Pages

Monday, September 30, 2013

விஜயவாடா விசும்பல்ஸ்


விஜயவாடா விசும்பல்ஸ்:

அவளுக்கு 7 வயசு தான் எனக்கு 10 வயசு. நான் ஒரு வருஷம் வெயிட்டீஸ் பண்ணி ரெண்டாவது வாட்டியா 3வது படிச்சுட்டு, இப்போ 5வது படிக்கறேன். (பாஸ் தான், இருந்தாலும் போடியில் ஸ்டாண்டர்ட் போறாதாம், விஜயவாடாவில் தான் மிகவும் ஹைஐஐ ஸ்டாண்டர்டாம் மறுபடியும் பாஸ் பண்ண பாடத்தையே வேற ஊர்ல வெச்சு சேர்த்தாச்சு - மை மதர் தெரஸா) அவள் யூ கே ஜீ யோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டோ..

ச்செய்த்தன்யா பப்ளிக் ஸ்கூல் விஜயவாடாவிலேயே.. சரி இல்லை.. க்ருஷ்ண லங்காவிலேயே.. சரி சர்வீஸ் ரோடு பக்கத்திலேயே.. அதெல்லாம் வாண்டாம். ஒரு குட்டி ஸ்கூல். மை நைனாவின் அலஹாபாத் பேங்க் குவார்ட்டர்ஸுக்கு மிக மிக அருகில் இருந்தது. எங்கேயா? ஸ்கூல் கிரவுண்டு ஃப்ளோர்..வீடு ஃபர்ஸ்ட் ஃப்ளோர். அம்மாம்பெரிய இஸ்கோலு! அக்காங்!

தினமும் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் கெக்கே பிக்கேன்னு இருக்காளேன்னு மை மதர் தெரஸாவுக்கு மூக்குல வேர்ந்திங்.. அண்டு கொண்டு போயிங் அண்டு ஜாயினிங் தி அப்போதைய ஃபேஷன் ஹிந்தி ட்யூஷன்ஸ். ”பிராத்மிக் ராஸ்துந்தண்டீ”ன்னு சொல்லிட்டா மிஸ்! செம்ம கடுப்பு. "அவ என்ன சொல்றது. நான் ராய மாட்டேம்மா"ன்னு சொல்லிப்பார்த்தேன். அப்பெல்லாம் மை மதர், ”எதிர்த்தா பேசுறே”ன்னு பளார் பளார்ன்னு அறைஞ்சிங்ஸ் ஒன்லி.. இப்போத்தான் சாந்த ஸ்வரூபி மதர் தெரஸா அவதாரம் டேக்கிங்ஸ்! சரி விஷயத்துக்கு வரேன்.

தினசரி சாயந்திரம் 4.15க்கு ட்யூஷனுக்கு போற வழியில் எங்க பில்டிங்குக்கு பக்கத்திலேயே ஆந்திரா பாங்க் கிட்டக்க ஒரு டீக்கடை இருந்தது. ’பே....’ ன்னு பிராக்கு பாத்துண்டே போவேனா.. அந்தக் கடையில அடுக்கி வெச்சிருந்த ஜாடிகள்ல Croissant மாதிரி ஏதோ ஒரு சமாச்சாரம். அதுக்குள்ளே பச்சையா, வெள்ளையா ஏதோ ஒண்ணு. அதை திங்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. மை மதர் தெரஸா அடிச்சிங்ஸ்.. அதுனால கேட்கலை.

தங்கைசனியும் சாரி.. தங்கைமணியும் கூடவே வரும் ஹிந்தி டியூஷனுக்கு. சும்மா இன்ஸ்பெக்‌ஷனுக்கு மை மதர் அனுப்பிங்ஸ் ஹர். போலீஸ் உத்தியோகத்துக்கு தான் அது லாயக்குன்னு நினைச்சுக்குவேன். நான் டியூஷன்ல எழுதாம வேடிக்கை பார்த்தது, இன்னொரு ஸ்டூடெண்டோட ஓடிப்பிடிச்சு வெளாண்டது எல்லாத்தையும் வந்து பிராம்ப்டா போட்டுக் 

கொடுத்து எனகு அடி வாங்கிக் கொடுத்திடும் அது.




