பயணங்கள்
என் ஜாதகப்படி பயணங்கள் எப்போவுமே ஊத்தி மூடிக்கும்.(பயணங்கள் மட்டுமா???) நிச்சியம் ஏதாவது ஒரு கஷ்டப்பட்டுண்டே தான் ஊர் போயிசேர்ற மாதிரி இருக்கும். இது ரொம்ப வருஷமா நடக்கறது.
நான் ஏறும் சிட்டி பஸ்ல, பருவ நிலைக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு தொந்தரவு துரத்தி துரத்தி வரும். உதாஹரணதுக்கு, பயங்கர வெய்யில்ன்னு வெச்சுக்குவோம். எனக்கு by chance, அதாவது .௦1% ல உக்கார சீட் கிடைச்சுடுச்சுன்னு வெச்சுக்குவோம். என்ன இது, summerல ஜன்னல் மூடி இருக்கேன்னு திறக்க முயற்சி பண்ணுவேன் பாருங்க. அது ஜாம் ஆயி இருக்கும். சரி, இதே scenario,winter la(சென்னைல winter இல்லை இருந்தாலும் மார்கழி மாசம் பஸ்ல போனா குளிர் காத்து மூஞ்சில அடிக்கும்) பாப்போம். இதே சீட் ல போயி உக்காருவேன், பல்லாவரம் தாண்டி ஜில்லுனு காத்து மூஞ்சில அடிக்கும். அச்சிச்சோ ரொம்ப குளிருதே , மூக்கடைக்கற மாதிரி இருக்கேன்னு நினச்சு, அந்த ஜன்னலை மூட முயற்சி பண்ணினா, அது ,"Sorry Access Denied" ன்னு பல்லிளிக்கும்
முக்காவாசி நின்னுண்டு தான் போக முடியும்.அப்படியே உக்கார இடம் கிடைச்சாலும் , அதுக்கு நின்னுண்டே போலாம்ன்னு தோணும். ஏன்னா அது டயர் மேல இருக்கும் சீட்.டயர் மேல சீட்டா இருந்தாலும் விண்டோ சீட்ல அந்த மரண வேதனை தெரியாது. ஏன்னா கவனம் முழுசும் வெளீல இருக்கும். பட் இந்த aisle சீட் இருக்கு பாருங்க, அது கொடூரத்துலேயும் கொடூரம். என்னமோ குரோர்பதி ஷோல,அந்த ஏணி சேர்ல பாலன்ஸ் இல்லாம உக்காந்து இருக்கற மாதிரி இருக்கும். அதும் நம்மூர் பஸ்ல போடுற பிரேக்குகள் கேக்கவே வேண்டாம். நிறைய வாட்டி இந்த மாதிரி டயர் சீட் ல உக்காந்துருக்கேன். மொதல்ல கொஞ்சம் சந்தோஷமா இருக்கும், அட நமக்கு கூட சீட் கிடைச்சுடுச்சேன்னு, அப்புறம் கொஞ்சம்கொஞ்சமா மூஞ்சி விளக்கெண்ணை குடிச்ச மாதிரி அஷ்டக்கோணல் ஆயி, வேணாஞ்சாமின்னு விட்ருக்கேன் ஜூட் . நானும் அடிக்கடி யோசிப்பேன், அதெப்படி நமக்கு மட்டும் தான இப்படி ஆறதா இல்லே நம்ம மாதிரி நிறைய விக்டிம்ஸ் இருப்பாங்களான்னு.
ஒரு 10 வருஷம் முன்னாடி இருக்கும், மவுண்ட் ரோடு இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்ல ஹிந்தி வகுப்புக்கள் எடுத்துண்டிருந்தேன். ஒரு வாட்டி தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும்போது வகுப்பு முடிச்சுட்டு, தேனாம்பேட்டை stoppingல இறங்கி ஸ்டாண்டர்ட் fireworks கடையில் ஏதோ கொஞ்சம் பட்டாசெல்லாம் வாங்கிண்டு மீண்டும் பஸ்ஸ்டாப்பில் வந்து நின்னப்போ பயங்கர மழை. பட்டாசை மகாராசன் ரெண்டு கவரா போட்டு குடுத்ததால தப்பிச்சேன்.பட்டாசு தப்பிசுட்டாலும் நான் மட்டும் தொப்பலா நனைஞ்சாச்சு. PP1B ல ஏறினா, நல்லவேளை அவ்வளவா கூட்டம் இல்லை. கம்பியைபிடிசுண்டு சௌகர்யமா நின்னுண்டேன்(இதுல என்ன சௌகர்யம்?) டிக்கெட் வாங்கிட்டு பார்த்தா, பின்னங்கழுத்துல தண்ணி வழியற மாதிரி ஒரு பீலிங்கி. ஆமா, அது உச்சி மண்டையில விழுந்து பின்கழுத்துல வழிஞ்சிருக்கு. எனக்கு தான் தெரியல. அடேடே, நாம ஜாதகத்தை மறந்துட்டோமேன்னு நெனைச்சுண்டு, கொஞ்சம் தள்ளிப்போய் நின்னுண்டேன். அங்கேயும் அதே நிலை. இந்த வாட்டி, உச்சி மண்டையில் விழாமல் எப்படியோ தப்பிச்சுட்டேன் . உசிமண்டையிலிருந்து ஒரு 2 சே.மீ தள்ளி விழுந்துண்டு இருந்தது. நர நரன்னு வந்தது. உக்கார இடம் கிடைக்கும்போல இருந்தது.அதீத சாமர்த்தியத்துடன் அந்த இடத்தை கபளீகரம் செஞ்சேன். நல்லவேளை ஜன்னலோர சீட். பரவால்லியே நம்ம ஜாதகம் கூட சில சமயம் பல்டி அடிக்கறதேன்னு நெனச்சது தான் தாமதம், மீண்டும் தொப் தொப் தொப்... மத்ததெல்லாம் கூட பரவல்ல.. இது full fledged shower தான். அந்த ஜன்னலோரம் shutter வொர்க் பண்ணலை . அதானே பார்த்தேன்.. ஏதோ ஒரு மாதிரி குளிசுண்டே வீட்டுக்கு போய் சேந்தேன் . அப்பிடியாவது அந்த சீட்ல உக்காந்து தான் வரணுமான்னு அம்மா கேட்டப்போ தான் என்னோட அறிவுஜீவித்தனம் புலப்பட்டது.. டன்டன்னா அசடு வழிஞ்சுண்டு, 'ஞ' ன்னு மூஞ்சிய வெச்சுண்டு அம்மாகிட்ட திட்டு வாங்கிண்டேன்.
