Pages

Monday, March 22, 2010

டாஷோபோர்டியாவும் தமிழ் ப்ளாக்கர் லிங்கோவும்

பதிவு போடத்தொடங்கிய புதிதில் ஒரே த்ரில்லிங்காக இருக்கும். யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று அறிவதில் அப்படி ஒரு சுவாரஸ்யம்! அந்த காலகட்டத்தில் தான் நெருங்கிய தோழிக்கு டாஷோபோர்டியா என்ற கொடிய நோய்.. ஹீ ஹீ.. பின்னே? எனக்குன்னு நினைச்சுட்டீங்களா? ஹய்யோ ஹய்யோ..
டாஷோபோர்டியா என்ற நோயின் அறிகுறிகள் மிகப்பயங்கரமானவை.

1.இந்த நோயாளிகளின் ஹோம்பேஜ் அவர்கள் டாஷ்போர்டாகத்தான் இருக்கும்.

2.சாஷ்ட்டாங்கமாக இவர்கள் டாஷ்போர்டைத்தான் தன் இஷ்டதெய்வமாக நமஸ்கரிப்பவர்கள். இவர்கள் சதா டாஷ்போர்டே கதி என்று இருப்பார்கள்.

3.மற்ற வலைத்தளங்களில் இவர்களுக்கு அமைதியாக படிக்க இயலாது. அதற்குள் யாராவது கமெண்டு எழுதிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை தான் இதற்கு காரணம் என நிரூபித்துள்ளார்கள்.

4.புதிய போஸ்டு போட்டுவிட்டால் இவர்களுக்கு தூக்கம் அவுட். சதா டாஷ்போர்டு நினைவு தான். ஒரு கமெண்டு கூட ரெண்டு நாள் வரைக்கும் வராத நிலமையாக இருப்பினும் அதை பார்த்துக்கொண்டே தான் இருப்பார்கள்.

5.ஒரு 2 நிமிடம் பாத்ரூம் போய்விட்டு வருவதற்குள் 1000 கமெண்டுக்கள் வந்து குவிந்துவிட்ட மாதிரி துடியாய்த்துடிப்பார்கள்

6.ஒரு பத்து நிமிடம் டாஷ்போர்டு பார்க்காவிட்டால் இவர்கள் கைகால்கள் நடுங்கும். முகம் இஞ்சி தின்ன குரங்கு போலாகிவிடும். அரை மணி நேரமெல்லாம் ஆச்சுன்னா இவர்கள் கைகால்கள் காக்காய் வலிப்பு மாதிரி இழுத்துக்கொள்ளும்.சாவிக்கொத்தெல்லாம் வேண்டாம். டாஷ்போர்டு போதும்.

7.அப்படி டாஷ்போர்டில் கமெண்டுகள் வராத பட்சத்தில் இவர்கள் எடிட் போஸ்டுவில் போய் கமெண்டு மாடரேஷனில் போய் எட்டிப்பார்த்துவிட்டு வருவார்கள்.

8.இவர்களை, ஒருவேளை பத்து நாள் டாஷ்போர்டு பக்கம் வராமல் யாராவது சதி செய்தால், இவர்களுக்கு சுமார் 300 கமெண்டுகள் வந்திருக்கும். அதில் 295 , இவரது முத்தான தமிழ்ப்பதிவை படித்து ரசித்த, இவர்களது சீன நண்பர்கள்(!!!) போட்டு இருப்பார்கள். பாக்கி 5 இவர்கள் பதிவு போடாததற்காக நன்றி தெரிவித்து இவர்கள் இம்சையால் பாதிப்பிற்குள்ளான மக்கள்ஸ் போட்டு இருப்பார்கள். இப்படி போடும் ப்ரும்மஹத்திகள் இவர் ப்ளாகை தீவிரமாக பிந்தொடர்ந்து சபாஷ் என்று ஒற்றைவரி பின்னூட்டமும் ஸ்மைலியும் போடுபவர்கள் என்பதை மறக்கக்கூடாது!


9.இந்த சீன நண்பர்களை ஹாண்டில் செய்கிறேன் பேர்வழி என்று அதையும் தாண்டி அவர்களுக்கு அவர் மொழியிலேயே பின்னூட்டம் எல்லாம் போட்டால் அவர்கள் விடாமல் நம்மை பழிவாங்கும் நோக்கோடு அடுத்த நாள் காலை டாஷ்போர்டில் 3000 கமெண்டுக்கள் மாடரேஷனுக்கு அனுப்புவார்கள்!

10. அப்படி ஒரு கமெண்டு கூட வராத பட்சத்தில் தான், தான் ஃபாலோ செய்யும் வேறு ப்ளாக்குகளை படிப்பார்கள்.



