Pages

Monday, June 9, 2014

அல்பாயுசில் போன எம்பிராய்டரி எக்ஸைட்மெண்ட்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி செம டிப்ரெஷன். என்ன பண்ணினாலும் தீரலை. ஒரு நாளைக்கி உக்காந்து யூட்யூபில் கொஞ்சம் டெக்கரேட்டிவ் ஸ்டிச்சிங் பத்தி பார்த்துண்டு இருந்தேன். பளிச்சுன்னு ஒரு பல்பு எறிஞ்சது மனசுக்குள்ளே. (ஆமாமா அதுக்கும் பல்புன்னு தான் பேர், ஏன்னு கட்டுரையின் இறுதியில் தெரிஞ்சுப்பீங்க! )

 ரொம்ப காலமா, நட்ராஜ் ப்ளாஸ்டோ இரேஸர் மாதிரியான ப்யூர் ஒயிட் குர்த்தா ஒண்ணு வெச்சுண்டு பஜனை பண்ணிண்டு இருந்தேனா, பட்டன் டப்பாவை துழாவினப்போ ஒரு எம்ப்ராய்டரி நூல் கிடைச்சது! ஒரே ஒரு கலர் எப்படிண்ணே போதும்ன்னு மைண்ட் வாய்ஸ் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்க, உடனே எடு வண்டிய.. நேரா ஒரு ஃபான்ஸி கேலரியாம் - அங்கே போய் வித விதமான கலர் நூல்களை வாங்கிக்குவிச்சேன்.
என் செலக்‌ஷன் எல்லாம் எப்பவும்போல் பிரமாதம் தான்! அந்தக் கடை தான் சரியில்லை. சொல்லிவெச்சாப்புல எல்லாமே எண்ணெயில் முக்கின மாதிரி கலர்கள் தான் வெச்சிருந்தான். அது என் தப்பா? நானும் ஒரு 15 செட்டுகளை வாங்கிண்டேன். முக்கால் வாசி புத்தம் புதுசாக போட்ட ஃப்ரெஷ்ஷ்ஷான சாணிக்கலர் & கழுதைக்கலர் மட்டும் தான் பளிச்சுன்னு இருந்தது. பாக்கி கலர்கள் எதுவுமே மெச்சிக்கற மாதிரி இல்லை!

கூடவே ஒரு எம்பிராய்டரி ஃப்ரெம், த்ரெட்கட்டர்(கொஞ்சம் ஓவராச்சோ?) எல்லாமும் வாங்கினேன். எப்போவுமே எது செஞ்சாலும் நான் பெர்ஃபெக்‌ஷன் பார்ப்பேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே? அதுக்குன்னு ஊசி இருக்கான்னு கேட்டப்போ கடைக்காரர் முறைச்சார். பைக்கை எடுத்துண்டு ஓடியாந்துட்டேன்.

யூட்யூபிலும் ப்ளாக்களிலும் டுட்டோரியல்களை பிரிச்சு மேய்ஞ்சேன். அழகழகா தையல்களை நொடிப்பொழுதில் காலணா செலவில்லாமல் கற்றுத்தேர்ந்தேன்னு சொல்லிக்க ஆசைதான். ஹிஹி.. எங்கே.. நமக்கெல்லாம்.. நான் தான் க்ராஃப்ட்ஸ் க்ளாஸ்ல புலின்னு முன்னமே சொல்லியிருந்தேனே?

கழுத்தை ஒட்டி ரெண்டு கலர்ல செயின் ஸ்டிச் போட்டேன். ஆஹா.. என்ன ஒரு கலைநயம்? நேரத்தை உருப்படியாக க்ரியேட்டிவாக செலவு செய்யறதை விட்டுட்டு என்ன சதா ஃபேஸ்புக் வேண்டிக்கிடக்குன்னு மைண்ட்வாய்ஸ் முதன் முறையாக என்கரேஜிங்காக பேசித்து. உடனே அதை சிரமேற்கொண்டு, நானும் முழுமூச்சாக எம்பிராய்டரியில் இறங்கினேன். ரங்ஸும் அடடே, வெரி குட் என்று சம்பிரதாயத்துக்காக சொல்லி வைக்க,  அப்படியே  நான் வான வெளியில் பறந்தேன்!

ரெண்டே நாள்ல சிங்கர் ஃபேஷன் மேக்கர் மெஷின் வாங்கி ட்வின் நீடில் ஸ்டிச்ல கலக்கற மாதிரி கனவு கண்டேன். டிஸ்க் மாத்திபோட்டு மெட்டிக்யுலெஸாக வொர்க் பண்ணி அப்ளிக் வொர்க்கில் அவார்டு வாங்கவும் செய்தேன்! வெள்ளைக் குர்த்தாவில் கழுத்தில் மட்டும் இல்லாமல் கைகளின் ஓரத்திலும் செயின் ஸ்டிச்சை போட்டேன். என் கண்ணையே என்னால நம்ப முடியலை.  (”ஒரு 3 வயசுக்குழந்தை கூட செயின் ஸ்டிச் போடும்,இதுக்கெல்லாமா இவ்ளோ பில்டப்பு”ன்னு சவுண்டு விடுபவர்கள் வெளிநடப்பு செய்யும் படி உத்தரவிடுகிறேன், ப்ளடி பிட்பாட்கேட்ஸ்)

