Pages

Thursday, February 4, 2010

வேலை வாங்கலியோ வேலை

கேட்டவரம் தரும் கண்கண்ட தெய்வமாம் கூகிளாண்டவரிடம் அடிக்‌ஷன் அதிகரித்து, சதாசர்வகாலமும் டாஷ்போர்டும் கையுமாக இருக்கும் எனக்கு இந்த நோய் தீர வலைத்தள வைத்தீஸ்வரனிடம் வேண்டிக்கொண்டேன். ஏதாவது ஒரு வேலைக்கு போவது தான் ஒரே வழி என்று அதிகாலைக்கனவில் ஆதிபகவான் அசரீரியாக வந்து அதிரவைத்தார். ரிசஷன்ல் வேலைக்கு போகணுமாம்ல வேலைக்கு.. நல்லா சொல்றாங்கய்யா ஜோக்கு என்று நினைத்தவாறே இருந்தேன். விஷாகா விளித்து, ஜாப்ஃபேர் நடக்கபோகுது, நீ வர்றியா என்றாள். சரி சரி , அசிரீரி இன்ஃபோ கன்ஃபோர்ம் ஆகிவிட்டதென வேலைப்போருக்கு(ஃபேர் இல்லை போர் தான்) வயிற்றில் புளி கரைய புறப்பட்டேன். கூகிளாண்டவரிடம் எவ்வளவு கேட்டும் ஜாப்ஃபேர் பத்தி ஒரு தகவலும் தெரியலைன்னு கைவிரித்துவிட்டார். ஒரே ஒரு நியூஸ்ப்பேப்பரில் குட்டியூண்டு பெட்டிச்செய்தி அதுவும் எப்படி ஜாப்ஃபேரில் தப்பு தப்பா வேலை கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றி தான் இருந்தது.



போதாக்குறைக்கு நாம் எங்கு போனாலும் ஃபிலிப்பினோக்கள் போட்டிபோடுவார்கள்.ஆங்கில உச்சரிப்பு கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் அடிமாட்டு விலைக்கு உழைப்பும், முகமெல்லாம் சிரிப்புடன், அதிக நேரம் உழலும் வேலைகளையும் அனாயாசமாய் செய்துவிடுவதால் இங்கு அவர்கள் காட்டில் தான் அதிக மழை.

10.30க்கு புறப்படுவதாக ஏற்பாடு. பெருந்தன்மையுடன் என்னை வீட்டில் வந்து பிக்கப் செய்தார்கள். விஷாகாவின் ஒன்றரை வயது மகள் திஷித்தா காருக்குள் உருண்டு பிரண்டு கொண்டே வந்தாள்.அவள் செய்யும் ரகளையைப்பார்த்து என் கலங்கிய வயிறு இன்னும் வேகமாக கலங்கியது. அவளை இவர்கள் இருவரும் கண்டு கொள்வதாக இல்லை. முன்பக்கத்திலிருந்து பின்பக்கம், பின்பக்கத்திலிருந்து முன்பக்கம் தாவியவாறே இருந்தாள். ரெண்டு முறை டொம்மென்று விழுந்த போதிலும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

கார் பார்க்கிங் எல்லாம் ஃபுல்லானபடியால் சுற்றித்திரிந்து ஒரு வழியாக ஹாலுக்கு போன போது மணி 11.30 உள்ளே நுழைய எல்லோருக்கும் ஒரு விசிட்டர் பாஸ் தந்தார்கள். நம்ம நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டர் போல ஒரு 10 மடங்கு பெரிய இடம். எக்ஸிபிஷன் ஹால் ஏகப்பட்ட அலங்காரங்களுடன் ஒவ்வொரு கம்பெனியும் அவர்கள் லோகோ உட்பட பெரிதாகப்போட்டுக்கொண்டு கடை விரித்திருந்தார்கள். கல்லாவில் அனேகமாக பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். நிறைய கன்சல்டன்சிக்களும், வெப்போர்டல் நடத்தும் ரெக்ரூட்டர்களும் வந்திருந்தார்கள். எத்திசலாத், டூ, முபாத்லா, யூனியன் நேஷனல் பேங்க்,அபுதாபி இஸ்லாமிக் பேங்க் போன்ற வங்கிகளும், அபுதாபி போலீஸ், நேவி, இன்வெஸ்ட்மெண்டு அத்தாரிட்டி, அர்பன் கவுன்சில் போன்ற சர்க்கார் நிறுவனங்களும் ஆளெடுத்துக்கொண்டிருந்தார்கள்.


