அமைதி அமைதி!
சென்னை ரசிகர்கள் ஏர்ப்போர்டுக்கு மாலை மருவாதியுடன் தாரை தப்பட்டை முழங்க என்னை ரிஸீவ் பண்ண வரவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். , ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.ஏன்னா, சென்னை கமிஷனர் என்கிட்டே ஃபோன் பண்ணி கேட்டுண்டு இருக்கார். சமூக பணியில இருக்கறதுனால தான் இவ்ளோ பாப்புலாரிட்டி. என்ன பண்றது. பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை! (சரி சரி.. அடங்கறேன்!)
சென்னை ரசிகர்களை கலைவாணர் அரங்கிலோ, காமராஜர் அரங்கிலோ சந்திப்பேன்.ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கட்டாயம் எண்ட்ரி டிக்கெட் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டி இல்லை. அதுக்காக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகி இருக்கு. நிறைய ஸ்பான்ஸர்ஸ் முன்வந்துள்ளனர். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். நேரம் கிடைக்குமா தெரியலை. ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். ஏன்னா டைப்படிச்சு அடிச்சு எனக்கு கையெழுத்தே மறந்து போயிடுத்து. ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.. இப்போதைக்கு ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரெண்டு போலீஸ் கேட்டு இருக்கேன். (ஹய்யோ, என்னாலேயே தாங்க முடியலை)
என்னோட வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன். (இதையே தானே ஃபேஸ்புக்லேயும் போட்டு பஜனை பண்ணினேன்னு சொல்றவங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்)
ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, அவங்களுக்கு கீழ்க்கண்ட எச்சரிக்கை. அநன்யா ஒரு எழுத்தாளினி ஆயாச்சு. யாரு சொன்னா வா? ஹ.. எல்லாம் எனக்கு தெரியும். அதுனால சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன். எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?
அப்புடியே நான் போஸ்டு போடாட்டியும் நீங்க எனக்கு மெயில் அனுப்பணும். உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்னு சொல்லி தெரிய வேண்டாமே.
இப்போ நான் மட்டும் தான் போறேன், ரங்கு அடுத்த மாசம் தான் வர்றார். நான் கிளம்பறதுனாலே சுமார் ஒரு வாரமா அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். ஏர்ப்போர்டுல என்னை ட்ராப் பண்ணிட்டு என் போர்டிங் பாஸை அவர் கையில எடுத்துண்டு, ”என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”ன்னு கத்திண்டே துபாய் பூரா ரவுண்டடிச்சாலும் ஆச்சிர்யப்படுறதுக்கில்லை!
இந்த நிலமையில நேத்திக்கி என் மச்சினருக்காக சில பெண்கள் ஜாதகத்தை பார்த்துண்டு இருந்தேன். அதுல 67ல பிறந்த சில பெண்கள் கல்யாணம் ஆகாம இருக்காங்கன்னு இவர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டுண்டே பாத்ரூம்ல மூஞ்சி அலம்பிண்டு இருந்தேன். உடனே ஓடி வந்து, தன்னுடைய பிறந்த வருடத்தை சொல்லி, பண்ணிப்பாளா கேட்டு சொல்றியான்னு கொஞ்சம் கூட சலனமே இல்லாம கேக்கறார். வந்த கோபத்துல மூஞ்சியில் இருக்கற சோப்பை அலம்பறதுக்காக ரெண்டு கைகள்ல எடுத்த தண்ணியை அவர் மேல கொட்டிட்டேன். இந்த அழகுல அந்த லேடி இவரை விட சில ஆண்டுகள் பெரியவங்க. பண்ணிப்பாளான்னு கேக்கணுமாம். நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.
நீங்க என்ன சொல்றீங்க?
39 comments:
கண்டிப்பாய் வரணும்.. சென்னை காத்துண்டு இருக்குன்னேன்.
