Pages

Tuesday, February 16, 2010

நானும் பாலாமணித்துவமும் - தொடர் பதிவு

இந்த மாதிரி தொடர்பதிவு போட,முதன்முறையாய் என்னை(

எல்லாம் மதிச்சு ) அழைத்த புதுகைத்தென்றலுக்கு நன்றிகள் பல

ஓக்கே ஸ்டார்ட்- ஜ்வா..........ன்


நான் பதின்ம வயதில் மிக அதிகமாக செய்தது- என் அம்மாவிடம் அடி வாங்கியது தான். எப்போவும் அம்மா மார்க் வாங்காததற்குத்தான் என்னை அடிப்பார். அடிக்கடி, உன்னை விட சின்னவ தானே? அவ படிக்கலை? நீ மட்டும் ஏண்டீ இப்படி இருக்கேன்னு கேட்டுண்டே அடிப்பார். அந்த ’அவ’ வேறு யாரும் அல்ல என் ஜென்ம விரோதி என் அருமைத்தங்கை. அது மட்டும் அப்படி படிக்கும். எப்போதும் ஃப்ரஸ்ட் ராங்க் வாங்கிடும். 1988ல் வந்த சுஹாசினி எடுத்த 'பெண்' என்ற சீரியலில் ரேவதி-ஸ்ரீவித்யா நடித்த ஒரு காட்சி என்னால் மறக்க முடியாதது. அதிலும் பாவம் ரேவதிக்கு என்னை மாதிரி ஒரு பாடாவதி அக்கா, அதுவும் என் தங்கை மாதிரி டக்கர் படிப்ஸ் கேண்டிடேட். சொல்லிவைத்தார்போல எங்கம்மாவின் டயலாக் ஸ்ரீவித்யா சொல்ல, (அவ படிக்கல?, நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே?) நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல ரேவதியின் பதில் - ”அம்மா, அவளால முடியும், என்னால முடியாது”. எவ்வளவு எளிமையான உண்மையான பதில்? ஆஹா, இனி நாம பொழைச்சுக்கலாம், அம்மா கேக்கும்போது இதே பதிலைச்சொல்லி சமாளிச்சுடலாம்ன்னு மைண்டு மில்க் குடிச்சேன். (அதான் மனப்பால்.) அதற்கான சந்தர்ப்பமும் மிக விரைவிலேயே அமைந்தது. அம்மா அதே கேள்வி கேட்க, நானும் ரெடியாக வைத்திருந்த ஆன்ஸரை சுஹாசினி புண்ணியத்தில் எடுத்து விட அம்மா பளார் என்று விட்டார் ஒரு அறை. எதித்து பேசுறயா எதித்து? என்று வெளுத்து வாங்கி விட்டார். சே, இவ்ளோ ப்ரிப்பேர் பண்ணியும் 'வட போச்சே' ன்னு ரொம்ப வருந்தினேன்.

