அடுத்தடுத்து ஒரே பெயரில் போஸ்ட்டு போட்டா ரீடர்ஸ் கன்ஃப்யூஸ் ஆயிடுவாங்கன்னு தான் ஒரு போஸ்ட் தள்ளி இந்த போஸ்ட் போடறேன்.
அக்சுவலா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா தான். ஆனா அப்படிப்போட்டா மஹா சாதுவான கோபாலண்ணாவுக்கு கோபம் வரலாம்.
சரி விஷயத்துக்கு வர்றேன். இவரை ஏன் இப்படி சொல்றேன்னா, எங்கே போனாலும் இவருக்கு ஒரு கூட்டம் கூடிடும். அதுலேயும் முக்கியமா அண்டர்லைன் பண்ணி, போல்டு பண்ணி, ஹைலைட்டு பண்ணி சொல்லிடறேன் - வயதான பெண்கள் கூட்டம். இல்லாட்டி குறைந்தபட்சம் 40 வயசான மாமிகள் கூட்டம். இவர் கிட்ட அப்படி என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, அப்படி ஒரு காந்த சக்தி.. (தூ, இது உனக்கே கொஞ்சம் ஓவராத்தெரீலன்னு என் மனசாட்சி என்னைக் கேக்கறது).ஏதோ ஒரு ஸ்ப்ரே விளம்பரத்துக்கு பெண்கள் துரத்துவார்களே அதே போல இவருக்கும் சிலோன் ரேடியோவில் சொல்வது போல அம்மா அம்மம்மா,அக்கா அக்கக்கா, பாட்டி, சித்தி பாட்டி, அத்தை பாட்டி, அத்தங்கா, அம்மங்கா, மன்னி, சித்தி, மாமி இப்படி இவரைச்சுற்றி ஏகக்கூட்டம்!
சரியாச்சொல்லப்போனா இதை நான் கண்டு பிடிச்சது 2006ல தான். வேணு அண்ணா கல்யாணத்துக்கு முன்னாடி தான் எங்க கல்யாணம் முடிஞ்சிருந்தது. நான் இவங்க குடும்பத்துக்கு புதுசு. எனக்கு யாரையும் தெரியாது. திடீர்ன்னு பார்த்தா இவரைக்காணோம். எங்க நெருங்கிய சொந்த பந்தம் எல்லாம் மேடையில் ஹோமத்துல பிஸியா இருக்க நான் சண்டே சாயந்திரம் சரவணா ஸ்டோர்ஸ்ல தொலைஞ்சு போன சின்ன குழந்தைமாதிரி ஆயிட்டேன். கண்ணா உனை தேடுகிறேன்னு நானும் ரொமாண்டிக்கா பாட்டெல்லாம் பாடிண்டு தேடிப்பார்த்துட்டேன். ஆளைக்காணோம். நடந்து நடந்து கால்வலிச்சு ஒரு லேடீஸ் கும்பல்கிட்டக்க போய் உட்கார்ந்துட்டேன். அவாள்ளாம் இந்த சைட் சொந்தமா அந்த சைட் சொந்தமான்னு கூட எனக்கு தெரியாது. அப்படியே சுத்தும் முத்தும் நோட்டம் விட்டப்போ பளிச்னு எங்கேயோ பார்த்த முகம்! அட, இவர் தான். நடூல உக்கார்ந்து இருந்தார். புதுப்பொண்டாட்டிய அம்போன்னு விட்டுட்டு ஹே ஹேன்னு ஒரெ கூச்சல், கும்மாளம் சிரிப்பு. இவரைச்சுத்தி இவர் அக்கா, மன்னிமார்,சித்தி, அத்தை, சித்தி பாட்டி, அத்தைபாட்டி, மாமி, அத்தங்கா, அம்மங்கா போன்ற சொந்தபங்தங்கள். என்னைப்பார்த்தவுடன் மாமிகளும் என்னை அவர்கள் குரூப்பில் சேர்த்துக்கொண்டார்கள். (நேரம் தான்) இவர் அப்போது கெக்கே பிக்கே என்று எனக்கு நூறு முறை சொன்ன ஒரு பழைய ஜோக்கை 101வது முறையாக மாமிகளை இம்ப்ரெஸ் செய்வதற்கு சொல்லிண்டு இருந்தார். நற நற!
