இந்த டாப்பிக் பத்தி நானும் ரங்குவும் எங்கள் நீளமான அபுதாபி - துபாய் பயணங்களின் போது விவாதிப்பதுண்டு.
முதல்ல சிச்சுவேஷன்னா என்ன? படத்தில் ஒரு முக்கிய நிகழ்வை காட்டும் ஒரு அட்டவணை மாதிரி. இப்போ வரும் படங்களில் பெரும்பாலான படங்கள் டெம்ப்ளேட் சிச்சுவேஷன்களை யூஸ் பண்ணிண்டு இருக்கு. லைக் ஹீரோ இண்ட்ரோடக்ஷன், லவ் சாங், லவ் சாங், லவ் சாங், இன்னோரு இத்துப்போன லவ் சாங் கடைசியில க்ளைமாக்ஸ் கிட்டக்க வரும்போது ஒரு அரை குறை குத்து சாங் இப்படி வெச்சுண்டு இருக்காங்க.
சில வருஷங்களுக்கு முன்னாடி வரை, வழக்கமான லவ் சாங், பெத்தோஸ் சாங், அம்மா செண்டிமெண்ட் சாங், நாட்டுப்புற ஃபோக் சாங், ஜெயமாலினி சாங், தத்துவ சாங் இதைத்தவிர தமிழ் சினிமாவுல வேற சாங்கே இல்லையா?ன்னு தமிழ்மக்கள் தவிச்சுண்டு இருக்கும்போது தான் சில வித்தியாசமான சிச்சுவேஷன்களிலும் சாங்ஸ் போடலாம்ன்னு ஒரு புதுமையான கான்செப்டு புகுத்தப்பட்டது.
மறுபடியும் சொல்லிடுறேன்.. இந்தப்பதிவு இசையைப்பத்தியோ பாடலாசிரியரைப்பத்தியோ, பாடகர்களைப்பத்தியோ இல்லை.. எந்த இடத்தில் பாட்டு புகுத்தப்படவேண்டும்னு இருந்த ஒரு விதிமுறையை தகர்த்தெறிஞ்சு, எங்களை கவர்ந்த சில பாடல்களைப்பத்தி மட்டுமே..
இப்படிக்கூட பாட்டுக்கள் சேர்க்கலாமோன்னு எல்லாருக்கு ஒரு ஞானோதயம் வந்ததுன்னு சொன்னா அது மிகையாகாது.தடுக்கி விழுந்தா பாட்டுன்னு இருந்த காலம் மாறினதே பெரிய பாடுதான்னாலும், கொஞ்சம் கூட மாற்றமே இல்லாம எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரியான சிச்சுவேஷன் பாடல்கள் வர ஆரம்பிச்சப்போ கொஞ்சம் அலுப்புத்தான் தட்டித்து. ”வாத்யாரே, இப்போ பாட்டு வரும்பாரு”ன்னு ஜனங்க ஊகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இந்தப்புதுமையான சிச்சுவேஷன் சினேரியோவுல அனேகமாக முக்கால்வாசி எல்லாமே பாலச்சந்தர் கமலஹாசன் கூட்டணியில் வந்திருக்கும் இல்லாட்டி பாலச்சந்தர் படங்களிலா இருக்கும்.
இங்கே இந்தப்பதிவுல் நான் சொல்ல விரும்புவது என்னை மிக மிக கவர்ந்த சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்
அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா?
கம்ப்ளெயிண்ட் பண்ற நோக்கத்தோட எழுதப்பட்ட ஒரு அருமையான காமெடி பாட்டு. செளக்காரின துறு துறு நடிப்பும் ஸ்ரீகாந்தின் அசமஞ்சமான முகபாவங்களும் மிகவும் ரசித்தவை.
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
சினிமாவுல ஒரு ம்யூசிக் டைரக்டரும் ஒரு கவிஞனும் எப்படி ஒரு பாட்டை உருவாக்குறாங்களோ அதே மாதிரி இப்படி ஒரு தீம் வெச்சு,அதன் மூலமா கதாநாயகன் தன் லவ்வை சொல்றா மாதிரி கே.பி இந்த பாட்டை வடிவமைச்சார். புதுமையிலும் புதுமை. ஸ்ரீதேவியின் சூட்டிகையும், கமலின் நிஜக்கவிஞனுக்குரிய கற்பனாசக்தி நடிப்பும் அபாரம்! யாருக்குத்தான் இந்த பாட்டு பிடிக்காது. குலதெய்வம் கமல் காம்பினேஷன்ல அல்ட்டிமேட் பாட்டு. என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்ஸ்ல இடம் பிடிச்சு இருக்கும்.
