இவ்ளோ நாள் கழிச்சு மீண்டும் வந்துட்டேன். அதென்னான்னா, இங்கே எனக்கு நெட் ஆக்ஸஸ் இல்லை. அதோட இந்த அருண் வருண் கூட ரன்னிங் ரேஸுக்கே நேரம் சரியா இருக்கா, அதுனால வாரம் ஒருவாட்டி மெயில்
மட்டும் வந்து பார்த்துக்கறது.
ரெண்டு மாசம் முழுசா சென்னையில அமைதியா எந்த ஊருக்கும் போகாம இருக்கறது பயங்கர ஹேப்பியா இருக்கு. நல்ல வேளை இன்னும் ரங்கு வெக்கேஷனுக்கு வரலை. அதுவரை ஜாலியா இங்கேயே இருந்துக்கலாம்ன்னு சொல்லி இருக்கார்.
பேசாம சென்னையிலேயே இருந்துட்டா என்னன்னு தோணுது!
சரி எல்லாருக்கும் என்னோட ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்.
முக்கியமா டேரிக்கு வாழ்த்துக்கள். நேர்ல சொல்லியாச்சுன்னாலும் ஒரு பதிவு போடாட்டி எப்படி?
டேரி எப்படீன்னா, அம்மா பண்ணும் பால் போளிக்காகவே ஆவணி அவிட்டம் கொண்டாடுவார். அதாவது புதுப்பூணல் போட்டுண்டு ஒரு ஐஞ்சு நிமிஷம் ஜபம். தட்ஸால்! ஹிஹி!
அம்மா இதுக்காக கார்த்தால் சீக்கிரம் எழுந்து போளி பண்ணிண்டு இருப்பாங்க!
அன்னிக்கி அப்படித்தான், டேரியை கலாட்டா பண்றதுக்காக காயத்ரி சொல்லுங்கப்பான்னு கேட்டுண்டு இருந்தோம், ஓம் பூர் புவஸ்வஹ, பர்கோ என்றாரேப்பார்க்கலாம்!!!! தங்கை மணி கோபத்தில் ஸ்டாப்பிட்ன்னு கத்திட்டா! நைனா உடனே சுதாரிச்சுண்டு,”நான் என்ன பண்றது? எனக்கு வயசாயிடுத்துன்னு ஒரு சமாளிஃபிக்கேஷன் வேற”! நற நற...
ரெண்டு வருஷம் முன்னாடி வரலக்ஷ்மி விரதத்துக்கு நாங்கள் சென்னையில் கேம்ப் அடிச்சிருந்தோம். ஆவணி அவிட்டம் முடிஞ்சு காயத்ரி ஜபத்தன்னைக்கி அப்பா புதுப்பூணல் போட்டுண்டு, மாடிக்கு போய் ஜபம் பண்ணிட்டு வந்தார். அப்போ தான் கீழ்க்கண்ட சம்பாஷணை நடந்தது
நான்: அப்பா எத்தனை வாட்டி ஜபிச்சீங்க?
நைனா: நான் சாயி அஷ்ட்டோத்திரம் ஜபிச்சாச்சு
நான்: அதில்லைப்பா காயத்ரி மந்திரம் எத்தனை சொன்னீங்க?
நைனா: நான் காகட ஆரத்தி, ஸத்சரித்திரம் எல்லாம் சொல்லிட்டு வந்தேன்
நான்:(கொஞ்சம் கடுப்புடன்) அதில்லை, காயத்ரி மந்திரம்ப்பா....
நைனா: (ரொம்ப பெருமிதத்துடன்)நான் 18 வாட்டி சொல்லியாச்சு
நான்:!!!???????!!!!! சமாளித்துக்கொண்டு, அப்பா, zeroவுக்கு value இல்லைங்கறதுக்காக இப்புடியா? கொஞ்ச்ச்ச்ச்சம் ஓவரா தெரியலை? 1008 சொல்ல வேண்டிய இடத்துல 18 ஆ? நம்பருக்கு முன்னாடி இருந்தாத்தான் zeroவுக்கு value இல்லை! டூ மச் ஐ ஸே!
