சென்ற பதிவில் என் தங்கை மணியின் ரெட்டை வால்ஸ் அருண் வருண் பத்தி சொல்லி இருந்தேன். ரெண்டரை வயது ரெட்டை வாண்டுக்கள். இவங்களைப்பத்தி ஒரு பழைய பதிவு கூட எழுதி இருக்கேன்.
இந்த ரெண்டு பேருக்கும் என்னிடம் ரொம்ப பிடித்த விஷயமே என்னுடைய எக்கோலேக் பெட்டி தான். அவர்கள் உயரத்தை விட சற்றே உயரமான தள்ளும் வசதியுடன் கூடிய பெட்டி. அதுக்கு பெய்யப்பா பெட்டின்னு பேர் வெச்சிருக்காங்க. .
அந்த பெட்டி மேல வருணுக்கு பயங்கரமான கண். எப்போப்பார்த்தாலும் அதை உருட்டி விளையாடுவான். இல்லாட்டி கீழே படுக்க போட்டு இருந்தா, அதன் மேல ஏறி குதி குதின்னு குதிப்பது. இதே தான் வேலை.
அன்னிக்கு எங்கேயோ போயிட்டு வந்து உடை மாற்றிக்கலாம்ன்னு பெட்டியை திறந்தப்போ ரெண்டு வாண்டும் என்கூடவே வந்திடுத்து. நானும் அதை லாக் பண்ணாம மூடி வெச்சுட்டு, சமர்த்தா இருங்கோன்னு இவர்களை வார்ன் பண்ணிட்டுத்தான் ட்ரெஸ் சேஞ்சு பண்ணிக்க போனேன். வந்து பார்த்தப்போ என் தலை 360 டிகிரியில சுத்திடுத்து!
என் பெட்டி அலங்கோலமா திறந்து கிடக்கு.
ட்ரை வாஷ் பண்ணி வெச்சிருந்த பட்டுப்புடவை எல்லாம் கீழே சிதறி கிடக்கு. மாத்திரைகள் ஒரு பக்கம் இறைஞ்சு கிடக்கு.
துணிகள் எல்லாம் இங்கொண்ணும் அங்கொண்ணுமாக வீடெல்லாம் பரப்பப்பட்டு சிலது நைனா சுருணைத்துணி போல இருக்குன்னு சொல்லிட்டு கொல்லைப்புறத்துக்கு எடுத்துண்டு போயிண்டு இருக்கார்.
பெட்டியை காலி பண்ணின சந்தோஷத்தில் வருண் அதுக்குள்ளே இறங்கி கன கார்யமா மூச்சா போயிண்டு இருந்தான்!!!. அருண் அந்தப்பக்கம் என் நகைப்பெட்டியில் இருந்த மாலையை எடுத்து அழகு பார்த்துண்டு இருந்தான்!!!
எனக்கு அழுகை அழுகையா வந்துடுத்து.
அம்மாஆ.......ன்னு கத்தினேன். என்னாச்சுன்னு அம்மா ஓடி வந்து பார்த்து, ச்சீ அசடு, இதெல்லாம் இவங்க திறமைக்கு ஒண்ணுமே இல்லை. இன்னும் பாருன்னு சொல்லிண்டே குழந்தையை நகர்த்தி டயப்பர் கட்டி மூச்சா துடைத்து, வீடு பூரா இரைஞ்ச துணிகளை எல்லாம் தேடி எடுத்துண்டு வந்து மடிச்சு வைச்சு உஸ்ஸ்ஸ்!! தாவு தீந்து போயிடுத்து!
இதே மாதிரி கிச்சனில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கீழே ஒரு ஸ்வீப்பில் இறைத்தது, அம்மா சாப்பிடும் போது 270 டிகிரியில் கையை சுத்தி தட்டை கீழே தள்ளி விடுவது, பூவை ஒரே செகண்டில் பிய்த்துப்போடுவது, புத்தும் பது சினேகிதி அவள் விகடனைக்கொண்டு எப்படி வீடு துடைப்பது உட்பட பல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தெரிஞ்சு வெச்சிருக்கான் வருண். இதுக்கெல்லாம் சப்போர்டிங் சிங்கிடி அருண். தம்பி செய்யறது எதுவா இருந்தாலும் சரியாத்தான் இருக்கும்ன்னு ஓடி வந்து கூட நின்னுப்பான். ஏதாவது ஹெல்ப் வேணுமா என்பது போல நின்னுண்டு கனகார்யமா துஷ்டத்தனத்துக்கு துணை போவான்.
வருணுக்கு ஷவர், போலீஸ் இது ரெண்டும் தான் பயம். எப்போவும் போலீஸ் வரப்போறதுன்னு சொல்லியாச்சுன்னா போதும், அடங்கி ஒடுங்கி அமைதி ஆயிடுறான். மத்தபடி ஃபுல் ஃபார்ம்ல ரகளை தொடருது!
போன வருஷம் வாஷ் பேசின்கிட்டே மூஞ்சி அலம்பிண்டு இருக்கும்போது எங்கம்மாவின் அழுகுரல் கேட்டது. என்னன்னு கொஞ்சம் காதைத்தீட்டிண்டு கேட்டா, வருண் வருண்ன்னு சொல்லி ஏதோ பேசிண்டு இருக்காங்க.
