எஸ் வீ சேகரின் டிராமாவில் ஒரு வரி வரும். எல்லா கிராமத்துலேயும் சின்னத்தம்பி மாதிரி ஒரு அப்பாவி இருப்பான்னு. அது எவ்வளவு உண்மை! கோவிந்தராஜபுரத்திலும் அப்படி ஒரு அப்பாவி இருந்தார். எல்லோருக்கும் ஓடிப்போய் உதவுபவர். மந்தக்கரை கணபதியான் கோவிலைப்பூட்டிய ஐயு அண்ணா இந்த அப்பாவியிடம், "ஓடிப்போய் கல்பாத்தி முக்கு கடையில் வெற்றிலை வாங்கிண்டு வா” என்றுச்சொல்லி 10 ரூபாய் சில்லறை கொடுத்து இருக்கார். போகிற போக்கில், ”வேகம் வரணம் கேட்டியா?”என்றும் வலியுறுத்தியிருந்தார். நம்ம சின்னத்தம்பி அடுத்த இரண்டாம் நிமிடம் ஆட்டோவில் வந்து இறங்கி இருக்கிறார். ஐயு அண்ணாவிடம் ஐந்து ரூபாய்த்தாளை கொடுத்தார். புரியாமல் விழித்த ஐயு அண்ணா, ”என்னடா, வெற்றிலை எங்கே?” என்று கேட்க, நம்ம சின்னத்தம்பி ரொம்ப கூலாக, ”கல்பாத்தி முக்கு கடையில கேட்டாச்சு, வெற்றிலை இல்லையாம்” என்று சொன்னார். அதிர்ந்த ஐயு அண்ணா, ”பின்ன என்னடா ஆட்டோவில வந்தாய்?” என்று கோபத்துடன் கேட்க, சி.த, ”நீங்கள் தானே வேகம் வரச் சொன்னேள்? ” என்றாராம்!!!
இவரல்லவோ வாழும் சுப்பண்டி!! பேஷ் பேஷ் பிரமாதம்!
கோபாலண்ணா வீட்டுக்கு போயிருந்தப்போ அவர் வீட்டில் இல்லாத நேரம், நான் குக்கர் வைக்க வேண்டிய சூழல். என்னவர் கோபாலண்ணா வீட்டில் சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார். அதனால், ஃபோன் பண்ணுவதற்கு முன்னாடி, இவருக்கு ஒரு வேளை தெரிந்து இருக்குமோ என்று இவரிடம் கேட்டேன். ”குக்கர் வெயிட் எங்கே வைப்பான்னு உங்களுக்கு தெரியுமான்னா” என்றேன். உடனே இவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு,” எங்க தங்கம் பாட்டி சொல்றாப்லன்னா ” இருக்கு என்றார்.” என்ன சொல்லுவா தங்கம் பாட்டி?” என்றேன். ”பிச்சைக்கு வந்த பிராமணரே, பெருங்காயச் சொப்பைக் கண்டீரா”ன்னு கேக்கற மாதிரி இருக்குன்னார். பாட்டியோட ஜோக்ஸ் டைமிங்கோஸம் ரொம்ப ஃபேமஸ்! என்ன ஒரு டைமிங் பார்த்தேளோ? அந்த ஆளே பிச்சை எடுக்க வந்திருக்கான். அவன் கிட்டக்க போய் ”பெருங்காயச்சொப்பு எங்கே”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாம கேட்டு இருக்கேனாம்! இந்த பேச்சு வழக்கெல்லாம் அழிந்து போய்விடுமோ?
கோவிந்தராஜபுரத்தில் ரமணி ராஜான்னு சகோதரர்கள் இருந்தாகள். ஒர் சாமவேத பண்டிதர் திண்ணையில் அமர்ந்திருக்க, இவர்கள் மரியாதை நிமித்தம் அவரை நெருங்கி, குசலம் விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் பேசியவை கீழ்க்கண்டவாறு:
மாமா: “ஆரது? ரமணியா? என்ன பண்றாய்?”
ரமணி அண்ணா: ”மாமா, நான் பேங்கல இருக்கேன்”
மாமா: “ நீ என்னவாக்கும் படிச்சாய்’
ரமணி அண்ணா: ”நான் பீகாம் படிச்சேன் மாமா”
மாமா: ”ராஜா, நீ என்னவாக்கும் பண்றாய்’
ராஜா அண்ணா: “நான் கோயம்புத்தூர்ல வேலையா இருக்கேன் மாமா”
மாமா: ”நீ என்னவாக்கும் படிச்சாய்?”
