Pages

Friday, January 15, 2010

பயணக்கட்டுரை 1

Statutory Warning: இது கொஞ்சம் பெரிய பதிவு. ஒரு வார காலமா நான் ஊரில் அடிச்ச கொட்டத்தை பத்தினது. பொறுமையுள்ளம் படைச்சவங்களுக்கு மட்டுமே! நேரம் இல்லாட்டி, புக்மார்க்கிண்டு அப்பறம் படிக்கலாமே. 



எனக்கு travelogue எல்லாம் எழுதத்தெரியாது. இருந்தாலும் ஊருக்கு போயிட்டு வந்த கதையெல்லாம் சுருக்கமாய் சொல்லணுமே. அதுக்குத்தான் இந்தப்பதிவு.



வந்து ஒரு வாரமாகப்போறது, இன்னும் ஏன் போஸ்ட் போடலைன்னு கேட்டால், துக்கம் தொண்டை அடைச்சுடுத்து, அதான் போடலை. ஊருக்கு போயிட்டு வந்தாலே இப்படித்தான் இருக்கும். ஒரே blues. இந்த வாட்டி, சென்னை போகலையே, அது வேற வருத்தம். எப்போப்பாரு, திரிச்சூர் பஸ்ஸ்டாண்டு, கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில், மாமியாருக்கு ருத்ராபிஷேகம், குருவாயூர் நடைக்குள் பெண்கள் கியூவில் நுழைஞ்சது,மாயவரம் மணிக்கூண்டு, பரிமளரங்கன் கோவில், காளியாக்குடியின் சாப்பாடு, சாஸ்தா ப்ரீத்தியில் திரண்ட மக்கள் கூட்டம், ஒரு 500 பேருக்கு நான் பரிமாரியது, கோவை காந்திபுரம் அன்னபூர்ணா கௌரிஷ்ங்கர் பக்கத்தில் இருந்த புஸ்தகக்கடை, பாலக்காடு மார்ஜின் ஃப்ரீ சூப்பர்மார்க்கெட் இதெல்லாம் தான் அடிக்கடி மனதில் ஃப்ளாஷ் ஆறது. ஏன் தான் இங்கே வந்து மாட்டிண்டோமோன்னு மனசு ரொம்ப வருத்தப்படறது.



மார்ச் 2010 உடன் 4 வருடம் ஆச்சு, இந்த அமீரக வாழ்க்கை. இங்கேத்த hyped up life, வீண் ஆடம்பரம், இதெல்லாம் போறும் போறும்ன்னு ஆயிடுத்து. சாதாரண, எளிமையான வாழ்வுக்கு மனசு ஏங்கித்தான் போய்ட்டது.

ஹான்... என்ன பண்ணறது?



Day 1 - 01-01-2010



நான் Happy New Year முதன் முதலில் சொன்னது, கோழிக்கோடு இம்மிக்ரேஷன் ஆபிஸ்ருக்கு. 4 மணிக்கு இறங்கிய பின் வண்டி வந்து அழைத்துச்சென்றது. பாலக்காடு போய் சேர்ந்த்போது, திருவாதிரைன்னு சொன்னா.அம்மை(மாமியார்) சூப்பர் திரிவாதிரை களி பண்ணி இருந்தார். கிடுகிடுன்னு குளிச்சு, களியை ஒரு பிடி பிடித்து,மந்தக்கரை பிள்ளையாரை லவ் பண்ணிட்டு, வைத்தியநாதப்புரம் சிவனை தரிசனம் பண்ணிட்டு, கோவிந்தராஜபுரம் சாஸ்தா லெட்சார்ச்னையில் போய் உட்கார்ந்தால், தூக்கம் சொக்கிவிட்டது. சாயந்திரம் பாலக்காடு கல்யாண் சில்க்ஸில் ஷாப்பிங். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி எல்லாம் புடவை வாங்கறது ரொம்பக்கஷ்டம். அதுலேயும் இந்த வேணு அண்ணாவிற்கு எந்த கலரும் பிடிக்கலை. இதை எடுத்தா அதுங்கறார், அதை எடுத்தா இதுங்கறார். ஒரு வழியா, லக்ஷ்மி சில்க்ஸ்ல உருப்படியா 18 முழம் புடவை அழகாக பிருந்தா மன்னிக்கு கிடைச்சது. இந்த கடையில XXL மடிசார் எல்லாம் வெச்சுண்டுருக்கா. Normal 18 முழம். XXL - 20 முழம். (கடைய நோட் பண்ணி வெச்சுண்டேன்னு சொல்லித்தெரிய வேண்டாம், இவர் கிட்டக்க இந்த பாராவை படிச்சு காட்டினப்போ, வழக்கம் போல no response)



