Pages

Wednesday, April 10, 2013

ரயில் பயணங்களில்...



இது கொஞ்சம் நீளமான பஜிவு. அதுனால ரெண்டு பார்ட்டா வந்து படிக்கவும்..

ஃபேஸ்புக்கில் இன்னைக்கு கார்த்தால கீழ்க்கண்ட ரயில் ஃபோடோவை பார்த்துட்டு ஒரே சிரிப்பு.

ஏப்ரல் மேன்னாலே வெக்கேஷன் டைம் தானே. ரயிலில் லீவுக்கு ஊருக்கு போறதுன்னா எவ்ளோ சந்தோஷம்? வழக்கமா விஜயவாடாவில் இருந்து, தி நைனா சென்னைக்கு ஏப்ரல் மாசம் போறதுக்கு ஃபிப்ரவரியிலேயே டிக்கெட் புக் பண்ணிடுவார். பரீட்சையெல்லாம் முடிச்சுட்டு, தாத்தா, பாட்டி , மாமாகூட என்ஜாய் பண்றதுக்கு நாங்களும் ரெடியாயிடுவோம்.

ரயில்னாலே அம்மா டின்க்கிள், சம்பக் எல்லாம் வாங்கித்தருவா. அடுத்த சிக்னல் வரதுக்குள்ளே அதை படிச்சு முடிச்சுடுவோம். அப்புறம் வழியெல்லாம் ரயில் ஆராய்ச்சி, குரங்கு சேஷ்டை, திட்டு, திங்கறது எக்ஸெட்ரா.. எக்ஸெட்ரா.. அட லீவுல இதெல்லாம் ஜகஜமப்பா...

ரயிலில் போகும்போது எல்லாக்குழந்தைகள் மாதிரியே நாங்களும் பக்கிகளாகத் தான் இருந்தோம். அதுக்கப்புறம் தான் - அது பழகிடுத்து. எது வந்தாலும் வாங்கித்தாங்கம்மான்னு பக்கித்தனமா கேட்போம்.. அம்மாவும் கண்களாலேயே பதிலைச்சொல்லுவார். மாட்டாராம். :)

அந்த காலகட்டத்துல தனியா பயணம் பண்றவங்க மட்டும் தான் ரயிலில் பேண்ட்ரியில் வாங்கி சாப்பிடுவாங்க. ரயில்லே எப்போவுமே வீட்டு சாப்பாடு தான்.. இட்லி, புளியோதரை சர்வ சாதாரண ரயில் உண்டிகள். மத்த சமயத்தில் திங்கணும்னா இருக்கவே இருக்கு போன தீபாவளிக்கு பண்ணின பட்சணங்கள் முறுக்கு, தேன்குழல் இத்யாதிகள். ”சூடானே.. கட்லே…..ட்”ன்னு வித்துண்டு வருவா.. நானும் தங்கை மணியும்,”அம்மா”ன்னு திரும்பினாப் போச்சு, ஏதாவது ஒரு சம்படம் வெளியே வரும் அதிலிருந்து அம்ருத துல்யமான ஏதாவது ஒரு தட்டையின் உடைந்த பீஸ் வரும். அத்ருப்தியாக மூஞ்சியை வெச்சுண்டு அதை சாப்பிட்டு தீருவோம். எதிர்த்துப் பேசினால் அடி தான். அடுத்த  படியாக ”வேடி வேடி செனககாயலு”ன்னு வித்துண்டு வருவா(சுடச்சுட வறுத்த வேர்க்கடலையாம் சொல்லும்போதே ஜொள்ளு கொட்டலை? நேக்கு கொட்றதே!) .. மீண்டும் ”அம்மா”ன்னு திரும்பினா ஆத்துல பண்ணின ’சிட்டி பூஸலு’வை கொடுப்பா.(எல்லா தானியங்களையும் எண்ணெயில்லாமல் வறுப்பது.. கரகரன்னு இருக்கும்.. ஆனா சுத்தமா டேஸ்டே இருக்காது அல்லது அந்த வயதில எங்களுக்கு பிடிக்காது) இப்படி ஒவ்வோரு டிஷ்ஷுக்கும் ஏதாவது ஒரு ஹோம் மேட் ஆல்டர்னேட்டிவ்ஸ் வெச்சுண்டு இருப்பா. ரொம்ப மோசம்!

