அநன்யா எங்கே? எங்கே?ன்னு ஏரி,ஆறு,குளம்,குட்டையில எல்லாம் தேடி அலைஞ்ச அருமை வாசகர்களுக்கு நன்றி! பல ஈமெயில்கள் மூலமா என்னை தொடர்பு கொண்டு,"ப்ளீஸ் நீங்க மறுபடியும் எழுதணும்"ன்னு கெஞ்ஞ்ஞ்ச்சி (சரி.. சரி... கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணியூட்டேன், இதைப்போய் பெரிசு படுத்தாதீங்கேளேன்) கூத்தாடி (இதுவும் அதே, அதே சபாபதே) கேட்டுண்டதாலே, என்னுடைய சொற்ப கற்பனாசக்தியை தீட்டிண்டு ப்ளாக்கருக்குள் மறுபிரவேசம்.
ஜவர்லால்ஜியின் சமீபத்திய சங்கீத பதிவை படித்ததால் தான் இந்த பதிவிடும் ஆசை துளிர்விட்டது அப்படீங்கறதை சொல்லிக்கறதுக்கு என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கு எனக்கு? அதே மாதிரி நானும் என் தங்கைமணியும் சங்கீதம் ’கத்தி’க்க.. சாரி கத்துக்க போன நினைவுகளை எழுதலாம்ன்னு தான் வந்தேன்.
அந்தக்காலத்து ‘புஷ்’ டேப்ரிக்காடரில் எம்.எஸ் அம்மாவின் காமாக்ஷி சுப்பிரபாதமும், சங்கராபரணமும் கேட்டிருந்தாலும், சம்பிரதாயமாய் சங்கீதம் அதுவும் வீணையுடன் ஆரம்பித்தது விஜயவாடாவில் தான்.
அடடே... அநன்யாவுக்கு வீணையெல்லாம் தெரியுமான்னு.. நீங்களெல்லாம் தப்பிதாமா நெனைச்சுண்டா நான் என்ன பண்றது? சொல்ல வந்ததை முழுசா படியுங்கோ.. ஸ்கூல் முடிஞ்சு ”5 கண்டக்கு வீண க்ளாஸ் முதலெடுதாம்” என்று பிரமிளா மிஸ் சொல்லி இருந்தா.. ஓஹோ இதான் வீணையான்னு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ஆச்சர்யம். சும்மா இருக்காம டொய்ங் டொய்ங்ன்னு கம்பிகளை மீட்டி அந்த இசையென்ற இன்பவெள்ளத்தில் நீந்த ஆரம்பிச்சோம். சும்மா அப்படியே இருந்திருக்கலாமோன்னோ? "இதுல எப்படீண்ணே இசை வரும்"ன்னு ஒரே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். தங்கை ஜஸ்டு சீயர் லீடர் மாதிரி பண்ணிண்டு இருந்தா. தாளம் போடும் ஓட்டைக்குள் எட்டிப்பார்த்து, மணத்து பார்த்து, கடைசி கம்பியின் ’ஜங் ஜங்’ கை ரசித்து, கம்பிகளில் ஊடே சின்னச்சின்ன இடைவெளிகளில் சுண்டு விரலை நுழைத்துப்பார்த்து, கடைசியில் வீணையின் நுனியில் இருக்கும் ஸ்ட்ரிங் அட்ஜஸ்மெண்டுக்கு வந்தே விட்டேன்.
