எல்லாரும் மூக்கை நன்னா சிந்திட்டு கண்ணை துடைச்சுக்கோங்கோ.
போலாமா? ரெடியா?
இவரிடம் (என் கணவரிடம்)ஒரு வினோத பழக்கம். நம்ம ஊர் பொதிகை தொலைக்காட்சியில அந்தக்காலத்துல மறுஒளிபரப்புன்னு போர்டு போட்டுட்டு போட்ட நாடகங்களே திருப்பி திருப்பி போட்டுண்டு இருப்பாங்க. சமீபமா கூட துபாய்ல இருக்கும்போது 25 வருஷம் முன்னாடி நாங்க பார்த்த ‘பப்பெட்’ ஜோக் நாடகத்தை போட்டாங்க. என்ன ஒரு செட்டிங்ஸ், என்ன ஒரு தெளிவு படம், ஆஹா.. அஸாத்யம் போங்கோ.. அட்லீஸ்ட் பொதிகையாவது போர்டு போட்டுட்டு பண்ணினா. இப்பெல்லாம் முக்கால்வாசி தொலைக்காட்சிகள் போர்டெல்லாம் போடாமலேயே போட்டதையே தான் திருப்பி திருப்பி போடுறாங்க.
இதே ரேஞ்சுல இவர் ரொம்பத்தான் மொக்கை போடுவார். கல்யாணத்துக்கு முன்னாடி என்னை இம்ப்ரஸ் பண்றதுக்கு ஊரில் நடந்த காமெடிகள் சொல்லுவார். தூர்தர்ஷன் மாதிரி சொன்னத்தையே சொல்லிண்டு இருப்பார்.
அதுனால் இவரை தூர்தர்ஷன்னு தான் கூப்பிட்டுண்டு இருந்தேன்.
என்னதான் சில விஷயங்கள் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காது இல்லையா? அந்த மாதிரி சில ஜோக்ஸ் இங்கே.
கோவிந்தராஜபுரம் வரதராஜர் கோவில்ல, பிரஹாரம் எல்லாம் கிரானைட்டால இழைச்சு வெச்சிருக்கா. மழை நாள்ல அங்க ஒரு வயசான பாட்டி வந்திருக்கா. இவர்(என்னவர்) கோவில் வாசல்ல வழக்கம்போல யார் கிட்டையோ நின்னு பேசிண்டு இருந்துருக்கார். அந்த மாமி இவர் கிட்டே பேசிட்டு உள்ளே போயி, பலம்மா, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” ன்னு ஜபிச்சுண்டே பிரஹாரம் சுத்தி இருக்கா. இவா வெளீல நின்னுண்டு கேட்டுண்டு இருந்திருக்கா, திடீர்ன்னு மந்திரம் பாதியிலேயே நின்னுடுத்து, மாமி “ஹரேஏஏஏஏஏஏய்” ந்னாளாம்.இவாள்ல்லாம் வெளீல நின்னுண்டு கேட்டுண்டு இருந்திருக்கா. என்ன கொழுப்பு பார்த்தேளா?
அடுத்து, கல்பாத்தி மந்தக்கரை கோவில்ல ஸ்பெஷல் நெய்வேத்யம் மைசூர் பாகு பண்ணிண்டு இருந்திருக்கா. நெய் விட்டு கிளரி, பாகு வந்த நேரத்தில், தெருவுல ஏதோ சண்டை சச்சரவு, உடனே கிராம வழக்கம்படி ’வம்பு உந்துதலால்’ சமயல் மக்கள் எல்லாரும் மை.பா வை விட்டுட்டு வெளீல போய் பார்த்திருக்கா. அதுக்குள்ள அந்த மைசூர்பாகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி ஆயிடுத்து. உள்ள போயி இந்த விஷயத்தை டிஸ்கஸ் பண்றதுக்குள்ள வெளீல நோட்டீஸ் போர்டுல யாரோ ஒரு விஷமி, இன்றைய நிவேத்யம் - மைசூர் பாகுன்னு எழுதி இருந்ததை அழிச்சுட்டு, மைசூர் ’பாறை’ன்னு மாத்தி எழுதிட்டு ஓடிட்டானாமே? பேஷ் பேஷ்..