இந்த டாஷோபோர்டியா நோய் வந்து தாக்குவதற்கு சற்றே முன்னால் நான் ப்ளாகோமேனியா என்ற நோய்வாய்ப்பட்டு இருந்தேன்.
இந்த நோய் தாக்கப்பட்டு நான் ஆஸ்பத்திரியில் கிடந்த போது பலவிதமான ப்ளாகுகளை சம்பந்தா சம்பந்தமில்லாமல் படித்தும் பின்னூட்டம் போட்டும் வந்தேன். ஒன்றுமே கிடைக்காவிடில் ராண்டமாக எதையாவது கூகிளாண்டவரை வேண்டி எடுத்து படித்து மறக்காமல் பின்னூட்டம் போட்ட படியே இருப்பேன். அந்த ப்ளாக் அம்போவென்று இருந்தாலும், ஆள் அரவமே இல்லாமல் ராரா என்ற ஹம்மிங் கேட்டுக்கொண்டும் ஹாண்டடாக இருந்தால் கூட பயப்படாமல் முன்சென்று பின்னூட்டம் இட்ட போது தான் இந்த நோய் முற்றிவிட்டதாக டாக்குடர்கள் தெரிவித்தார்கள்.
 இந்த காலகட்டத்தில தான் புதிய வார்த்தைகள் பல நான் கண்டேன். அவற்றின் தாத்பர்யங்களை கண்டறிய சில காலம் பிடித்தாலும் அவற்றின் பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது! இந்த வார்த்தைகளுக்கான இன்புட்ஸ் தந்த பாஸ்டன் ஸ்ரீராமண்ணாவிற்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.



சொற்றொடர்   : வடை    பொருள்ஒரு பதிவின் முதல் பின்னூட்டம் யார் போடுகிறார்களோ, அவர்களுக்கு வடை கிடைத்ததாக ஐதீகம். அனேகமாக எல்லா ப்ளாகிலும் ஒரு பெண்மணி சென்று இதை வாங்கி விடுவார். உங்களுக்கே தெரியும். அவர் ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிந்தாமணி! வடை வைத்தீஸ்வரி! இந்த பதிவில் கூட அவருக்குத்தான் ஃபர்ஸ்டு வடை தருவதில் என் ப்ளாக் பெருமைப்படுகிறது!

 தங்கம்ணி :  (ப்ளாகரின் ஐயோ பாவம் )மனைவி

ரங்கமணி : (ப்ளாகரின் அப்பாவி)கணவர்

ஆணி - வகைதொகையில்லாமல் வாங்கப்படும் ஆபீஸ் வேலை. இந்த (இல்லாத) ஆணி தான் பல ப்ளாக்கர்களை புது பதிவு போடாமல் இருக்கவும், மற்ற பதிவர்களின் புதிய பதிவுகளின் பக்கம் போகாமலும் இருக்க உதவும் அரிய சாக்கு.


கவுஜ : சுத்தமாக புரியவே புரியாத கவிதை

மீ த ஃபர்ஸ்ட் பக்கித்தனமாக ஒரு பதிவை முற்றுகையிட்டு இடும் பின்னூட்டம்

ஆஜர் பின்னூட்டம்: பதிவை  படிக்கவே படிக்காமல் நான் பொன்னுரங்கம் வந்திருக்கேன்னு அட்டெண்டன்ஸ் போடுற பின்னூட்டம்

உள்ளேன் ஐயா:  மீண்டும் பொன்னுரங்கப்பின்னூட்டம்

கவிதை:  பாதி புரியும் தன்மையுடைய சொற்கள்

கவுஜ : பின்னவீனத்துவ கோட்பாடுகளுடன் கூடிய புரியாத புதிர்

பின் நவீனத்துவக் கவுஜ: சுத்தமாக புரியாத சொற்களாலான புதிர்

பின்னவீனத்துவம்: யாருக்குமே பொருள் தெரியாத சொற்றொடர்

கட்டுடைத்தல் : இதுக்கும் யாருக்கும் பொருள் தெரியாது, ஆனா ஜரூரா உபயோகப்படுத்துவார்கள்.

சேட்டைக்காரன்
லாரிக்காரன்
ஆட்டோக்காரன்  : ப்ளாக்கரின் பெயர்

ஜிகர்தண்டா
கலர்சோடாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஜூஸ் பக்கங்கள்  : ப்ளாக்கரின் பெயர்

டுபுக்கு
தக்குடு
டுபாக்கூர்
கெக்கேபிக்கே          :  ப்ளாக்கரின் பெயர்



:-)
:-))
:-)))))))))))))))))))))))))))))))
:-o
X-(                                    : இவையெல்லாம் தாராளமாக உபயோகப்படுத்தப்படும் பின்னூட்டங்கள், தொல்லை விட்டுதுன்னு போட்டுட்டு போயிண்டே இருக்கலாமே???


