Pages

Friday, July 26, 2013

கம்ப்யூட்டர் கன்ஃப்யூஷன்ஸ் - எனக்கும் கம்ப்யூட்டருக்குமான அபூர்வ பந்தம் Part -1

இந்த மாதிரி ஒரு தொடர்பதிவை எழுதச்சொன்ன ஸ்ரீராம் அண்ணாவுக்கு பல கோடி நன்றீஸ்.. ஏன்னா என்னதான் எழுதறதுன்னு யோசனை பண்ணிண்டே இருந்தேனாக்கும். பஹுத் பஹூத் தான்க்ஸ் ஹை! நெக்ஸ்ட், டைட்டில் மட்டும் என்னிஷ்டத்துக்கு வெச்சிருக்கேன்.. கண்டெண்ட்ஸ் கூட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். என் அனுபவங்களை மட்டும் சொல்லி இருக்கேன்.. செலக்டிவா.. இல்லாட்டா படா பேஜாராயிடும்.. மொக்கைஸ் ஆஃப் இண்டியா.. ஹூ வில் ரீட்? ஹி ஹி இல்லாட்டா மட்டும்??? :)


நான் முதன் முதலா கம்ப்யூட்டரைப் பார்த்தது 1992வில். ”+1ல காமர்ஸ், மேத்ஸ், அக்கவுண்ட்ஸ் கூட கம்ப்யூட்டர் எடுத்திண்டுருக்கா”ன்னு அம்மா எல்லார்கிட்டேயும் ரொம்ம்ம்ப பெருமையா சொல்லிண்டா. கம்ப்யூட்டராம், என்னன்னே தெரியாது.. ஆனா மார்க் ஸ்கோர் பண்ண உபகாரமா இருக்கும். ஏன்னா அதன் ஆல்டர்னேட்டிவான எகனாமிக்ஸ் வெறும் தியரி, மஹா அறுவை, மார்க் ஸ்கோர் பண்றதும் கஷ்ட்டம்ன்னு சொல்லிட்டு நம்ம்ம்ம்பி இறங்கினேன்.

புது மிஸ். பாவம், மலங்க மலங்க விழித்தார். அரித்மெடிக் அண்ட் லாஜிக் யூனிட், பைனரி கன்வர்ஷன், பஸ் இப்படி பல புதுப்புது விஷயங்கள் அதுல இருந்தது. சுத்த்த்த்தமா ஒண்ணுமே புரியலை. ஒரு நாள் அந்த மிஸ்ஸை முடிஞ்ச வரைக்கும் டார்ச்சர் பண்ணி மிஸ் அந்த அரித்மெட்டிக் அண்ட் லாஜிக் யூனிட் எப்படி இருக்கும்? அந்த சி.பி.யூ இருக்கே, அதை ஒரே ஒரு வாட்டி எங்களுக்கு காட்டறீங்களா?, அது ஏன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்தாத்தான் ஒர்க் ஆகுமா? அப்புறம் எப்படி ஆட்டோமேஷன்னு சொல்றோம் என்கிற ரீதியில் ஒருபாடு இன்னொஸெண்டான நான் கேள்விகளை தொடுக்க.. மிஸ் பேஸ்த்தடித்து போயிட்டா. பாவம்.. ஆனா நான் அந்த சி.பி.யூவை மட்டும் விடலை. மிஸ் ப்ளீஸ் மிஸ் அதை எங்களுக்கு பாக்கணும்ன்னு சொல்லிண்டே இருந்தேனா.. அதுக்கு மிஸ்ஸின் பதில் கேட்டு ஆடிப்போயிட்டேன்.. என்ன பதிலா? “அதை நானே பார்த்ததில்லை” அப்படீன்னாங்க.. ஐய்யோ பாவம்.

