எனக்கும் ரங்ஸுக்கும் ரசனையில பொருத்தம்ன்னா அப்படி ஒரு பொருத்தம், இதைப்பத்தி ரெண்டு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும் பதிவுல சொல்லி இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் சிலவற்றை இந்தப் பதிவில் பகிரலாமேன்னு நினைக்கிறேன்.
சிந்தனைகள்:
1. பெண்கள் தினமும் மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும் : தினமும் காலை ஆஃபீஸ் கிளம்பறதுக்கு முன்னாடி மஞ்சள் தேய்ச்சுண்டியான்னு கேப்பார். துபாய்ல இருந்த வரைக்கும் டப்பா டப்பாவா கோபுரம் பூசு மஞ்சள் தூள் தேய்ச்சு குளிச்சு குளிச்சு எல்லா சுடிதார்லேயும் நிரந்தர மஞ்சள் கரை ஆயாச்சு. துண்டு, தலைகாணி எல்லாத்துலேயும் திட்டு திட்டா மஞ்சள் கறை! இதெல்லாம் நான் யாருகிட்டே சொல்ல?
2. குங்குமம் தான் இட்டுக்கணும்: ஸ்டிக்கர் எல்லாம் இட்டுக்கப்பிடாது. சுமங்கலிகள் குங்குமம் தான் இட்டுக்கணும். வகிட்ல குங்குமம் இட்டுண்டாலே கொஞ்ச நேரத்துல போயே போயிடும். இந்த அழகுல நெத்தியிலேயுமா? இந்த தொல்லை தாங்க முடியாம நான் பெரீய ஸ்டிக்கர் இட்டுண்டு, அது மேல குங்கமத்தை வெச்சுண்டு சில நாள் இவரை ஏமாத்தி பார்த்தேன். இதுனால தலைகாணி எல்லாம் கரையாச்சேயொழிய இவருக்கு திருப்தி ஏற்படலை!
3. நைட்டியா? மூச்! : சதா சர்வகாலமும் புடவை தான் உடுத்திக்கணும். மடிசார் உடுத்தியுண்டா அதி ப்ரஸன்ன வதனம். சுடிதார் - சுமாரான எக்ஸ்பிரஷன். மத்தபடி நைட்டி பைஜாமா எல்லாம்.. ப்டாதுன்னா ப்டாது தான். இவருடைய எக்ஸ் கேர்ள்பிரண்ட் தேவயானி வேணா பொம்மிஸ் நைட்டீஸ் போட்டுக்கலாம் ஆனா கட்டின பொண்டாட்டி நான், விக்காஸ், ராசாத்தி பத்தி எல்லாம் கனவுல கூட நினைக்கக் கூடாது! வாட் எ கொடுமை சரவணா! வாட் எ கொடுமை ஐ ஸே?
4. நான்ஸ்டிக் கேடு: நான்ஸ்டிக்கெல்லாம் உடம்புக்கு மஹா கேடாக்கும். ஒன்ளி வெண்கலம், இரும்புச் சட்டி / ஹிண்டேலியப் பாத்திரம் தான் நல்லதுன்னு சொல்லுவார். அதுல டெஃப்லான் இருக்காம் அதுனால கேன்ஸர் வருமாம்.. அடைமாவை இரும்புக் கல்லுல போட்டு நாலு கரண்டி எண்ணெயில் பொறித்தெடுத்து சாப்பிட்டா மாட்டும் கொளஸ்ட்ராலே (மலையாள ஆக்ஸண்டில் கொலஸ்ட்ரால் கொளஸ்ட்ரால் ஆயிடுமாக்கும்) வராதோ? இதுக்கு கேன்ஸரே தேவலாம்!
5. இண்டக்ஷன் கேடு: இண்டக்ஷன் ஸ்டவ்வெல்லாம் ரொம்ப கேடாக்கும். எங்க பாட்டியெல்லாம் பாலக்காட்ல விறகடுப்புல தான் சமைப்பா. என்ன ருஜியாக்கும் தெரியுமோ? க்கும், மெட்றாஸுல விறகு கிடைக்குமா? மோரோவர், அதுல வரும் புகையால என் கண்ணு எரிஞ்சாக்கூட உங்களுக்கு பரம த்ருப்தி தான், ஆல் டீட்டெயில்ஸ் ஐ நோ, ஆனா வாடகை வீட்டு சமயலறை என்னத்துக்காறது? வீட்டுக்கார மாமி சர்ப்ரைஸ் ஆடிட்டுக்கு வந்தா நம்ம ஆட்டம் க்ளோஸ்!ஸ்டாக் பண்ணி வெச்சுண்டு இருக்கற விறகெல்லாம் நீங்க தோள்ல சுமந்துண்டு நடுத்தெருவுல தான் நிக்கணும்.