இதையெல்லாம் கூட பரவாயில்லை, ஷைலஜாக்காவின் கவிதைகளை பின்னவீனத்துவக்கவிதைகள்ன்னு பாஸ்டன் ஸ்ரீராமண்ணா சொன்னதை நான் கன்னா பின்னாவென்று நிராகரிக்கிறேன்.

45 comments:

Ananya Mahadevan said...

இந்தாம்மா பொற்ஸ் வடை எடுத்துக்கோ. காப்பியும் உண்டு!

sriram said...

இது அநியாயம், மொதல்ல வந்த எனக்கு வடை இல்லயா????

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

மொதல்ல இந்த நமக்கு நாமே வடை திட்டத்தை ஒழிக்கணும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

நான் எப்போ ஷைலஜாக்காவின் கவிதைகள் பின்நவீனத்துவமானவைன்னு சொன்னேன்??
யக்கோவ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்....
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

settaikkaran said...

நெட்டோப்ளாக்சர்கோமா என்ற தீவிரமான நோயினால் அவதியுற்று தினமும் ஃபீட்பேக்குலின் ஊசியும், ஓட்டோதெரபியும் செய்து கொண்டிருக்கிற எனது பெயரை விஷமத்தனமாகப் பிரயோகித்ததற்காக நான் வடைபெறாமல் விடைபெறுகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

:-))))))))))))))))))))))))

தொல்லை விட்டுச்சுடா சாமீய்ய்ய்

:)

Porkodi (பொற்கொடி) said...

nijamave enaku thana vadai? i dont want your uppuku chappani vadai!

Porkodi (பொற்கொடி) said...

நெனச்சேன் தாராளமா மனசுவந்து வடையை தாரை வார்க்கும் போதே.. பரவாயில்ல, கறுப்பு நிலாவுல அநன்யானு ஒரு கேரக்டரை உருவாக்கி அதை நினைக்கறபடி படுத்தி எடுத்துட்டா போச்சு. ராஜிக்கு மூளை தான் போச்சு.. அநன்யா கிட்டருந்து என்னலாம் திருடு போக போவுதோ.. முருகா முருகா.

Porkodi (பொற்கொடி) said...

அப்புறம் இன்னும் ஒரு வயசு கூட நிரம்பாத என்னை பார்த்து "பெண்மணி"ன்னு விளிச்சதை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.

குழந்தை, இல்லனா கொடி குட்டி அதுவும் இல்லனா சின்ன பொண்ணு. இதுக்கு மேல ஒரு வார்த்த.. ஒரு வார்த்த சொன்னாலும் அண்ணன் அம்பியும் நானும் எங்க கீதா பாட்டி கிட்ட கம்ப்ளெயிண் பண்ணிடுவோம். பயம் இருக்கட்டும்! (என்னது கீதா பாட்டி யாரா.. சரியா போச்சு.)

முகுந்த்; Amma said...

மீ தி பர்ஸ்ட். எனக்கு தான் இன்னிக்கி வடை !

நெறைய ப்ளாக் அறிஞ்சொற்பொருள் படிச்சிட்டேனுங்கோ.

Super

Porkodi (பொற்கொடி) said...

ஸ்வப்னா பத்தின பதிவெல்லாம் நீங்களே எழுதினதா??? சூப்பரா இருக்கு.. :)என்ன பீலிங்கி என்ன டச்சு..! ஆமா எப்பலருந்து இந்த பாலக்காட்டு காமெடி மாமி அரிதாரம்? :)

எல் கே said...

இது செல்லாது . நீங்களே பதிவை போட்டு முதல் பின்னூட்டமும் போட்டா நாங்க ஒத்துக்கனுமா

முன் நவீனத்துவம் இதை விட்டுட்ட பாரு ... (அர்த்தம் கேக்காத எனக்கும் தெரியாது )

Prathap Kumar S. said...

முடில.... இந்த நோய் உலகம் முழுவதும் ரொம்ப தீவிரமாக பரவிட்டு வருது.
இதை தடுக்க ஒரே வழி நம்ம கேப்டனை பிளாக் ஆரம்பிக்க சொல்லிற வேண்டியதுதான்... ஆங்...

Madhavan Srinivasagopalan said...

'மோதுபலகை' நோய் இருந்தால், உங்கள் வீட்டில் / அலுவலகத்தில் உள்ள 'வலை' இணைப்பை துண்டித்துவிடவும்.
பின் குறிப்பு : ஆரம்பத்தில் கஷ்டமாத்தாம் இருக்கும், அப்புறம் பழகிடும்..

vetti said...

rendu naal oorukku poyittu varadhukkulla "Vada pocchheyyy"....

