Pages

Thursday, September 16, 2010

அருண் மாஞ்சாரோ செல்ல வருண் மாஞ்சாரோ...

பல்லாயிரக்கணக்கான மெயிலின் மூலம் ப்ளீஸ் அநன்யா அருண் வருண் பத்தி இன்னும் நிறைய எழுதுங்கன்னு ரசிகர்கள்(!!??!!) கேட்காததுனால இத்தனை நாள் கழிச்சு இந்த போஸ்டு. இந்தப்பதிவு நம்ம சந்தியாவுக்காக மட்டும்.. ஹிஹி!

சந்தியா நான் எதை விடுவேன் எதைச்சொல்லுவேன்?. நிறைய அழகழகா பண்றாங்க.

ஃபோன்ல இஷ்டத்துக்கு நம்பர் டயல் பண்ணிண்டு இருந்த வருண் திடீர்ன்னு பயந்து அழ ஆரம்பிச்சுட்டான். என்னம்மான்னு ஓடிப்போய் கேட்டா, ”ஆடோ திட்டா” ன்னு சொன்னான்.(அருஞ்சொற்பொருள்= யாரோ திட்றா) ரீஸீவரை எடுத்து காதுல வெச்சுண்டு பார்த்தா, ”திஸ் டெலிஃபோன் நம்பர் டஸ்னாட் எக்ஸிஸ்ட்” னு ஒரு பொண்ணு கொஞ்சம் கடுமையா சொல்லிண்டு இருக்கா!!!

பெய்யம்மா ஹாப்பி பர்த்டே ஆச்சு. அம்மா ஹாப்பி பர்த்டேக்கு கேக் கட் பண்ணி கொண்டாடியாச்சு. கிருஷ்ணா ஜேஜா பர்த்டேக்கு பாட்டி ஏகப்பட்ட பலகாரம் பண்ணினாங்க. அதே மாதிரி பிள்ளையார் ஜேஜா ஹாப்பி பர்த்டேன்னு சொன்னது தான் தப்பா போயிடுத்து.. உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ன்னு ஊதி, விளக்கை பூஜை நேரத்துல அணைச்சுட்டாங்க..

அன்னிக்கு அப்படித்தான் ஹோட்டலில் இருந்து ஏதோ ஆர்டர் பண்ணி இருந்தா தங்கை மணி. வருண் பாப்பா அவசரமா போய் கதவை திறந்து,” சவரண பவன் சவரண பவன்”னு கத்தி, டெலிவரி பாய்க்கு சிரிச்சு சிரிச்சு, வயித்த வலியே வந்திடுத்து! ஆமாங்க சரவணபவன்ல தான் ஆர்டர் பண்ணி இருந்திருக்கா.

அருண் சாதாரணமா பேசும் போது ரொம்ப energy conservation conscious ஆ இருப்பான். ரொம்பவே சின்ன குரல்ல தான் பேசுவான். அன்னிக்கி அப்படித்தான் ”சோமஸேறி போடிங்க பெய்யம்மா சோமஸேறி போடிங்க”ன்னு சொல்லிண்டு என் பின்னாடியே சுத்திண்டு இருந்தான். அவனை இழுத்து காதுகிட்டே வெச்சுண்டு என்ன அருண்னு கேட்டா சோமசேறின்னு தெளிவா(!!) மழலையில கேக்கறான். ஒரு கட்டத்துல அவனுக்கு பொறுமை போயி அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு இன்னும் புரிஞ்சபாடில்லை. அப்புறம் வருண் குத்து மதிப்பா எடுத்து சொன்னப்போ தான் புரிஞ்சது. any guesses? TOM AND JERRY வேணுமாம் டீவீயில.. உஸ்ஸ்!! சிரிச்சு சிரிச்சு முடியலை. எப்போவுமே யுவன் ஷங்கர் ராஜாமாதிரி லேசா அலட்டிக்காம காத்தை மட்டும் உள்வாங்கி வெளியே விட்டு பேசி முடிச்சுடுறானேன்னு ரொம்பவே ஆதங்கப்பட்டேன்!

