Pages

Tuesday, March 19, 2013

”ஆளுக்கு ஒரு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும்”

RVS அண்ணாவுடன் பேசிண்டு இருந்தபோது தான் இந்த டாப்பிக் மனசுல உதயமாச்சு. சமீபமா எனக்கும் ரங்குவுக்கும் நடுவுல ரொம்ப மனஸ்தாபம் ஆயிடுத்து.. இருக்காதா பின்னே? இருக்கறது நாங்க ரெண்டு பேரு. இதுல ”ஆளுக்கு ஒரு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும்”ன்னு அவர் சொல்றார்.
ஆஹா இனி மலையாள சேட்டாஸ் ப்ரோக்ராம்ஸ், புரியாத டிஸ்கஷன்ஸ், ஹை டெஸிபெல்லில் பேசும் காமெடியன்கள், கண்ணாடி, விண்ட்ஷீல்டு வைப்பர்(நிகழ்ச்சியின் பெயர்), நகை விளம்பரங்கள் (வீட்டுல சோறு இருக்கான்னு கவுண்டமணி கேட்பாரே அதான் நினைவுக்கு வரும்) எல்லத்துக்கும் முழுக்கு போட்டுட்டு செந்தமிழே சரணம்ன்னு நானும் ஆசை ஆசையா அபுதாபியிலிருந்து  சென்னை வந்தா, இங்கே சர்வம் மொக்கை மயம். போன வருஷம் பூரா நான் கன்ஸிஸ்டெண்டா ரசிச்சுப் பார்த்த ஒரே நிகழ்ச்சி “கல கல மணி” - சிரிப்பொலி - டெய்லி ராத்திரி 9 மணிக்கு போட்டுண்டு இருந்தான். Of course with a 100 advertisements. It was worth the wait.வேற எதுவுமே பார்க்க சகிக்கலை. சானல் சர்ஃப் பண்றச்சே என்னை சுவாரஸ்யப்படுத்தியவர்கள் 1.கமல் 2.கே.பி 3. கவுண்டர்.  ஒரு நிகழ்ச்சிக்கு நடுவில் 200 விளம்பரங்கள். கடுப்பின் உச்சக்கட்டம். சரி செட்டாப்பாக்ஸ் போட்டாலாவது கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்னு தான் நானும் நினைச்சேன். அது அதை விட கொடுமை. காசு கட்டி ரீச்சார்ஜ் பண்ணி மொக்கைகளை தரிசனம் பண்ணணுமாம். என்னத்த சொல்ல?

3 மலையாள சேனல்களுக்கு மாசம் 25 ரூபாயாம். 7 தெலுங்கு சேனல்களுக்கும் அதே 25 ரூபாய் தான்.. ஆனால் எல்லாமே கை நிறைய கழுதைவிட்டையாய் இருக்கே? ரொம்ம்ம்ம்ப முயற்சி பண்ணினாலும் ஒரு புன்சிரிப்பு கூட வரமாட்டேங்கிறது - ஜெமினி காமெடியாம். எவ்வளவோ திறமை வாய்ந்த சிரிப்பு நடிகர்களை வெச்சுண்டு இருந்தாலும் அவர்களை effective ஆக utilize பண்ணத்தெரியாதது யார் தப்பு? "What is the reason for discarding these channels Mam?" என்று செட்டாப்பாக்ஸ் கம்பெனியிலிருந்து ப்ரின்ஸி கேட்டாள். I simply said " We don't find them either interesting or engaging".

2 மணி நேரம் ஷெட்யூல்டு பவர்கட்டுக்கு பிறகு, செட்டாப்பாக்ஸ் தானா ஆன் ஆறதா? அப்போ பாருங்க, மிகப்பெரிய தொண்டையில் ஒன்லி விளம்பரம்ஸ் வரது ஒரு டிஃபால்ட் சேனலில். ஓ...என்று அலரிண்டு இருக்கும். அந்த நேரம் பார்த்து இந்த ரங்கு ரிமோட்டை எங்கே வெச்சாரோ?(சரி சரி, நான் தான் சில சமயம் ஃப்ரிஜ்ஜுக்குள்ளேயோ, கிச்சன் ஸின்க்லேயோ போட்டிருப்பேன், இருந்தாலும் திட்டறதுக்கு ஒரு ஆள் வேண்டாமோ?) ன்னு தே....டி எடுத்து சானல் மாத்துறதுக்குள்ளே...BP தாறுமாறாக எகிறுகிறது. என்னத்த சொல்ல?

