Pages

Thursday, April 25, 2013

எக்மோர் மியூசியம் தியேட்டரில் சுஜாதா வந்திருந்தார்- இருக்காதா பின்னே? சுஜாதா is God அல்லவோ?

தலைப்பு கொஞ்சம் நீளமோ? பரவாயில்லை... இருந்துட்டு போகட்டும்!
நேத்திக்கு கார்த்தால, எப்பவும்  போல பக்கித்தனமா ட்ரெஸ் பண்ணிண்டு அஃபீஸுக்கு வந்தேன். ஆஃபீஸ் மெயில் ஓப்பன் பண்றேனோ இல்லையோ முகப்புத்தகம் முதல்லே ஓப்பன் பண்ணிடுவேனாக்கும். நெக்ஸ்டு ஜி மெயில், ஸ்கைப், இப்படி ஆஃபீஸுக்கு அத்தியாவசிய பல அப்ளிகேஷன்களை எல்லாம் திறந்துட்டு கடைசியா போனாப்போறதுன்னு ஆஃபீஸ் மெயிலை திறப்பது வழக்கம். (சில நாள் திறப்பதே கிடையாது.)

நேத்திக்கும் அப்படித்தான் 'எங்கள் ப்ளாக்’ கெளத்தமன்ஜி நாடக ரசிகர்களுக்குன்னு போட்டு, கடவுள் வந்திருந்தார் நாடகத்தை பத்தி போட்டிருந்தார். நேரம், இடம் எல்லாம் பார்த்துண்டேன். உடனே ரங்குவை ரிக்வெஸ்ட் பண்ணேன்.இவருக்குத்தான் இந்த ’ஈள் பூள்’ அழுகை மெகா சீரியல் எல்லாம் இஷ்டமாச்சே? அதுனால ”ஃபேமிலி சப்ஜெக்டாம்ன்னா”ன்னு சொல்லி வெச்சேன். பின்னே மடிசார் மாமியெல்லாம் இருந்தா ஃபேமிலி சப்ஜெக்ட் தானே?

இவர் தான் எங்கேயும் சாமான்யமா கிளம்ப மாட்டாரே! நாற்காலியில் பிஷின், காதுல  ப்ளூடூத்தில் பிஷின், கையில் Laptop / Tab / Smart Phone ஆகியவற்றுடன் பிஷின். என்னத்த சொல்ல? ஆனாலும் அவருக்கு என்னை எங்கேயும் கூட்டிண்டு போறதில்லைன்னு ரொம்ப குறை. அதுனால சட்டுன்னு ஒத்துண்டுட்டார்! எனக்கே ஆச்சரியம்! 

சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடக வடிவில் பாதி படிச்சிருக்கேன்.  அதை அசை போட்டுண்டே எக்மோரில் இறங்கி நடக்கலாம்ன்னு தான் நினைச்சோம். ஆனா அங்கே இருந்த கடமை தவராத  போலீஸ்காரர், ”17ஈ பஸ் வரும் அதில் தான் போகணும், 10 நிமிசத்துல போயிரலாம்”ன்னு ரொம்பவே வற்புறுத்தினார்.விட்டா, எங்க கூட வந்து நாங்க அந்த பஸ்ஸில் ஏறறோமான்னு செக் பண்ணுவார் போல இருந்தது! சரின்னு ஒப்புத்துண்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கும் தியேட்டருக்கும் வெறும் 1.2 கிமி தான்னு கூகிள் மேப்பில் பார்த்தாச்சு, இருந்தாலும் வெக்கமே இல்லாம காலி பஸ்ஸுல உக்காண்டு போனோம். ரங்குவின் கடமை உணர்ச்சியால் நான் நெகிழ்ந்தேன். பின்னே? டிக்கெட்டெல்லாம் வாங்கினார்! 

மியூசியம் தியேட்டரில் போய் உக்காண்டப்போ ஜில்லுன்னு இருந்தது. படு அமைதி. அரங்கம் மெதுவாக நிரம்பிக்கொண்டு இருந்தது. யாரையும் தெரியாது. ஜஸ்டு நாடகம் பார்த்து எஞ்சாய் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் நான் நினைச்சுண்டு இருந்தேன். திடீர்ன்னு பார்த்தா RVS அண்ணா குடும்பத்தோட வந்திருக்கார். மாதங்கியை சங்கீதா மன்னி தான் ஃபர்ஸ்ட் பார்த்தா. எல்லாரும்  அடுத்தடுத்த ரோக்களில் சேர்ந்து உக்காண்டோம். ஒரு ஃபேமிலியா உக்காண்டு பார்த்தாப்புல பார்த்து ரசிச்சோம். அதிலும் RVS அண்ணாவின் பெண்கள் படுசுட்டி. கூர்மையா கவனிச்சுண்டு இருந்தார்கள். 