வருணுக்கு கதை சொல்ற ப்ராஜக்டு இருக்கே, அது ரொம்ப லொள்ளு! இவனுக்கு இப்படித்தான் ஒரே ஒரு வாட்டி Noddy கதை சொல்ல ஆரம்பிச்சேன், அது டெய்லி பழகிடுத்து. முதல்லே ஒரு 10 கதை தான் கேட்டுண்டு இருந்தான். இப்போ தினமும் அது கிராஜுவலா அதிகரிச்சு 289 கதை கேக்கறான். 7 மணிக்கு கதை சொல்ல ஆரம்பிச்சா சுமார் 11.00 மணி வரைக்கும் கேக்கறான். அதுக்கப்புறமும் நாம முழிச்சிருந்தா, ஏதோ அவனாலான உபகாரம், பெய்யம்மா, ட்வாகன் கட சொல்லிங்கன்னு கேக்கறான்! ட்வாகன் அருஞ்சொற்பொருள் = Dragon! என்னால முடியலை!

வருணுக்கு வைப்பர் வருண்ன்னு ஒரு பட்டப்பேரே வெச்சுடலாம் போல இருக்கு! அந்த அளவுக்கு wind shield wipers மேல அவனுக்கு தீவிர லவ்வு. ரெண்டு ஆள்காட்டி விரல்களையும் நேரா வெச்சுண்டு தி வைப்பர்ஸ் ஆன் தி பஸ் கோ வீஸ் வீஸ் வீஸ் (ஸ்விஷ் ஸ்விஷ் ஸ்விஷ்ஆமா!!!, வருணுக்கு ஷ இன்னும் வரலை, ஸவர், கோல்டு ஃபிஸ்) ன்னு பாடும்போது அப்படி ஒரு அழகு. அன்னிக்கு அப்படித்தான் செம தூக்க கலக்கத்தோட கட சொல்லுங்க பெய்யம்மான்னு கேட்டான். நாடி என்ன பண்ணினான்....ன்னு நான் ஆரம்பிக்கும்போதே, ஒரே மழையான்னு கேட்டான். குழப்பத்தோட என்னன்னு கேட்டேன். மழை எதுக்கு வருண்னு கேட்டா, மழை வந்தாத்தான் வைப்பர் போடுவாங்க பெய்யம்மான்னு சொல்றான்!!.

 ஒரு கட்டத்துல செம்ம டென்ஸனாயிட்டேன். மழையெல்லாம் இல்லை வருண், ப்ரைட் சன்னி டே தான்னு சொன்னேனோ இல்லையோ, ஒரே அழுகை.. கட்டாயம் வைப்பர் பத்தி தான் கதை சொல்லணும்ன்னு ஒரே ரகளை! நானும் அழுதுண்டே வைப்பர் துடைச்சான், வைப்பர் ஸ்டக் ஆனது, வைப்பர் ரிப்பேர் ஆன கதை எல்லாம் சொல்லி பார்த்தேன்.. ம்ஹூம்.. அப்போவும் விடலை..கடைசியில தமிழ் சினிமா ரேஞ்சுக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு பிள்ளையார் வாங்கப்போன நாடி ஃப்ரெண்ட்ஸ்கூட கார்ல மழையில மாட்டிண்டு வைப்பர் ரிப்பேர் ஆயி, மெக்கானிக் ஷெட்ல போய் ரிப்பேர் பண்ணி, வீட்டுக்கு ரிட்டன் ஆன கதையை ஃபுல் டால்பி டிஜிட்டல் எஃபக்ஸோட சொன்னேன், திருப்தியா 12.30க்கு தூங்கிட்டான்!

அருணுக்கு சளி ஜாஸ்தி ஆனப்போ ஹாஸ்பிடலுக்கு போய், நெபிலைஸர் வெச்சாங்க, அப்போ அவன் அமைதியா இருந்தானாம், நர்ஸ் அகமகிழ்ந்து, இப்படி ஒரு குழந்தையான்னு ஆச்சரியப்பட்டாளாம்! இதுவே வருணா இருந்தா, அந்த நர்ஸூக்கே நெபிலைஸர் வெக்க வேண்டி வந்திருக்கும்ன்னு தங்கைமணி சொன்னா.. சிரிப்பு தாங்கலை!

