ஒரு வாரம் லீவுல பாலக்காடு போறோம். திடீர்னு முடிவுபபண்ணப்பட்ட ஒரு பயணம். என் மாமியாருக்கு சப்தபதி நடத்துறாங்க. கூடவே கோவிலில் அய்யப்ப பூஜை எல்லாம் இருக்காம். அப்படியே சொந்தபந்தத்தை எல்லாம் பார்க்கலம்னு இவருக்கு ஒரே குஷி. தமிழ்மண்ணை மிதிக்காததால் எனக்கு வருத்தமே. என்ன செய்யறது. ஒரு வாரத்தில் எவ்வளவு தான் கவர் பண்ண முடியும்? அதான், யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொல்லிருக்காங்க இல்லே? அப்போ புது வருட ஆரம்பத்துல நாங்க ஊர்ல இருப்போம்னு ஒரே சந்தோஷமா இருக்கு.
இந்த வர்ஷத்தின் கடைசிப்பதிவு இதாத்தான் இருக்கும்.
பணத்துல கொழிச்ச, வீண் ஆடம்பரத்தில் மிதந்த பலருக்கு 2009 மண்டையில் ஒரு கொட்டு வெச்சது.இந்த வணிக ரீதியான அடி வாங்கினதுனால,தலைகீழ விழுந்த எல்லாருக்கும் ,அர்த்த ராத்திரியில குடை பிடிச்சவங்களுக்கும் தொப்பியும் பல்பும் மாத்தி மாத்தி கிடைச்சது Englishஷே தெரியாதவங்க கூட அடிக்கடி 2009 இல் உபயோகிச்ச வார்த்தை cost cutting.
இந்த Economic Slowdown நால,உலகமக்கள் மாதிரி தான் துபாய் வாழ் மக்கள் பட்ட பாடும் கொஞ்ச நஞ்சமில்ல. நிறைய இந்தியர்களுக்கு வேலை போச்சு, புள்ளைகுட்டி எல்லாம் கூடிண்டு பலர் இந்தியா போய் செட்டில் ஆயிட்டாங்க. பலர் எக்கசெக்கமா கடனை வாங்கிட்டு கட்ட வழியில்லாம abscond ஆயிட்டாங்க.துபாய்ல டிராபிக் கம்மியாயிடுத்து.வாடகை படிப்படியா குறைஞ்சு இப்போ வாடகைக்கு வரதுக்கு ஆள் இல்லாம காலி வீடுகள் நிறைய ஆயிடுத்தாம்.முன்னாடி ஷேரிங்ல இருக்ககூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட பல்தியா(நம்மூர் பஞ்சாயத்து மாதிரி - Municipality) கூட இப்போ ரூல்ஸ் எல்லாம் தளத்தி இருக்காங்களாம்.
முக்காவாசிபேருக்கு வேலை போய்டுத்து. அப்படியே வேலை போகாட்டியும் சம்பளத்தில் பெரும்பகுதி கட். optimum utilizationனு சொல்லிட்டு வேலைப்பளு முழுவதும் ஒரு சிலர் மேல போட்டு தாக்குறாங்கஇதுனால வேலையில motivation இல்லேன்னு பயங்கர complaints.
20௦ பக்க இணைப்பா வந்துண்டு இருந்த Gulf News Appointments (நம்மூர் தி ஹிந்து opportunities மாதிரி)இப்பெல்லாம் முன்னும் பின்னுமாக 3 பக்கம் தான். ஒரு புல் Sheet, ஒரு Half Sheet. சுத்தமா வேலையே இல்லை. எத்தனையோ பேர், visa cancel ஆயிகூட, ஊருக்கு திரும்பி போகறதுக்கு பைசா இல்லாம இங்கேயே மாட்டிண்டு இருக்காங்க. Overall, இந்த வர்ஷம் பயங்கர Disasterous. Things are likely to get better early next yearன்னுபேசிக்கறாங்க. பாக்கலாம்.
