(இதென்ன தொடர் பதிவு சீஸனா???!!!தொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதி! என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே!!ஹீ ஹீ)
எப்போவுமே, சினிமாவா இருந்தாலும் சரி, சில பாட்டுக்களா இருந்தாலும் சரி அதை மீண்டும் பார்க்கும்போதோ கேட்கும்போதோ, சில நல்ல நினைவுகளை கொண்டு வரும். அந்த நிமிடங்களை மறுபடியும் வாழ வழி வகுக்கும். சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சது சில வருஷங்களுக்கு முன்னாடி தான்னாலும், சின்ன வயசுல இருந்து கேட்ட, பார்த்த சினிமா இந்த லிஸ்டில் அடக்கம்.
இது பெஸ்டு லிஸ்டு இல்லாம இருக்கலாம். ஆனா என் குழந்தைப்பருவ நினைவுகளை எல்லாம் திருப்பி தருவதாக அமைவதால் இது என்னுடைய பெர்ஸனல் ஃபேவரைட்டாக இருக்கிறது.
1.சங்கராபரணம் (தெலுங்கு - 1979)
கே.விஸ்வநாத்தின் அற்புதமான காவியம் என்றே சொல்லலாம். சோமையாஜூலுவின் நடிப்பும் மஞ்சுவின் பக்தியும் இசையும் நடனமும் பேபி துளசியின் சூட்டிகையும் இந்த படத்தின் ஹைலைட்டு. எல்லா கே.விஸ்வநாத்தின் படங்களிலும் நம் நாட்டு கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது மாதிரி தான் கதையம்சம் இருக்கும். சங்கராபரணம், சாகர சங்கமம்,ஸ்ருதிலயலு, ஸ்வர்ணகமலம் இப்படி எல்லா படங்கள்லேயும் இசை நடனத்துக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குறிப்பா ஏன் இந்த படம்ன்னா, நான் குழந்தையா இருந்தப்போ, எங்க வீட்டுல ஒரு புஷ் டேப்ரிக்கார்டர் இருந்தது. அதுல சதா இந்த பாட்டுக்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து. இந்தப்படத்தை ரெண்டு வருஷம் முன்னாடி
ராஜஸ்ரீயில் டவுன்லோடு பண்ணி வெச்சுண்டு அப்பப்போ பார்ப்பதுண்டு. சமீபத்தில் விஷுவுக்கு Ntvயில் போட்டு புண்ணியம் கட்டிண்டாங்க. பேபி துளசியுடன் மஞ்சு பார்க்க, கோதாவரிக்கரையில் ஸ்நானம் பண்ண சங்கர சாஸ்த்திரிகள் வர்றார். அதுல இருந்து தான் பார்க்க முடிஞ்சது. இருந்தாலும் அந்த காட்சிகளில் இருந்த அழுத்தம், அந்த பக்தி பாவம், அந்த நெகிழ்ச்சி அப்படியே என்னை அழ வெச்சுடுத்து. கண்ல தாரைதாரையா
கண்ணீரோடு பார்த்தேன். சாகர சங்கமமும் எத்தனை வாட்டி போட்டாலும் பார்ப்பேன்.
2.தில்லு முல்லு (தமிழ் 1981)
அருமையான டைரக்ஷன், சூப்பர் பாடல்கள், ரஜினியின் டைமிங் எல்லாமா சேர்த்து இந்தப்படமும் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல வரும். இண்டெர்வியூ காட்சியும் ஃபுட்பால் மேட்ச் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் யாராலும் மறக்க முடியாது. தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரி இந்த பாத்திரத்தை வேறு யாராலையும் நடிச்சிருக்க முடிஞ்சிருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன். ஸ்பெஷல் மென்ஷன் டு செளகார் ஜானகி! எனக்கு பொதுவே உத்பல் தத்னா ரொம்ப இஷ்டம். ஆனா அவரை மிஞ்சிட்டார் தேங்காய்ன்னே சொல்லலாம். அவ்ளொ கலக்கான ஆக்டிங்.
