Pages

Friday, May 21, 2010

பன்னீர் சோடாஆஆஆ.......

முதன் முதலா எப்போ பன்னீர்ஜோடா குடிச்சேன்னு சரிய நினைவில்லை. 1985 -கொண்டித்தோப்புல இருந்தப்போ ரவி மாமா மெரீனா பீச்சுக்கு கூட்டிண்டு போகும்போது பஸ்ல எனக்கு வாந்தி வராப்ல இருந்தது. உடனே ஏதோ ஒரு ஸ்டாப்புல எல்லாரும் இறங்கி, பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்தார்.
இந்த மாதிரி ஒரு ட்ரிங்க் இருக்குன்னு அப்போத்தான் தெரிஞ்சது. அப்போ ஆரம்பிச்ச பன்னீர் சோடா பைத்தியம், சமீபத்துல ஏதோ ஒரு பொட்டிக்கடையில பன்னீர்சோடா வாங்கிக்குடிச்சு அதுல என்னென்னமோ குப்பை எல்லாம் விழுந்திருக்க, நைனாவிடம் திட்டு வாங்கினாலும் பன்னீர் சோடா பன்னீர் சோடாதான்னு சூளுரைக்கிற அளவுக்கு எனக்கு இஷ்டம்!

எங்கே போனாலும், ஏதாவது ஒரு பெட்டிக்கடையில பன்னீர் சோடா குடிக்காம இருந்ததே இல்லை! குறிப்பா பன்னீர் சோடா  ரொம்ப ரொம்ப ரசிச்சுக்குடிச்சது திருப்பரங்குன்றத்துலன்னு நினைவு. ப்ராண்ட் - மாப்பிள்ளை விநாயகர். ஆஹா.. அப்படி ஒரு சுவை. தரமான சோடா, தரமான இனிப்பு, தரமான பன்னீர் இதையெல்லாம் கலக்கினா அருமையான பன்னீர்சோடா!

சில இடங்கள்ல கன்வென்ஷனல் பாட்டில்கள்ல பன்னீர்சோடான்னு லேபிள் ஒட்டி வரும்! அநியாய டேஸ்டா இருக்கும். ஏன்னா சோடா ரொம்ப காட்டா இருக்கும். இனிப்பும் போடுவாங்க. ஆனா முக்கால்வாசி இடங்கள்ல பன்னீர்சோடா வெறும் சர்க்கரை+அழுக்குத்தண்ணி தான். அட்லீஸ்டு எனக்கு தெரிஞ்ச மட்டில், என்னுடைய பெர்ஸனல் எக்ஸ்பீரியன்ஸ்!

மாப்பிள்ளை விநாயகர் மாதிரியான் ஒரு சோடாவை அடுத்து நான் எங்கேயும் குடிக்கலை. சிதம்பரம் கோவில் கிட்டே ஏதோ ஒரு கடையில் யானை விலை கொடுத்து வாங்கி குடிச்சோம். அந்த சுவைக்கு யானை விலை கூட கொடுக்கலாம். அதான் சட்டுன்னு மனசுல நிக்கிது. எங்க மாமியாருக்கு முதல்முறையா பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்ததும் சிதம்பரத்துல தான். மேல்மருத்துவரில் வாங்கிக்கொடுத்தப்போ நல்லா இருக்கலை! சிதம்பரத்துல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது!

(படத்துக்கு புதுகைத்தென்றல் அக்காவுக்கு நன்றி, கூகிள்ல தேடினப்போ அவங்க தளத்துல இருந்து தான் கிடைச்சது! அடுத்த வெக்கேஷன் போனா மா.வி சோடாவை படமெடுத்து அப்லோடு பண்ணனும். படமே இல்லை! )

கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்து.
முன்னக்காலத்துல எல்லாம் யாராவது விருந்தாளி வந்தா போய் கலர்வாங்கிட்டு வான்னு தான் சொல்லுவாங்க!

தொண்ணூறுகள்ல திடீர்ன்னு ஒரே நெருக்கடி வந்துடுத்து. மார்க்கெட்ல பன்னீர் சோடாவுக்கு பதிலா அல்ப்பமா ரஸ்னா வந்திடுத்து. சர்க்கரையே பத்தாம, வெறும் ஆரஞ்சு கலருக்காக ரஸ்னாவை பாட்டில் பாட்டிலா 2 ரூபாய் கொடுத்து மக்கள்ஸ் குடிச்சுண்டு இருந்தாங்க! மேங்கோ தான் இருக்குன்னு சில சமயம் சொல்லுவாங்க. மேங்கோவாவது, ஆரஞ்சாவது, ரெண்டுமே மஹாக்கேவலமாத்தானிருக்கும் .

அம்மா பண்ற ரஸ்னா நாங்க ரசிச்சு குடிப்போம். எல்லா ஃப்ளேவரும் அம்மா 80ஸ்லேயே பண்ணிக்கொடுத்தாச்சு. அதைக்குடிச்ச நா, இதெஇயெல்லாம் ரசிக்கலை! நானும் கடைகடையா கேட்டு கேட்டு பார்க்கறேன் பன்னீர்ஜோடா இல்லேன்னு தான் எல்லா இடத்துலேயும் சொன்னாங்க!

