Pages

Tuesday, March 16, 2010

சில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்

டிஸ்கி: இந்த போஸ்டு எழுத ஐடியா கொடுத்த அன்புத்தம்பி நாஞ்சில் பிரதாப்புக்கு சமர்ப்பணம்.

வெட்டி: ”ஹலோ ஜஹாலக்ஷ்மியாங்க?” ஸ்லர்க்(ஜொள்)

ஜஹா: ”ஆமாங்க, சொல்லுங்க யார் பேஸ்றீங்க”

வெட்டி: ”நான் தாங்க வெட்டிச்சாமி பேசறேன், சோம்பேறிபுரத்துல இருந்துங்க”

ஜஹா: ”என்ன பன்றீங்க(இது எழுத்துப்பிழை அல்ல, அவர்களின் நுனிநாக்குத்தமிழ்) வெட்டிச்சாமி?”

வெட்டி: ”நான் வெட்டியாத்தான் இருக்கேனுங்க. ஸ்லர்க், இப்போ உங்க கிட்டே பேசிகிட்டு இருக்கேங்க” ஸ்லர்க்.
ஜஹா: ”ஹா ஹா ஹா.. ”

வெட்டி: ஸ்லர்க் ஸ்லர்க், ”ஹே ஹே..நீங்க இன்னிக்கி ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” (என்னான்னா ஜோக் சொல்லிட்டாராம்)

ஜஹா: (இப்போ இவங்களும்) ஸ்லர்க் ஸ்லர்க் ”ரொம்ப தாங்க்ஸ்ங்க

வெட்டி: ”இந்த இயர்ரிங் உங்களுக்கு ரொம்ப சூட் ஆகுதுங்க

ஜஹா:”ஒ, ரொம்ப தாங்கஸ்ங்க

வெட்டி:”இந்த பேங்கிள் எங்க ரங்கனாதன் ஸ்ட்ரீட்லேயா வாங்கினீங்க?”

ஜஹா: ” இல்லேங்க, புரசைவாக்கத்துல. ”

வெட்டி:”ரொம்ப அருமையா இருக்கு உங்க கைக்கு. (ஸ்லர்க் ஸ்லர்க்)

ஒவரா ஜொள் விட்டதுல எங்க லாண்ட் லைன் ஃபோன் ரிசீவர் ஈரமாயிடுச்சு. நான் கார்டுலெஸ் எடுத்துக்கறேன். ப்ளீஸ் வெயிட்.

ஹலோ, ஹான், என் தம்பி ஜொள்ளணும்ங்றான், ச்சே ச்சே, இல்லே, பேசணும்ங்கிறான் மேடம். ”

ஜஹா: ”சரி குடுங்க”


வெ.த:”ஹலோ ஜஹாவா.. எப்படி இருக்கீங்க?”

ஜஹா”ஆமாங்க, சொல்லுங்க உங்க பேரென்னங்க?”


வெ.த:”நான் சாப்பிட்டாச்சு மேடம், இப்போத்தான் இட்லி சாப்டேன், நீங்க என்ன சாப்பிட்டீங்க?”

“!!!!, அதில்லீங்க, உங்க பேரென்னங்க?”வெ.த:”என் பேரு வெட்டித்தம்பிங்க. நானும் வெட்டியாதான் இருக்கேங்க. எங்களுக்கு உங்களை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ங்க”.

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்லர்க்)

ஜஹா:”சரி வெட்டித்தம்பி, உங்க டீவீ வால்யூம் கம்மி பன்றீங்களா?”வெ.த::”கேக்லைங்க.. ஹலோ”

ஜஹா:சற்று உரக்க, “உங்க டீவீ வால்யூம், கம்மி பன்றீங்களா?”வெ.த::”கேக்கலைங்க.. என்னாங்க சொல்றீங்க? ஹலோ”

ஜஹா:இன்னும் உரக்க,”உங்க டீவீ சவுண்டு கம்மி பன்னுங்க”வெ.த:: ”எங்க வீட்டுல டீவீயே இல்லைங்க எங்கேந்து வால்யூம் கம்மி பண்றது?”

ஜஹா:@#$@!#$!@#$@!#$@!#$@!#$@#$@#$@#$

(கடைசி வரி மட்டும் விவேக்கின் ஒரு ஜோக்கிலிருந்து எடுத்திருந்தாலும், பாக்கி எல்லாம் நான் பார்த்த நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டவையே)

ஹப்பா, கான்வர்ஸேஷன் முடிஞ்சிருச்சு. இப்போ மைக் எனக்குத்தான்..ஹய்யா ஜாலி!