ஜிகர்தண்டா Karthik said...

வணக்கம் அக்கா,
ரங்கமணி அத்திம்பேர் சௌக்கியமா...
ஒரே ஆணி புடுங்கற வேலையா அதான் லேட்டு..
இல்லாட்டி மீ த ஃபர்ஸ்ட் அப்படினு ஆஜர் ஆகிருப்பேன்... ஆனா வடை போச்சு...
இப்போ மட்டும் எதுக்கு உள்ளேன் ஐயா சொல்ல வந்தேன்னு பாக்கறேளா...
எதாவது கவுஜயா இருக்குமோனு வந்தேன்... எல்லாமே முன் நவீனத்துவமா இருக்கே..
இப்படி கட்டுடைத்து எழுதி பின்றேள் போங்கோ....

இப்படிக்கு, ஜிகர்தண்டா

Ananya Mahadevan said...

@ஸ்ரீராமண்ணா,
வடையைப்பத்தி இவ்ளோ டீட்டெயில்டா டிஸ்கஸ் பண்ணினதுனால தி வடை வாஸ் கிவ்வன் டு பொற்ஸ். அடுத்த வடை உங்களுக்கு சமர்ப்பணம், சரிதானே? நமக்கு நாமே வடை? பொற்ஸ் கிட்ட சொல்லிடுங்க.. அந்த ப்ளாக்ல தான் அந்த அராஜகம்! //நான் எப்போ ஷைலஜாக்காவின் கவிதைகள் பின்நவீனத்துவமானவைன்னு சொன்னேன்??// பத்த வெச்சுட்டீங்களே பரட்டை!! எனக்கு அவங்களை தெரியாதுன்னு நான் அப்போவே சொன்னேனே.. நீங்க கேக்காம என்னை இப்படி எசகு பிசகா மாட்டி விட்டுட்டீங்களே? இனிமே கொஞ்சம் பத்திரமா இருந்துக்க வேண்டியது தான்..

@சேட்டைக்காரா,
உன் பெயரை நான் விஷமத்தனமாக பயன் படுத்தி இருக்கிறேன் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன்.. ஒரு விளம்பரம்..... ஹீ ஹீ..

@வஸந்த்...
யூ டூ????

@பொற்கொடி,
வேண்டாட்டி போ.. இங்கே வடைக்கி அடிச்சுக்க நிறைய ஆள் வந்தாச்சு.. தெரியும்ள? தம்பி எல் கே எதுக்கிருக்கான்? வந்து ப்ராம்டா வடை வாங்கிட்டு தன் கடமை செஞ்சுட்டு போயிடுவான். தெரியாட்டி தெரிஞ்சுக்கோ. உன் அராஜகத்துக்கு போட்டியா நான் என் தம்பி எல்.கேயை லாஞ்ச் செய்கிறேன்.. எல்.கே ஆர் யூ ரெடி?

பாத்தியா பொற்ஸ், சம்பந்தா சம்பந்தம் இல்லாம இப்படித்தான் நானும் ப்ளாக் ப்ளாக்கா போய் பின்னூட்டம் போட்டுண்டு இருந்தேன். அப்போ தான் சொன்னாங்க ப்ளாகோமேனியான்னு.. உனக்கும் அதே சிம்டம்ஸ்.. பாவம்.. எதுக்கும் நீ தெலுங்கு டாக்குடர் ராஜசேகரை போய்ப் பாரு.. நல்ல மருத்தா குடுப்பர்.
அப்புறம் இன்னும் ஒரு வயசு கூட நிரம்பாத என்னை பார்த்து "பெண்மணி"ன்னு விளிச்சதை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.