94ல கோக் வந்தது. ஐஞ்சே ரூபாங்கறதால மெதுவா பன்னீர் சோடா எல்லாம் நலிஞ்ச தொழில் ஆயிடுத்து!

இன்னிக்கு எம்.பீஸி2 வில் சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் படந்த்தின் அடுத்த பார்டு ‘ ரெட் டிராகன்’ போட்டு இருந்தான். அதுல ஒரு டிட்டெக்டிவ் ஏதோ ஒரு பானத்தை குடிச்சுண்டே ஆராய்ச்சி பண்ணிண்டு இருந்தான். நான் ரங்குவை கேட்டேன் இவாள்ளாம் என்ன குடிப்பா? ரங்கு சும்மா இருக்காமல் “ஆங்.. பன்னீர்சோடா ! கேக்குற கேள்வியைப்பாரு? ”ன்னு சொல்லிட்டார். எனக்கு கை கால் புரியாம பன்னீர்சோடா சபலம் வந்திடுத்து.

ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை எல்லாம் விட்டுட முடியுமா சொல்லுங்க?

வீட்டுல பன்னீர்சோடா எல்லாம் பண்ண முடியும்ன்னு நான் நினைச்சதே இல்லே! பன்னீர்சோடா உடனே தயாரிச்சுட்டேன். போன மாசம் சத்யநாராயண பூஜைக்காக வாங்கின பன்னீர் இருந்தது. இதோ பன்னீர்சோடா செய்யும் முறை

பன்னீர் -கால் டம்ளர்
சர்க்கரை (அ) ஆர்ட்டிஃபீஷியல் ஸ்வீட்னர் -Sugar Substitute -2 ஸ்பூன்
சோடா-1 கேன்
ரோஸ் எஸன்ஸ் - 2-3துளிகள்

முதல்ல பன்னீர்ல சர்க்க்ரையை நல்லா கலந்துண்டு, எஸன்ஸ் விட்டு ஸ்பூனால கொஞ்ச நேரம் கலக்கணும். அடுத்து ஸ்பூனால கலக்கிண்டே சோடா விட்டு உடனே சர்வ் பண்ணனும். ஆச்சு பன்னீர் சோடா ரெடி!

இந்த சோடாவை சம்மர்ல எஞ்சாய் பண்ணுங்க! முக்கியமா வெளிநாட்டுல இருக்கறவங்க ரொம்ப ரசிப்பாங்கன்னு நம்பறேன். எங்கே போறீங்க நீங்களும் மாப்பிள்ளை விநாயகரை வீட்டுலேயே பண்ணப்போறீங்களா?

58 comments:

நாஞ்சில் பிரதாப் said...

யக்கோவ் தாங்க முடில.... பதிவு போட லீடு கிடைக்கலைன்னா இப்படியா?

காளிமார்க் சோடா, புவன்டோ இதெல்லாம் குடிச்சது இல்லயா???

LK said...

நீ சொல்ற மாதிரி நிறைய பானங்கள் காணாம போய்டுச்சு பன்னீர் சோடா புகழ் அனன்யா வாழ்க

ஜெய்லானி said...

உண்மைதான் அநன் , நா எப்ப ஊர் போனாலும் உடனே பதினஜ்சி பாட்டல் வாங்கி ஃபிரிஜ்ல வச்சிடுவேன் . எப்படியும் மூனு நாள்ள முடிஞ்சதும் காலி பாட்டல குடுத்துட்டு அடுத்த பதினஜ்சி. இப்படியே ஷார்ஜா வரும் வரை நடக்கும்.

நீங்க சொன்ன முறையை இப்பவே செஞ்சி பாத்துடுவோம் .

Madhavan said...

//கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்து.//

நச்சுனு நல்லாச் சொன்னீங்க..

Maheshwaran said...

என்னோட சாய்ஸும் பன்னீர் சோடா தான்.. ஆனா கடைசியா எப்போ குடிச்சேண்ணு ஞாபகம் இல்லை... நாளைக்கு சேலம் போன உடனேயே மொத வேலையா பன்னீர் சோடா தான் குடிக்கப்போறேன்.. எல்லாம் நீ எழுப்பிவிட்ட தூங்கிக்கிட்டு இருந்த மிருகத்தால வந்த வினை...

ஸாதிகா said...

ஐ..பன்னீர் சோடா ரெசிப்பி போட்டாச்சா?எனக்கும் ரொம்ப பிடிக்கும்.இந்த மா.வி பிராண்ட் இங்கே கிடைக்க மாட்டென்கிறதே.காளிமார்க்,பவண்டோ சுவைக்கு இந்த பெப்சி,கோக் சுவை கிடையாது.இந்த பிராண்டும் இந்த ஊரில் கிடைக்கவில்லை.
:(

Lenin P said...

அய்யோ கொல்றாங்களே கொல்றாங்களே!!! :)

நறுமுகை.
உங்கள் கருத்துக்களை பகிர, கொண்டாட ஓரிடம் www.narumugai.com

மங்குனி அமைச்சர் said...

