முன்னாடியெல்லாம் வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க.. இப்போ ஜஸ்டு ஒரு சின்ன சேஞ்ச்.. வீட்டை மாத்திப்பார், கல்யாணத்துக்கு போயிப்பார்ன்னு மாத்திக்கலாம். அவ்ளோ கஷ்டமா ஆயிடுத்து வீடு மாத்தறது!
நான் எப்போவுமே வீடெல்லாம் மாறினா 6 மாசம் எடுத்துப்பேன்.. மெதுவா தான் அரேஞ்ச் பண்ணுவேன்.. நெக்ஸ்டு 6 மாசம் பாக்கிங் பண்ண சரியா இருக்குமே!
வீடு பார்த்து மாற ரெடியானப்புறமும் நான் ஃபேஸ்புக்லேயும் ரங்ஸ் ஃபோன்கால்ஸிலேயும்(ஆஃபீஸாம்) உட்கார்ந்திருக்க, எங்கம்மா ஓடோடி வந்து கிடுகிடுன்னு குனிஞ்சு நிமிர்ந்து பாக்கிங் எல்லாம் பார்த்துண்டாங்க. அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் படு பிஸி! நாங்க கூப்பிட வண்டிக்காரங்க வந்து சேர சுமார் 3 மணி நேரம் தான் லேட்டு. அதுலேயும் ரெண்டு பேர் கத்திண்டே இருந்தாங்க.. "டேய் தூக்கு தூக்கு வுட்ராதே" இப்படி.. ஒருத்தனும் உருப்படியா எதையும் கேரி பண்ணலை.. நாங்க கைல எடுத்துண்டு போக வெச்சிருந்த காப்பிப் பொடி, சர்க்கரை, டம்பளர், வால் பாத்திரம் இதெல்லாம் மொத்தத்துல கலந்து எங்கியோ கொண்டு போயிட்டாங்க! நாளை காலை அரோஹரா தான்னு நினைச்சுண்டோம். நல்ல வேளை புது வீட்டுச்சாவி என்கிட்டே பத்திரமா இருந்தது. தப்பிச்சோம்.
முதல் ரவுண்டு போயிட்டு நான் முன்னின்று(க்கும், நின்னுட்டாலும்) எதை எங்கே வைக்கணும்ன்னு சொல்லிட்டு ரெண்டாவது ரவுண்டு அடிக்கலாம்னு பேச்சு.. நான் மேலே வீட்டுல கோஆர்டினேட் பண்ண, ரங்ஸ் கீழே சாமான் இறக்கறதை சூப்பர்வைஸ் பண்ண போயிட்டார். நடுவுல ஒரு வாட்டி ஏதோ காலி கூடையை எடுத்துண்டு அதுவும் லிஃப்டுல வந்துட்டு போனார்.
இந்த கூலிபெருஸ் (பின்னே எல்லாமே வயசான முசுடூஸ்) எல்லாம் லிஃப்டுல இருந்து வாசல் படியில் பெட்டிகளை எல்லாம் முக்காவாசி காலால் தள்ளிட்டு ஓடிடுத்து. நான் தான் உள்ளே உக்காந்து எல்லாத்தையும் பார்த்துண்டு இருந்தேனாக்கும்.. அப்புறம் அவா நெக்ஸ்ட் டைம் வந்தப்போ சத்தம் போட்டேனா.. அவா அதை ஜஸ்டு படிக்கந்தண்டை வெச்சு குடுத்துட்டு போனா. என்ன எஃபீஷியன்ஸி பாருங்கோளேன்?
கிச்சன் ஐட்டம்ஸ் வெச்ச பெட்டி பில்டிங் ஸ்ட்ராங் தான்னாலும் பேஸ்மெண்ட் கொஞ்ச்ச்சம் வீக்கு.. லிஃப்டில் இருந்து அந்த பெட்டியை முரட்டுத்தனமா எடுத்து வெச்சப்போ பெட்டி பாட்டம் மட்டும் பேதி ஆகும் மனிதன் போல பிச்சுண்டுடுடுத்து! அது பேன்னு ஆகி ஸ்பூன், குக்கர் வெயிட், மிக்ஸீ மூடியின் மேல் இருக்கும் குட்டி மூடி இத்யாதிகள் எல்லாமே சிதறி கீழே விழுந்துடுத்து.. இந்த அழகுல நாங்க சரியா பேக் பண்ணலையாம் ஒரு முசுடு பயங்கரமா சத்தம் போட்டுத்து..சரின்னு எல்லாத்தையும் வாரி எடுத்துண்டு வந்து உள்ளே போட்டு அரேஞ் பண்ண ஆரம்பிச்சேன்.. அடுத்த லாட் வந்தட்டு ரங்ஸ் என்னை கூட்டிண்டு போவார்ன்னு வெயிட் பண்ணிண்டு இருந்தேனா.. லோடும் வரலை, ரங்குவும் காணோம்!!!