//குழந்தை, இல்லனா கொடி குட்டி அதுவும் இல்லனா சின்ன பொண்ணு. இதுக்கு மேல ஒரு வார்த்த.. ஒரு வார்த்த சொன்னாலும் அண்ணன் அம்பியும் நானும் எங்க கீதா பாட்டி கிட்ட கம்ப்ளெயிண் பண்ணிடுவோம். பயம் இருக்கட்டும்! (என்னது கீதா பாட்டி யாரா.. சரியா போச்சு.)//
நீ வயசு விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு எனக்கு தெரியும்.. ஒரு வாட்டி யாரோ ஒரு எட்டப்பன் உன்னை ஆண்ட்டீன்னு (உண்மைய) சொன்னதுக்கு அவன் அடுத்த ஜென்மத்துல பெஞ்சமின் பட்டனாத்தான் பொறப்பான்னு சபிச்சியே... அப்போவே நான் தெரிஞ்சுண்டேன் வயசு விஷயத்துல நீ ரொம்ப கறார்ன்னு. போன வாரம் உங்க சஷ்டியப்த பூர்த்தி நல்லா நடந்ததுன்னு CNNல சொன்னாங்க. வாழ்த்துக்கள்.
//ஸ்வப்னா பத்தின பதிவெல்லாம் நீங்களே எழுதினதா??? சூப்பரா இருக்கு.. :)என்ன பீலிங்கி என்ன டச்சு..! ஆமா எப்பலருந்து இந்த பாலக்காட்டு காமெடி மாமி அரிதாரம்? :)// பின்னே மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்ததையா பிரசுரிப்போம்? நாங்க என்ன தக்குடுவா? இல்லை நீயா? சுஜாதா சார் ஆவியை கூப்பிட்டு எழுத வைக்கிற கதையெல்லாம் உன் பேர் போட்டு பிரசுரிக்க.. இப்போ நீ என்ன சொல்ல வர்றாய்? எழுதலாம்ங்கிறியா எழுத வேண்டாம்ங்கிறியா? தெளிவாச்சொல்லு தாயீ.. அதுக்கேத்தாப்ல ஆப்போசிட்டா செஞ்சு கொஞ்சம் புண்ணியம் கட்டிப்பேன் இல்லையா?
உன் கமெண்டுக்கு பதில் எழுதற நேரத்துல 2 போஸ்டு போடலாம் போல இருக்கே! டூ மச் டாக்கிங்ஸ் ஐ ஸே!

Ananya Mahadevan said...

@முகுந்தம்மா,
இன்னிக்கி உங்களுக்கு வடை போச்சே!

@LK,
கவலை வேண்டாம், வடையை நிராகரித்த பொற்கொடிக்கு போட்டியாக யாம் உம்மை எமது படைத்தளபதியாக ஆக்கி இருக்கிறோம்! உமக்கு இப்பதவி சம்மதம் தானே?

@நாஞ்சில்,
ஒரு வேளை காப்டன் ப்ளாக் எழுத ஆரம்பிச்சா என்னெல்லாம் விபரீதம் நடக்கும்.. ”மொத்தம் இருக்குற தமிழ் ப்ளாக்கர்ஸ் முணு லட்சத்து முப்பதி மூணாயிரம் பேரு. இதுல காப்பி பேஸ்டு பண்றவங்க எண்ணிக்கை ரெண்டேமுக்கா லட்சம்பேரு. சுயம்மா மொக்கை போடுறவங்க நாப்பத்திமூவாயிரம் பேர், கொசுவத்தி சுத்தி சுயபுராணம் பாடுறவங்க பத்தாயிரம், கவுஜ எழுதறவங்க ஒரு லட்சத்து எட்டாயிரத்து ஐன்னூத்தி பத்து பேரு. கமெண்ட்டு மாடரேஷன் எனேபிள் பண்ணினவங்க ஒரு லட்சத்து மூவாயிரம் பேரு, மாடரேஷன் பண்ணாதவங்க ஒரு லட்சத்தி ஏழாயிரம் பேரு, கமெண்டே இல்லாம தவிக்கரவங்க 2 லட்சத்து நாற்பத்திஎட்டாயிரம் பேரு. எவ்ளோ தான் புது முயற்சி பண்ணினாலும் ஈயடிச்சுண்டு இருக்கற ப்ளாகுகளின் எண்ணிக்கை எண்பதனாயிரம்”, என்னது இன்னும் வேணுமா? சரி பாக்கிய நம்ம சேட்டை கிட்ட விட்டுட வேண்டீது தான். சேட்டை, ப்ளீஸ் கண்டின்யூப்பா..

@மாதவன் சார்,
ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும் அப்புறம் பழகிவிடும்.எது சார்? மோதுபலகையா இல்லே ப்ளாக் படிக்கறதா?ஒருவேளை ரெண்டுமோ?

@வெட்டி,
வாங்க வாங்க.. மெதுவா பார்த்து வாங்க.. இருங்க ஒரு நிமிஷம் சேப்பு கம்பளம் போட்டுடறேன், மொதல்ல.. அப்புறம் சூடா ஏதாவது.. ஓ சாரி, வடை இல்லை, வேண்ணா போண்டா, பஜ்ஜீ, இப்படி ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா? இல்லே ஜில்லுன்னு ஜிகர்தண்டா எடுத்துண்டு வர சொல்லட்டுமா? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிங்க. வணக்கம்!

@ஜிகர்,
அடி தூள் பண்ணியூட்டியே அம்பீ? பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு கேட்டியா?