இன்னொண்ணு மறக்க முடியாத விஷயம்-அம்மாவிடம் 12வது வரை அடி வாங்கி இருக்கிறேன். வழக்கமாக அடி வாங்கும் போது அது ஏன்னு தெரீல, ஏதாவது ஒரு ரூம்ல ரெண்டு சுவர் சந்திக்கற ஓரமா போயிண்டே இருப்பேன் அம்மா அந்தக்கால சினிமா வில்லன் மாதிரி அடிச்சுண்டே வருவாங்க. அடிச்சு முடிச்சுட்டு கைவலிச்சு அம்மா தோல்வியடைஞ்சு போனதுக்கப்புறமா கன்னத்தையோ கையையோ தேய்ச்சுண்டே 10 நிமிஷம் டைம்பாஸ் பண்ணிண்டு இருப்பேன்,(நல்லா இருக்கே, உடனே எல்லாம் படிக்க முடியுமா என்ன?) அதுக்கும் ஒரு ஸ்பெஷல் அடி கிடைக்கும். கொஞ்சம் கூட ஃபீல் பண்ணவே மாட்டேனே. எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி ’ஞ’ன்னு ஒரு எக்ஸ்ப்ரஷன் குடுப்பேன். அம்மா வெறுத்துடுவாங்க. உன்னை அடிச்சு கைதாண்டி வலிக்கறதும்பாங்க.அடுத்தது கூந்தல் சண்டை.எனக்கு நீளமான அடர்த்தியான முடி இருந்தது.(யார் நம்பப்போறா?) அப்போ புதுசா மார்க்கெட்டு ல சன்சில்க், வெல்வெட் ஷாம்பூ எல்லாம் வந்திருந்தது. அந்த விளம்பரம் எல்லாம் பார்த்து எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா அவ்வா விடவே மாட்டாங்க. சீக்காப்பொடி அரப்பு தான் போட்டுக்கணும்ன்னு சொல்லி வற்புறுத்துவாங்க. தலையில் சைடு க்ளிப் வெச்சுக்கணும்னு எனக்கு ஆசை, ஆனா முடி சிக்காகும் அதெல்லாம் கூடாதும்மாங்க. இது போக நேர் வகிடு எடுத்துக்க, முடி கொஞ்சம் ஸ்டைலா தூக்கி பின் பண்ண எல்லாம் அவ்வா தடா தான். இதுனாலேயே அவ்வா ஒரு சர்வாதிகாரியா தெரிஞ்சாங்க. இதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு பழி வாங்க ஒரே ஒரு வழி தான் இருந்தது. அது படிக்காம பாலாமணித்தனம் பண்றது.எனக்கும் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே. அதுனால படின்னு சொன்ன உடனே பாலாமணி மாதிரி வேற வேலைக்கு போயிடுவேன். பேனா ரிப்பேர் பண்றது, நோட்டுக்கு அட்டை மாத்தி போடுறது, பென்ஸில் சீவுறது, (படிக்காமலேயே)கிழிந்த புஸ்தகத்தை செல்லோ போட்டு ஒட்டுறது(செல்லோ போட்டா இன்னும் நிறைய நேரம் விரயம் பண்ணலாமே, கத்தரிக்கோல் எடுத்து - வெச்சு, மத்த காயிதங்களை வெட்டி குப்பை போட்டு, அடி வாங்கி இத்யாதி வேலைகளால இன்னும் நேரம் போகுமே) இன்க் பேனா எனக்கு ரொம்ப பிடிக்கும். ரிப்பேர் பண்ண நிறைய ஸ்கோப் இருக்கும்.

நிப், நாக்கு, பேனா கழுத்து, உடம்பு இதையெல்லாம் கழட்டி, சர்வீஸ் பண்ணி இன்க் ஊத்தறது, அதுக்கு பேனாவைக்கவிழ்த்தி, கழுத்தைத்திருகி இங்கை நாக்கு வழியாக மீண்டும் இங்க்ஜாடியில் ஊற்றும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கே.. அடாடா.. சொல்லி மாளாது..
 
 பால் பாயிண்டு அவ்ளொ ஸ்கோப்  இருக்காது. இருந்தாலும் அந்த பால் ரோலரை எடுத்துட்டு (சும்மாங்காச்சுக்கு) வெளிப்புறத்திலிருந்து உள்புறம் ஊதறது, இங்க் மெதுவா இந்த கடைசிக்கு வந்த உடனே அவசரமா இந்த பால் ரோலரை பொருத்தி எழுதறதான்னு பாக்கறது. இப்படி ரொம்ப உருப்படியா நேரம் கடத்தி இருக்கேன்.

சதா சர்வ காலமும் சினிமாப்பாட்டு கேக்கறது, முடிஞ்சா பாடுறது இதான் வேலையா இருப்பேன். காலையில எழுப்பி படின்னு சொல்வாங்க. நான் என்னிக்கு எழுந்திருக்கேன். அப்படியே எழுந்தாலும், ஒரு 5 நிமிஷம் படிச்சுட்டு, நேரா கிச்சனுக்கு போய், அம்மா தண்ணி வருதான்னு பார்க்கட்டுமா?ன்னு கேப்பேன். ஓட ஓட விரட்டுவாங்க. நான் படிச்சாத்தானே? மறுபடியும் ஒரு பத்து நிமிஷம் படிச்சுட்டு, மீண்டும் கிச்சன், ”அம்மா 2 சாப்டர்(!!!!) படிச்சுட்டேன், கேள்வி கேக்கறீங்களா”ம்பேன். (எனக்கு தான் தெரியுமே, அம்மாவுக்கு அது பிஸி டைம் நான் எஸ்கேப்புன்னு) ”அம்மா செகண்ட் காப்பிம்மா”ன்னு செண்டிமெண்டா மடக்கி, பேச்சை திசைதிருப்பி குடத்தை எடுத்துண்டு தண்ணி பிடிக்க போயிடுவோம்ல?