Day 2 :அடுத்த நாள் சாஸ்தா பிரீத்தி. கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். பூஜை,பஜனை எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் தான் சாப்பாடுன்னு சொல்லிட்டு ஜனத்திரள் பொறுமையா காத்துண்டு இருந்தாங்க. சமயலும் கனஜோர். பஜனையோட கடைசியில் யாருக்காவது சாமி வரணுமாம். அப்போ தான் அய்யப்பன் இந்த பூஜையை approve பண்ணினதா அர்த்தமாம். திடீர்ன்னு சபரீஷுக்கு சாமி வந்து திங்கு திங்குன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டான். நான் பயந்துட்டேன். அந்த சின்ன கோவில் பிரகாரத்துல அவனை இழுத்து பிடிக்க முடியாமல் எல்லாரும் தெணற ஆரம்பிச்சுட்டாங்க. முதல் முறையா இப்படி பாக்குறேன். phew. scary. கோவிலை ஒட்டி ரெண்டு பக்கமும் பந்தி போட்டிருந்தா. ஊர்க்காரங்கெல்லாம் புள்ளை குட்டிங்களோட வந்து செம்ம கட்டு கட்டிட்டு போனா. ஒரு பந்தி ஓடிண்டு இருக்கும்போதே அடுத்த பந்திக்கு தயாராக சாப்பிடறவங்களுக்கு பின்னாடி நின்னுக்கறாங்க. எப்போய்யா சாப்பிட்டு முடிப்பேன்னு restless ஆ காத்துண்டு இருக்கணும். நான், உஷா மன்னி, பிருந்தா மன்னி, ரம்யா எங்கள் குடும்பத்திலிருந்து பரிமாறினோம்.

அது ஒரு நல்ல அனுபவமா இருந்தது.



நிறைய இடங்கள்ல மோஹன், மோஹன்னு இவர் பேர் எதிரொலிச்சுண்டு இருந்தது. இவர் தான் இந்த கோவில் கமிட்டீ மெம்பர் ஆச்சே, பயங்கர துறுதுறுப்பா வேலை செஞ்சுண்டு இருப்பார்ன்னு இவரை தேடி போனேன். கோவில் மெயின் பந்தியில் இவரைக்காணோம். கோவிலுக்குள் ஒரே இருட்டு. மண்டபத்தில் ஒரு சட்டையில்லா மாமா மல்லாக்க படுத்திருக்க, இவர் , அவர் பக்கத்தில் தமிழ்ப்பட ஹீரோயின் மாதிரி குப்புற படுத்துக்கொண்டு முழங்கால்களை ஆட்டிண்டு பேசிண்டு இருந்தார். இதுக்கு, நாங்க நல்லவங்க வல்லவங்க கணக்கா பில்டப்பு வேற. என்னைப்பார்த்ததும், எழுந்து வந்து ”இப்போத்தான்மா ஐந்நூறு பேருக்கு வெளம்பிட்டு வந்தேன்”னு கூசாம பொய் வேற சொல்றார். கேக்கறவன் கேனையா இருந்தா, மோஹன் மொக்கை போட மாட்டான்ன்னு சொல்லுவாங்க போல இருக்கு.