கிச்சனுக்குள்ளே எட்டிப்பார்த்தா 1 வயசு வருண் பாப்பாவுக்கு இணையா எங்கம்மா கீழே முட்டி போட்டு உக்காந்துண்டு ”என்னால முடியலை டா வருண், நீ ரொம்ப துஷ்டத்தனம் பண்றே”ன்னு சொல்லி கண்ல தண்ணி! என்னம்மா ஆச்சுன்னு கேக்கறேன், பாருடீ, டம்ளர் டம்ளரா தண்ணி எடுத்துண்டு வந்து திறந்திருக்கும் அரிசி மூட்டைக்குள்ளே கொட்டிண்டு இருக்கான்னு சொன்னாங்க. இதெல்லாம் ஒண்ணுமே புரியாம வருண் திரு திருன்னு முழிச்சுண்டு இருக்கான். இந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் களுக்குன்னு சிரிச்சுடுவேன்.
17 comments:
நல்ல பகிர்வு அனன்யா.. உங்க தங்கை பசங்க அசத்துறாங்கபோல.. சுட்டிப்பசங்க.
பாகிஸ்தானை கூட சமாளிச்சடலாம் ... இந்த வாண்டுங்க பண்ற அட்டகாசத்தை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்... எங்கவீட்டு வாண்டு இருக்கே..... ஒரு டெரர்..... :)))
whats yr gift to those 2 boys from abhidhaabi, choclates or scent bottle
இதெல்லாம் ஒரு விசயமா. திவ்யாவோட ரகளைக்கு முன்னாடி இவங்க ரெண்டு பெரும் நிக்க முடியாது
அருண் வருண் அடிக்கற லூட்டியில் உங்கள்க்கு போர் அடிக்காது அனன்யா..அரிசி மூட்டையில் தண்ணி ஊதினது படிச்சு சிரிப்பா வந்தது ...சமத்து பசங்க ...என்ஜாய்..
//தம்பி செய்யறது எதுவா இருந்தாலும் சரியாத்தான் இருக்கும்ன்னு ஓடி வந்து கூட நின்னுப்பான்//
இதை தான் தம்பியுடையான் படைக்கு அஞ்சான்ன்னு சொல்றாங்களோ... உன்னை படைன்னு நான் சொல்லலை ஒகே வா? ஹி ஹி ஹி
Cute post about kuttis... enjoy .........
@ஸ்டார்ஜன்,
மிக்க நன்றி! ஆமா செம்ம ரகளை இங்கே!
@நாஞ்சில்,
ஹாஹா.. உங்க வீட்டு வாண்டுங்களைப்பத்தி எழுதுங்களேன். படிக்க ஆவலா இருக்கு. இந்த வருண லீலைகளை ஒரு சிரீஸா எழுதலாம் போல இருக்கே! அவ்ளோ ரகளை பண்றான்
@ராம்ஜி,
இவங்க சுத்தமா சாக்கலேட்டு எல்லாம் சாப்பிடறது இல்லை. இவங்களுக்கு நிறைய ஸ்னாக்ஸ் பண்ணி எடுத்துண்டு வந்தேன். ஈஸ்ட் ஆர் வெஸ்டு, ஹோம் மேட் இஸ் பெஸ்டு இல்லையா? ஹெல்த்தி கூட.. அதான். ரொம்ப ரசிச்சு சாப்பிட்டாங்க.
@எல்.கே,
திவ்யாவின் லூட்டி பகுதியில எழுத வேண்டியது தானே. இங்கே இன்னும் நிறைய நடக்குது. எல்லாத்தையும் நினைவு வெச்சுண்டு எழுதறது கஷ்டம்.
@சந்தியா,
ரொம்ப கரெக்டு, போரா? டைமே இல்லை! அவ்ளோ பிஸி!
@அ.த,
உன் பசங்களை நீ சமாளிக்கும் விதத்தை பதிவு போடுவே இல்லே.. அப்போ வெச்சுக்கறேன் உன்னை! கிர்ர்..
இந்த குழந்தை பருவம் மீண்டும் வரப்போவதில்லை இருக்கும்போதே ரசித்துக்கொள்ளுங்கள் . பகிர்வுக்கு நன்றி
"லீலைகள்" தொடரட்டும்.... They are cute!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...
சுட்டிப்பசங்க...
இந்த வாண்டுங்க பண்ற அட்டகாசத்தை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்...
துபாய் Aunty..
உங்க வீட்ல நீங்க மட்டும்தான் அறுந்த வாலுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன், எல்லாருமே அப்படித்தானோ??
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஆஹா...
நீங்க போய்தான் சென்னை கலங்க போறதுன்னு நெனச்சேன்...
ஆனா, உங்க தங்கை பசங்க உங்களையே கலக்கிட்டாங்களே... அதுக்காக, அவங்களுக்கு என் சார்பாக ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...
குட்டீஸ்னா கலக்கல்... கலக்கல்னா குட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
தொடருங்கள்....
ட்ரிப் நன்றாக இருந்ததா? வீட்டாருடன் நல்ல முறையில் சந்தோஷமாக விடுமுறையை கழித்து விட்டு சீக்கிரம் வரவும்..
//பெட்டியை காலி பண்ணின சந்தோஷத்தில் வருண் அதுக்குள்ளே இறங்கி கன கார்யமா மூச்சா போயிண்டு இருந்தான்// suuuuuuuuuuper....:)
While in deep tension, we can relax just by seeing kids face..
Enjoy with those twins(I think)
கடைசி வரியைப் படித்துச் சிரித்து விட்டேன். பக்கத்து வீட்டில் ஒரு சிறுவன் அவன் தாயை அழ விடுவதை அடிக்கடி பார்த்து வருகிறேன்.
உங்க ஸ்டைல்ல அழகா சொல்லிருக்கிங்க
Post a Comment