தென்றல் அக்கா பதிவு படிச்சப்போ எனக்கும் நினைவு வந்த்து வயசுப்பெண்கள், ரோட்ல குனிஞ்சுண்டே போகணும்ங்கற கான்செப்டு. என் தோழி ஆனந்தி அப்படித்தான் நடப்பா. எதிர்ல அரசு ஆண்கள் பள்ளி. எல்லாம் குரங்குபசங்கள். கன்னாபின்னான்னு பாடும், பேசும். அதுனால ஆனந்தி எப்போவும் குனிஞ்ச தலை நிமிராம வருவா போவா. அம்மா இதை கவனிச்சுட்டு, அப்படி எல்லாம் நீயும் இருக்கவேண்டாம். பாரதி சொன்னாப்ல நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் திமிர்ந்த காலிமண்டைச்செருக்கும்..ச்சே, சாரி ஞானச்செருக்கும் ஞாபகத்துல வெச்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. அதுல இருந்து நான் குனியரதே இல்லை. வின்னர் வடிவேலு தான் நம்பள்க்கீ குரு.ஒரு வழியா முட்டி மோதி அருள் சார் கிட்டே டியூஷன் வெச்சுண்டு 9வது பாஸ் பண்ணிட்டேன். பத்தாவது ஒரே காமெடி. நான் படிச்ச ஸ்கூல்ல கால்நடையெல்லாம் ஃப்ரீ நடை போடும். ஆடு, மாடு,எருமை,கோழி, நாய், பூனை, பன்றி எல்லாம் வரும் போகும், யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஒரு வாட்டி சயின்ஸ் டீச்சர் ரொம்ப சுவாரஸ்யமா க்ளாஸ் எடுத்துண்டு இருந்தப்போ ஒரு பொண்ணு ‘மெய் மறந்து’ லயிச்சு பாடம் கேட்டுண்டு இருந்தா. ஒரு ஆடு எதிர்புறமா வந்து நின்னு இந்தப்பொண்ணு தலையில் வெச்சிருந்த பூவை தின்னுடுத்து. எல்லா பெண்களும் கொல்லுன்னு ஒரே சிரிப்பு.வெட்டித்தனமா எப்படி பொழுது போக்கறதுன்னு ஒரு புஸ்தகம் எழுதற அளவுக்கு நான் தேறி இருந்த கால கட்டத்துல தான் என் குல தெய்வம் எஸ்.பீ.பி பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாட்டு வந்தது. ஆஹாஹா... அந்த பாட்டு மேல அப்படி ஒரு இஷ்டம் எனக்கு. ஒரு வாட்டி வழக்கம்போல மிஸ் வராத ஒரு க்ளாஸ்ல உக்காண்டு தோழிகளுக்கு என் சங்கீத வித்வத்தை காட்ட முற்பட்டப்போ, கண்ணை மூடிண்டு ரொம்ப கான்ஃபிடண்டா நான் அந்தப்பாட்டை பாடி முடிக்க ஒரே கைத்தட்டு. கண் தெறந்து பார்த்தா, சீனியர் பெண்கள் எல்லாம் வந்து உக்காந்திருந்தாங்க. அவங்க மிஸ்ஸூம் வரலையாமே?

சயின்ஸ்ன்னாலே எனக்கு அலர்ஜி. தாயம்மா மிஸ்ன்னா ரொம்ப பயமும் கூட. அவங்க பயங்கர ஸ்ட்ரிக்ட். ஒழுங்கா க்ளாஸ் எடுத்து டெஸ்டெல்லாம் வைப்பாங்க. அவங்களுக்கு ரொம்ப ’பவர்ஃபுல்’ கண்ணாடி இருக்கும். இந்த லஷ்மின்னு என் ஃப்ரெண்டுக்கு அப்படி ஒரு கொழுப்பு. ஏதோ ஒரு பரீட்சைக்கு அவ சொல்றா, ”இன்னிக்கி நமக்கு தாயம்மா மிஸ் தான் சூப்பர்விஷன், தாயம்மா மிஸ்ஸூக்கு சூப்ப்ப்ப்ப்...பர் -விஷன் தெரியுமோல்யோ”ன்னு. துஷ்ட ராட்சசி. இப்படி எல்லாம் குரு நிந்தனை பண்ணிப்டு, அந்த பிரஹஸ்பதி சயின்ஸ் குரூப் எடுத்துண்டு என்ஜினீயர் ஆயிடுத்து. எங்கே இருக்கோ என்னமோ. ரொம்ப தேடிண்டு இருக்கேன். அந்த ராட்சசி மட்டும் கிடைச்சா, நான் அவள் கிட்ட டிஸ்க்கஸ் பண்ணி இன்னொறு கொசுவத்தி போஸ்ட் போடுவேன்.