இவ்வளோ செக்யூரிட்டி பிரச்சினைகளுக்கிடையில் எனக்கிது தேவையில்லை தான். பக்கித்தனம், ஆசை யாரை விட்டுது? ஒரு நல்ல சுபயோக சுபலக்னமா பார்த்து, அந்த சுப காரியத்தை செஞ்சேன். ஒரு 50 பைசாவை அலமாரியில இருந்து நைஸா எடுத்து புக்குக்குள்ளே வெச்சுண்டேன். அதே நாலேகால், அதே ரோடு, அதே டீக்கடை. “இருடீ நம்மா”ன்னு அதை ரோட்டிலேயே நிக்க வெச்சுட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைச்சுண்டு ”இதெந்த்தா?”ன்னு அந்த ஜாடியை காட்டி கேட்டேன். (அருஞ்சொற்பொருள் - இது எவ்வளோ?) அடடே.. ஒரு குட்டி தேவதை வந்திருக்கே நம்ம கடைக்குன்னு அகமகிழ்ந்த அந்த கடைக்காரர், ”பாவலா (paavalaa)நே...தீஸ்க்கோம்மா"ன்னு ரெண்டை எடுத்து என் கையில அதிவாத்ஸல்யத்துடன் கொடுத்துட்டார். (”காலணா தான், இந்தா எடுத்துக்கோம்மா”)

திரு திருன்னு முழிச்சுண்டே ஒண்ணை வெறுப்புடன் என்னை நோக்கிய தங்கை சனிக்கு கொடுத்துட்டு, வேகமாக அந்த ட்ரீம் கம் ட்ரூவை ரசித்து கடித்து சாப்பிடும்போது சுவர்க்கம் இது தான் போல்ருக்குன்னு நினைச்சுண்டேன். மீண்டும் கடைக்காரர் வந்து, “டீ தாகுத்தாராம்மா?”ன்னு கேட்டார்.( அருஞ்சொற்பொருள்: டீ குடிக்கறீங்களா குழந்தைகளா) ”ஹேன்? டீயா?” ன்னு நான் முழிக்க, தங்கைசனி முறைக்க, ”மீ நான்னகாரு ரோஜு இக்கடேனம்மா டீ தாகுத்தாரு”ன்னு (அருஞ்சொற்பொருள் - ”உங்க நைனா டெய்லி இங்கே தாம்மா வந்து டீ குடிப்பார்”) அவர் எங்களை கன்வின்ஸ் பண்ண, சரின்னு மண்டையை ஆட்டினேன்.

மை மதர தெரஸா போடும் லாஸா லம்ஸா சாக்லெட் டீ மாதிரியெல்லாம் வருமா என்னன்னு நினைச்சுண்டே அங்கே நின்னு அந்த மைதா சமாச்சாரத்தையும் முழுவதும் சாப்பிட்டு டீயும் குடிச்சுட்டு 50 காசையும் கொடுத்துட்டு (இன்னும் 50 காசு கொடுக்கணும் அவருக்கு, ”பரவாலேதுலேம்மா, மீ நான்னகாரு இஸ்தார்லே”ன்னுட்டார் அவர் - அருஞ்சொற்பொருள்: பரவாயில்லையாம் மை நைனா குடுப்பாராம் பாக்கி 50 பைசா)