//94ல கோக் வந்தது. ஐஞ்சே ரூபாங்கறதால மெதுவா பன்னீர் சோடா எல்லாம் நலிஞ்ச தொழில் ஆயிடுத்து!///


சோடா மட்டுமல்ல மாப்பிள்ளை விநாயகர் குரூப்பே காலி, அப்புறம் டொரினோ ,......

அநன்யா மஹாதேவன் said...

வோட்டு போட்ட அன்பர்களுக்கு மிக்க நன்றி!
karthikvlk
saras
jailani
balak
ldnkarthik
amalraaj
swasam
spice74
tharun
MVRS
mvetha
jntube
Karthi6
kavinsandron
kudumbam
anubagavan
PADMANABAN

ANANDHA PADMANABAN said...

பன்னிர் சோடா ,இப்பவும் கோவை மக்களுக்கு அவ்வளவாக கிடைக்காது மதுரை,திருச்சி நகரங்களில் பாப்புலர்..
இன்னமும் ``கலர்``ன்னு சொல்லற்றாங்களான்னு தெரியல..அந்த காலத்தில் ``கலர்`` அது ஒரு ரிச் உபசரிப்பு பானம்...
அடுத்து உங்களிடம் சிஷ்ய கோடிகள் எதிர்பார்க்கும் ரெசிபி ``லெமன் ஜுஸ் ``
சரியா.....

Anonymous said...

இந்த கோலி மூடி உள்ள‌ சோடா ரொம்ப உப்பாக இருக்குமே. அதுவும் இதுவும் ஒன்றா? கோக் பெப்சியை எல்லாம் உள்ள விட்டிருக்க கூடாதுனு என் இந்திய நண்பர்களுடன் சண்டை போடுவேன். ரொம்ப குட்டியா இருக்கும் போது சப்பை கட்டி குடிச்ச லிம்க்காவுக்கும் கோல்ட் ஸ்பொட்டுக்கும் எனது வோட்டு. அது எல்லாம் இப்ப பண்ணுறாங்களா? எனக்கு இரண்டு பாட்டில் வேணும். நேக்கு இரண்டு பாட்டில் வேணும்.

அநன்யா மஹாதேவன் said...

@நாஞ்சில்,
உங்களுக்கென்ன? ஊருக்கு போயிட்டு நிதானமா இருந்து எஞ்சாய் பண்ணிட்டு வந்திருக்கீங்க! நாங்க அப்புடியா.. (ரொம்ப மொக்கையோ? :(( இந்த டேஸ்டுக்கு தான் பதிவா போட்டேன்.. ஒரு நாலு பேரு பன்னீர் சோடா குடிச்சுட்டு என்னை நினைச்சுப்பாங்களே, அதான்)
பை தி பை, ட்ரையோ, சோலோ, பொவெண்டோ போன்ற எல்லா பானங்களையும் குடிச்சு இருக்கேன். ஹீ ஹீ! சூப்பரா இருக்கும். முக்கியமா பொவெண்டோ.. கிரேப் ஜூஸ்ல சோடா இருக்கும். ஆஹா.. நல்ல சுவை!

@LK,
கருத்துக்கு நன்றி!

@ஜெய்லானி,
உங்களுக்கு இந்த சுவை பிடிச்சதான்னு கட்டாயம் மறுபடியும் வந்து பின்னூட்டம் போடுங்க! எனக்கு ரொம்ப பிடிச்சது!

@மாதவன்,
நன்றிங்க

@மஹேஷ்,
ஓ! குடிக்கும்போது என்னை நினைச்சுக்கோ! முடிஞ்சா ஒண்ணு எக்ஸ்ட்ராவா வாங்கி என் பேரைச்சொல்லி குடிச்சுடு!

@சாதிகா அக்கா,
மிக்க நன்றீஸ்!கவலை வேண்டாம், இந்த ரிஸிப்பீ ட்ரை பண்ணுங்க. வீட்டுலேயே மாப்பிள்ளை வினாயகர் தான்! காளீமார்க் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். அருமையான டேஸ்டு!

Anonymous said...

என்னங்க ரஸ்னா பத்தி இப்டி சொல்லிட்டீங்க. ஹூக்கும்.

ரஸ்னாவை கேலி செய்த அநன்யா அக்காவுக்கு எதிராக இன்றே போராட்டம் தொடங்குகிறோம்.

ஐ லவ் யூ ரஸ்னா,
ஆஸ்ரேலிய கிளை

அநன்யா மஹாதேவன் said...

@லெனின்,
கொன்னுட்டேனோ? :))

புதுகைத் தென்றல் said...

இப்பவும் ஊருக்கு போனா காளிஸ்வரி பன்னீர்சோடா குடிக்காம வர்றதில்லை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா இப்படியும் பதிவு எழுதலாமோ . நல்ல முயற்சிததான் நல்ல இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

P.K.K.BABU said...

idhu patthhi(panneer soda) luckylook eppavo pathivu poatta madhiri thoanudhay check pannungho......... why same soda?????????

Chitra said...

அருமையா இடுகை இட்ட அனன்யாவுக்கு, ஒரு பன்னீர் சோடா...... டோய்!

விஜய் said...

