Pages

Showing posts with label porkodi. Show all posts
Showing posts with label porkodi. Show all posts

Monday, May 17, 2010

பதிவர்கள் சிந்தனை

(எனக்கு தெரிஞ்ச)எந்தெந்தபதிவர், இன்நேரம் எப்படி எழுதுவாங்க (அ) எழுதும்போது என்ன யோசிச்சுண்டு இருப்பாங்கன்னு சும்மா ஒரு கற்பனை

எல்.கே:
இன்னைக்கு நான் உங்களுக்கு புதுசா சொல்லிக்கொடுக்கப்போற ரெசிப்பீ கொத்தவரங்கா ரைஸ்

முதல்ல கொத்தவரங்காயை பச்சையா மிக்ஸியில நல்லா அரைச்சுக்கோங்க. 1ஸ்பூன் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணி விட்டு சாதம் ‘வடிச்சு’ வெச்சுக்கோங்க. இப்போ அந்த அரைச்ச விழுதை அந்த குழைசல்ல போட்டுக்கோங்க.  இதுல இப்போ உப்பு, சர்க்கரை போட்டுக்கோங்க. ஒரு 30-35 மிளகை நல்லா மிக்ஸியில போட்டு பொடிச்சுக்கோங்க. (கவனிக்க: காரம் அதிகமா விரும்பாதவங்க 29 (அ) 34 மிளகு மட்டும் போட்டுக்கோங்க, அப்புறம் எல்.கே ரொம்ப காரம்ன்னு பின்னூட்டம் போட்டு மைனஸ் வோட்டு போட்டுடாதீங்க ஆமா)அந்த கலவை சாததுல போட்டு சொதக் சொதக்ன்னு கையால பிசைஞ்சீங்கன்னா அருமையான சுவையான கொத்தவரங்காய் சாதம் (பேஸ்டு!!!) ரெடி. இதை குழந்தைகள் ஃபெவிக்காலுக்கு பதிலா விரும்பி யூஸ் பண்ணுவாங்க. சில சமயம் உங்க தங்கமணிகள் வாய்ல போட்டுட்டீங்கன்னா அவங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க. அப்புறம், அவங்க புலம்பல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.


தக்குடு:
(சிவப்பு மையில் இருப்பது தக்குடுவின் சிந்தனை)
குருநாதா சரணம்!
இப்போ எழுதப்போற கதைக்கு ஒரு டைட்டில் வெச்சுடறேன்.
வைஷ்ணவியின் குண்டலம்.
ச்சே.. சரியா இல்லையே... ஹ்ம்ம்..
காயத்ரியின் குண்டலம்.
இதுவும் நன்னாயில்லையே... 
ஸ்ரீவித்யாவின் குண்டலம்..
என்னமோ இடிக்குது.. 
சரி வேண்டாம்.. 
வைஷ்ணவியின் ஜிமிக்கி.
பரவாயில்லை.. 
காயத்ரியின் ஜிமிக்கி.
இல்லையே.. என்னம்மோ இடிக்குதே...
ஸ்ரீவித்யாவின் ஜிமிக்கி...

என்னம்மோ குழப்பமா இருக்கே.. .
சரி.. மறுபடியும் யோசிக்கறேன்.. ஃப்ரெஷ்ஷா ஒரு ஐடியா வேணும்.. 
குண்டலமும் ஜிமிக்கியும்..

தன்னைத்தானே தட்டிக்கொடுத்துண்டே,”ஆஹா.. தக்குடு,,, அருமைடா கண்ணா.. இப்போ பாரு.. ஒரு 300 பின்னூட்டத்தை அள்ளப்போறே... ”


பத்மநாபன் அங்கிள்:
ஸ்ஸ்ஸ்பா... ஒரு தொடர் பதிவு ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகப்போகுது.. என்னமா வேலை இழுக்குது! மருதமலை முருகா.. இன்னிக்கி நல்ல படியா அருளுப்பா.. எப்படியாவது இன்னிக்கி... சொல்லிட்டா ஒரு வேளை நடக்காம போயிட்டா? . ப்ளீஸ் முருகா.. என்னை கை விட்டுடாதே.. எப்படியாவது ஜஸ்டு ஒரே ஒரு..
ஈச்சனாரி பிள்ளையாரப்பா.. நீயாவது உதவுப்பா.. பேரூர் சிவபெருமானே.. உன்னையும் நான் முழுமையா நம்புறேன்.. குலதெய்வம் சுஜாதா.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம ஜவஹராய. ஓம் நம ஜவஹராய.. எல்லாரையும் வேண்டிண்டாச்சு..
எப்படியாவது இன்னிக்கு ஒரு வரி தமிழ்ல டைப்படிச்சுட வேண்டியது தான்.. எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள பிடித்த ஐந்து பாடகர் தொடர் பதிவை எழுதி முடிச்சுட முடியாது??? இந்தக்கஷ்டத்துக்கு பின்னூட்டம் போடுறதே எவ்ளோவோ பெட்டர்டா சாமி!!!

