டிசம்பரில் மழையா? அதுவும் அபுதாபியிலா என்று எல்லோரும் வாயை பிளக்கிறார்கள். வழக்கமாக இங்கு டிசம்பரில் நல்ல குளிர் காற்று ஆரம்பித்து விடும். குளிர்கால உடைகள் ஏதுமின்றி வெளியில் செல்ல முடியாது. குளிர் என்றால் பனிக்கட்டி எல்லாம் இல்லாவிட்டாலும் கத்தி போல் கிழிக்கும் குளிர் காற்று படு வேகமாக அடித்துக்கொண்டு இருக்கும். முடி, உதடுகள், தோல் எல்லாம் வறண்டு போய் விடும். மிக greasy கிரீம் தேய்த்துக்கொண்டு வெளியில் போனால் கூட விளம்பரங்களில் காட்டுவது போல நகத்தால் கோடு போட்டால், அழுத்தமாக விழும்! ஹூம்.. அப்படி இருந்த அபுதாபியில் இப்போது மழை. மழை எல்லாம் இங்கு ஜனவரியில் (பொங்கல் போது) தான் வரும். இந்த வருடம் குளிர் சுத்தமாக இல்லை, மழையும் சீக்கிரமே வந்து விட்டதால் குளிர்காலம் கோவிந்தா தான் போலிருக்கிறது
எனக்கு இந்த ஊரில் மிகவும் பிடித்த கால நிலை குளிர் காலம் தான். முற்றிலும் புதிய வானிலை என்பதாலோ என்னமோ. ஸ்ரீமத் பாகவதம் இங்கு நடத்திய திரு ஜகத்சாட்சி பிரபு அவர்கள், பிருந்தாவனத்தின் தன்மையைப்பற்றி கூறும்போது,"நான் தமிழகத்தை சேர்ந்தவன், எங்களுக்கு மூன்றே மூன்று பருவ காலம் தான் தெரியும். கோடைக்காலம், தீவிர கோடைக்காலம், அதை விட அதி தீவிரகோடைக்காலம் என்று கூற, அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.
சுமார் 16 ஆண்டுகள் சென்னை வாசத்திற்கு பிறகு பெங்களூருவில் முதன் முறையாக,அக்டோபர் மாதம் அதிகாலை வெளியில் நடக்க போன போது குளிர் அனுபவித்த ஆனந்தம் இருக்கிறதே, அது ரிசஷனில் வேலைகிடைப்பதைக்காட்டிலும் அதிக ஆனந்தம். ஆகா இதனை நன்றாக இருக்குமா இந்த குளிர் காலம் என்று உணர்ந்தேன்.
அதன் பிறகு இங்கு துபாய் வந்த பொழுது தான் குளிர் காலம் என்பதன் பொருள் அறிந்தேன். அக்டோபரில் ஆரம்பிக்கும் பருவநிலை மாற்றம், அப்படியே மார்ச் வரை ஜில்லென்று இருக்கும். அதுவும் டிசம்பரில் கடுங்குளிர் இருக்கும். பாத்திரம் தேய்க்க அழுகையாக வரும், பாத்ரூம் போவதற்கு பதில் வேறென்ன என்ன options இருக்கிறது, முடிந்தால் கதீட்டர் போட்டுகொள்ளலாம் என்றெல்லாம் தோன்றும், fur செருப்பு போட்டுக்கொண்டு தான் நடமாடவேண்டும், எந்நேரமும் fleece கம்பிளி மற்றும் தலையணையே சரணம் என்றிருப்போம்.நன்றாக நினைவிருக்கிறது, 2006 டிசம்பரில் நாங்கள் கார் பயணத்தின் பொது கார் ஹீட்டர் போட்டுக்கொண்டோம். எனக்கு அதெல்லாம் உலக அதிசியம்.சுவிட்சை இந்தப்பக்கம் திருப்பினால் AC, அந்த பக்கம் திருப்பினால் ஹீட்டராமே? அடியாத்தீ "என்று நினைத்துக்கொண்டேன். என்னே டெக்னாலஜி.