சரி இதெல்லாம் நடந்து முடிஞ்சு போயிடுத்தே.. அதெல்லாம் அந்த காலம், இப்போ தான் நமக்கு சுக்ர திசையாச்சேன்னு மனசத்தேத்திண்டு, போன vacation சென்னைல இருந்து மாயவரம் போலாம்ன்னு நாராயணமூர்த்தி travelsல டிக்கெட் புக் பண்ணிண்டோம். HitechVolvoBus, DVD, Dolbyனு என்னெல்லாம் கற்பனை பண்ணிண்டு போனோம் தெரியுமா. வழக்கம்போல, superbus. என் வீட்டுக்காரர் நம்பர் பாத்தேன்,சீட் சூப்பர், என் மாமியார் சீட்டும் சூப்பர். என் சீட் நம்பர் பாத்தேன், வழக்கம்போல aisle சீட். வலது புறம் aisle ,இடது புறம், கைப்பிடி இல்லாமல், அங்க ஹீனமாய். அட்ரா அட்ரா அட்ரா சக்கை..
14 comments:
Anans...enna aanalum sari nu you should have swapped your tickets with your hubby. I won't recommend swapping tickets with Mamiyars : - ). Do you know the saying "விதியை மதியால் வெல்லலாம்"
அனன்யா,
அடுத்த வாரம் இந்தியாவுக்கு கோக்ரான் மேக்ரான் பஸ்ல போறீங்களா? அதுக்கு ஒரு பதிவு போடுவீங்களா?
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பிரியா, பின்னூட்டம் எழுதியதுக்கு நன்றி. விதியை மதியால் வெல்லலாம்ங்க்ரதில்லை பாயிண்ட், எனக்கு சுக்கிர திசைன்னு ஒரு பயபுள்ளை சொல்லி, ஏமாத்தி இருக்கான். எனக்கு எப்போவுமே சனி திசை தான்.
ஸ்ரீராம் அண்ணா,
ஆட்டோகிராப் போட்டதுக்கு நன்றி.உங்க மேலான Feedback இருந்தா, கொஞ்சம் betterரா எழுதுவேன்
ஓ எங்க ஊருக்குப் போனீங்களா ? கவலைப்படாதீங்க இதே போல கஷ்டங்களில் மாட்டிக்கிற விக்டிம்ஸ் நிறைய பேரு இருக்கோம் உலகத்தில்.. :)
ஒ, நீங்க மாயவரமா? அதுசரி, அதான் தமிழ் அப்படி பிரவாகம் எடுக்குதா உங்க ப்ளாக் ல..
மீண்டும் வந்ததுக்கு நன்றிகள் பல
கொட்டற குப்பைய நல்லாத்தான் கொட்டறீங்க...
குப்பைக்கு கூட வந்து கமன்ட் பதிஞ்சதுக்கு நன்றிகள் அண்ணாமலையான்
நன்னா எழுதறேள். உங்க நடை அருமை.
பெரியவாள்ளாம் வந்து கையெழுத்து போட்டுட்டு போறேள். நேக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
நன்றி மீண்டும் வருக
:)
நல்லா இருக்குங்க.
அநன்யா மகாதேவன் அப்படித்தான் நீங்க உங்க சொல்லியிருக்கீங்க... ஓக்கே?
SurveySan ப்ரமாதம் போங்கோ உங்க கமெண்ட்..
சென்ஷி அவர்களே,
உங்க புண்ணியத்துல எனக்கு இன்னிக்கி இன்னொரு ஆட்டோகிராப். உங்க id பார்த்துட்டு எனக்கு பயங்கர சந்தோஷம். வருகைக்கு நன்றிகள் பல.
அண்ணாமலையான், நான் சொன்ன குப்பை, சம்சாரக்குப்பை in அபுதாபி, நீங்க தப்பா நெனைச்சுண்டு நான் ப்ளாக் ல குப்பை கொட்டறேன்னு சொல்லிட்டேளே.உங்க பேச்சு கா
Post a Comment