இது ஆச்சு. இது மாதிரி ஒண்ணா ரெண்டா?
2007ல் கோபாலண்ணா பையன் பூணூலுக்கு மேலத்தெருவில் அழைக்கப்போய் இருந்தோம். இரவு சுமார் 7.30க்கு மேல் பாலக்காட்டில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள். டீவீ சீரியல் ஆதிக்கம் என்ன செய்ய? (எங்கள் ஊரில் எல்லாம் இரவு தான் பெருசுகள் எல்லாம் திண்ணையிலோ சேர் போட்டுக்கொண்டோ வம்பளந்து கொண்டு இருக்கும்.தெருவில் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் போன்ற CBI வேலை எல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்). ஊரடங்கிய சமயத்தில் நாங்கள் ஒவ்வொரு வீடாகப்போய் மணி அண்ணா சொல்லிக்கொடுத்த ஸ்கிரிப்டை மனனம் பண்ணிக்கொண்டு, அழைக்க வேண்டும். அவ்வளவு தான் வேலை. மேலத்தெரு முதல் வீட்டில் ஆரம்பித்தோம்.அங்கு கதவைத்தட்டிய உடனே, முதலில் ”ஆராக்கும்?” என்ற கோபமான குரல் தான் கேட்டது. வேகமாக என் கடமையைச்செய்து விட்டு கிளம்பிடணும் என்று நினைத்துக்கொண்டேன். இவர்,” நான் தான் மாமி, மோஹன் வந்திருக்கேன்” என்றார்.(எனக்கு மனதிற்குள் ”பொன்னுரங்கம் வந்திருக்கேன்” போல தோன்றியது!!! அதற்குள் அந்த மாமி கதவைத்திறந்துகொண்டே,”ஆரு மோஹனா?” என்று புல்லரித்து புளகாங்க்கிதம் அடைந்து, ”எங்கிருக்காய்? எப்போ வந்தாய்” போன்ற பல கேள்விக்கணைகளை தொடுக்க இவருக்கோ வாயெல்லாம் பல்! மாமியின் கைகளைக்கோர்த்துக்கொண்டு ரிங்கா ரிங்கா ரோஸஸ் ஆடிக்கொண்டு பேச்சான பேச்சு. மாமியின் ஒன்றுவிட்ட தங்கையின் பெண்ணுக்கு போன மாதம் மும்பாயில் கல்யாணம், அவன் ஓமனில் இருக்கான்,பெண் படித்திருக்கிறாள் ஆனால் வேலைக்கு போகவில்லை போன்ற ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான அப்டேட்டுகளுக்கு அப்புறம் தான் என் கடமையைச்செய்ய முடிந்தது! இதே ரேஞ்சில் எல்லார் வீட்டிலும் இதே தான் ரிப்பீட்டு! சில மாமிகள் இவர் குரலைக்கேட்டு ”மோஹனா?” என்று குதூகலித்தார்கள். சிலர் உருவத்தைப்பார்த்து துள்ளிக்குதித்தார்கள். எல்லார்கூடவும் ரிங்கா ரிங்கா ஆடிவிட்டு வருவதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது!
சரி, இது ஊர்ல.. இங்கேயும் இதே தானா?