சாதாரணமாக வெட்ட வெளியில் புல்தரையில் மல்லாந்து படுத்துகிடக்கும் பட்டாணிகள் கூட, கப்சிப்பென்று,வாலைச்சுருட்டிக்கொண்டு அவரவர் வீட்டில் முடங்கிவிடுவார்கள். யாரும் வெளியில் சுற்ற மாட்டார்கள், அநேகமாக எல்லோரும் டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவார்கள்.பாகிஸ்தானி ரொட்டி வியாபாரம் கனஜோராக நடக்கும்.
என்னமோ தெரியவில்லை இரண்டு வருடமாக குளிரே இல்லை. அக்டோபரில் எல்லாம் வெயில் சுட்டு தள்ளியது. நவம்பரில் காற்று வீசியது என்றாலும் அது வழக்கமான குளிர் காற்று அல்ல. டிசம்பரில் குளிர் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு பல்பு.எனக்கு பல்பு கிடைப்பது தான் விஜய் படம் flop ஆவது போல சர்வ சாதாரணமாயிற்றே..so whats new?
டிசம்பர் எட்டு தேதி வரை காற்றே இல்லை அப்புறம் தானே குளிர், ஆனால் திடீரென்று வியாழன் முதல் வெயில் காணமல் போய்விட்டது. வியாழன் இரவு மழை பெய்தது. வெள்ளியன்று காலை இதமான வானிலையில், காலை சிற்றுண்டி முடித்து நாங்கள் வாராந்திர ஷாப்பிங் சென்றிருந்தோம். எப்படியும் கலீதியா சென்றதால் திரும்பும்போது இந்த வானிலையால் ஈர்க்கப்பட்டு கார்னிஷ் சென்று விட்டோம். சுமார் மூன்று மணி நேரம், அங்கேயே உட்கார்ந்து விட்டோம். ஏதோ பெயிண்டிங் போல இருந்தது இந்த ஊர். முதன் முதலாக இந்த ஊரை எனக்கு பிடித்திருந்தது. பச்சை பசேல் என்ற புல்வெளி, அழகிய பூக்கள், சமுத்திரம், இதெல்லாம் பார்த்து மனது ரொம்ப மகிழ்ச்சியாகி விட்டது.
என் UAE வாழ்க்கையில் அந்த நாள் தான் மிகசிறப்பான நாள் என்பேன்.என் கணவரும் அவசரப்படுத்தாமல் அமைதியாக இந்த இனிமையான வானிலையை ரசித்துக்கொண்டு இருந்தார் . வழக்கம் போல நான் தான் மித மிஞ்சிய சந்தோஷத்தில் உளறிக்கொட்டிகொண்டு இருந்தேன்.நாள் முழுதும் இளிச்ச வாயுடன் இருந்தேன்
அன்று இரவே நல்ல மழை. நேற்று முழுவதும் மழையோ மழை. நள்ளிரவு ஹோ என்று இரைச்சல்.ஜன்னல் வழி பார்த்தபோது கனமழை. பேசாமல் பெல்மெட் கதவை திறந்துவைத்துக்கொண்டு, மழையை ரசித்துக்கொண்டே, சூடான இஞ்சி டீயுடன் எதாவது கல்கியின் கதை எடுத்து படிக்கலாம் என்றிருக்கிறேன். காலையிலிருந்து சுமார் 8 முறை பால்கனியில் போய் நின்று வேடிக்கை பார்த்தாகி விட்டது.. தீரவே இல்லை. பார்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்ட கார்கள் எல்லாம் சுத்தமாக தலைக்கு குளித்து இருக்கின்றன. சாலைகளும் அவ்வாறே.பதினைந்து மாடி இருபது மாடிக்கட்டிடம் எல்லாம் நனைந்து வெளிப்புரக்கண்ணாடி எல்லாம் பளிச் என்று சிரிக்கிறது.சில மக்கு பிலிப்பினோக்கள் மட்டும், ரெயின்கோட்டு அணிந்து செல்கிறார்கள். மழை ஒரு நாளோ ரெண்டு நாளோ அதை ரசிக்காமல் ரெயின்கோட்டு அணிவதனால் மக்கு என்றே நான் சொல்லுவேன். லேசான மஞ்சு வேறு. இன்னும் மேகங்கள் இருப்பதால் நிச்சயம் இன்னும் மழை இருக்கும்போல தோன்றுகிறது.நகரமே மந்தமாக இருக்கிறது.இதுவே சென்னையாக இருந்தால் கிண்டியில் பாலாஜி மருத்துவமனை அருகே எப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இங்கு சாலைகளில் அங்கங்கு வைக்கப்பட்டு இருக்கும் Drainage slotசில் தண்ணீர் தேங்காமல் வடிந்துவிட்டன.
