Pages

Friday, March 5, 2010

மனம் ஒரு குரங்கு 11

மனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால், (ஹீ ஹீ) இந்த பகுதி இடம் பெறுகிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

போனவாரம் இங்கு நல்ல மழை. அபுதாபியில் மழை வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஆனால் சுதா மன்னி ஃபோனில் பேசியபோது,  ஷார்ஜாவில் பயங்கர வெள்ளம் என்றார். இப்போது மெதுவாக வெயில்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போ இங்கு ஒரே பொடிக்காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி வானிலையில் வீட்டை பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான். எவ்வளவுதான் கதவு ஜன்னல்களை மூடினாலும் மிக நுண்ணிய மணல் துகள்கள் வீட்டுக்குள் புகுந்து விடும். சதா சர்வ காலமும் மாப்பும் விளக்குமாறும் கையுமாகத்தான் இருக்க வேண்டி இருக்கும்.


நேற்று ரொம்ப நாளைக்கப்புறம் முரூரில் இருக்கும் கார்ரெஃபோர் போய் இருந்தோம். எனக்கென்னமோ கார்ரெஃபோர் அவ்வளவாக பிடிப்பதில்லை. அவ்வப்போது ஒரு சேஞ்சுக்கு வெவ்வேறு கடைகளுக்கு போவது. என்ன தான் ரிசெஷன் இருந்தாலும் கூட்டத்துக்கு குறைவு இருப்பதில்லை. எல்லோருக்கும் பல்க் பயிங்க்(bulk buying) எப்படி சாத்தியப்படுகிறது என்று ஒவ்வொரு முறை இந்த கடைக்கு போகும்போதும் வியக்காமல் இருப்பதில்லை! ஆளுயர ஷாம்பூவை வாங்கிக்கொண்டு போனால் எனக்கெல்லாம் 2 வருடம் வரும்.(இல்லையோ பின்னே, அறுபதடி கூந்தலாச்சே!)அடுத்த வாரமே அடுத்த பாட்டில் வாங்க வந்து விடுகிறார்கள்! இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே! எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை!



போன மாதம் துவரம் பருப்பு விலை கன்னாபின்னா என்று ஏறி விட்டது! முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்டது. இதே துவரம் பருப்பு மற்ற கடைகளில் 9 என்றால் கார்ரெஃபோரில் 9.90!!! டூம்ச்!



காய்கறிகள் எல்லாம் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். அதிலும் நம்மூர் அயிட்டங்கள் எல்லாம் அவ்வளவாக கிடைக்காது. மொத்தத்தில ஐரோப்பியர்கள் தான் அதிகம் இந்த கடையை விரும்புகிறார்கள். ஏஸர் கம்பியூட்டர்ஸில் வேலை பார்த்த போது, ஒரு கஸ்டமர், இந்தக்கடையில் எலக்ட்ரானிக்ஸெல்லாம் பகல் கொள்ளை என்று கூறினார்.சேல்ஸில் கேட்ட பொழுது, மார்ஜின் அவர்கள் அப்படி வைக்கிறார்கள் என்றனர். அதனால் இங்கு வர ஒரு மோட்டிவேஷன் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் வேடிக்கை பார்த்து பொழுது போக மிக நல்ல இடமாக காட்சி அளித்தது.



சில மாதங்களாக காயின் ட்ராலி சிஸ்டம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தி டெர்மினல் என்ற படத்தில் டாம் ஹான்க்ஸ் பண்ணியது போல சில நம்மூர்க்காரர்கள் அந்த ஒரு திராம் காயினுக்காக எங்கேயோ விடப்பட்ட ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டில் போட்டு ஒரு திராம் எடுத்துக்கொள்கிரார்கள். நம் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் பட்டாணிகள் இதைவிட கெட்டிக்காரர்கள். எதற்கு கொண்டு போய் கடையில் விட வேண்டும்? என்று பேசாமல் கம்பியைப்போட்டு நிமிண்டி, அந்த ஒரு திராம் காயினை சாமர்த்தியமாக அபேஸ் செய்து விடுகிறார்கள்.