இவரும் இவருடைய சேட்டை குரூப்பும் சேர்ந்தால் ஒரே ரகளை தான். நண்பர்களுடன் ஹாஹாகாரம் அடிச்சுட்டு விஷேஷ நாட்கள்ல சாப்பாட்டு நேரத்தில எல்லாரும் வேலை செய்யற மாதிரி பில்டப் குடுத்துண்டுருப்பாங்களாம். அதெல்லாம் முடிஞ்சதும் கடைசிப்பந்தியில நம்பியார்க்குழு ச்சே சாரி, நண்பர்க்குழு சாப்பிட உட்காருமாம். சரியாக சாதம் பரிமாறுரச்சே, வேணும்ன்னே என்னமோ ரொம்ப முக்கியமா டிஸ்கஸ் பண்ணற மாதிரி அடுத்தவன் கிட்டே திரும்பி பேச வேண்டியது. பரிமாறரவா, புரியாம போட்டுண்டே இருப்பாளே, ஒரு 3-4 நிமிஷம் கழிச்சு மெதுவா திரும்பி, அச்சிச்சோ, நிறைய போட்டுட்டேளே, (இத, இத இதத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்னு மனசுக்குள்ள சிரிச்சுண்டு)சரி, வீணாக்க முடியுமா என்னன்னு ஃபுல் கட்டு கட்டுறது. என்னா பக்கித்தனம்!!!
உஷா மன்னிக்கு ஸ்கூட்டி ஓட்டும்போது கொஞ்சம் கான்ஃபிடன்ஸ் கம்மி. அதுக்கோசம் இந்த வாண்டு இப்படி எல்லாம் பேசறதா? ரொம்ப தெளிவா சஞ்சய் அப்படி என்ன சொன்னான்? ”உங்களுக்கெல்லாம் ஸ்பீடோமீட்டரே ஆவஷ்யமில்லை(அவசியம் இல்லை), இந்த பூலோகத்துக்கே தெரியும் நீங்கள்ளாம் 15 ல தான் போவேள்ன்னு, நடந்து போறவாகூட உங்களை கடந்து போறா பாருங்கோ”.
இன்னும் வரும் பாலக்காட்டு ஹாஸ்யங்கள்....
15 comments:
பாலக்காட்டு மனுஷாள் பேச்சே பஞ்சாரை மாதிரித் தித்திச்சுண்டிருக்குமாக்கம். பின்னே அவா ஹாஸ்யம பண்ணினா கேட்கவா வேணம்? சிரிச்சு சிரிச்சு ஒடுக்கம் வயிறே வலிச்சுடாதோ?
ஹா ஹா ஹா ஹா சிரிச்சுக்கிட்டே இருங்கன்னு தலைப்பு வச்சிருக்கலாம்
parra.. eniku vandhalum vadai poidudhe?
haha.. indha madhri dhinapadi haasyangal solli solli alukadhavai.. :)) neenga DD metro illiya? ;)
ஹா...ஹா..ஹா.
நல்லா விசாரிச்சு பாருங்கோ."மைசூர் பாறை"ன்னு எழுதுனது உங்காத்து மாமாவாத்தான் இருக்கும்.
மைக்கேல் மதன் காமராஜன் படம் மாதிரி பாலக்காட்டு ஹாஸ்யங்கள் அட்டகாசம்.
பாலக்காடு ஜோக்ஸ் அருமை ... கமலோட காமேஸ்வரன் ஜோக்ஸ் ஞாபகம் வரவைத்தது ...
அந்த ஷெல்ல பொட்டி/ You mean , I mean , என்ன மீன் மீன் ன்னு பேசிண்டு போறா , / கிராமமும் குக்கா ..... /
திருபுரசுந்தரி .. இல்லைல்ல காமேஷ்வரன் ... //
அப்ப அப்ப போடுங்க மேடம் ... அதுக்காக ஆத்துகாரரை இப்படி வாரக்கூடாது ........
செம்ம குசும்பு குடும்பமா இருக்கும் போலருக்கே..
மைசூர் பாறை மேட்டர் - கலக்கல்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@சேட்டை-நன்னா பேஷராயே நம்மள் பாஷை.பேஷ் பேஷ், அடிபொளி!!!
@அண்ணாமலையான் - வடமொழிச்சொற்கள் பிடிக்கறதில்லையோ? கருத்துக்கு நன்றி
@பட்டர்பிளை-நன்றி
@பொற்ஸ்-வடைக்கெல்லாம் என் ப்ளாக்ல காமடி பண்ணாதேங்க! மொத்தமே 3 - 4 கமெண்டு தான் வரும்.
@துபாய் ராஜா- இருந்தாலும் இருக்கும். சொல்ல முடியாது.. உங்க கருத்துக்கு நன்றி
@பத்மநாபன்-மிக்க நன்றி, மைக்கல் மதன காமராஜன் பத்தி நான் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.http://ananyathinks.blogspot.com/2009/10/my-all-time-favourite-comedy-movie-ever.html. நேரம் கிடைக்கும்போது படிங்க.
