Pages

Tuesday, October 12, 2010

நவராத்திரி கலாட்டா

என் ப்ளாக் ஆரம்பிச்சு சுமார் ஒரு வருஷம் ஒரு வாரம் ஆயிடுத்து. ஆனிவர்ஸரி(?!!?) அன்னிக்கி மறந்துட்டேன்.. அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை.. ஹிஹி.. நன்னி ஹை..

அதிருக்கட்டும். என்னத்தை எழுதறதுன்னு ஒண்ணுமே புரியலை. சென்னை புழுக்கத்தை பத்தியா, இல்லை எந்திரனை பத்தியா, இல்லை காமன்வெல்த் போட்டிகளை பத்தியா இல்லை, அமரர் சுஜாதா அவர்களின் ’ஒரே ஒரு துரோக’த்தை பத்தியான்னு குழம்பிண்டு இருந்தேன்.

நேத்திக்கு இந்த குழப்பத்தை தீர்க்க நவராத்திரிக்கு அழைக்க,  குங்குமச்சிமிழை எடுத்துண்டு ஒரு மாமி வந்தா வீட்டுக்கு. உடனே தெரிஞ்சு போயிடுத்து சரி அடுத்த போஸ்டும் அருண் வருண் தான்னு..

மாமி வந்த உடனே, அருண் வருண் மாமியிடம் போய்,” அண்ட அங்கிள் ரோபோ மேல ஜூஸ்(!?) ஊத்திட்டா, அப்போம் என்னாச்சு, ஒடைச்சு தூக்கி டஃப்பின் ல போட்டுட்டா.. உடனே குப்படிக்கிட் வன்னு, ரோபோவை தூக்கிண்டு போயிடுத்து” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப தெளிவா எந்திரன் கதையை மஹா சுருக்கமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. வந்த மாமிக்கு ஒண்ணுமே புரியலை. ”எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் நீங்க கொழந்தைகளையும் கூட்டிண்டு வரணும்”ன்னு சொல்லி, சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டு,  குங்குமம் கொடுத்து அழைச்சா.
இதான் சாக்குன்னு அம்மா அந்த மாமியை கோழி அமுக்ற மாதிரி அமுக்கி, ”ஒரே நிமிஷம் ஒக்காருங்கோ இதோ, இப்போ வந்துடறேன்”னு அவசரமா தாம்பூலம் அரேஞ்ச் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இது ஃப்ளாட்ஸ், இங்கே தாம்பூலம் வாங்கிக்க வாங்கோன்னு போய் கூப்பிட யாரும் இல்லை.. அவங்களே வந்தா நிர்பந்தம் பண்ணி கொடுத்துடலாம்ன்னு அம்மா ஐடியா பண்ணி இருக்காங்க. இங்கேயும் அங்கேயும் ஓடி தேடி ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ஒரு ரூபாய் எல்லாம் எடுத்து வெச்சா திடீர்ன்னு வருண் அந்த இடத்துக்கு வந்து தன் கைவரிசையை காட்டிட்டான்! என்னவா? அதான் இருந்த ஒரே...... ஒரு ஆப்பிளை நறுக்குன்னு கடிச்சுட்டான்.. அதை சாதாரண நாள்லே எல்லாம் ஏக கருப்பா சுருங்கி, எலந்தைப்பழம் மாதிரி ஆகி தூக்கி போடுற  வரைக்கும் சீந்தினதே இல்லை.. இன்னைக்கு என்னம்மோ கன காரியமா மாமிக்கி தாம்பூலத்துக்கு வெச்சிருந்த ஆப்பிளை கடிச்சு இருக்கான்!
நல்ல வேளை ஒரே ஒரு கொய்யா இருந்ததோ அம்மா தப்பிச்சாங்க. அதை வெச்சு சமாளிச்சோம்.

அடுத்து, நம்ம ஹீரோ அருண் ரேஷன்ல வாங்கிய ஏதோ ஒரு மாவை தூக்க முடியாமல் தூக்கிண்டு போய் ’கன்னானிடி’ன்னு அடித்தொண்டையில் சொல்லி மாமியிடம் காட்டிண்டு இருந்தான்! கன்னானிடின்னா என்னவா?
கருணாநிதியாம்! :))