ராஜா அண்ணா: “மாமா, நான் எம் காம் படிச்சேன்”
மாமா: ”ஓஹோ, அப்போ நீ பீ காம் படிக்கலையோ”
கூடியிருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினார்களாம்.
ராமைய்யர் என்ற மிகப்பிரபலமான சமயற்காரர், இவருடைய நெருங்கிய நண்பர் ரகுவிடம் சமயல் கலை பற்றி பேசிண்டு இருந்தாராம். பேச்சு வாக்கில், ”டே ரகு, ஒரு கிலோ உளுத்தம் பருப்புல எத்தரை ஜாங்கிரி வரும் தெரியுமோடா நோக்கு?” என்று கேட்டிருக்கிறார். ரகு, ”தெரியாதே மாமா” என்று விழிக்க, மாமா, ”என்னடா நீயெல்லாம் பீகாம் படிச்சாய்?” என்று போட்டாராம் ஒரு போடு.. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒரே கல கல!
திருட்டு தம் அடிக்கும் ரசிகப்பெருமக்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜோக்கு! இவர்கள் நண்பன் ஒருவனுக்கு புதிதாக தம்மடிக்கும் பழக்கம் ஏற்பட்டுத்தாம். கல்பாத்தி முனியப்பன் கடையில் போய் சிகரெட்டு கேட்டிருக்கிறான். அந்த கடைக்காரர் இவன் கையில் சிகரெட்டை வைக்கவும் , நண்பனின் அப்பா வருவதற்கும் சரியாக இருந்ததாம். உடனே நண்பன் சமாளிக்கும் நோக்கோடு போட்டானே ஒரு போடு." என்னவாக்கும் சந்தனத்திரி(ஊதுபத்தி) கேட்டா சிகரெட்டை குடுக்கறாய்? "
25 comments:
"நண்பனின் அப்பா வருவதற்கும் சரியாக இருந்ததாம். உடனே நண்பன் சமாளிக்கும் நோக்கோடு போட்டானே ஒரு போடு." என்னவாக்கும் சந்தனத்திரி(ஊதுபத்தி) கேட்டா சிகரெட்டை குடுக்கறாய்? "
நல்ல நகைச்சுவை
:)
(ஏம்ப்பா அநன்யா இந்த பின்னூட்டப்பெட்டிய பாப் அப்பாக மாத்துங்களேன்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஒருமுறை போஸ்ட் கமெண்ட் ந்னு சொன்னா திரும்பவும் இதே பக்கம் லோட் ஆகி அப்ப்றமும் போஸ்ட் கமெண்ட் ந்னு சொன்னாதான் வேல ஆகுது..)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹாய் அரும்பாவூர்!
முத்துலெட்சுமி அக்கா,
எனக்கு யாரும் சொல்லலை! இப்போ சரிபண்ணிட்டேன். இவ்வளவு கஷ்டத்தை பொறுத்துக்கிட்டும் பின்னூட்டம் போட்ட தெய்வங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல! அக்கா, எடுத்துச்சொன்ன உங்களுக்கும் நன்றிகள் பல!
ரசனையாக இருக்கிறது.
//உடனே நண்பன் சமாளிக்கும் நோக்கோடு போட்டானே ஒரு போடு." என்னவாக்கும் சந்தனத்திரி(ஊதுபத்தி) கேட்டா சிகரெட்டை குடுக்கறாய்? //
ஹஹஹ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருந்துச்சு...
//இந்த பேச்சு வழக்கெல்லாம் அழிந்து போய்விடுமோ? //
kandipa kaanama poidum :(
ஒரே காமெடிதான் போங்கோ...
உங்க வெயிட் உங்கள்ளதான இருக்கும்... அதே மாதிரி குக்கர் வெயிட் குக்கர்லதான் இருக்கும். ஹையோ... ஹையோ...
நின்னுக்கோரி வரணம் கேட்ருக்கேன்... அது என்ன வேகம் வரணம்... ?? அப்படினு அந்த சின்னத்தம்பி கேட்டிருக்கணும்...
பின்ன... பீகாம் படிச்சுட்டு... பீ காமா இருந்துருக்கலாம்... தெரிலன்னு சொல்லி மாட்டிண்டூட்டார்
//இந்த பேச்சு வழக்கெல்லாம் அழிந்து போய்விடுமோ// நீங்க இருக்கிற வரைக்கும் அந்த கவலையெல்லாம் ண்டாம் கேட்டியா!!! ....:)
அக்கா, இப்போ புரியுது உனக்கு ஏன் நகைச்சுவை உணர்ச்சி கொஞ்சம் அதிகமாவே இருக்குன்னு... சுப்பாண்டி ஃபோட்டோ செம பொருத்தம்.