3.மணல் கயிறு (தமிழ் 1982)
நாடகத்தனமா இருந்தாலும் எஸ்.வீ.சேகரின் 8 கண்டிஷன்களும் விசுவின் ராகம்போட்ட பேச்சும் இருந்தாலும் பலவாட்டி பார்த்து பார்த்தும் போரே அடிக்காத படம் இது. ஆல் டைம் ஃபேவரைட். சமீபத்துல ராஜ்ஸ்ரீயில் பார்த்தோம். ரசித்தோம். இப்போவும் நல்லாத்தான் இருக்கு. இந்தப்படத்தின் ஹைலைட் & ஒரிஜினல் ஹீரோன்னு கேட்டா அது வேறு யாருமில்ல, கிஷ்மூ தான். அவ்ளோ அருமையான உடல்மொழி. தலையை முன்னாடி துருத்திண்டு, துர்கா துர்கான்னு புலம்பிண்டு, சூப்பர்.நீங்களே பாருங்களேன்.. ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும். ராயல் சல்யூட் கிஷ்மூ சார்.
4.அஹா நா பெள்ளண்ட்டா (தெலுங்கு 1986)
ஜந்தியாலா டைரக்ஷனில் அல்ட்டிமேட் காமெடியாக எடுக்கப்பட்ட சூப்பர் படம் இது. சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்துடுத்து. அவ்ளோ காமெடி இந்தப்படம். ராஜேந்திரப்பிரசாத் தான் ஹீரோ. இந்த ஜந்தியாலாவோட ஸ்பெஷாலிட்டியே சில குறிப்பிட்ட குணாதிசியங்களோட பாத்திரப்படைப்பு இருக்கும். உதாஹரணத்துக்கு இந்த படத்தில் வரும் அப்பா பாத்திரம் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மஹா கஞ்சன், பேசுறதுக்கே காசு கேக்குற ஆளு.
நம்ம ஹீரோவோட அப்பா மரண மொக்கை போடுற கேசு. யாரைப்பார்த்தாலும் தன் ஆட்டோ பயோகிராஃபியை சொல்ல ஆரம்பித்து விடுவார். கேக்கறவங்க மண்டை காய்ஞ்சு நொந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு நச்சு கேஸ். இந்தப்படத்தில் தான் பிரும்மானந்தம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர் ’மொழி’படத்துலஅபார்ட்டுமெண்ட் செக்கரெட்டரியா வருவாரே!
5.க்ஷணக்க்ஷணம் (தெலுங்கு 1991)
ராம் கோபால் வர்மாவின் டைரக்ஷனில், வெங்கடேஷ்,ஸ்ரீதேவி,பரேஷ் ராவல் நடித்த ஒரு சூப்பர் படம். இதன் மெயின் ஹைலைட் ஸ்ரீதேவி. எத்தனையோ தமிழ்ப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தாலும், இந்த படமும் இவர் நடிப்பும் அந்த விறுவிறுப்பும் அலுக்கவே இல்லை. நல்ல ஜாலி படம். எம்.எம்.கீரவாணியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். எனக்கும் தங்கைமணிக்கும் ஆல்டைம் ஃபேவரைட்ஸ்!
6.Forrest Gump (ஆங்கிலம் 1994)
முதல் முறையா ஒரு ஹாலிவுட் படம் பார்த்து ரொம்ப ரொம்ப அழுதேன்னா அது இந்தப்படம் தான். என்ன உணர்ச்சின்னு சரியாச்சொல்ல தெரியலை. ஒரு வித பரிதாபமா, ஒரு நெகிழ்ச்சியா அது என்னவா வேணா இருக்கட்டும். அருமையான நடிப்பு(ஆஸ்கர் கிடைச்சது) என்னை மொத்தமா கவர்ந்தார் டாம் ஹான்க்ஸ். தனியா வீட்டுல இருந்தப்போ அமைதியா உக்காந்து பார்த்தேன். எவர் லாஸ்டிங் இம்பாக்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அருமையான படம். அமெரிக்க வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகாக படத்தில் கோர்வையாக சேர்த்திருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு ஜர்னல் போல ஒரு டயரி போல எடுத்திருப்பார்கள். இந்த காவியத்தின் தழுவல் தான் மிகப்பரிதாபமாக தமிழில் வாரணம் ஆயிரம் & ஹிந்தியில் மை நேம் இஸ் கான். சாரி.. ரெண்டும் மெகா சொதப்பல். நீங்க இன்னும் பார்க்கலையா? அப்போ கட்டாயம் பாருங்க. மேலதிக விவரத்துக்கு இங்கே க்ளிக்கவும்.