அந்த மாமியின் வீட்டுக்கு போனோம். இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் ஓடி ஓடி சுத்தி பார்த்துண்டே இருந்தாங்க. இவங்க பின்னாடியே இவங்க பேபிசிட்டரும்! இங்கே பாரு வருண் பொம்மையெல்லாம். எவ்ளோ அழகா இருக்கு பாரேன்னு சொன்னப்போ தான் ஓஹோ இதை பார்க்கத்தான் வந்திருக்கோம் போல இருக்குன்னு புரிஞ்சுண்டு என் பக்கத்துல வந்தான். (உட்காருவதெல்லாம் அவன் டிக்‌ஷனரியிலேயே இல்லை!) ”இடு என்ன?” ”வெளவெளவா?” ன்னான். (நாய்). ”ஆமா இது வெளவெள”ன்னு சொன்னேன். ”இடு”? அப்படீன்னான். ”இது செட்டியார், செட்டியாரம்மா.. கடை வெச்சுண்டு இருக்காங்க”ன்னு சொன்னேன். உடனே, ”இடு?” இது பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிண்டு இருக்காங்க”ன்னேன். உடனே, ”உனக்கு கல்யாணம் பண்ணலாமா? நீ பண்ணிக்கிறயா”ன்னு கேட்டேன். பண்ணிக்கறேன்னு (அப்பாவியா!!! அப்பாவி ரங்கமணி அல்ல) சொன்னான். உடனே வருண் திருமண மஹோற்சவத்தை கற்பனைக்குதிரையில் தட்டி விட்டு பார்த்தேன்.. என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி!

மாப்பிள்ளையை வரச்சொல்லுங்கோ, மாங்கல்ய தாரண சடங்கு இருக்குன்னு சாவதான் சொல்லிண்டு இருப்பா.. இவன் வேஷ்டியெல்லாம் அவுந்து டயப்பரோட மண்டபம் பூரா பூவை பிச்சு போட்டுண்டு ஓடிண்டே இருப்பான். மையெல்லாம் ஈஷிண்டு வேர்த்து வழியும். இவனுக்கு பின்னாடியே துரத்திண்டு இவனோட பேபி சிட்டர்,” வருண் வாம்மா, மாங்கல்ய தாரணம் இருக்கு கண்ணா.. கூப்படறா பாரு”ன்னு சொல்லிண்டு இருப்பா. இவன் ரகளை பண்ணி தாலி கட்டிட்டு மறுபடியும் பந்தியில் பேப்பர் ரோல் போட்டு இலை போடுறதை ஆவலா பார்க்க போயிடுவான். இல்லையோ பின்னே? இலையெல்லாம் இழுத்து கீழே தள்ள வேண்டாமா?

அடுத்தபடியாக அருண் வந்து,” நானக்கு கல்யாணம்?”ன்னு கேப்பான். உடனே ”இந்தா நீ இந்தப்பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கோ”ன்னு நாம சொல்லுவோம். அதுவும் அழகா பேபி ஷாமிலி மாதிரி மூக்கும் முழியும் ரெண்டு சிண்டு போட்டுண்டு கொழு கொழுன்னு இருக்கும். ஆனா இவன், ”நானக்கு அன்ன பாப்பானா வேணும்”ன்னு உதட்டை பிதுக்கி அழுவான். இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம்! எப்போவுமே இப்படித்தான்.. அவன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்.

இதை அந்த மாமிகிட்டே சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிக்கறா!

அந்த மாமிகிட்டே போய் சுண்டல் வேணும் சுண்டல்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு இருக்காங்க. மொத்தத்தில் செம கலாட்டா நேத்திக்கி.

நாங்க வெளியேறும்போது, மாமி கண்ணில் ஆனந்தம். குழந்தைகள் வந்ததுனாலே ரொம்பவும் சந்தோஷமா இருந்ததுன்னு சொல்லி அருண் வருண் உச்சி முகர்ந்தார். நமக்கு அதானே வேணும். இவங்க ரெண்டு பேரும் தான் பண்டில் ஆஃப் ஜாய் ஆச்சே! எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை ஷேர் பண்ண வேண்டாமோ?

43 comments:

LK said...

first yr complete pannathuku vaalthukkal

எஸ்.கே said...

நெகிழ்ச்சியான கட்டுரை!

Madhavan said...

congrats for completion of sucessful(!) one year.
Aran & Varu.. -- Asaththal..
I also blogged one post
enthiran' story by my 3.5 yr old daughter.. read & comment..

BTW.. looking at the last few months record.. not impressive. u had very fewer post each month..
Common.. have more posts..

---- www.madhavan73.blogspot.com

Your recent achievements :
* ► October (1)
* ► September (1)
* ► August (2)
* ► July (3)
* ► June (5)

திவா said...

அனன்யா! பேசாம அருண் வருண் ன்னு ஒரு ப்லாக் ஆரம்பிச்சுடலாம். ம்ம்ம்ம்ம் அது சரி அப்புறம் எந்த மொக்கையை இங்கே போடறது?

நாஞ்சில் பிரதாப் said...

//இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம்! எப்போவுமே இப்படித்தான்.. அவன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்.//

ஜீன்ஸ் படத்துல வர்ற மாதிரி அப்புறம் ஆள் மாறாட்டாம் பண்ண வேண்டியதுதான்...:)

நவராத்திரியை ஜமாய்ட்சுட்டேள் போங்கோ...:))

புதுகைத் தென்றல் said...