குக்கர் ஜோக்குக்கு - ”குக்கர் வெயிட் எங்கே வைப்பான்னு உங்களுக்கு தெரியுமான்னா” என்றேன்.” - வேற எங்கே? குக்கர்ல தான் அப்படின்னு சொல்லுவாறோன்னு எதிர்பார்த்தேன்.
‘அப்போ நீ பி.காம் படிக்கலையா?’ - Master Punch
அப்படியே கருத்துப்பெட்டிக்கு வச்சிருக்கிற "துப்பல்கள்" என்கிற பெயரையும் மாத்துங்களேன்! புண்ணியமாகப் போகட்டும்!!
Enjoyed ur write-up.
நடத்துங்க...
இனிமே பாலக்காடு பக்கம் போறதில்லைன்னு தீர்மானம் பண்ணியாச்சா? இதுவும் பாலக்காடு ஜோக்குதான். பையன் கர்ம சிரத்தையா அப்பவுக்கு அமாவாசை தர்ப்பணம் பண்ணின்டு இருந்தான். அதைப் பார்த்த தங்கம் பாட்டி" குழந்தை என்ன அழகா இடம் வலம் போட்டுண்டு தர்ப்பணம் பண்னரான் இதை பாக்க அவன் அப்பாவுக்கு கொடுத்து வெக்கலையே!"
பாலக்காட்டு தமிழ்ல, ஏய் ... ஏய் ன்னு சின்ன சின்ன விஷயத்தை மறுத்து பேசுவதே ஜோக் அடிக்கரமாதிரி தான் இருக்கும் . பெருங்காய சொப்பு , பீகோம், சந்தனபத்தி ....ஒரே அதகளம் .. கேட்டியோ .. ( என்ன அர்த்தம் ன்னு தெரியாது பட் அடிக்கடி கேட்டியோ
கேட்டியோ... வரும் ... கேட்டியோ )
பாலக்காட்டு பாஷை உங்களுக்கு சூப்பரா வருது, தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@மாதேவி
உங்கள் வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.
@நாஞ்சில்,
ரொம்ப டான்க்ஸ் பா
@LK,
ரொம்ப வருத்தமா இருக்கு. எவ்ளோ நகைச்சுவை இருந்திருக்கு பார்த்திஅந்தக்காலத்துல.. எல்லாம் போயிடுத்து.
@ஜிகர்தண்டா,
உன்னை மாதிரி சாமர்த்தம் அவாளுக்கு போறாது டா அம்பி!
@தக்குடு,
நான் சொன்ன பேச்சு வழக்கு பாலக்காட்டு தமிழை இல்லை. பாட்டியின் பழமொழிகளைச்சொன்னேன்.
@மஹேஷ்,
நன்றி எட்டப்ஸ்!
@சேட்டை,
எடுத்தாச்சுப்பா.
@சிட்சாட்,
ரெம்ம்ம்ப டாங்ஸ்ங்க.
@அண்ணாமலையான்,
பினனூட்டத்துக்கு நன்றிங்க.
@டி.ரா.ச அவர்களே,
பின்னூட்டத்துக்கு நன்றி சார். ஆனால் பாட்டியை பற்றி தவறாக எழுதி இருக்கீங்க. தங்கம் பாட்டி ரொம்ப சமயோசித புத்தி கொண்டவர். சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒன்றைசொல்ல உதாஹரணத்துக்கு பாட்டி சொன்னதை ரசித்து எழுதி இருந்தேன். சரியாக எழுதாதது என் திறமையின்மையே! தங்கம் பாட்டி என் கணவரின் தாய்வழி பாட்டி. என் ஃபேவரைட். அவர் பேரை உபயோகித்து நீங்கள் கூறிய இந்த சுப்பண்டி ஜோக் என்னை புண்படுத்தியது :(
@பத்மநாபன்,
நன்றிங்க. பீ கோம்- ஓவர் நக்கல்ஸ்!பீம்போய் மாதிரி! உண்மையில் இவர்கள் ஒகாரம் அவ்வளவு பிராமினண்ட் இல்லை. ஏனோ கமல் இதை கவனிக்க தவறிவிட்டார்.
ஸ்ரீராமண்ணா,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி!
// எனக்கு தமிழும் தத்துபித்து, இங்கிலீஷ் அரைகுறை. //
என்னை மாதியே நீங்களும்,என்று நினைத்து வந்தால்,பரவாயில்லை என்னை வீட சூப்பரா எழுதுகின்றீர்கள். நானும் பின் தொடர்ந்து விட்டேன்.