காதில் ராட்சத வளையங்கள் போட்டுக்கொண்டு, கிட்ஸ் செக்‌ஷனில் வாங்கிய துணிமணி அணிந்து, இடமும் வலமும் முன்னும் பின்னும் ஆடிய படி கெக்கே பிக்கே என்று பிதற்றும் வீடியோ ஜாக்கிகள்(ஹய்யயே, ஜட்டி இல்லீங்க, தொகுப்பாளர்களை சொல்றேன்) ஒரு புறமென்றால், இன்னொறுபுறம் வேலையில்லாமல் அல்லது வேலை இருந்தாலும் அதையெல்லாம் விட்டு இவர்களுக்கு ஃபோன் செய்ய தேவுடு காக்கும் மக்கள்ஸ் இன்னொறு பக்கம். பெண்கள் ஆண்கள் இருபாலாரும் இதில் அடக்கம்.இந்த நிகழ்ச்சி நடத்துவது மிகவும் ஒரு போரான விஷயம். பின்னே ஃபோன் செய்பவர்களிடம் எல்லாம் ஒரே கேள்வியைத்தான் கேட்கணும். என்ன பண்றீங்க? சாப்டீங்களா? காலைக்கடன்கள்(!!!!) முடிச்சாச்சா இப்படி கேக்கணும். இது இல்லேன்னு வெச்சுக்கோங்க, ஏதாவது ஒரு பாடாவதி கான்செப்டு வெச்சிருப்பாங்க. மடத்தனமான ஒரு சினாரியோ குடுப்பாங்க. இந்த முகவுரை எல்லாம் சுருக்கமா முடிச்சுண்டு அதுக்கு தாவிடுவாங்க!

அவர்கள் தரும் சினாரியோ மிகவும் பரிதாபமா இருக்கும். நீங்க சமயல் பண்ணும்போது உப்பு குறைந்து விடுகிறது. உங்கள் மனைவி அவசரத்திற்கு எடுப்பது பூரிக்கட்டையா விளக்குமாறா என்ற ரேஞ்சில் போகும்! இதையும் பொறுமையாக கேட்டு கணவன்மார்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!

அதுல பாருங்க பெண்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தால், ஆண் காலர்ஸ் முன்னெச்சரிக்கையாக கழுத்தில் ஒரு பக்கேட் அணிவது உத்தமம். இல்லாவிடில் கீழே அண்டா வைத்துக்கொள்ளலாம்.(சில நிமிடங்களிலேயே அந்த ஆள் அழைத்திருந்த) கொசப்பேட்டையில் கடும் வெள்ளம் என்று ஸ்க்ரால் நியூஸூம் போட்டு விடுவார்கள்.

சில ஆண் பிருஹஸ்பதி காலர்கள், பெண்கள் மட்டும் பேசும்  நிகழ்ச்சியாக இருந்தாலும் குரலை மாத்தி பேசும் அளவுக்கு தொகுப்பாளினி மீது மோகம் கொண்டு இருக்கும்.

பெண்களுக்கான ஸ்பெஷல் நிகழ்ச்சி என்றால், கேட்கவே வேண்டாம், அவர்கள் வீட்டுக்குறிப்புடன் தான் ஃபோன் செய்யணுமாம். எனக்கு குறிப்பெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்கன்னு ஒரு பெண் கதறக்கதற, இந்த தொகுப்பாளினி விடாமல் குறிப்பு கேட்டு கடைசியில் அந்தப்பெண், முகம் பளபளப்பாக இருக்க, கடுகு மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை சம அளவில் எடுத்து பொடித்து, காலை மாலை இருவேளை ,முகத்தில் பூசி வர, மாசு மருக்கள் மறையும், முகம் பொலிவு பெறும்ன்னு சொல்லி விட்டு அப்பீட் ஆவார். இந்த மாதிரி டுபாக்கூர் குறிப்பெல்லாம் என்னிக்காவது அந்த தொகுப்பாளினி ட்ரை பண்ணி இருப்பாரா? இல்லை நான் கேக்கறேன், நம்ம பார்வையாளர்களோ மிகப்பெரிய தில்லாலங்கடிகள். இதில் ஏதாவது ஒன்றை முயற்சி பண்ணி பார்த்தா, அதன் கொடூரமான விளைவுகளுக்கு பொறுப்பேற்பது யாருங்க? குறிப்பு தெரியாதுன்னு சொன்ன காலரா, இல்லே, குறிப்பு சொல்லியே ஆகணும்னு வற்புறுத்திய அந்த தொகுப்பாளினியா? இல்லே நிகழ்ச்சி தயாரிக்கும் சானலா? இல்லே அந்த ப்ரொட்யூசரா? நான் கேட்கிறேன் இந்த அராஜகத்துக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா?இந்த நிகழ்ச்சியில் கேட்ட இன்னும் சில வீட்டுக்குறிப்புகள்:


உதடுகள் சிவப்பாக இருக்க, பிளேடால் உதட்டை கீறவும், ரத்தம் பீறிடும், உதடுகள் தானாக சிவப்பாக மாறும்..

வீட்டில் இருக்கும் துர்திருஷ்டி அகல, வீட்டு வாசலில் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.

வீடு துடைக்கும் தண்ணீரில் கொஞ்சம் ரோஸ் எசன்ஸ் விட்டு துடைத்தால் வீடே ரோஜாப்பு மணமாக இருக்கும்

டூத்பேஸ்டால் கக்கூஸ் கழுவ, கிருமிகள் மாயும். கக்கூஸும் கண்ணாடி போல் மின்னும்!

மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் பண்ணச்சொல்லுவாய்ங்க!

ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல!

சில காலர்ஸ் பாட்டு பாடுறேன்னு சொல்லி .. ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சுக்கு பாடி டார்ச்சர் பண்ணுவார்கள். சிரிப்பை அடக்கிக்கொள்ள தொகுப்பாளர்கள் படும் அவஸ்த்தையை சொல்லி மாளாது!

போன போஸ்டுல கமெண்டி இருந்த அனுஷா சித்ரா சொன்னாப்புல ஒவ்வொரு காலரும் ஒவ்வொரு விதம்! சில காலர்ஸ் ரெகுலரா கூப்பிடுவாங்க. வீ. ஜேயை பயங்கரமா சொந்தம் பண்ணிப்பாங்க.  இந்த தொகுப்பாளினி நினைவு வெச்சுக்காட்டி கோவிச்சுப்பாங்க. யாரும் கால் பண்ணாட்டி என்ன பண்றதுன்னு டீவீக்காரங்க, சில காலர்ஸை ஏற்கனவே செட் பண்ணி வெச்சு இருப்பாங்களோன்னு தோணும் அளவுக்கு இருக்கும் சில காலர்ஸ் தோரணை. ஏய், அந்த பாட்டு போடு என்று அதிகாரம் தூள் பறக்கும்.

பிரபலங்களுடன் வரும் நிகழ்ச்சிகளில் அதெப்படீன்னே தெரியாது சரியா அந்த பிரபலத்தோட பொண்டாட்டிக்கோ, புருஷனுக்கோ, அம்மா, நைனாவுக்கோ லைன் ஆப்டுடும். நாமெல்லாம் இங்கே ட்ரை பண்ணினா, எங்கேஜ்டா இருக்கும். அவங்களும் குரலை மாத்தி பேசுவாங்க. இந்த பிரபலங்களுக்கும் தெரியவே தெரியாது. தமிழ்ப்படத்துல சிவா கன்னத்துல மச்சம் வெச்சுண்டா மத்தவளுங்கு இவர் யாருன்னே அடையாளம் தெரியாதே அதே மாதிரி!


இதென்னங்க டெடிக்கேட் பண்ணும் கலாச்சாரம்? யார் கண்டு பிடிச்சு இருப்பா? இந்த பாட்டு என் ஃப்ரெண்டுக்கு டெடிகேட் பண்றேன்னு ஒரு பிரஹஸ்பதி சொல்லும். அதைப்பிடிச்சு, டாய், உண்மைய சொல்லு, டெடிக்கேட்ன்னா என்ன அர்த்தம்ன்னு கேட்டு பாருங்க, அது பேந்த பேந்த முழிக்கும்!


இருக்கறதுலேயே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நாராசமா இருக்கறது காதலர்களுக்காக வரும் பாட்டு நிகழ்ச்சி.. ரொம்ப கொடுமையா இருக்கும். அந்த கொடுமையை விவரிக்க என்கிட்ட வார்த்தைகள் இல்லாததால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

பி.கு:-உனக்கெப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு இருக்கு, அப்டீன்னா நீயும் தானே இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து இருக்கேன்னு நீங்க கேட்கலாம். எனக்கு அப்போ தனிமை, பெங்களூரு வாசம், வேற சானல்கள் ல மெகா சீரியல் பிடுங்கல், அதான் இதில் வரும் பாடல்களுக்கோசம் இந்த கொடுமைகளை எல்லாம் சஹித்துக்கொண்டு இருந்தேன். இல்லாட்டி அன்னிக்கே ஒரு போஸ்டு போட்டு இருப்பேனாக்கும்.

55 comments:

ambi said...

வடை எனக்கு தான்..?

ambi said...

எனக்கு பிடித்த தொகுப்பளினி மஹாலட்சுமி படம் போட்டமைக்கு நன்றி.

ஹேமா சின்கா படமும் போட்டு இருக்கலாம். :))

ambi said...

உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருங்குங்கன்னு பெப்சி உமா காலத்துல ஆரம்பிச்சது.. இன்னும் போயிட்டு இருக்கு.

நல்ல அவதானிப்பு.

ஸ்ரீராம். said...

ஆரம்ப காலங்களில் பேசி ரம்பம் போடாமல் பாடல்கள் கேட்ட நாட்கள்...ம்....ஹூம்....

Maheshwaran said...

அக்கா.... ’லவ்’ங்குற வார்த்தைக்கப்புறம் ஆங்கிலத்துல அதிகமா சீரழிக்கப்பட்டது - ’டெடிகேஷன்’ங்குற வார்த்தை இவங்ககிட்டே மாட்டிகிட்டு மதிப்பிழந்து. டெட்கேஷன் இல்லைன்னா என்னவோ கொலைக்குத்தம் போல “டெகிடேஷன் இல்லையா?”ன்னுவாளுங்க... எனக்கு பாட்டு பிடிக்குது, நான் கேக்குறேன்.. இதிலே ஏன் அடுத்தவனை/ளை இழுக்கனும்னு தோணும்.