இப்போ நாடகத்தை பத்தி: 

நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன். நாடகம் முடிஞ்சப்போ திரு பாரதி மணி அவர்களுக்கு Standing ovation கொடுத்திருக்கணும்ன்னு தோணித்து. Hats off to his efforts! இதெல்லாம் பண்றது சாதாரண விஷயம் இல்லை! சொந்தக்காசு போட்டு ஆஃபீஸுக்கு ஒரு பேனா வாங்கினாலே ரீஇம்பர்ஸ்மெண்ட் கேட்கும் இந்த கால கட்டத்துல, கைக்காசு போட்டு நாடகம் நடத்தறது, அதுவும் இப்போ இருக்கும் விலைவாசிக்கு, க்ரேட் சார் நீங்க! அம்ஜத் அப்படீங்கறவருக்கும் இதில் நிறைய பங்களிப்பு இருக்கு. வாழ்க!

பாரதி மணி அவர்கள், தன்  அருமையான நடிப்பால் நம்மை கவர்கிறார். ஒரு டிப்பிகல் மிடில் க்ளாஸ் அச்சு பிச்சு மாமாவாக அருமையாக நடித்திருந்தார். நான் அமரர் பூர்ணம் விசுவனாதன் அவர்களின் டிராமாவை பார்த்ததில்லை. 

வரிக்கு வரி Stand up comedian மாதிரி அவரின் டயலாக் டெலிவரியும் எக்ஸ்ப்ரெஷனும், சிரிப்பொலியால் அரங்கமே அதிர்ந்தது. அவருடைய மனைவியாக வரும் பத்மஜா மாமியும் அடிபொளி, அச்சு அசலாக அந்த கதா பாத்திரத்தில் பொருந்துகிறார். 

சுந்தராக வந்த பையன் படு சூட்டிகை. சுந்தரின் துறுதுறுப்பும், மாறும் முகபாவங்களும் படு சுவரஸ்யம்! Remember, there are no closeup shots in a drama! இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணினால் பிராமண பாஷையும் சுலபமா கத்துண்டுடலாம். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

 தசாவதாரத்தில் வரும் பல்ராம் நாயுடுவைப் போல கதாநாயகி வைஷாலி தமிழ் பேசினாலும், நல்ல எக்ஸ்பிரஷன்களால் நம்மை கவர்கிறார். She needs to work on her Tamil spoken skills. Not a big deal I guess.

ஜோ என்னமொ நம்ம பக்கத்தாத்து பையனாட்டம் படு ஜோவியலாக சீனு மாமாவின் வீட்டில் உலாத்துகிறார் அப்படியே நம் மனதிலும் தான்!லேசாக சுஜாதா ஜாடை வேறு!

டாக்டர், இன்ஸ்பெக்டர், பேய் விரட்டுபவர், ஏட்டு, சேஷகிரிராவ், ராமமூர்த்தி, அவர் அப்பா எல்லாருமே கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்கள். 

அந்த நிச்சியதார்த்தப் படலம் = a huge laugh riot! என்னதான் தலைவர் எழுதியிருந்தாலும் அதன் execution எவ்வளவு முக்கியம் என்பதை நினைவு படுத்தியது. RVS அண்ணா - நீங்க சேஷகிரிராவாக நடித்திருந்தாலும்  ஜோராக இருந்திருக்கும்! இதில் நடித்தவருக்கும் நல்ல Comical features. அந்தக்கால விகடனில் போடுவார்களே குடுமி வெச்சுண்டு ஒரு கார்டூன் அதே ஜாடை! அவரைப்  பார்த்தாலே சிரிப்பு பொத்துண்டு வரது. குடு குடுன்னு பஞ்சகச்சத்தை பிடிச்சுண்டு மேடையெல்லாம்  ஓடி சிரிப்புச் சரவெடிகளை கொளுத்திப் போடுகிறார். காட்சி முடியும் தருவாயில் லேசான வயிற்றுவலி, சிரிச்சு சிரிச்சு.