1985களில் டீவியில் ஃப்ரீக்வென்ஸி செட் செய்வதற்க்கு மேனுவலாக ட்யூன் பண்ண வேண்டும். அதற்கு ஒரு சின்ன கேபினட்டுக்குள் ஒரு குச்சி வெச்சிருப்பா..(தெலுங்கில் இதை ’புல்ல’ என்பார்கள். இந்த வினோதமான சாதனத்தை CR TV யின் ஆயுள் முடியும் வரை (1995?) புல்ல என்றே அழைத்தோம்.. ) அதை எடுத்து சானல் ஓட்டையில் வெச்சு திருகிண்டே இருந்தா விஜயவாடாவில் ஞாயித்துக்கிழமை சாயந்திரம் புள்ளி புள்ளியா தமிழ்ப் படம் வரும். இதே மாதிரி ஃப்ளூக்ல வேற ஏதாவது நிகழ்ச்சி வரதான்னு பார்க்கலாம்ன்னு அந்த குச்சியை வெச்சு திருகிப்பார்த்துண்டே இருக்கறது. அதுல பாருங்கோ நானும் அதே ஞாபகத்துல வீணையோட String adjustment லீவரை திருகி (ஹை, இது சுத்த முடியறதே, இன்னும் திருகலாம் போல இருக்கே? இன்னும்? அட” என்று ரொம்ப பிராயசையுடன் நான் திருக, அந்த பாவப்பட்ட கம்பியும் கடைசி வரை தன்னை இழுத்துக்கொடுத்து பொட்டுன்னு உயிரை விட்டுடுத்து! ’ஞ்ஞ்ஞை’ன்னு அறுந்துடுத்து..
அடுத்து மிஸ்ஸின் கடுங்கோபத்துக்கு ஆளாகி என்னை வீணைக்கிளாசிலிருந்து தள்ளி வைத்து விட்டார்.. நெக்ஸ்டு அம்மா கெஞ்சிக்கேட்டு தங்கைமணியுடன் கொஞ்ச காலம் க்ளாசுக்கு போனேன். இரண்டு குரல்களிலும் அப்படி ஒரு தேஜஸ், Sync. ஆஹா பிற்காலத்தில் நாம ரெண்டு பேரும் போடி சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படலாம் என்று ஊகித்த வாரே வழியெல்லாம் பேசிண்டே போவோம். (எனக்கு வயது 7 அவளுக்கு 4) ஜண்டஸ்வரத்தில் நாலாவது கஷ்டமான (?!) பாடத்தை வெகு அனாயாசத்துடன்(கொஞ்சம் ஓவரா இருக்கோ) நான் பாட, பக்கத்தாத்து ரமா ஆண்ட்டி கூட “மீ அம்மாயிலு சாலா பாக பாடுதுந்நாரண்டி”ன்னு சொன்னா.. இதெல்லாம் யாருக்கு தெரியறது? என்னிக்கி அந்த ஆண்ட்டி சொன்னாளோ அன்னிக்கே எங்க பாட்டுக்கு ஒரு முடிவு வந்தது. என்ன காரணம்ன்னு சரியா ஞாபகம் இல்லே.. (ரெண்டு பேருக்கும் ஹிந்தி க்ளாஸ்/பாட்டுக்ளாஸ் ஃபீஸ் எல்லாம் பட்ஜட்ல இடிக்குதுன்னு மை நைனா சொல்லி இருப்பார்ன்னு நினைக்கறேன்) ஸ்வாதி முத்யம், சாகர், ஸ்வயம் க்ருஷி, ஆனந்த பைரவி, மிஸ்டர் இண்டியா, புன்னகை மன்னன், மெளனராகம், நாகயன் போன்ற படங்களில் வரும் பாட்டுக்களால் எங்கள் இசை தாகம் தணிந்தது.
ஹைத்ராபாத்தில் இருந்த போது எங்கள் ஸ்கூலில் 40வது சுதந்திர தினம் வந்தது. அந்த விழாவில் க்ரூப்சாங் பாடினோம். எங்க PT Sir தான் கோச்சிங். ஸ்போர்ட்ஸ் கோச் எப்படிங்காணும் பாட்டு வாத்தியார் ஆகமுடியும்? மிக வினோதனமான் பாட்டை அவர் ஆக்ஷனுடன் பாட, நாங்கள் எல்லோரும் சிரி சிரின்னு சிரிச்சுண்டே பாடினோம்.அதென்னமோ அவர் 40த் 40த் என்று ரெண்டு வாட்டி சொல்லச்சொன்னார், கூடவே இண்டிபெண்டன்ஸ் டேயில் வரும் ’ இ’ யை முக்கி எஃபக்ட் சேர்க்கச்சொன்னார். முதலில் 40த் ரெண்டு வாட்டியே அனாவஸ்யம். இதுல முக்க்க்க்கி ‘இ’ சொல்ல வேண்டுமாம். இதென்ன பாட்டா இல்லே ரெசிட்டேஷனான்னு குழம்பினோம். தங்கைமணி மிகவும் promptஆக வீட்டில் அதை அம்மாவிடம் செய்து காட்டி கிண்டல் பண்ணினாள்.என்ன தான் க்ரூப் சாங் ஆனாலும் எங்க சங்கீத திறமையை முழுமையாக பிரதர்சிக்க முடியாதததால் மிகவும் வருந்தினோம்.