6. கேன் வெள்ளம் கேடு: கேன் தண்ணி உடம்புக்கு கெடுதல். பானைத் தண்ணி தான் நல்லது. எனக்கு பானைத்தண்ணியும் வேண்டாம் கேன் தண்ணியும் வேண்டாம். குழாய்த்தண்ணியே போதும்.
7. Melamine கேடு: துபாய்க்கு போனப்போ எல்லார் வீட்டுலேயும் மெலமைன் ப்ளேட்டுக்கள் தான் இருக்கும்.. சாதம் சாப்பிடவே.. நான் சரி டிஃபனுக்கு செளகரியமா இருக்கேன்னு ஒரு டஜன் மெலமைன் ப்ளேட்டுக்களை வாங்கினேன். இவர் ஏதோ சினிமாவை பார்த்துட்டு மெலமைன் கேடு, வேணா தங்கத்தட்டுல சாப்பிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டார்.. ஆமா பெரிய நவாப் ஃபேமிலி தங்கத்தட்டு வேணுமாம். அங்கே இருந்த வரை சாதத்தை போட்டு கைல வெச்சுண்டு சாப்பிடற பழக்கம் இருந்தது. அப்போ ஸ்டீல் தட்டுல சுடச்சுட ரசஞ்சாதம் சாப்பிட்டா, சங்கராபரணம் சங்கர சாஸ்திரி பொண்ணு சாரதா மாதிரி கை சுட்டு பொசுங்கிடும்!
8. வாஷிங் மெஷின் கேடு: கைல தோச்சாத்தான் பனியனெல்லாம் பளிச்சுன்னு இருக்கு இல்லையான்னு அடிக்கடி சொல்லி காமிப்பார். இத்துனூண்டு பாத்ரூம்ல நான் நுழைஞ்சு துவைச்சு, அலசி, நீலம் போட்டு, கஞ்சி போட்டு உஸ்ஸ்.. மெஷின்ல அழுக்கு போகாததென்னமோ உண்மை தான். இருந்தாலும் ஒரு செளகரியத்துக்கு தானே? எங்கப்பா எல்லாம் அவர் துணியை அவரே துவைச்சுக்கறார்.. நமக்கு சொல்ல முடியறதோ?
9. Mop ப்டாது: கையால வீட்டை துடைச்சாத்தான் வ்ருத்தியா இருக்கும். மாப்புல முடி எல்லாம் போகவே போகாதுன்னு பின்னாடியே அஷ்டோத்திரம் வாசிச்சுண்டே வருவார். ஃபானை போடுங்கோன்னு பேச்சை மாத்தினாலும் , “ பாத்தியா, சொன்னேன் இல்லையா? அங்கே துடை, இங்கே துடைன்னு கண்டினுவஸா வெறுப்பேத்திண்டே அர்ச்சனையும் பண்ணுவார்.
10.”வாட்டர் பாட்டில்ஸ் எல்லாம் ரொம்ப நாள் வெச்சுக்கப்டாது. அதெல்லாம் ஃபுட் க்ரேட் இல்லை. 6 மாசத்துக்குள்ளே வங்கின எல்லாத்தையும் களையணும், ஏர் டைட் கண்டெயினர்ஸ்(!) உள்ளே வைக்கறது எல்லாமே டாக்ஸின்ஸா ஆயிடும் அதையும் களைஞ்சுடு” மாதிரியான பேச்சை கேட்டு கேட்டு எனக்கு போதும் போதும்ன்னு ஆயாச்சு.
இனி போற போக்கை பார்த்தா, தீப்பெட்டி, லைட்டர் எல்லாம் கேடு.. இனிமே நீ சிக்கி முக்கி கல் தான் யூஸ் பண்ணணும்ன்னு சொன்னாலும் சொல்லிடுவார்.. இப்போ சொல்லுங்க.. இவரை கற்காலமனிதன்னு நான் சொன்னது தப்பா?
21 comments:
கஸ்தூரி மஞ்சள் தேய்ச்சுண்டா கறையே ஆகாது அநன்யா அக்கா.