என்னுடைய கவலையெல்லாம் ரங்குவை பத்தி தான். நான் தான் சுஜாதாவின் விசிறி! இவர் இல்லையே.. என்ன நினைப்பாரோ, செய்வாரோன்னு ஒரே கவலை. ஃபேமிலி ட்ராமான்னு சொல்லிட்டு ஒரு ஈள் பூள் காட்சி கூட இல்லையேன்னு கேட்பாரோன்னு நினைச்சுண்டே வந்தேன். ஒவ்வொரு காட்சியின் முடியும் போது நன்னா இருக்கான்னு கேட்டுண்டே இருந்தேன். அந்த 2 மணி நேரத்தில,  ஒரு வாட்டி கூட கடிகாரத்தை பார்க்கலை, மொபைலை எடுக்கலை, SMS அனுப்பலை, ஈமெயில் பார்க்கலை, மிஸ்ட்கால்ஸ் செக் பண்ணலை! He was completely stuck to the play!

மாதங்கி, RVS அண்ணா, மாதங்கி அப்பா எல்லார்கிட்டேயும் பேசி சிரிச்சுண்டே பார்த்தேன். சுகானுபவம்!

இண்டர்வெல்லுக்கு சொல்லும்போது கூட ”எங்க காலத்துல இந்த உபாதையெல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்களுக்காக ஒரு 10 நிமிஷம் இடைவேளை”ன்னு எதிர்கால மனிதன் சொல்றச்சே படு சூப்பர்.. ஊபா.. ஊபா.. ஊபா...

”ஜோ, எங்கே சுந்தருக்காக ஒரு ஏப்பம் விடுன்னு சீனு மாமா கேட்க, ஜோ முயற்சித்து, வரலை”ன்னு சொல்வது, நச் சுஜாதா அக்மார்க் இல்லையோ?


சீனு மாமா, சுந்தர் & ஜோ மூணு பேரும் ப்ளான் பண்ணும் காட்சி முடியும் போது RVS அண்ணாவின் மானசா, ”ரெண்டு வாட்டி மணி அடிக்காமலே ஜோ போயிடுத்தே ”என்றாள் பளிச் மானஸா, வெல் டன்! வெரிகுட் அப்ஸர்வேஷன். 

RVS அண்ணா இண்டர்வெல்லில் வெளியே போயிட்டு வந்தப்போ யாருடனோ பேசிட்டு வந்தார். மாதங்கியிடம் நான் சொன்னேன்,” நிச்சியம் அவர் பிக் ஷாட்டாத் தான் இருக்கும் பாரேன்”னு.” யார் அவர்?”ன்னு அப்பாவியா கேட்டா, நான் சொன்னேன், ”தெரியாது அண்ணா வரட்டும் கேட்கலாம்”ன்னு. மாதங்கி என்னை ரொம்ப கேவலமா பார்த்தா.. ”யார்ன்னு தெரியாமலேயே பில்டப்பா”ன்னு ஹி ஹி. அப்புறம் அண்ணா வந்தப்புறம் தான் தெரிஞ்சது அவர் ப்ரியா கல்யாணராமன் குமுதம் குழும எடிட்டர்! நான் தான் சொன்னேனோல்லியோ? :) 

நேத்திக்கி கார்த்தால திண்டுக்கல் தனபாலன் அனுப்பின ஏதோ ஒரு லின்கில் போலிச்சாமியார்கள் பத்தி படிச்சுண்டு இருந்தேன். ஆனா கண் முன்னே நிதர்சனமா சில உண்மைகளை புரியறமாதிரி சொன்னது எனக்கு double impact! கடவுளாக இருந்தாலும் இருக்கலாம்ன்னு நான் அரை குறையா நினைச்சவர் உண்மையில் பெரிய hoax என்பது மனதை மிகவும் பாதித்த விஷயம். அதை ஊர்ஜிதப்படுத்தியது இந்த நாடகம்! சுஜாதாவோ, சீனு மாமாவோ, சுந்தரோ, லக்ஷ்மி மாமியோ.. உண்மை இதுதான்னு புரிஞ்சது இல்லையா? ஒரு 20% எனக்குள் இருந்த அசட்டு நம்பிக்கைக்கு சரியான சாட்டையடி!