ஒரு காலத்திலே நானும் பன்னீர் சோடா வெறியனாத்தான் இருந்தேன். எங்க திருச்சி பக்கம் காளிமார்க், கணேஷ் நல்ல இருக்கும். இப்பல்லாம் எங்கயும் கிடைக்கிற மாதிரிதெரியல

நோஸ்டால்ஜிக் நினைவுகளை கிளறியதற்கு நன்றி

விஜய்

தக்குடுபாண்டி said...

haha, nice one. yenakkum panner soda pudikkum, but photola irukkarthu gooli sodathaan. Mysore pakkangalla Jeera soda-nu onnu kittum, sema tasta irukkum. TRC sirukku kooda vangi thanthurukken when we went for a karnataka tour. still i am not at all touching that kapsi and akkamaalaa(coke and Pepsi)

தி. ரா. ச.(T.R.C.) said...

யாருப்பா அது அக்காவுக்கு ஒரு கோலி பன்னீர் சோடா உடைத்துக் கொடுங்க1 கீதா மேடத்தைக் கானோமே. ஓ தலைவி இன்னிக்கி அம்பத்தூர்லே போரட்டம் இல்லே போயிட்டாங்களோ.விரைவில் எதிர் பாருங்கள் அக்காவின் கம்மர் கட் பதிவு

ஜெய்லானி said...

//@ஜெய்லானி,
உங்களுக்கு இந்த சுவை பிடிச்சதான்னு கட்டாயம் மறுபடியும் வந்து பின்னூட்டம் போடுங்க! எனக்கு ரொம்ப பிடிச்சது! //

அதே டேஸ்ட் , இனி விடமாட்டோமுல்ல .

அமிரகத்தில் பன்னீர் சோடா பரப்பிய அநன்யா வாழ்க!! வாழ்க!! வருங்கால விஞ்ஞானி வாழ்க!! வாழ்க்!!

angelin said...

gnabagam varudhe(3)times
enna idhu naan panneer soda kudikanumna 11 hours travel pannanum.ennai madhiriye panneersodvukku niraiya rasigapattalam irukku.pona varudam indiavil kudithen.this year i tried mixing rose syrup with plain soda.colour will be light pink but taste was same for this no need to add sugar.vazga valarga num panner soda

ஸ்ரீராம். said...

கோடைக் கால சிறப்புப் பதிவா...அடுத்து இளநீரின் மகத்துவங்களா...வாழ்க 'பொட்டிக்கடை' நினைவுகள்.

யாதவன் said...

நல்ல இருக்குங்க

Jaleela said...

எங்கே எங்கே அமீரகத்தில் பன்னீர் ஜோடாவ , ஓ கடைஆரம்பிச்சா, நல்ல கலெக்‌ஷ்ன கிடைக்குமே/


//நல்ல இருக்கு அநன்யா/
ஊர் பன்னீர் ஜோடவ அறிமுக படுத்திய அநன்யாவுக்கு ஜே ஜெ//

SUFFIX said...

பண்ணீர் சோடாவ கோலி பாட்டிலில் குடிக்கணும், இந்த ஆசை எப்போ நிறைவேறப் போவுதோ தெரியல!!

V said...

Very well written and enjoyed the post on goli soda.
Yes you are right, now for over 40 years Mapillai Vinayagar is a very famous brand particularly Madurai, Ramanadhapurm Dist and in the past there was no better option to quench ones thirst. You took me back 37 years (1973) and reminded me of my senior Mr. Balamuruganandham owner of Mappilai Vinayagar brand. He was in final year when I joined first year and escaped ragging under his shadow. Mr. Balamuruganandham was the National Middle weight (72kg category) champion in weight lifting for 2 consicutive years in 1973 and 1974 if I am not wrong. Certain personalities we don’t forget even after several decades.
Nat
Abu Dhabi

seemangani said...

ஆஹா...பண்ணி சோடா என்றதும் எனக்கு பள்ளி நாட்கள் தான் நியாபகத்துக்கு வருது என் ஸ்கூல் கேட்டுக்கு பக்கத்துலையே சோடா கடை ஒரு பன்னீர் சோடா ஒரு ருபாய் தான் நாங்க நாலு நண்பர்கள் எங்களுக்குள்ள எந்த போட்டி வந்தாலும் ஒரு பன்னீர் சொடதான் பெட் பக்கத்துலையே சூடா வேர்கடலை வறுத்து விப்பாங்க ரெண்டுமே மறக்க முடியாது.மாப்பிள்ளை விநாயகர் சோடா அக்காக்கு வயித்தவலி டாக்டர் அதுதான் அதுக்காகவே சில நேரம் வயித்தவலி வரும்...அட போங்க விட்டா ஒரு பதிவே எழுதுவேன் என்னதான் சொன்னாலும் மதுரையும் மாப்பிள்ளை விநாயகர்யும் பிரிக்கவும் மறக்கவும் முடியாது...பதின்ம வயதுக்கு கூட்டி போன பதிவுக்கு நன்றி..

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

Ms.Chitchat said...

Enjoyed the post as well as the comments.

கீதா சாம்பசிவம் said...

காளி மார்க்கிலே சோடாவை விட மத்த ஃப்ளேவர்லே நல்லா இருக்கும்.