போன வாரம் ஈ மசாலாவில் இரவு 8 மணி படத்துக்கு காத்திருந்து பார்த்தபோது ஜிலேபியை பிழிந்து போட்டிருந்தார்கள். துள்ளிக்குதித்துக்கொண்டு ஹையா என்று பார்க்க உட்கார்ந்தேன். சூப்பர் குட் வழங்கும் என்று போட்டவுடன் எனக்கு பொறி தட்டி, சானலை மாற்றி இருந்தால் நான் கெட்டிக்காரி! அதான் இல்லையே... அதன் பிறகு எப்படியோ ஒரு மாதிரி குத்துமதிப்பாக தெலுங்கு எழுத்துக்களை படித்தும் விட்டேன். என்னமோ கோரிண்டாக்கு என்றிருந்தது.. ஆஹா.. கோதாவரி மாதிரி ‘கொம்ப்ப தீஸீ’ சேகர் கம்முல படமா இருக்குமோன்னு ஆசையா உட்கார்ந்தா, நம்ம டாக்குடர் ராஜசேகர் (ஓவரா)நடிச்சிருந்தார். வழக்கம்போல அண்ணா தங்கை பாசம். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஏகப்பட்ட மேக்கப்புடன் மெகாசீரியல் டைப்பில் இருந்தார்கள்.  என்னால முடியல. முதல் 15 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட லாலாலா கோரஸ்கள், கை காலை (புல்லரித்து) பிறாண்டி, ரத்தம் கொட்ட வைத்த செண்டிமெண்டு காட்சிகள்! விக்ரமன் எஸ் ஏ ராஜ்குமார் கூட்டணியா இருக்குமோ என்னமோ.. யப்பா.. கடுப்ஸ் ஆஃப் இண்டியா. இவங்கல்லாம் எப்போ திருந்துவாங்க?



அப்படியே சானலை மாத்தி சோனிக்கு போனோம். தூமகைன் என்று டைட்டில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இவர் தன் லாப்டாப்பை முறைத்துப்பார்த்துக்கொண்டே கிருபானந்த வாரியார் மாதிரி குரலை செருமிக்கொண்டு துமகைனுன்னா என்ன? மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன? தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா? வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு. அதெப்படி இன்ஸ்டண்டா இப்படி எல்லம் இவருக்கு தோணுதோ? சூப்பர்!

23 comments:

எல் கே said...

//துமகைனுன்னா என்ன? மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன? தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா? வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு.//

அப்ப நீங்க அவருக்கு தூமகேதவா????

எல் கே said...

//மனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால்//

அக்கா இதெல்லாம் உனக்கு ஓவரா இல்ல ???

/முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்ட//
ஹையா இங்க குறைஞ்சி போச்சி :த

Prathap Kumar S. said...

ஹஹஹ... கேரிபோர்ல தினமும் என்னா கூட்டம் வருது... நீங்க சொன்னாமாதிரி ரிசஷன்லாம் அவங்க பிசினசை பாதிக்கவே இல்லபோருக்கு...

தெலுங்கு படம் கமெணட் செம காமெடி...

pudugaithendral said...

டாக்டர் ராஜசேகர் படமெல்லாம்பாக்கறதில்லைன்னு அதுவும் பகலில் நாங்க முடிவு எடுத்திருக்க ராத்திரியில் பாத்து பேஸ்தடிச்சு போயிட்டீங்க போல. கோரிண்டாகு டீவில சும்மா போட்டா கூட பாக்க மாட்டோம்ல்.

அது ஒரு கனாக் காலம் said...

shampoo...6 feet !!!!!!?????;-) :-) :-)

பத்மநாபன் said...

காய்ன் ட்ராலி கான்சப்ட் புதுசால்ல இருக்கு.... அதுலேயும் நிமிண்ட ஆரம்பிச்சிட்டாங்களா? இங்க மஸ்கட்ல திடீர் திடீர்ன்னு ஆபர் போடுவார்கள் .. லோக்கல் மக்கள் தேவையோ தேவையில்லையோ அள்ளீட்டு போவாங்க .. நம்ம மக்கள் மேக்சிமம்
விண்டோ ஷாப்பிங் தான்.. ஒரு ஆள் வாங்க வந்தா பத்து பேர் கூட ....
எம்பெருமான் - கிருபானந்த வாரியார் -- தூம் தூம தூள் நல்ல பிட்டப் காமெடி ...

இளந்தென்றல் said...
This comment has been removed by the author.
Ananya Mahadevan said...

@LK,

ஓவராத்தெரியறதுக்கு தான் அப்படி எழுதுவது!

ஓ அப்போ நீங்க இருக்கறது பெங்களூரா? அறுபது ரூபாதான்னு பேசிக்கறாங்க?

என்னை தூமகேதுன்னு சொல்லச்சொல்லு பார்க்கலாம்?

@நாஞ்சில்,

காரெஃபோர் பத்தி நீ சொல்றது சரி தான்.

