இந்த வார இறுதி ரொம்ப நாள் கழித்து துபாய் செல்ல நேர்ந்தது. சனியன்று மத்தியானம் ஜெயாக்கா சாப்பிட அழைத்திருந்தார். ஜெயாக்கா சமீபமாகத்தான் வீடு மாற்றி இருக்கிறார். இவரும் அத்திம்பேரிடம் இடம் விசாரித்துக்கொண்டு, ஷார்ஜா போஸ்டாபீஸ் பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி கார் பார்க்கிவிட்டு பில்டிங் தேடி போனோம்.
இதாத்தான் இருக்கும்ன்னு இவர் சொன்ன ஒரு பில்டிங்ல சுமார் 15 பேர் போகக்கூடிய பெரிய லிஃப்ட். லிஃப்ட் பட்டனை அமிழ்த்திவிட்டு காத்திருந்தோம். கதவு திறந்ததும் ஒரு ஆள் அவசரமாக வெளியே ஓடினார். பெரிய லிஃப்டாச்சே, கதவுக்கு சைடில் ஆள் நிற்கும் அளவுக்கு இடம் இருந்திருக்கிறது. வெளியில் தெரியவில்லை. இவர் வேகமாக லிஃப்டுக்குள் நுழைய, கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு (இளம்)பெண் வெளியே வரமுயல, ரெண்டு பேரும் தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி ஒரு டிங்கு!!! இதைச்சற்றும் எதிர்ப்பார்த்திராத என் கண்வர், மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டார். அந்தப்பெண் நம்மூர் மாதிரி தான் தெரிந்தது, சற்றே அவமானத்துடன் ஓடிவிட்டாள்.
இவர், லிஃப்டுக்குள் புகுந்து வழிந்துகொண்டு இருந்தார். நான் முறைத்தேன் என்று சொல்லித்தெரியவேண்டாமே. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டே, இனி, 1 வாரம் அவள் தூங்கவே மாட்டா, என்னையே நெனைச்சுண்டு இருப்பா என்றாரேப்பார்க்கலாம்! G யிலிருந்து 7வது மாடி போவதற்குள் லிஃப்டிற்குள் டிஷ்,டிப்ஷ்,டுக்ஷ் என்று ஒரெ சத்தம் தான். 7வது மாடியில் வெளியே வந்த போது இவர் தலைக்கு மேலெ கார்ட்டூன் மாதிரி ஒரே நட்சத்திரங்கள். அங்கங்கே முகத்தில் கருப்பு காயங்கள். சரி, ஆச்சு, ஜொள்ளியாச்சு, மறந்து இருக்கலாம் இல்லையா?
சாயந்திரம் கோபாலண்ணா வீட்டில் பூரி பண்ணிக்கொண்டு இருந்தேன். சமயலறையில் வந்து, ஹிக், ஹிக் ஹிக்ன்னு ஒரே விக்கல். அச்சிச்சோ, என்ன இவ்ளோ விக்கல், தண்ணி எடுத்துக்கோங்கோன்னு டம்ளர் எடுக்கப்போன போது, என்னமோ தெரீலம்மா, ஆரோ என்னையே நினைச்சுண்டு இருக்கான்னு ஒரு திருட்டு முழி.. புரீல?அதான் அந்த லிஃப்டு பொண்ணு, இவரையே நினைச்சு நினைச்சு உருகறாளாம், அதான் விக்கலாம்..
இப்போது மீண்டும் சமயலறையில் டிஷ், டுப்ஷ், டஷ்,
சத்தங்கள் கேட்டன. கொஞ்சம் விட்டா பிஷ்க்யூன்,டும்க்யூல், டுமீல்,சரக், சதக்ன்னெல்லாம் சத்தம் கேட்டிருக்கும்!!!
17 comments:
பாவம் நம்ப அத்திம்பேர் என்னை மாதிரியே மனுசுல பட்டதையெல்லாம் அப்படியே சொல்ர அப்பாவி மனுஷர் போலருக்கு!...:) LOL
:)
எப்பவும் இப்படி வாங்கிக்கட்டிகிட்டே ஜொள்ளுவாரா?
மஹாதேவன் சார் ரொம்பத்தான் விக்குகிறார் போல , நிறைய தண்ணீர் கொடுங்க அனன்யா மேடம் .
நல்லாருக்கு அனன்யா மேடம் .
அட பாவமே..
இப்படித்தான் நன்னாத் தூங்கிண்டிருக்கச்சே சொப்பனத்துலே வந்து பெகளத்தை உண்டாக்கிடறா. அந்தப் பொண்ணு சொப்பனத்துலே மேக்-அப் போட்டுண்டு வந்தாளா? போடாம வந்தாளா? இப்படித்தான் ரெண்டு மூணு நாளைக்கு முந்தி த்ரிஷா என்னோட சொப்பனத்துலே மேக்-அப் போடாம வந்து மறுநாள் வேப்பலையடிக்கிறா மாதிரி ஆயிடுத்தாக்கம் - வேப்பிலையடிச்சது நேக்கு; த்ரிஷாவுக்கில்லை கேட்டேளா?