என்னை மட்டும் புது வீட்டில் விட்டுட்டு ரங்ஸும் வண்டியும் பழைய வீட்டுக்கு போயாச்சு.. ஃபோனும் நான் எடுத்துக்கலையா.. என்ன பண்றதுன்னு ஒரே கோபமா வந்தது.. சுமார் ஒரு மணி நேரம் ஆயிடுத்து ரங்ஸ் என்னை மீட்டுண்டு போக.. அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன் தெரியுமோ? கோலப்பொடி இருந்ததா, அதை வெச்சு புதுப் புது டிஸைனெல்லாம் போட்டு பார்த்து அழிச்சுண்டு இருந்தேன். அப்புறம்மும் கொஞ்சம் டைம் இருந்ததா, இன்னேரம் ஃபேஸ்புக்ல யார் யார் இருப்பாங்கன்னு யோசிச்சுண்டு இருந்தேன்.(இப்பென்னாச்சுன்னு இப்படி எல்லாரும் என்னை திட்டுறீங்க?)
9 மணிக்கு ப்ரேக் போன மூவர்ஸ் அண்டு பாக்கர்ஸ் அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியலை.. ஒருத்தன் கீழே வாட்ச்மேன் பக்கத்துல தாச்சுண்டு தூங்கிட்டானாம். ஒருத்தன் கீழாத்து 500 ரூபாய் செருப்பைத்தூக்கிண்டு இருட்டுல எஸ்கேப் ஆயிட்டானாம்! இந்த அழகுல இவாளுக்கு ஆளுக்கு 500 ரூபாய் கூலியாம்! 12.30க்கு மேல ரெண்டு பேர் மட்டும் வந்து லிமிட்டெடா பேசி (டாஸ்மாக் உபயம்) ஃப்ரிஜ், வாஷிங் மெஷின் இத்யாதிகளை இறக்கிட்டு ஓட்டம் பிடிச்சாங்க. இல்லியோ பின்னே எல்லாத்தையும் லாஃப்டுல ஏத்தச்சொல்லிடுவோம்னு பயமான பயம் !
ஒரு வழியா அப்படி இப்படீன்னு எல்லாத்தையும் எடுத்துண்டு புது வீட்டுக்கு வந்துட்டோம். இந்த புது வீட்டை க்ளீன் பண்ணி குடுத்தாங்களாம்.. கால் ஃபுல்லா கருப்பா இருந்தது! 3 இன்ச்சுக்கு தூசு படர்ந்து இருந்தது. அதுல பாருங்க கிச்சன்ல மட்டும் அப்படி ஒரு எண்ணெய் பிசுக்கு! சன்ஃப்ளவர் ஆயில் 30 கோட்டிங் போட்டு இருந்தாப்புல கையெல்லாம் டைல்ஸ்ல தொட்டா அப்படியே பச்ச்ச்சக்! அவ்ளோ பிசுக்கு. முதல்லே அதை க்ளீன் பண்ணிடுறேன்னு பார்த்தா சிஃப்ஃபையும் காணோம் ஸ்டீல் ஸ்க்ரப்பரை காணோம். தேடித்தேடி பார்த்து ஒரு பிளாஸ்டிக் ஸ்கரப்பர் தான் கிடைச்சது.. முதல்லே கிடைச்சது லைஸால் தான்.. நல்ல ஃப்ளோர் க்ளீனர் இதை வெச்சு ட்ரை பண்ணி பார்ப்போம்ன்னு லைசால் விட்டு டைல்ஸை துடைச்சுப் பார்த்தேன்.. பிசுக்கு என்னை பார்த்து க்கிக்க்கீன்னு சிரிச்சது. நெக்ஸ்டு, மிஸ்டர் மஸில், என் மிக நம்பகமான லிக்விட் சர்ஃபேஸ் க்ளீனர். பிசுக்கு என்னை மஹாக்கேவலமாக காலில் போட்டு மிதித்து துப்பியது! மிஸ்டர் மஸிலும் ஃபெயிலா.. இதுக்கெல்லாம் நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேனே.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாச்சே! சரின்னு கார்த்தால பால் காய்ச்சறதுக்கு முன்னாடி போட்ட கோலப்பொடியை வெச்சு கொஞ்சம் வாஷிங் டிடர்ஜெட்டையும் சேர்த்து இருக்கற எல்லா சக்தியையும் போட்டு தேய் தேய்ன்னு தேய்ச்சேனா.. கொஞ்சூண்டு விட்டுக்கொடுத்தது.. 30 கோட்டிங்காச்சே அவ்ளோ ஈஸியா போகுமா? ரொம்ப முயற்சி பண்ணி தோத்துட்டேன். ஒரு 1 மணி நேரம் கழிச்சு வெளியே வந்தேன்.. வீரத்திலகம் வெச்சுண்டு.. சுவத்தோரமா இருந்த பெட்டியில என்ன இருக்குன்னு திறந்து பார்த்தா, மஞ்சள் சிஃப்! அட நாதாரி உன்னைத்தானே இவ்ளோ நேரம் தேடினேன், பக்கத்துலேயே கள்ளூளிமங்கனாட்டம் ஸ்டீல் ஸ்க்ரப்! கொஞ்சம் முன்னாடி கிடைச்சிருக்ககூடாதோ?