7.பம்பாய் (தமிழ் 1995)
1995இல் இந்தப்படம் மவுண்டு ரோடு தேவி தியேட்டருக்கு அப்பா கூட்டிண்டு போனார். நான் தங்கைமணி, N.K.ஸ்ரீவித்யா, கண்ணா அண்ணா, லதா எல்லாரையும் கூட்டிண்டு போனார். மறக்க முடியாத படம்.
முக்கியமா, மறக்க முடியாத இசை. பாம்பே ரயட்ஸில் ஏ.ஆர்.ஆரின் இசையில் நான் உணர்ந்த வைப்ரேஷன்ஸ் என்னால என்னிக்குமே மறக்க முடியாது. படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. அந்த ட்ரம்ஸ் சில சமயம் இப்போகூட கேக்கும் என் காதுல. முக்கியமா க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப பாதிச்சது. பாட்டு எல்லாமே செம அல்ட்டிமேட் ரகம்! இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம்! மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே?... என் குழந்தைங்க எங்கே?ன்னு கேக்கறாங்க. உடனே தியேட்டரில் ஏதோ ஒரு விஷமி,” இரும்மா டீ சாப்பிட போயிருக்காங்க வந்துருவாங்க”ன்னு சொல்ல, படத்தை உருக்கமா
பார்த்துண்டு இருந்த கூட்டம் ஒரு நிமிஷம் கொல்லுன்னு சிரிச்சுடுத்து. எதுக்கு சொல்ல வர்றேன்னா அவ்ளோ நிசப்தம் தியேட்டர்ல. படம் முடிஞ்சதுக்கப்புறம் கார்னெட்டோ ஐஸ்கிரீம் கூட மறக்க முடியவில்லை .. மறக்க முடியவில்லை!
8.தெனாலி(தமிழ் 2000)
மைக்கல் மதன காமராஜனைப்பத்தி ஒரு தனி பதிவு போட்ட நிலையில் இன்னோரு வாட்டி அதைப்பத்தியே எழுத வேண்டாம்ன்னு தான் இந்தப்படத்தை பத்தி எழுதறேன். கமலின் க்ரேஸி காம்பினேஷனில் வந்த எல்லாப்படங்களுமே என் ஃபேவரைட் என்றாலும் இலங்கைத்தமிழ் பேசும் (கொஞ்சம் கிழடு தட்டினாலும்)தாமரைப்போன்ற அகன்ற கண்களுடன் கமலஹாசனின் அப்பாவித்தனமான நடிப்பு அப்படி ஒரு ஈர்ப்பு. மதன்பாப், டெல்லி, சுரேஷ்க்கிருஷ்ணா, இவங்க கூட சேர்ந்துண்டு ஜெயராம் அடிக்கிற லூட்டி பயங்கர ரசனை. டீ.வீ.டீ இருக்கு. அடிக்கடி பார்க்கறேன். எத்தனை வாட்டி பார்த்தாலும் ஏதாவது ஒரு புதிய ஜோக் அகப்படாம இருந்ததில்லை. அவ்ளோ டைமிங். பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம்,காதலா காதலா, அபூர்வ
சகோதரர்கள், சிங்காரவேலன் இதெல்லாம் கூட எனக்கு பிடிக்கும். தெனாலி என்னிக்கும் கொஞ்சம் அதிக இஷ்டம்.
9.அன்பே சிவம் (தமிழ் 2003)
ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும். காட்சிக்கோர்வையும் சரி, மதனின் வசனங்களும் சரி, கமலின் நல்லா கெட்டப்பும் நடிப்பும், முதிர்ச்சியும், கெட்டிக்காரத்தனமான
பேச்சும் எதை எடுக்க எதை விடுக்க. சந்தேகமே இல்லை. ஆல்டைம் ஃபேவரைட்ஸ் இது.
10.தன்மாத்ரா (மலையாளம் 2005)
மோஹன்லாலின் நடிப்பாற்றலில் இந்தப்படம் பார்த்த ஒரு வாரம் அப்படியே ஸ்தம்பிச்சு போயிட்டேன். அவ்ளோ மன பாரம். சோகமான படங்கள் இனிமே பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப்படத்துல சோகம்ங்கறதை விட யதார்த்தம் நிறைய இருக்கும். நல்லா இருக்கற ஒரு மனுஷன் ஒரு கொடிய மனநோய் தாக்குறதுனால எப்படி அவன் குடும்பமும் அவனும் கஷ்டப்படுறாங்கங்கறது தான் கதைன்னாலும் மோஹன்லாலின் கண்ணிமைகள் கூட நடிச்சு இருக்கறது ரொம்ப ஆச்சிர்யம் எனக்கு. மறக்க முடியாத ஒரு படம். ரெண்டாவது வாட்டி பார்க்க தைரியம் இருக்கலை.
