என் வீட்டு ரங்குவுக்கு அந்தக்கால நடிகைகள் என்றால் கொள்ளை பிரியம். சாவித்திரி சரோஜாதேவி தேவிகா செளகார்ஜானகி இவர்களையெல்லாம் பார்தால் ரெண்டு ரெக்கை சைடில் ஆட்டோமேட்டிக்காக அட்டாச் ஆகி விடும். பறபறவென்று பறப்பார். துபாயில் வாழ்ந்த போது ஜெயா டீவியில் வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை நான் வெறுக்க காரணம் இவருடைய இந்த பறக்கும் டெக்னிக் தான். மோவாக்கட்டையில் ரெண்டு டயப்பர் கட்டிவிட்டாலும் பத்தாமல் ஜொள் விட்டு டீவீயை பார்த்துக்கொண்டு இருப்பார்.
இதை இப்போ என்னத்துக்கு சொல்றேன்னு கேக்கறீங்களா? அபுதாபி வாழ்க்கை இப்புடி மெகா சீரியல் மாதிரி போரா போயிண்டு இருக்கே ஒரு ஸ்பைஸப் பண்ணலாமேன்னு நான் பண்ணின ஒரு காரியத்துக்கு தான் இந்த பீடிகை. அப்படி ஒண்ணும் மோசமா பண்ணலை. இருந்தாலும் டைமிங் சரிப்படலை!
இன்னிக்கி வழக்கத்துக்கு மாறாக ரொம்ப சீக்கிரமே சாயந்திர நேர வேலையெல்லாம் முடிச்சு, தலை வாரிண்டு, மூஞ்சி அலம்பிண்டு, வெளக்கேத்தி, ஜபம் முடிச்சு ரெடி ஆயிட்டேன். கண்ணாடி கிட்டே போனப்போ ஏதாவது டிஃபரெண்டா பண்ணலாமான்னு ஒரு குறுகுறுப்பு.. ஆயின்மெண்டு ட்யூப் மாதிரி ஒரு கண்மை ஊர்ல வித்தாங்க. வாங்கிண்டு வந்து சுமார் ஒரு வருஷம் ஆச்சு. திறந்து கூட பார்க்கலை. சரி இப்போ இன்னிக்கி ஃப்ரீதானேன்னு ஓப்பன் பண்ணிட்டேன். அதுல ஈர்க்குச்சி மாதிரி ஒரு லாங் ஸ்டிக். அப்படியே கண்ல ஒரு இழு இழுத்தேன். அப்போ தான் அந்த விபரீத சிந்தனை வந்தது. அந்தக்கால நடிகைகள் எல்லாம் இந்த குருவிக்கால் மை இட்டுப்பாங்களே, அதே மாதிரி நாமளும் இன்னிக்கி ட்ரை பண்ணி ரங்குவை இம்ப்ரஸ் செஞ்சுட வேண்டீது தான்னு டிசைடு பண்ணேன்.
கொஞ்சமா இன்னொரு வாட்டி ட்யூப்புக்குள்ளே இருந்து மையை எடுத்து மெதுவா இமைக்கும் கண்ணுக்கு நடுப்பட்ட ஏரியாவுல அப்பினேன். ”ஆஹா என்ன ஒரு அழகு.. மீனம்மா மீனம்மா...”ன்னு பாடிண்டே நெஸ்டு ஸ்டெப்பு. மெதுவா கீழ ஒரு இழுவை, கண்ணுக்கு மேல ஒரு இழுவை. அப்படியே இழுத்துண்டு போய் புருவம் முடியும் இடத்தில் நிறுத்தணும். இதான் குருவிக்கால்.. சிம்பிள். ”அம்மால்லாம் நமக்கு சின்ன வயசுல வெச்சு விடுவாங்களே!! அதே தான். யெஸ் யூ கான் டூ இட். கோ அஹெட்”ன்னு கன்னா பின்னான்னு மனசு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்க, குரங்கு பன்னு தின்ன கதையா ”இங்கே கொஞ்சம். இப்படி இல்லே அப்படீ”ன்னு அப்பி அப்பி கடைசியில கதகளி மேக்கப் மாதிரி ஆயிடுச்சு கண்ணு. ஆனது ஆயிப்போச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது.. எப்படியாவது இந்த கெட்டப்புல ரங்கு ரீயாக்ஷன் என்னான்னு பார்த்துடணும்னு ரொம்ப மெனக்கெட்டு மறுபடியும் மறுபடியும் கண்ணாடியே பார்த்துண்டு நின்னேன்.