12வது வகுப்பில் எங்க சார் படு ஸ்ட்ரிக்ட். அதிகம் சிரிக்க மாட்டார். அவருக்கு தினேஷ் ரோபோன்னு செல்லப்பேர் வெச்சிருந்தான். ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என்ற மெளலி (?) படத்தில் வரும் ராக்கெட் ராமனாதனை நினைவு இருக்கோ? ”ஏண்டா இப்படி விறைப்பா நிக்கறே? அதுவா, துணிக்கு போடற கஞ்சியை எடுத்து கார்த்தால குடிச்சுட்டேன்” அப்படீம்பாரே.. அதே மாதிரி தான் கம்ப்யூட்டர் சர் இருப்பார். நேரே உள்ளே வந்து நீ எழுந்திரு, நீ எழுந்திருன்னு இளையராஜா மாதிரி விரலால் ஜாடை பண்ணுவர்.(அசப்பிலும் சிவப்பு இளையராஜா மாதிரி தான் இருப்பர்) முதல் நாள் நடத்தின பாடத்தை மறுநாள் கேட்டே தீரணும். அதுனால் நோட்ஸ் எல்லாத்தையும் ஒழுங்கா படிச்சுண்டு போயிடுவோம். BASIC அப்படீங்கற லேங்குவேஜ் தான் பாடம். அதில் விதவிதமான ப்ரோக்ராம்கள் - மல்டிப்ளிக்கேஷன் டேபிள் ( ஒரு வாய்ப்பாட்டு புஸ்த்தகம் வாங்கிண்டா போறாதா?) கூட்டல், கழித்தல், பாலினாமியல், அதுக்கு லாஜிக் யோசிக்க வேண்டுமாம். அந்த கண்றாவியை பத்தின புரிதலுக்கு ஒரு ஃப்ளோசார்ட் வேறு.. அதை வரைய விதவிதமான உபகரணங்கள்! நாரயாணா.. எக்கனாமிக்ஸ் எவ்வளவு இனிமையான பாடம்ன்னு நினைச்சுப்பேன். ஒரு எழவும் என் மண்டையில் ஏறாது.

 அப்போத்தான் முதன் முதலாய் கம்ப்யூட்டரை பார்த்தேன். பெரிய வெள்ளை டப்பா, நடுவில் பச்சைத்திரை, கீழே ஒரு பெட்டி அதில் ஃப்ளாப்பி டிஸ்க் போடணுமாம்.  லேப் சூப்பரா இருக்கும். ஜில்ன்னு. ஸ்கூல் ஷூவை கழட்டிட்டு உள்ளே போகணும். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் 3-4 பேரா உட்காருவோம். 10வது லீவில் ஒரு மாசம் டைப்பிங்  படிக்க போனதால் ஓரளவுக்கு  எழுத்துக்களை தேட வேண்டிய அவசியம் ஏற்படலை. கஷ்ஷ்ஷ்டப்பட்டு ஒரு 8 வரி பேஸிக் ப்ரோக்ராமை டைப்பி, ரன் பண்ணா, அதென்னமோ என்ன மாயமோ சதா சிண்டாக்ஸ் எர்ரர் காட்டும். ரவீந்திரன்ங்கற பையன் தான் அதுல கில்லாடி. சிண்டாக்ஸ் எர்ரரால் வாடும் எல்லாருக்கும் அவன் தான் ஆபத்பாந்தவன் அனாதரக்ஷகன்.”நீ செமி கோலனை விட்டிருக்கே பாரு ”அப்படீம்பான். அதே செமிக்கோலனை அடுத்த வரியில் விட்டிருப்பதை அப்போ கவனிக்கறதில்லை.. மறுபடியும் ப்ரோக்கிராமை ஓட்டி மறுபடியும் அவனை அழைத்து, பல்பு வாங்கி, ஒரு வழியா எல்லாம் சரியாகி ரன் கொடுத்தால், சின்னூண்டாக ராஜா மாதிரி கம்பீரமா பதில் வரும் - அதான் அவுட்புட்.. கர்ஸர் அமைதியாக பக்கத்தில் பணிவாக நிற்கும் அமைச்சர் மாதிரி நின்னுண்டு இருக்கும். இதுக்கா இந்தப்பாடு? யப்பா!

