Pages

Monday, June 13, 2011

திருச்சி திக் திக் விஜயம்.

எனக்கும் பஸ்ஸுக்கும் இருக்கும் ராசியை பத்தி ஒரு பழைய பஜிவு எழுதியிருக்கேன்னு உங்களுக்கு நினைவிருக்கலாம். இதை வேணா அதன் ரெண்டாவது பார்ட்ன்னு வெச்சுக்கலாமே?

போன வாரம் ஸ்ரீரங்கம் போகலாம்ன்னு ஒரு திடீர் திட்டம் போட்டோம். (தேவை இருக்கலை தான், இருந்தாலும் விதி யாரை விட்டது?) மத்தியானம் ஆஃபீஸில் இருந்த போது ரங்குவின் எஸ்.எம்.எஸ். ராக்ஃபோர்ட்டில் ஏஸி கோச்சில் டிக்கெட் கிடைச்சதுன்னு. என்ன தான் ஏஸியெல்லாம் டாம்பீகம்ன்னு நினைச்சாலும் மனசுக்குள்ளே ஒரு சின்ன அல்ப சந்தோஷம். சரி இருக்கட்டும். நாள் பூரா உழைக்கறோமே.. ஒரு வாட்டி ஏஸி கோச்ல போனாத்தான் என்னன்னு தோணித்து. சாயந்திரம் வீட்டுக்கு வந்து அரக்கப்பறக்க தோசை வார்த்து டிஃபன் முடித்து, 2 செட் துணிகளை அள்ளி திணித்துக்கொண்டு ஏஸி கோச் பிரயாணத்துக்காக ஆசையுடன் காத்திருந்தேன். கடைசியா எப்போ ஏஸி கோச்ல போனோம்ன்னு யோசிச்சேன்..  நொய்டாவுல இருந்து திரும்பி வந்தப்போ சுகமான ஜில் ஜில் ஏசியிலே கம்பெனி செலவில் 2 நாளும் தின்னுண்டு, போர்த்திண்டு தூங்கிண்டே வந்தேனே அதான் நினைவுக்கு வந்தது.

ஹை ஜாலின்னு மனசுக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடிண்டே சோப்பு, சீப்பு இத்யாதிகளை பேக் பண்ணியாச்சு. பேக்கிங் எல்லாம் ஆச்சு. ரங்க்ஸ் 8 மணிக்கி வந்தார். ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டார். ஏஸி கோச் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டாம்! அதை ஏன் எஸ்.எம்.எஸ்ஸில் நீங்க சொல்லலைன்னு கேட்டா, கிடைச்சுடும்ன்னு அந்த பிரும்மஹத்தி ஏஜெண்டு சொல்லியிருக்கான்னு சொல்றார்!

 என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அப்பாவியா ரங்கு இருக்காரேன்னு நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சாதா கோச் வெயிட்டிங் லிஸ்டு கிடைச்சாலும் கிடைக்குமேயொழிய, ஏசி கோச்ல எல்லாம் கேன்ஸலேஷன் சான்ஸஸ் கம்மி! அதுவும் பெட்டிகளும் கம்மி!

ரங்குவும் ஜஸ்டு டயல் ஃபோன் பண்ணி, கே.பி.என்/பர்வீன்/ஷர்மான்னு பலப்பல ப்ரைவேட்டு பஸ் எல்லாத்துலேயும் கேட்டு பார்த்தாச்சு. எதுலேயும் கிடைக்கலை.

சரி அப்போ ஸ்ரீ ரங்கனை அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்ன்னு மனசை தேத்தினா, மனசு கேக்கவே மாட்டேங்கிறது! இல்லை, நான் கோவில் பிரகாரத்துல எப்படி எல்லாம் கற்பனை பண்ணினேன்? ஸ்ரீரங்கனின் கண் தரிசனத்தையும் அவன் பாத தரிசனத்தையும் எவ்ளோ ஆவலுடன் எதிர்பார்த்தேன்னு மனசு புலம்பி தீர்க்க ஆரம்பிச்சுடுத்து.