என்ன சமையலோ?
மறுபடியும் கே.பியின் உக்தி. சமையல் மட்டுமில்லாம அதுக்குள்ளே சங்கீதத்தையும் அழகா சேர்த்து அறுசுவை உணவா பரிமாறி இருப்பாங்க. அந்தந்த ராகம் பேர் வரும்போது அந்த ராகம் உபயோகிச்சு இருக்காங்க. அழகிய தமிழ் மகனில் வரும் வலயபட்டி தவிலே பாட்டுக்கு எல்லாம் இந்தப்பாட்டு தான் முன்னோடியா இருக்கும். இதே மாதிரி அகத்தியர் படத்துல ராவணன் வீணை வாசிச்சுண்டே பாடுற பாட்டு கூட சாலஞ்சிங் தான்னாலும் ஒரு வித ஜனரஞ்சகமான சிச்சுவேஷன் சாங் இது. இசைக்கு இசையாச்சு, காமெடிக்கு கமல் மனோரமா தாரா ஆச்சு. வரிகளை மட்டும் லேசுல விட்டுட முடியுமா என்னா? தன் பங்குக்கு கவிஞர் (வாலி???) புகுந்து விளையாடி இருப்பார். ம ஸ லா... கரம் மசாலா... ப ப ப ப ப தா? பருப்பு இருக்குதா? த நி த நி த நி த நி தனியா இருக்கா? ஆஹா.. சூப்பர் வரிகள். சில சமயம் தேடி பார்ப்பதுண்டு. அவ்ளோ இஷ்டம். கமலின் வாழையிலை பெயிண்டு ஜோக்கு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்ச ஒண்ணு.
கனாக்காணும் கண்கள் மெல்ல...
இந்தப்படம் ரொம்ப சின்ன வயசுல பார்த்த படம். ஒண்ணும் நினைவில்லை. போன வருஷம் ராஜஸ்ரீயில டவுன்லோடு பண்ணி பார்த்தப்போ இந்த பாட்டு வந்த சிச்சுவேஷன் என்னை ரொம்பவும் பாதிச்சது. ஒரு மனச்சிதைவு ஏற்பட்ட பொண்ணோட எண்ணச்சிதறல்களை அப்படியே படம் பிடிச்சு சொல்லி இருப்பார். இதமான வெல்வெட் குரலில் குலதெய்வம் பாடி இருப்பார். ஒருவர் மற்றவரை மிஞ்சும் நடிப்பு. புகழ வார்த்தைகளே இல்லை.
கவிதை கேளுங்கள் - இது புன்னகை மன்னனில் வரும் இன்னொரு வித்தியாசமான சிச்சுவேஷன் சாங். ரேவதியின் நடனமும், இளையராஜாவின் இன்னிசையும் வாணியின் குரலும் மெய்மறக்கச்செய்யும். அடிக்கடி கெடியாரத்தை காட்டி ராத்திரி பூரா டான்ஸ் ஆடுறான்னு சொல்லி இருப்பாங்க. என்னுடைய மிக முக்கியமான ஃபேவரைட்.
இதே மாதிரி இன்னோரு பாட்டு அழகன்ல மரகதமணி இசையில குலதெய்வமும் சந்தியாவும் பாடிய சங்கீதஸ்வரங்கள் பாட்டு. டி.வி தான் தீம். சாயந்திரம் பேச ஆரம்பிச்சு டெல்லி அஞ்சல் (9.00PM) இத்துடன் நிறைவு 11.00? டீவியில் கிரெய்ன்ஸ், அப்புறம் காலை 7 மணிக்கு மீண்டும் தூர்தர்ஷன் லோகோ வரும் வரை இவர்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் தொடருதாம். பாலச்சந்தரைத் தவிர வேற யாராலும் இந்த மாதிரி தின்க் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்.
இந்த மாதிரி உங்களைக்கவர்ந்த சிச்சுவேஷன் பாட்டுக்களை பற்றி எனக்கு இங்கே பின்னூட்டமாவோ அல்லது அழகா ஒரு பதிவாவோ தெரிவியுங்களேன்.