- நந்தனார்
- ஹரிதாஸ்
- சிவகவி
- பக்த மீரா
- சக்ரதாரி
- ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)
- பராசக்தி
- வியட்நாம் வீடு
- கொஞ்சும் சலங்கை
- கர்ணன்
- தில்லானா மோஹனாம்பாள்(வைத்தி)
- கெளரவம்
- பாலும் பழமும்
- பாகப்பிரிவினை
- ஆயிரத்தில் ஒருவன் (பழைய எம்.ஜி.ஆர் படம்)
- அன்பே வா
- அவள் ஒரு தொடர்கதை
- தனியாவர்த்தனம்
ஓ, இதுவா? இது என்னை போஸ்டு எழுத விடாமல் நச்சு பண்ணி ரங்கு தந்த லிஸ்டு. நான் சொல்லியாச்சு இது எனக்கு பிடிச்ச படங்கள் லிஸ்டுன்னு.நான் சொன்னேன் நான் வேணா உங்களுக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணிக்குடுக்கறேன்னு. ரங்கு கேட்டாத்தானே? நானும் இதுல தான் சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும்? 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே? சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார். உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே? இதே வேலையாப்போச்சுப்பா..
குறிப்பா நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது
ஜிகர்தண்டா கார்த்திக்
எல்.கே
பாஸ்டன் ஸ்ரீராம் (ஒரே ஒரு கண்டிஷன் கமல் படங்களை தவிர்த்து மற்றவை, ஹீ ஹீ எங்களுக்கு தெரியாதா?)
பொற்ஸ்
சித்ரா
முகுந்தம்மா
புதுகைத்தென்றல்
முத்துலெட்சுமி
ஸாதிகா அக்கா
மிஸ் சிட்சாட்
குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.
32 comments:
படத்தேர்வுகள் உங்கள் ரசனையைக் காட்டுகிறது. மொழிச்சார்பின்றிதேர்ந்தெடுத்த விதம் அருமை.
தேடல்களை விரிவுபடுத்தும் விதமாக வித்யாசமான படங்களாக இருக்கின்றன!
//ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும்.//
கிஷ்மூ செத்துட்டாராஆஆ????
விதிகளை படிக்காததின் விளைவு அநன், எல்லாமே தமிழ் படமா இருக்கனும்.கலந்து கட்டி கதம்ப சோறா ஆக்கிட்டீங்க. :-))
சங்கராபரணம் ...பாட்டை சொன்னிங்க ..உங்க குலதெய்வத்தை சொல்ல மறந்திட்டிங்க ..அந்த பாடல்கள் பாடும் பொழுது கர்நாடக சங்கிதம் முறையாக பயிற்சி பெறவில்லை என்று அவரே சொன்ன விஷயம் ... சங்கரா ..
தில்லு முல்லு..... நல்ல காமெடி வர்ற சூப்பர் ஸ்டார் யை ..கைய கால ஆட்டவச்சே ஒட்டிகொண்டிருக்கிறோம் ... அய்யம்பேட்டை அறிவுடை நம்பி ... சந்திரன் ....இந்திரன் ..
பாம்பே .... குட்டி குட்டி ராக்கம்மா ....அப்புறம் நாசர் இந்துவாகவும் ...ஜி கே முஸ்லிம் ஆகவும் ..மத நல்லிணக்கம்.
அன்பே சிவம் --- எப்பவும் என் மடி கணினியில் எப்பொவும் ரெடியாக.... மாதவனொட உரையாடல்கள்... யூகி சேது அந்த 5 நிமிஷ கலாட்டா...நாசரின் தென்னாடுடய சிவனெ போற்றி....பச்ங்களொடு அடிக்கடி பார்க்கும் படம்....
தெனாலி.... கண்டி கதிர்காம ..நான்ஸ்டொப் கொமடி..
மணல் கயிறு.... கிஷ்முவொட கண்ணாடி மெனரிஷம்...எல்லாம் கலக்கல்..
மற்ற படங்கள் ..பார்க்கவில்லை. பார்க்கலாம்..