பெரிய பெரிய தோல்விகளையெல்லாம் தாங்கின மனசு, இந்த சின்ன ஏமாற்றத்தை ஏற்க மறுத்தது. அதுனால செமத்தியாக ஜகா வாங்கிய ரங்குவை பயங்கரமா தாஜா பண்ணி கிளம்ப வைச்சாச்சு.

ரங்குவும் மிகவும் சுறுசுறுப்பாக, மெயில் செக் பண்ணி, ஒரு 10 மெயில்களை அனுப்பி, ஒரு நாலு ஃபோன்கால்களை நிதானமாக பேசி, தோசை சாப்பிட்டு, மாம்பழம் வேணும்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு, காஃபி கேட்டு குடிச்சுட்டு, விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி ஒரு எஃபெக்ட்டுடன் கிளம்பினார். அதுக்குள்ள இந்த நேரத்துக்கு என்ன அவசரமோ, 9.30 மணியாயிடுத்து.

கழுதை பரதேசம் போன மாதிரி அடையார் டிப்போ போய், மத்ய கைலாஷ் போய், கிண்டி போய், தாம்பரம் ட்ரெயினில் போறதுக்கு 11 மணி!

உஸ்ஸ்ஸ்! தாம்பரத்திலே கடல் போல மக்கள் வெள்ளம். நான் என்னமோ எனக்கு ரொம்ப பஸ் கிடைச்சுட்டாப்புல ஒரு இறுமாப்பில், ஹய்யோ இவங்கள்ல்லாம் ரொம்ப பாவம். என்னிக்கி பஸ் கிடைச்சு என்னிக்கி ஊர் போய் சேரப்போறாங்களோன்னு அனாவஸ்யமா கவலைப்பட்டேன்.

நான் எதிர்ப்பார்த்த மாதிரியே திருச்சிக்கி ஒரு பஸ் முன்னாடி நின்னுண்டு இருந்தது. ரெண்டு டிக்கெட் இருக்காம், போயிடலாமான்னு கேட்டார். நான் தான் ”நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னா, உங்களுக்கு சாமர்த்தியம் போறாது”ன்னு இவரை தரதரன்னு இழுத்துண்டு வந்தேன். பின்னாடி வந்து பார்த்தா, ஒரேயொரு பஸ் இருந்தது. அதுவும் மதுர மதுரன்னு கத்திண்டு இருந்தான். குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த திருச்சி வண்டியிலே கேட்டா அவன் டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டான். நான்ஸென்ஸ்!

10 மணிக்கி கோயம்பேட்டிலிருந்து கிளம்பின ‘அதி வேக’ வால்வோ பஸ்ஸெல்லாம் 11 மணிக்கித்தான் தாம்பரத்துக்கு ஒவ்வொண்ணா வந்திண்டு இருந்தது. ஒரு நாலு பஸ்ல பல்பு தான்.

சரின்னு ஐஞ்சாவதா ஒரு பஸ்ல கேட்டப்போ சீட் இருக்கறதா ஒரு புண்ணியவான் காதுல தேன் வார்த்தான். அதோட வயித்துல பால் வார்த்தான். ”எப்படி பார்த்தேளா, சாமர்த்தியமா சீட் வாங்கிட்டேன். கேட்டாத்தான் கிடைக்கும். இதெல்லாம் நீங்க எப்போத்தான் கத்துக்கப்போறேளோ?”ன்னு அலுத்துண்டே பஸ்ஸுக்குள்ளே ஏறினா, கட்டக்கடைசி சீட்டு மட்டும் தான் காலியா இருந்தது!

எல்லாரையும் தாண்டிப் போய் கடைசி சீட்டைப் பிடிச்சு ஜன்னலோரத்தில் உக்காண்டப்போ ஹைட்டெக் பஸ் தான். கடைசி சீட்டானாலும் ஜெர்க் அதிகம் இருக்காதுன்னு ரங்கு சமாதானம் சொன்னார்.