Showing posts with label SPB. Show all posts
Showing posts with label SPB. Show all posts
Monday, June 14, 2010
Saturday, May 1, 2010
பிடித்த பாடகர்கள்
உங்க எல்லோருக்குமே தெரியும் என் குலதெய்வம் SPBன்னு. இவருடைய பல பாடல்கள்ன்னா எனக்கு உயிர். மண்ணில் இந்த காதல், அழகான ராட்சசியே, தீண்டாய் இப்படி லிஸ்டு போயிண்டே இருக்கும். இருந்தாலும் ஒரு பாட்டு மட்டுமே போடக்கூடிய சூழல். அதுனால என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டுன்னு சொல்லக்கூடிய இந்த பாட்டை போட்டுடறேன். ஃபேவரைட் சிங்கர், ஃபேவரைட் ஆக்டர், இப்படி எல்லாமா சேர்ந்து அமைஞ்ச பாட்டு தான் நீல வான ஓடையில்... ஆஹா.. கங்கை அமரன் இசைன்னு சமீபமாத்தான் தெரிஞ்சது. கலக்கிட்டார் போங்க.
ஷங்கர் மஹாதேவன். இவர் மிக அருமையான பாடகர். இருந்தாலும் பாவம் இப்போதெல்லாம் குத்து பாட்டு ஹீரோ இண்ட்ரோ சாங்குக்கு தான் இவரை அணுகுகிறார்கள். அது எனக்கு வருத்தமே. குலதெய்வம் மாதிரி மூச்சு விடாமல் இவர் பாடிய ப்ரெத்லெஸ் என்ற ஆல்பம் கேட்டு வாய்பிளந்தேன். நல்ல ஒரு தனித்துவம் வாய்ந்த குரலின் சொந்தக்காரர். எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாட்டு தான்.
சுஜாதா. இவங்க குரல் தேன்ல குழைச்ச பலாச்சுளை மாதிரி அப்படி ஒரு தித்திப்பு. இவங்களும் இதே டைப்பு சிரிச்ச முகம், அருமையான குரல் வளம், இசையறிவு, பாவத்துடன் பாடும் திறன் எல்லாம் படைத்தவர். என்னுடைய பெர்சனல் ஃபேவரைட்” உண்மை சொன்னால் நேசிப்பாயா” என்ற ஆய்த எழுத்து பாடல். இருந்தாலும் இவர் பாடினாலே ஒரு தனி ரிச்னஸ் கிடைத்து விடும் எந்த பாட்டுக்கும். எல்லாத்துக்கும் மேலே சிரிச்சுண்டே பாடுற மாதிரி இருக்கும். கேட்கும்போதே புத்துணர்ச்சி கிடைக்கும்.
உன்னிக்கிருஷ்ணன் இவர் பாட்டை முதன் முதலா கேட்டது காதலன் படத்தில் தான். கர்நாடக இசையிலிருந்து மிக எளிமையாக சினிமா இசைக்கு வந்து கோலோச்சியவர். காதலன் படத்துல வரும் ’என்னவளே’ பாட்டு சூப்பர் ஹிட் ஆனாலும் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களிடம் ரொம்ப கெட்ட பேர் வாங்கித்து. கடுமையான விமர்சனத்தால் பாதிப்படையாமல், உன்னி தன் சினிமா பாட்டு வாழ்க்கையும் கர்நாடக சங்கீத வாழ்க்கையும் நன்றாக சமன் செய்தார். அருமையான பாவங்கள், தேர்ந்த தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் இந்த பாடகரின் சொத்து. ஏ.ஆர்.ஆரின் இசையில் இது எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் பாடல்களின் ஒன்று. சில சமயம் அழுவதுமுண்டு. வைர வரிகளாச்சே!
என்ன தான் ஐஞ்சு பாட்டு தான் போடலாம்னாலும் என்னால இந்த பாட்டு போடாம இருக்க முடியலை. அருமையான இசை, உன்னி பாம்பே ஜெயஸ்ரீ குரலில் குறுந்தொகை மாதிரியான பாடல் வரிகள் ரசிக்காமல் இருக்க முடியாது.