ஒரு வழியாக சென்னை வந்தவுடன் it is not too late even now என்ற எண்ணத்துடன் அவ்வாவின் தீவிர முயற்சியினால் புருஷோத்தமநகரில் ஒரு மாமியிடம் அபிராமி அந்தாதியில் சேர்த்து விட்டார்கள். நிற்க, இது பாட்டு க்ளாஸ் இல்லை, சுலோக க்ளாஸ் தான் டீ என்று இரெண்டு பேரும் பெரும் சோகமடைந்தோம். சரி உட்கார்ண்டு முறையாக ராகத்துடன் கத்துக்கலாம்ன்னு தான் நினைச்சோம். பட்..பாருங்கோ அந்த மாமி அந்தாதியை அல்ந்தாதி என்றே பாடுவார்.. ”எல்ல்ல்ல்ல்ல்ல்ல்திரன்” என்று ரஹ்மான் பாடுவாரே அதே மாதிரி.
ஒரு பாட்டு முடியும் அதே எழுத்தோடு அடுத்த பாட்டு ஆரம்பம் ஆகுமா? என்ன ஆச்சர்யம்ன்னு நினைச்சுண்டோம். மாமி நன்னாத்தான் சொல்லிக்கொடுத்தா.. பட் செல்லவ்வாவும் அம்மாளு அவ்வாவும் ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவரைக்கும் பாடச்சொன்னா.. நாங்களும் மிக அருமையா அப்படியே பாடினோம். பாடினப்போ “ஒத்து .. ஆ மாமி ஒகே அபஸ்வரம்”ன்னு சர்டிஃபை பண்ணி டிஸ்குவாலிஃபை பண்ணிட்டா.. மாமி தான் அபஸ்வரமாம். நாங்க படு சூப்பர் ஸ்வரமாம். (ஹிஹி)
ஆசை யாரை விட்டது? நியூகாலனியில் ஒரு மாமியிடம் மறுபடி தஞ்சம் அடைந்தோம். கொலுவுல பாடறதுக்கு நாலு பாட்டு சொல்லித்தாங்கோ மாமின்னு சொல்லிட்டு அலை பாயுதோ, வெங்கடாச்சல நிலையம், போ சம்போ, ரெண்டு மூணு க்ருஷ்ணன் பாட்டு, ரெண்டு மூணு அம்பாள் பாட்டு எல்லாம் கத்துண்டோம். வழக்கம்போல போடி சிஸ்டர்ஸ் கூடிய சீக்கிரமே ஆயிடுவோம்பாருடீன்னு பேசிண்டோம். ரெண்டு பேரும் மேடையில உக்காண்டு பல ஸ்வர ஆராதனையெல்லாம் பண்றமாதிரி கனாக்கள் கண்டோம். கடைசியில் அந்த மாமியும் (எங்க தொல்லை தாங்காமல்) ஊரை காலி பண்ணியூட்டு போயிட்டா.
சுந்தரவல்லி ஸ்கூலில் பாட்டு டீச்சரிடம் கொஞ்சம் கத்துண்டோம். நாங்க மூணு பேர் இருந்தோம். எங்க கூட ஒரு பொண்ணு சுருதியே சேராம பாடுவா. (எங்க ரெண்டு பேர் சுருதியெல்லாம் பெர்ஃபெக்டாக்கும்) அந்த டீச்சர் ஆத்துக்காரர் அஷ்டக்கோணலா மூஞ்சியை வெச்சுண்டு எங்க க்ளாஸ் பாடுற பாட்டை ரொம்பவே ரசிச்சு கேட்பார்..அவருடைய வேதனையை நாங்க நன்னா புரிஞ்சுண்டோம். அதுனால நாங்களே (வழக்கம்போல மை டியர் நைனாவின் பணத்தை ஃபீஸாக கட்டிவிட்டு) டிஸ்கண்டின்யூ பண்ணிட்டோம். ஒருவேளை நாங்க மட்டும் கண்டின்யூ பண்ணி இருந்தோமானா... இன்னேரம்... சரி விடுங்கோளேன்..