எங்களுக்கு முன்னாடி ஒரு அங்கிளும் ஒரு 30 வயசு ஆசாமியும் ஒரு குழந்தையுடன் உக்காண்டிருந்தாங்க. இதை எதுக்கு சம்மந்தமேயில்லாம இங்கே சொல்றேன்னா, அந்த பஸ்ஸின் அருமை பெருமைகளை விவரிக்கும்போது இந்த உபரித்தகவல் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குமே, அதுக்குத்தான்.

பஸ் கிளம்பித்து. தாம்பரம் தாண்டும்போது ஜில்லுன்னு காத்து வந்து மூஞ்சில வருட, இது போறும், தூங்கிண்டே திருச்சி போயிடலாம்ன்னு நம்பினேன்.

கொஞ்ச நேரத்துல விஷயம் புரிஞ்சுடுத்து. முன்னாடி உக்காந்திருந்த அந்த பையன் குழந்தையோட சீட்டோட என் முட்டி மேல படுத்துண்டு இருந்தான். விஷயம் என்னன்னா, அந்த சீட்டுக்கு புஷ்பேக் அட்ஜெஸ்டுமெண்ட் எதுவும் இல்லை. பை டீஃபால்டு, அது பின்னாடி சீட்டின் மேல தான் இருக்கும்ன்னு. ஹைட்டு கம்மியானதுனால அது என் முட்டியில் சாய்ஞ்சுண்டு இருக்கு.
பக்கத்தில் இருந்த ரங்குவின் நிலமை இன்னும் மோசம். அந்த குண்டு அங்கிள் மொத்த பார்த்தையும் ரங்குவின் முட்டியில் போட்டுவிட்டு அக்கடான்னு குறட்டை விட்டுண்டு தூங்கிண்டு இருக்கார்!!!

உக்காரவும் முடியாமல், எனக்கு வந்த கோபத்தில் போய் நடுவில் கீழே உக்காந்துக்கலாமான்னு இருந்தது. ரங்குவுக்கு தர்மசங்கடமாக போயிடுத்து. எத்தனை வாட்டி தான் குண்டு அங்கிளை எழுப்ப முடியும்? அவரும் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் குறட்டை விட்டுண்டு தூங்கறார்!

நயம் ராஹு காலத்துலேயா புறப்பட்டோம்ன்னு நினைக்கும் |அளவுக்கு எங்கள் நிலமை  கொடுமையா இருந்தது. ரங்குவும் கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, த்ரிவிக்ரமஅவதாரம் மாதிரி ரெண்டு காலையும்  தூக்கி, அங்கிளின் சீட்டுக்கு அந்தண்டை போட்டுண்டு தூங்க ஆரம்பிச்சார்.

ரங்கா, உன் ரகளைக்கு அளவே இல்லையா?ன்னு நினைச்ச படியே காற்றில் அப்படியே கண்ணசந்தா, அந்தப்பையன் குழந்தையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றி போட்டுண்டு கொஞ்சம் சீட்டின் மேலே அட்ஜெஸ்டு பண்ணிண்டு படுத்துக்கறான்!எனக்கு முட்டியில் மரண வலி!  உலுக்கி விழுந்து எழுந்தாச்சு. ஒரு பத்து நிமிஷம் தூங்கினோமான்னு மணியை பார்த்தா ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கு! சந்தோஸமா???

 மொத்தத்துலே சுத்தமா தூங்க முடியாம அந்த பையன் குழந்தையும் வெச்சுண்டு என்னை படுத்தி எடுத்துட்டான்.

ரங்கு பக்கத்துல ஒரு இளசு விடிய விடிய கேள்பிரண்டு கூட கடலை போட்ட வண்ணம் வந்திருக்கான். ரங்குவுக்கு கொஞ்சம் நற நற.

