இவ்ளோ நாள் கழிச்சு மீண்டும் வந்துட்டேன். அதென்னான்னா, இங்கே எனக்கு நெட் ஆக்ஸஸ் இல்லை. அதோட இந்த அருண் வருண் கூட ரன்னிங் ரேஸுக்கே நேரம் சரியா இருக்கா, அதுனால வாரம் ஒருவாட்டி மெயில்
மட்டும் வந்து பார்த்துக்கறது.
ரெண்டு மாசம் முழுசா சென்னையில அமைதியா எந்த ஊருக்கும் போகாம இருக்கறது பயங்கர ஹேப்பியா இருக்கு. நல்ல வேளை இன்னும் ரங்கு வெக்கேஷனுக்கு வரலை. அதுவரை ஜாலியா இங்கேயே இருந்துக்கலாம்ன்னு சொல்லி இருக்கார்.
பேசாம சென்னையிலேயே இருந்துட்டா என்னன்னு தோணுது!
சரி எல்லாருக்கும் என்னோட ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்.
முக்கியமா டேரிக்கு வாழ்த்துக்கள். நேர்ல சொல்லியாச்சுன்னாலும் ஒரு பதிவு போடாட்டி எப்படி?
டேரி எப்படீன்னா, அம்மா பண்ணும் பால் போளிக்காகவே ஆவணி அவிட்டம் கொண்டாடுவார். அதாவது புதுப்பூணல் போட்டுண்டு ஒரு ஐஞ்சு நிமிஷம் ஜபம். தட்ஸால்! ஹிஹி!
அம்மா இதுக்காக கார்த்தால் சீக்கிரம் எழுந்து போளி பண்ணிண்டு இருப்பாங்க!
அன்னிக்கி அப்படித்தான், டேரியை கலாட்டா பண்றதுக்காக காயத்ரி சொல்லுங்கப்பான்னு கேட்டுண்டு இருந்தோம், ஓம் பூர் புவஸ்வஹ, பர்கோ என்றாரேப்பார்க்கலாம்!!!! தங்கை மணி கோபத்தில் ஸ்டாப்பிட்ன்னு கத்திட்டா! நைனா உடனே சுதாரிச்சுண்டு,”நான் என்ன பண்றது? எனக்கு வயசாயிடுத்துன்னு ஒரு சமாளிஃபிக்கேஷன் வேற”! நற நற...
ரெண்டு வருஷம் முன்னாடி வரலக்ஷ்மி விரதத்துக்கு நாங்கள் சென்னையில் கேம்ப் அடிச்சிருந்தோம். ஆவணி அவிட்டம் முடிஞ்சு காயத்ரி ஜபத்தன்னைக்கி அப்பா புதுப்பூணல் போட்டுண்டு, மாடிக்கு போய் ஜபம் பண்ணிட்டு வந்தார். அப்போ தான் கீழ்க்கண்ட சம்பாஷணை நடந்தது
நான்: அப்பா எத்தனை வாட்டி ஜபிச்சீங்க?
நைனா: நான் சாயி அஷ்ட்டோத்திரம் ஜபிச்சாச்சு
நான்: அதில்லைப்பா காயத்ரி மந்திரம் எத்தனை சொன்னீங்க?
நைனா: நான் காகட ஆரத்தி, ஸத்சரித்திரம் எல்லாம் சொல்லிட்டு வந்தேன்
நான்:(கொஞ்சம் கடுப்புடன்) அதில்லை, காயத்ரி மந்திரம்ப்பா....
நைனா: (ரொம்ப பெருமிதத்துடன்)நான் 18 வாட்டி சொல்லியாச்சு
நான்:!!!???????!!!!! சமாளித்துக்கொண்டு, அப்பா, zeroவுக்கு value இல்லைங்கறதுக்காக இப்புடியா? கொஞ்ச்ச்ச்ச்சம் ஓவரா தெரியலை? 1008 சொல்ல வேண்டிய இடத்துல 18 ஆ? நம்பருக்கு முன்னாடி இருந்தாத்தான் zeroவுக்கு value இல்லை! டூ மச் ஐ ஸே!
தி நைனா இப்படிஎல்லாம் போங்காட்டம் ஆடினாலும் இந்த பண்டிகை மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாள் தான். இன்னும் சில வருஷத்துல அருண் வருண் கூட இதே மாதிரி போங்காட்டம் ஆடுவாங்களோ? யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்!!!