அன்னிக்கி ரொம்ப நாள் கழித்து ரவியை சந்திக்க ஹம்தானில் அவர்கள் வீட்டுக்கு போய் இருந்தோம். ரம்யா டின்னருக்கு அழைத்திருந்தாள். அங்கே போனதுக்கப்புறம் தான் தெரிந்தது ரவியின் நண்பர் ஒருவரும் அவர் அம்மா அப்பா குடும்ப சஹிதம் டின்னருக்கு வரவிருக்கிறார்கள் என்று. ஆச்சு அவர்கள் வந்த உடனே இவர் லக்ஷணமாக ஆபீஸ் விஷயங்கள் பேச வேண்டியது தானே? அந்த நண்பரின் அம்மா மிக பளிச் ரகம். நல்ல குரல் கல கல சுபாவம். முதலில் இவர் தான். “மாமி உங்களுக்கு சொந்த ஊர் ஏதாக்கும்?” அதானேப்பார்த்தேன். நெக்ஸ்டு மாமி, ”நேக்கு சாத்தபுரம் பாலக்காடு.. “ அட்றா சக்கை அட்றா சக்கை.
இவர் கண்களில் பாலக்காட்டு நீர் மல்க, மாமீ.... என்று ஸ்லோ மோஷனில் என் மனக்கண்ணில் இவர் மாமியை நோக்கி ஓட, எனக்கு மெதுவாக பிள்ட் பிரஷர் ஏறியது. மாமிக்கு ஏக குதூகலம். ”ஓ... ஆக்குமா” என்று ஆரம்பித்து, ஹை 5 கொடுத்துக்கொண்டு பிள்ளையாரை தியானித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். பேசினார்கள் பேசினார்கள். அப்படி ஒரு பேச்சு. பாலக்காட்டில் ஒரு வீடு விடாமல் எல்லார் வீட்டு அப்டேட்டுகளும் பேசியாயிற்று. இவர் விட்டால் அந்த மாமியின் மடியில் ஏறி உட்கார்ந்து விடுவார் போல இருந்த்து. அந்த மாமாவுக்கு காது கேட்காது போல இருக்கு.(குடுத்து வைத்தவர்!) அவருக்கும் என்னை மாதிரி ஒரு கையாலாகாத்தனம்! என்ன செய்வது.? ரவி, நண்பர், ரம்யா, நான், நண்பர் மனைவி, குழந்தைகள், மாமா எல்லோரும் இதை ஒன்றுமே புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். கடைசியில் மாமி நிறுத்திய போது அந்த மாமி இவருக்கு தூ....................ரத்து உறவு என்பது ஊர்ஜிதமாயிற்று. ஸ்ஸ்ஸ அப்பா... முடியலை. மாமி சாப்பிட்டு கையலம்பிய போது ”தால் நன்னாருந்தது கேட்டியா” என்றார். ரம்யா அன்று தாலே பண்ணலை! போனால் போகிறது என்று என்னைப்பார்த்து உன்பேர் என்னம்மா என்றார்..அனன்யா என்றேன். கண்டுகொள்ளவே இல்லை.. மீண்டும் பேசப்போய்விட்டார்! அந்த மாமி பிரியும்போது இவர் 7ஜீ ரெயின்போ காலனி ரவிக்கிருஷ்ணா ரேஞ்சுக்கு கண்ணீர் விட்டார்! கஷ்டம் கஷ்டம்!
இப்போ சொல்லுங்க நான் ஏதாவது தப்பா சொன்னேனா?
கோபியர் கொஞ்சும் ரமணா, மோஹனக்கிருஷ்ணா!
19 comments:
//கண்ணா உனை தேடுகிறேன்னு நானும் ரொமாண்டிக்கா பாட்டெல்லாம் பாடிண்டு தேடிப்பார்த்துட்டேன்.//
அதுனால தான் காணா போயிருப்பாரோ என்னவோ..? :P
பாவம் நல்ல மனுஷன் பெரியவா கிட்ட சந்தோஷமா நாலு வார்த்தை பேசக் கூட அவருக்கு உரிமையில்லியா? நீங்க மாமிகளோட இள வயசு பசங்களோட பேச வேண்டியது தானே?
