இந்த நிகழ்ச்சி நடந்து 2 வாரம் ஆகிவிட்டது. படங்கள் இப்போது தான் கைக்கு கிடைத்தன. படங்கள் தந்தமைக்கு கோபால் அண்ணாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள்.
4பீ குழுவினரின் 12வது ஆண்டு விழாவையொட்டி துபாய் போயிருந்தோம். அல்பர்ஷாவிலிருந்து
கழுதை பரதேசம் போன மாதிரி போய்க்கொண்டே இருந்தால் ஜே.ஸ்.ஸ் பள்ளி வளாகம் வரும். அங்கு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். அருமையான கலை நிகழ்ச்சிகளை, சுமார் எண்பது குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகச்சிறப்பாக அரங்கேற்றியிருந்தார்கள்.
மஹாசிவராத்திரியை ஒட்டி, அதிகாலையிலேயே துபாய் பிரதோஷம் குரூப்புடன் 4பீயும் சேர்ந்து, ருத்ரேகாதசி செய்தார்கள். மதிய உணவுக்கு பின்னர் ஆண்டு விழா ஆரம்பித்தது. விழா ஆரம்பத்திலேயே விசிட் விசாவில் வந்த முதியோர்களை மேடைக்கு வரும்படி அழைத்தார்கள். என்னவா இருக்கும் என்று தயங்கியவர்கள், வாருங்கள், வாருங்கள் என்ற வற்புறுத்தலின் பேரில், எல்லோரும் மேடை ஏற்றப்பட்டனர். முதன்முறை இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதால் என்னால் ஊஹிக்க முடியவில்லை.
இவர்கள் வருடா வருடம் இப்படி முதியவர்களை கெளரவிக்கிறார்களாம். ”நீங்கள் எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவோ பாடு பட்டிருக்கிறீர்கள், எங்களால் ஆனது இவ்வளவுதான்” என்று சொல்லி, எல்லோருக்கும் அழகான ஒரு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள். இதைச்சற்றும் எதிர்பாரா பெரியவர்கள் உணர்ச்சி பெருக்கால் வார்த்தை வராமல் தடுமாற, தொகுப்பாளர் மிகவும் பணிவுடன், “எங்கள் எல்லோரையும் நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள மேடையில் நின்ற எல்லா கருணையுள்ளங்களும் அங்கே அமர்ந்திருந்த பார்வையாளர்களை அன்புடன் ஆசீர்வதித்தார்கள். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு சில நொடிகள் அவை.சிலர் வார்த்தை வராமல் வெளியேறினார்கள்.
ஒரு மாமா மிக அழகாக பக்தவிஜயத்திலிருந்து ஒரு அருமையான கதையை சொல்லி நம் கடமையுணர்ச்சியின் மகத்துவத்தை சொன்னார். இன்னொரு மாமா அழகாக ஒரு கவிதை சொன்னார்.
இதன் பின்னர் நிகழ்ச்சி ஆரம்பித்தத சின்னச்சின்ன குழந்தைகள் விதவிதமான அலங்காரம் பண்ணிக்கொண்டு ஆடி, பாடி, நடித்து அதகளப்படுத்தினார்கள். மிகவும் சிறிய குழந்தைகளின் மழலையும், குழந்தைத்தனமும் பார்வையாளர்களை சிரிப்பலையில் மிதக்க விட்டது. சில குழந்தைகள் தங்கள் டயலாக் மறந்தது, சில குழந்தைகள் எல்லாம் இஷ்டத்துக்கு நாடகம் நடக்கும் போது குறுக்கும் நெடுக்கும் நடந்து போனது. குழந்தைகளை மட்டும் ரசித்தால் கூட நம் மன அழுத்தம் வெகுவாக குறையும் என்பது என் தாழ்மையான கருத்து.