அம்மா அதையெல்லாம் ஏன் வாங்கித்தரலைன்னு பிற்காலத்துல தான் தெரிஞ்சுண்டோம்! நாங்க பண்ணின ரயில் பயணங்களுக்கு அதையெல்லாம் அம்மா வாங்கித்தந்திருந்தால், பாதியிலேயே நானும் தங்கைமணியும் ஃபணால் ஆகியிருப்போம்!

டின்க்கிள், பேண்ட்ரிகார் கட்லட், தண்ணி காஃபி, தண்ணி டீ, மட்கா சாய்(கோரக்பூர்), சிக்கி(லோனாவாலா, கண்டாலா), புலிஹோரன்னம்(குண்டக்கல்),ஆவின் பால் (சென்னை செண்ட்ரல்)  இதெல்லாம் தவிற நினைவுக்கு வரும் சில நிகழ்ச்சிகள் கீழ்க்கண்டவாறு:

ஒரு வாட்டி மாமாவும் அத்தையும் குடும்ப சஹிதம் திருச்சியிலிருந்து வந்திருந்தார்கள். லக்கேஜ் கொஞ்சம் அதிகம். பார்க்கிலிருந்து குரோம்பேட்டை வர லக்கேஜுகளுடன் ஒவ்வொருத்தராக  ஏறுவதற்குள் (அவர்கள் கொன்ன்ன்ன்ன்ச்சம் ஸ்லோவாக்கும்) ரயில் கிளம்பிவிட, மாமா மட்டும் இன்னும் ஏறவில்லை. உடனே அவர் தங்கள் ஊர் சிட்டி பஸ் ஞாபகத்தில் “ஹோல்டான் ஹோல்டான்” என்று கத்த, அந்த ரணகளத்திலேயும் மை நைனா சிரிச்சுண்டே நக்கலடிச்சுண்டே மாமாவை இழுத்து உள்ளே போட்டிருக்கார். அப்புறம் என்ன? ஹோல்டான் ஜோக்கை வர்றவா போறவா எல்லார்கிட்டேயும் சொல்லி சிரிச்சுண்டு இருப்போம். கொஞ்ச நாளைக்கு அவர் பேரே ஹோல்டான் மாமான்னே ஆயிடுத்து.இருக்காதா பின்னே?

இதே குடும்பத்துடனான இன்னோரு ரயில் ஜோக் என்னன்னா, நாங்கள் சப்தகிரி ரயிலேறி திருப்பதி போகலாம்ன்னு ப்ளான் பண்னி இருந்தோம். 1995 டிஸம்பர் - 24ந்தேதி.. நியூ இயர், கிறிஸ்மஸ் லீவு வேற.. கூட்ட்ட்ட்ட்டமான கூட்டம்.. உட்காரவும் இடமில்லை.. ரயில் ஏறியாச்சு. ”ஆனாலும் வெங்கி எப்போவுமே இப்படி சோதிப்பான், பரவாயில்லை போயிட்டு வந்துடலாம்.” அப்படீன்னு அம்மாவும் அத்தையும் பேசிண்டு இருக்க, நைனா, மாமா அண்டு கடைக்குட்டி திவ்ஸ்(திவ்யா) மட்டும் கீழே இறங்கி (ஸ்டையிலாம்) வண்டி கிளம்ப காத்துண்டு இருந்தா. நைனா,” வண்டி இப்போ போகாது, எஞ்சின் மாத்திண்டு இருக்கான்”னு சொன்னார். நாங்கள் இறங்கிப் பார்த்தப்போ சிக்னல் பச்சையா இருந்தது. அப்பா க்ரீன் போட்டாச்சு ஏறிடுங்கன்னு சொன்னோம். இல்ல்லேடீ.. எஞ்சின் மாத்திண்டு இருக்காங்கன்னு அவர் விடாப்பிடியா அதையே சொல்லிண்டு இருந்தார். “அம்மா நாமளும் இறங்கிடலாம்மா, அடுத்த வாட்டி திருப்பதி போயிக்கலாம்”ன்னு நானும் பிரியாவும் சொல்லிண்டு இருந்தோம். தங்கைமணி மட்டும் நியூட்ரல் கியர்ல இருந்தா.