கீதா சாம்பசிவம் said...

ப்ராண்ட் - மாப்பிள்ளை விநாயகர். ஆஹா.. அப்படி ஒரு சுவை. தரமான சோடா, தரமான இனிப்பு, தரமான பன்னீர் இதையெல்லாம் கலக்கினா அருமையான பன்னீர்சோடா!//

ஆஹா, இப்படி மதுரையின் பிரபலமான ஜிகிர்தண்டாவைப் பத்தியும் எழுதி இருக்கலாமே?? மாப்பிள்ளை விநாயகர் இன்னும் இருக்கு மதுரையிலே?? ம்ஹும், என் கண்ணிலே படலை, ஜிஞ்சர் பீர் குடிச்சுப் பாருங்க மாப்பிள்ளை விநாயகர் கம்பெனியோடது, அது இன்னும் இருந்தால், ஆஹா, அது மாதிரி ஜிஞ்சர் பீர் எங்கேயும் கிடைக்காது. என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்!

அநன்யா அக்காவுக்கு ஜே!!!!!!!!

அபி அப்பா said...

என்னது எங்க பார்த்தாலும் பன்னீர் சோடாவா இருக்குது. இப்பதான் மாயவரத்தான் பன்னீர் சோடா பதிவு ஒன்னு போட்டாரு:-)) நல்லா தான் இருக்கு வெயில்ல!

LK said...

//மாதிரி ஜிஞ்சர் பீர் எங்கேயும் கிடைக்காது. /

ஆஹா பாட்டி

ஹுஸைனம்மா said...

இந்த கோலி சோடா நான் குடிச்சதே இல்லை!! :-((

கெஞ்சி, அழுது பொவொண்டோ, காளிமார்க் மட்டுந்தான் குடிச்சிருக்கேன்!! அவ்ளோ பாவம்ப்பா நானு!!

ரஸ்னா ஒரு கொடுமை! அது எப்டித்தான் இவ்ளோ ஃபேமஸாச்சோ!! ஆனாலும், கிடைச்சா விடுறதில்லை.. ஹி..ஹி..

//அநன்யா மஹாதேவன் said...
வோட்டு போட்ட அன்பர்களுக்கு மிக்க நன்றி! //

இது ஒரு மறைமுகமான அட்டாக் மாதிரில்ல இருக்கு!! ;-)))

அன்னு said...

அடடா...மறந்து போயிருந்த ஒரு விஷயத்தை மறுபடியும் ஞாபகப் படுத்திட்டீங்க. நானும் பன்னீர் சோடா பைத்தியமாதேன் இருந்தேன். வல்லத்துல படிக்கற வரை. அதுக்கு அப்புறம், அதைப் பத்தி சுத்தமா மறந்து போயிட்டேன். வெளி நாட்டுல இருந்துகிட்டுமே இப்பொ வரை பெப்ஸி, கோக் குடிக்கறது கிடையாது.அது தர்ற வியாதிகள் ஒரு பக்கம்னாலும் ஏதோ ''ங்கற பேருக்கு எதிரா என்னால இதையாவது பண்ண முடியுதேன்னு ஒரு சந்தோஷம். உண்மையில பாத்தீங்கண்ணா மாப்பிள்ளை வினாயகர் மட்டுமில்லை இன்னும் நிறைய நிறைய இன்டஸ்ட்ரீஸ் இந்தியாவுல சுத்தமா மறக்கடிக்கப்பட்டிருக்கு. மறுபடியும் ஒரு காலம் வராதா...அந்த நாட்களை மறுபடியும் காணமட்டோமான்னு ஆதங்கம் எழாத நாள் இல்லை. நன்றீ இப்படி நினைவுகள் வேர் விட வழி தருவதற்கு.

ஜெகநாதன் said...

சோடா பாட்டிலை எப்படி உருவுவது?
இரண்டு சோடா பாட்டில்களை அந்தரத்திலேயே மோதவிடுவது எப்படி?
அதை எப்படி எதிரிகள் மேல் வீசுவது..
இதுமாதிரி உங்க ஸ்டைலில் ஏதாவது இருக்கும்னு பாத்தேன்.

ஆனா...

பன்னீர் சோடா தயாரிப்பது எப்பூடின்னு சாதா லெவலில் விளக்கியிருப்பது
உங்கள் தாதா இமேஜுக்கு பொருத்தமா இல்லீங்க!

எனிவே... ரஸ்னாவை நினைவூட்டியதற்கு நன்றி. அதற்கு முன் ட்ரிங்கானா, கிஸான் என்று சில வகைகள் இருந்தன.
கோடைவிடுமுறையையும், பள்ளிப்பருவத்தையும் ஜில்லென நினைவுக்கு வருகின்றன!
பன்னீர் சோடா ரெஸிபி... ஹிஹி.. எல்கே செய்யற மாதிரியில்லே இருக்கு !??

விக்னேஷ்வரி said...

பனீர் சோடா... பேர் கேட்டே எவ்ளோ நாளாச்சு... பதிவு வாசிச்சதும் பனீர் சோடா குடிச்ச மாதிரி ஜில்லுன்னு இருக்கு.