கும்மியடி பெண்ணே கும்மியடி....:))
உங்களுடைய கலைவாணர் அரங்க, காமராஜர் அரங்க நிகழ்ச்சிகளுக்கு ஃப்ரீ பாஸ் கொடுப்பீர்களா?
அப்போ நானும் வருவேன்.
ஆஹா....
இருக்கற போது இருந்து பண்ணின அலம்பல் போதாதா (இங்க அந்த மூஞ்சி அலம்பல் பத்தி சொல்லல...வேற...), போறப்போ கூடவா!!
ரிசீவ் பண்ண யார் வரப்போறாங்களோ. என்னென்ன பாடுபட போறாங்களோ...
இதன் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், யாராவது ஊருக்கு போவதாக இருந்தால், அந்த திட்டத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம்...
அது உங்களுக்கும், சுற்றத்தார்க்கும் நல்லது பயக்கும்...
எனிவே... ஜோக்ஸ் அபார்ட்... அநன்யா... என்ஜாய் யுவர் ஸ்டே & ஹாலிடேஸ். ப்ளீஸ் ட்ரை டூ கம் அண்ட் ஜாயின் அஸ் ஸூன்....
இரண்டு மாசம் விடுமுறையை நல்லா என்ஜாய் பண்ண வாழ்த்துக்கள்.
எந்த எந்த இடத்தில் கட் அவுட் வைக்கணும் என்று சொல்லி விடுங்கள்..??
Athimber iz gonna have awesome time without you acca. So DONT go. He he.
கையிலே சோப் தண்ணி இல்லை தானே? ஏன்னா எனக்கும் அந்த கேள்வி தான்:-))
மத்தபடி சென்னைல கீதாம்மா தலை மேல நடக்க இருக்கும் கும்மிக்கு எனக்கு அழைப்பு வரும் என ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.(வருவேனா என்பது தாங்கள் அனுப்பும் போட் மெயிலில் 2ஏசிக்கான ரிட்டர்ன் டிக்கெட் பொருத்தது!
//ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.//
எங்க வீட்டுக்கு பக்கத்துல ரெண்டு black cats சுத்திட்டிருக்குது.அனுப்பி வைக்கவா?.. ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏசி டிக்கெட் எடுத்து அனுப்பிவையுங்க :-))))
:)
வெல்கம் பேக் டூ இந்தியா . லீவ ஜாலியா என்ஜாய் பன்னிட்டு வாங்க.
//நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.//
அந்த அளவுக்கு கொடுமை போல ..!! பாவங்க கொஞ்சம் கருனை காட்டுங்க அவருக்கு...ஹி..ஹி..
have a nice vacation...
have a nice time!
ஹைய்யா.., அநன்யா ஊருக்கு போறாங்க போறாங்க.. இனி அப்ப துபாய் முழிச்சிக்கும். :))
ஊருக்கு நல்லபடியாக சென்று மகிழ்ச்சியுடன் விடுமுறையை கழியுங்கள்.
தங்கமணியிடம் தப்பி சில நாட்கள் இருக்கபோகும் ரங்கமணிக்கு வாழ்த்துக்கள்..(யுய்..யுய்...யுய் விசில் சத்தம் இங்க கேட்கிறது )
( எல்லாம் சுகம், சென்னை வானிலை வழக்கத்திற்க்கு மாறாக இதமாக இருக்கிறது..53 டிகிரி வெப்பத்திலிருந்து தப்பி வந்த காரணமாக இருக்கலாம்.. உங்கள் வரவு நல்வரவாகுக...தாய் நாட்டில் சிறப்பான விடுப்பிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..)
சென்னைக்கு வர இருக்கும் உங்களே அன்புடன் வரவேற்கிறேன் ...சென்னை வந்தா எழுதறதுக்கு நிறையே விஷயங்கள் கிடைக்குமே மறக்காமல் எழுதுங்க நான் படிக்க ஆவலோடு காத்திருப்பேன் ...கலை வாணர் அரங்கில் இலவசமா டிக்கெட் கொடுத்தா நானும் வந்து பார்பேன் இல்லே???