முதலில் நாங்கள் பல்பு வாங்கியது எத்திஹாத் ஸ்டாலில் தான். வேகமாகப்போய், என்னென்ன வேலைவாய்ப்பு உள்ளது உங்களிடம்ன்னு விஷாகா கொஞ்சம் பெரிய தொண்டையில் கேட்க, நீங்கள் சைட்டில் அப்ளை செய்யவும் என்றாள். சரி பண்ணிக்கறோம், விஷயத்துக்கு வான்னு கேட்டபோது தான் தெரிந்தது, அநேகமாக எல்லா வேலையும் அரபு நாட்டவர்களுக்குதானாம். செம்ம பல்பு. சரி, கொஞ்சம் நிதானிச்சுக்கலாம் என்று, அடுத்த கடைகளில் எல்லாம், முதல் கேள்வி -”Expatriates????" (அதாவது வெளியூர்வாசிகளுக்கு வேலை இருக்கா) என்று கேட்டு ஆரம்பித்தோம். முக்கால் வாசி பல்பு தான். கால்வாசி கடைகளில், யெஸ் என்று அரைமனதுடன் எங்கள் சீ.வீ வாங்கப்பட்டது. வீ வில் காண்டாக்ட் யூ என்றார்கள். எத்தனை இண்டர்வியூ பார்த்திருப்போம்? எங்க கிட்டையே வா?



அரபியில் வடாம் பிழிந்து எழுதி இருந்த ஒரு கடையில் விடாமல் நச்சு பண்ணிய விஷாகாவுக்கு மீண்டும் பல்பு, அது தனியாக தொழில் தொடங்கும் அரபியப்பெண் ஆன்ட்ரபென்யூர்ஸ்க்காம். விமென் கவுன்சில் என்று அரபியில் எழுதி இருக்கிறார்களாம்.

நாங்கள் தான் ஆயிரம் பல்பு வாங்கும் அபூர்வ சிந்தாமணிகளாயிற்றே.



பல்புக்கெல்லாம் அஞ்சமுடியுமா? அழுத குழந்தைக்கு தானெ பால்? சூனாப்பானா, போ போ போயிக்கிட்டே இருன்னு அசராம பல்பு வாங்கியபடியே நடந்தோம். சில இடங்களில் வெப்சைட்டு முகவரி கார்டு கொடுத்தார்கள். சில இடங்களில் ஆன்லைனில் அப்ளை செய்யச்சொன்னார்கள். அதுக்கென்ன பண்ணிட்டாப்போச்சு. சிலர் அங்கேயே 10 லாப்டாப்களை வைத்து நெட் அப்ளிக்கேஷன் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். பக்கித்தனமாக நம்மவர்களும், ஃபிலிப்பினோக்களும் ரஜினிபடத்தின் ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ டிக்கட்டுக்கு நிற்பது போல க்யூவில் நின்று அப்ளை செய்துகொண்டிருந்தார்கள்.


எல்லாக்கடைகளிலும் ஒரு ரவுண்டு முடிந்த பின், திரும்ப முற்பட்டோம்.கூட வந்த பிரவீண் அண்ட் திஷுவை காணவில்லை. திடீரென்று முன் தோன்றிய அப்பாவும் பெண்ணும் பார்த்து எங்களுக்கு ஒரே சிரிப்பு. திஷூ வாயெல்லாம் ஒரெ சாக்லெட்டு ஈஷிக்கொண்டு சிரித்தாள். ஆமாம் எல்லா கடைகளிலும் ஒரே சாக்லெட் மழை தான். வேலை இருக்கோ இல்லையோ நிறைய திங்கலாம். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டர்கள் என்று சகட்டு மேனிக்கு பிரவீண் திஷுவுக்கு சாக்லெட்டுகளை அள்ளி திணித்திருக்கிறார்.






சுற்றித்திரிந்த களைப்பில் நானும் ஒரு கடையில் கன்னாபின்னா ஷேப்பில் இருந்த சாக்லெட் ஒன்றை எடுத்து விஷுவுக்கும் கொடுத்தேன். அது கடைசியில் சாக்லெட் அல்ல.பேரீச்சம்பழம். நம்மூர்ல வாழைப்பழம் மாதிரி இங்கே இவர்களுக்கு பேரீச்சை. இதுல கூட நமக்கு பல்பா என்று இருவரும் ரசித்து சிரித்தோம்.


ரெண்டு போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். இதோ இன்றோ நாளையோ கால் வரலாம். ஆவலா இருக்கேன்... அடுத்த பல்பிற்கு.

13 comments:

துபாய் ராஜா said...

நல்ல வேலை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.

settaikkaran said...

சீக்கிரமேவ பல்புப்பிராப்தி ரஸ்கு....! சாரி, சீக்கிரமேவ பல்புப் பிராப்தி ரஸ்து....!

அண்ணாமலையான் said...

சீக்ரம் நல்ல வேல கிடச்சு, நிறய பணம் சேத்து பெரிய ஆளா வளர வாழ்த்துக்கள்........

ungalrasigan.blogspot.com said...

படித்து முடித்ததும் உங்களோடு சேர்ந்து நானும் மூன்று மணி நேரம் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்த மாதிரி கால் வலித்தது!

கானகம் said...

சீக்கிரமே வேலை கிடைச்சு, ஒரே பாட்டுல கோடீஸ்வரியாகி, அடுத்த பாட்டுல வயசாகி, பொண்ணுக்கு கல்யாணம் பன்னிவைக்க வாழ்த்துக்கள்.