மாத்தா கீத்தானந்த மயி:


(எழுதுகிறார்)க...
(இன்னோரு விண்டோவில் போய் கூகிள் பஸ்ஸில்)

க்ர்ர்... ஏய் தக்குடு, நீ கிடையாது..
ண்...
க்ர்ர்ர்.. திவா அண்ணா, ஒரு கமெண்டு போட்டேனே, எங்கே போச்சு..
ண...
க்ர்ர்... அநன்யா அக்கா, கு.ப.த எங்கே?
ன்...
க்ர்ர்... கூகிளின் சதி...
வ...
க்ர்ர்...
ரு...

ஹூஸைனம்மா:
ட்ரங்குப்பெட்டி சாவியை எங்கியோ வெச்சுட்டேனே.. காணோம்.. அப்போ அவசரத்துக்கு ஒரு பாலித்தீன் பையில பேக் பண்ணிக்கலாமே.. எப்படியும் மாசத்துக்கு ஒரு பதிவு தானே.. பரவாயில்லை.. அதுக்குள்ளே வேறு ஏதாவது மீட்டிங் கோஆர்டினேட் செஞ்சுட வேண்டியது தான்.

ஜெகநாதன்:
முதல்ல படம் வரைஞ்சு ரெடி பண்ணிடுறேன். நெக்ஸ்டு கதை எழுதிடுறேன். அதுக்கப்புறம் இந்த படத்துக்கும் கதைக்கும் ஏற்றார்போல ஒரு கவிதை எழுதிடுறேன். நெக்ஸ்டு ஒரு ட்யூன் போட்டு பேக்கிரவுண்டு மீசிக் போட்டு பாட்டு பாடி ரெக்காட் பண்ணிட வேண்டியது தான்.

அப்பாவித்தங்கமணி:
ஒரு வழியா பிரியமானவளே முடிச்சாச்சு. இப்போ என்ன பண்றது? தக்குடு, அநன்யா ப்ளாக்ல போய் கும்மி அடிக்க வேண்டியது தான். இல்லாட்டி ஒரு கவுஜ எழுதலாமே.. இல்லாட்டி இட்லிக்கு ஊறவெச்சு அரைச்சு பண்ணிப்பார்க்கலாம்!

பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா:
என்ன தான் எழுத? நமக்கு எழுத்து ஒத்து வரமாட்டேங்குதுன்னு நினைச்சா யாராவது விடுறாங்களா? சும்மா தொடர்பதிவுக்கு கூப்பிடுறாங்களே? பேசாம நாட்டாமையா ஒரு அரச மரத்தடியில சொம்போட உக்காந்து 4-5 இத்துப்போன பெருசுங்களை உக்கார வெச்சு பஞ்சாயத்து.ப்ளாக்ஸ்பாட்.காம்ன்னு ஒரு சைட் ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

பொற்கொடி:
கருப்பு நிலா முஞ்சு போச்சு.. வேணா ப்ளூ எர்த்ன்னு புச்சா ஒரு கதை ஸ்டார்ட் பண்ணிக்கலாம். ஃப்ர்ஸ்டு எப்பிசோடு தானே வேணும்? எப்படியும் ரெண்டு மாசம் கழிச்சு தான் செக்கண்டு எப்பிசோடு போடணும். நோ ப்ராப்ளம் .. ஸ்டார்ட் மீஜிக். ப்ளூ எர்த். பாகம்-1....

ட்ரீமர்:
எப்புடியோ ஹார்ரர், த்ரில்லர் எல்லாம் சேர்த்து கதை எழுதி கல்லா கட்டியாச்சு. இப்போ செண்டிமெண்ட், ஆக்‌ஷன்,ஹார்ரர் & த்ரில்லர் எல்லாம் சேர்த்து ஒரு நகுலன் கதை எழுதிட வேண்டியது தான்.

ஜிகர்தண்டா:
வேறு யாராவது நம்மை ஏதாச்சும் தொடர் பதிவுக்கு கூப்பிட்டா பரவாயில்லை.. ஹ... யாருமே நம்மளை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!!எவ்ளோ நேரந்தான் விட்டத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்கறது?


அநன்யா:
ஹ்ம்ம்ம்.. எவ்ளோ யோசிச்சாலும் ஒண்ணுமே தோணமாட்டேங்குதே! என்ன எழுதறது? மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாட்டி ப்ளாக் எக்ஸ்பயர் ஆயிட்டா? யாரை மொக்கை போடுறது?
Related Posts with Thumbnails