“சிக்னல் இன்னும் போடலை,  இறங்கறதுன்னா இப்போவே இறங்குங்க”ன்னு மை நைனா சொல்ல,ஷாப்பர் பேக் எல்லாம் கைல எடுத்துண்டு  இறங்கிடலாம்ன்னு ஆயித்தம் ஆனோம். ட்ட்ட்ட்டங்ன்னு சத்தத்தோட சப்தகிரியான் கிளம்பிட்டான்! ”அடேடே.. ரயில் கிளம்பிடுத்தே”ன்னு மை நைனா வாயால் சொன்னாலும் பயத்தாலும், முஞ்சியில் பல்பு அடிச்ச அதிர்ச்சியாலும்  அசந்து போய், பிறகு சுதாரிச்சுண்டு (ஹீரோவாக்கும்) ரயிலில் எகிறி ஏறிவிட்டார்.. ஹோல்டான் மாமா பயத்தில் நடுங்கி,தி நைனாவை பிடித்துக்கொண்டு தாவி எறிட்டார். திவ்ஸ் மட்டும் (அவளுக்கு ஒரு 8 வயசு இருக்கும்) பாவம் திரு திருன்னு முழிச்சுண்டு பயந்துண்டு ஸ்டேஷன்லேயெ நின்னுண்டு இருந்தா. எங்க கூட நின்னுண்டு இருந்த ஒருவர் படியில இருந்து இறங்கி குழந்தையை ஒரே கவ்வாக கவ்வி வண்டிக்குள் இறக்கினார். அதற்கப்புறம் அவர் சொன்ன வார்த்தைகள் சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டது    ” பாப்பா பயந்துருச்சு”

ஆனா பாருங்க, திவ்ஸ் இதெயெல்லாம் பத்தி கவலையே படாமல் அவள் காது தோடு கீழே விழுந்துடுச்சாம். அதை நினைச்சு புலம்பிண்டே வந்தா. அக்காடிங் டு ஹர், உலகத்திலேயே மிகக்கொடுமையான விஷயம் காதில் தோடே இல்லாமல் திருப்பதிக்கு சப்தகிரி ரயிலில் போவதுதானாம்! ஏடுகொண்டலவாடா! காப்பாடு!

இது நடந்தது எண்பதுகளில். 87என்பதாக நினைவு. ஹைத்ராபாதிலிருந்து சென்னைக்கு எண்பது வயதான சுப்பிஅவ்வாவுடன் என்னை அனுப்பினார்கள்(துணைக்காம்!!!??). எனக்கு ஒரு 10 வயசு இருக்கும்.(அடேங்கப்பா என்ன ஒரு மெச்சூரிட்டி?) அப்பெல்லாம் ஒரு  மண்ஜாடியில் தான் தண்ணீர் எடுத்துப்போம். அதுடைய மூக்கில் ஒரு தம்பளரை கவிழ்த்தி எடுத்துண்டு போவோம். படு மோசமான வெயிலாதலால் ரொம்ப தேவையாக இருக்கும். அந்தப்பானைத்தண்ணியின் வாசனையே அலாதி தான். பகல் ட்ரெயின்.