:-) இப்பதான் பாக்குறேன், உங்க பிளாக்கை.. வாழ்த்துக்கள்.

Ananya Mahadevan said...

பின்னூட்டத்திற்கு நன்றி துபாய் ராஜா, சேட்டைக்காரன், அண்ணாமலையான்.
ரவிப்பிரகாஷ் சார்,
ரொம்ப சுருக்கமா தான் எழுதி இருக்கேன்... இன்னும் டீட்டெயிலா எழுதினா, போம்மா நீயும் உன் போஸ்ட்டும்ன்னு போயிடுவாங்க. இதுல விட்டுப்போன முக்கியமான விஷயம், வேலை கிடைக்காம, வேலை போன, போகபோற பலரை பார்க்க முடிஞ்சது. சீக்கிரம் இந்த நிலமை மாற பிள்ளையாருக்கு அவசர அப்ளிக்கேஷன் போட்டேன்னா பாத்துக்கோங்க...
பின்னூட்டத்திற்கு நன்றி சார்.

pudugaithendral said...

இனி பல்பெல்லாம் வாங்காம கால் வரும். எங்களுக்கு ட்ரீட் கொடுக்க மட்டும் மறந்துடாதீங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சீக்கிரமே வேலை கிடைச்சு, ஒரே பாட்டுல கோடீஸ்வரியாகி//

ஆமா..வாழ்த்துக்கள் :)

Ananya Mahadevan said...

ஜெயக்குமார்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நீங்க இன்னும் ’தமிழ்ப்பட’ இம்ப்பாக்டிலிருந்து இன்னும் வெளீல வரலை போல இருக்கே.. btw, இந்தக்குழந்தையும் பெண்ணும் முறையே திஷித்தாவும் என் தோழி விஷாக்காவும் ஆவார்கள்.

தென்றல்,
கண்டிப்பா சைபர் ட்ரீட்டு உண்டு. ஹீ ஹீ.மொதல்ல வேலை கிடைக்கட்டும்.

நன்றி முத்துலக்ஷ்மி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். :)

Priya said...

Anans - I know how it feels to be in a Job fair of this sort...(Darnn.. I hate this statement). This is EXACTLY what happened when we attended a job fair right after 9/11 attacks. US Citizens mattume.. No H1B sponsorships available nu sollitaanga. After 10 booth visits, we became veterans that we would start the conversation with "Do you sponsor H1Bs". Until that point, with a MS from a US Grad school, all you need to do is to be ALIVE to get a job.. பாழா போன 9/11 எல்லார் வாழ்கையிலும் மண்ணை அள்ளி போட்டுடுச்சு ...

Best Part என்ன தெரியுமா.. every booth will give away goodies like Tshirts, Toothbrush, Gillette, wireless mouse, softballs, fur toys, recyclable bags etc.. so அங்கேயே ஒரு பூத் லே பையி வாங்கி பூத் பூத்தaa போய் fill ஆனா பிறகு அத ஒரு பூத் பின்னாடி ஒளிச்சு வச்சுட்டு அடுத்த ரவுண்டு ... இப்படியே பண்ணி பண்ணி ...வீட்டுக்கு வரும்போது 3 Bags full.. :-)

PS: உன் ப்ளாக் ஐ விட பெருசா கமெண்ட் எழுதியதுற்கு மன்னிக்கவும்... அடக்க முடியவில்லை உற்சாகத்தை : - )

Ananya Mahadevan said...

ப்ரியா,
பாபா ப்ளாக் ஷீப் மாதிரி த்ரீ பேக்ஸ் ஃபுல்லா? சூப்பர். இங்கேயும் என்னென்மொ பரிசுகள் எல்லாம் வெசிருந்தாங்க.ஆனா எங்க’லெவெலுக்கு’ ஒரு பைய்யும் (விஷாகா திஷுவுடன் இருக்கும் போட்டோவில் காண்க) ஒரு வெத்து புஸ்தகமும் தான் குடுத்தாங்க. எங்களை யாருமே மதிக்கலை.. :((
” அத ஒரு பூத் பின்னாடி ஒளிச்சு வச்சுட்டு ” - LOL
PS- நீண்ட பின்னூட்டம் எழுதறது எனக்கு ரொம்ப பிடிக்கும். தாரளமா எழுதவும். பிரசுரிப்பேன்.

Unknown said...

Hi Ananya,
Read this article.Its superb and very jovial.Felt like reading Anuradha Ramanan's article.
Keep it up and keep on rocking.

(P.N): Pursuku velai kadachudo yennavo, bagguku neraya chocalate kadachuthu varakum labam.
(pashanamanalum bajana madathuku udavum adumadiri)

cheers,
Nithya

Unknown said...

பல்புக்கெல்லாம் அஞ்சமுடியுமா? அழுத குழந்தைக்கு தானெ பால்?

hehe...
nalla velai kidaithu... VAALKAILA VETRI PERA VAALTHUKAL... :))

Related Posts with Thumbnails