அடக்கி வாசித்திருக்கலாம்!!!
:))
ஆனாலும் மாமாவுக்கு இம்புட்டு, இம்புட்டு, இம்புட்டு.... இம்புட்டு ஆகாதுதான்....
இவ்வளவு குட்டும்,குத்தும் வாங்கும் போதே இப்படி வரார்ன்னா கொஞ்சம் ஃப்ரியா விட்டா என்னாவரத்து வருவார்.... :))
உங்க மாமா பாடு இனி ------
அந்த பொண்ணு பாவம், இடிய வாங்கிட்டு மாவுக்கட்டு போட்டுட்டு புலம்பிட்டு இருக்கும் .
இவர் ''பச்சைக்கிளி , முத்துச்சரம்'' கனவோடு இருக்காரா ? .. பூரி கட்டைன்னு சொன்னமாதிரி இருந்தது ... ஸோ.. இவர்க்கும் மாவுக்கட்டா ?
பிரமாதம் . ஆனா ஜாக்கிரதை , கட்டு பிரிக்கும் வரை ஷார்ஜா வேண்டாம் ...மாவுக்கட்டுக்கள் நெகிழும் வாய்ப்புக்கள் கூட ........:) :)
@தக்குடு- நினைப்பு தான் பொழைப்பக்கெடுக்கும்
@சென்ஷி-நன்றிங்க
@மஞ்சூர் ராஜா-அதே அதே! பூரிக்கட்டை ஸ்பெஷல் அவருக்கு ரொம்ப இஷ்டம்!
@ஸ்டார்ஜன் -நன்றிங்க
@அண்ணாமலை - யார் பாவம்??? :-)
@சேட்டை - நீ பதிவு படிக்காம கமெண்டு எழுதறன்னு இங்கெ எல்லாரும் கண்டு பிடிச்சாச்சு. இவர் கனவு காணலை, அவள் நினைக்கறாளாம்-இவர் நெனப்ஸ் ஆஃப் இண்டியா ல பேசுறார். நீ சதா சர்வகாலம் ஸ்ரீயா திரிஷாவை கனவு கண்டு கண்டு பித்தா போய்டபோறே!பாத்து, பத்திரம்ட்டியா கோந்தே?
தென்றல்- ரொம்ப அடக்கி வாசிச்சிருக்கேன், போட்டோ எல்லாம் போடலையே! ஹீ ஹீ
@ துபாய் ராஜா- அதான் எனக்கு பயம்மா இருக்கு!
@சங்கர் - மாமா பாடு என்னிக்குமே திண்டாட்டம் தான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@பத்மநாபன் -பூரி பண்ணிண்டு இருந்தேன்னு நான் சொன்னதை மிகத்துல்லியமா புரிஞ்சிண்டதுக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. btw, மாவுக்கட்டு போடுற அளவுக்கு எல்லாம் போகலை - அந்த பொண்ணுக்கு, இவருக்கு ஜஸ்ட் அல் ஜசீரா போய் எமர்ஜன்ஸில ஊசிஎல்லாம் போட்டுண்டு வந்தோம்.
ada pavame!! (mohan thaan pavamngren..) oru kanavu kana kooda urimai illaiya? enna koduma ananya idhu? :)
ரொம்ப அடக்கி வாசிச்சிருக்கேன், போட்டோ எல்லாம் போடலையே! ஹீ ஹீ//
நான் பதிவை சொல்லவில்லை.
சைட் அடிச்சதை உங்க வீட்டுக்காரர் வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம். டிஷ்யும் டிஷ்யுமையும் கொஞ்சம் குறைச்சிருக்கலாம் எனும் அர்த்தத்தில் சொன்னேன்.
பாவம் இரண்டு பேரும்(அடிவாங்கினவரும், அடிச்சவங்களும்)
பொற்ஸ், அவர் கனவு காணலையே, ஜஸ்ட் தற்பெருமை அடிச்சுண்டார், அடி வாங்கிண்டார். அவ்ளோ தான். இதுல எல்லாம் என்ன கொடும இருக்க முடியும் கண்ணாட்டி?
தென்றல், மீண்டும் சொல்றேன், இவர் இப்படி சுயபுராணம் பாடிண்டு பெருமை பீத்திண்டு அலைஞ்சா, அடி பின்னப்படும். அடுத்த வாட்டி பிஃபோர் ஆஃப்டர் போட்டோக்களும் பிரசுரிக்கப்படும்!
அடடா... இப்படி ஆயிடுச்சே...
ஆஹா மஹாதேவன் சார் அப்ரசன்டி போல இருக்கே....நெளிவு சுளிவு போக போக வந்துடும்
எல்லா கணவன்மார்களும் ஒண்ணுபோலவே திங் பண்றாங்களே... எப்படி?
Post a Comment