Pages

Monday, February 22, 2010

கோபியர் கொஞ்சும் ரமணா - கோபால கிருஷ்ணா !

பெயரைப்பார்த்ததும் என் கணவரைப்பற்றிய பதிவு என்று நினைத்தவர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இவரது  லீலைகள் இதே பெயரில் விரைவில் வரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


நேற்று இரவு சோனியில் லட்சத்து பத்தாவது முறையாக லகான் போட்டார்கள். வெள்ளைக்காரி மேல் பொறாமை தாங்கமுடியாமல் கிரேஸி சிங் வாயசைக்கும் ஆஷா போன்ஸ்லே பாடும் ’மதுபன் மே கன்ஹையா கிஸி கோபி ஸே மிலே’ என்ற பாட்டு ஃபுல் சவுண்டில் கேட்டு பார்த்து ரசித்தோம்.'ஙொய் ஙொய்' என்று தூக்ககலக்கத்தில் புலம்பத்தொடங்கி இருந்த இவர், இந்த பாட்டு வந்த உடனே கண்கள் பிரகாசமடைந்து,  வந்து உட்கார்ந்து விட்டார். ஒரு வேளை கிரேஸி சிங் மோஹமாக இருக்கலாம். வாய்கிட்டக்க ஒரு சொம்பு வெச்சுண்டு இருந்திருக்கலாம். அநியாய ஜொள்!

நானும் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்தாக இந்த பாடல் இருந்தது என்றால் அது மிகையில்லை. அழகான நடனம், நொடிக்கு 100 தரம் மாறுகின்ற கிரேஸியின் முக பாவம், ஆமிரின் சூட்டிகை, கோபிகைகளின் காஸ்ட்யூம், லைட்டிங் எஃபக்டு, பாட்டு, ஆஷாவின் கமகங்கள், இசை, கொரியோகிராஃபி என்று எல்லாமே மிகச்சிறப்பாக அமைந்து இருந்தது.

”கோபியான் தாரே ஹை சாந்த் ஹை ராதா” என்ற வரி ஏனோ மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதாவது கோபியர் எல்லாம் நட்சத்திரங்கள் என்றால் ராதா சந்திரனைப் போன்றவள். கோபியர்களின் சிறப்பை வேளுக்குடியாரின் ஒரு பிரபாஷணத்தில் கேட்டதுண்டு. நெகிழ்ச்சியான இந்த கதையை பகிரத்தான் இந்த பதிவு.

உத்தவன் என்ற கண்ணனின் தோழன், கோபியரின் மகத்துவம் பற்றி கண்ணனிடம் கேட்டாராம். இதை விளக்கும் நோக்கோடு கண்ணன் தனக்கு தீராத வயிற்றுவலி என்று சொன்னாராம். துடித்து போன உத்தவன், பரமாத்மாவிடம், நான் என்ன செய்ய வேண்டும், நீயே சொல் ஜகத்பதி என்று கேட்டாராம். உடனே கண்ணன், ”உத்தவா, உன் பாத தூலிகை (காலடி மண்) எடுத்து பாலில் கலந்து, நான் அருந்த வேண்டும் அப்போது தான் இந்த வயிற்றுவலி தீரும், கொஞ்சமே கொஞ்சம் உன் பாத தூலிகை தருகிறாயா”என்று ஸ்ரீ ஹரி கேட்டாராம். அதிர்ச்சியில், உத்தவன் மறுத்து விட்டாராம். அதெப்படி தன் காலடி மண்ணை எடுத்து பெருமான் உட்கொள்வதா என்று அவருக்கு ஒரே குழப்பமாம். ”இதுதான் பக்தனின் மகத்துவம். இப்போது கோபியரின் அன்பின் மகத்துவம் பார்க்கிராயா?” என்று அவர்களிடம் அழைத்துப்போனாராம்.கோபியரிடம் கண்ணன் கேட்ட மாத்திரத்தில் மூட்டை மூட்டையாக காலடி மண் கிடைத்ததாம்! உத்தவன் அவர்களிடம் கேட்டாராம், ”உங்களுக்கு அறிவில்லையா? பெருமான் உங்கள் பாத தூலிகை உட்கொள்ளக்கேட்கிறார்.இப்படி மூட்டை மூட்டையாக தருகிறீர்களே? நீங்கள் எல்லோரும் மஹா பாவம் செய்கிறீர்கள்.” என்றாராம். கொஞ்சம் கூட கவலையே படாமல் கோபியர்கள் சொன்னார்களாம், ”எங்களுக்கு பாவம் வந்து சேர்வதைப்பற்றிய கவலை இல்லை, கண்ணனின் வயிற்று வலி தீர்ந்தால் அதுவே போதும், எங்களுக்கு வேறெதுவும் வேண்டாம்” என்றார்களாம். இதல்லவோ உண்மையான மெய் சிலிர்க்கும் அன்பு, தாய்மை! கோபியரின் சிறப்பை உத்தவன் உணர எம்பெருமான் கண்ணன் எடுத்துக்காட்டிய விதம் தான் எத்தனை மதுரம்.