இன்னும் கொடுமை என்னான்னா - இவங்களுக்குன்னு ஒரு 4-5 ரெகுலர் காலர்ஸ்.. ‘லைவ்’ல கெக்கே பெக்கேன்னு ஐஸ்பாரியிலே விளையாடுறமாதிரி - ”ஹை கண்டுபுடிச்சிட்டேனே..”ன்னு வழிசல்... முடியலைடா சாமி..

அதனினும் கொடுமை எல்லா தென்னிந்திய பாடல் சேனல்களிலும் இதே கூத்து தான்..

இசையருவி திவ்யா, சூர்யா டிவியிலே “லவ் & லாஸ்ட்” நிகழ்ச்சியிலே வரும் தொகுப்பாளன் ஆகிய இருவரை தவிர மற்ற எல்லோருமே தத்தம் மொழிகளை கற்பழிக்கும் மடச்சாம்பிராணிகள்...

தி. ரா. ச.(T.R.C.) said...

அதவிட வயித்தெரிச்சல் காதலர் தினத்துக்கு உங்க காதலிக்கு என்ன பரிசு கொடுத்தீங்கன்னு அம்மணி கேட்ட கேள்விக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் ராகுல் பதில் சொல்லுவானே அந்த கண்றாவியை விட்டு விட எப்படி மனம் வந்தது.

அண்ணாமலையான் said...

அழகிய இளம் தொகுப்பாளினிகள பாத்து பொறாமை?

சேட்டைக்காரன் said...

இது வரைக்கும் யாரும் சொல்லாத சில யோசனைகளை இங்கே சொல்லியிருக்கீங்க! எவனாவது பார்த்திட்டு உண்மையிலேயே அதை டி.வியிலே காண்பிச்சா, உங்களைத் தான் குத்தம் சொல்லுவாங்க! ஆமா! :-)))

Madumitha said...

ச்சும்மா அதிருது.

நாஞ்சில் பிரதாப் said...

//அழகிய இளம் தொகுப்பாளினிகள பாத்து பொறாமை?//

அடடா இதான் மேட்டரா... நானும் என்னடா இவ்ளோ மெர்சலாகுறாங்களேன்னு பார்த்தேன்...

நீங்க சொன்னதை வச்சு பார்க்கும்போது இவ்ளோ மேட்டரு ஆராயச்சி பண்ணிருக்கீங்கன்னா நீங்களும் கால் பண்ணி ஏதாச்சும் டிப்ஸ் கொடுத்த மாதிரியே இருக்கு... இல்லன்ன கால்போட்டு லைன் கிடைக்காத கடுப்புல சொல்றது மாதிரி இருக்கு... ஆனா உண்மையிலேயே இதுஒரு வெட்டி நிகழ்ச்சிதான்... இந்தபக்கமே போறது கிடையாது..உவ்வே..

பத்மநாபன் said...

முதல்ல ஸ்லர்க் ஸ்லர்க் புரியல ...பக்கட், அண்டாவா மாறும்பொழுது தான் புரிந்தது ... ஆனாலும் இது ஓவர்ன்னு டிவி நேயர் சொம்பர் சங்கத்திலிரிந்து நோட்டிஸ் வரப்போகுது பாருங்க .. எந்த இறுக்கத்தையும் தளர்த்தி மனம் விட்டு சிரிக்கவைக்கும் பதிப்பு .. கீப் இட் அப்பு ...

தக்குடுபாண்டி said...

என்னோட தங்கத்தலைவி ஹேமாசின்ஹா போட்டோ போடாததை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்...:) ஒரு தடவை அந்த பிகர் திருக்குறள் ஒன்னை ஆரம்பிச்சு, அதை முடிக்க முடியாம திண்டாடியது இன்னும் மறக்க முடியாது...:)

ஜிகர்தண்டா Karthik said...

தனியா இருக்கும் போது இந்த நிகழ்ச்சியா... உங்க மன தைரியத்த பாராட்டுகிறேன்.எங்க அப்பா.. தனியா இருக்கும்போது சன் மீசிக் பார்த்தால்
புள்ள பயந்துரும் அப்படினு.. கேபிள் கனெக்ஷன் கட் பண்ணீட்டார்

LK said...

//உதடுகள் சிவப்பாக இருக்க, பிளேடால் உதட்டை கீறவும், ரத்தம் பீறிடும், உதடுகள் தானாக சிவப்பாக மாறும்.. //

i like this idea

SurveySan said...

:) இந்த பாட்டு நிகழ்ச்சிகளுக்கு சில ப்ரஹஸ்பதிகள், SMS வேர அனுப்புவாங்களே. பெரும் கொடுமை அது.

ஆனா, எனக்கு பெப்ஸி உமா புடிக்குங்க. இப்பவும் இருக்காகளா? (ஸ்லர்க்) :)

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

சூப்பர் காமெடி அலசல்...

அதுவும் அந்த சமையல், அழகு குறிப்புகள் பற்றிய உங்கள் குறிப்பு பலே ரகம்...

குறிப்பா சொல்லணும்னா இது :

//வீட்டில் இருக்கும் துர்திருஷ்டி அகல, வீட்டு வாசலில் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.//

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரகம்ம்ம்ம்ம்ம்...