நான் மிகவும் ரசிப்பது இவங்க ஆக்ஸண்ட் தான். உங்கள் கருத்துக்கு நன்றி!:)
@ஸ்ரீராம் அண்ணா, என்ன இப்பெல்லாம் அடிக்கடி வர்றீங்க? ஆச்சிரியமால்ல இருக்கு? நன்றி!
நன்றி .... உங்கள் மைக்கேல் பதிவை படித்தேன் .. உடல் மொழியாகட்டும் , வசன வெளிப்பாடு ஆகட்டும் ,கதா பாத்திரத்தை அப்படியே வெளிப்படுத்துவதில் கமல் நிகர் தமிழில் யாரும் இல்லை .... அதுவும் மை . ம. கா வில் இலைக்கட்டை ஸ்கூட்டரில் கொண்டு வரும்போதே , நமக்கு சிரிப்பு ஆரம்பித்து விடும் ...... என்ன தமிழில் போட்டு இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் .
அப்புறம் , கோவை , நெல்லை , மதுரை , நாஞ்சில் , குமரி , தஞ்சை தமிழுக்கு உள்ள தனித்தனி சுவாரசியம் இருப்பது மாதிரியே , பாலக்காட்டு தமிழும் சுவாரசியமானது தான்... என்ன ? மனதார ரசிச்சால் , நன்றாக சிரிக்கலாம் .
நன்றி பத்ம்நாபன், இந்த பதிவு நான் ப்ளாக் உலகிற்கு வந்த புதிது. அப்போதெல்லாம் ப்ளாக்கர் தமிழ் transliteration உபயோகிச்சுண்டு இருந்தேன். ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் வரும்(இப்போ மட்டும் என்ன வாழறது???!!) பழக்கம் ஏற்பட கொஞ்ச நாள் தேவைப்பட்டது. அதான் ஆங்கிலத்துல எழுதிட்டேன். கண்டிப்பா ரசிக்க கூடியது தான். பாலக்காட்டுத்தமிழ், தமிழுக்கும் மலையாளத்திற்கும் இடைப்பட்ட ஒரு அழகான மொழி. கருத்துக்கு நன்றி
எல்லோரையும் பார்த்து நானும் போனமாதம் தான் வலைப்பூ தொடங்கினேன் . தம்பதி சமேதராய் நல்வரவு புரியுங்கள் ...வாழ்த்துங்கள்
அடிப்படை கணினி அறிவை வச்சுட்டு ஒரு மாதிரி கொண்டு போயிட்டு இருக்கிறேன் ..தமிழ் Google translitration தான் பயன்படுத்துகிறேன் .. அப்பப்ப நொண்டி அடித்தாலும் , நமக்கு தமிழ் தட்டறதுக்கு வரப்ரசாதம் .
(நாமலே தப்பா அடித்தாலும் பழியை அதன் மேல் போட்டுக்கலாம் )... wel come
//பாலக்காட்டு மனுஷாள் பேச்சே பஞ்சாரை மாதிரித் தித்திச்சுண்டிருக்குமாக்கம்//
அதே! அதே!(read it in gopikakutty style)
Enna Mannigaaru.. Namma pattaassu vedikka vechu.. sattham podareyylaaaaa.. Besh besh.. your presentation is unbelievable.. Kalpathy TV serials aarambikkalaamaaa.. Mohan paatti muthal Mohan peran varai kaattalaameyyy.. Enakkum oru Role kuduthatharkku.. mikka Nanriiiii.. Erukkaanaa avan anga.. pesa vidaathengooo !!!
அன்புள்ள ரகு,
சமர்த்தா பொறுமையா எல்லாத்தையும் படிச்சு கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றீஸ்.
பாலக்காட்டு ஹாஸ்யங்கள் ஒரு ரெண்டு மூணு எபிசோடு எழுதி இருக்கேன். பார்க்கவும். லேட்டஸ்டு எபிசோடுல நீங்களும் உண்டு. டீ.வீ சீரியல் தானே? எடுத்துட்டாப்போச்சு!பாலக்காட்டு ஜோக்ஸ் எதுவா இருந்தாலும் வரவேற்கப்படுகிறது. நீங்களே எழுதினாலும் அதை பிரசுரிக்க தயாரா இருக்கேன்.
வருகைக்கு நன்றி!
படிச்சிட்டு கண்ணைத் துடைச்சிக்கிட்டேன். இதுக்குப் பேரு ஹாஹாகாரக் கண்ணீர்!
துள்ளலான நகைச்சுவை நடை. எழுத்தில் உங்களின் அடையாளமும் நிறைந்திருக்கிறது. இந்தப் பிடியைக் கெட்டியா பிடிச்சுக்கோங்க! ஆல் தி பெஸ்ட்!!
Post a Comment