இவளுக்கு கம்ப்யூட்டர் ஒண்ணுமே தெரியலையாம்ன்னு அம்மா, தி நைனாவிடம் சிபாரிசு செய்ய என்னை அவர் பேங்கிலிருக்கும் கம்ப்யூட்டரை பார்க்க குரோம்பேட்டையிலிருந்து மவுண்ட் ரோடில் இருந்த அப்பா பேங்குக்குப்  போனோம் - குடும்ப சஹிதம்!! ஆனா அந்த சிஸ்டம் அட்மின் ஃப்ளாப்பி வேணும்ன்னு சொல்லிட்டார்.. இளையராஜா சர் கிட்டே அந்த பிம்பிளிக்கி பிளேப்பியை.. சாரி ஃப்ளாப்பியை வாங்கிண்டு போய் கொடுத்தா அங்கேயும் பச்சை மானிட்டரில் ஒரே சிண்டாக்ஸ் எரராத்தான் வருது! பேங்கில் ரவீந்திரன் கிடையாதே.. அதுனால அப்பா உங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் எல்லாம் ஃபால்ட்ட்.. ஹெட்டாஃபீஸுக்கு உடனடியா தகவல் கொடுத்திருங்கன்னு சிபாரிசு பண்ணேன்.. சிஸ் அட்மின் என் கழுத்தை நெறித்துவிடுவது போல பார்த்தான். அம்மா எதிர்ப்பார்த்த மாதிரியே நான் கம்ப்யூட்டர் சயின்ஸில் 196 வாங்கியிருந்தேன்னு நினைக்கறேன்.. எதுக்கும் நாளைக்கி சர்டிஃபிக்கேட்டை செக் பண்ணிடுறேன். 

அடுத்த படியா என்னுடைய ப்ரில்லியன்ஸை பறைசாற்றிய இடம்- ப்ரில்லியண்ட்- 1994ல் ”காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினப்போவே.. இதையும் படிச்சுட்டேன்னா உனக்கு நல்ல வேலையா கிடைக்கும்”ன்னு நைனா நம்ம்ம்பி கொண்டு போய் சேர்த்து விட்டார். சாயந்திரம் 5.15க்கு காலேஜ் முடியும். நேரா க்ளாஸுக்கு போயிடுவேன். முக்கால் மணி நேரம் லேப் இருக்கும். ஒண்ணும் புரியாது. லோட்டஸ், வேர்ட்ஸ்டார், க்ளிப்பர், டி பேஸ் இதெல்லாம் கத்தீ கத்தீ குடுத்தாங்க.  கோர்ஸ் மெட்டீரியல்ன்னு ஒரு எழவை கொடுப்பாங்க. ஒரு நாள்.. ஒரு நாள் கூட அதை பிரிச்சு பார்த்ததேயில்லை! அவ்ளோ மொக்கையா இருக்கும். ஆனா அதை ஒரு இன்ஸ்டிட்யூட் குடுக்காட்டி மட்டும்.. மல்லுக்கு நின்னும், டேட் போட்டு ஃபாலோ அப் பண்ணி வாங்குறது.  சும்மா போக வேண்டியது.. பஜனை பண்ணிட்டு வர வேண்டியது. இதே வேலையாக இருந்தேன். வேரியபிள், ஸ்டோரேஜ், கான்ஸ்டண்ட், லாஜிக், ஃப்ளோசார்ட், சாஃப்ட்வேர், டேட்டா, ப்ரைமரி, செக்கண்டரி இப்படி பல மொக்கையான வார்த்தைப் பிரயோகங்களை கற்று தேர்ந்தேன். சத்தியமா ஒண்ணுத்துக்கும் அர்த்தம் மட்டும் புரியலை. நான் வேர்ட்ஸ்டார் ரொம்ப நன்னா பண்றேன்னு எங்க ஃபேகல்டி சொன்னார். நான் அந்த இன்ஸ்டிட்யூட்டில் எஞ்சாய் பண்ணின ஒரு நாள்.. ஒரே நாள் - ஆனிவர்ஸரின்னு அவா கொண்டாடின நாள் தான். மாரியோ, பேக்மேன் இப்படி பல கேம்ஸ்களை எங்களை  விளையாட சொன்னாங்க. ஏதோ சில கலை நிகழ்ச்சிகள், பாட்டு, க்விஸ் இப்படி நடத்தினாங்க.. ”மேரி பாத்தேன் சுன்கே தேக்கோ ஹஸ்னா நஹீ”ன்னு ஒரு கோவிந்தாவின் ராப் சாங் ஹிந்தி பாட்டை எஸ்பிபி மாதிரி மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தேன்.. வழக்கம் போல நான் ஃபேமஸ் ஆகிட்டேன்.. இது வெத்து வேட்டு.. பூலோக மட சாம்பிராணின்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடுத்து.