ஒரு ஸ்டேஜுல இன்னொரு தூள் ஐடியா.. சரோஜாதேவிக்கு கன்னத்துல ஒரு மச்சம் இருக்குமே அதே மாதிரி ஒரு மச்சம் வெச்சுக்கலாமேன்னு தோணிச்சு. அதையும் உடனே செயல் படுத்தியாச்சு. ஓஹோஹோ.. வாட் ஆஃப் ஏ பீட்டிபுள் கேள்ன்னு நானே அசந்துட்டேன்னா பார்த்துக்கோங்க!
வாசல்ல போய் நின்னா காரிடார்ல லீவுல என்ன பண்ணறதுன்னு தெரியாம கண்டபடி சத்தம் போட்டு விளையாடும் குழந்தைகள் எல்லாம் பேஸ்த்தடிச்சு ஓடிப்போயிடுவாங்க.கட்டாயம் வேப்பிலை அடிக்க வேண்டி இருக்கும். நிச்சியம் அவங்க அம்மாப்பா சண்டைக்கு வருவாங்கன்னு தோணித்து. அதுனால வெளீல ரங்குவுக்கோசம் வெயிட் பண்ற ஐடியாவை கைவிட்டுட்டேன். (இல்லாட்டி மட்டும்!!!!)
எதிர்பார்த்த நேரத்தில் ரங்கு வரவில்லை. இவருக்காக காத்திருந்து களைத்துப்போன நான் யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே சிங்குன்னு புலம்பிண்டே என் ப்ளாக் கமெண்டுக்களை பப்ளிஷ்(!!!!!!???) பண்ண ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரம் லேட்டாக வந்தார். வழக்கத்துக்கு மாறா இருக்கற என்னை ஒரு வாட்டி உற்றுப்பார்த்தார்.அவ்ளோ தான். நோ ரீயாக்ஷன். நான் காப்பி கலக்க போய்ட்டேன். இவர் வர்றதுக்குள்ள என் மேக்கப் மேட்ட்ரை மறந்துட்டேன். சோபாவில் உட்கார்ந்துகொண்டு நாளைக்கி இன்னின்ன மீட்டிங்ஸ் இருக்கு, ஆப்பிள் ஒயிட் சட்டை ஐயன் பண்ணியாச்சா, பாலக்காட்டுல ஒரு மாமி டிக்கெட் வாங்கியாச்சு தெரியுமோ?ஏர் அரேபியால ஆஃபர் போட்டு இருக்கான், காப்பி ஏன் இவ்ளோ கண்றாவியா இருக்கு? போன்ற ரொம்ப உபயோகமான விஷயங்களைப்பற்றி பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு எரிச்சலான எரிச்சல். நானும் முடிந்த வரையில் பொடியை குற்றம் சொல்லி, ஃபில்டரை குற்றம் சொல்லி, பாலை குற்றம் சொல்லி கடைசியில் ஒத்துக்கொண்டேன்.
அப்படியே ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு லாப்டப்பை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டோம். நாங்கள் எங்கள் லாப்டாப்பை முறைக்க நடுவில் சம்பந்தமே இல்லாமல் விவேக் வடிவேலு கவுண்டர் ஆகியோர் வந்து அலறிக்கொண்டு இருப்பார்கள். இல்லாட்டி மலையாளச்சேட்ட்ன்கள் பிதற்றுவார்கள்! அதே மாதிரி தான் நாங்கள் டீவீயை ஆன் பண்ணிவிட்டு உட்கார்ந்து இருந்தோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இவருக்கு ஒரு ஃபோன். ”ஓ அப்படியா, வா வா.. ”என்று இவருக்கு ஒரே குதூகலம்!!!