Day 3

அடுத்தநாள் குருவாயூர் போனோம். திரிச்சூர்லே இருந்து பாம்புமேக்காடுங்கற சர்ப்ப ஸ்தலத்திற்கு போயிட்டு, குருவாயூர் போகலாம்ன்னு திட்டம். நாங்க ஏறிய பஸ் “அவா ஊதினா இவா வருவா” சமயத்தில் தயாரிச்சிருப்பாங்க போல. பயங்கர Antique values சோட லொட லொட சத்தத்தோட சூப்பரா இருந்தது. அந்த டிரைவருக்கு யாரோ தப்புதப்பா training கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். accelarator கூட hornஐயும் அழுத்தினாத்தான் வண்டி போகும்ன்னு நினைச்சுண்டு அந்த ஆள் பண்ணின அராஜகத்தால பயணிகளுக்கெல்லாம் இலவச தலைவலி கிஃப்டா கெடைச்சது. மத்த பயணிகள் யாரும் இதை பெருசா கண்டுக்கலை, எனக்கு தான் Blood Pressure எகிறிடுத்து. திரிச்சூர் பஸ் ஸ்டாண்டில் தான் கொஞசம் அமைதியை அனுபவிச்சோம்.

அடுத்து மாளைங்கிற இடத்துக்கு போகணும். இந்த பிரைவேட்டு பஸ்கள்ல என்னை மாதிரி XXL passengers போறது ரொம்பக்கஷ்டமாக்கும். இரண்டு பேர் உட்கார வேண்டிய சீட்ல மூணு பேருக்கு allocate பண்ணி இருக்காங்க. அடிச்சிக்கோ பிடிச்சுக்கோன்னு ஏறி,இடம் பிடிச்சு, பாதி தோளை ஜன்னலுக்கு வெளீல வைச்சதும் தான் இடம் பத்தினாப்ல இருந்த்தது.இதுக்காகவே எனக்கு ஜன்னலோர சீட்டை இவர் சமர்த்தா விட்டுக்கொடுத்துடுவார். அந்த மூணாவதாக வந்து உக்கார்ரவங்க பாவம். பின்னே, கண்டக்டர் கிட்டக்க, நான் கூட காசு குடுத்து தான் டிக்கெட் எடுத்துருக்கேன்னு சண்டை போடமாட்டாங்க? எதாவது ஓமக்குச்சி மாதிரி இருந்தார்ன்னா, நான் தப்பிச்சேன். இந்த வாட்டி, ஆஜானுபாஹுவா ஒருத்தர் வந்து உட்கார்ந்துண்டார். இந்தப்பக்கத்தில் இருந்து நான் தள்ள, அந்தப்பக்கத்தில் இருந்த ஆஜானுபாஹு தள்ள,நடுவில் sandwich செய்யப்பட்ட இவரோ, கிட்டத்தெட்ட, முறுக்கு அச்சில் மாட்டிக்கொண்ட மாவு போல squeeze செய்யப்பட்டார். இவ்வளவு கஷ்டத்திலும் எப்படித்தான் இவரால் தூங்கமுடியறதோ, தெரியலை. திரிச்சூர் தாண்டி, நிறைய இடங்களில் கிற்ஸ்துமஸ் கொண்டாட்டம் பாக்கி இருந்த்தது தெரிஞ்சது. வாசலில் நட்சத்திரம் தொங்க, கேட்டுகளில் வாழைத்தண்டுகளில் வண்ணமயமான கொடிகள் நடப்பட்டு இருந்தது. இந்த இடங்களெல்லாம் நான் முதன் முறையா பாக்கறேன். மழை இல்லாட்டியும், பசுமையோ பசுமை.சாலையோர மரங்கள், செடிகள் எல்லாம் பச்சை பசேலென்று ஹலோ சொல்லித்து. பஸ் மட்டும் கழுதை பரதேஸம் போனாமாதிரி போயிண்டே இருந்தது.மாளையில் பாம்புமேக்காடு மாலை 6 மணிக்கெல்லாம் மூடிடுவாங்களாம். எங்களுக்கோ விஷயம் தெரியாது. பல்பு. குத்துமதிப்பா சாமியெல்லாம் பார்த்தோம். இந்த கோவில் ஒரு நம்பூதிரி வீட்ல தான் இருக்கு. இங்கே உக்காராதே, அங்கே சாப்பிடாதே, இதை தொடாதே, அதைக் கீழே போட்டுடாதேன்னு ஏக கிராக்கி பண்ணினாங்க. இந்த terms and conditions ஐ சொல்லிக்குடுக்கறதுக்கே அங்க தனியா ஆளுங்க வெச்சிருப்பாங்க போலிருக்கு. ஒரு வழியாக கிளம்பினோம்.கொடுங்கலூர்ல இருந்து குருவாயூர் கிட்டக்கதான்னு சொன்னதுனால,போறது தான் போறோம், கொடுங்கலூர் பகவதி அம்மனை பார்த்துடலாம்ன்னு ஆசைப்பட்டோம். நல்ல வேளை, சபரிமலைக்கூட்டத்திலும் அம்மன் எங்களுக்கு கருணையுடன் தரிசனம் குடுத்தா. கொடுங்கலூரிலிருந்து நேர் பஸ் குருவாயூருக்கு KSRTC கிடைச்சது. வழக்கமாக, KSRTCன்னாலே,20 kmph போகும் பெங்களூரு பஸ்கள் தான் எனக்கு ஞாபகதுக்கு வரும். இங்கே இவங்க இந்த நெளிவு சுளிவான சாலைகளை எத்தனை லாவகமா ஓட்டுறாங்க? முக்கியமான பாயிண்டு, இந்த பஸ்கள்ல XXL seating arrangement வசதி உண்டு. குருவாயூர் போய்ச்சேறும் போது 9.30. இரவு உணவு ராமகிருஷ்ணால முடித்து ருக்மணியில போய்த்தங்கினோம்.                                                                     
      

