Pages

Friday, December 18, 2009

வாலிப வயசு

வாலிப வயசு

டீவீக்களில், காட்டப்படும் படங்களே தான் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள் என்று இவரிடம் வருத்தம் தெரிவித்துகொண்டு இருந்தேன். அது எப்படின்னு தெரியலை, ஒரு 5-6 DVDயை வெச்சுண்டு indefinite loop ல படங்கள் போடறாங்கன்னு சொன்னேன். "நா, உங்க மேஜர் Stats  (Statistics) தானே?" என்றேன். "ஆமாம், Maths and Statiscs" என்றார். அந்த Permutation & Combination Formula  வருமே,nCr ன்னு அதை சொல்லுங்கோ என்றேன். ஹீ ஹீ, மறந்து போய்டுத்து டீ, என்று வழிந்ததோடு நிறுத்திக்கொண்டு இருக்கலாம். படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமாசோல்யோ என்றாறே பார்க்கலம். ஆடிபோய்விட்டேன். எது? எப்டி எப்டி? அஞ்சு வர்ஷமா,"ஏய்" என்று Kitchenனிலிருந்து சொர்ணாக்கா மாதிரி கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடி வருவதற்குள் அய்யா பாத்ரூமில் அடைக்கலம் புகுந்துவிட்டார். டிகிரி முடித்து ஐந்து வருடம் அல்ல, ஒரு ஐம்பது வருடம் இருக்கும். இதே ரேஞ்சில் இவர் விடும் பீலாக்கள் இருக்கிறதே, அப்பப்பா..அதைக்கேட்பதற்கு பதிலாக பேசாமல் விஜயின் சமீப கால படங்கள் பார்க்கலாம். அவ்வளவு  டாப் ராகம்.

உடனே எனக்கு , வைகாசி பொறந்தாச்சு என்ற காவியத்தலைவன் பிரசாந்த் நடித்த படத்தில்,"ஒரு பொக்கை வாய் ப்பாட்டி தன் சுருங்கிய உதட்டில் லிபிச்டிக் பூசி,தலையில் ரிப்பன் கட்டி காதில் தொங்கட்டான் போட்டு ,தாவணி கட்டிக்கொண்டு, ஊஞ்சலில் " ல ல லாலா லா லா ல லா" என்று பாடிக்கொண்டே ஆடுவது தான் பளிச் என்று நினைவுக்கு வந்தது.

அதே மாதிரி இவருக்கு தலையில் Styling Gel போட்டு, முடி எல்லாம் முள்ளம்பன்றி மாதிரி குச்சி குச்சியாக பண்ணி, RMKV புடவையில் இருப்பது போல ஐந்பதாயிரம் வண்ணங்களில் ஹேர் கலர் Stripes/Highlights/Flashes  போட்டு, காதில் கடுக்கண் போட்டு, மூக்கில் வளையம் போட்டு, கழுத்தில் சிவபெருமானின் பாம்பு போல earphone சுத்தி இருக்க, கையில் Ipod, மிகt ightடாக தொப்பை மட்டும் தெரியும் T Shirt & Blue Jean னுடன் இவரை கற்பனை செய்து பார்த்தேன். அது ,இவர், என்னை இம்ப்ரெஸ் பண்ணுவதற்குDanceஆடுவதைவிட மிகவும் காமடியாக இருந்தது.

ஒரு இளஞ்சன் படிச்சு முடிச்சு அம்பது வர்சமானாலும் அஞ்சு வர்சம்னு தான் சொல்லுவான் ஏன்னா இது வாலிப வயசு என்று மெதுவாக பாத்ரூமிலிருந்து குரல் கேட்டது. கஷ்டம் கஷ்டம் கஷ்டம்

நிற்க, இந்த போஸ்ட்டை படித்த பிறகு , யாரேனும் இடக்கு மடக்காக கமெண்ட் எழுதினாலாகட்டும், என்னை எதிர்த்து அவருக்கு support பண்ணி கமெண்ட் எழுதினாலாகட்டும், அது பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் நான் மகேஷை கூறவில்லை,கூறவே இல்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

6 comments:

Unknown said...

அக்கா... வானத்துல வாழுற தேவர்களுக்கு 1 நாளுங்குறது பூமியிலே வாழற மனுஷங்களுக்கு 1 வருஷங்க்றது கணக்கு... அதுபோல பெண்மணிங்களுக்கு 10 வருஷங்குறது பசங்களுக்கு (அது தான் எங்களுக்கு) 1 வருஷம்... அதனால தான் எங்களுக்கு 60-ல கூட 16ங்க மாட்டுது... இந்த சின்ன உண்மை கூட இன்னும் புரியலையா??? Note the point - நான் மாப்புவுக்கு சப்போர்ட் பண்ணி எழுதலை... வெறும் உலக நியதியை உனக்கு ஞாபகப்படுத்தியிருக்கேன்.

Ananya Mahadevan said...

பல்லை நர நரன்னு கடிச்சதுனால என்னமோ tooth guard போடணுமாம், மரியாதையா 300௦ திராம் DD எடுத்து அனுப்பவும்..

Priya said...

கல்யாணம் ஆன, நம்ப ஊரு ஆண்கள் எல்லாருக்கும் மனசுக்குளே ஒரு நெருடல் இருந்துட்டே இருக்கும்...அவங்க வயசை பத்தி. அவங்களுக்கும் அவங்க wife கும் ஒரு generation gap இருக்கும்,ஆனால் வெளியில் மட்டும், அது தான் apt age difference சொல்லிப்பங்க.. உள்ளுக்குளே இருக்கும் மன நெருடலின் விளைவு தான் கல்லூரி படித்து முடித்த ஆண்டு மறப்பது.. தேவர்களின் கதை etc...etc...

Ananya Mahadevan said...

:-) Perfectly well said priya. Thanks a lot.

dondu(#11168674346665545885) said...

நான் கூட சமீபத்தில் 1969-ல்தான் டிகிரி முடித்தேன். அதுக்கென்ன இப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ananya Mahadevan said...

சார் அப்போ நீங்க பேரிளம்-பையன் ஹீ ஹீ, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். நீங்கள்ளாம் என்னை ஆசீர்வதிக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு.

Related Posts with Thumbnails