இரவு ஆகிவிட்டதே என்று தஸ்புஸ் நைட்டி அணிந்த எனக்கு ஒரே பீதி கிளம்ப, யாருன்னா என்றேன். ரகுடீ வர்றானாம் என்றார். ஒரே ஷாக்!ஐய்யயோ, இப்போவா என்று எழுந்து ஓடினேன். உடை மாற்றிக்கொண்டு கண்னாடியை பார்த்தால் குருவிக்க்கால் கோழிக்கால், ஆகி இருந்தது! ஈஷ் பூஷ் என்று கண்ணைச்சுற்றிலும் மையான மை. எப்படி ரங்கு தைரியமா என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாருன்னு ஒரே ஆச்சரியம் எனக்கு. அது மட்டுமில்லை குருவிக்கால் புருவத்தோடு மிக்ஸ் ஆகி மஹாக்கேவலமாக காட்சி அளிக்க, என் முகத்தில் வழிந்த எண்ணைப்பசை சரோஜாதேவி மச்சத்தை கோடாக மாற்றி இருந்தது. மையெல்லாம் வழிய கோரஸ்வரூபிணியாய் கண்ணாடிமுன் நின்றேன்.. ஹய்யய்யோ இதை எல்லாம் இப்பொ அழிக்கணுமா? அதற்குள் சரியாக லிஃப்டு மணி அடிக்க.. எனக்கு பீ.பீ எகிறியது! ”இப்போ போயா இந்தப்பைய்யன் வரணும்? இன்னிக்கீன்னு பார்த்து நான் குருவிக்கால் எல்லாம் போட்டுண்டு இருக்கேன் பாருங்கோ” என்று குட்டை உடைக்க அப்போது தான் ரங்குவுக்கு உதயமாயிற்று.. ஓஹோ இவள் இன்று குருவிக்கால் போட்டுண்டு இருக்காளான்னு. ஈ என்று பல்லிளித்துவிட்டு, ”நான் கவனிக்கலைம்மா” என்றார்! ரொம்ப சந்தோஷம். இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். இதே பார்த்த முதல் நாளே பாட்டுல கமலினி முகர்ஜி என்ன கலர் புடவை உடுத்திண்டு இருப்பான்னு கேட்டு பாருங்கோ, சூப்பரா டாண் டாண்னு பதில் வரும்! க்கும்.
அந்த கந்தரகோளத்தை எல்லாம் தேங்காய் எண்ணைபோட்டு அழித்து 10 டிஷ்யூவை உருவி முகம் துடைத்து வெள்யே வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது..
கட்டுரை முடிப்பதற்கு முன் ஒரு ஜோக்கு, நம்ம ரகு சொன்னது. அவன் ஆபீஸில் மேனேஜர்கள் எல்லாம் இப்போது லேட்டஸ்டாக புலம்பும் புலம்பல் என்ன தெரியுமா? ”ஆப்பிள், ப்ளாக்பெர்ரி எல்லாம் பழங்களாகவே இருந்திருக்க கூடாதா? இந்த டெக்னாலஜி படுத்துகிற பாடு தாங்க முடியலைடா சாமி ”என்கிறார்களாம்!
ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குருவிக்கால் மை மேக்கப்புடன் இங்கே நான். இஹ்கி இஹ்கி!!

38 comments:
:)))
Me the first..Vadai enge kodunga
பாவமே.. அத்திம்பேரை இப்படி டென்ஷன் பண்றேளே, கொஞ்சம் கூட சரியில்ல. :( ரகுவுக்காவது வித்தியாசம் தெரியுதான்னு வெயிட் பண்ணி பாத்துருந்துருக்கலாமே..