அநன்யா மஹாதேவன் said...

@புதுகை அக்கா,
நல்ல பழக்கம். நான் ஊருக்கு போனா தினமும் அட்லீஸ்டு ரெண்டு குடிச்சுடுவேன். கடைக்காரன் கேவலமா பார்த்தாலும் கொஞ்சம் கூட கூசாம, இன்னொண்ணுன்னு கேட்டு வாங்கி குடிப்பேனே! ஹீஹீ. இதுக்கெல்லாம் வெக்கப்பட்டா முடியுமோ?

@பனித்துளி,
வாங்க, (டெம்ப்ளேட்) கருத்துக்கு மிக்க நன்றி!

@பி.கே.கே. பாபு,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!ஒய் சேம் சோடா வா? பன்னீர்சோடா லக்கி எழுதி வாங்கிட்டாரா? பன்னீர்சோடா எல்லாருக்கும் பொது. நான் பண்ணி குடிச்சேன், அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னுட்டு எழுதிட்டேன்! மத்தபடி யாரையும் காப்பி அடிக்க முயற்சி பண்ணலை. கருத்துக்கு நன்றி

@சித்ரா,
டாங்கீஸ் ஃபார் தி பன்னீர்ஜோடா டாலு!

@விஜய்,
:( ஆமா இப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டு லேபிள் இல்லாம டுபாக்கூர் பன்னீர் சோடா தான் மார்கெட்ல கிடைக்கிது.
மோஸ்டு வெல்கம். நானே ஒரு ப்ளாக் அண்டு வொயிட் விசிறி தான்.

@தக்குடு,
கோலி சோடா தான் ஆனா இதுலேயே ப.சோ லேபிள் ஒட்டி வரும். அருமையான சுவையோட இருக்கும் அது. ஜீரா சோடா, மசாலா சோடா எல்லாம் கணேஷ் ஜூஸ் செண்டர்ல குடிச்சு இருக்கேன். ஜோரா இருக்குமே. கப்ஸி அக்காமாலா தொடாமல் இருப்பதுக்கு உனக்கு ஒரு ஜே!

@ஜெய்லானி,
என் வயித்துல பால் வார்த்துட்டீங்க. உங்க ஃபீட்பேக்குக்கு தான் வெயிட்டிங்கி. எனக்கு விருதெல்லாம் வழங்கி இருக்கீங்க. மிக்க நன்றி. உங்க லின்க்குல கமெண்ட முடியாம போயிடுத்து. ஆமா, வருங்கால விஞ்ஞானின்னு யாரையோ சொன்னீங்களே? அது யாருங்க???

@ஏஞ்சலின்,
ரொம்ப சந்தோஷம்ங்க. ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்தீங்களா? பன்னீர்சோடாவை அடிச்சுக்க இன்னி வரைக்கும் வேற ஒரு பானம் இல்லை இல்லவே இல்லன்னு நான் அடிச்சு சொல்லுவேன். ரசிகப்பெருமக்களே, பன்னீர்ஜோடாவுக்கு இன்னொரு ரெசிப்பீ சொல்லி இருக்காங்க நம்ம ஏஞ்சலின். எல்லாரும் பேனா பேப்பர் எடுத்து குறிச்சுக்கோங்க. ரோஸ் சிரப் கிடைக்குதே, அதை சோடால டைரக்டா மிக்ஸ் பண்ணினா ரோஸ்கலர் பன்னீர்ஜோடா ரெடியாம். சிரப்லேயே சர்க்கரை இருக்கறதுனால நோ நீட் டு ஆட் சுகர். எஞ்சாய்! நன்றி ஏஞ்சலின்!

@ஸ்ரீராம் அண்ணா,
ஆமாம், பொட்டிக்கடை நினைவுகள். :) தலைப்பு நல்லா இருக்கே.. தொடர்பதிவு ஸ்டார்ட் பண்ணிடலாமா?
:))

அநன்யா மஹாதேவன் said...

@யாதவன்,
மிக்க நன்றிங்க

@ஜலீலாக்கா,
கடை ஆரம்பிச்சு இருந்தா ட்ரேட் சீக்ரெட் ரெசிப்பீ போடுவேனா? என்னக்கா நீங்க வேற.. ஆனா இனி விருந்தோம்பலுக்கு பன்னீர் ஜோடா தேன்.. டிஸைடு பண்ணியாச்சுல்லா?

@சஃபிக்ஸ்,
சீக்கிரமே நிறைவேற என் வாழ்த்துக்கள்.

@திரு வி,
உங்கள் விளக்கமான பின்னூட்டம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷித்தேன். ஓ உங்க சீனியரா மா.வி ஓனர்? ரொம்ப சந்தோஷம். அருமையான ஒரு பானத்தை கொடுத்திருக்கார். திரு பால முருகானந்தத்தை பற்றி இவ்ளோ விஷயங்களை சொன்னதுக்கு மிக்க நன்றி! உண்மை தான். சிலரை முயன்றாலும் மறக்க முடியாது. இப்போ என்னமோ தாயாதி சண்டையினால கம்பெனி கைமாறும்ன்னு எல்லாம் சமீபமா படிச்சாப்புல நினைவு! கருத்துக்கு மிக்க நன்றி.