கூகிளாரிடம் கெஞ்சிக் கூத்தாடி, இமேஜஸ்ல போய் ஒரு மாங்காய் டிஸைனை டவுன்லோடினேன். உடனே கற்பனைக்குதிரையை தட்டி விட்டு குர்த்தாவில் அதை பேனாவால் வரைந்து,  அதை அப்படியே எக்ஸ்டெண்ட் செய்தேன். என்னமோ ஃப்ரெஞ்ச் நாட்டாம். அதை மாங்காயைச் சுத்தி ஊசியின் கழுத்தை நூலால் 10 வாட்டி நெறித்து உண்டாக்கினேன். ஃப்ரெஞ்ச் நாட் என்னமோ குருவிச்சிக்கு படிஞ்சு ஆங்காங்கு முடிச்சு முடிச்சா விழுந்து அப்படி ஒண்ணும் பெரிய அட்ராக்டிவா எனக்கு தோணலை. ஹூம். இதுக்குப்போயா இவ்ளோ பில்டப்பு?

மார்வாடிக்காரர்கள் போடும் மருதாணி டிஜைன் மாதிரி மாங்காய்க்குள் ஃபில்லிங் பண்ணுவோம்ன்னு இருக்கறதுலேயே பளிச்சுன்னு இருந்த சாணிப்பச்சையால் கோணல் கோடுகளை போட்டு  நிரப்பினேன். என்ன அவசரமோ சாணிப்பச்சை ரெண்டு கண்டும் அதுக்குள்ள தீர்ந்து போயிடுத்து. அப்பு”றம் தான் யாரோ சொன்னாங்க அடியில எல்லாம் நூலை இழுக்க கூடாதாம். அப்படியே எட்ஜ்ல விட்டு வெளியெ எடுத்தாத்தான் சிக்கனமாவும் எஃபீஷியண்டாவும் எம்பிராய்டரி போடலாமாம். முன்னமே சொல்லியிருக்க வேண்டாம். நான்ஸென்ஸ்! சரி சாயந்திரம் கடைக்கி போகலாம் அதே கலர் வாங்லாம்ன்னு நினைச்சுண்டேன். அதுக்குள்ள அரக்கு நூலும் அல்பாயுசுல பிராணனை விட்டுடுத்து.


நேரா கடைக்கு போனேன். அன்னிக்கி அந்த கேலரி லீவாம். இன்னொரு கடையில் எக்கச்செக்க தெலுங்குப் பட ஹீரோவின் ட்ரெஸ் கலர்கள் கிடைச்சது! பளிச்சு பளிச்சுன்னு அப்படி ஒரு பிரைட் கலர்ஸ். மஹா சந்தோஷம். அப்படியே அள்ளீட்டேன்ல? என்ன பிரயோஜனம்? அந்த சாணியும் அரக்கும் மட்டும் கிடைக்கவேயில்லை!

மாங்காய் ஓட்டைப்பல்லுடன் சதா என்னை பார்த்து சிரிச்சுண்டே இருக்கு! ஸ்டோர் ரூம் கட்டிலின் மேல் போட்டு வெச்ச வெள்ளைக் குர்த்தா தூசு படிஞ்சு இப்போ பிரவுன் குர்த்தாவா ஆயிண்டு வருது! ஹூம்! என்ன பண்ணலாம்? மொத்தமா பார்த்தேன்.

இந்த எம்பிராய்டரி ஒர்க் அப்பிடி ஒண்ணும் சூப்பர்ன்னு சொல்லிக்கற மாதிரி இல்லையேன்னு மைண்ட்வாய்ஸ் சொல்லித்து.. ஏன் இப்பிடியெல்லாம் நேரத்தை வேஸ்ட் பண்றே? பேசாம ஃபேஸ்புக்ல லாகின் பண்ணிடு. அதான் பெஸ்டுன்னு. என் மைண்ட் வாய்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும். தெலுங்கு பட ஹீரோ ட்ரெஸ் கலர்ஸ் எம்பிராய்டரி நூல்ஸ் யாருக்காவது வோணுமா? ப்ளீஸ் கால் மீ - இல்லாட்டா மதியம் Cell foneஐ Sell foneஆ மாத்திடுவேனாக்கும்!

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா இங்கேயும் இப்படி அரைகுறையா தலையணை உறையில் எம்பிராய்டரி, கால் இல்லாத கரடி பொம்மை,டாலர் இல்லாத பாசி மணிகள்,ஃப்ரேம் போடாத க்ளாஸ் பெயிண்டுகள், அரைகுறை குரோஷா வொர்க்குகள் என்று நிறைய இருக்கே!!!

அப்பாதுரை said...

இதுவே புது டிசைனா தான் இருக்கு.
பல்லிருக்க பிரிதொரு த்ரெட் கட்டர் தேவையோ?

Ananya Mahadevan said...

போங்க சார். எச்சில் பண்ணினா எங்காத்துல வைவா!

Ananya Mahadevan said...

அமுதா உங்கள் பின்னூட்டங்களை செம்மையா ரசிச்சுண்டு இருக்கேன். தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள். போஸ்டை விட ரசனையா எப்படி பின்னூட்டம் போடுவதுன்னு ஒரு க்ளாஸ் எடுத்தா தேவலை!

வெங்கட் நாகராஜ் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி!

இந்த மாதிரி பாதி பாதியா டிசைன் பண்ணி நிக்கற நிறைய துணி வீட்டுல பீரோல இருக்கு! இடம் பத்தல, இன்னொரு பீரோ வாங்கணும்னு சொல்லிண்டு இருக்கா! :)

Related Posts with Thumbnails