//கட்டுரை முடிப்பதற்கு முன் ஒரு ஜோக்கு//
இது வேற தனியாவா.. அதான் பதிவே சிரிப்பா சிரிக்குதே! :)))
சாவித்ரி நிஜமாவே கொள்ளை அழகுதாங்க, கன்னடத்து பைங்கிளியை விட!....:))
//வழக்கத்துக்கு மாறா இருக்கற என்னை ஒரு வாட்டி உற்றுப்பார்த்தார்.அவ்ளோ தான். நோ ரீயாக்ஷன். //
Oru nimisam, namma veetukulla thaan vanthirukkamannu ninaichu iruppar avar :))
//இதே பார்த்த முதல் நாளே பாட்டுல கமலினி முகர்ஜி என்ன கலர் புடவை உடுத்திண்டு இருப்பான்னு கேட்டு பாருங்கோ, சூப்பரா டாண் டாண்னு பதில் வரும்! க்கும்.//
Correctu, naanum ithai aamothikkiren. Nama enna dress panninalum ivanga kannukku theriyathu. Athu namma neramnu nenaikiren. :))
//ஆப்பிள், ப்ளாக்பெர்ரி எல்லாம் பழங்களாகவே இருந்திருக்க கூடாதா? இந்த டெக்னாலஜி படுத்துகிற பாடு தாங்க முடியலைடா சாமி //
He..He..He.
Ennayum Apple oru paithiyam akkiduchungoo, En kitta Apple Ipod, IPhone, Mac-book ellam irukku. Ana innum ethilayum neraya features use pannama vettiya vachirukken.
//அது மட்டுமில்லை குருவிக்கால் புருவத்தோடு மிக்ஸ் ஆகி மஹாக்கேவலமாக காட்சி அளிக்க, என் முகத்தில் வழிந்த எண்ணைப்பசை சரோஜாதேவி மச்சத்தை கோடாக மாற்றி இருந்தது. //
ippadi iruntha yaruku paaratanumnu tonum...
//ஆப்பிள், ப்ளாக்பெர்ரி எல்லாம் பழங்களாகவே இருந்திருக்க கூடாதா//
:D
பாவம்
//துபாயில் வாழ்ந்த போது ஜெயா டீவியில் வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை நான் வெறுக்க காரணம் இவருடைய இந்த பறக்கும் டெக்னிக் தான். மோவாக்கட்டையில் ரெண்டு டயப்பர் கட்டிவிட்டாலும் பத்தாமல் ஜொள் விட்டு டீவீயை பார்த்துக்கொண்டு இருப்பார்.//
ஹா...ஹா...ஹா... இத விட பிரமாதமான வர்ணனை படிச்சதில்ல..
//அந்தக்கால நடிகைகள் எல்லாம் இந்த குருவிக்கால் மை இட்டுப்பாங்களே, அதே மாதிரி நாமளும் இன்னிக்கி ட்ரை பண்ணி ரங்குவை இம்ப்ரஸ் செஞ்சுட வேண்டீது தான்னு டிசைடு பண்ணேன். //
ரைட்டு... மேல சொல்லுங்க...
//அதே தான். யெஸ் யூ கான் டூ இட். கோ அஹெட்”ன்னு கன்னா பின்னான்னு மனசு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்க, குரங்கு பன்னு தின்ன கதையா //
ஆஹா... லொள்ளுக்கு அளவே இல்லையா!!!
//ஓஹோஹோ.. வாட் ஆஃப் ஏ பீட்டிபுள் கேள்ன்னு நானே அசந்துட்டேன்னா பார்த்துக்கோங்க!//
ஆஹா... நெனச்சு பார்த்தேன்... வாட் ய ப்யூட்டின்னு சொன்னது நிஜமோன்னு தோணறது...
//விளையாடும் குழந்தைகள் எல்லாம் பேஸ்த்தடிச்சு ஓடிப்போயிடுவாங்க.கட்டாயம் வேப்பிலை அடிக்க வேண்டி இருக்கும்.//
அதுவும் இல்லாம, அவங்க அப்பா, அம்மாக்கு எல்லாம் பதில் சொல்லியாகணும்...
//இவருக்காக காத்திருந்து களைத்துப்போன நான் யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே சிங்குன்னு புலம்பிண்டே //
நெனச்சு பார்த்தேன்... சிப்பு சிப்பா வருது... அய்யோ...அய்யோ...