தொடர் பதிவிர்க்கு அழையாமைக்கு நன்றி..குறிப்பிட்ட படங்கள் வெட்டுகணத்திற்க்குள் விழுந்திருக்கும்.....
அப்புறம்....உங்களுக்கே தெரியும் மாப்ஸ் செலக்ஷ்ன்ல முக்காவாசி எல்லோருக்கும் புடிக்கும் ...
கமல் படங்கள்ல நம்ம ரெண்டு பேர் ரசனையும் ஒண்ணா இருக்கு. (நிறைய பேருக்கும்).
அவ்ளோ ஃபீலிங்ஸா பம்பாய் படம் பாத்துட்டு கார்னெட்டோ ஐஸ்கிரீமா? இதுல /படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. //ன்னு கதை வேற!! ;-)
அன்பே சிவம் சுந்தர்.சி படமா? நம்ப முடியலை!!
மொழிக்கலவையாக படங்கள் கொடுத்து இருப்பது பாராட்ட தக்கது.அருமை.ரங்ஸ் கொடுத்த படங்களில் சிலது பிடிச்சிருக்கு.மறக்காமல் சொல்லிடுங்கோ.
Nice to see your secular (unbiased linguistic) nature
//குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.//
HA HA HA.. noted.. I will try.. & thanks for giving an opportunity.
நல்ல அருமையான தேர்வு அநன்யா.., நீங்கள் குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் இன்றைக்கும் மறக்கமுடியாதவை.
நல்ல அருமையான தேர்வு அநன்யா.
All the telugu movies that you have mentioned sounds very good. Maybe, you should give a list of 10 good telugu movies. :-)
நல்ல கதம்பமான தெரிவுகள்...
இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே !!
இது நியாயமா ? தர்மமா ?
அது இருக்கட்டும். ரங்கு ஸார் ஒரு லிஸ்டு தந்து அதுலே ஒண்ணு கூடவா
ராங்கிங் லிஸ்ட்லே வல்லை ? ச்..ச்...ச்...ச்.....வெரி ஸாரி டு ஹியர்.
பட், ரங்கு ஸார் ! கவலைப்படாதீங்க.. உங்க மனசுலே இருக்கற டிஸப்பாயின்ட்மென்ட் எனக்கு நன்னா
புரியறது. இந்த 18 படத்தோட டி.வி.டி.யும் எங்கட்ட இருக்கு.
சென்னைக்கு வந்த உடனே அத அனுப்பரேன். தினத்துக்கு ஒண்ணு வீதம் தொடர்ந்து
18 நாளைக்கு ராத்திரி 11 மணிக்கு போட்டு ஸ்பீக்கரையும் ஃபுல் வால்யூம்லே வச்சுடுங்க.
சுப்பு தாத்தா.
( நாளை வரை ) தோஹா.
அனன்யா, சூப்பர் selection .
என்னையும் மாட்டிவிட்டது செல்லாது செல்லாது, நான் ஏற்கனவே தமிழ் படம் பத்தி எழுதிட்டனே, எப்போ என்ன பண்ணுறது?
நல்ல லிஸ்ட்... தில்லு முள்ளு ஆல் டைம் ஹிட்... அன்பே சிவம், தெனாலி ஏ ஒன்... கலக்கல் லிஸ்ட் தான் போங்கோ... உங்க ரங்க்ஸ் லிஸ்ட் கூட சூப்பர் தான்... என்ன கொஞ்சம் ஓல்ட்ஆ இருக்கு கேட்டேளா?
(என்னையும் அழைச்சுருக்கார் Dreamer இந்த தொடர் பதிவுக்கு... இப்படி எனக்கு தெரிஞ்ச எல்லாரையும் நீங்களே தொடர அழைச்சுட்ட நான் யாரை கூப்பிட.... !!!!!!!!!!!!!!!)
சொல்ல மறந்துட்டனே.... நட்டமைக்கி சூப்பர் செக் .... சூப்பர் செக்... ஹா ஹா ஹா
//இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே !!
இது நியாயமா ? தர்மமா ?// sury sir, intha list yellam namakku oththu varaathunnu sollitten. Lightaa vidungo...:)
தெனாலியில் கதைத்த தமிழ் எங்கள் தமிழ் அல்ல. இதைப்படியுங்க.
http://reap-and-quip.blogspot.com/2010/05/blog-post_06.html
அநன்யா Aunty..