தி நைனா இப்படிஎல்லாம் போங்காட்டம் ஆடினாலும் இந்த பண்டிகை மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாள் தான். இன்னும் சில வருஷத்துல அருண் வருண் கூட இதே மாதிரி போங்காட்டம் ஆடுவாங்களோ? யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்!!!
31 comments:
happy raksha bandhan and aavani avittam
வந்துட்டீங்களா , ரகளையை ஆரம்பிச்சாச்சா
வாழ்த்துக்கள்
விஜய்
ஆவணி அவிட்ட, காயத்ரி ஜப, போளி, ஆமவடை நல்வாழ்த்துகள்.
வாங்கோ, வாங்கோ! நன்னாருக்கேளா? ஆத்துலே எல்லாரும் விச்சாருக்காளோன்னோ? ரக்ஷாபந்தனுக்கு ஒரு இடுகையாவது போடப்படாதோ? என்னமோ போங்கோ, இந்தக் காலத்துக் கொழந்தைகளே அண்ணா, தம்பிகளை சட்டுனு மறந்துடறதே! :-)
welcome back ananya ..ரொம்ப நாள் ஆச்சு நீங்க பதிவு போட்டு ..உங்களக்கும் ஆவணி அவிட்டம் வாழ்த்துக்கள்.வருண் அருண் லூடீஸ் பத்தி இன்னும் எப்போ எழுதுவீங்க ?போளி சாப்ட்டாச்சா ?
பால் போளி பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ப்ளீஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!!
நாங்க ஆவணி அவிட்டத்துக்குக் கடலைப்பருப்பு, தேங்காய், அல்லது வெறும் தேங்காய்ப் பூரணம் போளிதான். கோகுலாஷ்டமிக்குத் தான் பால் போளி! :))))))) வரலக்ஷ்மி விரதம் நல்லபடியா செய்து இருப்பீங்கனு நினைக்கிறேன். வாழ்த்துகள் எல்லாருக்கும்.
grrrrrrr id password ketkuthu marupadiyum! :P
வந்துட்டீங்களா??!!
(இத நீங்க என்ன டோன்ல வேணா வாசிச்சுக்கலாம்!!)
எனிவே, வெல்கம் பேக்கு!!
:-))))))
எல்லாருக்கும் நன்னி ஹை! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் எழுத முடியலை. மன்னிக்கவும்.
சந்தியா, கட்டாயம் எழுதறேன்ப்பா.. கூடிய சீக்கிரம்.. எதை எடுப்பது எதை விடுப்பது.. அவ்ளோ அழகழகா பண்றாங்க! கீத்தா மாத்தா, அதென்னம்மோ தெரியலை, அப்பா டே இல்லையா அதான் அம்மா அப்பாவுக்கு பிடிச்ச ஸ்வீட்டு தான் பண்ணுவாங்க. சாதா போளியும் உண்டு, ப்ளஸ் பருப்பு வடை, பாயஸம்..
சேட்டை, நான் யாரையும் மறக்கலைப்பா.. பதிவு தான் போட முடியலை.. நான் முன்னமே சொன்ன மாதிரி ரக்ஷா பந்தனுக்கு தான் தம்பிங்களை நினைக்கணுமா என்ன? :))
நன்னி ஹை விஜய் சார்
நன்னி ஹை எல்.கே
நன்னி ஹை கெளத்தமன் ஜி!
நன்னி ஹை ஹுஸைன்னம்மா.. எந்த டோனா இருந்தாலும் ஓக்கே... பின்னூட்டம் போடுறீங்களே, அதே பெரிய கார்யம்!
மகள்கள் இருவரும் அப்பாவை ஒவராவே கலாய்க்கிறங்க...எதிலும் போங்கு கலந்தாத்தான் சுவராஸ்யமே..அருண் வருண் கலக்கப்போறாங்க.. தமாஷா இருக்கும்.
விடுமுறையை,பண்டிகை டிரிப்பா மாத்திட்டிங்க.. கலக்குங்க
வாழ்த்துக்கள்.