இது போறாதுன்னு அந்த இளசுக்கு அந்தப்பக்கம் உக்காண்டிருந்த ஒரு பிரும்மஹத்தி அர்த்த ராத்திரி 1 மணிக்கி செல்ஃபோன்ல பாட்டை பெரூசா போட்டு எல்லாரையும் எழுப்பியூடுத்து. ஏதாவது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா இருந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டா. ஏதோ ஒரு அசுரக்குரல்லே நாட்டுப்பாட்டாம். கேட்டாலே நாராசம்! இருந்தாலும் அர்த்த ராத்திரியிலும் அவன் இசையார்வத்தை என்னால் ரசிக்காமல் இருக்க முடியலை. அந்த அளவுக்கு வால்யூம் ஹை! எல்லாரும் முறைக்க ஒரு வழியா தேடி(அவனுக்கே அவன் ஃபோனை ஆப்பரேட் பண்ண தெரியலை) ஏதோ ஒரு சுவிட்சை அமுக்கி காதில் அந்த இன்னிசையை வெச்சுண்டு கேட்க ஆரம்பிச்சுட்டான். மறுபடியும் மூணு மணிக்கி அதே பாட்டு, அதே குரல், அதே சவுண்டு. தூங்க முயற்சித்துக்கொண்டிருந்த எனக்கு வந்த கோபத்தில் “ சவுண்டு ரொம்ப தொந்திரவா இருக்கு ஆஃப் பண்ணுங்க”ன்னு சொல்லவே சொல்லிட்டேன். எல்லாரும் அதை ஆமோதிப்பதுபோல பார்த்தாங்க.
முட்டி வலி ஒரு புறம், தூக்கமின்மை மறு புறம்.. ரங்குவும் த்ரிவிக்ரம அவதாரம் ஒரு புறம்.. ரொம்ப கஷ்டம்!

இந்த அழகுல ஏஸி கோச், தலைகாணி, வெள்ளை போர்வை, அமைதியான உறக்கம், திருச்சியில ஃப்ரெஷ்ஷா போய் இறங்கலாம்ன்னு என்னெல்லாம் நினைச்சுண்டோம்? நமக்கு? ஏஸி கோச்? இதெல்லாம் நடக்குமா என்ன? ஹைய்யோ ஹய்யோ!வசதி இருந்தாலுமே திண்டாடி தெருப்பொறுக்கி கஷ்டப்பட்டு அடிவாங்கின வடிவேலு மாதிரி தான் ஊர் போய்ச்சேரணும்ன்னு என் தலையிலே உளியால பிரும்மா செதுக்கியிருக்காரே? என்ன பண்ண?

கடவுள் புண்ணியத்துல ஒரு வழியா 5 மணிக்கு திருச்சில கொண்டு விட்டுட்டான். அப்பப்பா.. என்ன ஒரு நைட்மேர் ஜர்னின்னு புலம்பிண்டே நடந்தோம். யப்பா இனிமே ப்ரை’வேட்டு’ பஸ்ஸா? வேணாஞ்சாமீயோவ்!!!


நேரா குளிச்சு ரங்கனை தரிசனம் பண்ணினப்போ அலுப்பும் சலிப்பும் ஒரே நேரத்துல போயே போச்சு.. பட்ட கஷ்டமெல்லாம் மாயமா மறைஞ்சுடுத்து.


  

19 comments:

Prathap Kumar S. said...

ரங்கநாதா என் நீண்டநாள் பிரார்த்தனைக்கு நீ ஷெவிசாய்ச்சுட்டாய் பேஷ் பேஷ்... :))

எல் கே said...

தப்பை உன் பேர்ல வெச்சுண்டு பஸ்காரனை குத்தம் சொன்னா என்ன நியாயம் ? ஒழுங்கா கோயம்பேடு போகணும் , அங்க போனாலே திருச்சி டிக்கெட் கிடைக்கறது கஷ்டம். தாம்பரத்தில் ஏறிட்டு இதுல கடைசி சீட்னு பொலம்பல் வேற. அந்த ரங்கநாதருக்கு அடுக்காது,.


பாவம் ரங்க்ஸ்

பத்மநாபன் said...

///சாதா கோச் வெயிட்டிங் லிஸ்டு கிடைச்சாலும் கிடைக்குமேயொழிய, ஏசி கோச்ல எல்லாம் கேன்ஸலேஷன் சான்ஸஸ் கம்மி! /// இப்பெல்லாம் ரயில்ல முணு மாசத்துக்கு முன்னாடி பண்ணுனாத்தான் கன்பார்ம் டிக்கட்டே...