எப்படி சச்சினையோ விவியன் ரிச்சர்ட்ஸையோ விட்டுட்டு All time Great World 11 Cricket Team செட் பண்ண முடியோதோ அது மாதிரி கமல் படங்களைத் தவிர்த்து விட்டு நல்ல ரசனை கொண்ட யாராலும் டாப் டென் தமிழ்ப் படங்களை சொல்ல முடியாது.
அன்பே சிவம், மகாநதி, சலங்கை ஒலி, நாயகன், ராஜ பார்வை இன்ன பிற இல்லாமல் ஒரு டாப் டென் வரிசையா? அது மாதிரி தமிழ் வலையுலகத்தில் இதுவரை யாரும் எழுதி நான் பார்க்கவில்லை.
அப்புறம் என்னோட டாப் டென் படங்களை நான் ஏற்கெனவே பட்டியலிட்டு விட்டேன் அது உங்களுக்கும் தெரியும், எனவே மீ தெ எஸ்கேப்..
//சொல்ல மறந்துட்டனே.... நட்டமைக்கி சூப்பர் செக் .... சூப்பர் செக்... ஹா ஹா ஹா//
அப்பாவி Aunty.. யாரு நானா?? எப்படி சூப்பரா எஸ் ஆனேன் பாத்தீங்களா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
maatti vittuteengala... mmm
sankarabaranam, manalkayiru, anbesivam enakum pidukum
Good selection of movies...BTW, it's Ramesh Khanna in Thenali and anot Suresh Krishna... FYI.
நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ் படங்கள் அனைத்து என்னுடைய மனதில் இருந்த படங்கள்.
வாழ்த்துக்கள்
விஜய்
சவுத் இண்டியா சினிமா தியேட்டர்ஸ் எல்லாத்தையும் ரவுண்டு அடிச்ச மாதிரி ஒரு சூப்பரான லிஸ்டு போங்க..! நல்ல தேர்வுகள். உங்க ஹப்பியின் தேர்வுகளும் அருமை... தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நீங்கள் குறிப்பிட்டதை நான் இன்னும் பார்க்கவில்லை... பார்க்கிறேன். படத்தைப்பார்த்துட்டு சாப்பிட்ட கோர்னெட்டோ வரைக்கும் ஞாபகமா எழுதியிருக்கிறது சூப்பர்...
அழைப்பை ஏற்று அமோகமாக பதிவை எழுதியதற்கு நன்றி!
@ஜெகன்,
மிக்க நன்றீஸ்.. வடை உங்களுக்கு தான் இந்த பதிவுல!//தேடல்களை விரிவுபடுத்தும் விதமாக வித்யாசமான படங்களாக இருக்கின்றன// இப்படி எல்லாம் சொல்லிட்டு,நான் சொன்ன படம் எல்லாம் பார்த்துட்டு கல்லை விட்டு எறியறது! எனக்கு பிடிக்கும்ன்னு தான் சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் உலகத்தரம்ன்னு எல்லாம் சொல்லலை சாமீ!!! :))
@ஜெய்லானி,
என்னங்க இது? காந்தி செத்துட்டாரான்னு கேக்கற மாதிரி இருக்கு? விதிகள் எனக்கு ட்ரீமர் விதிக்கலையே!அவர்கிட்டே சொல்லிட்டேன். அப்படி அவர் செல்லாது செல்லாதுன்னு சொன்னா, நான் வேணா எச்சை போட்டு அழிச்சுட்டு புதுசா ஒரு 10 தமிழ்ப்படம் செலக்டு பண்றேன்.ஹலோ, எங்கே ஓடுறீங்க?
@பத்து அங்கிள்,
குலதெய்வத்தை பத்தி நிறைய புலம்பியாச்சு நான். மறுபடியும் பேசினா அடிவிழும்ன்னு பயம் எனக்கு. அதான்.. எல்லா பேட்டியிலேயும் இதை சொல்லாம இருக்கவே மாட்டார். நேஷனல் அவார்டு கிடைச்சதே! சும்மாவா?
அதானேப்பார்த்தேன். மாப்ஸ் செலக்ஷன் பத்தி என்னடா சத்தமே காணொம்ன்னு யோசிச்சேன்.சொல்லியாச்சு. சந்தோஷம்.. க்கும்..