எல் கே said...

//. தெரியாட்டி தெரிஞ்சுக்கோ. உன் அராஜகத்துக்கு போட்டியா நான் என் தம்பி எல்.கேயை லாஞ்ச் செய்கிறேன்.. எல்.கே ஆர் யூ ரெடி?/

ulkutthu ethuvum illaye ithula :D

@porkodi

paatti nalla irukeengala

அண்ணாமலையான் said...

உங்க திறமை பிரமாதம்...

துபாய் ராஜா said...

:-)
:-))
:-)))))))))))))))))))))))))))))))
:-o
X-(

தி. ரா. ச.(T.R.C.) said...

உள்ளேன் ஐயா:-)

பத்மநாபன் said...

மத்த போபியா எல்லாம் சரி ... முக்காவாசி முடிச்சிட்டு , தோணலை ..தோணலை ன்னு ஐடியா வசூல் பண்ணி ஸேப் அப் பண்ணி முடிக்கிறது பெயர் என்ன போபியா ....பினிஷிங்பிராண்டியோ போபியாவா ? ....எனக்கு இஸ்ஸ்டார்ட்டிங் பிராண்டியோ போபியா ....அட்ட பெயர் எல்லாம் கலக்ஸ் ...
( டுபுக்கு க்கு அர்த்தம் மாறியே போச்சுங்கறது தனி விஷயம்.... தானை தலைவர் நகைச்சுவை மன்னன் )

ஸ்ரீராம். said...

எல்லா உண்மையையுமே சொல்லிட்டீங்களா? இல்லை சொல்லாத ஏதோ ஒண்ணு பாக்கி இருக்கா?

ஏன்னா "பயனுள்ள பகிர்வு", "அருமை" "ரைட்டு ரைட்டு" "பகிர்வுக்கு நன்றி" போன்றவற்றை விட்டு விட்டீர்களே..

திவாண்ணா said...

பாலைவனத்திலே ஏது மெடிக்கல் வசதி. எங்க ஊருக்கு வாங்க. சகாயமான சார்ஜ் பண்ணி நோயை குணப்படுத்தறோம்! ஒரு ப்ளாகுக்கு ஒரு அம்பதாயிரம் போதும்!

Porkodi (பொற்கொடி) said...

1. வடையை என்னுடைய சொந்த உழைப்பில் வாங்குவதையே விரும்புகிறேன். :D

2. அடப்பாவமே.. ப்ளாக்கர் பாத்து பித்து பிடிச்சுடுத்தா? நல்லா பாருங்க அது ஆயுஷ்ஹோமமா இருக்கும்.

3. இதெல்லாம் ஒரு வியாதின்னு கவலைப்படலாமா யக்கா.. முன்னாடி எல்லாம் கமெண்ட் மாடரேஷன் யாருக்குமே தேவைப்படாத சமயம். ஓனர் கடையை பூட்டிட்டு தூங்க போனா மறுநாள் வர்றதுக்குள்ள அங்க செஞ்சுரி டபுள் செஞ்சுரி எல்லாம் அடிச்சு வெப்போம்!! இப்போலாம் தான் ஆணி புடுங்கறதால டைம் பத்த மாட்டேங்கு. :(

4. காமெடி மட்டுமில்ல செண்டிமெண்டும் நல்லா எழுதறீங்கன்னு தான் சொன்னேன். (ஆக நீங்க எது எழுதினாலும் நல்லா இருக்கு, அப்போ இனிமே எழுத மாட்டீங்கல்ல.. ரிவர்ஸ் லாஜிக் படி)

5. எல்.கே எள்ளுத் தாத்தா.. காலை காமிங்கோ ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@போர்கொடி வடையை என்னுடைய சொந்த உழைப்பில் வாங்குவதையே விரும்புகிறேன். :D
போண்டாவயே சூடு பண்ணி கொடுத்தாதான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சவே நீ வடையை வுடுவையா?

Porkodi (பொற்கொடி) said...

//போண்டாவயே சூடு பண்ணி கொடுத்தாதான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சவே நீ வடையை வுடுவையா?//

TRC அங்கிள்! நீங்க இப்படி சொல்லலாமா? கீதா பாட்டி வரலைன்னதும் அவங்க போண்டாவையும் நான் தின்னு தீர்த்தா தான் ஆச்சுன்னு மிரட்டி என்னை சாப்பிட வெச்சீங்க.. நான் எவ்ளோ சமர்த்தா சாப்பிட்டேன்? பாராட்டலேன்னாலும் இப்படி என்னை அசிங்க படுத்தக் கூடாது ஆமா!

Porkodi (பொற்கொடி) said...