Have a safe and fun trip!
Enjoy your vacation to the fullest!
டேய் பசங்களா... அனன்யாக்கா ஊருக்கு வர்றாங்களான்டா.... எவனவாது தில்லுருந்து
ஆட்டோ அனுப்பி பாருங்கடா....
பாவம் சென்னை!!
;-))))
ஹிஹிஹி, கோவிச்சுண்டு பின்னூட்டம் போடாமப் போனேனா?? (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாருமே கண்டுக்கலை, அதை நான் தனியாக் கவனிச்சுக்கறேன்) நம்ம கு.ப.த.வோட பாட்டுச் சத்தம் பலமாக் கேட்டது!
விடுதலை, விடுதலை, விடுதலை"
விடுதலை, விடுதலை, விடுதலை
டுதலை, விடுதலை, விடுதலை
தலை, விடுதலை, விடுதலை
லை, விடுதலை, விடுதலை
ஐ, விடுதலை, விடுதலை
விடுதலை, விடுதலை
டுதலை, டுதலை
தலை, தலை
லை, லை
ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐஐ ஐ
கீழே எல்லாம் அவர் பாட்டோட எதிரொலி!
ஹையா, நான் கோவிச்சுண்டேன்னு தெரிஞ்சு பாஸ்வேர்ட், ஐடி கேட்கலையே, சமத்து ப்ளாக்!
Happy Vacation...போய்விட்டு ஜாலியாக வாங்க....
வருக... வருக.......
"அடுத்த வாரம் never comes"ங்கற கணக்கா இழுத்த்த்துட்டே இருக்கு நீங்க ஊருக்கு போற மேட்டர். பாவம் அத்திம்பேர்!! :) Happy holidays!
//ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.// அப்பாடா Gulf மக்கள் முக்கியமா ஹுசைனம்மா 2 மாசம் நிம்மதியா இருப்பாங்க. ;)
இந்தியாவில ரொம்ப பிசியா பதிவெழுதவே நேரமில்லாம இருப்பீங்கதானே????
//ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.// அப்படியே விரும்பிட்டாலும்....
//பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை// இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலயா???
//ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். // ரெடி பண்ணி வச்சிட்டாலும்.... (காசுக்குக் கேடு)
//வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன்// யார் யாருக்கு
சொந்த செலவுல சூனியம் வச்சிக்கணுமோ, அவங்க எல்லாம் இமெயில் அனுப்பலாம்...
//ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, // நேர்ல பாத்தா மாதிரியா
ரொம்ப கரெக்டா சொல்றீங்களே - எப்படி???
//எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?// நீங்க எல்லா இடுகையும் டாபிக் இருந்தாதான் எழுதுவீங்களா - News to me..
//அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். // அது.. அந்த மரியாதை இருக்கட்டும்.
//சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு// சீக்கிரமா ரூம் போட்டு யோசிங்க...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அப்புறம், சொல்ல மறந்துட்டேன்..
Bon Voyage.. :)
Unlce ஐ கேட்டதாகச் சொல்லவும் (நீங்க அநன்யா Auntyன்னா உங்க ரங்கு Uncle தானே)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.//
ஐயோ.....ப்ளீஸ் இப்படி எல்லாம் குண்டை தூக்கி போடாதே அனன்யா.. நீ ஊருக்கு செல்வாய் என ஆசையுடன் காத்திருக்கும் ரங்குவை ஏமாற்றிவிடாதே அனன்யா ஏமாற்றி விடாதே
//ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்//
தீவாளி எல்லாம் பாத்துட்டு மெதுவா வாயேன் அனன்யா.... (ஆஹா இது மட்டும் வொர்க் அவுட் ஆனா...ஆஹா... நவம்பர் வரைக்கும் ஜாலிலோ ஜிம்கானா தான்....ஹி ஹி ஹி)
என்னாது.... மாலை மரியாதை... பொக்கே.... போட்டோ பிளாஷ்... ப்ளாக் கேட்ஸ்ஆ..... இதெல்லாம் டூ மச் இல்ல 200 மச்னு உனக்கே தோணலையா அனன்யா....????? இந்த அழகுல அப்பாவியான என்னை அலப்பறைனு அபாண்டமா பழி போடுறியே பாவி.... நீ அலபறைக்கி அலப்பறை....