2010, இந்த ரணங்களை ஆத்தணும். இந்த கஷ்டங்களை எல்லாம் கழுவணும். வேலை இல்லாதவங்களுக்கு வேலை கிடைக்கணும் (ஹீ ஹீ என்னை மாதிரி நிறைய பேரு இருக்காங்களே, எல்லாருக்கும் தான் சொல்றேன்) Salary Cuts எல்லாம் cut ஆயி, பழைய படி salaries எல்லாம் reinstate பண்ணணும். எல்லா தொழில்களும் வளர்ந்து செல்வம் கொழிக்கணும். உலகமே சுபிக்ஷதுல செழிக்கணும். இதான் என்னுடைய பிரார்த்தனை. சர்வ ஜகத் சுகினோ பவந்து.
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
12 comments:
ஆகா
என்னே நல்ல எண்ணம், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் உங்க நல்ல எண்ணம் பலிக்கட்டும்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
have a safe trip and enjoy your time in India
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
1.சப்தபதி - சஷ்டியப்தி ?(எது சரி?)
2.இந்த வர்ஷத்தின் கடைசிப்பதிவு - இத “புது வருஷம் மீண்டும் சந்திப்போம்னு” எழுதியிருக்கலாம்..
3. மத்தபடி புத்தாண்டு வாழ்த்துக்கள்..அனைவருக்கும்..
ஸ்ரீராம் அண்ணா, Thankyou so much.
அண்ணாமலையான்,
சஷ்டியப்தபூர்த்தி = 60 வயது முடியும்போது
சப்ததி = 70 வயது முடியும்போது
நாங்க சப்ததின்னு சொல்லுவோம் ஆனா ஸ்ரீராம் அண்ணா சப்தபதின்னு திருத்தினார் அதான் சப்தபதின்னு எழுதினேன்.
2.புது வருஷம் மீண்டும் சந்திப்போம் - இதான் பூலோகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.. நான் தான் டெய்லி பதிவு போடற ஆசாமி.எதுக்கு இதுக்கு போய் டென்சன் ஆவுறீங்க?
உங்களுக்கும்.. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நெக்ஸ்ட் மீட் பண்ணறேன் 2010 ல -இந்த டயலாக் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
போதும்மா போதும்....
ஓகே.. சந்தோஷமா போய்ட்டு வாங்க...
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
நன்றி அண்ணாமலை.
Englishஷே தெரியாதவங்க கூட அடிக்கடி 2009 இல் உபயோகிச்ச வார்த்தை cost cutting.//
ஹாஹாஹா... சரியா சொன்னீங்க அனன்யா.
புத்தாண்டு நன்றாகப் போகிறதென நினைக்கிறேன். வாழ்த்துக்கள். முடிஞ்சா தமிழ்ல எழுத முயற்சியுங்க.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி விக்னேஷ்வரி. உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
எனக்கு தமிழ்ல foundation இல்லை. எட்டாவதில் இருந்து தான் தமிழ் படிச்சேன்.so confidence கம்மி. தெரிஞ்த்தை எழுதறேன். பொறுத்தருள்க.
சப்தபதி என்றால் திருமணத்தில் தாலி கட்டியதும் ஏழடி நடப்பதைத்தானே சொல்லுவார்கள். இதென்ன புதுசா இருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: லேட்டஸ்ட் பதிவிலிருந்து ஸ்க்ரால் செய்து பார்த்து கொண்டு இப்போது இப்பதிவுக்கு வந்திருக்கிறேன். சொல்லி வைத்தாற்போல அதென்ன வியூ கவுண்டரில் இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள் என்று வருகிறது? ஒவ்வொரு பதிவுக்கும் வந்த பின்னூட்டங்கள் ஒருவரும் பார்க்காமலா போட்டார்கள்?
சார்,
இங்கே பாலக்காடுல அப்படித்தான் சொல்றா. சப்த = 7 பதி= 10 மே பீ 70 வயது பூர்த்தி அப்படி இருக்குமோ? சப்ததி தான் இங்கேத்த டெர்ம். பிழையானால் திருத்தவும்.
இந்த individual article counter சமீபமாத்தான் இன்ஸ்டால் பண்ணி இருக்கிறேன். இதெல்லாம் ரொம்ப பழைய போஸ்டாதலால் உங்களை முதல் வாசகராக சொல்லி இருக்கும்.ஐ தின்க் ஆஃப் த ஸோ.
Post a Comment