நிஜம்மா தான் சொல்றேன், ரொம்ப டூ மச் செண்டிமெண்ட்,ஏதோ ஒரு டுபாக்கூர் ஹீரோ, மீரா ஜாஸ்மின், டாக்குடர், அப்புறம் ஒரு மார்க்கெட் போன நடிகை! ஸப்பா.. முடியல! இன்னும் எத்தனை நாள் தான் அரைச்ச மாவையே அரைச்சுண்டு இருக்கப்போறாங்கன்னு தெரியலையே?

@தென்றல்,

தெரியாமப்போச்சு. ரொம்ப தப்புப்பண்ணிட்டோம். அவர் நடிச்ச நல்ல படங்கள் இருக்கு. ஆஹூதி ரொம்ப ஃபேமஸ். என்னமோ இப்படி மொக்கைய போடுறாரு..

@அது ஒரு கனாக்காலம்,
கொஞ்சூண்டு எக்ஸாஜெரேட் பண்ணிட்டேன். இருந்தாலும் 3 அடி பாக்குகள் ட்வின் பேக்குகளா கிடைக்கறதே அப்போ 6 அடி தானெ? ரெண்டு ஷாம்பூ வாங்கினா ஏதோ ஒரு எழவு ஃப்ரீ வேற!

@பத்மநாபன் சார்,
இங்கேயும் அநேக இந்தியர்கள் அப்படியே! நன்றிங்க!

@இளந்தென்றல்,
ஆறு மாசத்திற்கு ஒரு வாட்டி எல்லாம் தலைக்கு குளிச்சா, நான் சாகுற வரைக்கும் அந்த பாட்டில் தீராது. இங்கெல்லாம் மலையாள ஸ்டையிலில் தினமும் தலைக்குளியல் தான். குதர்க்கம் வேண்டாம்.

அண்ணாமலையான்,
இப்படியும் பின்னூட்டம் போடலாம்ன்னு உங்க கிட்டே இருந்து தான் கத்துக்கணும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே! எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை!}

ஒரு வேளை வூட்டுல இருக்கற நாய்,பூணையெல்லாம குளிப்பாட்ட உபயோகப் படுத்துவாங்களோ..

ஐரோப்பியர்களுக்கு வாங்குற சம்பளம் யூரோ வில.செலவு பண்றது திர்ஹாம்லன்ன என்ன கெட்டுப் போவுது?

நமக்கு இந்தியாவுல செய்யுற வேலைக்கு யாராவது USD 10000 கொடுத்தா நம்ம எப்படி நரி தேன் குடிச்ச மாதிரி திரிவோம்,அது மாதிரிதான்..

settaikkaran said...

மனம் ஒரு குரங்குன்னு பெயரை வச்சிட்டு கீழே ஹ்ருத்திக் ரோஷனோட படம் போட்டிருக்கீங்களே? ஏதாவது உள்குத்தா இருக்குமோன்னு பார்த்தேன். நல்ல வேளை இல்லை! ஹி...ஹி!

sriram said...

யக்கோவ், சூப்பரா இருக்கு தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மதுரை சரவணன் said...

ஷாம்பு நல்ல யோசனை. அருமை. வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஷாப்பிங்க்ல அள்ளிக்கிட்டுப்போறவங்களைப் பார்த்தா எனக்கும் ஆச்சரியமா இருக்க்கும்.. எங்க ஸ்டோர் செய்வாங்க இவ்வளத்தையும்.. :)

எல் கே said...

//ஓ அப்போ நீங்க இருக்கறது பெங்களூரா? அறுபது ரூபாதான்னு பேசிக்கறாங்க?//

இல்லை தப்பு .

Ananya Mahadevan said...

@அறிவன்,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
நாய்,பூனையெல்லாம குளிப்பாட்ட உபயோகப் படுத்துவாங்களோ - அப்படித்தான் இருக்கணும்! ஆனா இந்த ரேஞ்சுக்கு கண்டபடி வாங்குறது இங்கே இருக்கற லோக்கல்ஸ் தான். இவர்களுக்கு தான் பொருட்கள் வாங்கும் வீக்னெஸ்! சூப்பர்மார்க்கெட் என்று போர்டு பார்த்தாலே இவர்கள் புள்ளைகுட்டியெல்லாம் கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

@சேட்டை,
ஹ்ரித்திக்கை குரங்குன்னு பொருள் படும்படி பேசின உன்னை நான் வன்மையா கண்டிக்கறேன்.

@ஸ்ரீராமண்ணா,
உங்க கடைசி தங்கச்சியான என்னைப்போயி அக்கான்னு கூப்டுட்டீங்களே? என்ன கொடுமை சார் இது? எனிவே, நீங்க வந்ததே எனக்கு பெருமைதான்.

@மதுரை சரவணன்,
வாங்க, உங்க கருத்துக்கு நன்றிங்க.

