”ஃபேஸ்புக்கில் கல்லா கட்டுவது “ அப்படீன்னா என்ன?
சும்மாங்காச்சுக்கும் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுட்டு அதுக்கு கமெண்ட் வாங்குறது தான் கல்லா கட்டுவது..இது ப்ளாக்கர்களுக்கு புதிதில்லை என்றாலும் ஃபேஸ்புக்கில் பெரிய இம்சையாக இருக்கு. இப்போ வகை வகையான ஸ்ட்டேட்டஸ்களை பத்தி பார்ப்போம்.
1. புதிர் ஸ்டேட்டஸ்: யாருக்குமே விளங்காமல் ஸ்டேட்டஸ் போடுறது தான் இந்த புதிர் ஸ்டேட்டஸ்.
தன் வாழ்க்கையில் மட்டுமே பல கஷ்டங்கள்ன்னு புதிர் ஸ்டேட்டஸ் போடும் மக்கள்ஸ் இருக்கும் வரை அதில் கமெண்டுக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாக கீழ்க்கண்டவாறு இருக்கும்:
- "why me? why only me?" -ஹை.. ஜாலி.. உனக்கெல்லாம் நல்லா வேணும்!
- It happened to me again (என்ன எழவு நடந்ததுன்னு சொல்லலாம் இல்லே? மாட்டாங்க, நாம போய் என்னாச்சுப்பான்னு கேக்கணும் இல்லே? அப்போத்தானே கல்லா நிறையும்?)
- ”எனக்கு விமோசனமே இல்லையா?” - டேய் எருமை, இப்படியெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டா உனக்கெப்படி டா விமோச்சனம் கிடைக்கும்?
- எங்க வீட்டுல மட்டும் தான் பவர் போயிருக்கு sent from blackberry phone என்று வரும்! அந்த த்ரெட்டை முழுவதும் எக்ஸ்பாண்ட் பண்ணி பார்த்தா, எல்லாருமே, ”ஆமா, எங்க வீட்டுலேயும் இல்லே”ன்னு சொல்லி இருப்பாங்க! யாரு வீட்டுலேயுமே எப்பவுமே பவரே இல்லைடா வெண்ணைகளா!.
இந்த புதிர் ஸ்டேட்டஸின் ஸிக்னிஃபிக்கன்ஸ் என்னன்னா, நாம என்ன சொல்றோம்ன்னு யாருக்குமே புரியக்கூடாது.. என்னாச்சு என்னாச்சுன்னு அவங்களை நாம கேக்க வைக்கணும்- அதான் இருக்கு விசேஷம்.
2. சினிமாப் புதிர் ஸ்டேட்டஸ் - இதை அரட்டைக்கச்சேரி என்றும் சொல்லலாம். கி.மு வில் வந்த மிக சொதப்பலான ஆனால் அதிக பில்டப்புடன் வந்து பல்பு பலதும் வாங்கிய படங்களின் பெயர்களை புதிர்களாக வெளியிட்டு - அதாவது முதல் எழுத்து , கடைசி எழுத்து, மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை போட்டோம்னா கமெண்டு கல்லா கட்டலாம்! (எங்கள் ப்ளாகின் கவனத்துக்கு : - இது யாரையும் குறிப்பிட்டு சொல்வது அல்ல!ஐ.பி.எல் வந்தததனால் என்னை அரட்டைக் கச்சேரியில் சேர்த்துக்கொள்வதில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் இது எழுதப்படவில்லை ;-))
3.மடத்தனமாக உளறும் ஸ்டேட்டஸ் - ஏதாவது ஒரு ஃபோட்டோவின் நெகட்டிவ்வை எடுத்துக்கணும். ஏதாவது ஒரு பகுதியை பெயிண்டில் போட்டு வட்டமாகவோ செவ்வகமாகவோ வரைஞ்சு சிவப்பில் ஒரு புள்ளி வெச்சுக்கணும். அப்புறம் அது பக்கத்திலேயே இப்படி எழுதணும் “உலகத்திலேயே.. அவ்ளோ ஏன் இந்த யூனிவர்ஸ்லேயே முதல் தரமா அதிசியத்தை பார்க்கப் போறீங்க. என்னவா? கீழ்க்கண்ட படத்தை(?!!!) உடனடியாக லைக்குங்கள். அப்படியே ஷேர் செய்யுங்கள். அப்புறம் “நான் லூஸ்” என்று கமெண்டுங்கள். இப்போ என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க..நீங்க அசந்துருவீங்க.. சான்ஸே இல்லே” போல பேத்தலாக ஏதாவது எழுதவும். அப்புறம் என்ன, சும்ம்மா களை
கட்டும் கமெண்டு கல்லா!