@ஹூஸைனம்மா,
//ன்னு கதை வேற!! ;-)// படம் பார்த்த, இசை கேட்ட அதிர்ச்சி வேற, கார்னெட்டோ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பக்கித்தனம் வேற. அதெல்லாம் அப்போ ரொம்ப பெரிய விஷயம்! அந்த சுவையும் மறக்க முடியாது. ஸ்ட்ராபெர்ரியும் சாக்கலேட்டும் சேர்ந்த கலவை. யம்மீ!
@ஆசியா அக்கா,
ரொம்ப நன்றீஸ்!
சொல்லியாச்சு. ரங்குவுக்கு வாயெல்லாம் பல்!
@மாதவன்,
மிக்க மிக்க நன்றீஸ். கண்டிப்பா எழுதுங்க. உங்க லிஸ்டு படிக்க ஆவலா இருக்கேன்.
@ஸ்டார்ஜன்,
மிக்க மிக்க டாங்ஸ்
@சே.குமார்,
ரொம்ப நன்றிங்க.
@சித்ரா,
நக்கலு? நான் என்னப்பா பண்ண? ஆந்திரா ல தான் ஆரம்ப கல்வி எல்லாம். சோ, தெலுங்குப்படம் ரத்தத்துல ஊறிடுச்சு.
@ஸ்ரீராமண்ணா,
டாங்கீஸ்.
@சுப்புத்தாத்தா,
நான் அவனை முன்னாடியே கூப்பிட்டாச்சு தொடர் பதிவுக்கு. அந்த தற்குறிப்பாண்டி, ரொம்ப ரகளை பண்ணினான். 3 வாரம் ஆகும்ன்னு பிகு பண்ணினான். அதான் அவனை டெலீட் பண்ணியுட்டேன். கோச்சுக்காதேள்.
//ச்..ச்...ச்...ச்.....வெரி ஸாரி டு ஹியர். // சொல்லியாச்சு கேட்டேளா?
//ராத்திரி 11 மணிக்கு போட்டு ஸ்பீக்கரையும் ஃபுல் வால்யூம்லே வச்சுடுங்க.//11 மணிக்கு மேல போட்டு யார் பாக்க சுப்புத்தாத்தா? நம்ம ரங்க்ஸ் 9 மணிக்கி சாமியாடி தாச்சிண்டுடுவார். 11 மணியெல்லாம் அர்த்தராத்திரி அவருக்கு. நீங்க வேற.
தோஹால இருந்து கிளம்பறேளா? ஹாப்பி ஜர்னி. மறுபடியும் வாருங்கோ! நன்றி!
முகுந்த் அம்மா,
ரொம்ப நன்றி! அப்படி ஒரு வில்லங்கமா? சரி பொழைச்சு போங்கு.. சாரி பொழைச்சு போங்க!
(ஸ்ஸ்... எல்லாருமே இதே டெக்னிக்கை பாலோ பண்ண ஆரம்பிச்சுடாய்ங்க சித்ரா, உங்களை சொல்லலைப்பா)
@அப்பாவி தங்க்ஸ்,
அதே அதே.. அதுவும் 1930 ல இருந்து ஆரம்பிச்சா நான் எங்க போய் முட்டிக்கறது?கவலை வேண்டாம். நானே இன்னோரு பதிவும் போடுறேன்.. என்னையே கூப்பிடுங்க. ஹீ ஹீ. நாட்டாமையும் எஸ்க்கேப்பு!
@அனாமிகா,
படிச்சேன்ப்பா.. இவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரியாது. சூப்பர் கவரேஜ்.
@ஸ்ரீராம் நாட்டாமை, அங்கிள், பெரியப்பா,
மேக்ஸிமம் ரெண்டு படம் தான் பெர்மிட்டட். அதுக்கும் மேல போட முடியாது. உங்க பாட்டு லிஸ்டுலேயே கமல் மயம் தான்.இப்போ இதுலேயும் பத்தும் கமலா தான் இருக்கும் அதான் முன்னெச்சரிக்கையா சொன்னேன்.
க்ர்ர்.. அப்போ இது தொடர் பதிவு இல்லே. எளுதாட்டி போங்க.. நான் என்ன பண்ண?
@தென்றல் அக்கா,
நீங்களாவது எழுதறேன்னு சொன்னீங்களே.. சந்தோஸம்..
சீக்கிரம் போட்டுடுங்கக்கா..