நல்வரவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
வாங்க ...வெல்கம் பேக்கு துபாய்
//எனிவே, வெல்கம் பேக்கு!! //
ஹுஸைனம்மா உங்களை பேக்குன்னு திட்றாங்க...பேசாம இருக்கிறீங்க...:)
ஆவணி அவிட்டம் வாழ்த்துக்கள். லெட்ஸ் ஸ்டார் தி மொக்கைஸ்...:))
அப்பாடா! இப்பதான் எல்லா வேலையும் முடிச்சு வரேன்.ஏஏஏஏஏப்!
Welcome back...
வெல்கம் பேக். ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூவில் சிரிக்கவைத்தமைக்கும், சிந்திக்க வைத்தமைக்கும் நன்றி.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com
:) வாழ்த்துக்கள்..
நாங்களும் போளி, வடையெல்லாம் பக்கத்து வீட்டிலிர்ந்து வந்ததும் போட்டி போட்டு பங்கு வச்சி
சாப்பிட்டுட்டோம்.
எங்கடா இவ்ளோ நாளா அராத்தைக்காணோமேன்னு நெனைச்சேன்.
உங்க தொந்தரவு இல்லாம ரங்கு சந்தோஷமா இருப்பார்னு நம்பறேன்.
ஆவணி அவிட்டத்துக்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு அது பத்தி எழுதுங்க.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன். நல்ல பதிவு- பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பால் போளி, பருப்பு போளி.... சாப்பாட்டுக் கூட்டமா இருக்கும் போலிருக்கே?
வாங்க அனன்யா, விடுமுறை எப்படி இருந்தது.
ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்.
welcome back!!!!
//இவ்ளோ நாள் கழிச்சு மீண்டும் வந்துட்டேன்//
இதை தான் ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா பதிவு போடறதுன்னு சொல்றதோ .... (ஆடிய ஆவணின்னு மாத்திடுவோம்...)
//வயசாயிடுத்துன்னு ஒரு சமாளிஃபிக்கேஷன் வேற//
அனன்யா டாடி ஆச்சே... சொல்லியா தரணும்... ஹி ஹி ஹி
//1008 சொல்ல வேண்டிய இடத்துல 18 ஆ//
ஹா ஹா ஹா... சூப்பர்... இது நல்ல ஐடியாவா இருக்கே... நானும் சில விசியங்கள்ள இதை follow பண்லாம் போல இருக்கே...
ரெம்ப நாள் கழிச்சு உன்னோட போஸ்ட் பாத்ததுல ரெம்ப ரெம்ப ஹாப்பி....என்ஜாய்.... அப்பப்ப இந்த பக்கம் வா...
Welcome back... ஏனோ தெரியலை... காரணம் இல்லாம “வேட்டைக்காரன்” படப்பாட்டு ஞாபகத்துக்கு வருது - “புலி உருமுது... ஓடு ஓடு... வர்றான் பாரு வேட்டைக்காரன்”... இளைய தலவலியின் (பில்லா-க்கு போட்டியான) நடை அம்சமா இருக்கும்...
வந்துட்டீங்களா?
வாழ்த்துக்கள்.
Welcome Back!!!
.வெல்கம் பேக்கு துபாய் //
hihih Jailani,துபாயை பேக்காக்கிட்டீங்க?????
yakkaa, innoru vatti unga blog id, password ketutho chumma vidamaten! hakkkaangggggg!
WCB
அநன்யா....
அப்பா, உங்க கிட்ட போங்காட்டம் ஆட ட்ரை பண்றாரா?
நடக்குமா.... அதானே... இதை சரி கட்டணும்னா, இன்னும் ரெண்டு போளிய உள்ள தள்ளியாகணும்....
ஆமாம்... இந்த காயத்ரி, காயத்ரின்னு சொன்னேளே... யாரது அந்த காயூ?
Welcome Back...
அப்பாவுக்கு காயத்ரி மந்திரம் கஷ்டமாயிருந்தா, எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு மந்திரம் இருக்கு... அதை சொல்லச் சொல்லுங்க...
'ஜீபூம்பா..'
பி.கு: ஜாடியிலிருந்து பூதம் வந்து, போளி அத்தனையையும் சாப்பிட்டுவிட்டால் நான் பொறுப்பில்ல...
-
DREAMER
Post a Comment