//நானும் முடிந்த வரையில் பொடியை குற்றம் சொல்லி, ஃபில்டரை குற்றம் சொல்லி, பாலை குற்றம் சொல்லி கடைசியில் ஒத்துக்கொண்டேன். //
யப்பா....அண்ணா தப்பிச்சது பாலக்காடு புண்ணியம்....
//எப்படி ரங்கு தைரியமா என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாருன்னு ஒரே ஆச்சரியம் எனக்கு//
எங்களுக்கும் தான்... ஆனாலும், அவருக்கு ரொம்ப தான் தைரியம்..
//கட்டுரை முடிப்பதற்கு முன் ஒரு ஜோக்கு //
அப்போ இவ்ளோ நேரம் படிச்சு, மேல சொன்னதெல்லாம் என்னவாம்??
தைரியமா உங்க பக்கத்துல உக்காந்திருந்தவரையும் அதுவரை எல்லா விசயங்களையும் நார்மலா பேசி நார்மலா காபிக்கு திட்டி .. ந்னு இருந்தவரை நினைத்து முதல்ல பாவமா இருந்தது. ஆனா கோரஸ்வரூபிணின்னு உங்களுக்கு தோண்றிய ஒரு ரூபத்தை அவர் வித்தியாசமா கவனிக்கலைன்னு அவர் சொன்னார்ங்கறப்ப என்னால தாங்கவே முடியல ..நீங்க தான் பாவம் அழுகையா வருது..
மாமா ரொம்ப தைரியசாலிதான்....
தேவிகா,செளகார்ஜானகி படம் போடாததை மாமாவுடன் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம். :))
ஏன் இந்தமாதிரி விஷப்பரிட்சையிலெல்லாம் இறங்குறீங்க??? உங்க ரங்குவை நினைச்சாத்தான் பாவமா இருக்கு...உங்களாலா தினமும் ஹரர் படம்தான் போல...
கோழிக்கால் தெரியும்; காக்காக் கால்கூட சில கடையில கொடுக்கிறாளாம்; இதென்ன குருவிக்கால்னு வந்தேன். ஆத்தீ, நிஜமாவே உங்க சார் தைரியக்காரர்தான்!! என்ன, அந்த அழகிய ஃபோட்டோவையும் போட்டிருக்கலாம்.
ஹுஸைனம்மா போட்டாச்சு போட்டாச்சு .. ஃபோட்டோ போட்டாசுல்லா?
ஆசையா (நெஞ்சைத் திடப்படுத்திகிட்டு) வந்து பாத்தா... அவ்வ்வ்வ்வ்...
ஆனா இந்தக் கொழந்த அழகு! நெட்டி முறிச்சுகிட்டேன்!!
அநன்யா ..அழகுப்பா.. :)
சக்க.. சக்க..அட்ரா சக்க..அட்ரா சக்க..
vara vara un experiments ellaam thriller-la irundhu horror aagi horror-la irundhu comedy aagindey poradhu....idhey range-la nee pannindu irundha-nu veyyen, oru naal veettukku nejammaana vampire, werewolf ellaam vandhaalum atthimber adhu thol mela kaiya pottundu kekka-bekka-nu sirichu pesa poraar....adhellaam nondhu poyi thirumba poyidum....
makkaley....unga ellaarukkum oru unnmaiya sollikka virumbaren....kazhudhai kooda kuttiya irukkumbodhu azhaga dhaan irukkum....avvlow dhaan unnmai...
அனன்யா சின்ன வயசுல சுமாராத்தான் இருந்துருக்கீங்க???...
இதை எடுத்து எப்படியும் ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்குமா?? நடிகை ஸ்ரீதேவி சின்ன வயசுல இது மாதிரி ஃபிராக் போட்டுட்டு வர்றதை படத்துல பார்த்திருக்கேன்..
சின்ன வயது போட்டோ சூப்பர்.
பயப்படாம பக்கத்துல உக்காந்திருந்த உங்க வீட்டுக்காரருக்கு பட்டமே கொடுக்கலாம்.
ஒரே சிரிப்புதான் போங்க :-)
நல்ல காமெடி....