@சீமாங்கனி,
நீங்க சொல்றது நிஜம் தான். 80களின் இறுதியில் பன்னீர்சோடா வெறும் 1 ரூபாய் தான். தொண்ணூறுகளின் அது 1.50 ஆகியது. அக்காவுக்கு வயித்தவலி மருந்து பன்னீர்ஜோடாவா? ஜோர்! நீங்க சொன்ன விதம் அதை விட சூப்பர். மிக்க நன்றி உங்க கருத்துக்கு.

@சிட்சாட்,
மிக்க நன்றிங்க

@கீத்தா மாத்தா,
வருக வருக, நல்வரவு. ஜிகர்தண்டா நான் குடிச்சதா நினைவில்லை. இந்த வாட்டி வெக்கேஷன்ல போனா கட்டாயம் வாங்கிக் குடிக்கணும். ஜிஞ்சர் பீரா? பேரே என்னம்மோ வில்லங்கமா இருக்கே? நான் கேட்டதில்லை. டாங்கீஸ் மாமி ஜே போட்டதுக்கு! காளிமார்க் ட்ரையோ, சோலோ, போவெண்டோ எல்லாம் குடிச்சு பார்த்திருக்கேன். கலர் கலரா தரமா இருக்கும் அவை.

@அபிஅப்பா,
ஓஹோ.. சீசனல் பதிவா இருக்குமோ என்னமோ. :) நன்றி

@ஹுஸைனம்மா,
ரஸ்னா ஆக்சுவலா நல்லாத்தான் இருக்கும். அதை கலக்கற விதத்துல கலக்கணும். எங்கம்மா மாதிரி! காலா கட்டா, ஷாஹி குலாப், ஆரஞ்சு, மேங்கோ, லைம் இப்படி எல்லா ஃப்ளேவர்ஸும் நாங்க அம்மா பண்ணிக்கொடுத்து குடிச்சாச்சு. அமோகமா இருக்கும்.

@அன்னு,
வாங்க, அருமையான கருத்துக்கு மிக்க நன்றி! பெப்ஸி கோக் குடிக்காத உங்களுக்கு ஒரு ஜே! வாழ்த்துக்கள்.

@ஜெகன்,
தாதா இமேஜ்ன்னு நீங்க தான் நினைச்சுண்டு இருக்கீங்க. நான் பாரதியார் கண்ட புதுமைப்பெண்! (வயித்தை பிடிச்சுண்டு யாரங்கே சிரிக்கறா?பிச்சுடுவேன் பிச்சு ஆமா)
கிஸான் ஸ்க்வாஷ் அப்பொ ரொம்ப ஃபேமஸ். குறிப்பா க்ரேப் ஸ்க்வாஷ்ல மருந்து வாடை வரும். ஆனாலும் பேயா வாங்கி குடிப்போம். எல்கே செய்யுற மாதிரியா? மேலே ஜெய்லானியின் கமெண்ட்டை படிக்கலையா?

@விக்னேஷ்வரி
ரொம்ப நன்றிங்க.

அநன்யா மஹாதேவன் said...

@மங்குனி,
:((. ஏதோ பங்காளிங்க சண்டைன்னு பத்திரிக்கையில படிச்சேன்னு நினைக்கறேன். கம்பெனியே காலியா? ரொம்ப வருத்தமா இருக்கே! அந்த சுவை இனி குடிக்க முடியாதா? பச்!
டொரினோ பாட்டிலே ரொம்ப அழகா இருக்கும். ஆமா டொரினோ, லிம்கா, கோல்டு ஸ்பாட், ரஷ், தம்ஸப், ஸ்ப்ரிண்ட் இதெல்லாம் தான் அப்போ ஃபேம்ஸ் பானங்கள்! 2.50 ரூபாய் விலை. அப்போ அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி ட்ரிங்ஸ்!

@பத்மநாபன் அங்கிள்,
.. ``கலர்``ன்னு சொல்லற்றாங்களான்னு தெரியல..அந்த காலத்தில் ``கலர்`` அது ஒரு ரிச் உபசரிப்பு பானம்..
ரொம்ப சரி. கலர் வாங்கிக்குடுத்தாயிங்கன்னு பீத்திக்குவாங்க. முக்கியமா மாப்பிள்ளை வந்தா கண்டிப்பா கலர் உபச்சாரம் அவசியம்!
”லெமன் ஜூஸ்” உங்கள் கருத்தை வன்மையா கண்டிக்கறேன். அங்கிளுக்கு தெரியுமா பன்னீர்ஜோடா வாசனை? என்ன ரசிகப்பெருமக்களே, தப்பா ஏதும் சொன்னேன்? அதை சாப்பிட்டு பார்த்தா தெரியும் அதன் சுவை!