கோபிகா ஜீவனஸ் ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!

16 comments:

Porkodi (பொற்கொடி) said...

adade!

Porkodi (பொற்கொடி) said...

அடப்பாவிகளா.. ஜொள்ளுல ஆரம்பிச்சு தாய்மைல முடிக்க முடியுமா.. இந்த திறமை எல்லாத்தையும் இப்படி ஒரே இடத்துல கொட்டி வெச்ச்ருக்கியே ஆண்டவா.. :‍) சூப்பரு உங்க ஹரிக்கதை.

settaikkaran said...

"லகான்"-லே ஆரம்பிச்சு "மகான்," மாதிரி முடிச்சிருக்கேள்! அபுதாபியிலே மத்தவா காலட்சேபம் எப்படி நடக்கறதோ தெரியலை; ஆனா, அக்காவோட கதாகலாஷேபம் ஆனந்தமா,அமர்க்களமா,அமோகமா இருக்கு போங்கோ!

Prathap Kumar S. said...

ஹஹஹஹ சூப்பர்.

சூப்பர் பாட்டு. உங்க கணவர் எழுந்து உக்காந்தது கண்டிப்பாக கிரேஸீ சிங்ககாத்தான்.
கிரேஸீ சிங்-ன் கண்களே கவிபாடும். நல்ல அழகு...முன்னாபாயில் இன்னும் அழகா இருப்பாங்க... ஆனா அதுக்கப்புறம் வந்த படங்கள்ல்ல பார்க்க சகிக்கலை.

ஆனா என்னவோ சொல்லவந்து கடைசில சூப்பர் மேட்டரோடே முடிச்சீட்டீங்க... நல்லாருக்கு...

Raghav said...

சூப்பர்.. பிருந்தாவனத்தில் 5 லக்ஷம் கோபியர்கள்.. அவர்கள் அனைவருக்கும் பிரியமானவன் கண்ணன். எற்றைக்கும் ஏழேல் பிறவிக்கும் உனக்கே நாம் ஆட்செய்வோம்.. மற்ற எதுவும் வேண்டாம் என்று வாழ்ந்தவர்கள் கோபியர்கள்..

Raghav said...

என் பதிவில் உள்ள வரதர் எங்க ஊர் வரதர்.. மதுரை - இராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சுறு ஊரில் கோவில் கொண்டுள்ளவர்..

நேரம் கிடைத்தால் இந்த வீடியோஸ் பாருங்க

http://www.youtube.com/watch?v=YsNcQ7KKdbI

http://www.youtube.com/watch?v=ezXYIpFqDWg&feature=channel

தக்குடு said...

நன்னா இருக்கு அக்கா, அத்திம்பேருக்கும் கிரேசியை புடிக்குமா???...:)

அந்த பாட்டுல ஒரு இடத்துல கண்ணன் ராதாவை சமாளிப்பாரு பாருங்கோ!! எனக்கு அது ரொம்ப புடிக்கும். // கோபியா ஆனி ஜானிஹை, ராதாதோ மனுக்கி ராணிஹை// அடா! அடா! பிரமாதம் அந்த வரி

pudugaithendral said...

தினம் ஒரு பதிவுன்னு போட்டிக்கு நீங்களும் வந்துட்டீங்களா!!! ஆஹா நாம இனி ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னு கேக்கறீங்களா?

//ஜொள்ளுல ஆரம்பிச்சு தாய்மைல முடிக்க முடியுமா.. இந்த திறமை எல்லாத்தையும் இப்படி ஒரே இடத்துல கொட்டி வெச்ச்ருக்கியே ஆண்டவா.. :‍) சூப்பரு உங்க ஹரிக்கதை//

:))

துபாய் ராஜா said...

//'ஙொய் ஙொய்' என்று தூக்ககலக்கத்தில் புலம்பத்தொடங்கி இருந்த இவர், இந்த பாட்டு வந்த உடனே கண்கள் பிரகாசமடைந்து, வந்து உட்கார்ந்து விட்டார். ஒரு வேளை கிரேஸி சிங் மோஹமாக இருக்கலாம். வாய்கிட்டக்க ஒரு சொம்பு வெச்சுண்டு இருந்திருக்கலாம். அநியாய ஜொள்!//

ஹா...ஹா..ஹா. ஆனாலும் உங்களுக்கு மாமா மேல இம்புட்டு, இம்புட்டு,இம்புட்டு.... காண்டு ஆகாது. :))

ஒரு அழகான இளைஞன் இப்படி சில நேரம் தன்னை மறந்து அழகை ரசிப்பதுண்டு. ஏன்னா மாமாவுக்கு இது வால்ல்ல்ல்லிப வயஜூ... :))

துபாய் ராஜா said...