ஒரு வருஷ முடிந்ததுக்கு வாழ்த்துக்கள்.

எங்க போனீங்க தங்கச்சி. ரொம்ப நாளா ஆளையே காணோம்??? இன்னமும் சென்னையா?

kggouthaman said...

இந்த நவராத்திரி சீசனில் நான் படிக்கும் முதல் சீசன் பதிவு. நன்றாக உள்ளது. அடிக்கடி எழுதுங்க. வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

//அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை//

அடடா நான் ஆளுயர மாலை அனுப்பினேனே...வரலையா... அட்ரஸ் மாறி போய்டுச்சோ... இரு விசாரிக்கறேன் (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

//கன்னானிடின்னா என்னவா?
கருணாநிதியாம்! :))//

இதை அவர் கேட்டா... ஆஹா தமிழ் வாழ்க... மழலை தமிழ் வாழ்க வளர்கனு சொல்லிட போறார்... எஸ்கேப்... ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

//வன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்//

ஹா ஹா அஹ.. .இந்த போஸ்ட் எல்லாம் இதுக பெருசானப்புறம் காட்டனும்... உன் மேல கேஸ் போட போகுதுங்க பாரு... ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்...

அப்பாவி தங்கமணி said...

Happy first blog anniversary... nice to read your humour after a while...miss you

geethasmbsvm6 said...

குழந்தைங்களை விட்டுட்டு, ஊருக்குப் போகப் போறது மனசிலே கஷ்டமா இருக்கோ??? அதான்! ம்ம்ம்ம்ம், என்ன இருந்தாலும் குழந்தைங்க இருந்தால் வீடு மட்டுமில்லாமல் மனசே வெளிச்சம் போட்டாப்போல் ஆயிடும்!

geethasmbsvm6 said...

grrrrrrrr your blog started to ask id from me! enna aniyayam???

Chitra said...

Congratulations, Ananya! Super post!

மின்மினி RS said...

நவராத்திரியை நல்ல ஜாலியா கொண்டிருக்கீங்கன்னு உங்க எழுத்தை படிக்கும்போது புரிஞ்சி போச்சி.. நல்ல கொண்டாட்டம்தான்.

நவராத்திரி வாழ்த்துக்கள்.. அப்புறம், உங்க முதல்வருடத்துக்கும் வாழ்த்துகள்.

தக்குடுபாண்டி said...

செம காமெடிதான் போங்கோ!!..:)

பத்மநாபன் said...

வாழ்த்துக்கள்...வெய்யுலூருக்கு வர்ற ஐடியாவே இல்லையா..

இரட்டையர்கள் வச்சுட்டு பதிவு எழுதறதுக்கு எங்க டைம்..அவர்களை வச்சே பதிவிட வேண்டியதுதான்....matter generators...

நானும் கொஞ்ச நாள்ல பின்னூட்டம் இட ஆரம்பித்து ஒரு வருடமாச்சுன்னு... அதுவும் யாராவது பதிவில் பின்னூட்டமாக...

அன்னு said...

//என் ப்ளாக் ஆரம்பிச்சு சுமார் ஒரு வருஷம் ஒரு வாரம் ஆயிடுத்து. ஆனிவர்ஸரி(?!!?) அன்னிக்கி மறந்துட்டேன்.. அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை.. ஹிஹி.. நன்னி ஹை..//

ஆஹா வாழ்த்துக்கள்! ஏன்னிவர்சரிக்கு எங்க ட்ரீட் கேட்டுடுவோமோன்னு ஒளிஞ்சிட்டு இப்ப மறந்து போச்சுன்னு சொன்னா? அருண் வருண்கிட்ட கொஞ்சம் ஃபோனை குடுங்க ப்ளீஸ்ஸ்!! :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.


அங்க ப்ளாக்ல எழுதின விசயத்தை ட்ரையல் பாத்திட்டீங்களா? மாமி சிரிச்சி சந்தோசமா இருந்தது நல்ல விசயம்..
அம்மா வெத்தலைபாக்கு குடுத்த சீன் சூப்பர்..:)

அமைதிச்சாரல் said...

ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள்.. நவராத்ரியை ஜமாய்ச்சுட்டேள் போலிருக்கே :-))

ஹுஸைனம்மா said...

ரொம்ப ஜாலியா இருக்கேள் போல!! அப்புறம் அதாரு பேபி சிட்டர் - நடுநடுல ஒரு காரெக்டர் வந்துட்டுப் போகுது??

சீக்கிரம் வாங்கோ இங்க..

BalajiVenkat said...