@அனாமிகா டார்லிங்,
இல்லை, லேபிள் ஒட்டித்தான் வரும். கோலி சோடா பாட்டில்லேயே பன்னீர்ன்னு போட்டு இருப்பாங்க.
மறுபடியும் சொல்றேன், ரஸ்னா எனக்கும் பிடிக்கும். ஒரே ஒரு கண்டிஷன் அதை அம்மா பண்ணனும். அப்போ தான் டேஸ்டு. கடைகள்ல குடுக்கும் ரஸ்னா மஹா அபத்தமா இருக்கும். சுவையே இல்லாம கலருக்காக எல்லாரும் வாங்கிக்குடிப்பாங்க. அதைத்தான் கேலி பண்ணினேன். வேணா இன்னொரு வாட்டி படிச்சுப்பாருங்க. ஐ லவ் யூ ரஸ்னா, அபுதாபி கிளை. இங்கே எல்லாம் டேங் தான். ஏகப்பட்ட கெமிக்கல்ஸ் போட்டு புளிப்பான சிட்ரிக் ஆசிட் சேர்க்கப்பட்ட பொடி. சில சம்யம் நாக்குல புண் வரும். :((

வெங்கட் நாகராஜ் said...

இது எனது முதல் வருகை. திருச்சியில இப்பவும் மிகவும் பாப்புலர் - பன்னீர் சோடாதான். முன்னாடி 2-3 ரூபாய்க்கு கிடைத்தது, இப்போது 7 ரூபாய். ஆனாலும் பழைய டேஸ்ட் இருப்பதில்லை. ஒவ்வொரு முறை திருச்சி செல்லும்போதும் கண்டிப்பாக பன்னீர் சோடாவுக்கு ஒரு ஜே சொல்லாமல் வருவதில்லை.

மங்குனி அமைச்சர் said...

ஹலோ , போதும் தூங்குனது எந்திருச்சு வெளிய வாங்க

அப்பாவி தங்கமணி said...

ஆத்தா... முடியல ஆத்தா... என் இனிய தமிழ் மக்களே.. கழக கண்மணிகளே... நீங்களே சொல்லுங்க... இதுக்கு என்னோட இட்லியே பரவாஇல்ல தானே.... (எப்படி இப்படி எல்லாம் .... சோடா குடிச்சுட்டே யோசிப்பாங்களோ....?)

அப்பாவி தங்கமணி said...

நான் மொதல் மொதல்ல பன்னீர் சோடா குடிச்சது... மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவில்ல... உச்சி வெயில் மண்டைய எரிக்கற மே மாசத்துல அது தான் தேவாமிர்தமா இருந்தது... என்ன பரந்து எல்லாம் ஞாபகம் இல்ல... அது ஆச்சு பதினேழு வருஷம்... 8th standard annual லீவுன்னு நெனைக்கிறேன்...

asiya omar said...

அநன்யா நானும் இந்த சோடாவெல்லாம் விட்டு வைத்ததில்லை,ஆனால் உங்களை மாதிரி ரசித்து குடித்தது இல்லை,ஒரே கல்ப் தான் இனி ஊர் போனால் வாங்கி பார்க்கணும்.அதுவும் மாப்பிள்ளை விநாயகர் கிடைக்கணுமே,எங்க ஊரில் காளி மார்க் தான்.

கண்மணி/kanmani said...

ம்ம்ம் பன்னீர் சோடா ஒரு டேஸ்ட்டுதான்...அதிலும் மூடியத் திறக்கிற மாதிரி இல்லாம...குண்டு ஒடச்சி குடிக்கும் சோடா இருக்கே...உடைக்கும் அழகே தனி...

அது ஒரு கனாக் காலம் said...

நீங்க பன்னீர் சோடா ...நான் http://trichisundar.blogspot.com/2010/05/blog-post_24.ஹ்த்ம்ல்

கீதா சாம்பசிவம் said...

பக்கம் கண்டறியப்படவில்லை
மன்னிக்கவும், அது ஒரு கனாக் காலம் வலைப்பதிவில் நீங்கள் காண முயற்சிக்கும் பக்கம் கிடைக்கவில்லை.

வலைப்பதிவு முகப்பு பக்கத்துக்கு செல்க

அநன்யா மஹாதேவன் said...

மாத்தா கீத்தானந்த மயி,
இந்தாங்க லின்க்:

http://trichisundar.blogspot.com/2010/05/blog-post_24.html

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

LK said...

//. அது ஆச்சு பதினேழு வருஷம்... 8th standard annual லீவுன்னு நெனைக்கிறேன்..//

appavi thanamani kandippad neenga enakku akkathan

Maheshwaran said...

யக்கோவ்.... என்னா ஒரு வாரமா சவுண்டே இல்லை??? எங்கேயாவது வேலைக்கு சேர்ந்துட்டியா?

அப்பாவி தங்கமணி said...

//LK said...
//. அது ஆச்சு பதினேழு வருஷம்... 8th standard annual லீவுன்னு நெனைக்கிறேன்..//
appavi thanamani kandippad neenga enakku akkathan//

பொய் சொன்னாலும் ஒரு அளவா சொல்லணும் தாத்தா... இது அந்த கடவுளுக்கே அடுக்காது....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எனக்கு இப்பவே பன்னீர் சோடா குடிக்கனும்போல இருக்கு..

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் அருமையான இந்தப் பகிர்வை பகிர்ந்துள்ளேன்.மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்தும்.

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

Related Posts with Thumbnails