//கோபியரிடம் கண்ணன் கேட்ட மாத்திரத்தில் மூட்டை மூட்டையாக காலடி மண் கிடைத்ததாம்! உத்தவன் அவர்களிடம் கேட்டாராம், ”உங்களுக்கு அறிவில்லையா? பெருமான் உங்கள் பாத தூலிகை உட்கொள்ளக்கேட்கிறார்.இப்படி மூட்டை மூட்டையாக தருகிறீர்களே? நீங்கள் எல்லோரும் மஹா பாவம் செய்கிறீர்கள்.” என்றாராம். கொஞ்சம் கூட கவலையே படாமல் கோபியர்கள் சொன்னார்களாம், ”எங்களுக்கு பாவம் வந்து சேர்வதைப்பற்றிய கவலை இல்லை, கண்ணனின் வயிற்று வலி தீர்ந்தால் அதுவே போதும், எங்களுக்கு வேறெதுவும் வேண்டாம்” என்றார்களாம். இதல்லவோ உண்மையான மெய் சிலிர்க்கும் அன்பு, தாய்மை!//

நெஞ்சம் கசிந்து கண்களில் ஈரம். நெஞ்சைத் தொட்ட நெகிழ்ச்சியான பகிர்வு.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹாஸ்யமாக ஆரம்பித்து ஆத்மார்த்தமாக முடிந்த பதிவு. படமும் ஜோர்.ரங்கமணியை கொஞ்சம் பிரீயா வுடுங்களேன் let him enjoy

Ananya Mahadevan said...

@பொற்ஸ்-உனக்கு உடம்பு முடியாமலே நீ இந்தப்போடு போடுறியே, உடம்பெல்லாம் நல்லா இருந்தா நீ என்ன ரகளை பண்ணுவே?
@சேட்டை- உன் கவிதை லொள்ளு தாங்கமுடியலை! கொஞ்சம் அடங்கு!
@நாஞ்சில்-ஆபீஸ் டிஷ்யூவை அவசரத்துக்கு பயன் படுத்தவும்.துபாய் ஜொள் ஷஹாமா வரை பாய்ந்து விட்டது.கருத்துக்கு நன்றிப்பா!
@ராகவ்-உங்க அறிமுகம் கிடைச்சமைக்கு ரொம்ப மகிழ்ச்சி.உங்கள் ஊர் வரதரை கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்!
@தக்குடு-உனக்கும் ஆபீஸ் டிஷ்யூ வைத்தியம் தான். நீ இவ்ளோ டீட்டெயிலா வந்ததுக்கப்புறம் நான் என் கருத்தை சொல்லாட்டி எப்படி? கோபத்துடன் ராதை, (அதான் நீ ஜொ(ள்ளி)ன்னியே கிரேஸி ஸிங்)அப்படீன்னா ஏன் உன் அன்பைக்காட்ட மாட்டேங்கற”ன்னு கேக்கற கேள்விக்கு அழகா க்ருஷ்ணர் சொல்லுவார், ஒவ்வொருத்தருக்கும் அன்பை சொல்ல ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இதான் என் ஸ்டைல்ன்னு சொல்றா மாதிரி ஒரு வரி வருமே அதான் என் ஃபேவரைட்.:)
@ தென்றல் அக்கா-தினம் ஒரு பதிவு எல்லம் இல்லைக்கா, ஜஸ்ட் தோணித்து எழுதிட்டேன். தட்ஸால். உங்க ஸ்பீடுக்கு எல்லாம் நம்மால தாக்கு பிடிக்க முடியாது யக்கா..
@துபாய் ராஜா, டிவீ பார்த்து ஜொள் விடுவதையெல்லாம் நான் கண்டுக்கறதில்லை. லைவ் டெலிகாஸ்ட் பாக்கும்போது தான் காண்டு ஆஃப் த. உங்களுக்கு பிடிச்சிருந்ததா?சந்தோஷம்ங்க.
@திரு TRC அவர்களே,படம் இண்டெர்னெட் ல சுட்டது தான் சார்.ரங்குவை என்னமோ வீட்டுல வெச்சுண்டு கொடுமைப்படுத்தின மாதிரின்னா சொல்றீங்க? அந்த சீன் லேது பாபு. அவர் நிம்மதியா ஜொள்ளினார், நான் அதை எழுதினேன். அவ்ளோ தான்! சிம்பிள் :) உங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.

அண்ணாமலையான் said...

நடத்துங்க...

பத்மநாபன் said...

கொஞ்சம் லேட்டானால்,வழி மொழிதல் ஆகிவிடுகிறது ..
வழிதலில் ஆரம்பித்து வாஞ்சையில் முடித்துள்ளீர்கள் ... அருமை .
பக்திரசமும் வைப்பீர்களா ? அவசரக்குழு கூடி ''பட்டத்தின் '' பெயர் மாற்ற வேண்டும் .

தக்குடு said...

//ஒவ்வொருத்தருக்கும் அன்பை சொல்ல ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இதான் என் ஸ்டைல்ன்னு சொல்றா மாதிரி ஒரு வரி வருமே// அந்த வரியையும் போட்டு அர்த்தமும் மறக்காம போட்டுருந்தா டாப்பு டக்கரா இருந்திருக்கும்....:(

எல் கே said...

radhe krishna. mudinthal gobika geethamku tamila artham eluthunga.. punniayam pogum

Related Posts with Thumbnails