//தரதரன்னு இழுத்துண்டு வந்தேன் // நிம்மதியா அபுதாபியில இருந்தார் ....

படாத படுத்தி அழைச்சுட்டு போனாலும் , அந்த கோபுரத்தையும் காவேரியும் பார்த்தாலே பட்ட கஷ்டம் போயிடும் ... ஸ்ரீரங்கம் நம்ம வாத்தியார் ஊர் ங்கற சந்தோசம் அடிஷனல் ...

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்நாட்டில்தான் பஸ் எல்லாம் நல்லா இருக்கும்னு பார்த்தா, இப்படி ஆயிடுச்சே.... இந்த ப்ரைவேட் பஸ் காரங்க தொல்லை தாங்க முடியலை... திரும்ப போக சௌகரியமா பஸ்/ட்ரையின் கிடைச்சதா :)

Madhavan Srinivasagopalan said...

ரங்கனை சேவிச்சதுல, ரிடர்ன் ட்ரிப்பாவது சுகமா இருந்திச்சா ?

ஹுஸைனம்மா said...

//ராசியை பத்தி ஒரு பழைய பஜிவு எழுதியிருக்கேன்னு//

அதென்ன பஜிவு? பஜ்ஜி மாதிரி எண்ணெய் சொட்டும் பதிவு என்று அர்த்தமோ? ;-))))

நலம்தானே அநன்யா?

திவாண்ணா said...

அப்பாடா! ஒரு வழியா திரும்பியாச்சா!
{ஊருக்கு இல்லை, வலைக்கு சொன்னேன்! ஆமா ரிடர்ன் ஜர்னி கதை அடுத்த பதிவா?}

திவாண்ணா said...

அப்புறம் க்ஷேத்திரத்துக்கு எல்லாம் கஷ்டப்பட்டு போனாதான் புண்ணியம்!

வல்லிசிம்ஹன் said...

Hi Annu,
padikka Svaarasyamaa irunthaalum adap paavamennu irukku.

Kashtappaattu perumaal sevai kidaicchirukku. palanum irukkum.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஹய்யோ இவங்கள்ல்லாம் ரொம்ப பாவம். என்னிக்கி பஸ் கிடைச்சு என்னிக்கி ஊர் போய் சேரப்போறாங்களோன்னு அனாவஸ்யமா கவலைப்பட்டேன்//
நீ...நீ...நீ ரெம்ப நல்லவ அனன்யா....:))

//எப்படி பார்த்தேளா, சாமர்த்தியமா சீட் வாங்கிட்டேன். கேட்டாத்தான் கிடைக்கும். இதெல்லாம் நீங்க எப்போத்தான் கத்துக்கப்போறேளோ//
வெரி குட்... இப்படி தான் சமாளிக்கணும்... உன்கிட்ட நெறைய கத்துக்கணும் நான்...;))

//அந்த பஸ்ஸின் அருமை பெருமைகளை விவரிக்கும்போது இந்த உபரித்தகவல் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குமே, அதுக்குத்தான்.//
இது ஏதோ பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல் மாதிரி இருக்கே...:))

//நேரா குளிச்சு ரங்கனை தரிசனம் பண்ணினப்போ அலுப்பும் சலிப்பும் ஒரே நேரத்துல போயே போச்சு//
தட்ஸ் கிரேட்...:)

Matangi Mawley said...