சுப்பி அவ்வாவுக்கு டயாபட்டீஸ் இருந்தது. பாவம் ரொம்ப தாகம் எடுக்கும், தண்ணி ஜில்லுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி அந்த மண் ஜாடியை எடுத்துண்டோம். வழக்கம்போல என் ஊழ்வினை தூண்ட அந்த மண் ஜாடியில் ஓட்டை விழுந்துடுத்து. கம்பார்ட்மெண்ட் பூரா நாங்க கொண்டு போன தண்ணி லீக் ஆகி எல்லாரும் வந்து நமக்கு தெரியாத விஷயத்தை புதுசா கண்டுபிடிச்சு சொல்ற மாதிரி ”தண்ணி லீக் ஆகுதுங்க, பாருங்க” ”நீள்ளு படுதுந்தத்ண்டி” ”ஜக் டூட் கயாஹை க்யா? கித்னா பானி கிரா தியா ஹை?”அப்படீங்கற ஃப்ளாஷ் ந்யூஸை சொல்லிட்டு போயிண்டு இருந்தாங்க. அதுவும் எங்க சீட்டு டாய்லெட்டுக்கு பக்கத்துல இருக்கும் ஃபர்ஸ்ட் சீட் வேறையா, டாய்லெட்ல தண்ணி வராட்டி கூட இந்த தண்ணி இருக்கேன்னு நினைக்கற அளவுக்கு அந்த 3 லிட்டரும் வடிந்து முடிஞ்சுது.

கம்பார்ட்மெண்ட் பூரா ஒரு ஓடை மாதிரி அந்த தண்ணி அடுத்த டாய்லெட்டையும் சேர்த்தி சுத்தம் பண்ணிண்டு இருந்தது. ஒரே கேவலம் ஹைன்னு நினைச்சுண்டேன். ஹி ஹி.. இதெல்லாம் நமக்கு சாதாரணம் தானே? தண்ணி இல்லை.. நல்ல சம்மர் வேற, பாட்டி பாவம்.  ஏதோ ஒரு ஊரில் ரயில் நிற்க, அதிகப்பிரசங்கித்தனமா நான் இறங்கி ஒரு சின்ன வாட்டர் கேன் வாங்கினேன். அதில் ரெண்டு சொட்டு தண்ணி நிறைச்சேனோ இல்லையோ, ரயிலுக்கு மூக்குல வேர்த்து face book chat செய்யும்போது பாதியிலேயே அப்பீடாகும் நண்பர்களைப்போல "அந்ன்ஸ், டாட்டா பை பைன்னு சொல்லிட்டு அப்பீட் ஆயிடுத்து.. “ஐய்யோ குழந்தை குழந்தை”ன்னு சுப்பி அவ்வா டென்ஷனோட கத்த, கூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து வந்துட்டாங்க. நானா அஞ்சுவேன்?

 தண்ணி அடுத்த ஸ்டேஷன்ல நிறைச்சுக்கலாம்ன்னு மறக்காம குழாயை மூடிட்டு கேனையும் மூடிட்டு, சங்கிலி தம்ப்ளரை சபீனா போட்டு அலம்பி வெச்சுட்டு, சின்கை ப்ரஷ் போட்டு நல்லா தேய்ச்சு அலம்பிட்டு, அந்தப்பக்கம் சொட்டிண்டு இருந்த குழாயை ப்ளம்பிங் ஒர்க் பார்த்துட்டு ஒரு க்ஷண நேரத்தில் ஓ…..டிப்போய் ஏறிட்டேனே! (பின்னே என்னங்க? இதையே தமிழ்ப்படத்துல சொன்னா ஒத்துப்பீங்க.. நான் சொன்னா தப்பா?) அந்த நிகழ்ச்சியை அவ்வா ‘அவள் ஒரு ஜான்ஸிராணியாக்கும்” ரேஞ்சுக்கு எங்க குடும்ப வட்டத்துல பரப்பிட்டா! அதுக்கப்புறம் எங்கே போனாலும் எனக்கு மாலை, மரியாதி, பரிவட்டம், ரயில்வண்டி, ச்ச்சே சாரி வில்லுவண்டி.. ஏன் கேக்கறீங்க போங்க!