4. ஃபோட்டோ ஸ்டேட்டஸ் - அடுத்தபடியாக ஏதாவது ஒரு பழைய ப்ளாக் அண்டு ஒயிட் ஃபோட்டோவை ஸ்கான் செய்யவும்.. அதுல யார் இருக்காங்கங்கறதெல்லாம் முக்கியம் இல்லே.. அது உங்க பக்கத்து வீட்டு பையனின் கஸினாகக்கூட இருக்கலாம். அதை அப்லோட் பண்ணிட்டு, "இது யாருன்னு கண்டுபிடிங்க"ன்னு போடணும்.. அப்புறம் என்ன, எல்லாருமே சச்சின் தான்/ தோனி தான்னு சொல்லி சண்டை போட்டுப்பாய்ங்க.. அப்புறம் நமக்கென்ன? கல்லா கன ஜோர் தானே?
5. சிம்ப்பதி ஸ்டேட்டஸ் - இந்த கல்லா கட்டுவதற்கு முக்கியமான தேவை சக நண்பர்களின் கருத்தொருமித்த கன்ஸெண்ட்.. அதுனால ஜெனரிக்கா ஏதாவது சாதா ஸ்டேட்டஸ் போட்டாலும் போதும்.. சண்டே அன்னிக்கி ப்ரைம் டைமில் டீ.வியில் போடும் த்ராபையான சினிமாக்கள்/ நிகழ்ச்சிகள் பத்தி போட்டா, வீட்டில் டீ.வியினால் நொந்து போய் ஃபேஸ்புக்கில் வரும் சக விக்டிம்ஸ் எல்லாம் வந்து கமெண்டி புலம்புவார்கள். அப்புறம் என்ன? சில்லறை நிறை நிறை தான்.
6. செலிப்ரிட்டி ஸ்டேட்டஸ் - டீ.வியில் கமலஹாசன், இளையராஜா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ் போன்றோர் வேலை செய்த படங்களை போட்டால், அதைப் பற்றி சிலாகித்து உடனே ஒரு டிஸ்கஷனை ஆரம்பியுங்க.. கல்லா... படு ஃபுல்லா கலெக்ட் ஆகும்.
போதும்ன்னு நினைக்கறேன்.. இதுக்கே எத்தனை கல்லு வந்து விழப்போறதோ தெரியலை! இத்துடன் இந்த கல்லா நிறைவடைகிறது... மீண்டும்... அய்யோ அடி தாங்கலை.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...
12 comments:
I know
TextBook
NoteBook
WorkBook..
but, no idea abt FaceBook.. can you please elaborate ?
முகநூலில் ஜஸ்ட் ஷேர் செய்பவர்கள் மட்டுமே நிறைய பேர் இருக்கிறார்கள். பெரிதாக ஒன்றும் எழுதுவதில்லை. மேலும் நாம் எழுதி உலகம் திருந்தி விடவா போகிறது? இருக்கிற 50 followers / friends ஐ வைத்துக் கொண்டு உலகை உய்ய முடியுமா என்ன! நம்ம மன அரிப்புக்கு ஏதோ எழுதி விட்டு போய்க்கினே இருக்க வேண்டியதுதான்! இதை வைத்து ஒரு ப்ளாக் பதிவு தேத்தி விட்ட நீவிர் வாழ்க!
அரட்டை அரங்கத்தில் தலை காட்டிவிட்டு உப்புமா செய்யப் பொய் விட்டால் 'எங்கள்' என்ன செய்யும், பாவம். அவர்கள் டீயை அவர்களே குடித்துக் கொண்டு இருந்ததால் நிறுத்தி விட்டார்கள்!!! டீக்கடையை மூடி விட்டார்கள்!!!
தமிழ் இலக்கியங்களை நுனிப் புல் மேயும் ஆசாமிகள் பற்றி எதுவும் எழுதவில்லையா?
http://kgjawarlal.wordpress.com
இதெல்லாம் எனக்கு புதுசுபா.இவ்வளவு இருக்கா!
ஃபேஸ்புக் என்றால் என்ன?
ஃபேஸ் புக்கில் படம் போட்டு கவிதை எழுதுபவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! நான் யாரையும் குறிப்பிடவில்லை. நிலாக் கவிஞர் பற்றி நிச்சயம் சொல்லவில்லை!
கல்லா கட்டுவது என்றால் என்ன?
இவ்வளவு இருக்கா...? இதுவரை தெரியாமப் போச்சே...!
ஆய்வுக்கு வாழ்த்துக்கள்...
இத வச்சே ஒரு பதிவே தேத்திடீங்க! பேஷ்..பேஷ்!!
அட இம்புட்டு இருக்கா...
சேதி தெரியாமப் போச்சே....
புதிர் ஸ்டேடஸ் சூப்பர் அனன்ஸ்... சிரிச்சுட்டே இருக்கேன்...:)
எங்கள் ப்ளாக் விடாதீங்க... உங்களை தான் சொல்லி இருக்கானு எனக்கு நிச்சியமா தோணுது... ஏதோ என்னால ஆனது...;)
ம.உலரும் ஸ்டேடஸ் எங்கயோ பாத்தாப்லே இருக்கே அனன்ஸ்... உன் பேஜ்ல தானோ...:)
போட்டோ ஐடியா நல்லா இருக்கே, ட்ரை பண்ணிடுவோம்...:)
சிம்பதி ஸ்டேடஸ் - யாரையோ தாக்கர மாதிரி இருக்கே... என்னமோ போ அனன்ஸ்...:)
Post a Comment