அப்புறம் நோ பாட்டு க்ளாஸ். கல்யாணத்துக்கப்புறம் ரங்குவின் encouragement கிடைக்க, துபாயில் பாட்டு க்ளாஸ் சேர்ந்தேன். ஒரு மலையாளி சார் என்னை பாடச்சொல்லி கேட்டு,”மேடத்தினே ஒரு பாடு அறியும், நம்மள் நேரே ஜண்டஸ்வரத்தின போகாம்”ன்னு சொல்லியூட்டார். நானே ஆச்சரியப்படும் அளவுக்கு கட கடன்னு முன்னேற்றம். ரெண்டு மூணு கீதம் எல்லாம் கூட படிச்சுட்டேன். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்ன்னு சும்மாவா சொன்னா?
நான் Always simply above the ordinary ஆனதுன்னாலேயோ என்னமோ, எனக்கு எப்போவுமே தனிக்கிளாஸ்தான். அதே சமயம் ரங்குவும் வீணை க்ளாசுக்கு போக, ரெண்டு பேரும் சங்கீதமே சதாஸ்மராமியாக விளங்கினோம். ரங்குவுக்கு 'பாம்பே ஜெயஸ்ரீ' என்றால் கொஞ்சம் ‘இது’ அதே வெறியுடன் ’அபுதாபி அநன்யா’ ஆகியே தீருவேன் என்று வீறுகொண்டு முயற்சியுடன் பாடி ப்ராக்டீஸ் பண்ணிணேன். வெளியில் காரில் போனால் கூட பாட்டு ப்ராக்டிஸ் தான். சதா பாட்டு தான். வெக்கேஷனுக்கு சென்னை வந்த போது என் அம்மா வினோதமா பார்த்தார்.. என்னாச்சு உனக்கு? லூஸாயிட்டியான்னு கேட்டா. பின்னே, ஹாலில் உக்காண்டு பாட்டு புஸ்த்தகத்தை வெச்சுண்டு உரக்க ஸ்லோவாக கீதம் ப்ராக்டிஸ் பண்ணினா வித்தியாசமா இருக்காதா? அவர் வீணை வாசிக்கும் டெம்போவில் பாடிப்பாடி ஸ்டாண்டர்ட் டெம்போவே படு ஸ்லோ ஆயிடுத்து. நான்காவது கீதம் படு கஷ்ஷ்ஷ்ஷ்டமாக இருக்க, சங்கீத ஆசையை துறந்தேன்.
30 comments:
சுந்தரவல்லி ஸ்கூல் டீச்சர் யாரு? கோமதி டீச்சரா அல்லது திருமதி ரமா நாராயணனா?
பதிவுலகத்தில் மீண்டும் காலடி எடுத்து வைத்ததற்கு வாழ்த்துகள். வாரம் ஒரு பதிவாவது தவறாமல் எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்!
சங்கீதக் கதை இனிமை!
இன்றைக்கு எங்கள் ப்ளாகில் உங்களின் இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தேன். வெகு வேடிக்கையாக எழுதிகிறீர்களே, தொடர்ந்து எழுதுங்கள்!
வாழ்த்துகள்!
Welcome back
ஜவர்லால்ஜி பதிவைப் படிச்ச விளைவா? நல்லாத்தானே இருக்கு?
அடிக்கடி எழுதுங்க. எழுத்து சோர்வைப் போக்கும் (படிக்கறவங்க பாடு கிடக்குது).
welcome back!
ப்ளஸ்ல கமென்ட் போட முடியாதபடி பண்ணி இருக்கியே? அநியாயமா இல்லே?
மலையாளி செந்தமிழ் பாட்டு சொல்லிக்கெ(கொ)டுத்தாரா?
@ All, கமெண்ட் போட்ட எல்லா நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
@KGG Sir, சுந்தரவல்லி ஸ்கூல் பாட்டு மிஸ் பேர் சாரதா டீச்சர் என்பதாக நினைவு.