கொஞ்சம் கொஞ்சமா இன்ஸ்டால்மெண்ட்ல வேலை பண்ணிக்கலாம்ன்னு எடுக்கறது வைக்கறதுமா இருந்தேன். ஒரு அரை மணி வேலை செய்வேன், ஒரு 4 மணி நேரம் ஃபேஸ்புக், ஸ்கைப் இதெல்லாம் பார்ப்பேன்.. ஒரு 2 மணி நேரம் தூக்கம்(அசதி இருக்குமே) :)
ரங்க்ஸின் காண்ட்ரிப்யூஷன் பத்தி சொல்லியே ஆகணும். என்ன சுறுசுறுப்பு.. ஃபோன் பேசறதும், வெளியில் போறதும், கான்ஃபரன்ஸ் கால்ஸில் இருப்பதும். மெயில் அனுப்புவதும். . ஆஹா.. அப்புடி ஒரு ஹெல்ப் வீடு அரேஞ்ச் பண்ண.. ஏதோ இன்னிக்கி வீடு இப்படி ஜொலிக்கிதுன்னா அது அவர் போட்ட பிச்சை தான்.
இடம் காலியான உடனே 3 இன்ச் தூசியை க்ளீனா பெருக்கிட்டேன்.. கையோட ஒரு மாப்பை வெச்சுண்டு சுத்த்த்தமா துடைக்கவும் துடைச்சேனா.. வீடு பள பள.. மேடம் ஏஸி இன்ஸ்டால் பண்ண வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. 2 மணி நேரத்துக்கெல்லாம் ஏசி அப் & ரன்னிங் ஆயிடுத்து. அவா போனதுக்கப்புறம் பார்த்தா பெட்ரூம் ஃபுல்லா குப்பை போட்டு வெச்சிருக்காங்க! அடக்கஷ்டமே.. மறுபடியும் பெருக்குதல் துடைத்தல்.
நாங்க இங்கே வந்தவுடன் படு பயங்கர லோ வால்டேஜ்! லிஃப்ட் வேலை செய்யலை. அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு நினைச்சுண்டேன். நெக்ஸ்டு, தண்ணிக்கஷ்டம்! ஒரு நாள் பூரா தண்ணி இருக்கலை! சென்னையில மழையில்லையோன்னோன்னு நினைச்சுண்டேன். ஒரு நாள் சமயல் இல்லை.. வெளியில போய் சாப்பிட்டோம். நெக்ஸ்ட் டே, என்னமோ லைட் எரியும், பல்ப் எரியும் ஆனா ப்ளக் பாயிண்ட் ஒர்க் பண்ணாது. ஸோ, நெக்ஸ்ட் டேயும் சமைக்கலை. இண்டக்ஷன் ரைஸ் குக்கர் இதெல்லாம் இல்லாட்டி என்னால சமைக்க முடியாதே. பயந்து போய் எலக்ட்ரீஷியனை கூப்பிட்டா அவன் வந்த் ஃப்யூஸ் பார்த்துட்டு சரி பண்ணிட்டு போயிட்டான். வாஷிங் மெஷின் ஓவர்லோடு ஆகுதுன்னு சொன்னான். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டப்போ, இனி அப்படி ஆகாதுன்னு கூசாம (பொய்) சொல்லிட்டு போயிட்டான்! நான் இண்டக்ஷன் ஆன் பண்ணினேனோ இல்லியோ, அது ப்யூம்னு போயிடுத்து மறுபடியும்!