ஒரு பொம்மைய கூட ஓடைக்கலையா .... i dont like this... கொறைந்த பட்சம் ஒன்னாவது ஒடிச்சு இருந்தாலாவது நன்னா இருந்துருக்கும் .... :D

BalajiVenkat said...

நான் சின்ன கொழந்தையா இருக்கறச்சே எங்க ஆத்துக்கு பக்கத்துக்கு வீட்டு மாமி வருஷா வருஷம் கொலு வைப்பா .. எங்க ஆத்துல கொலு வைக்கிற வாடிக்கை இல்லை ... நான் அவா ஆத்துல பொம்மையலாம் நானும் அவா ஆத்து அண்ணாவும் சேந்து ஓடச்சுருக்கோம் ... :P

ராம்ஜி_யாஹூ said...

ஆப்பிள் கடித்த நவராத்திரி நடந்தது எங்கே, சென்னை அல்லது அபிதாபி

சே.குமார் said...

முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல கட்டுரை.

ஸ்ரீராம். said...

இன்னும் சென்னை வாசம்தானா? ஒரு வருடச் சாதனைக்கு வாழ்த்துக்கள். இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றதா? எங்க ஒரு படம் கூடக் காணோம்?

அன்னு said...

நானும் கிட்டத்தட்ட எல்லா பிளாகிலும் எந்திரன் கதைய படிச்சிட்டேன் அனன்யா. ஆனா இந்த மாதிரி கதைய யாருமே சொல்லலை. 'review'vai ரெக்கார்டு செஞ்சு எங்களுக்காக அப்லோடு பண்ணிங்கன்னா இன்னும் சௌகர்யம் :)

Jaleela Kamal said...

அப்பா ., நவராத்திரி வந்து உங்களை பதிவு போட வைத்தது.

வாழ்த்துக்கள், நலமா?

sriram said...

சிரிச்சு மாளலை அனன்யா..

இவ்வளவு நாள் எப்படி இந்தியாவில இருக்கீங்க?? ரங்கு ரொம்ப நாள் நிம்மதியா இருந்தா உங்களுக்கு ஆகாதே??

என்னமோ இருக்கு...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Matangi Mawley said...

unga arun varun enakku romba pidichchu poittaanga!! :D antha robo katha suuuper! :) muzhu kathayum avanga baashala kekkanum pola irukku!


1st anniversary wishes!! :)

asiya omar said...

அநன்யா நலமா?நான் உங்க ப்ளாக் பக்கம் வந்தும் நாளாகுது.ஏதேச்சையாக எல்.கே ப்ளாக்கில் பார்த்து கிளிக் செய்து வந்தால் அருமையான பகிர்வு.

DREAMER said...

பொம்மை கல்யாணம் ஓகே... அதென்ன, பொம்மை மாதிரியிருக்கிற குழந்தைகளையே வச்சு ஒரு திருக்கல்யாணம். எனிவே, கல்யாண கலாட்டா அருமையா இருந்துச்சு... சினிமாவுல, ஒரு ஃபோட்டோவை பாத்தா, அப்படியே அதே மாதிரி ஒரு ட்ரீம் சீக்வென்ஸ்ல ஒரு பாட்டெடுக்கிற மாதிரி, கொலுவுல கல்யாண சீனை பார்த்ததும், கற்பனை கல்யாண சீனை அமர்க்களமா எழுதியிருக்கீங்க...

-
DREAMER

R.Gopi said...

நவராத்திரிய நன்னா ஜமாய்ச்சுட்டேளே..

சுண்டல் கலெக்‌ஷன் எப்படி இருந்தது..

நன்னா பொழுது போறதா? எந்திரன் பார்த்தாச்சா?

எந்திரன் பத்தி எழுதலாமே?

Porkodi (பொற்கொடி) said...

rotfl!!!!!! naane arun varun miss panren na your nilamai.. :))))

அஹமது இர்ஷாத் said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

ஜெகநாதன் said...

அப்புறம்.. வேறெதுவும் எழுதலியா???
வாழ்த்துக்கள் மொக்கை தேவி!

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

Jaleela Kamal said...

-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

en blog ippa

http://samaiyalattakaasam.blogspot.com

pazasu kidaiyathu.
theeda veeNdaam

Ramani said...

உங்க எழுத்து நடை நீங்கள் சொல்ல நினைப்பதை
மிகச்சரியாக சொல்லி விடுகிறது.தொடருங்கள்.தொடர்கிறோம்
வாழ்த்துக்களுடன்...

அன்புடன் மலிக்கா said...

ஆகா அட்ட்டகாசாமாவுல்ல இருக்கு. எப்படியிருக்கீங்க அநன்..

இராஜராஜேஸ்வரி said...

பண்டில் ஆஃப் ஜாய்

asiya omar said...

அநன்யா நலமா?இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Related Posts with Thumbnails