ஐயோ ஐயோ...சிரிச்சு சிரிச்சு முடியல அனன்யா...எப்படி இப்படி எல்லாம்
//ஈ என்று பல்லிளித்துவிட்டு, ”நான் கவனிக்கலைம்மா” என்றார்! //
வீட்டுக்கு வீடு வாசப்படி
//ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குருவிக்கால் மை மேக்கப்புடன் இங்கே நான்.//
அப்பவே இத்தனை அழகா...சூப்பர்...சரோஜா தேவி எல்லாம் லைன்ல நிக்கணும்...இது தான் இந்த பதிவோட டாப்பு
//இதை எடுத்து எப்படியும் ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்குமா?? // மிச்சத்தை எங்க கொண்டுபோய் கழிக்கர்து?....:)
உங்களை தினமும் மேக்கப்பு இல்லாமல் பார்த்து, பார்த்து அவருடைய இதயம் ஏற்கனவே நல்ல தைரியத்தை பெற்றுவிட்டதுதான் காரணம்...:)
நடிகைகளை மட்டும் சொல்லப் போயிட்டீங்க...அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர், அசோகன் ஆனந்தன் போன்ற நடிகர்கள் கூட கண்ணுக்கு (லேசா) மை வச்சிருப்பாங்க..பார்த்ததில்லையா?
மறுபடியும் மறுபடியும் கண்ணாடியே பார்த்துண்டு நின்னேன்.
ஒரு போட்டோ எடுத்து போட்டு இருக்கலாம். குழந்தைகள் பாக்காமே பாத்திருப்போமில்லே
:-))))
நெருப்புல போட்டு தங்கத்தை புடம் போடறது போல இப்படி தான் மாப்புவை திடப்படுத்துறியா???? நல்ல வேளை என் பொண்டாட்டிக்கு இது இன்னும் தோணலை... ஆண்டவா!!! மாப்புவையும், என்னையும் மட்டும் காப்பாத்து
epdinga...room pottu yosikireengala? vayiru punnachu...
Vjay.
www.rvijayakrishnan.com
//ஹூஸ்ஸைனம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க, இங்கே குருவிக்கால் மை மேக்கப்புடன் இங்கே நான்// அடடா! சந்திரமுகி கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 'லகலகலக'ஜோதிகாவை சின்ன வயசில் பார்ப்பது போல் உள்ளது....:)
அடடா! சந்திரமுகி கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 'லகலகலக'ஜோதிகாவை சின்ன வயசில் பார்ப்பது போல் உள்ளது
haha repeateeeeeeeee
நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி..
ஐயையோ, இது காமடி பதிவா?? நான் டெம்ப்ளேட் பின்னூட்டத்தை போட்டுட்டேன்,, சாரி...
ஆப்பிள், ப்ளாக்பெர்ரி மேட்டர் மட்டும் சிரிச்சுது, மத்ததெல்லாம் சிரிப்பா சிரிச்சுது..
இந்த லகலக போட்டோ உங்க வீட்டு வாசல்ல திருஷ்டி கழிக்க வெச்சதுதானே, உண்மையை சொல்லுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@பொற்ஸ்,
நன்றி, அந்த ரகு இருக்கானே, உன்னை விட படு பயங்கர துஷ்டன், உள்ளே நுழைஞ்ச உடனே என்னைத்தான் தேடினான். அக்கா உள்ளே இருக்கான்னு அத்திம்பேர் சொன்னது மையீஷலை அழிக்கும்போது பேக்கிரவுண்டில் கேட்டது. அதே சமயம் ப்ராணமே நீதீரா..ன்னும் கேட்டது, இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு தான் உள்ளே தனியா இருந்தேன்னா பார்த்துக்கோயேன். நான் மட்டும் வெளியே புள் மேக்கப்புடன் இருந்திருந்தால் ரகு வந்த வழியே அலறி புடைத்துக்கொண்டு அப்பீட்டாகி இருப்பான்!