Facebook ல சொன்னதையே நீயும் இங்க சொன்னதால...நானும் அங்க சொன்னதையே இங்கயும் சொல்றேன்... ஆறு மாசமா இப்படியே ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு சொல்லி சொல்லி அவரை ஏமாத்தறதா கேள்வி... அவரும் ஒரு ஒரு வாட்டியும் "தங்கமணி என்ஜாய்" சொல்றதுக்கு பேண்ட் வாத்தியம் எல்லாம் ரெடி பண்ணிட்டு அப்புறம் நீ ட்ரிப் கான்சல் பண்றதா ரெம்ப நொந்து போய் சொன்னதை "gulf news " exclusive interview ல பாத்தேன்.. அப்படியா சேதி
//அனாமிகா துவாரகன் said... Athimber iz gonna have awesome time without you acca. So DONT go. He ஹே//
அடிப்பாவி... அவர் மேல உனக்கு என்ன காண்டு? அவர் ரெண்டு மாசாம தூங்காம கொள்ளாம சந்தோச கனவுல மெதந்துண்டு இருக்கார்... உனக்கு பொறுக்கலையா அது
இந்த கொடுமைய கலைவாணர் அரங்குல வேற அதுவும் டிக்கெட் வாங்கி வேற பாக்கணுமா....ஹையோ ஹையோ... உனக்கு எப்ப பாரு ஒரே காமெடி தான் போ
//சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன்//
ப்ளீஸ் ப்ளீஸ் ரெண்டே மாசம்
கூடவா எங்களுக்கு விடுதலை இல்ல....கொஞ்சம் consider பண்ணு தாயே... நான் அப்புறம் லட்சம் பேரு கை எழுத்து போட்ட மனு எல்லாம் கொண்டு வருவேன் சொல்லிட்டேன்...
Welcome to Chennai. We ll meet when you are here.
Ashwinjee.
enjoy your holidays ananya.kandippa panneer soda kudinga.ungal fans flex banner vaithalum(airportil)vaithruppargal.have a nice time eeennnnjjjoooooooy.
welcome to chennai! :) inga vareengalla ungala nallaaaaaa gavanichukkarom! (ithula ul kuthu onnum illa :P)
ulagengum panneer soda pugazh parapiya "thanga tharagaiye" ungal rasiga pattalam chennai intl airportil flex bannerodu wait panraanga .indha news kelvipattathil irundhe,any way enjoy your holidays
vacation ? here the school already opened.. vacation is over.
anyhow, enjoy the vacation. all the best.
CHENNAI WELCOMES YOU. THE LOCAL TEMPRATURE HERE IS 37 DEGREE. THE LOCAL TIME IS 6 AM PAST 10MINS.
PASSENGERES WHO ARE ON ONWARD RETURN JOURNEY ARE REQUESTED TO RECONFIRM WITHIN 2 HOURS.
BISMILLA AL RAHMAAN RAHIM
வருக
வருகவென
இரு கரம் கூப்பி
வரவேற்கிறோம்.
welcome home! :D
சென்னை விமான நிலையம்...உங்களை அன்புடன் வரவேற்கிறது....
வானிலை அறிக்கை : அநன்யாவின் எண்ண அலைகள் என்ற புயல் சென்னையை தாக்க திட்டமிட்டுள்ளது , எனவே அன்பர்களே நண்பர்களே அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்
Happy Journey....
//ராம்ஜி_யாஹூ said...
BISMILLA AL RAHMAAN RAHIM////
Don't Take issues....
விடுமுறையை நல்லா என்ஜாய் பண்ண வாழ்த்துக்கள்.
Post a Comment