முதன் முதலாக உங்கள் வலைக்கு வருகிறேன்... இனி தொடர்ந்து வருவேன்... நீங்களும் நேரமிருப்பின் வரலாமே...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. முக அழகு குறிப்புகள்தான் டாப்பு. இதில் சில் பிராடுகளும் நடக்குது. ஒரு போனும் வருலைன்னா, இவங்களே ஒரு போனைப் போட்டுத் தொகுப்பாளி கிட்ட என்னைத் தெரியுதான்னு கேப்பாங்க. இந்தம்மாவும் என்னமே ரொம்ப நல்லா தெரிஞ்ச மாதிரி ஒரு பில்டப்பு கொடுத்து கடலை போடுவாங்க. இது எல்லாம் அவங்களே பண்ற நாடகம். நல்ல பதிவு .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் நண்பரே !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

அநன்யா மஹாதேவன் said...

@அம்பி,
@ தக்குடு,
@ அண்ணாமலையான்,
@நாஞ்சில்,

தயவு செய்து பக்கெட் உபயோகப்படுத்தவும். என் ப்ளாக் எல்லாம் வழுக்குதுல்ல?

அநன்யா மஹாதேவன் said...

@அம்பி,
என் ப்ளாக்ல எல்லாம் வடைக்கி சண்டை போடப்டாது, அதெல்லாம் டுபுக்கு ப்ளாக்ல பொற்ஸ் கூட வெச்சுக்கோங்க. நாட் ஹியர்! :P
ஆட்டோகிராஃபுக்கு நன்றிங்க! அடிக்கடி வாங்க..

@ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. என்னைக்கேட்டா எதுக்குங்க தொகுப்பாளினி? நேரா பாட்டை போட்டுலலாம்ல?

@மஹேஷ்,
ரொம்ப சூடா இருக்கியே? பயங்கரமா சன் மீசிக் பார்த்து நொந்தகேஷ்? ஆமோதிக்கிறேன்.

@தி.ரா.ச அவர்களே,
இந்த கண்றாவி பத்தி என்னால எழுதறதுக்கு வார்த்தை கிடைக்கலன்னு சொன்னேனே.

@அண்ணாமலையான்,
க்ரெய்க் படமும் போட்டு இருக்கேனே. அதுக்கென்ன சொல்றீங்க?

@சேட்டைக்காரன்,
வேலிட் பாயிண்ட், ஆபத்துக்கு பாவமில்லை விரைவில் இன்னொரு டிஸ்கி போடப்படும்.

மதுமிதா அவர்களே,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

@நாஞ்சில் தம்பி,
ஏண்டாப்பா, பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டி விடுறே?‘உவ்வே’, இந்த வார்த்தை என் எழுத்தின் ஆதங்கத்தை கூட்டி இருக்குமே? ஜஸ்டு மிஸ்.

@பத்மநாபன் சார்,
சொம்பர சங்கத்துல எல்லாரும் சன் மீசிக் பாக்குறாங்களாம். அவங்களை டிஸ்டப் செய்ய வேண்டாமே ப்ளீஸ்! ரொம்ப நன்றி சார்.

@தக்குடு,
இவங்க குரூப் இதே மாதிரி நிறைய சொதப்பும். அதெல்லாம் கண்டுக்கப்டாது!

@ஜிகர்,
உங்க நைனா, தீ.........ர்க்கதரிசி! அவருக்கு என் வாழ்த்துக்கள்.

@அன்புள்ள எல்கே,
முயற்சி செய்து பார்த்துவிட்டு கூறவும்.

@சர்வே,
இதுக்கு முந்தி தான் அதை பத்தி போஸ்டு போட்டு இருக்கேன். அடிக்கடி என் ப்ளாக் பக்கம் வராதைக்கி இருந்தா இப்படித்தான்.

@கோபி,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும், ரொம்ப நன்றிங்க, உங்கள் சைட்டில் நான் ஃபாலோயர் ஆயாச்சு.

@பித்தனின் வாக்கு,
எனக்கும் பலசமயம் எல்லாமே டிராமா மாதிரி தோணி இருக்கு! நீங்க சொல்றது சரிதான்.

@பனித்துளி சங்கர்,
உங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே! உங்கள் ஐடியை சூழ்ந்துள்ள எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் மிகவும் நன்றாக இருக்கின்றன!

Porkodi (பொற்கொடி) said...

rotfl!!! ananya, apdiye naan pulambina vishayangal thaan ellam!!

thirupi india pogum podhu, channel mute panitu thoguppalinigalai oru 5 mins paarunga - vayiru vali pinni eduthurum! :))

முகுந்த் அம்மா said...

பயங்கர கலக்கல் போங்க. வெட்டிதனமா பாட்டு உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி நடத்துறவங்க அப்புறம் அதனை வெட்டியா போன் பண்ணி கேட்கறவங்க எல்லாரையும் வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கீங்க. சூப்பர்ங்க.

ஸ்ரீராம். said...

@ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. என்னைக்கேட்டா எதுக்குங்க தொகுப்பாளினி? நேரா பாட்டை போட்டுலலாம்ல?//

இது என் முதல் வருகை அல்ல....! சென்ற பதிவிலேயே எனக்கு பதில் சொல்லி உள்ளீர்கள் என்றாலும் ஸ்ரீராம் அண்ணா அடைமொழியில் பாஸ்டன் குழப்பமோ என்று எண்ணினேன்..சரியாய்ப் போயிற்று..!

அநன்யா மஹாதேவன் said...

@பொற்ஸ்,
வருகைக்கு நன்றிம்மா, ம்யூட் பண்ணிட்டு பார்த்தா, இவங்க கெக்கே பிக்கேன்னு 360 டிகிரி ஊஞ்சல் ஆடுறது தானே தெரியும்? அதை பார்க்கறதுக்கு பதிலா, டீவீ ஆஃப் பண்ணிடலாமே?

@முகுந்தம்மா,
மறுபடியும் வந்திருக்கீங்க, ரொம்ப மகிழ்ச்சிங்க.

@ ஸ்ரீராம் (அண்ணா)
ஹீ ஹீ, அப்போ நீங்க அவரில்லையா? பாஸ்டன் அண்ணான்னு தான் நினைச்சேன். சாரி மன்னிச்சுக்கோங்க, கூட பிறக்காட்டி என்ன? அண்ணான்னு கூப்பிட ஒரு சான்ஸ் தான் எனக்கு வேணும். பத்து அண்ணா, என்ன சொல்றீங்க? :)

அப்பாவி தங்கமணி said...

இனிமே உங்க பதிவ படிக்கறவங்களுக்கு ஒரு வயத்துவலி மாத்திரையும் சேத்து குடுத்துடுங்க....சிரிச்சு சிரிச்சு முடியலைடா சாமி... அந்த உதடு செவக்கரதுக்கு ஒரு மேட்டர் சொன்னீங்களே...கஷ்டம்டா சாமி...கலி முத்திடுத்து...வேற என்ன சொல்றது?. சூப்பர்

sriram said...

சூப்பர் அனன்யா, செம காமடியா சொல்லி இருக்கீங்க, வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

//வருகைக்கு நன்றிம்மா//என்னாது இது?

ம்யூட் பண்ணிட்டு அதுங்களை பாத்தா சத்தியமா ரொம்ப காமெடியா இருக்கும்! அதுக்கு அப்புறம் பாட்டு வரும் போது வால்யூம் வெச்சிடணும் ஆமா.

புது கலரெல்லாம் போட்டுருக்கீக.. கலக்குங்கோ!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன வயசுல பாட்டு சேனலைப் போட்டுவிட்டு கேட்டதெல்லாம் கனவா ஆகிடுச்சு..இப்பல்லாம் பாட்டு சேனலைப் போட்டுவிட்டுட்டு அங்க் இங்க நகரமுடியாது..கேவலமாகிடும் அதனால் பாட்டு சேன்லே போடறதில..:(

Priya said...

கலக்கல் !!!

கிருஷ்குமார் said...

சில காலர்ஸ் பாட்டு பாடுறேன்னு சொல்லி .. ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சுக்கு பாடி டார்ச்சர் பண்ணுவார்கள். சிரிப்பை அடக்கிக்கொள்ள தொகுப்பாளர்கள் படும் அவஸ்த்தையை சொல்லி மாளாது!


:)))))))

அநன்யா மஹாதேவன் said...

@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான் அசந்து போயிட்டேன் போங்க. ஜூப்பரு. உங்கபின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

@ஸ்ரீராம் அண்ணா,
நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணா கிட்டே பேசிண்டு இருக்கேன் பாருங்க.. ஹீ ஹீ. ஒரே கன்பீஸன்! ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

@பொற்கொடி,
வொய் பீலிங்கி? பேச்சுவாக்குல சொன்ன அம்மா அது. நான் ஏதோ பூக்காரம்மான்னு சொல்லிட்ட மாதிரின்னா ரீயாக்‌ஷன் குடுக்கறே?
அப்படியாவது ம்யூட் பண்ணி பார்க்கணுமா?
டாங்க்ஸுப்பா.. நான் இப்போ கலர் பரிசோதனை எல்லாம் பண்ணிண்டு இருக்கேன்.

@முத்துலெட்சுமி அக்கா,
ரொம்பச்சரி. முன்னாடி பேசறவங்களும் சஹிக்கலை, அடுத்து போடுற பாட்டும் கேவலமா இருக்கு.

@ப்ரியா,
ரொம்ப நன்றி!

@கிருஷ்குமார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி!

அநன்யா மஹாதேவன் said...