@முகுந்தம்மா, அடுத்த போஸ்டுல உங்களுக்கு வடை அல்லாட் செய்யப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நோ பீலிங்கி.. ஓக்கே? ஆங் சொல்லவிட்டுப்போச்சு, நாட் ஒன்லி கமலினி முகர்ஜீ, அந்த பாட்டு பாடும்போது பாம்பே ஜெயஸ்ரீ என்ன புடவை உடுத்திண்டு இருந்தான்னு இவருக்கு டாண்னு நினைவுக்கு வரும்!!! கொஞ்சம் முயற்சி பண்ணுங்க மு.அ, பழகப்பழக இந்த டெக்னாலஜியும் புளிச்சு, ச்சீ ச்சீ, புரிபட ஆரம்பிச்சுடும். ஹீ ஹீ.
@ரகு அவர்களே,
ஓ அப்போ நீங்களும் ரெக்கை கட்டிண்டு பறக்கற ஆள் போல இருக்கே.. எனக்கும் மாயா பஜார், நவராத்திரி சாவித்திரிக்களை மறக்கவே முடியாது.
@LK,
நான் எதிர்ப்பார்த்தது பாராட்டல்ல, ஒரு கவனம். ஒரு சின்ன ரிகக்னிஷன். லயிச்சு பார்த்தா தானே?
@அண்ணாமலையான்,
யார் பாவம்? வழக்கம்போல நான் தானே?
@கோபி,
என் ப்ளாக் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய பின்னூட்டம் போட்டமைக்கு நன்றியோ நன்றி..
@முத்துலெட்சுமியக்கா,
நிச்சியமா நான் தான் பாவம். இதை பத்தி விலாவரியா உங்க எல்லார்கிட்டேயும் சொல்லி உங்க ஒட்டுமொத்த சிம்பதி வோட்டுக்களை வாங்கலாம்ன்னு தானே இந்த பதிவே எழுதினேன்.
நான் ரொம்ப அழகுன்னு சொன்னத்துக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா.. ஹீ ஹீ.. அதான் இந்த பூலோகத்துக்கே தெரியுமே.. உள்ளங்கை நெல்லிக்கனி போல..
@ஹூஸைனம்மா,
வருக வருக.. என் சின்ன வயசு போட்டோ போட ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைத்து கொடுத்ததற்கு நன்றிங்க.
@துபாய்ராஜா,
தேவிகா படம் தான் ரொம்ப தேடினேன். குருவிக்கால் மைவெச்சுண்டு இருக்கிற படம் ஒண்ணு கூட ஆப்படலை. அதான் லைட்டா முடிச்சுட்டேன். அடுத்த வாட்டி ஸ்க்ரீன்ஷாட் எடுத்தாவது பிரசுரிக்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
@நாஞ்சில்,
இவ்ளோ நல்ல சோர்ஸ் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் இருக்க எதுக்கு இவர் சதா மலையாள சேனல் எல்லாம் பார்க்கணும்ங்கிறார்? ஹாரர் படம் இவருக்கு ரொம்ப பிடிக்கும். தேடித்தேடி பார்த்து எடுத்துண்டு வருவாரே. டீ.வீ.டீ எடுக்காம ஃப்ரீயா பார்க்கலாமே.. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்?
அநாவஸ்யமா என் வயசை கிளரி வம்புக்கு இழுக்காதே. எனக்கு ஒரு 3 வயசா இருக்கும்போது காயத்ரி என்ற பாடாவதி படத்தில் ஸ்ரீதேவி இந்த மாதிரி காஸ்ட்யூம் போட்டுண்டு வருவா. அதுல கூட ரஜினி தான் ஹீரோ.. ஈள் பூள்ன்னு ஒரெய் அழுகை. சோகமான சோகம். ஸ்ரீதேவி டபுள் ஆக்டு. கதை கூட சுஜாதான்னு நினைவு.. அக்கான்.. பேசறாங்கைய்யா பேச்சு..
இது ஒரு பக்கம் இருக்கட்டும், சின்ன வயசுல , குழந்தை சரிதா மாதிரியே இருக்கான்னு சில பல பெரிசுகள் சொல்லி கேள்வி! (திரிய கொளுத்தி போட்டுட்டு ஓடிறணும்..)