குங்குமம் தான் நான் வைச்சுக்கறேன். இந்த ஸ்டிக்கர் பொட்டு வியர்வையிலே கீழே விழுந்துடுச்சுன்னா, அப்புறமா நெத்தியிலே ஒண்ணுமே இருக்காது, குங்குமம் வழிஞ்சு பார்க்கக் கண்ணகி மாதிரி ஒரு கெட் அப் கொடுக்குமே/
ம்ஹ்ஹும், நைட்டி, மூச்! யோகா பண்ணறச்சே மட்டும், சல்வார், கமீஸ்.
இது வரை ரங்க்ஸை நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். என்ன இருந்தாலும் நம்ம கு.ப.த. ஆச்சே. மிச்சத்துக்கும் இதோ வந்துண்டே இருக்கேன்.
ஹிஹிஹி, நான் ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் தோசை வார்த்துப் பாருங்க அநன்யா அக்கா. அந்த தோசைக்கு ஈடு, இணை உண்டோ! நான் இப்போவும் இட்லியைத் துணி போட்டு இட்லிச் சட்டியில் வார்ப்பது வழக்கம்.
அப்புறமா இந்த விறகு விஷயம், அம்பத்தூரிலே இன்னமும் விறகுக்கடை இருக்கு. தொலைபேசி உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கவா?
கூடுதல் தகவல்: நேத்திக்கு அடை இரும்புக்கல்லில் தான் தே.எண்ணெய் ஊத்திப் பண்ணினேனாக்கும்! ம்க்கும்! தே. எண்ணெய் கொலஸ்ட்ரால்னு கண்டு பிடிச்சவர் யாரு?
ஹாஹா, அக்வா கார்ட் போட்டுடுங்க. கேனாவாது,பானையாவது! சேச்சே, அக்வா கார்ட் தண்ணியைப் பானையிலே ஊத்திக் குடிக்கலாம். அப்படித் தான் குடிக்கிறோம். விளாமிச்சை வேர் போட்டு.
மெலமைன் தட்டுக்களை யாரானும் வந்தாத் தான் பயன்படுத்தறது. ஹிஹிஹி இது வரை ரங்க்ஸுக்கு ஆஹா,ஓஹோ, பேஷ், பேஷ்
ஹும், என் புடைவை எல்லாம் இன்னமும் கையாலே தான் துவைக்கிறேன். ரங்க்ஸோடதை மட்டும் வாஷிங் மெஷினிலே போடறேன். முன்னாடி கொஞ்சம் சோப் போட்டு ஊற வைச்சுட்டு மெஷினில் போடுங்க. அப்புறமாத் துணி பளிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், என்றாலும் இந்த வாஷிங் மெஷின் ஆட்டோமாடிக் என்றால் கொஞ்சம் பிரச்னை தான். செமி தான் பரவாயில்லை. பல வீடுகளிலும் ஆடோமாடிக் வாஷிங் மெஷினாலே எல்லாரோட வேட்டியும் கலர், கலரா இருக்கிறதைப் பார்த்துட்டு, நான் திட்டவட்டமா செமியே போதும்னு சொல்லிட்டேன். நாம தான் செமியா இருக்கணுமா? அதுவும் இருந்துட்டுப் போகட்டுமே! எப்பூடி???
ஹிஹி, இந்த வயசிலே குனிஞ்சு நிமிர்ந்து செய்யலைனா, அப்புறமா எங்க வயசிலே கஷ்டப்படணுமே அதுக்காகச் சொல்றார்! ஹூம், உங்க வயசிலே நானும் எல்லாம் தான் செய்ஞ்சேன். ஆனாலும் இந்த மாதிரிக் குனிஞ்சு துடைக்க முடியலை தான்! :(((( அதுக்காக நீங்களும் மாப் வைச்சுக்கணும்னு சொல்ல முடியுமா என்ன???
இதுக்குக் கொஞ்சம் சீரியஸான பதில்! அதென்னமோ வாஸ்தவம் தான் வாட்டர் பாட்டில் எல்லாம் ரொம்ப நாள் வைச்சுக்கத் தான் கூடாது. எல்லாத்தையும் முதல்லே தூக்கிப் போடுங்க. ரங்க்ஸ் சொன்ன எல்லாத்திலேயும் இது ரொம்பவே நன்மையானது. ப்ளாஸ்டிக்கெல்லாம் ரொம்ப நாளுக்கு வேண்டாம். ஒரே வாட்டர் பாட்டிலை வைச்சுத் தண்ணீர் குடித்து வந்த ஒரு ஐடி பொண்ணுக்குக் கான்சர் வந்து,.....வேண்டாம், ரெண்டு நாள் முன்னே தான் படிச்சேன். அந்த வாட்டர் பாட்டிலில் வெயிலின் கிரணங்கள் பட்டு கெமிகல்ஸ் எல்லாம் டாக்ஸினா மாறி......... உண்மையில் நடந்ததுனு சொன்னாங்க.
very health conscious and hygienic person...why you are blaming him.
