Pages

Saturday, May 29, 2010

செல்லப்பன் பெரியப்பா..


சக்ரபாணி. அதான் அவர் பேர். இருந்தாலும் வீட்டுல செல்லப்பன்னு கூப்பிடுவாங்க. இன்னிக்கி கார்த்தால அவர் இறந்துட்டார்ன்னு செய்தி வந்தது. அதிர்ந்தோம். செல்லப்பன் பெரியப்பா ரங்குவின் சொந்த பெரியப்பா. ஜாலியான மனுஷர். அவர்கிட்டே ஏகப்பட்ட விஷயம் இருக்கும். பேசிண்டே இருப்பார். நிறைய புஸ்தகங்கள் படிப்பார். ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. 4-5 வாட்டி பார்த்திருக்கேன். கொட்டிவாக்கத்துக்கு போகும்போது பிரியமா உபசரிப்பார். எனக்கு மாமனார் இல்லாததால் அவர் மேல ரொம்ப மரியாதை. அதே ஜாடையிலும் இருப்பார். கொஞ்சம் பூசினாற்போல முகம். தீர்க்கமான கண்கள். சிவந்த நிறம். சின்ன வயதில் ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருந்திருக்கக்கூடும்.
78 வயதில் கொஞ்சம் உடல் உபாதைகள் இருக்கத்தான் செய்யும், செய்தது. இருந்தாலும் இவருடைய நகைச்சுவை உணர்ச்சியே இவருக்கு இத்தனை நாள் எக்ஸ்டென்ஷன் பெற்று கொடுத்ததுன்னு தான் நான் நினைப்பேன்.

செல்லப்பன் பெரியப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்திருக்கு. ஒரு வாட்டி டாக்டர் கிட்டே போனப்போ டாக்டர், அவர் உடம்பை பரிசோதனை பண்ணிட்டு சொல்லி இருக்கார், "Mr Chakarapani, it is high time you stop smoking. you are slowly dying" கொஞ்சம் கூட யோசிக்காம செல்லப்பன் பெரியப்பா பதில் சொன்னாராம், “I am not in a hurry doctor"

இப்போ அவர் அவசரமா எங்க கிட்டே சொல்லிக்காம போயிட்டார்! We miss you பெரியப்பா.. May your soul rest in peace.

21 comments:

எல் கே said...

உங்கள் பெரியாப்பவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். உங்கள் குடும்பத்திற்கு என் ஆறுதல்கள்

ஜெய்லானி said...

:-(

Prathap Kumar S. said...

:((

Anisha Yunus said...

may almighty give courage and comfort to his near and dear ones.

:(

கௌதமன் said...

அவரைப் பிரிந்து துயரமுற்றிருக்கும் உங்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் ஆத்மா சாந்தி அடைய நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

Asiya Omar said...

பெரியப்பாவை அறிமுகப்படுத்திய விதம் அருமை.சில பேரை நாம் இழந்தபின்பு தான் மிகவும் தேடுவோம்.
may his soul rest in peace.

ஹுஸைனம்மா said...

ஆழ்ந்த அனுதாபங்கள். பெரியவரின் குடும்பத்தாருக்கும் இறைவன் ஆறுதலைத் தரட்டும்.

Anonymous said...

உங்க பெரியப்பா ஆத்மா சாந்தி அடைய நான் மனமுருகி பிரார்த்திக்கிறேன்

Geetha Sambasivam said...

வருத்தமா இருக்கு. நெருங்கிய உறவினரைப் பிரிவது எத்தனை வயசானாலும் துயரத்தைத் தரும் ஒன்று. அவர் குடும்பத்துக்கும், உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள்.

ஸ்ரீராம். said...

எங்கள் அனுதாபங்கள்.

vanathy said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

பத்மநாபன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்...//“I am not in a hurry doctor"// பெரியவர்க்கு எவ்வளவு நகைச்சுவை உணர்வு.. உங்களுக்கும் மாப்ஸ்க்கும் ஆறுதல்கள்...

settaikkaran said...

அவரது ஆன்மா அமைதியடைவதாக! ஆழ்ந்த அனுதாபங்கள்!

சாமக்கோடங்கி said...

அவர் ஆத்மா ஷாந்தி அடையட்டும்..

அன்புடன் மலிக்கா said...

அவரது ஆன்மா அமைதியடைய இறைவன் அருள் புரிவானாக! ஆழ்ந்த அனுதாபங்கள்.

அநன்யா எப்படியிருக்கீங்க..

பனித்துளி சங்கர் said...

வருந்துகிறேன்

தக்குடு said...

உங்கள் பெரியாப்பவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். உங்கள் குடும்பத்திற்கு என் ஆறுதல்கள்

Madhavan Srinivasagopalan said...

May the departed-soul be rested in peace.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very sorry to hear that Ananya. அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம். சத்தியமான வார்த்தை, humour sense expands lifespan

Ananya Mahadevan said...

பெரியப்பாவின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!
முக்கியமாக அவரைப் பிரிந்து வாடும் அவர் மனைவி, எங்கள் பெரியம்மாவிற்கும், அவர் மகள்கள், கலா மாலாவிற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் உற்ற நண்பன் சரத் சொல்வது போல ஆயிரம் தான் அனுதாபம் சொன்னாலும் இதுக்கு ஆறுதலே கிடையாது. டைம் வில் ஹீல் தி லாஸ்.
மறுபடியும் உங்க எல்லாருக்கும் என் நன்றிகள்.

Ahamed irshad said...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

Related Posts with Thumbnails