நீங்க கஷ்ட பட்டதுக்கெல்லாம் சேத்து ரங்கன் உங்கள ஸ்பெஷல் ஆ கவனிச்சிருப்பார்! ஆனா நீங்க சொன்னத போல அனுபவம் எனக்கும் உண்டு... கடிக்கற ரெண்டு மூணு நாள் அல்ப லீவ் (comp off ) ல அத்தன கஷ்டப்பட்டு பஸ்-ல போனும், திருச்சு-க்கு. கரெக்ட்-ஆ 2 மணிக்கு ஒரு பாடாவதி டீ கட ஏரியா வுல நிறுத்துவான்... என்னல்லாம் கானா பாட்டு உண்டோ- அத்தனையும் ஓடும்... நாராசமா இருக்கும்.... நீங்க சொல்லற அதே கடலை பார்ட்டி-களும் உண்டு! அதுவும் சென்னை-திருச்சி-மதுரை பஸ்-நா இன்னும் மோசம்... 3 :30 மணிக்கு- ஹை volume ல ஒரு ஆசாமி செல் அடிக்கும். "ஹலோஓஓ .... ஆமாம் நான் மொக்கச்சாமி தான் பேசறேன்.... ஆமாம் நான் பஸ்-ல தான் வந்துகிட்டு இருக்கேன்.... மதுரைக்கு தான் வந்து கிட்டு இருக்கேன்...." ன்னு ஒரு uncle பஸ்-கே கேக்க பேசுவார்! எல்லாத்துக்கும் அப்புறம்-- நீங்க சொல்லராப்ல--- ரங்கன் கோவில் ப்ரஹாரத்துல, தாயார் சந்நிதி-ல சஹஸ்ரநாமம் முனுமுனுக்கும் நாலு மடிசார் மாமிகளையும்... அவா வெச்சிண்டுருக்கற கதம்பத்தையும் பாத்தா -இந்த கஷ்ட மெல்லாம் போய்டும்! நம்பூராச்சே! :) -- உங்க ரங்கு நிஜமாவே பாவம்!! but காமெடி! அனாலும்-- ரொம்ப சீக்கரமா தான் களம்பினார், அவரு!

super post !

தி. ரா. ச.(T.R.C.) said...

rangu vaa rangana oru kai paathutte sabhash

தி. ரா. ச.(T.R.C.) said...

திருச்சிக்குத்தான் இப்போ பிளைட்டு போகுதே போலாமில்லே

தக்குடு said...

நேரும் கூருமா ப்ளான் பண்ணாம 'பெப்பரபே!'னு கிளம்பி போயிட்டு ஊர்ல இருக்கரவா எல்லாரையும் குத்தம் சொல்ல வேண்டியது!!..:PPPP பாவம்! அந்த மனுஷரையும் படுத்தி எடுத்தாச்சு!

ecrea79 said...

எங்கள் ப்ளாக் வந்து நீங்க கமெண்ட் போட்டாத்தான் நாங்க இங்கே கமெண்ட் போடுவோம். (அதுவரைக்கும் உங்க பேச்சு கா )

ஸ்ரீராம். said...

இதுக்கு இன்னொரு ட்ரிக் இருக்கு...மதுரை பஸ்ஸைப் பிடிச்சி சௌகர்யமா ரெண்டு மதுரை டிக்கெட் வாங்கிடணும். காசு போனால் என்ன....நடுவில் திருச்சியில நிக்கிற பஸ்ஸா என்று கேட்டுக் கொள்வது அவசியம். அப்புறமா கண்டக்டர் கிட்ட சொல்லிட்டு ஜம்முனு திருச்சியில் இறங்கிக்கலாம்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

பக்காவா ப்ளான் செஞ்சுட்டு கிளம்பற பயணங்கள்லயே சில அசவுகரியங்கள் ஏற்படறதுண்டு. திடுதிப்புன்னு கிளம்பினா கேக்கவா வேணும்.. ஆனாலும் நல்லபடியா தரிசனம் செஞ்சீங்கதானே.

Ananya Mahadevan said...

கருத்து சொன்ன எல்லோருக்கும் பஹூத் பஹூத் நன்றி ஹை! வரும்போது ரெம்பச்சவுரியமா SETC ல வந்துட்டோம்.. ஆஹா.. முட்டி வலியில்லாம, சக பயணிகள் தொந்திரவில்லாமல் அமைதியான நல்லுறக்கத்தோடு வீடு வந்து சேர்ந்தோம். துளி கூட அலுப்பில்லாத பயணம். இனிமே.. ப்ரை’வேட்டு’ பஸ்ஸுக்கு தடா தான். :))

Related Posts with Thumbnails