:-) :-) :-)
//ஏதோ ஒரு ஸ்ப்ரே விளம்பரத்துக்கு பெண்கள் துரத்துவார்களே //
ஏதோ ஒரு ஸ்பிரேயா??? ஆக்ஸ் ஸ்பிரே... ஜெனரல் நாலெட்ஜ் ஜெனரல் நாலெட்ஜ்....
கலக்கல்... அது அது அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்ங்க... இப்படி பொறாமைப்பட்டு பிரயோசனமில்லை... :)
@பொற்ஸ், நீ பாடினா அப்படி நடக்குமா இருக்கும். நான் பாடினப்போ கல்யாணவீட்டில் மேளச்சத்தம். அதான் இவருக்கு கேக்கலையாம்.இல்லாட்டி தமிழ்ப்பட ஹீரோ மாதிரி ஓடி வந்திருக்க மாட்டார்?
//நீங்க மாமிகளோட இள வயசு பசங்களோட பேச வேண்டியது தானே?// அந்த மாமிங்களுக்கு பசங்களே இருக்க மாட்டா! அப்படியே இருந்தாலும் அதுகள் வெளியூர்லேயோ வெளிநாட்டுலேயோ குப்பை கொட்டிண்டு இருக்கும்!
@அது ஒரு கனாக்காலம்- உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க!
@நாஞ்சில் - அந்த விளம்பரத்தை குறிக்க வேண்டாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா சும்மா கோடி காட்டினத்துக்கே நீ இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டுட்டியேப்பா! பிராண்டு பேர் எங்களுக்கும் தெரியும். ஃபோகஸ் ஷிஃப்ட்டு பண்ணவேண்டாம்ன்னு தான் மென்ஷன் பண்ணலை!
யோகம் பண்ணினாத்தான் இந்த மாதிரி ஆத்துக்காரர் கிடைப்பார். நாலு பேர் இருக்கிற இடத்துல மண்ணாங்கட்டி மாதிரி உக்காசுண்டு இருக்காம இப்படி கலகல-நு பேசிண்டும் சிரிச்சுண்டும் இருந்தாதானே அது விஷெஷ ஆம் மாதிரி இருக்கும்??..:)
அதெல்லாம் மாப்ஸோட சாமிங்மா... மாமிக்களுக்கே நீங்க இவ்வளவு '' ஜெ'' படறீங்களே ... கோபியர்கள் கதை தெரிஞ்சா அவ்வளவுதான் ... பாக்கட் புல் ஆப் ரோசெஸ் .... ( வழக்கம் போல் கிழி...கிழி ... )
மோகன கிருஷ்ணன் பெயரை மனமோகன கிருஷ்ணன்னு மாத்திடலாம். ஹூம், இந்த மாதிரி தாய்க்குலத்தோட பேராதரவு கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கணும்.
@தக்குடு, நாலு பேரு இருக்கும் இடமா இருந்தா நான் கண்டுக்கமாட்டேனே, அது ஏன் பர்ட்டிக்குலரா நாலு பெண்கள் இருக்கும் இடமா பார்த்து இவர் கோலாட்டம் ரிங்கா ரிங்கா எல்லாம் ஸ்டார்ட் பண்றார்? ஒய்? எந்துக்கு? எந்தினா?
@பத்மனாபன் சார்,
சார்மிங்கா? யாரு இவரா? ஹய்யோ ஹய்யோ இன்னுமா இந்த பூமி இவரை நம்பிகிட்டு இருக்கு.. பாவம்! நான் கோபியர்கள்ன்னு சொன்னது மாமிகளை தான்! என்ன தான் கிழி கிழின்னு கிழிச்சாலும் அந்த மாமி இப்போ வராளாம்ன்னு சொல்லிப்பாருங்க, ஜிப்பா -வேஷ்டி எல்லாம் போட்டுண்டு நெத்தில சந்தனம் இட்டுண்டு நல்ல பிள்ளையா கோலாட்டத்துக்கு ரெடி!