”அப்போ உண்மை சொன்னேன், எல்லோரும் பைத்தியம்ன்னு சொன்னா, இப்போ பொய் சொல்றேன், கடவுள்ன்னு சொல்றா! ”Ironic, but how very true! 

 கடவுளா இருக்கும்போது, சொம்பில் விபூதி வரவழைப்பது, 4 வருஷத்துக்கு ஒரு வாட்டி மேஜிக் பண்ணி காட்டிக்கலாம்ன்னு சுந்தர் சொல்வது,” நிறைய நல்ல விஷயங்களுக்கு நிதி பயன்படுறது” எல்லாமே - it rings a bell. doesn't  it? இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, Nothing was missed at all. Every single dialogue made an impact! 

”இவன் இங்க்லீஷுல ஏமாத்தறான், அவன் தமிழ்ல ஏமாத்தறான்”னு டாக்டரையும் பேய் விரட்டுபவனையும் சொல்வது சுஜாதாவின் டிப்பிகல் நையாண்டி! அதே மாதிரி டாக்டரே, சீனு மாமா கடவுள்ன்னு ஊர்ஜிதப்படுத்திண்ட உடனே, ”எனக்கு 6 வருஷமா குழந்தையில்லை”ன்னு சரண்டர் ஆறது = ultimate class!

பாரதி மணி சார், நீங்க இன்னும் நூறாண்டு வாழ்ந்து, உங்க ட்ரூப்போட  நிறைய நாடகங்கள் போடணும் சார்.Of course with due sponsorship. இவ்வளவு சிறப்பான நாடகத்தை இலவசமா பார்த்த குற்ற உணர்ச்சியிலிருந்து நாங்க விடுபட சீக்கிரமே இன்னொரு நாடகம் போடுங்க.. காசு கொடுத்து தான் பார்ப்போம். இது சத்தியம்! 

எக்மோர் மியூசியம் ஹாலுக்கு போனப்போ ரெண்டு கேட் இருந்தது, மெயின் கேட் மாதிரி தெரியலை. வரும்போது ரங்கு அதே கேட் வழியா போயிடலாம் ஷார்ட்(!!) அப்படீன்னு சொன்னார். எனக்கு அந்த ஐடியா அவ்வளவா பிடிக்கலை. அவ்ளோ தூரம்(!) போயிட்டு பூட்டி இருந்தா கஷ்டம்ன்னு சொன்னேன். சரின்னு மனம் மாறிட்டார். நான் நம்ப முடியாமல், ”எப்படின்னா?”ன்னு கேட்டேன், ”ஒரு வேளை அந்த கேட் பூட்டியிருந்தா நீ அதை வீட்டுக்கு வர வரைக்கும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி காட்டுவே”ன்னு சுஜாதாவால் எழுதப்பட்ட சீனு மாமாவின் அதே டயலாக்கை எடுத்து விட்டாரே பார்க்கலாம்!  நான் சொன்ன மாதிரியே அந்த உபரி கேட்டு பூட்டித்தான் இருந்தது. இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!

14 comments:

Geetha Sambasivam said...

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளுக்கம்மா? இன்னும் எத்தனை நாளுக்கம்மா? ம்ம்ம்ம் ஓ.சியி. நாடகம், அதுவும் சுஜாதாவின் கடவுள் வந்தார் நாடகம் ம்யூசியம் தியேட்டரில் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண், காது, மூக்கு, வாய்னு புகை வருது, வாசனை அங்கே வந்திருக்குமே! பொறாமையா இருக்கு.

Geetha Sambasivam said...

நாடகங்கள் நிறையப் பார்த்திருக்கோம் ஒரு காலத்திலே எஸ்விஎஸ் ட்ரூப், சோவின் ட்ரூப், கலாகேந்திராவின் நாடகங்கள், எஸ்.வி.சேகரின் ட்ரூப் என நிறையப் பார்த்திருக்கோம். என்றாலும் இப்போப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. திரைப்படத்துக்குப் போறதை விட எனக்குப் பிடிச்சது நாடகம் பார்ப்பது தான். இப்போ எப்போவானும் கிரேஸி மோகனின் நாடகங்கள் தொலைக்காட்சியில் வரச்சே பார்க்கிறது தான். :((((

Matangi Mawley said...