@ஜனாஜி, @ரஞ்சனி ஜி, ரொம்பவும் நன்றி!
@அப்பாஜி, ரொம்ப நன்றி! நீங்க வந்ததே ரொம்ப பெருமை. //ஜவர்லால்ஜி பதிவைப் படிச்ச விளைவா? நல்லாத்தானே இருக்கு?// என்னா வில்லத்தனம்?//(படிக்கறவங்க பாடு கிடக்குது).// அதானே? அதையெல்லாம் பார்த்தா 128 போஸ்டு போட முடியுமாங்கறேன்?
@திவா அண்ணா, ஆமாம் அவருக்கு நிறைய தமிழ்ப்பாட்டு தெரியும். நான் தான் அவருக்கு ட்ரான்ஸலேஷனாக்கும். கூகிள் ப்ளஸ்ன்னா என்னவாக்கும்?
Wow நான் இப்போ தான் உன் பதிவு பார்த்தேன் அனன்யா. சூப்பர். அபுதாபி அனன்யா பிரமாதம்.....உங்க ஆத்துகாரர் வீணை வாசிக்க நீயும் தங்கை மணியும் பாட அருணும் வருணும் தாளம் போட ஆஹா அருமை
//போடி சிஸ்டர்ஸ்//
திட்டாதே அனன்யா. மொதல்ல புரியல. ஏன் தன்னை தானே "போடி"னு திட்டிக்கறா'னு கன்பியூஸ் ஆகிட்டேன்...:)
//ஒருவேளை நாங்க மட்டும் கண்டின்யூ பண்ணி இருந்தோமானா... இன்னேரம்//
யார் செஞ்ச புண்ணியமோ எல்லாம் நல்லபடியா "முடிஞ்சுது"...:)
//துபாயில் பாட்டு க்ளாஸ் சேர்ந்தேன்//
மறுபடி மொதல்ல இருந்தா...அவ்வவ்...:) ஒருவேள வீட்ல உன் பாட்டு தாங்க முடியாம "என்கரேஜ்" பண்ணி பாட்டு கிளாஸ் அனுப்பி இருப்பாரோ...:)
எது எப்படி இருப்பினும்... ரெம்ப நாளைக்கப்புறம் நீ எழுதி படிச்சதுல ரெம்ப குஷி ஆகிட்டேன். ரெம்ப ஹேப்பி நிஜமா. தொடர்ந்து எழுது அனன்ஸ். Welcome Back
வாங்கோ அநன்யா .. தொடர்ந்து அசத்துங்க..
இனிமே கச்சேரி களை கட்டிரும் :-))
Good one... keep writing
http://kgjawarlal.wordpress.com
Vadai pochche
Andha Hyd loosu PT Master paattai innum konjam vistheeranama ezhudha vendiyadhu dhaaney...''Welcome welcome welcome''-nu laddu maadhiri sammandhamey illama action panna vecchadhukku naan avarai mannikkavey maatten! Kradhagan...nammalai maadhiri pacchai kuzhandhaigalai vecchu comedy panni irukkaan!
Welcome Back...
சங்கீத ஸ்வரமா ஒரு பகிர்வு - தொடரட்டும் பகிர்வுகள் - அட்லீஸ்ட் வாரத்திற்கு ஒன்றாவது!
Ha ha...yea...I remember all those classes now...ippo kooda try panninen paattu katthukka...hard luck! didn't work due to time constraints!
உங்களின் ரீஎல்ல்ல்ல்ன்ட்ரீ சுவாரஸ்யம்! சரிகமபதநி-ன்னு சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியிருக்கிறீர்கள்.
...
போடி சகோதரிகள் இந்த பாமர உலகுக்குக் கிடைக்காமல் போனது வருத்தமோ வருத்தம்.. தம் தம்தத தம்தத தம்த தம்த தம்ம்..!
அபுதாபி அநன்யா - கேட்கும் போதே கிர்ரென்று இருக்கிறது!