@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான் அசந்து போயிட்டேன் போங்க. ஜூப்பரு. உங்கபின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

@ஸ்ரீராம் அண்ணா,
நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணா கிட்டே பேசிண்டு இருக்கேன் பாருங்க.. ஹீ ஹீ. ஒரே கன்பீஸன்! ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

@பொற்கொடி,
வொய் பீலிங்கி? பேச்சுவாக்குல சொன்ன அம்மா அது. நான் ஏதோ பூக்காரம்மான்னு சொல்லிட்ட மாதிரின்னா ரீயாக்‌ஷன் குடுக்கறே?
அப்படியாவது ம்யூட் பண்ணி பார்க்கணுமா?
டாங்க்ஸுப்பா.. நான் இப்போ கலர் பரிசோதனை எல்லாம் பண்ணிண்டு இருக்கேன்.

@முத்துலெட்சுமி அக்கா,
ரொம்பச்சரி. முன்னாடி பேசறவங்களும் சஹிக்கலை, அடுத்து போடுற பாட்டும் கேவலமா இருக்கு.

@ப்ரியா,
ரொம்ப நன்றி!

@கிருஷ்குமார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி!

அநன்யா மஹாதேவன் said...

@அப்பாவி தங்கமணி,
வாங்க, உங்க ஐடியைப்பார்த்து நான் அசந்து போயிட்டேன் போங்க. ஜூப்பரு. உங்கபின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

@ஸ்ரீராம் அண்ணா,
நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணா கிட்டே பேசிண்டு இருக்கேன் பாருங்க.. ஹீ ஹீ. ஒரே கன்பீஸன்! ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

@பொற்கொடி,
வொய் பீலிங்கி? பேச்சுவாக்குல சொன்ன அம்மா அது. நான் ஏதோ பூக்காரம்மான்னு சொல்லிட்ட மாதிரின்னா ரீயாக்‌ஷன் குடுக்கறே?
அப்படியாவது ம்யூட் பண்ணி பார்க்கணுமா?
டாங்க்ஸுப்பா.. நான் இப்போ கலர் பரிசோதனை எல்லாம் பண்ணிண்டு இருக்கேன்.

@முத்துலெட்சுமி அக்கா,
ரொம்பச்சரி. முன்னாடி பேசறவங்களும் சஹிக்கலை, அடுத்து போடுற பாட்டும் கேவலமா இருக்கு.

@ப்ரியா,
ரொம்ப நன்றி!

@கிருஷ்குமார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி!

தக்குடுபாண்டி said...

பாஸ்டன் அண்ணாச்சினா அவர்தான் முத்திரைமோதிரம் மாதிரி 'என்றும் அன்புடன்'போடுவாரே!!!!!...:)

Porkodi (பொற்கொடி) said...

//பாஸ்டன் அண்ணாச்சினா அவர்தான் முத்திரைமோதிரம் மாதிரி 'என்றும் அன்புடன்'போடுவாரே!!!!!...:)//

avar anboda irukar, anbudan podarar. neenga vena "endrum vambudan" nu podungalen thakkudu? ;)

Porkodi (பொற்கொடி) said...

ada raama! thaan podra reply commentaye 3 dadavai repeat pottu ellam comment count ethikanuma? :P idhuku en blogla naane vadaiya vangra technique thevalaiye? :D

naan "amma"ku solala, "nandri"ku sonnen.

Maheshwaran said...

அக்கா... அப்படியே இந்த பாடாவதி மெகா சீரியல்கள் பத்தியும் ஒரு பதிவு போட்டா "Trilogy" ஆயிடுமே? ஆனா அதுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு என்னால சொல்லமுடியலை ஏன்னா நம்ம ஆண் சிகாமணிகளும் இப்போ பொம்பளைங்களுக்கு சமமா வேஷ்டியிலே மூக்கை சிந்த ஆரம்பிச்சுட்டாங்க....

அநன்யா மஹாதேவன் said...

@தக்குடு,
நான் இனிமே இந்த பாயிண்டை நோட் பண்ணிக்கறேன். குட் ஆப்ஸர்வேஷன்.

@பொற்ஸ்,
ஏதோ டெக்கினிக்கள் பால்ட்டு மா... நான் ஒரு தபா தான் க்ளிக்கினேன் அது ஹேங் ஆயிடுத்து. ஒன்யும் பிரீலம்மே.. அக்கான்.

@மெகாஷ், சாரி, மஹேஷ்,
நான் பார்க்காதது பற்றி எப்படி எழுதறது? சுத்தமா ஐடியா இல்லையே... ஒரு எப்பிசோடுகூட பார்த்ததில்லை! ஏற்கனவே இந்த கண்றாவிகளைப்பற்றி எழுதி, என் ப்ளாக் ரொம்ப அசுத்தம் ஆயிடுத்து. இனி கிளீனிங்கி!நோ மூக்குறிஞ்சிங்கி!

பித்தனின் வாக்கு said...

// என்னோட தங்கத்தலைவி ஹேமாசின்ஹா போட்டோ போடாததை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்...: //

ரீப்ப்பிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

தக்குடுபாண்டி said...

//ரீப்ப்பிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்// ada ungalukkum pudikkumaa??? very gud...:)

sriram said...