மாமி ஒரு விஷயம் சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆமாம்டா.. பிரதாப்.. அவர் சூப்பர் மேன்.
ஆனாலும் மாமி, அந்த செமி மேட்டர் நேக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு கேட்டேளா? :))) சூப்ப்ப்ப்ப்பர்
ஆல் யுவர் பாயிண்ட்ஸ் ஆர் நோட்டட் ட்ளா?
//ஆனாலும் மாமி, அந்த செமி மேட்டர் நேக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு கேட்டேளா? :))) //
yakkoovvvvvv,சரியான கு.வி. போங்க நீங்க. முதல்லேயே அதைக் கவனிப்பீங்கனு நினைச்சா............. :)))))) சாவகாசமாச் சொல்றீங்க!
//சூப்ப்ப்ப்ப்பர்
ஆல் யுவர் பாயிண்ட்ஸ் ஆர் நோட்டட் ட்ளா?////
ஹிஹிஹி, ட்டோம், ட்டோம், தாங்கீஸ், நன்னி ஹை!
ரொம்ப ரொம்ப சரி. (நான் அவரை சொன்னேன்)
கண்ணை மூடியுண்டு எல்லாரும் அவருக்குத் தான் சப்போர்டுவீங்கன்னு நன்னா தெரியுமே நேக்கு!
பரவாயில்லையே..... இதெல்லாம் எப்படி சாத்தியமாக்கறார் அவர்? வியக்கிறேன்!
light and interesting!
http://kgjawarlal.wordpress.com
இதை கீதா சாம்பசிவம் எழுதியிருப்பாங்கன்னு தோணுதே? அனன்யா பேரை மட்டும் போட்டுக்கிட்டாங்களா?
நான் ஸ்டிக் விட கல்லில் தோசை பெடர் என்பது மை டேக்கும் கூட. ஆனால் நானே அரைச்சு நானே கல்காய்ச்சி தோசை வார்த்து நானே சாப்பிடுறாதால நோ பிராப்லம்.
நல்லதைத் தானே சொல்றார்....
பாவம் அவர். உங்களுக்கு நல்லது நினைக்கிற அவர இப்படி கலாய்க்கறேளே!
ஸ்ரீராமண்ணா, உங்க கூட டூ!
ஜவஹர்ஜி, நீங்க என் ப்ளாகுக்கு வந்ததே என் பாக்கியம், தாங்க்யூ!
அப்பாஜி, இல்லவே இல்லை, சத்தியமா, நானே சிந்திச்சு எயுதின வாக்கியங்கள் இவையெல்லாம்.
வெங்கட்ஜி, இதெல்லாம் உங்களுக்கு ஓவராத்தெரியலை? போஸ்டு போட்டுட்டு திரும்பினா, ஊர் ஒண்ணு கூடிருச்சுய்யா! என்ன கொடுமை இது சரவ்?
கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...! (அவர்) ஹிஹி...
இந்த வாட்டி, ஐயம் ஸோ ஸாரி, பத்துக்கு 6 பாயிண்ட்களில் நான் ரங்கு பக்கம்.
ஆனாலும் எனக்கொரு சந்தேகம்: அவருக்கு வாஷிங் மெஷின், மாப் பிடிக்காதுன்னு நீங்களா கையால தொவைக்கறது, குனிஞ்சு துடைக்கறதெல்லாம் செய்றீங்க? டூ பேட்!! இது சரியில்லியே? நீங்க மறுபடி அபுதாபி வாங்கோ, நான் டிரெயினிங் தர்றேன் - உங்களுக்கு!! :-)))))))
சூப்பர் ரைட்டப்! எகொஆத்துக்காரரே இது?ன்னு கேளுங்க...!
haiyo ! ellathulayume en thalai maatriye irukkaare unga rangs um. ivaroda naan padara paadu irukke. : ((
kuzhanthaigal appakku robo, singam nnu ellam per vachu kindal panrathugal.
yethapati avar kavalappattar. ennai aati vaikkum remote control avarthaan.
Post a Comment