1994 இல் வெளிவந்த காதலன் படத்தில் Take it easy பாட்டு ஒரு பசுமையான பாட்டு.செப்டம்பரில் வெளிவந்ததாக நினைவு. நவராத்திரி தீபாவளி எல்லாம் சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாமல் எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாட்டு.இந்த பாடலின் சிறப்பம்சம் எளிமை & நகைச்சுவை.குரோம்பேட்டை நியூ காலனியில் இருந்த பொது, நவராத்திரி சமயத்தில் ஒரு மாமி வெற்றிலை பாக்கு வாங்கிக்கொள்ள வந்திருந்தார். உடன் வந்த சிறுவனுக்கு ஒரு 3-4 வயது இருக்கும். பாட்டு பாடினாத்தான் சுண்டல் என்று அம்மா கறாராக கூறிவிட, மழலையில் அக்குழந்தை ஊர்வசி பாட்டு பாடியது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது.
சரி, இப்போ ஊர்வசி பாட்டுக்கு என்ன வந்ததுன்னு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன்.. வெயிட் வெயிட்.
இன்று காலைசிற்றுண்டி சாப்பிடும் பொழுது இவர் இந்த வர்ஷம் லீவ் எல்லாம் ஃப்ரைடே தான் வருது என்று புலம்பினார். ஃப்ரைடே வந்தா என்னவா? அட ஃப்ரைடே தாங்க இங்கெல்லாம் சண்டே மாதிரி weekend. நியூ இயர் ஃப்ரைடே, அப்புறம் ஏதோ முக்கியமான பண்டிகை தினமாம் 25. அதுக்கு வியாழன் லீவா இருக்கும்ன்னு இவர் முன்னமே சொல்லி இருந்தார். இப்போ அப்டி எல்லாம் ஒரு லீவும் இல்லைன்னு Gulf News ல Bulb news போட்டுட்டா. நோ லீவ் ன்னு மூஞ்சிய ரொம்ப சோகமா வெச்சுண்டு இருந்தார். நான் அவரை cheer up பண்ண்றதுக்கு 'பண்டிகை தேதி சண்டே யில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி' ன்னுபாடினேன். இதுக்கப்புறம் விஷயத்தை மறந்தாலும் பாட்டை மறக்க முடியல. So, சமயலறையில் பாடிண்டு இருந்தேன். தமிழ் நாட்டுல இருக்குற 99% பேரைப்போல, எனக்கும் தான் அந்த full பாட்டு அத்துபடியாசே. பாடிண்டு இருந்தேன். கூடவே மனது 1994க்கு போயிட்டது.
திடீர்னு நினைவுகள் ல இருந்து ஒரு பிரேக். பெட்ரூமில் இருந்து இவர் பாடும் சத்தம். அட, இவருக்கு கூட லிரிக்ஸ் தெரியுமான்னு எனக்கு ஒரே ஆச்சர்யம். Yes, I heard it right. இவர் தான் பாடுறார். நான் என்னை Mute பண்ணிட்டு காதைத்தீட்டிண்டு கூர்ந்து கவனிச்சேன்.
இவருக்கு தமிழில் ச சொல்ல வராது. ச வுக்கு பதிலா ஷ தான் சொல்லுவார். உ: கசப்பு = கஷப்பு, ஊசி = ஊஷி
இவர் பாடுறார், "கட்டின பொண்டாட்டி அஷடா இருந்தா டேக் இட் ஈசி பாலிசி."
நர நர.. கண்களில் கொலைவெறியுடன், ருத்திரகாளியாக, அடிவயிற்றிலிருந்து ஹா........ன்? என்று நான் அலற, என் பதம் பணிந்து, என் பொண்டாட்டி இல்லேம்மா, அந்த இன்னொருத்தன் பொண்டாட்டி அஷடாக்கும் என்று சரண் அடைந்தார்.
Hmm... thats better!
இப்போ பாடுறேன் எல்லாரும் கேட்டுக்கோங்க, "கட்டின புருஷன் அம்மாஞ்சியா இருந்தா டேக் இட் ஈசி பாலிசி....ஊர்வசி ஊர்வசி "
பழிக்கு பழி புளிக்கு புளி நானும் ரௌடியாக்குங்கேட்டேளா?
பழிக்கு பழி புளிக்கு புளி நானும் ரௌடியாக்குங்கேட்டேளா?
5 comments:
அக்கா... கட்டின புருஷன் அம்மாஞ்சியா இருந்தா ‘டேக் இட் ஈஸி’ இல்லை.... அதிர்ஷ்டம்... இல்லைன்னா நின்னா நொட்டை, நடந்தா நொட்டைன்னு கடுப்படிப்பாங்க...
Your post is better than the song...
நான் ஒரு எதுகை மோனைக்காக அம்மாஞ்சின்னு சொன்னா நீ என்னநிஜம்மாவே அம்மாஞ்சின்னு சொல்லறியா?பொம்மனாட்டிகளை அசடுன்னு சொல்ல்றாமாதிரி ஆம்பளைகளை அம்மாஞ்சின்னு சொல்லறது ஒரு பேச்சு வழக்கு அவ்வளவு தான். :Pகண்ணை மூடிண்டு என் வீட்டுக்காரருக்கு சப்போர்ட் பண்ணறதை நிறுத்து. நானே மொதல்ல அவருக்கு against இல்லே. ஹாஹா
நன்றி விஜய்.
அசட்டு அக்கா... நான் மாப்புக்கு சப்போர்ட் பண்ணலை... உனக்கு தான் சப்போர்ட் பண்ணினேன்... புருஷன் அம்மாஞ்சியா இருக்குறது பொண்டாட்டிகளோட அதிர்ஷ்டம்..
Post a Comment