இன்னும் கொஞ்சம் மோல்ட் செஞ்சா ஒரு அருமையான சிறுகதையா வரும் இப்பதிவு - தலைப்பு... தி போடி சகோதரிகள்!
nalla velai escape
சங்கீதம் பல காலகட்டங்கள்ல பலவிதமான சோதனைகளை தாங்கிண்டு இன்னிக்கும் கம்பீரமா நிலைச்சு நிக்கர்து!னு எங்க ஊர் பாகவதர் அடிக்கடி சொல்லுவார். ஆனா எந்த அளவுக்கு சோதனை எல்லாம் தாங்கியிருக்குனு இப்பதான் புரியர்து! :))
@சுபாஷிணி அக்கா, நீங்க சொல்றமாதிரி நடந்தா, உலகம் அழிஞ்சுடும். :D நன்றி!
@ATM, உன் ஆட்டோகிராஃப் கிடைக்க என் ப்ளாக் என்ன புண்ணியம் பண்ணி இருக்கணும்? நன்றி நன்றி!நானும் இதே மாதிரி சொல்ல வேண்டாமா? சீக்கிரம் எழுத ஆரம்பி. நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் சரக்கு இருக்கோ இல்லையோ, enthusiasm மட்டும் குறையவே கூடாது.
@ஆசியாக்கா, எப்படி இருக்கீங்க? உங்க ப்ளாக் புகழ் ஊரெல்லாம் பரவரதே! வாழ்த்துக்கள்!
@அமைதிச்சரல், நன்றி!
@ஜவர்ஜி, ஆஹா ஆஹா.. என்னே பெருமை, நீங்க என் ப்ளாகுக்கு வந்ததே எனக்கு மிகப்பெரிய பெருமை தான்.நன்றி தலைவா!
@மாதவன் அண்ணா, மூணு நாள் கழிச்சு வந்து வடை கேட்டா என்ன பண்றது. நெக்ஸ்டு போஸ்டுல உங்களுக்கு எடுத்து வைக்கறேன். ஹேமா வந்து கேட்டாலும் கிடையாது. சரியா? :)
@வெட்டி, விட்றா விட்றா சூனாப்பானா!
@வெங்கட், நன்றி, நிச்சியம் முயற்சி பண்றேன்.
@ஜகன், உங்க பின்னூட்டமே பதிவு மாதிரி அவ்ளோ க்வாலிட்டி.. நீங்களும் சீக்கிரம் தொடங்குங்க.
@கார்த்திக், யாரு எஸ்கேப்? நீங்களா? ஐயாம் ஸ்டில் யங் நோ.. அடுத்த மாசம் பாட்டுக்கிளாச் சேரலாம்ன்னு இருக்கேன். :P
@தக்குடு, என் குரல் மிக அருமைன்னு நீயே நிறைய வாட்டி பாராட்டி இருக்கே.. இப்போ.. அதே வாயால... புஹு..புஹூ.. நான் போறேன்!
ரீ என்ட்ரி ஆனதை ஏன் எனக்குச் சொல்லலை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//சங்கீதம் ’கத்தி’க்க.//
ஹிஹிஹி, என் புகுந்த வீட்டில் எதுவானாலும் இப்போவும் "கத்தி"க்கத்தான் செய்வாங்க. கத்துக்க மாட்டாங்க! :)))))))
//ஹைத்ராபாத்தில் இருந்த போது எங்கள் ஸ்கூலில் 40வது சுதந்திர தினம் வந்தது.//
ஹை, அதுவரைக்கும் உங்க ஸ்கூல் யார் கிட்டே அடிமையா இருந்தது??? நிஜாம் கூட இல்லையே?? ஸ்கூலுக்கு 40-ஆவது சுதந்திர தினம்னா எப்போ விடுதலை கிடைச்சது? :)))))
கடம் வாசித்த அந்த கதாபாத்திரத்தை விட்டுட்டியே அக்கா...
Aahaa--- padikkarathe paatta kettaapola irukke! Paattum paadi kettirunthaa!!! Aahaa..... Bale Bale... Besh Besh...
WELCOME BACK! :D
வணக்கம் தோழி
தங்கள் ஆக்கம் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது .வாழ்த்துக்கள்
மென்மேலும் உங்கள் ஆக்கங்கள் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று
வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .தொடர்ந்தும் எழுதுங்கள் .
Hi Ananya
You have a very funny, creative blog.I am enjoying it a lot.Thanks for adding some smiles to my day:)
Rgds
Gayathre
Post a Comment