அநன்யா, காமெடி டாடி பதிவை படிச்சவுடன் ரொம்ப ஆச்சரியமா போச்சு -‍ நீங்க தென்னாங்கூர் போயிருக்கீங்களான்னு! கோவில் எப்படி இருந்துதுன்னு சொல்லவே இல்லியே? அப்பா, அம்மா, நான் குருஜி ஹரிதாஸ் கிரியின் வெறியர்கள். அவருடைய பஜன் எல்லாம் ஓடிட்டே இருக்கும் வீட்ல. :))

எப்படியாவது ஒண்ணு ஒண்ணரை வருஷத்துக்கு ஒரு தடவை போயிடுவோம். இந்த தடவை நான் இந்திய போன போது பெரும் பிரயத்தனத்துக்கு அப்புறம் போயிட்டு வந்துட்டேன், அடுத்த முறை எப்படியோ.

சரி, நீங்க‌ என்னை வீட்டை விட்டு துரத்தறதுக்கு முன்னாடி நானே ஓடிடறேன்.

(கடவுளே எந்த நேரத்துல இந்த பழைய பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சேனோ..)

தக்குடு said...

ஆத்தா, நான் தக்குடு வந்துருக்கேன்...:)

தக்குடு said...

டுபுக்கு தலைவர் பெயருக்கு அடுத்து இந்த குட்டிப்பையனோட பெயரா??? அனன்யா! என் மேல உங்களுக்கு இருக்கும் பாசத்தை பாக்கும்போது கண்ணைகட்டுது....:) அவரு பெரிரிரிரிரிய வித்வான், நான் சாதாரண 'வித்து'வான்....:)

தக்குடு said...

பாவம், வியாதி உங்களுக்கு ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்ல இருக்கு போலருக்கு??? குணப்படுத்துவது ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எப்படி கமெண்ட் போடணுன்னு சொன்னதற்கு மிக்க நன்றி நன்றி

மங்குனி அமைச்சர் said...

//டாஷோபோர்டியா
ப்ளாகோமேனியா //

இந்த நோய்களுக்கு என்ன மெடிசன் எடுக்க வேண்டும் , உடனே பதில் கூறவும் , அர்ஜென்ட் ...

பனித்துளி சங்கர் said...

நீங்க என்னை ரொம்ப பயமுறுத்திருங்க .
இருங்க இருங்க சக்திமான்கிட்ட சொல்கிறேன் !

ஹுஸைனம்மா said...

உங்கள அங்க இங்கன்னு (பிளாக்லத்தான், அபுதாபில இன்னும் இல்ல) பாத்திருந்தாலும், இப்பத்தான் முதல் முறை உங்க பிளாக்குக்கு வர்றேன், வரும்போதே டெரர் பதிவு!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அனன்யா, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Ananya Mahadevan said...

@எல்.கே,
தைரியமா முன் வந்து வடை வாங்கிக்கோ. அப்புறம் நம்ம சுத்துவட்டார 18 பட்டிக்கும் நீ தான் வடை வைத்தியநாதன். ஆமா..

@அண்ணாமலையான், ஒரு வார்த்தைக்கு மேலாக கமெண்டினத்துக்கு நன்றி.

@துபாய் ராஜா, இதெல்லாம் நல்லா இல்லே, ஆமா.

@TRC அவர்களே,
அட்டெண்டன்ஸ் மார்க்க்டு

@பத்மநாபன்,
என் குருதேவரைப்பத்தி ஏதாவது எடக்கு மடக்காய் சொன்னால் ஒரு வேளை அவர் என்னை சபிக்க இந்த பக்கம் ஆகாச மார்க்கமாக வருவாரோன்னு நினைச்சு தான் அவர் பெயரை பயன்படுத்தினேன். ஆளைக்காணோம்! :(

@ஸ்ரீராமண்ணா,
பகிர்வுங்கற வார்த்தை இல்லாத பின்னூட்டமே இருக்க முடியாதுன்னு நிச்சியமாய் சொல்ல முடியும்.படிக்கவே படிக்காமல், அருமையான பகிர்வு, பகிர்வுக்கு மிக்க நன்றி, இந்த பகிர்வினால் என் ஜென்மம் சாபல்யமாகி விட்டது, என் கண்கள் திறந்து விட்டீர்கள், போன்ற பின்னூட்டங்கள் விட்டு தான் விட்டேன்.