கொஞ்ச நேரம் ஹாலில் இருந்துட்டு கிச்சனுக்கு போனால் அங்கே அருணின் கைவண்ணம்! உடனே ஃபோட்டோ எடுத்தேன். நான் போட்ட சத்தத்தில் அவன் மறுபடியும் வந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தான்!
படத்தில் அருண் இட்லி வார்த்த அழகு உங்களுக்காக.

காடாக வளர்ந்துட்ட முடியை வெட்டலாம்ன்னு ஒரு சலூனுக்கு கூட்டிண்டு போனோம். முதன் முறையா ஆண்கள் சலூனில் நானும் அம்மாவும் நுழைஞ்சோம். வருணின் அழுகை, நச்சு எல்லாம் பார்த்து அந்த கடைக்காரர் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டார். எப்படியோ சமாதானப்படுத்தி குத்துமதிப்பா வெட்டி விட்டார். இன்னும் கொஞ்சம்ன்னு கேட்டிருந்தா அவர் சலூனை மூடிட்டு எஸ்கேப்பாகி இருப்பார் என்பது மட்டும் திண்ணமா தெரிஞ்சது!
சலூன்லேயும் பெய்யம்மா ஃபோட்டோ எடுப்பா இல்லே?எப்பூடீ?


டெய்லி ஸ்கூலுக்கு போகும்போது, ஒவ்வொரு பொய்க்கு மசிவதும், அதை நம்புவதும், இவங்களை விட்டுட்டு வெளீல போகும்போது ஏதாவது சொல்லி சமாதானப்படுத்துவதும் இந்த பருவத்துக்கே உரிய அப்பாவித்தனமும் அழகும், அப்பப்பா..

டென்னிஸ் தி மெனஸ் பார்த்துண்டு இருந்தேன்.(அது வேற தனியா எதுக்கு? வீட்டுலேயே டபுள் டென்னிஸ் இருக்காங்களே!!) அதுல ராட்சத ரகளைகள் பண்ணி மிஸ்டர் வில்சன் என்ற பக்கத்துவீட்டுக்காரரை டார்ச்சர் செய்யும் டென்னிஸ், அவர் வீடு காலி பண்ணிண்டு போகும் தருவாயில், ”மிஸ்டர் வில்ஸன், யூ ஆர் மை பெஸ்டெஸ்டு ஃப்ரெண்ட் இன் தி ஹோல் வேர்ல்ட்’ன்னு சொன்னப்போ என்னையும் அறியாமல் வருணை வாரி அணைத்து முத்தம் கொடுத்தேன். சிரிச்சுண்டே, பெய்யம்மா கட (kada) சொல்லுங்க என்றான்!

30 comments:

எல் கே said...

anaithum arumai.. photos avoid pannalamee

கௌதமன் said...

நல்ல அனுபவங்கள். குழந்தைகளின் சுட்டித்தனமும், மழலையும் எப்பொழுதுமே ரசிக்கத் தகுந்தவைகள்தாம்.

திவாண்ணா said...

இட்லி மல்லிப்பூ மாதிரி வரணும்ன்னு ஏரியல் போடறீங்களா? :-))
அருண் வருண் கீப் இட் அப்! இப்படியே பழக்கினா பெய்ம்மா சினிமா கதை சொல்ற வேலைக்கு போகலாம்!

Chitra said...

பெய்யம்மா ஹாப்பி பர்த்டே ஆச்சு. அம்மா ஹாப்பி பர்த்டேக்கு கேக் கட் பண்ணி கொண்டாடியாச்சு. கிருஷ்ணா ஜேஜா பர்த்டேக்கு பாட்டி ஏகப்பட்ட பலகாரம் பண்ணினாங்க. அதே மாதிரி பிள்ளையார் ஜேஜா ஹாப்பி பர்த்டேன்னு சொன்னது தான் தப்பா போயிடுத்து.. உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ன்னு ஊதி, விளக்கை பூஜை நேரத்துல அணைச்சுட்டாங்க..