நடன நிகழ்ச்சிகளில் என்னை பிரமிக்க வைத்தது எம்.எஸ் அம்மாவின் ஜெயதேவர் அஷ்டபதி பாடலுக்கு குழந்தைகளின் பரதம். 8 குழந்தைகள் . அதில் ஒரு குட்டியூண்டு பெண் குழந்தை அழகாக பாவாடை அணிந்து ஒவ்வொரு அவதாரம் அபினயம் பண்ணியவுடனே, ’ஜெய ஜெகதீஷஹரே கேஷவா’ என்று கைகளை உயர்த்திக்கொண்டு முன்னாடி வந்துவிடும். அத்தனை அழகு. இந்த கோரியோகிராஃபியில் நான் மிகவும் ரசித்த அம்சம், அரெஞ்மெண்ட் அண்ட் ரீஅரேஞ்மெண்ட். டக் டக் டக் என்று வெவ்வேறு காட்சிகளை நம் கண்முன் சில நொடிகளிலேயே காட்டினார்கள். போட்டோ எடுக்க காமெராவை ரெடி பண்ணுவதற்குள் நிறைய மிஸ் ஆகி விடும் என்று போட்டோ எடுக்கவில்லை. சிரித்த முகத்துடன் மிகவும் அழகாக ஆடி என்னை முழுவதும் ஆட்கொண்டார்கள்.
அடுத்ததாக என் சீட்டில் இருந்து நான் எழுந்து முன்னாடி போய் கீழே உட்கார்ந்து பார்த்து ரசித்த நிகழ்ச்சி நம்மூர் கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம். மிகச்சிறப்பான உடையலங்காரத்தில் குழந்தைகள் பிரமாதமாக ஆடினார்கள்.துள்ளல் இசைக்கு ஒரெடியாக விசில் பறந்தது! எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தார்கள். கொஞ்ச நேரம் நான் துபாயில் இருப்பதை மறந்து ரசித்தேன்.
அடுத்து நான் வாய்பிளந்தது சவுண்ட் அண்ட் லைட் ஷோ. முகுந்தா முகுந்தா பாட்டில் ஒரு திரைக்கு பின்னாடி அவதாரங்களை காட்டுவார்களே? அதே மாதிரி வடிவமைக்கப்பட்ட மிகச்சிறப்பான நிகழ்ச்சி.என்ன ஒரு உழைப்பு, என்ன ஒரு டெடிகேஷன்! வியந்தேன்.
நிறைய ஸ்கிட் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஸ்கிட் குருவாயூரப்பன் ஸ்கிட் மற்றும் பக்த மார்க்கண்டேயர் ஸ்கிட். அருமையான ஸ்பெஷல் எஃப்க்ட்ஸுடன் இருந்தன இவை இரண்டும். அதிலும் மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைப்பிடித்துக்கொண்டு இருக்கும்போது லிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளியில் வந்து தாண்டவம் ஆடியதும் கூடவே பின்னாடி இருந்து ஏதோ ஒரு கருவியை இயக்கி ஜிகினாபோட்டு அசத்தி விட்டார்கள். ஏதோ கிராஃபிக்ஸ் செய்தது போல இருந்தது!
இது மாதிரி வரிசையாக புதுமையான நிகழ்ச்சிகள் வந்து கொண்டே இருந்தன. அழகாக லேட் பண்ணாமல் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை மிகவும் ப்ராம்ப்டாக வழங்கினார்கள்.
நிஜமாகவே எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்லாமல் விட முடியாது. அவ்வளவு நன்றாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களின் பங்கேற்பு இருந்தது. மத்தியானம் கிளம்பிவிடலாம் என்று நினைத்த எங்களுக்கு நிகழ்ச்சி முடியும் வரை கிளம்ப மனம் வரவில்லை. அனைத்து நிகழ்ச்சிகளும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தன.
4பீ குழுவினருக்கு எனது 12வது ஆண்டு விழா வாழ்த்துக்கள். இப்பேர்ப்பட்ட ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நடத்தியதற்கும், குழந்தைகளையும் பெரியோர்களையும் உற்சாகமூட்டியதற்கும் நன்றிகள்.
16 comments:
நீங்கள் எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவோ பாடு பட்டிருக்கிறீர்கள், எங்களால் ஆனது இவ்வளவுதான்” என்று சொல்லி, எல்லோருக்கும் அழகான ஒரு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்
இதயம் கனத்தது! கண்கள் பனித்தது.
இப்பேர்ப்பட்ட ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நடத்தியதற்கும், குழந்தைகளையும் பெரியோர்களையும் உற்சாகமூட்டியதற்கும் நன்றிகள்.