ஆச்சா.. அந்த க்ரீம் பன்னோ என்ன இழவோ அதைத்தின்ன சந்தோஷத்தில் மிதந்து டியூஷனில் பூரா அதையே நினைத்து அகமகிழ்ந்து, அடிவாங்கி, உதை பட்டு வீட்டுக்கு போனா.. என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்குமே? அதே தான். என் உடன் பிறந்த எட்டப்பி, நேராக மை மதர் தெரஸாவிடம் போட்டுக்குடுத்துட்டள். “அம்மா இவ டீக்கடையில போய் டீயெல்லாம் வாங்கி குடிக்கறாம்மா” ”அடிப்பாவி சண்டாளீ.. நீயுந்தானே டீ குடிச்சே” ன்னு நான் நினைக்கறதுக்குள்ளே.. சர்ர் சர்ர் சர்ர்ன்னு முதுகில் 3 தோசை விழுந்தது. மதர் தாடகா தான்.. சாரி தெரஸா.. ”டீயா குடிச்சே? டீ குடிப்பியா”?ன்னு கத்தி ரகளை பண்ணி மொத்து மொத்துன்னு மொத்தினாள். ”இல்லேம்மா.. இனிமேல் காஃபியே குடிக்கறேன்மா”ன்னு நான் அழுதுண்டே சொன்னது யார் காதுலேயுமே விழலை!

“காசு எங்கேந்து கிடைச்சது”ன்னு கேட்க (நானெல்லாம் தான் பேசவே தேவையில்லையே.. எட்டப்பி எதுக்கிருக்கா.. எடுத்துக் கொடுத்தா) “அந்த அலமாரியில நீங்க வைக்கறதை இவ புக்குக்குள்ளே திருடி, வெச்சுண்டு எடுத்துண்டு வர்றாம்மா.. “ ஆச்சு, நான் என்னமோ பிறவியிலேயே திருடி மாதிரி ஒரு ருத்ர பார்வை, விஜயவாடாவில் கால் குத்திய தினத்திலிருந்து நான் அந்த டீக்கடையின் ரெகுலர் கஸ்டமர்ங்கற ஹோதாவுல கற்பனை பண்ணிண்டு அந்த விளாசு விளாசியிருக்கா மை மதர் தாடகா. அன்னிக்கி வாங்கின மொத்து இருக்கே இப்போ வரைக்கும் மறக்கவே மறக்காது.

இதை பஞ்சாயத்து பண்ணி வைக்க வந்த மை நைனாவுக்கும் கடுங்கோபம். சனியன், கழிசடை இன்ன பிற விலங்குகளின் பெயர்களைச் சொல்லி எனக்கு அஷ்டோத்திரம் வாசித்தார். எனக்கானா எக்கச்செக்க கோபம்ஸ். பின்னென்னங்கறேன். “மீ நான்ன காரு ரோஜூ இக்கடேனம்மா டீ தாகுதாரு”ன்னு அவர் சொன்னதும் தானே நான் குடிச்சேன்? இந்த டயலாக்கை நைனாவிடம் சொல்லியே விட்டேன். மை மதர் தாடகா உடனே மை நைனாவை ஒரு உக்கிரப் பார்வை பார்த்தார். ஹை ஜாலி அனதர் ஆக்‌ஷன் ரீப்ளே ஆகும்ன்னு ஆசையா பார்த்தா, ”ச்சே.. நான் எதுக்கு அங்கே போய் டீ குடிக்கப் போறேன்? பொய் வேற பேச ஆரம்பிச்சிருக்கா இவ” ன்னு சொல்லி அவசரமா டாப்பிக்கை மாத்தி, விட்ட இடத்துல இருந்து அஷ்டோத்திரத்தை தொடராம, மறுபடியும் மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

அவர் அஷ்டோத்திரம் வாசிக்க மை மதர் தாடகா எனக்கு ”அலங்காரம்” பண்ணிவிட திருட்டுத்தனமா என்னை மாட்ட வெச்ச மை ஜென்ம விரோதி தங்கை சனி கமுக்கமாக அடுத்த ரூமுக்கு போயாச்சு!

தங்கையுடையாள் டீ குடிக்கக் கூட அஞ்சணும் போல்ருக்கே!!!

11 comments:

திவாண்ணா said...