இந்த படம், பாட்டு, முக்கியமான வசனங்கள் ஒரு எழவும் காதுல கேட்டுத்தொலையாது.. சரின்னு டீவீ வால்யூமை 60ல வெச்சா, நாம அலறும் அளவுக்கு விளம்பரங்கள் மட்டும் மஹா சத்தமா கேட்கும்.. இந்த சவுண்டு கேட்டு கேட்டு எனக்கு லேசா காது பிரச்சினை இருக்கோன்னு டவுட்டா இருக்கு. “இனிமே காது, கேக் ‘காது’ன்னு அடிக்கடி செல்லிக்கறேன்.  கொஞ்சம் சத்தத்தை கூட என்னால தாங்கிக்க முடியலை.

நான் என் (தூங்கிண்டு இருக்கும்) நைனாவின் காதில் கத்தி வெறுப்பேத்திய போது அவர் எனக்கு என்ன சாபம் விட்டிருப்பார்ன்னு இப்போத்தான் என்னால யூஹிக்க முடியறது.

விளம்பரங்களாவது இனிமையாக அழகாக இருக்கா? அதுவும் இல்லை. எல்லாத்துலேயும் ஒரே இரைச்சல் மயம். சத்தமயம். அழகான கோக் விளம்பரப்பாட்டு மட்டும் சமீபத்துல ரொம்ப பிடிச்சு இருந்தது.. உடனே போட்டி பானமும் காமா சோமான்னு ஒரே இரைச்சல் மயமா”இப்போவே இப்போ”ன்னு குய்யோ முறையோன்னு கத்தறது. ஹெவி மெட்டல் ஃபுல் வால்யூமில் விளம்பரங்கள் - நாராசத்தின் உச்சக்கட்டம்.
இந்த தொல்லையெல்லாம் வேண்டாம்ன்னு தான் பேசாம காமெடி செண்ட்ரல், ஜீ கஃபே, ஏ.எக்ஸ்.என்(இதுலேயும் அதே விளம்பரக்கஷ்டம் தான் ஆனா ஒன்லி ப்ரைம் டைம்) போன்ற சானல்களை வாங்கினோம். 

இந்த ரங்குவின் பிரச்சினை புதுசு.. என்ன செல்றார்ன்னா, ”நான் படத்தை பார்க்கறதா, இல்லே சப்டைட்டில்ஸ் படிக்கறதா”ன்னு கேக்கறார்.. CSI New York, CSI Miami எல்லாம் பார்த்து நான் "Brilliant,, just brilliant"ன்னு கத்திட்டு இவரை ஆவலா பார்த்தா, இவர் தேமேன்னு லாப்டாப்பை முறைச்சு பார்த்துண்டு  உக்காண்டு இருப்பார். ஒண்ணும் புரியலையாம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. கூர்ந்து கவனிச்சா எல்லாம் இவருக்கு நன்னாவே புரியும்.ஆனா என்ன சொல்றார் தெரியுமோ? “பத்மினி, சரோஜாதேவி, சாவித்திரி பாடல்களில் இந்த பிரச்சினை இல்லை”யாம்.  க்கும் என்னால Black and white பாட்டெல்லாம் பார்க்க முடியாது. சமீபகாலமா இவருக்கு சீரியல் பார்க்கும் ஆசையும் துளிர் விட்டு இருக்கு. அடக்கொடுமையே!

ரங்கு, மெதுவா சொல்றார் “ஒரு வேளை இந்த சானல்களும் புதுப்பொண்டாட்டி மாதிரி தானோ? சப்ஸ்க்ருப்ஷன் பண்ணின உடனே பார்க்கத்தோன்றும்.. போகப்போக போர் அடிச்சுடும்.