இன்னும் என்னோட டீனேஜ் கொசுவத்தி இங்கே காண்க.
 

ஜிகர்தண்டா கார்த்திக்

மஹேஷ்வரன்

சேட்டைக்காரன்

தக்குடுபாண்டி

18 comments:

Dubukku said...

நல்ல டார்ட்டாய்ஸ் சுத்தறீங்க..சுவையான பகிர்தல். டெய்லி ஒரு போஸ்டா..கலக்கறீங்க :))

pudugaithendral said...

தொடர்பதிவு போட்டதுக்கு நன்றி அநன்யா.

அம்மாவின் அடி எனக்கும் 16 வயது வரை கிடைச்சது. எந்த தப்பும் செய்யாமல் அம்மாவின் மற்றவர்களின் மேலான கோபங்களுக்கு வடிகாலாக எனக்கு அடி. குனிய வெச்சு தனிஆவர்த்தனம்தான். அடி வாங்கிய அதிர்ச்சியில் ஜுரம் வரும்.

சின்ன மாமாதான் எனக்காக அம்மாவிடம் சண்டை போடுவார். ஜுரம் வந்தால் அம்மா லீவு போட்டுவிட்டு ஹாஸ்பிட்டலில் தேவுடு காக்கும்போது “அடிப்பானேன், இப்படி தேவுடு காப்பானேன்னு” தோணும். சொல்ல முடியுமா.

இப்படி தேவையில்லாமல் அம்மா என்னை அடித்த்தற்காக பல நாள் பேசாமல், சாப்பிடாமல்னு நிறைய்ய சத்தியாகிரகம் இருந்திருக்க்றேன்.

நம்ம கிரகம் அதெல்லாம் எதும் எடு படாது. :))) வின்னர் கைப்பிள்ளையை மிஞ்சும் அளவுக்கு அடி.

நல்லா சுத்தியிருக்கீங்க கொசுவத்தியை.

Porkodi (பொற்கொடி) said...

kosuvathiya..?

Porkodi (பொற்கொடி) said...

//இதே பதிலைச்சொல்லி சமாளிச்சுடலாம்ன்னு மைண்டு மில்க் குடிச்சேன்.// haiyo haiyo!

kosuvathi super!!!! ipdilam kooda padikama escape aaga mudiyuma? :)) paavam unga amma..

pudhugai thendral case adha vida supera irukum polaye!! :D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அநன்யா அநாயாசமா அடிவாங்கி இருக்கீங்க.. நானும் அடிவாங்கி இருக்கேன். என் தம்பி கூட விளையாடலன்னா காலுக்கு கீழ அடி விழும்.. :)

\\நிப், நாக்கு, பேனா கழுத்து, உடம்பு இதையெல்லாம் கழட்டி, சர்வீஸ் பண்ணி இன்க் ஊத்தறது, //
ரீபில் ஊதறதுன்னு நானும் இதே மாதிரி நிறைய ஜாலியா டைம் வேஸ்ட் செய்து அனுபவிச்சிருக்கேன்..
கண்ணை மூடி பாடிட்டிருந்தப்போன்னதும் எதோ டீச்சர் தான் வந்துட்டாங்களோன்னு பயந்துட்டேன்.. :)

settaikkaran said...

பாலாமணித்துவமுன்னதும் ஒரு நிமிஷம் நான் கூட பயந்திட்டேன். இப்படியொரு கான்சப்ட் வலைப்பதிவுலே வந்திருச்சா, என் கண்ணுலே எப்படி இதுவரைக்கும் படாம இருந்ததுன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். கடைசியிலே பார்த்தா பாலாமணியும் நம்ம ஆளுதானா? பேஷ் பேஷ்!!