ஆக இனி வேண்டாதவர்களை சபிக்கணும், விரோதிகளுக்கு சூன்யம் வெக்கணும்னு நினைச்சா, பேசாம வீட்டை ஷிஃப்ட் பண்ணச்சொல்லி சாபம் விட்ருங்க! எல்லாம் சரியாயிடும்.. ஆ.. அதுக்குள்ளே 4 மணி நேரம் ஆச்சா? நான் போய் ஒரு அரை மணி பீரோல கொஞ்சம் துணி அடுக்கிட்டு வரேன். டாட்டா!:)
16 comments:
//அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன் தெரியுமோ? கோலப்பொடி இருந்ததா, அதை வெச்சு புதுப் புது டிஸைனெல்லாம் போட்டு பார்த்து அழிச்சுண்டு இருந்தேன். அப்புறம்மும் கொஞ்சம் டைம் இருந்ததா, இன்னேரம் ஃபேஸ்புக்ல யார் யார் இருப்பாங்கன்னு யோசிச்சுண்டு இருந்தேன்.//
உங்க கடமையுணர்ச்சியை மெச்சுகிறோம் அனன்ஸ்.
எங்க வீட்டுக்கு வந்த பேக்கர்ஸ் அழகா பேக்கிங் செஞ்சு கொடுத்ததோட இல்லாம அந்தந்த ரூம்ல கொண்டாந்து இறக்கி வெச்சுட்டு, ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், கட்டில் இதெல்லாத்தையும் பழையபடி மாட்டிக்கொடுத்துட்டு போனாளாக்கும். இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு சொல்றேன். நோ.. நோ.. அழப்பிடாது அனன்ஸ். ஓகே ;-)
ஹாஹாஹா, சேம் பிஞ்ச் அமைதி, போன வருஷம் நாங்க ஊரே மாறினதை நினைவு படுத்தும் பதிவு. ஆனாலும் ஒரே நாளில் பெரிய சாமான்களை எல்லாம் அததுக்குனு ஒதுக்கின இடத்திலே வைச்சுக் கொடுத்துட்டுக் கட்டிலையும் கோர்த்துக் கொடுத்துட்டுப் போனாங்க. நாலாவது மாடி. லிஃப்டில் எல்லா சாமான்களும் ஏத்த முடியாது. படியிலேயே பீரோவை எல்லாம் தூக்கிட்டு வந்து வைச்சுட்டுப் போனாங்க. வாஷிங் மெஷினைக் கொண்டு வந்து வைச்சதுமே ஃபிட் பண்ணி உடனடியாக அழுக்குத் துணியைத் தோய்க்க ஆரம்பிச்சுட்டேன்.
ஆனால் இந்த ஏசி மெகானிக் தான் தண்டம். பணமும் நிறைய. வேலையும் சரியில்லை. :))) ஒரு மாசம் கழிச்ச் வேறொருத்தரைக் கூப்பிட்டு ஏசியை அட்ஜஸ்ட் செய்தோம்.மத்தபடி அநன்யா அக்காவோட இந்தப் பதிவு மலரும்நினைவுகள்.
ஆனால் இந்த ஏசி மெகானிக் தான் தண்டம். பணமும் நிறைய. வேலையும் சரியில்லை. :))) ஒரு மாசம் கழிச்ச் வேறொருத்தரைக் கூப்பிட்டு ஏசியை அட்ஜஸ்ட் செய்தோம்.மத்தபடி அநன்யா அக்காவோட இந்தப் பதிவு மலரும்நினைவுகள்.
ஊர் ஊராத் தூக்கிட்டுப் போயிருக்கோமே, அதுவும் ரயிலிலே கிட்டத்தட்ட 45 சாமான்களை வைச்சுண்டு. அதுக்கு முன்னாடி அநன்யா அக்காவோட அனுபவம் எல்லாம் ஜுஜுபி. கிரைண்டர், ஆட்டுக்கல், அம்மினு எல்லாத்தையும் எடுத்துட்டுப்போவோம். :)))))அதுவும் ராஜஸ்தானுக்கு, குஜராத்துக்குனு.
ஒவ்வொரு இடத்துக்கும் மூணு நாள் பயணம். முதல் வகுப்புப் பெட்டியிலே நாங்க நாலு பேரும் ஒடுங்கி உட்கார்ந்திருக்க சாமான்கள் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். டிடிஆர் பார்த்துட்டுப் பயந்துண்டு டிக்கெட் செக்கிங்குக்கே வர மாட்டார்.