//avar anboda irukar, anbudan podarar. neenga vena "endrum vambudan" nu podungalen thakkudu? ;)//

கேடி எப்படி இப்படியெல்லாம்???
உங்க அன்புக்கு நன்றி..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. //

ஏம்மா அநன்யா, ஏதோ தப்பா சொல்லிட்ட, அத ஒத்துக்காம எதுக்கு இந்த சால்ஜாப்பு, நான்னு நெனச்சிருந்தா முதல் வருகைக்கும் கருத்துக்கும்னு சொல்லியிருப்பியா??

எப்படி பாயிண்ட பிடிச்சேன் பாத்தியா?
கேடியோட கதையை படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நானும் டிடெக்டிவ் மாதிரி ஆகிட்டேன் ....

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அநன்யா மஹாதேவன் said...

இந்த கட்டுரைக்கு வோட்டு போட்ட கீழ்க்கண்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
bsr
settaikkaran
ashok92
ganpath
jollyjegan
inbadurai
urvivek
easylife
chuttiyaar
hihi12
annamalaiyaan
eroarun
PADMANABAN
gowtham
mohamedFeros
chanthru
mohanpuduvai
tamilsabari

Madhavan said...

//மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் பண்ணச்சொல்லுவாய்ங்க!
பண்ணச்சொல்லுவாய்ங்க!//

HA.. HA.. HAAAAAA...

அநன்யா மஹாதேவன் said...

@பித்தனின் வாக்கு,
அவசியம் வாளி உபயோகிக்கவும். வாளியின் பிடியை மறக்காமல் கழுத்தில் போட்டுக்கொள்ளவும்.

@ஸ்ரீராமண்ணா,
ஒத்துக்குர்றேன், நீங்க டிடக்டிவ் ஸ்ரீராம்ன்னு. நெஸ்டு மீட் பண்றேன்.
நாஞ்சொன்னது போன போஸ்டு. நீங்கன்னு நினைச்சு இன்னொரு ஸ்ரீராமண்ணாவை அண்ணான்னு கூப்பிட்டுட்டேன்.. நிஜ டிட்டெக்டிவ் நம்ம தக்குடு தான். என்றும் அன்புடன்னு போடாம இருக்கறது பாஸ்டன் அண்ணாச்சி இல்லைன்னு புரூவ் பண்ணியூட்டான்.

அநன்யா மஹாதேவன் said...

@மாதவன்,
வாங்க, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!

LK said...

nee ketta mathiri vote panniten. olunga amoutna accountku transfer pannidu

ஸ்ரீராம். said...

இந்த கட்டுரைக்கு வோட்டு போட்ட கீழ்க்கண்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
bsr
settaikkaran
ashok92//

அடேடே...முதல் வோட்டே நான்தானா? நாந்தனுங்க இன்னொரு ஸ்ரீராமண்ணா...

அநன்யா மஹாதேவன் said...

@LK
உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா? மக்களே, இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல!!! இவருக்கு நன்றி சொல்லலையாம் அதான் எரிச்சல்ல இப்புடி எல்லாம் எழுதறாரு! வோட்டளிச்ச புண்ணியவான் LK, வாழ்க! போறுமா?

@ஸ்ரீராமண்ணா,
ரொம்ப நன்றி!(எனக்கெல்லாம்) வோட்டு போட்டத்துக்கு!

Porkodi (பொற்கொடி) said...

////ஸ்ரீராம்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. //

ஏம்மா அநன்யா, ஏதோ தப்பா சொல்லிட்ட, அத ஒத்துக்காம எதுக்கு இந்த சால்ஜாப்பு, நான்னு நெனச்சிருந்தா முதல் வருகைக்கும் கருத்துக்கும்னு சொல்லியிருப்பியா??

எப்படி பாயிண்ட பிடிச்சேன் பாத்தியா?
கேடியோட கதையை படிக்க ஆரம்பிச்சதிலிருந்து நானும் டிடெக்டிவ் மாதிரி ஆகிட்டேன் ....
//

esamaaaaan!! kaala kaatunga esamaan! logicla hole kandu pidichu pinringle.. :O

Porkodi (பொற்கொடி) said...

"ஹாஹா! சூப்பர் அநன்யா! எப்படி இப்படி காமெடில பின்றீங்க?" - ‍ இதை அடுத்த போஸ்ட் போடும் போது முதல் கமெண்டா பவிச்சு வடையை அனுப்பி வெப்பீங்களாம்.. நானும் எத்தன தடவை ஒப்பன் பண்ணி பண்ணி பாக்கறது..?

Jawahar said...

//நீங்க சமயல் பண்ணும்போது உப்பு குறைந்து விடுகிறது. உங்கள் மனைவி அவசரத்திற்கு எடுப்பது பூரிக்கட்டையா விளக்குமாறா என்ற ரேஞ்சில் போகும்!//

தமாஷுக்கு எழுதின மாதிரி இல்லையே.... மனைவிகளுக்கு ரெக்கம்மண்ட் பன்ற மாதிரியில்லே இருக்கு?

http://kgjawarlal.wordpress.com

My days(Gops) said...

nalla comedy ah irudhadhunga... :)

cool

karthikeyan said...

aarambathil naalthaan poikittu irunthathu ippothan pootiyai samalikka ithu mathiri yellam kola pantranga

Related Posts with Thumbnails