ஆனா ஒண்ணு, அம்மா கிட்டே பன்னிரண்டாவது அடி வாங்கினதைக் கூட பல்லாங்குழி ஆட்டத்துலே ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குனா மாதிரி ஞாபகம் வச்சு எழுதியிருக்கீங்க பாருங்க! சூப்பர்! அபுதாபியிலே வல்லாரை மாத்திரை நிறையா கிடைக்குது போலிருக்கு! நான் வாங்குன அடியெல்லாத்தையும் பத்தி எழுதணுமுண்ணா ஒரு வாரம் லீவு போட்டு ரூமிலே உட்கார்ந்து யோசிக்கணுமுங்க!

அக்காவோட கொசுவத்தி நல்லாவேயிருக்கு!

எம்.எம்.அப்துல்லா said...

:)

ஜிகர்தண்டா Karthik said...

என்னை இப்படி பழைய நினைவுகளுக்கு பயணிக்க செய்ததற்கு நன்றி...
பதிவு போட தொடங்கியாச்சு... http://jigardhanda.blogspot.com/2010/02/1.html

துபாய் ராஜா said...

உள்வீட்டு எதிரி, அம்மா அடி,நோட்டு ரிப்பேர், பேனா சர்வீஸ், தண்ணீர் எஸ்கேப், பள்ளியில் பாட்டு ரிலாக்ஸ் ......

நல்லா 'அனு'பவிச்சுறீக்கறீங்கங்கோ.... :))

Ananya Mahadevan said...

@டுபுக்கு,

நான்:
ஓம் டுபுக்காய நமஹ
ஓம் டுபுக்காய நமஹ
ஓம் டுபுக்காய நமஹ
ஓம் டுபுக்காய நமஹ

’டாய்ன்’

டுபுக்கு ப்ரத்யக்ஷம்!!!!

இறைவா, உன் கருணையே கருணை..
மீண்டும் மீண்டும் இந்த பேதையின் வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி.. மோக்ஷம் கிட்டி!
டுபுக்கு, மீ ஆஃப் த வெட்டி ஆபீஸர் ஆஃப் த.. அதான் தினம் ஒரு மொக்கை வீதம் 365 மொக்கை போடுவதாக வேண்டுதல். மறுபடியும் உங்க ஆட்டோகிராஃப், என் சைட்டுக்கு சுக்ரன் உச்சத்துல இருக்கான் போல இருக்கு.

தென்றல் அக்கா,எங்கம்மா காரணமாத்தான் அடிப்பாங்க, நான்ஸ்டாப்பா வெளாசித்தள்ளிடுவாங்க.நான் எழுதினதெல்லாம் ஒரு சாம்பிள் தான். நான் எது வேண்டாமோ அதெல்லாம் மட்டும் தான் பண்ணுவேன், so naturally, அம்மாவுக்கு கோபம் வர்றது இயற்கைதானே?

@பொற்ஸ்- அந்த நேரத்துல என்னோட முழுநேரப்பணியே வெட்டித்தனமா படிக்காம இருக்கறது தான்

@முத்துலெட்சுமி மேடம்- கரும்பு தின்ன கூலியா? நான் சுகமா விளையாண்டு தான் அடி வாங்கி இருக்கேன். இப்படில்லாமா அடிப்பாக? டீச்சர் அன்னிக்கு ஆப்செண்ட் அதான் பாடிண்டு இருந்தேன் க்ளாஸ்ல.முதல்வாட்டி நமக்கு அங்கீகாரம் கிடைச்சா ஒரு உற்சாகப்பெருக்கு இருக்கும் இல்லையா? அதான் இந்த சம்பவம் சட்டுன்னு நினைவுக்கு வந்தது.

@சேட்டை-கொசுவத்தி முடிஞ்சுடுத்துன்னு ரொம்ப சந்தோஷப்படாதே, இன்னும் ஒன்றிரண்டு பாக்கி இருக்கு. அடி வாங்கினதெல்லாம் சுகானுபவம். மறக்கப்டாது. ஒரு வாரம் உனக்கு லீவ் ப்ராப்தி ரஸ்கு, சாரி ரஸ்த்து.

@அப்துல்லா-வாங்க சார். முதல் முறையா வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிகள் பல.

@ஜிகர்-சூப்பர் உன் கொசுவத்தி, படிச்சேன் ரசிச்சேன்.

@துபாய் ராஜா-நன்றிங்க! ஜாதக தோஷம் ’அனு’பவிச்சுத்தானே ஆகணும்!