...... cho chweet! Keep writing more about him.....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

டைபர் கட்டற வயசுல வைப்பர் கதையா... ஹா ஹா ஹா சூப்பர்... உன்னோட கற்பனா சக்தி எல்லாம் இப்படி யூஸ் ஆகறது ரெம்ப சந்தோஷம் அனன்யா... (என் பாடு உனக்கு சந்தோசமானு திட்டுறியோ... ஹா ஹா ஹா)

ஐ... சலூன் போட்டோ சூப்பர் பெய்யம்மா...

சூப்பர் போஸ்ட் அனன்யா

Anonymous said...

என் இனிய தோழியே ரொம்ப நன்றி ..இனி பதிவு படிச்சு கமெண்ட் போடறேன் ..

Anonymous said...

ஒ அனன்யா ரொம்ப அருமையா உங்க அருண் வருண் பத்தி எழுதிடீங்க ..நீங்க எழுதினது படிக்கச்சே நானும் அங்கே இருந்து இதெல்லாம் அனுபவிச்ச மாதிரி ஒரு பீலிங் ..

அருண் வருண் ரெண்டும் செம்மா cute ..என் கண்ணு பட்டுடும் போல் இருக்கு சுத்தி போட மறக்காதீங்க ..

நான் சொன்னதுக்கு இவ்ளோ அழகா பதிவு தந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ...

Madhavan Srinivasagopalan said...

Ha.. Haa.. Haa... Enjoyable..
kids are very fascinating..

BTW fotos were good.. particularly u -avoided ur face- in mirror reflection also...(the other madam your mother ?)

தெய்வசுகந்தி said...

குழந்தைகள் பண்ணும் அனைத்துமே அழகுதான்!!!

வல்லிசிம்ஹன் said...

Very Sweet kids Ananya. hmmm:)
enjoy them. God bless.

வல்லிசிம்ஹன் said...

Very Sweet kids Ananya. hmmm:)
enjoy them. God bless.

'பரிவை' சே.குமார் said...

குட்டீஸ் கலக்கல்...
செம கலக்கல்..!

பத்மநாபன் said...

அருண்..வருண் அட்டகாசம் அருமை... அந்த காலத்தில் இப்படி ஒரு கட பெய்யம்மா இருந்திருந்தா என் வீட்டம்மாவுக்கு முக்கா டென்சன் குறைஞ்சிருக்கும்....அப்படி இப்படி நகர முடியாம பிடிச்சிக்கராங்க போல...ஆனா மொக்கை போட்டா கரெக்டா கண்டுபிடிச்சிருவாங்க...போ பெய்யம்மா சரியா சொல்லுன்னு ரிப்பிட்ட வச்சுருவாங்க...உங்க ஹீ ஹீ சிஷ்யகோடிகள் கிட்ட வேகுற பப்ஸ் அங்க வேகாது....

மதுரை சரவணன் said...

கடைசி பஞ்ச் ... அருமை. வாழ்த்துக்கள்

Anisha Yunus said...

இதே கதைதான் எங்க வீட்டிலும் அனன்யா. மத்தியான் தூக்க வேளைல தூங்காம ப்ளான் பண்ணுவாங்களோன்னு தோணுது! அப்படி இருக்கு ரவுசு!

Porkodi (பொற்கொடி) said...

enoda comment enna censor panra alavukka poten? enna poten nu thaan enaku gnabagam irukadhe!

Porkodi (பொற்கொடி) said...

thirupiyum orukka solikaren, arun & varun - SOOOOOOOOOOOOOOOO cute!!! :D

அபி அப்பா said...

அருண் வருண் அருமை அனன்யா!

பின்னே இந்த "தங்கைமணி" வார்த்தைக்கு காப்பிரைட் வழக்கு போடுவேனாக்கும்:-)))

Ananya Mahadevan said...

அபி அப்பா,
டுபுக்கார் காப்பிரைட் வழக்கு போட்டாலும் ஒத்துக்குவேன், நீங்க போடுறது சரியில்லை! நான் உங்க பக்கங்களை படிச்சதேயில்லையே! ரொம்ப நாளா இந்த பதத்தை யூஸ் பண்ணிண்டு இருக்கேனே! போன அக்டோபர்ல இருந்து!