ஒரு அறிவிப்பு: இந்த செய்திக்கு இனி புதிதாக வரும் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டம் எதிர்ப்பார்க்கவேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. :P
@ராகேஷ்,
வாங்க, நல்வரவு. யாரை அடிச்சா சக்கை? கருத்துக்கு நன்றி!
@வெட்டி,
வாங்க, சேப்புகம்பளமெல்லாம் ஓக்கே தானே? பூ கூட போடுறேன்.. மெதுவா வாங்க, இந்த சேப்பு சிம்மாசனத்துல உக்காருங்க.. இந்தாங்க இந்த பூங்கொத்தை புடிங்க.. புதுசா கடை போட்டு இருக்கீங்க போல இருக்கே.. வாழ்த்துக்கள்.
கழுதை குட்டியா இருந்தாலும் அழகுன்னு ஊரே ஒத்துண்டாச்சே.. வாட் யூ சே?
@தென்றலக்கா,
நன்றீஸ்
@உழவன்,
வாங்க வாங்க. கருத்துக்கு நன்றிங்க
@மலர்,
வாங்க வாங்க். ரொம்ப நன்றிங்க.
@அப்பாவி தங்கமணி,
நான் என்ன பண்ணட்டும்ப்பா, தானா இத மாதிரி எல்லாம் தான் என் வீட்டுல நடக்குது.. இதுல நானா புகுத்தின காமெடி ஒண்ணுமே இல்லே.. இட் ஆல் ஹேப்பன்ஸ் தட் வே!!!
பி.கு - உங்க தொடர் பதிவு கூடிய சீக்கிரம் போட்டுடறேன். கொஞ்சம் அங்கே இங்கே பிஸியா இருக்கேன்.. நிறைய வெளி வேலைகள்.
@தக்குடு,
அனாவஸ்யமா என்னை பகைச்சுக்காதே என்று உன்னை எச்சரிக்கின்றேன். நீ சொன்ன இரண்டாம் கருத்து ஒருவேளை நிஜமாக இருந்தாலும் இருக்கலாம்.
@’எங்கள்’ஸ்ரீராமண்ணா,
நீங்க சொல்ற பாயிண்ட்டை நானும் கவனிச்சு இருக்கேன். ஆனா அவங்களெல்லாம் லேசாத்தான் மை இட்டுப்பாங்க. அதும் கண்ணுக்குள்ளே அவுட்லைன் மாதிரி. சாரி இன் லைன் மாதிரி. குருவிக்கால் இஸ் ப்ரைமேரிலி தி எக்ஸ்டெண்டட் லைன்ஸ் ட்ரான் அரவுண்டு தி ஐஸ், அண்டில் தி ஐப்ரோஸ் யூ நோ?
@தி.ரா.ச அவர்களே,
அதான் போட்டோ போட்டாச்சே.. இன்னும் என்ன கம்ளெயிண்டு.. :))
@குந்தவை,
வாங்க, வாங்க.. நன்றிங்க.
@சேட்டை,
போன போஸ்டுல இருந்து காப்பி பேஸ்ட்டா?
x-(
@ஜால்ரா, சாரி @மஹேஷ்,
அப்பப்போ என் ப்ளாக் பக்கம் வரவும். கருத்துக்கு நன்றி. பயங்கர பிஸி போல இருக்கே ஆணி ஜாஸ்தியா? நடக்கட்டும் நடக்கட்டும்
@விஜய்,
இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களா.. நடக்குறதை எழுத வேண்டியது தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@தக்குடு,
எவரதீ...............................நேனே சந்திரமுகி.. லகலகலக..
கண்ணுக்கு மை
எழுதிய கதையை
சிரிக்க சிரிக்க
எழுதிருக்கீங்க.
நல்லாருக்கு.
அடேயப்பா இப்போதான் நான் முதல்ல வரேன் ஒரே கலகலப்பா இருக்கே!
அடடா....அந்த ஃபோட்டோ ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே....அடுத்து எந்த கால் மேக்கப்?
Post a Comment