1996ல் காசி கயா தில்லி போகலாம்ன்னு அப்பா ப்ளான் பண்ணினார். 12 நாள் ட்ரிப். குடும்ப உறுப்பினர்கள் 8 பேர். மொத்தம் லக்கேஜுகள் 26. தெலுங்கில் ‘சாலந்தானிகி சக்கிலால கெம்ப’ன்னு சொல்லுவாங்க. பின்னே என்ன? முள்ளு முறுக்கு ,தேன்குழல்,தட்டை,மிக்சர், அப்புறம் க்ராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ்ல கிடைக்கும் அத்தனை பதார்த்தங்களையும் சேர்த்து ஏகப்பட்ட ஐட்டம்ஸ் அவ்வாவும் அத்தையும் அம்மாவுமாக பண்ணி எடுத்துண்டு ஆளுக்கு துணி மணிகள், டாய்லடரீஸ்,  இதர சாமானங்களெல்லாம் எடுத்துண்டா இத்தனை லக்கேஜுகள்! எங்களை வழியனுப்ப வந்த சின்ன மாமா சொன்னார் “இவா என்னமோ கழைக்கூத்தாடிகள் மாதிரி டூர் கிளம்பி இருக்கா” . இத்தனை சாமானங்களையும் வெச்சுண்டு வாரணாஸியில் ட்ராஃபிக்கில் சிக்கிண்டு ரயிலை மிஸ் பண்ண இருந்தோம். எப்படியோ லின்க் ரயிலை பிடிச்சு தில்லி போறதுக்குள்ளே பெரும் பிரயத்னம் ஆயிடுத்து.

இப்பெல்லாம் தான் இந்த லக்கேஜ் பிரச்சினையில்லாம பிரயாணம் பண்ணறொம். முன்னாடியெல்லாம் சீடை முறுக்கு எல்லாம் ஒரு நாலு பை நிறையச எடுத்துண்டு தாறுமாறா லக்கேஜ் ஆயிடும். இப்போ நோ சீடை நோ முறுக்ஸ். 

இப்போ லேட்டஸ்டு ட்ரெயின் நிகழ்ச்சிக்கு வருவோம். எங்க கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், நானும் இவரும் பாலக்காட்டுக்கு கிரஹப்பிரவேசத்துக்கு மற்ற குடும்பத்தினரோட போகணும். அங்கிருந்து இதர கோவில்கள், கடைசியில் கோடைக்கானல் போறதா ப்ளான். அடுத்த ஒரு வாரத்துக்கு  டைட் ஷெட்யூல்  இருந்தது. அதனால் ஏகப்பட்ட துணிமணிகளுடன் கிளம்பிட்டோம்.