அவாள்ளாம் இந்த சைட் சொந்தமா அந்த சைட் சொந்தமான்னு கூட எனக்கு தெரியாது. அப்படியே சுத்தும் முத்தும் நோட்டம் விட்டப்போ பளிச்னு எங்கேயோ பார்த்த முகம்! அட, இவர் தான்
அவாள்ளாம் இவரோட சைட்டா இருக்கும்.தலைப்புலே முடிஞ்சி வெசுக்கத் தெரியலை இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்.
காயத்ரி ஜபம் பண்ணறார்ன்னு போதேஎனக்கு சந்தேகம் இப்போ நிவர்த்தியாயிடுத்து.
மாப்பு... எப்பவும் போல நான் உங்க பக்கம்... உங்க தேஜஸ் வரலைன்னு அக்காவுக்கு பயங்கர வ***சல்... விடுங்க விடுங்க. அதே போல அக்கா வயசான மாமாக்கள் கூட பேசினா நீங்க இப்படி எல்லாம் பதிவு போடமாட்டீங்க இல்லை? உங்க பெரிய மனசுல கொஞ்சத்தை பிய்ச்சு அக்காவுக்கு குடுங்க..
வணக்கம் மேடம்
ரொம்ப ஜாலிய எழுதிருக்கிங்க
poramai padathel
http://www.karthikthoughts.co.cc/2010/03/blog-post.html
@சேட்டை,
சரியாத்தான் இவருக்கு வீட்டுல பேர் வெச்சிருக்காங்க. நன்றி.
@TRC அவர்களே,
என்ன தான் முந்தானைல முடிஞ்சு வெச்சுண்டாலும் பாருங்க, இந்த மாமிகளை பார்க்கும்போது மட்டும் இவருடைய பறக்காவட்டித்தனத்துல அந்த முடிச்சு தானா அவிழ்ந்து இவர் வெளியே எஸ்க்கேப்பு!
@மாப்பு ஜால்ரா,
டிஸ்கி ல போடணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன். எக்காரணத்தைக்கொண்டும் உன் கருத்து பிரசுரிக்கப்படமாட்டாதுன்னு. மிஸ்டு. எனக்கு? வயத்தெரிச்சல்? அதுவும் இவர் மேல? அதென்ன மாமிகளோடேயே செண்டர் பண்ணி ரவுண்டு கட்டி பேசறது? ஏன் மாமாக்கள் இல்லையா? குழந்தைகள் இல்லையா? எத்தனை பேர் இருக்கா? இவர் பதிவு போட்டுட்டாலும் தமிழிஷ் ல 200 வோட்டு விழுந்துரும்.
@மங்குனி அமைச்சரே, வாங்க, உங்க ஐடி சூப்பர். நன்றிங்க.
@LK,உன் வலைத்தளத்துக்கு வந்தேன், பார்த்தேன். வாழ்க, வளர்க!
//அந்த மாமி பிரியும்போது இவர் 7ஜீ ரெயின்போ காலனி ரவிக்கிருஷ்ணா ரேஞ்சுக்கு கண்ணீர் விட்டார்! கஷ்டம் கஷ்டம்!//
என்ன கொடுமை இது சரவணன்:)
@குசும்பன்
வாங்க வாங்க, உங்களை என் ப்ளாகுக்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.
இவ்ளோ தூரம் பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிகள் பல!
unga pazhaya posts ellam ippathan padichindu irukkuen. haiyo ! ennala mudiyalaiye! ungaathukkarroda kopudara per mohan na. engathu kaarrukkum kopudura per mohan thaan.
intha perla thaan yetho vishayam irukkanum nnu ninaikkiren.
Regards,
T.Thalaivi.
How did I miss this post? Jooper asusual :)
ATM, quite old, May be we weren't friends then! Thanks a bunch!
ஹிஹி.. அவருமா..
Post a Comment