Pages

Monday, January 25, 2010

மோஹனின் மொக்கைகள்

மோஹனின் மொக்கைகள்


என் கணவரின் அதிரடி மொக்கைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊருக்கு போகும்போது ஏர் அரேபியாவில் ஷார்ஜாவிலிருந்து போனோம். வழக்கத்துக்கு மாறாக அந்த ஏர் ஹோஸ்டஸ் கடுகடுப்பான
முகபாவத்துடன் பயணிகளை வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தாள், மன்னிக்கவும் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

கஸ்டமர் சர்வீஸில் சிறிய சறுக்கல்களைக்கூட பொறுக்காத நான், ரொம்பக்கடுப்பானேன்.

ஏதோ டெக்னிக்கல் காரணங்களால் ஃப்ளைட் டிலே என்று காப்டனிடம் இருந்து தகவல் வர, ரிக்லைனர் போட்டுக்கொண்டு சாய்ந்து கொண்டேன். ஏற்கனவே நாள் முழுக்க அலைச்சல், அலுப்பாக இருந்தது. மணி 11 ஆகியும் ஃபிளைட் கிளம்பும் வழியாக தெரியவில்லை. தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது. ஒரு சொக்கு சொக்குவதற்குள் என்னமோ உலுக்கி விழுந்து எழுந்தேன். அந்த ‘சிடுசிடு’ தான் என் கவனத்தை தூக்கதிலிருந்து திருப்பியுள்ளது. "could you" என்று சீட்டை நேராக்கும்படி கைகளால் ஜாடை காட்டினாள். எனக்கு வந்ததே கோபம், “let us first get a confirmation that we are taking off, I will then adjust the recliner" என்றேன் சாதாரணமாக.

அவள் பல்பு வாங்கிக்கொண்டு போன பின்னர், இவரிடம் திரும்பி,”ஏன்னா இப்படி சிடு சிடுன்னு மூஞ்சிய வெச்சுண்டு இருக்கா இவ” என்றேன். நான் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இருந்தது இவர் பதில்.

 வழக்கமாக பிளேனில் ஏறியவுடன் இந்த விமானப் பணிப்பெண்கள் எந்தப்பக்கம் நம் இருக்கை என்று பல்லிளித்துக்கொண்டே!!(நம்மளை வரவேற்கறாங்களாமா) காட்டுவார்கள். எல்லோரையும் இடம் வலம் என்று வழிகாட்டிய அப்பெண், இவர் ’அழகில் மயங்கி’(ஓ, இதான் அழகுல மயங்கறதா?) இவரிடம் மட்டும் மொபைல் நம்பர் கேட்டாளாம் (க்கும், கேட்டுட்டா.........லும்,இவர் நம்பர் கொடுத்துட்டா...............லும்). ஆனா இவர், ”நான் ராமனாக்கும் அதெல்லாம் (அநன்யாவைக்கேக்காம) தரமுடியாதுன்னு சொல்லிட்டாராம்.” அதான் அந்தப்பெண் உர்ன்னு மூஞ்சிய வெச்சுண்டு இருக்காளாம். ஸ்அபா..... அசந்து வரும் அந்த நொடியிலும் இவரின் சில்லித்தனமான இந்த ஜோக்கை கேட்டு சத்தமாக ரசித்து சிரித்துவிட்டேன். நல்லாத்தான் சொல்றாங்ய டீட்டேயிலு.

மணி அண்ணா பையன் சங்கர் வண்டி ரொம்ப தாறுமாரா ஓட்டுறான்னு ஒரே புகார். சாப்பிடும்போது இந்த விஷயத்தை கண்டிக்கும் நோக்கோடு மணி அண்ணா, “கோந்தே, மினிமம் 20 ஃபீட் இடைவேளை விட்டு தான் வண்டி ஓட்டணும், புரிஞ்சதா?”ன்னு சொன்னார். இவர் உடனே இடைப்பட்டு, ”அண்ணா, அப்படீன்னா, பந்த் அன்னிக்கு தான் வண்டி ஓட்ட முடியும்” என்றாரே பார்க்கலாம். கொல்லென்று குடும்பமே சிரித்து விட்டது.

12 comments:

Ms.Chitchat said...

Loved it. Enjoyed it. Rasithein rasithein :):)

Chitchat

Unknown said...

மாப்புவுக்கு இவ்ளோ நகைச்சுவை உணர்ச்சியா???? நீ தான் ஏதோ அவர் சீரியஸ் ஆசாமி என்பது போல பில்டப் கொடுத்து... அவரை நேரில் பார்த்தபோது நான் ரொம்ப அடக்க ஒடுக்கமாக நடந்துக்கொண்டேன். ஆனாலும் மனுஷன் செம ஸ்வீட்.... ’அருந்ததி’ படம் பார்த்தப்போ துளி கூட டென்ஷன் ஆகாம என்னோட சந்தேகங்கள் எல்லாத்தையும் தீர்த்து வைத்தாரே.... மாப்பு... ஐ லவ் யூ....

ப்ரியமுடன் வசந்த் said...

// எனக்கு வந்ததே கோபம், “let us first get a confirmation that we are taking off, I will then adjust the recliner" என்றேன் சாதாரணமாக. //

மாம்ஸவிட நீங்க பெரிய டெர்ரரா இருப்பீக போலயே சகோ...!

ஆரூரன் விசுவநாதன் said...

மிகவும் ரசித்தேன்

Ananya Mahadevan said...

நன்றி சிட்சாட்

நன்றி அண்ணாமலையான்

நன்றி மஹேஷ்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வசந்த்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஆரூரன்.

ungalrasigan.blogspot.com said...

இயல்பான எழுத்து நடை என்பதால் இடையூறு இல்லாமல் படித்து ரசிக்க முடிந்தது.

settaikkaran said...

சும்மாச் சொல்லப்படாது! மொக்கை போடறதுலேயும் சக்கை போடு போடறேள் போங்கோ! பேஷ்,பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு! வாஸ்தவமாவே நன்னாச் சிரிச்சுட்டேன்!

Ananya Mahadevan said...

சேட்டைக்காரன்,
’வஞ்சப்புகழ்ச்சி’அணியா இருந்தாலும், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

துபாய் ராஜா said...

ஜாடிக்கேத்த மூடி. :))

Ananya Mahadevan said...

நன்றி துபாய் ராஜா.

Advocate Santhanakrishnan said...

YOU BOTH ARE BEING ON SAME WAVE LENGTH IN MOKKAI PODUVADHIL

manjoorraja said...

கலக்கல்

Related Posts with Thumbnails