 போரூரிலிருந்து செண்ட்ரலுக்கு போறதுக்குள்ளே அப்படி ஒரு டென்ஷன். பின்னே வேகம்னா வேகம் அப்படி ஒரு ஆமை வேகம். செம்மத்தியான  ட்ராஃபிக் ஜாம்! நாங்க இப்படி படு ஃபாஸ்டா சென்னையில் தெருக்களையெல்லாம் சுத்தி பார்த்துண்டு இருந்த (அ)சமயத்துல ரயிலுக்கு டைமாச்சுன்னு என் மச்சினர்கள்ஃபோன் பண்ணிண்டே இருந்தாங்க.  நாங்களோ தமிழ் சினிமா மாதிரி பாதி வழியில் இருக்கோம்! (ட்ராஃபிக், ரயில், ரயில் ட்ராஃபிக் இதெல்லாம் மாத்தி மாத்தி இப்போ ஜூம் பண்ணி காட்டணும். )மறுநாள் பாலக்காட்டு வீட்டில் எனக்கு கிரஹப்பிரவேசம். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு! அவ்ளோ லக்கேஜும் எடுத்துண்டு அப்படியே செண்ட்ரல் போய்ச்சேர்ந்தாலும் அதையெல்லாம் ட்ரெயினில் வைப்பது அசாத்தியம்,. எப்படியோ 2 நிமிஷம் முன்னாடி ட்ரெயின் கிளம்பறதுக்குள்ளே செண்ட்ரல் வந்தோம். கோபால் அண்ணா ப்ளாட்ஃபார்ம் பூரா எங்களுடன் லக்கேஜுகளை தூக்கிண்டு ஓடி வந்தார். வேர்த்து விறுவிறுத்து கோச்சிலேயே ஏறிட்டோம்! இப்போ நினைச்சாலும் எப்படி ஏறினோமோன்னு ஆச்சரியப்படுவேன்! மன்னி கேட்டா, ”ஏன் மோஹன் இவ்ளோ லக்கேஜ்?” இங்கே இவ்ளோ ரணகளம் ஆயிண்டு இருக்கு, இதுக்கு ரங்குவின் பதில், மன்னி நாங்க ஹனிமூன்ல விதவிதமா ட்ரெஸ் பண்ணிண்டு டூயட் பாடப்போறோம்.. க்க்கும்.. பாடிட்டாலும்!

15 comments:

எல் கே said...

பாண்ட் சைஸ் மாற்றவும். கண்ணு வலிக்குது

அப்பாதுரை said...

டூ மெனி பயனம்ஸ் இன் டூ எங் வயஸ். நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க. 
எப்பவாவது எதையாவது இல்லை யாரையாவது காணாமப் பண்ணியிருக்கீங்களோனு படிச்சிட்டே வந்தா.. அட நீங்க நம்ம டைப்.. கொண்டு வந்த சாப்பாடு தவிர எதையுமே காணாமப் போக்கினதே இல்லை.
ஜன்னல் சீட்டுக்கு அடிச்சிட்டிருக்கீன்களா? 

ரீஜண்டா ஹைத்-சென் பயணம் செய்தேன். காசிகுடா எக்ஸ்ப்ரஸ். முப்பத்தாறு மணி நேரப் பயணம். நரகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹோல்டான் நல்ல ஜோக்...

சிறப்பாக பாடி கொண்டாட வாழ்த்துக்கள்...

enrenrum16 said...

பதிவு முழுவதும் நல்ல நகைச்சுவைகள்... ஹோல்டான்.... அப்பா... எழுதும்போதே சிரிப்பு தாங்க முடியல..

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.

கௌதமன் said...

எழுத்துரு மாற்றவும். படிக்க முடியல.

கௌதமன் said...

இப்போ படிக்க முடியுது. எனக்கு ஒரு டவுட்டு. திருச்சியிலேயிருந்து வந்த மாமா எக்மோரிலே சபர்பன் வண்டி ஏறலாமே! எப்படி பார்க் ஸ்டேஷனுக்குப் போனார், அதுவும் மூட்டை முடிச்சுகளோடு!

வெங்கட் நாகராஜ் said...

சுவாரஸ்யம்....

Ranjani Narayanan said...

நல்ல நகைச்சுவை அனுபவங்கள்.ஒவ்வொருமுறை நீங்கள் எல்லோரும் நல்லபடியாக ரயிலில் ஏறினீர்களா என்பதே 'சஸ்பென்ஸ்!

பாப்பா பாவம், பயந்துடுத்து! சிரித்து மாளவில்லை!

Geetha Sambasivam said...