அதை எங்களுக்கு நேரிலே பார்கின்ற உணர்வுடன் அளித்தமைக்கு நனறிகள் பல
நல்ல பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு சந்தோஷம்
அமீரகத்தில் இப்படியெல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன என்பதே நீ சொல்லி தான் தெரிகிறது... தகவல்களுக்கு நன்றி! அப்புறம்.. Read More போட கத்துக்கிட்டே போல... நல்லது. இப்போது ஒரு பதிவு எத்தனை தடவை actual-ஆக படிக்கப்பட்டிருக்கிறது என்பது அறியக்கிடைக்கும். ( minus the number of comments... bcos every time you post the comment, the page load counts as additional visit)
// குழந்தைகளை மட்டும் ரசித்தால் கூட நம் மன அழுத்தம் வெகுவாக குறையும் என்பது என் தாழ்மையான கருத்து//
தாழ்மையான கருத்தல்ல மேன்மையான கருத்து,
எங்கள் ஊரில் பாலர்பள்ளி ஆண்டுவிழா எங்குநடந்தாலும் சென்றுவிடுவேன். நல்ல சிரிக்கலாம்.
இந்த ட்ராமா மேனுபுலேட்டட் ஸ்பெஷல் எபக்ட் பண்றது ரொம்ப கஷ்டம். டில்லி 6 படத்துல வர்ற ராமாயண ட்ராமா பார்த்தீங்கன்னா தெரியும், இதை தப்பில்லாம பண்ண நிறைய பயிற்சிகள் வேணும்,,இல்லன்னா அழுகுன முட்டைதான் மேடைக்கு வரும்...
பகிர்வுக்கு நன்றி நானும் துபாய் இருக்கறன்னுதான்பேரு...
:)) Nice post!
பகிர்விற்கு நன்றி.
துபாயிலா?
ஓஹோ.. இதெல்லாம் கூட நடக்குதா??
செய்திக்கு நன்றி.
அருமையான தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.
Enjoyed reading the post. Very elaborate and the clicks are very good. Thanks for sharing.
Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/
நல்ல பதிவு
//நீங்கள் எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவோ பாடு பட்டிருக்கிறீர்கள், எங்களால் ஆனது இவ்வளவுதான்” என்று சொல்லி, எல்லோருக்கும் அழகான ஒரு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்// good initiative...:)
@TRC அவர்களே,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும், நன்றி
@சசிக்குமார், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
@அண்ணாமலையான்,நன்றிங்க
@மஹேஷ்வரா, தகவலுக்கு நன்றி. ஆமாம் பேஜ் பிரேக் போட்டாச்சு.
@நாஞ்சில், டெல்லி6 ஈ மசாலாவில் போட்டாங்கப்பூ, ஆனா முழுசாப்பார்க்கலை.அடுத்த வாட்டி சீக்கிரம் போடுவாய்ங்க பார்த்துடுறேன்.இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகள் பார்க்கணும்னா எனக்கு மெயில் அனுப்புங்க. I will keep you posted. அடிக்கடி நடக்கும்.
@பொற்ஸ்-நன்றிம்மா.(என்ன வாலைச்சுருட்டிண்டு ரொம்ப சமர்த்தா நன்னா இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டே?திருந்திட்டியா?)
@பட்டர்பிளை -நன்றிங்க
@Melting Horizons-உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க. ஆமாங்க துபாயில் தான்.
@சேட்டைக்காரா-நன்றிப்பா.. பெருந்தன்மைக்கு ஒரு சேட்டை!
@Ms Chitchat, -ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன் உங்களை. எல்லோரும் செளக்கியமா? ரொம்ப நன்றிங்க. நானும் உங்க ப்ளாக் பக்கம் வந்து நாளாச்சு. சீக்கிரம் வர்றேன்.
@காஞ்சனா மேடம்- தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@தக்குடு- ஆமாம்ப்பா, நாங்கள் எல்லோரும் ரொம்ப ஆச்சர்யப்பட்டுட்டோம். எழுந்து நின்று கைதட்டினோம். எங்களால் செய்ய முடிந்தது அது தான். ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.
அருமையான நிகழ்வுகள்; நல்லாருக்கு அனன்யா மேடம்
துபாய் மக்கள் அருமையாக கலை , நடன நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளார்கள் . நீங்களும் வர்ணனையில் அமர்க்களப்படுத்தி உள்ளீர்கள். படங்களும் அருமை
பாலைவன நாடுகளில் குடியிருக்கும்பொழுது இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதும் , அதில் கலந்துகொள்தலும் கொஞ்சம் நாட்டு ஏக்கத்திற்கு மருந்து .
Post a Comment