                                                                                                                                         ---தொடரும்

12 comments:

Ms.Chitchat said...

Your Tamil is good we enjoyed reading your travel experience which reminds me of mine which I experience every time I visit India. Will continue to read. Happy Pongal.
Ms. Chitchat

அண்ணாமலையான் said...

வாங்கோ மாமி பயனம்லாம் நல்லபடியா ஆய்டுத்து போல? நன்னா எழுதிருக்கேள் போங்கோ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

நல்ல அனுபவம் ; கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது .

சீக்கிரம் அடுத்த பகுதி ...

Ananya Mahadevan said...

Ms chitchat, thanks for peeping in. Happy Pongal to you and your family.

Ananya Mahadevan said...

அண்ணாமலையான், பயணமெல்லாம் அடிபொளி தான் போங்கோ. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. :)

Ananya Mahadevan said...

ஸ்டார்ஜன்,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அடுத்த பகுதி எழுதிண்டு இருக்கேன்.சீக்கிரமே போட்டுடறேன்.

ஜிகர்தண்டா Karthik said...

ரொம்ப நன்னா இருக்கு... சீக்கரம் அடுத்த பதிவ போடுங்கோ...
கௌரிஷங்கர்... அதற்கு முன் இப்போது புதியதாய் தொடங்கியிருக்கும் புத்தகக்கடை,
போங்கோ உங்க கூட டூ...எனக்கு என் காலேஜ் ஞாபகத்த வர வெச்சதுக்கு.பஸ் ஏறத்துக்கு முன்னாடி ஒரு கட்டு கட்டிடுதான் ஏறுவோம்.கேரளா... நாங்க அம்ரிதா காலேஜ்ல படிச்சதால கேரளா போவோம் அடிக்கடி..

malarvizhi said...

nice blog .happy new year .

Unknown said...

நல்ல மொழி நடை... பயங்கர இயல்பா இருந்திச்சு... இதை படிச்சு முடிக்கும்போது “ஐயோ முடிஞ்சுடுத்தே”ன்னு தோணுச்சு... சீக்கிரம் அடுத்த பகுதி வரட்டும்னு இருக்கு... Keep it up

Ananya Mahadevan said...

மலர்விழி,
உங்களுக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Ananya Mahadevan said...

மஹேஷ்,
நீ நிஜம்மாவா சொல்ற? நான் எழுதும்போது என்ன இது பாட்டுக்க போயிண்டே இருக்கேன்னு ஒரே பதபதைப்பு. அதான் வெட்டி வெட்டி போடலாம்ன்னு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல் அனன்யா... நானும் இப்படி இப்பவும் பொலம்பறது தான்... சொர்கமே என்றாலும் நம்மூரு போல் ஆகுமா?

Related Posts with Thumbnails