வீடு ஏன் மாத்தணும்.அப்புறம் ஏன் அழணும். புரியலையே அனன்ஸ். சமாளிக்கத் தெரிய வேண்டாமோ கோந்தே.
இத்தனைக்கும் அம்மா வந்து பாக் பண்ணிக் கொடுத்துருக்கிறார்:)
ஒண்ணு பண்ணலாம்.தினமுமே வெளில சாப்பிட்டுடலாம்..அப்போ கரண்டே வேண்டாமொன்னோ!!!புதுவிடு வாழ்வு நன்றாக அமைய வாழ்த்துகள்.
சுவை/மையான அனுபவங்களா!
Thank you, அமைதிச்சாரல்
கீத்தா மாத்தா, போஸ்டுக்கு கமெண்ட் போட சொன்னா, புதுசா ஒரு போஸ்டே தேத்தியிருக்கேளே.. விரைவில் உங்க ஊர் மாற்றலாகி போன அனுபவங்களை எதிர்ப்பார்க்கிறேன்.. உங்களுக்கு நல்ல மூவர்ஸ் & பேக்கர்ஸ் கிடைச்சிருகான்னு நினைக்கறேன். ஆனா இவா ஒண்ணும் மூவர்ஸ் கிடையாது.
வல்லிம்மா, வீடு மாறாட்டி ஆர்யகவுடா ரோட்டில் ஷாமியானா போட்டுண்டு சாமான்சட்டோடு உக்காந்துக்க வேண்டியது தான்!
ஸ்ரீராமண்ணா என்னவாக்கும் டெம்ப்ளேட் கமெண்டு போட்டுட்டு எஸ்கேப்? :) இவ்ளோ காலங்கார்த்தால என் சைட்டுல வந்து கமெண்டியதற்கு பஹூத் பஹூத் நன்றி ஹை!
வீடு மாற்றுவதில் நிறைய தொல்லைகள். மாற்றி வந்த பின் எல்லாவற்றையும் பிரித்து அதன் அதன் இடத்தில் வைப்பதற்குள் ஒருவழியாகிவிடும்!
சுமைகளைக் கூட சுவையாகச் சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்....
அது சரி, உங்களுக்கு யார் சாபம் இட்டது...?
வீடு மாற்ற நினைக்கிற யாராவது இதைப் படிச்சா பல்லைக் கடிச்சிகிட்டு எப்படியாவது இருக்கிற வீட்டிலேயே இருந்துடலாம்ன்னு தீர்மானம் பண்ணிடுவாங்க. காளமேகம் எமகண்டம் பாடினதை விடக் கஷ்டமான வேலையா இருக்கும் போலிருக்கே!
http://kgjawarlal.wordpress.com
இம்புடடு வேலய வச்சிக்கிட்டு பேசுபுக்குக்கு வலைப்பூவுக்கும் எழுதுற உங்க கடமை உணர்ச்சியை மெச்சுறோம் சகோதரி...
அழகான அனுபவம்...
வீடு மாற்றுவதற்கு சரியான பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் கிடைக்கவில்லை என்றால் மிகவும் கஷ்டம்தான். அதுவும் லோக்கல் ஏரியா மாற்றம் என்றால் மிக மிக கஷ்டம்.
நீங்க எழுதியிருக்குறதைப் பார்த்தா வீடு மாறினாப்ல தெரியலியே? வீடு இருந்த இடத்துலயே இருந்தாப்ல இருக்கே?
வெங்கட், நன்றிங்க
தி.தி : தெரியலைப்பா.. கண்டு பிடிக்கணும்..
கே.ஜி.ஜே சார், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சார். ஆனா அதென்ன காளமேகம் எமகண்டம் மேட்டர்? சொற்ப எக்ஸ்ப்ளெயின் மாடிதே பெட்டரு! :)
சே குமார் ஜி- நான் கடமை தவறாத ப்ளாக்கராக்கும், இன்னும் ஹால்ல நிறைய திங்ஸ் சிதறிக்கெடக்கு
சங்கவிஜி, நன்றி
கே.ஜி.ஜி ஜி(அட, எத்தனை ஜி? இனி ப்ளாகிலும் நீங்க யுவர் ஆனர் தான்) லோக்கல் தானேன்னு தான் கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டோம். இல்லாட்டா ஒழுங்க எல்லாத்தையும் பேக் பண்ணி இருப்போம்.
அப்பாஜி, மிகத்துல்லியமான கணிப்பு.. ஆமா இருந்த இடத்துலேயே தான் இருக்கு.
Post a Comment