//அந்த காலகட்டத்துல தனியா பயணம் பண்றவங்க மட்டும் தான் ரயிலில் பேண்ட்ரியில் வாங்கி சாப்பிடுவாங்க.//

யக்காவ், வயசாயிடுச்சுனு ஒத்துக்கறீங்க போல! :)))))


//நாங்க ஹனிமூன்ல விதவிதமா ட்ரெஸ் பண்ணிண்டு டூயட் பாடப்போறோம்.. க்க்கும்.. பாடிட்டாலும்!//

ஹிஹிஹி, கற்பனை பண்ணிப் பார்த்தேன். ஹிஹிஹிஹி

Geetha Sambasivam said...

அப்பாதுரை, ஜன்னல் சீட்டுக்கு இப்போவும் நாங்க ரெண்டு பேரும், நானும் ரங்க்ஸும் தான் சண்டை போட்டுப்போமே!:))))

அதோட நீங்க என்னமோ 36 மணி நேரப்பயணத்தை நரகம்னு சொல்றீங்க??

இதே காசிகுடா எக்ஸ்பிரஸிலே காசிகுடாவிலே இருந்து ராஜஸ்தான் வரை போயிருக்கோம். முழுசா மூணு நாள். மூணு நாள்னா மூணு பகல், மூணு ராத்திரி. ஹாஹாஹா எங்களோட ரயில் பயணங்களுக்கு முன்னால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஜுஜுபி!

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவையான பகிர்வு...
இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மன்னி நாங்க ஹனிமூன்ல விதவிதமா ட்ரெஸ் பண்ணிண்டு டூயட் பாடப்போறோம்//

ஹ ஹ ஹ... சிரிச்சு சிரிச்சு...:)))) அதுசரி, டூயட்ல என்ன பாட்டு? "சோதனை மேல் சோதனையா?"...:)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

sury siva said...




என்ன சுப்பு தாத்தா ! கமென்ட் போடச்சொன்னா போஸ்ட் போட்டிருக்கேள் ! இருந்தாலும் சுவையா
இருக்கு அப்படின்னு

நீங்க... சொன்னதை கேட்டுண்டு, ஏதோ ஒரு காலத்துலே தக்குடு தக்குடு ஒரு புள்ள சிரிக்க சிரிக்க‌
எழுதுமே அந்த காலத்துலே நீங்களும் அந்த போஸ்டுக்கு கமென்ட் பண்ணினதெல்லாம்
ஞாபகத்துக்கு வந்து....

இங்கே வந்து பார்த்தா .....

ஒரு பயணக்கட்டுரை....

அதுவும் 1987 லே பத்து வயசிலே ஆரம்பிச்சு, இப்ப இதுவரைக்கும்

23 வருசமா பயணங்கள் எல்லாத்தையுமே பயணங்களாக எழுதி ரொம்ப சுவாரசியமா
இருக்கே... என்று படிச்சு...

ஒரு தினுசா புரிஞ்சுண்டு....

கமென்ட் போடுவோம் என்று பேனாவை எடுத்தபொழுது....

கடைசியிலே " கிறுக்கிய ராகுகாலம் " 11.34 அப்படின்னு போட்டிருக்கு...

வந்தது தான் வந்தோம்.. ராகுகாலத்திலே வந்துட்டோமே... முதல் முதலா கமென்ட் போடணுமே

அப்படின்னு நினைச்சு,

இருக்கட்டும். நல்ல சுபமுகூர்த்த நாளன்னிக்கு நல்ல லக்னம்
ததேவ லக்னம் சுதினம் ததேவா தாராபலம் சந்த்ர பலம் ததேவா....
அப்படின்னு நல்ல நக்ஷத்திரத்தினத்தன்னிக்கு நல்ல ஹோரைலே
வர்றேன்.
வந்ததுக்கு ஒரு ஆசிர்வாதமும் சொல்லிட்டு போகட்டுமா... of course
வித் ய்வர் பெர்மிஷன்.

தீர்க்க சுமங்கலி பவ. சர்வ மங்களானி பவந்து.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

Related Posts with Thumbnails