இந்த பதிவுலக பித்தனும் உன் எழுத்துக்கு அடிமையம்மா அடிமை. (சும்மா ஒரு பில்டப்புதான்)
நன்றி அனன்யா மகாதேவன்.
//பாட்டியின் பழமொழிகளைச்சொன்னேன்// அதான் அனன்யா பாட்டி நீங்க ருக்கேளே!!!...:)
அடேடே... இப்படி ஒரு சுவாரஸ்யமான வலைப்பதிவு இருக்கிறது இத்தனை நாளாத் தெரியாமப் போச்சே! பாலக்காட் ஜோக்ஸ் பிரமாதம்.
என்னுடைய கேரளா நண்பர் ஒருவர் சொன்ன ஜோக் கீழே....
யாரோ கதவைத் தட்டுவதைக் கேட்டு அவர்,
"யாருடா அது ராமனா?" என்றார்.
பதிலில்லை.
"கிருஷ்ணனா?"
பதிலில்லை.
"வாமனனா?"
பதிலில்லை.
போடா என்று இருந்து விட்டார். கொஞ்ச நேரம் கழித்து மறுபடி டொக்.டொக்.
ஆத்திரத்துடன் கதவைத் திறந்தால், வாமணன்.
"என்னடா இது, வாமனான்னு கேட்டேன் அதுக்காவது ஆமாம்ம்ன்னு சொல்லக் கூடாதா?"
"நீங்க ராமனான்னு கேக்கறப்போ இல்லைன்னு தலையாட்டினேன். அது புரிஞ்சி க்ருஷ்ணனான்னு கேட்டீங்க. இல்லைன்னு தலையாட்டினேன். அதுவும் புரிஞ்சி வாமானான்னு கேட்டீங்க. நான் எத்தனை நேரம் ஆமாம் ஆமாம்ன்னு தலையாட்டறது?"
http://kgjawarlal.wordpress.com
@பித்தனின் வாக்கு,
வா மகனே, அன்னையின் அருளாசியோடு வாழ்வாங்கு வாழி! (திஸ் ஆல்ஸோ பில்டப்பு, ஹீ ஹீ)
ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்!
@தக்குடு,
நான் பாட்டின்னா நீ கொள்ளுத்தாத்தாவாச்சே டா?
@ஜவஹர்,
வலையுலக சுஜாதாவின் பாத தூலிகை பட்டதனால் என் ப்ளாக் முக்தி அடைந்தது!
வாங்க சார். நல்வரவு. உங்களைப்பத்தி நிறைய கேட்டு இருக்கேன்.
உங்க ஜோக் இந்த பகுதியில் இடம் பெற்ற எல்லா ஜோக்கையும் விட அமோகம்! அடிபொளிட்டேளா?
அசாத்யமா சொல்லி இருக்கேள். பேஷ் பேஷ்!
பேஷ்...பேஷ்! பின்னிட்டேள், போங்கோ!
ரசனையாக இருக்கிறது.
ரசித்தேன்.பாலக்காடு நகைக்சுவை என சர்தார் நகைச்சுவை போல் உண்டா?
// வா மகனே, அன்னையின் அருளாசியோடு //
அன்னையின் அருள்வாக்கு-- அப்படின்னா உங்களுக்கு எண்பது வயதா? ஏன்னா எனக்கே 41 வயசு, எங்கம்மாவிற்கு 86 வயசு. சரி என்னமே உங்க அருளாசி இருந்தா சரி.
இல்லை மாதா அனன்யாந்தமாயின்னு புச்சா யாரும் வந்துருக்காங்களா? ஹா ஹா ஹா
ஆசிகளுக்கு நன்றி.
@ பெயர்சொல்ல விருப்பமில்ல,
ரொம்ப நன்றிங்க
@நினைவுகளுடநிகே,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி
@யோகன்,
இது சும்மா என் கணவர் அடிக்கடி சொல்லி சிரிக்கும் ஜோக்குகளை பகிர்கின்றேன். அப்படி எல்லாம் சர்தார் மாதிரி என்று சொல்லிவிட முடியாது. எல்லாம் ஒரு டைமிங்கா வர்றது. அப்படியே எழுதுவது. தட்ஸால்.
@பித்தன் சார், ஏ......ன்? ஏன் இந்த ரத்த வெறி?
//இந்த பதிவுலக பித்தனும் உன் எழுத்துக்கு அடிமையம்மா அடிமை// அப்படீன்னு சொன்னது யாரு? நீங்க தானே அதான் கொஞ்சம் பில்டப்பு ஓவராயிடுச்சு.
அதுக்கோசரம் மாதா சீத்தா கீத்தானெல்லாம் அநியாயத்துக்கு பீதிய கெளப்புறீங்களே?
Post a Comment