அதுக்கு தான் சொன்னார், ஆளுக்கு ஒரு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும்ன்னு?ஓ...  இருக்குமே.. ஏன் ஏன் ஏன் இருக்காதுங்கறேன்? ”நீங்களே சொல்லுங்க, இதைக்கேட்டுண்டு சும்மா இருக்க முடியுமா? சொல்லுங்கள் டாடி, சொல்லுங்கள்... (நற நற) நான் பூரிக்கட்டையை எடுத்தல் பிழையா?

19 comments:

அப்பாதுரை said...

நான் ரங்கு கட்சி.
கை நிறைய கழுதைவிட்டை - வருஷக்கணக்கிலாகிறது கேட்டு. மனமாரச் சிரித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹிஹி.. பூரிக்கட்டை எடுத்தால் மட்டும் போதுமா...?

கௌதமன் said...

கூடிய சீக்கிரம் பூரிக் கட்டை தயாரிப்பாளர்கள், உங்கள் வீடு தேடி வந்து, "சத்தமான சட புடா - அடேடே இது தடா பூரிக் கட்டைடா" - என்ற பாடலுக்கு உங்களை பூரிக் கட்டையுடன் அபிநயம் பிடிக்கும்படிக் கேட்டுக் கொள்ளக் கூடும்! தயாரா இருங்க.

geethasmbsvm6 said...

ஆஹா, அனன்யா அக்கா, பூரிக்கட்டை வேணுமா? அம்பிக்காக அவரோட தங்கமணிக்குப் பிரசன்ட் பண்ணினது, என்னோட பதிவிலே இருக்கும், தேடித்தரேனே. ரங்குவுக்கே அனுப்பிடறேன். இந்த முறை பூரிக்கட்டை அவருக்கே பயன்படட்டும். என்ன செரியா? :)))))

geethasmbsvm6 said...

ஹிஹிஹி, இதுக்குத் தான் நாங்க அரசு கேபிள் அளிக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறது. வேறே எதுவும் பார்க்கிறது இல்லை. :)))) 80 ரூபாயோட போயிடும். :)

aavee said...

//சப்ஸ்க்ருப்ஷன் பண்ணின உடனே பார்க்கத்தோன்றும்.. போகப்போக போர் அடிச்சுடும்//

உணர்ந்து சொல்லப்பட்ட வரிகள்!! ;-)

வெங்கட் நாகராஜ் said...

என் வீட்டில் பல நேரங்களில் இந்த டீவி தூங்குகிறது - பார்க்கப் பிடிக்காததால்!

நகைச்சுவையாக பகிர்ந்த விஷயங்கள் ரசித்தேன்....

Unknown said...

மாப்பு... அக்கா வச்சிட்டாலே ஆப்பு (பூரிக்கட்டை)....

//சமீபகாலமா இவருக்கு சீரியல் பார்க்கும் ஆசையும் துளிர் விட்டு இருக்கு. அடக்கொடுமையே!// - ஒருவேளை அவங்க (சீரியல்) வாழ்க்கையும் நம்மளுடையது போலவே இருக்கேன்னு Stokholm sydrome-ல விழுந்துட்டாரா?

ஸ்ரீராம். said...

இருக்கற ஒரு டிவியையே தாங்க முடியவில்லை. ஆளுக்கொன்றா?

நாங்களும் சாதா (!) கேபிள்தான்! ஆனால் கீதா மேடம் போல 80 ரூபாய் இல்லை. 100 ரூபாய். (அப்போ ஸ்பெஷல் சாதான்னு சொல்லலாமோ!)

'பரிவை' சே.குமார் said...

ரங்கு, மெதுவா சொல்றார் “ஒரு வேளை இந்த சானல்களும் புதுப்பொண்டாட்டி மாதிரி தானோ? சப்ஸ்க்ருப்ஷன் பண்ணின உடனே பார்க்கத்தோன்றும்.. போகப்போக போர் அடிச்சுடும்.

---------

ஹ... ஹா... ஹா

ரசிச்சுப் படிக்கத் தூண்டும் அழகிய எழுத்து நடை....

அபுதாபியிலா இருக்கீங்க.... நானும் இங்குதான் இருக்கிறேன்...