- நாளைக்கி கடைசி பாகம் போடுறேன்.. இதுக்கு மேல இந்தப் பதிவு நீண்டா.. எல்லாரும் கொட்டாவி தான் விடுவீங்க.. ஓக்கே?

9 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. இதுவும் தொடர்கதையா?.. அடுத்த பாகம் எப்போ?

திண்டுக்கல் தனபாலன் said...

பல்பு வாங்க வாங்க விரைவில் கத்துக்கிடலாம்...! ஹிஹி... தொடர்கிறேன்...

எல் கே said...

உன் மார்க் நம்பிக்கை வரல

கார்த்திக் சரவணன் said...

ஜாலியா சொல்லியிருக்கீங்க....

ஸ்ரீராம். said...

நீங்க சொல்லியிருக்கற பல டெக்னிகல் வார்த்தைகள் எனக்கு இன்னும் விளங்காதவை! புரியாதவை என்று !சொல்ல வந்தேன்! 'ராக்கெட் ராமநாதனுக்கு' அந்தப் பெயர் இருப்பது அவருக்குத் தெரியுமா!!!

ஹுஸைனம்மா said...

ஏங்கப்பா... எல்லாரும் தொடர்கதை ரேஞ்சுல எழுதுறீங்க... பயம்மா இருக்கே... நானும் ஓசிச்சு ஓசிச்சுப் பாக்கிறேன், பழசு ஒண்ணும் ஞாபகம் வர்மாட்டேங்குது!!

// BASIC - விதவிதமான ப்ரோக்ராம்கள் - மல்டிப்ளிக்கேஷன் டேபிள் - கூட்டல், கழித்தல், பாலினாமியல்- அதுக்கு லாஜிக் - ஃப்ளோசார்ட்- சிண்டாக்ஸ் எர்ரர் - செமி கோலன் - வேரியபிள், ஸ்டோரேஜ், கான்ஸ்டண்ட், லாஜிக், ஃப்ளோசார்ட், சாஃப்ட்வேர், டேட்டா, ப்ரைமரி, செக்கண்டரி //

இப்பத்தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சமா பழைய ஞாபகங்கள் திரும்பி வருது... “நான் எங்கே இருக்கேன்...” ரைட் ஆரம்பிச்சிடலாம்.... தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங் தி ஆர்க்கியலாஜி ஆஃப் கம்ப்யூட்டர்!! :-))))))

geethasmbsvm6 said...

//அதை நானே பார்த்ததில்லை” அப்படீன்னாங்க.. ஐய்யோ பாவம். //

hihihi, good teacher! :))))

//எக்கனாமிக்ஸ் எவ்வளவு இனிமையான பாடம்ன்னு நினைச்சுப்பேன். ஒரு எழவும் என் மண்டையில் ஏறாது.//

athane! rombave nalla subject! :)))))

//குடும்ப சஹிதம்!! //

hehehehe exhibition poratha ninaichinga pola! :P:P:P:P

வெங்கட் நாகராஜ் said...

அதை நானே பார்த்ததில்லை..... :)

நல்ல வாத்தியார் தான்!

நல்ல அனுபவங்கள். அடுத்த பகுதியையும் படிக்க தோ போய்ட்டே இருக்கேன்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அம்மா எதிர்ப்பார்த்த மாதிரியே நான் கம்ப்யூட்டர் சயின்ஸில் 196 வாங்கியிருந்தேன்னு நினைக்கறேன்//

மோரல் ஆப் தி ஸ்டோரி... படிக்கறதுக்கும் மார்க்குக்கும் சம்மந்தம் இல்லை...:)


//கோவிந்தாவின் ராப் சாங் ஹிந்தி பாட்டை எஸ்பிபி மாதிரி மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தேன்//

ஆண்டு விழா அன்னைக்கே மூடு விழா கொண்டாடி இருப்பாங்களே...:))

Related Posts with Thumbnails