"இவன் இங்க்லீஷுல ஏமாத்தறான், அவன் தமிழ்ல ஏமாத்தறான்"-- this is what I enjoyed the most in the show... :)

Even I never thought I would come across so many friends when I planned to go see the drama. It was a great experience meeting you and RVS (+family)there! Drama was fun. But having friends around to share that fun- made it feel even better... Very well written.. Nice touch- including that "big-shot" episode... ;) Such a pleasant event- that was...

திண்டுக்கல் தனபாலன் said...

/// காசு கொடுத்து தான் பார்ப்போம். இது சத்தியம்! ///

நம்புகிறோம்... வாழ்த்துக்கள்...

உங்களைப் போலேவே ரசனையான விமர்சனம் வாசிக்க... எனது இனிய நண்பரின் பதிவு :

http://www.seenuguru.com/2013/04/kadavul-vanthirunthar-sujatha.html

Matangi Mawley said...

A special kudos to Shri. Bharathi Mani sir and his team... It was an amazing effort... My dad has seen Mr. Poornam Vishwanathan's play.. Dad would tell this story when I'd refuse to eat my food. I would keep asking him if I would ever get to see the play. Fortunately, after so many years- I finally had the chance to see it... Thanks to the people who made it possible...

ஸ்ரீராம். said...

எல்லோருக்கும் பதிவு தேத்த நல்ல வாய்ப்பு! எல்லா இடத்திலும் நாடகானுபவங்கள்! ம்.... நடத்துங்க...நடத்துங்க!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஒரு வேளை அந்த கேட் பூட்டியிருந்தா நீ அதை வீட்டுக்கு வர வரைக்கும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி காட்டுவே”ன்னு//

இந்த ரங்கஸ் எல்லாம் இவ்ளோ சுதாரிச்சுட்டா நமக்கு போஸ்ட் எழுத மேட்டர் இல்லாம போய்டுமே அனன்யா... வொய் ப்ளட் சேம் ப்ளட்...:)))



//இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!//


எனக்கு இந்த போஸ்ட்லயே ரெம்ப பிடிச்ச வரி இதான்...:))))))))))



பத்மா அக்கா இந்த நாடகம் பத்தி சொல்லி இருந்தாங்க. கோவை டு சென்னை நாடகம் பாக்க கூட்டி போங்கனு கேட்டுருந்தா அப்புறம் ரங்கஸ் நல்ல லாயரா பாக்க போயடுவாரோனு விட்டுட்டேன். உன் விமர்சனம் நேர்ல பாத்த எபக்ட் குடுத்துடுச்சு. ஸ்டில், ஐ விஷ் ஐ வாஸ் தேர்...

திவாண்ணா said...

good comments! good post!

திவாண்ணா said...

//இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!//


எனக்கு இந்த போஸ்ட்லயே ரெம்ப பிடிச்ச வரி இதான்...:))))))))))


repeat!

sury siva said...

//இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!//
இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!

Parama Sathyam.

athu sari, naan ambathu varusamaa
kettunduthaane irukken, follow the dictum scrupulously 24 x 7
putusa enna irukku ithule,
ange ketkalinna sollunga,
human rights commission appadinnu
onnu irukku

subbu thatha.
www.subbuthatha.blogspot.com

Ananya Mahadevan said...

ஸ்ரீராம் அண்னா, பதிவு தேத்தறதுக்கு போடலை, உண்மைக்கலைஞர்களை Promote பண்றதுக்காக போட்டேன்!

Madhavan Srinivasagopalan said...

// பதிவு தேத்தறதுக்கு போடலை, உண்மைக்கலைஞர்களை Promote பண்றதுக்காக போட்டேன்! //

இந்த உலகம் இன்னுமாயா நம்பள நம்புது ?
சரி.. விடு விடு..
போ.. போ...

கௌதமன் said...

சாரி, நான் கொஞ்சம் லேட்டு. நல்ல நாடகத்திற்கு, நல்ல விமரிசனம். முக நூலில் நான் ஷேர் செய்ததற்கு பலன் இருந்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

முகநூலுக்குப் போகாதவர்களுக்கு எப்படித் தெரியும்:)
மணி சாரே இன்வைட் அனுப்பிச்சாதான்.
அனன்யா சூப்பர் விமர்சனம்.
மாதங்கினு ரொம்ப நாளைக்கு முன்னால் தெரிஞ்சதா ஞாபகம்.:)
எனக்கும் துணை கிடைத்தால் வந்திருப்பேன்.!!

Related Posts with Thumbnails