வைரமுத்து சொல்வது போல..
மழை கவிதை கொண்டு வரலாம் யாரும் கதவடைக்க வேண்டாம்.
ஒரு கருப்பு கொடிகாட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம் நெடுஞ்சாலைதனில் நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரக்கும் பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
எப்போதும், மழை வரும்போது இது போன்ற நல்ல பாடல்களை எனக்கு நினைவூட்டிவிட்டு போகும்.
நா மழை வந்தா உங்களுக்கு என்ன தோணும்? என்று கண்களில் ஆர்வம் பொங்க சும்மாங்காச்சுக்கும் இவரிடம் கேட்டு வைத்தேன்.அப்போ தானே பதிலுக்கு இவர் என்னிடம் கேட்பார் இவரை முக்கால் மணி நேரம் அறுக்கலாம் என்று திட்டம் தீட்டி இருந்தேன்.தீர்க்கமாக யோசித்து விட்டு சொன்னார்,"கார் டயர் செக் செய்ய வேண்டும்". நான் : !@#$@#$@#$@!#$@!#$@#$@#$.
இந்த போஸ்டில் இருந்து எல்லாருக்கும் என்ன தெரியறது?என்னை மாதிரி ரொம்ப வெட்டியா இருந்தா இப்படி எல்லாம் தான் எழுத தோணும்.
6 comments:
http://gulfnews.com/news/gulf/uae/weather/season-s-heaviest-rain-in-uae-1.552891
இதான் கனமழையாம் இந்த ஊர்ல.. ஹய்யோ ஹய்யோ.. என்னத்த சொல்ல?
this is a really very good post to read .............................................if you are about to commit suicide............. :)
பேசுறவங்க பேசட்டும்... அந்த ஊரிலே மழை எவ்வளவு enjoyable-ங்குறது அங்கே இருக்குறவங்களுக்கு தான் தெரியும்... அவ்ளோ வெயிலுக்கப்புறம் வர்ற குளிரும், (சிறு) மழையும் மிகவும் ரசனையானவை... எனக்கு அபுதாபி மழைன்னா - ஸ்வதேசும், வீர் ஜாரா படப்பாடல்களும் தான் நினைவுக்கு வருது...
பாட்டு கேட்டு ரெஜிஸ்தர் பண்ணற அளவுக்கு இங்கே மழை நீடிப்பதில்லையே. நல்ல யோசனை தான். பாட்டு கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். Its too late to think about it now, மழையெல்லாம் போயே போச்சு! Choley Gachey, Poyindhey, Gaayab, Its Gone. இரண்டு நாள் தான் சுவர்க்கம். பாக்கி எல்லாம் வறட்சி, வெக்கை இதான் இங்கே. பத்தே நிமிடங்களுக்குள் பூமி இந்த மழையை உறிஞ்சி விட்டிருந்தது. Facebook பிலிப்பினோக்கள் கூட மழையின் காரணம் குதூகலம் தெரிவித்திருந்தார்கள். மீண்டும் வருமா என்று பால்கனியில் தவமிருக்கிறேன்.
மழையில் நனைந்தவாறே நடப்பது அற்புதமான அனுபவம். பார்க்க: http://dondu.blogspot.com/2008/11/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Nice blog to read. Feeling as if am relishing rain in this Chennai summer which is cold even to think what you said.
Vadivel style la Namma Mahadevan sir car patti kavala pattatha sollanum na: ivanga eppavume ippadithan namma velaya gavanikalam boss :)
keep rocking
cheers,
Nithya Kartik
Post a Comment