கபீஷ் said...

உங்க எல்லா பதிவுகளும் கலக்கல், இது உட்பட, கமெண்ட் போட சோம்பேறித்தனமா இருந்ததால எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ சொல்றேன். பாவம் நீங்க என்ன மாதிரியே அடி வாங்கியிருக்கீங்க.:-)

பத்மநாபன் said...

உங்க இந்த பதிவை , என் பசங்க பார்க்காம இருக்கணும் ... என்னா டெக்னிக் ... .
செல்லோ டேப்ப வச்சு தானாகவே பொண்ணு , புஸ்தகங்களை ஒழுங்கு பண்ணிக்குதுன்னு நினச்சிட்டு இருப்பாங்க ..அதை வெச்சு என்னா ஓட்டு .......
( மாத்ரு பூதம் ஜோக் ஞாபகம் .. மாத்ஸ் எக்ஸாம் ன்ன பசங்களுக்கு , தலை வலி வரும் , தலை சுத்தல் வரும் , எல்லாம் வரும் .....ஏன்சர் மாத்திரம் வராது..) அந்த மாதிரி படிப்பை தவிர்க்க
மலைய வேன்ன பெரட்டுவோம் புத்தகத்தை புரட்டமாட்டோம் ... அதுதான் பதின் சொர்க்கம் திருப்பி கிடைக்குமா.... நோ சான்ஸ்.....

Ananya Mahadevan said...

@கபீஷ்,
ரொம்ப நன்றிங்க. சோம்பேறித்தனப்படாம பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி நன்றி நன்றி!

@பத்மநாபன் சார்,
நீங்க சொல்வது ரொம்பச்சரி, அந்த நாட்கள் எல்லாம் திரும்பி கிடைக்கவே கிடைக்காது!கருத்துக்கும், ஜோக்குக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

Unknown said...

அது எப்படி எல்லா வீட்டிலேயும் சின்னதுங்க மட்டும் கொஞ்சம் சமர்த்தா இருந்து நம்மளை போல பெருசுங்க பிராணனை வாங்குதுங்க... உன்னை போல நேரம் கடத்துற டெக்னிக்கை எனக்கு சொல்லித்தர அப்போ நீ இல்லையே அக்கா ஆஆஆஆஆ!!!! சூப்பர்ப் பதிவு...

Ananya Mahadevan said...

மஹேஷ், ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி, உன்னையும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.ஒரு ப்ராப்ளமும் இல்லே, என் குருநாதர் பாலாமணி கிட்டே உன்னை இண்ட்ரோ குடுக்கறேன். அவர் கிட்டே மஹாமந்த்ரம் கேட்டுக்கோ.அப்புறம் பாரு, சூப்பர் டைம்பாஸூ, ஆனா ப்ராக்ரஸ் கார்டு பாக்கற மாதிரி இருக்காது. அது குடுக்கும்போதெல்லாம் முக்காடு தான் போட்டுக்கணும்.

எல் கே said...

போன ஜென்ம புண்ணியமோ என்னவோ நான் அடி வாங்கினது இல்ல படிப்பு விசயத்துக்காக ,
//வெட்டித்தனமா எப்படி பொழுது போக்கறதுன்னு ஒரு புஸ்தகம் எழுதற அளவுக்கு நான் தேறி இருந்த கால கட்டத்துல தான்//

இப்ப இதுல நீங்க Phd வாங்கி இருபீங்கனு நினைக்கிறன்

அமுதா கிருஷ்ணா said...

தங்கச்சிகளே இப்படி தான் போல.என் தங்கை க்ளாஸ் ஃபர்ஸ்ட் வந்தா மட்டும் போதாது கண்ணை கசக்கிட்டு வரும்..மேடத்துக்கு எல்லா செக்‌ஷனுக்கும் ஃப்ர்ஸ்ட் வந்தா தான் முகம் மலரும்.நான் பாஸான போதுங்குற ரகம்.

B.Narayanan said...

எனக்கு, குழந்தைகளை அடிக்கிற அம்மாக்களைக் கண்டாலே பிடிக்காது. ஆனா இது ஒரு எஃஸெப்ஷன். ஆனாலும் பாவம் அனன்யா, போனாப்போறது. அடிக்காதேங்கோ இன்னமே குழந்தையே அப்பிடீன்னு சிபாரிசு பண்றேன்.

Related Posts with Thumbnails