இத்துடன் இந்த பகுதி நிறைவடைந்தாலும் இன்னும் பல பாடகர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இந்த் மாதிரி ஐஞ்சே ஐஞ்சு பாடகர்களையும் பாடல்களையும் தொகுத்து வழங்கச்சொன்ன கார்த்திக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :)) இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)
நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது,
பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா
எங்கள் ஸ்ரீராம் அண்ணா
பொற்கொடி
ஜெகன் நாதன்
ட்ரீமர்
பத்மனாபன் அங்கிள் ச்சே ச்சே, அண்ணா
திருமதி கீதா சாம்பசிவம்
அப்பாவி தங்கமணி
R.கோபி
மீண்டும் இதே மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை & வடை பெறுவது உங்கள் அநன்யா... அநன்யா... அநன்யா............
ஷங்கர் மஹாதேவன். இவர் மிக அருமையான பாடகர். இருந்தாலும் பாவம் இப்போதெல்லாம் குத்து பாட்டு ஹீரோ இண்ட்ரோ சாங்குக்கு தான் இவரை அணுகுகிறார்கள். அது எனக்கு வருத்தமே. குலதெய்வம் மாதிரி மூச்சு விடாமல் இவர் பாடிய ப்ரெத்லெஸ் என்ற ஆல்பம் கேட்டு வாய்பிளந்தேன். நல்ல ஒரு தனித்துவம் வாய்ந்த குரலின் சொந்தக்காரர். எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாட்டு தான்.
சின்னக்குயில் சித்ராவின் பல பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். இருந்தாலும் இந்த பாட்டு அவங்க பாடுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டாங்களாம். நந்தனம்ன்னு ஒரு மலையாளப்படம் பாட்டும் அப்படித்தான். இருந்தாலும் இதுல இருக்கற மெலடி எனக்கு ரொம்ப இஷ்டம். நல்ல குரல் வளம், அருமையான பாவம், செழிப்பான இசையறிவு இதெல்லாம் மட்டும் இல்லாம, தன்னடக்கம், எப்போவும் சிரித்த முகம் இதெல்லாம் பார்க்கும்போது இவங்களை பொறாமைப்படாத பெண்களே இருக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லலாம்.
உன்னிக்கிருஷ்ணன் இவர் பாட்டை முதன் முதலா கேட்டது காதலன் படத்தில் தான். கர்நாடக இசையிலிருந்து மிக எளிமையாக சினிமா இசைக்கு வந்து கோலோச்சியவர். காதலன் படத்துல வரும் ’என்னவளே’ பாட்டு சூப்பர் ஹிட் ஆனாலும் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களிடம் ரொம்ப கெட்ட பேர் வாங்கித்து. கடுமையான விமர்சனத்தால் பாதிப்படையாமல், உன்னி தன் சினிமா பாட்டு வாழ்க்கையும் கர்நாடக சங்கீத வாழ்க்கையும் நன்றாக சமன் செய்தார். அருமையான பாவங்கள், தேர்ந்த தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் இந்த பாடகரின் சொத்து. ஏ.ஆர்.ஆரின் இசையில் இது எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் பாடல்களின் ஒன்று. சில சமயம் அழுவதுமுண்டு. வைர வரிகளாச்சே!
என்ன தான் ஐஞ்சு பாட்டு தான் போடலாம்னாலும் என்னால இந்த பாட்டு போடாம இருக்க முடியலை. அருமையான இசை, உன்னி பாம்பே ஜெயஸ்ரீ குரலில் குறுந்தொகை மாதிரியான பாடல் வரிகள் ரசிக்காமல் இருக்க முடியாது.
இத்துடன் இந்த பகுதி நிறைவடைந்தாலும் இன்னும் பல பாடகர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இந்த் மாதிரி ஐஞ்சே ஐஞ்சு பாடகர்களையும் பாடல்களையும் தொகுத்து வழங்கச்சொன்ன கார்த்திக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :)) இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)
நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது,
பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா
எங்கள் ஸ்ரீராம் அண்ணா
பொற்கொடி
ஜெகன் நாதன்
ட்ரீமர்
பத்மனாபன் அங்கிள் ச்சே ச்சே, அண்ணா
திருமதி கீதா சாம்பசிவம்
அப்பாவி தங்கமணி
R.கோபி
மீண்டும் இதே மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை & வடை பெறுவது உங்கள் அநன்யா... அநன்யா... அநன்யா............
Labels:
Chitra,
favourite singer,
harish,
Karthik,
kk,
shreya koshal,
SPB,
sujatha nil gavani thaakku,
Unni Krishnan
Subscribe to:
Posts (Atom)