@முத்துலெட்சுமி,
வாங்க, எனக்கு தெரிஞ்சு பாதி பாதி யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்றுவாங்க. அதானே, அதிகப்படி சாமான் வாங்கினா எங்க தான் வைக்கிறது? இவங்களுக்கெல்லாம் கோடவுன் இருக்குமா இருக்கும்.

@LK,
நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா..

தக்குடு said...

நாங்க எல்லாம் கடைக்கு போகும்போதே 50 ரியால்தான் கொண்டுபோவோம், so வாங்கனும்னு மனசு நினைச்சா கூட அதுக்கு மேல வாங்கமுடியாது...;)

ஸ்ரீராம். said...

எம்பெருமான் வயலூர் முருகப் பெம்மான் அருளாலே இன்று இந்த ப்ளாகைப் பார்க்க வந்தேன்..
சுவாரஸ்யமா பலவற்றையும் கலந்து எழுதி இருக்கீங்க.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{இருக்கற லோக்கல்ஸ் தான். இவர்களுக்கு தான் பொருட்கள் வாங்கும் வீக்னெஸ்! சூப்பர்மார்க்கெட் என்று போர்டு பார்த்தாலே இவர்கள் புள்ளைகுட்டியெல்லாம் கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்}
அநன்யா,(பெயருக்கு என்ன அர்த்தம்ங்க??!)
உங்க ஊர்ல மட்டும் இல்லைங்க..எல்லா வெளிநாடுகளிலும் இந்த விதமான விற்பனைகளில் அதிகம் பங்கைற்பது அந்தந்த ஊர்களின் மக்கள்தான்;ஐரோப்பியர்கள் கார்ஃபோர் சேல்களில் அம்முவார்கள்;சிங்கையில் சீனப்புத்தாண்டு சேல்களில் வாங்க வேண்டும் என்பதாற்காகவே நன்றாக இருக்கும் பல பொருட்களைத் தூக்கிப் போடும் பல சீனர்கள் இருக்கிறார்கள்.

நம்மைப் போல எக்ஸ்பாட்ஸ் எல்லா இடங்களிலும் பெரும்பாலும் வேடிக்கைதான் பார்ப்போம்! :))

எல் கே said...

namma oor big bazar mattum enna vaaluthu..

எல் கே said...

//நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா..//

sontha ooru salem ippa irukarathu chennai

Ananya Mahadevan said...

@அறிவன் ,
சாரிங்க இதுக்கு பதில் போட நேரமாயிடுச்சு. அநன்யா = (மொக்கை போடுவதில்) நிகரற்றவள், (பிளேடு போடுவதில்) யாரேடும் ஒப்பிடமுடியாதவள், (ரம்பத்தில் )தன்னிகரில்லாத தலைமகள் என்று பொருள்படும்ன்னு எங்கேயும் போடவில்லை!!!
நீங்க சொல்றது சரிதான். ஒத்துக்கறேன். இங்கெ ரவுண்ட் தி இயர் ஏதாவது சொல்லி வித்துக்கிட்டே இருப்பாய்ங்க. ஸ்கூல் குளோஸ், ஸ்கூல் ஓப்பன், ஹாலிடே, ரமதான், கிரிஸ்துமஸ், நியூ இயர், ஒண்ணும்மே கிடைக்காட்டி, பல் ஸ்பெஷல்ன்னு போட்டு, பல்பொடி, பல் பசை , டூத்பிரஷ், நாக்கு வடிக்கிற குச்சி, வாயில அடிச்சுக்கற செண்டு, பாட்டரி போட்டு இயக்கற டுத்பிரஷ்,மவுத்வாஷ், லிப் பாம் இப்படி தீம் காடலாக் போடுவாய்ங்க. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ். இதுக்கும் அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு கூட்டம் அலைமோதும்! கஷ்டம் கஷ்டம்!

LK,
Big Bazar பார்த்தப்போ கார்ரெஃபோர் தான் நினைவுக்கு வந்தது! அட்லீஸ்ட் நம்மூர்ல 4 வாட்டி பார்த்துட்டு வாங்குவாங்க! இங்கெ 3 ட்ராலி எடுத்துண்டு போய், அப்படியே ராக் ல இருக்கற சாமானெல்லாம் இழுத்து போட்டுண்டு போயிண்டே இருப்பாங்க! க்ளீன் ஸ்வீப்பாக்கும். :P

Ananya Mahadevan said...

Lk,
ஊர்த்தகவலுக்கு நன்றிப்பா!

தெய்வசுகந்தி said...

//துமகைனுன்னா என்ன? மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன? தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா? வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு.//


ha ha ha !!!

Related Posts with Thumbnails