@திவா அண்ணா,
இன்னும் இந்த நோய்களுக்கு மருந்தே கண்டு பிடிக்கலையாம். அங்கே ரிசர்ச் பண்ணறவாளும் இப்போ ப்ளாக் ப்ளாகா சுத்திண்டு இருக்காளாம். ஸோ ரூல்டு அவுட்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)

@பொற்கொடி,
காமெடி டாடி பதிவு படிச்சதுக்கு நன்றி. 1997ல தக்‌ஷிண பண்டரீபுரத்துக்கு அந்த பெயர் ஏற்படாத காலத்துல முதல் வாட்டி போனப்போ அந்த கோவில் அழகுல மயங்கி பல வருஷம் கழிச்சு மீண்டும் போயிட்டு வந்தோம். ஹரிதாஸ்கிரி அவர்களின் ராதா கல்யாணம் டீ.வீ.டீ அடிக்கடி காண்பதுண்டு. வீட்டுல வாங்கி வெச்சுண்டு இருக்கோம். அடி தூள். இங்கே அபுதாபியிலும் அவர்கள் மண்டலி செயல்படுகிறது.

உன் கருத்துக்களை பல முறை நாம டிஸ்கஸ் பண்ணிட்டுதால அடுத்ததா இடம் பிடித்திருக்கும் கமெண்டை பார்க்கலாம். :P

@தக்குடு,
நீ அவசரப்பட்டு உன்னை நான் கெளரவிச்சதா நினைச்சுண்டு இருக்கியா? அசடு அசடு!

@ஸ்டார்ஜன்,
வாங்க, உங்க வலைத்தளத்துல எனக்கு ரொம்ப பெரிய மரியாதை பண்ணி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி!

@மங்குனி,
இன்னும் மருந்து கண்டு பிடிக்கலையாம்பா.. கொஞ்சம் வெயிட்டீஸ் எப்படியும் இந்த நூற்றாண்டு முடியறதுக்குள்ளே கண்டு பிடிச்சுடுவாங்களாம்.

@பனித்துளி,
நானே இங்கே பயந்து தான் போய் இருக்கேன். ப்ளீஸ் கால் தி சக்திமான்.

@ஹூஸைனம்மா,
வெல்கம் வெல்கம் டு மை ப்ளாக். வருகைக்கு நன்றி. இந்த மாதிரி வ்யாதிகளைப்பத்தி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டியது என் கடமையில்லையா? ஒரு ப்ளாக்கர்ன்னு நமக்கும் சில வேலைகள் இருக்கே. :-)
நீங்கள் என் ப்ளாக் பக்கம் வந்தது ரொம்ப சந்தோஷம்.

கண்ணா.. said...

இந்த போபியோக்கு டேஷ் போர்டுக்கு போகாமலே.. இ மெயிலில் கமெண்ட்டுகளை மாடரேட் பண்ணும் செட்டிங்கை நிறுவி விடுங்கள்.

யாரச்சும் இண்டு, இடுக்கு, சந்து, பொந்துல இருந்து கமெண்ட் போட்டாலும் நமக்கு மெயில் வந்துரும். அதிலிருந்தே அப்ரூவ பண்ணி விடலாம்

Madumitha said...

இதுல இவ்ளோ
சமாச்சாரம்
இருக்கா அம்மே?

arul said...

you are rocking

Ananya Mahadevan said...

Thank you for visiting my blog :)

கதம்ப உணர்வுகள் said...

வந்துட்டேன் இனி நிதானமா படிக்கிறேன்...

தொடக்கமே அட்டகாசமா இருக்கே.. பொறுமையா படிக்கனும்.. ரசிச்சு படிச்சா தான் அனன்யா மாதிரியே க்யூட்டா கமெண்ட் போட முடியும் என்னால...

geethasmbsvm6 said...

குழந்தை, இல்லனா கொடி குட்டி அதுவும் இல்லனா சின்ன பொண்ணு. இதுக்கு மேல ஒரு வார்த்த.. ஒரு வார்த்த சொன்னாலும் அண்ணன் அம்பியும் நானும் எங்க கீதா பாட்டி கிட்ட கம்ப்ளெயிண் பண்ணிடுவோம். பயம் இருக்கட்டும்! (என்னது கீதா பாட்டி யாரா.. சரியா போச்சு.)//

நான் மண்டபத்திலேயே இல்லாதப்போ என் மண்டையை உருட்டின போர்க்கொடியை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். அதுக்கு அவங்களுக்குப் பனிஷ்மென்ட் இந்த வருஷ தீபாவளிக்கு எனக்கு சாமுத்ரிகா பட்டிலே என் பேரும், பக்கத்திலே என்னோட ரங்க்ஸ் பேரும்போட்ட புடைவை ஒரு ஏழு(வானவில் கலர்) வாங்கிக் கொடுத்தால் போதும். :)))

geethasmbsvm6 said...

யக்கோவ், இந்த வியாதிக்கெல்லாம் மருந்து ஏது? கிடையவே கிடையாதாக்கும். :)

Related Posts with Thumbnails