@விஜய்,
பிழை திருத்தினத்துக்கு நன்றீஸ். ஆமா லேஸா ஒரு கன்ஃப்யூஷன். ரமேஷ் கண்ணா & சுரேஷ் க்ருஷ்ணா.. எதுகை மோனையா இருக்கா.. அதான்.. நல்ல ஆப்ஸர்வேஷன் உங்களுக்கு. மிக்க தாங்க்ஸ்.
@விஜய்,
எனக்கு பிடிச்ச பாட்டை நீங்க பாடி இருந்தீங்க இல்லையா.. அதுனால உங்களுக்கு பிடிச்ச படங்களை நான் போட்டுட்டேன். ஹீ ஹீ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ட்ரீமர்,
ப்ர்ர்ர்.. தம்ப்ரீ..
ஏதோ நீங்க ஐடியா குடுத்தீங்க.. நாங்களும் எளுதிட்டோம். தெலுங்கு க்ஷ்ணக்ஷணம் மட்டும் தான் புதுசு. மொழி தெரியாட்டி அஹா நா பெள்ளண்ட்டா பார்க்காதீங்க. டயலாக் ஓரியண்டட் படம். சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்திடும். மத்தபடி சங்கராபரணம் எல்லாருமே பார்த்திருப்பாங்களே? தன்மாத்ரா ரொம்ப சோகமான படம். அதுனால பார்க்கசொல்லி நான் வற்புறுத்த மாட்டேன். உங்க இஷ்டம். பார்த்துட்டு டிப்ரெஷன் ட்ரீட்மெண்டுக்கு காசு எல்லாம் கேக்கக்கூடாது.
நல்ல படத்தேர்வு. நீங்கள் குறிப்பிட்ட தெலுங்குப் படங்கள் எனக்கு அறிமுகமில்லாதவை.
மற்றபடி அனைத்தும் என் விருப்பப் பட்டியலில் இருப்பவையே.
அமீரகத்தில் இருக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்வான செய்தி.
வாழ்த்துகள். தொடருங்கள்!!
படத்தேர்வு அருமை.
தெனாலி எனது ஆல்டைம் ஃபேவரைட்.
என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றியக்கோவ்.
http://jigardhanda.blogspot.com/2010/05/blog-post.html
போட்டாச்சு...போட்டாச்சு..
hmm rules padi post podala athanala inhta post sellathu... enga geetha paatiya kupidala pathivuku so this post is reject
எனக்குத் தெரிஞ்ச மாதிரி நான் ஒரு அஞ்சு பாடல் எழுதியிருக்கேன்.
நீங்க வந்து பாக்கறேளா ??
மீனாட்சி பாட்டி.
http://arthamullavalaipathivugal.blogspot.com
மணல் கயிறு நல்ல செலெக்க்ஷன். இப்பவும் பார்த்து சிரித்து மகிழலாம். அதுவும் உங்க அப்பவுக்கு காது அவ்வளவா கேக் காதா இல்லை அவ்வளவு காதும் கேக்காதா டைலாக் சூப்பர். ஆமாம் ரங்குவுக்கு பத்ரகாளி படம் பிடிக்காதா
http://pudugaithendral.blogspot.com/2010/05/blog-post_18.html
பதிவு போட்டாச்சு
நல்ல ரசனையான படங்களின் தொகுப்பு. Rare set of movies together
//
ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும்.
//
கமலின் dummy டைரக்டர் லிஸ்டில் சுந்தர் C யும் ஒண்ணு
சந்தானபாரதி - மகாநதி, குணா (நல்ல டைரக்டர் தான். ஆனால் இதெல்லாம் அந்த மண்டையிலிருந்து வர வாய்ப்பில்லை)
பரதன் - தேவர் மகன் (தேவக்கோட்டை, ராமநாதபுரம் ஏரியாவை கமலால் மட்டுமே இப்படி கண்முன்னே கொண்டு வர முடியும். அதுவும் அதே வருடத்தில் வந்த பரதனின் "ஆவாரம்பூ" பார்த்த பின்)
mentionla irukkaa ella padamumey arumaiyaana choice! esp- thanmaatra! mohanlal-oda ardent fangarathunaalayo ennamo! theiryala.. aanaa thanmaatraavoda "vanaprastham" innum osaththingarathu en avipraayam! brilliance at its best!
ovvayaar/haridaas/chakradhaari/parasakthi-- ellamey onnanglaas cinemakkal!
arumai-arumai!
Post a Comment