ஒழுங்கா டீல் போடறதில்லையா? சும்மா வாங்கி கொடுத்துட்டு அப்புறமா போட்டுக்கொடுக்கறான்னு பொலம்பினா என்ன அர்த்தம்?
:-))

'பரிவை' சே.குமார் said...

தங்கையுடையாள் டீ குடிக்கக் கூட அஞ்சணும் போல்ருக்கே!!!

ஹா.... ஹா.... ஹா...

அது சரி...

'பரிவை' சே.குமார் said...

தங்கையுடையாள் டீ குடிக்கக் கூட அஞ்சணும் போல்ருக்கே!!!

ஹா.... ஹா.... ஹா...

அது சரி...

Geetha Sambasivam said...

நான் ஒரு வருஷம் வெயிட்டீஸ் பண்ணி //

ஒரு வருஷம் கோவிந்தா, கோவிந்தா, ஓகே



//ரெண்டாவது வாட்டியா 3வது படிச்சுட்டு, இப்போ 5வது படிக்கறேன்.//

இதைத் தவிர மூணாப்பு ரெண்டு வாட்டியா? நல்ல அஸ்திவாரம் ஸ்ட்ராங்காப் போட்டிருக்கீங்க அநன்யா அக்கா. ஹையா, அஞ்சாப்பும் ரெண்டு வாட்டியா? ஜாலிலோ ஜிம்கானா!

//அவர் அஷ்டோத்திரம் வாசிக்க மை மதர் தாடகா எனக்கு ”அலங்காரம்” பண்ணிவிட திருட்டுத்தனமா என்னை மாட்ட வெச்ச மை ஜென்ம விரோதி தங்கை சனி கமுக்கமாக அடுத்த ரூமுக்கு போயாச்சு! //

ஹாஹாஹா, அநன்யா அக்கா டீ குடித்த புராணம், ஜூப்பரு!

//தங்கையுடையாள் டீ குடிக்கக் கூட அஞ்சணும் போல்ருக்கே!!!//

அது!!! அந்த பயம் இருக்கட்டும்.

Geetha Sambasivam said...

யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பதிவு போணியாகலையேனு கேட்ட கமென்ட் எங்கே போச்சு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதையும் போடுங்க. :)))))

ADHI VENKAT said...

ஹா..ஹா..ஹா...

அமுதா கிருஷ்ணா said...

ஓ அப்பவே 50 காசெல்லாம் திருடி இருக்கீங்க.பெரிய ஆளுதான்..நானெல்லாம் 10,25 பைசா மட்டும் தான்!!

கே. பி. ஜனா... said...

// “மீ நான்ன காரு ரோஜூ இக்கடேனம்மா டீ தாகுதாரு”ன்னு அவர் சொன்னதும் தானே நான் குடிச்சேன்? இந்த டயலாக்கை நைனாவிடம் சொல்லியே விட்டேன். மை மதர் தாடகா உடனே மை நைனாவை ஒரு உக்கிரப் பார்வை பார்த்தார். ஹை ஜாலி அனதர் ஆக்‌ஷன் ரீப்ளே ஆகும்ன்னு ஆசையா பார்த்தா, ”ச்சே.. நான் எதுக்கு அங்கே போய் டீ குடிக்கப் போறேன்? பொய் வேற பேச ஆரம்பிச்சிருக்கா இவ” ன்னு சொல்லி அவசரமா டாப்பிக்கை மாத்தி, விட்ட இடத்துல இருந்து அஷ்டோத்திரத்தை தொடராம, மறுபடியும் மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிச்சுட்டார்.//
ஐயோ பாவம்!

இராஜராஜேஸ்வரி said...

விஜயவாடா விசும்பல்களுக்கு அப்புறம்
தும்கூர் தும்மலா????

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha super... konjam late thaan... but full'aa padichen...:)

தமிழ் பையன் said...

அருமை

Related Posts with Thumbnails