R.Gopi said...

மழலையின் சொல் கேட்பதை போல் இன்பமான விஷயம் இந்த உலகத்தில் ஏதுமில்லை என்று அடித்து சொல்வேன்.

சென்னை வாசம், நல்லா என்ஜாய் பண்ணுங்கோ....

க்ளைமேட் பட்டையை கிளப்பறதுன்னு கேள்விப்பட்டேன்... இங்க, இந்த வருஷம் பெரிய கொடுமையா இருக்கு... செப்டம்பர் 18 தேதி ஆயிடுத்து. இன்னும் வெயில் குறைந்த பாடாயில்லை...

சந்தியாவுக்காக எழுதின இந்த ஸ்பெஷல் பதிவை படிக்கறதுக்கு எங்களுக்கும் ஒரு சான்ஸ் தந்ததுக்கு உங்க ரெண்டு பேருக்கும் என் நன்றி..

செல்ல குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்

எப்போ, வர்றதா உத்தேசம்... உப்பிலிய கேட்டதா சொல்லவும்...

Geetha Sambasivam said...

டெனிஸ்கள் விஷமம் நல்லா இருக்கு. நிஜம்மாவே டெனிஸ் மிஸ்டர் வில்சன் கிட்டே அப்படிச் சொல்லும்போது கண்ணில் தண்ணி வந்துடும். நல்லாப் பொழுது போகுது போல! எஞ்சாய்!!!!

Ahamed irshad said...

mm..Nice

Jawahar said...

”அருஞ்சொற்பொருள்” ரொம்ப ரசிச்சேன். என் பையன் குழந்தைப் பருவத்தில் ‘தின்ன பாக்கி இருக்கு.. தின்ன பாக்கி இருக்கு’ என்று சொல்லிக் கொண்டிருந்தான். எங்கேயோ பிஸ்கட் துண்டைப் போட்டுவிட்டானோ என்று என் அண்ணா தேடினார்.

எதிர் வீட்டு வாசலைப் பார்த்த பிறகுதான் அதற்கு ’அருஞ்சொற்பொருள்’ புரிந்தது. அது ஒரு குட்டி கறுப்பு நாய்.

’சின்ன பிளாக்கி இருக்கு’ என்பதுதான் அவன் சொல்ல முயன்றது!

http://kgjawarlal.wordpress.com

DREAMER said...

"மழலை சரிதம்"னு ஒரு புக்கே எழுதலாம் போலங்க! அவ்வளவு க்யூட்டா இருக்கு இந்த "Adventures of அருண் & வருண்" சேட்டைகள்! செம இண்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்க... தொடரட்டும்... நானும் அருண் வருண் ஃபேனாயிட்டேன்...

-
DREAMER

RVS said...

அருண் வருண் சேட்டைகள் நல்ல நடையில் இருக்கு.. வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

ஸாதிகா said...

ரொம்பவே ரசித்தேன் அநனன்யா.

Unknown said...

உங்கள் பதிவு ஒரு பழைய ஞாபகத்தைக்
கிளறிவிட்டது.

உலக ஹேர் கட்டிங் வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நாளில் within span of 30 minutes என் ம்கன் (சிறு வயதில்) மூன்று சலூன்களில் முடி வெட்டிக்
கொண்டான்.

காரணம்?

முடிவெட்டும் போது “கர்சிக்” என்ற சத்தம் கிச்சு கிச்சு மூட்டுகிறதாம்.

Nathanjagk said...

அநன்யாஜி,

மழலை மொழி இடுகை முழுதும் மழைபோல தொடர்கிறது.
குட்டீஸ் எப்பவும் குட்டி ஜென்கள்தான்!
அருணவருண வருணனைகள் என்னையும் எழுதத் தூண்டிவிட்டது.

பிரகாஷ் said...

Lovely and comprehensive too. Evergreen hilarious memories Anans.

Related Posts with Thumbnails