Hariharan said...

எனக்கு பிடித்தவை பகுதி மிகவும் நன்றாக இருந்தது.

Hariharan said...

எனக்கு பிடித்தவை பகுதி நன்றாக இருந்தது.

Matangi Mawley said...

உங்களுக்கு 1008 பாஷ புரியறது. நீங்க அல்லல் படறேள். உங்க ரங்கு போல- பேசாம சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி ன்னு limited choice இருந்தா ஒரு சில டைம் நன்னா தான் இருக்கும். முரசு channel அ நாள் முழுக்க ஓட உட்டுண்டு நிம்மதியா இருக்கலாம்! அத உட்டுட்டு CSI New york ஆம் Miami ஆம் ... Why this Kolaveri ன்னு கேக்கறேன்!

Ananya Mahadevan said...

@அப்பாஜி, நன்றி!
@திண்டுக்கல் தனபாலன், என்னமோ ரொம்ப கூலா, படித்தால் மட்டும் போதுமாங்கற மாதிரி கேக்கறேள்? என் ரங்கு உங்களை சபிக்கறதுக்குள்ளே தப்பிச்சுக்கோங்க.. நான் என் ப்ளாக்ல வயலன்ஸ் எல்லாம் ப்ரமோட் பண்றதில்லை கேட்டேளா?க்ளிப்பார்டோட சரி.. நிஜ ஃபோட்டோ, ஹெட் இன்ஜுரி எல்லாம் காட்டறதில்லை.
@கெளத்தமன் ஜி!, //சத்தமான சட புடா - அடேடே இது தடா பூரிக் கட்டைடா// யூ மீன் ஐ வில் பிகம் எ மாடல்? ஓ மை காட்! I am already a celebrity know.. Now that I am a model too, என்னுடைய ப்ளாக்ல pay pal gadget install பண்ணியூடவேண்டியது தான். இப்போ paid reading தான்!
@கீத்தாமாத்தா, இப்படி கட்சி மாறிட்டேளே? மை ரங்கு இஸ் யுவர் கு.ப.த.. பட் ஐயாம் யுவர் பெஸ்டு ஃப்ரெண்டு யா..
@கோவை ஆர்.வி/வெங்கட் நாகராஜ் - நன்றிங்க!
@மஹேஷ்- இங்கே ஒண்ணும் சீரியல் நடக்கலை.. யார் இவருக்கு சூனியம் வெச்சா? விஷம் வெச்சா? போறுமே! :)
@ஸ்ரீராம் அண்ணா,//இருக்கற ஒரு டிவியையே தாங்க முடியவில்லை. ஆளுக்கொன்றா?// கன்னா பின்னா ரிப்பீட்டேய்!
@குமார் - அபுதாபியை விட்டு சென்னை வந்து ரெண்டு வருஷம் ஆகறது. :) நன்றி
@ஹரிஹரன் - அப்போ பாக்கியெல்லாம் மொக்கைன்னு சொல்லாம சொல்றீங்க.. ஓக்கே.. :)
@மாதங்கி, ஏண்டீம்மா... கண்ணைமூடிண்டு எங்காத்துக்காருக்கு சப்போர்ட் பண்ணுவியே! ஒரு குருப்பாத்தான் அலையறேள்.. முரஷு டீ.வீ நானும் பார்ப்பேன்.. கே.பி படம் போட்டால்.. கொலைவெறி? நேக்கு? கேப்பேடீம்மா கேப்பே!

vetti said...
This comment has been removed by the author.
vetti said...
This comment has been removed by the author.
vetti said...

enakku indha thollaiye kedaiyaadhu...Arun Varun-oda Doraemon paarkka aarambichutten...Cartoon kooda ishtam illadha kalyanam maadhiri dhaan....mudhalla pidikkaadhu...poga poga set aagidum!

geethasmbsvm6 said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பின்னூட்டம் கொடுத்தால் எரர் வருது. அநன்யா யக்கோவ், நாங்க எப்போவுமே ரங்குவோட கக்ஷிதானாக்கும், கேட்டோ! :)))))))

flower said...

well done madam.wish you all the best.

Related Posts with Thumbnails