தெரியாம ஒரு Data Card USB Modem எடுத்துட்டேன்!! என்ன ரகளைங்கறேள்? யப்பா!
ஏப்ரல்14 தேதி வாக்கில ஒரு தோழிக்காக ஒரு டேட்டாகார்ட் வாங்கினேன். என்னுடைய மொபைல் நம்பர், ஆஃபீஸ் ஈமெயில் ஐடி எல்லாம் கொடுத்திருந்தேன். பத்தே நாளில் அதுக்கு பில் வந்தாச்சு. Billing cycleஆம்! சரி இருக்கட்டும். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையேன்னெல்லாம் சொல்லலை! ஒரு தரம் “பொன்னு ரங்கம் வந்திருக்கேன், மாது வந்திருக்கேன்”ன்னு சொன்னா போறாதா? வித விதமா அது படுத்தின பாடு இருக்கே! உஸ்ஸ்!
இனிவரும் பத்திகளில் ப்ராக்கெட்டுக்குள் இருப்பது என்னுடைய மைண்ட் வாய்ஸ் என்பது உங்களுக்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை.
- ஏப்ரல் 20 - உங்க யூஸேஜுக்கான பில் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது - SMS - (ஓ.. அதுக்குள்ளேயா?)
- ஏப்ரல் 21 - உங்கள் கோரிக்கையின் படி(??? நான் கோரவேயில்லையே) இனிமேல் உங்களுக்கு ஈபில் மட்டும் தான் வரும்!- SMS ( க்கும்.. சரி சரி நல்ல விஷயம் தானே? ரெண்டு பேப்பர் மிச்சம், மரம் வளர்ப்போம் (கோடை) மழை பெறுவோம்)
- ஏப்ரல் 21- உங்கள் ஈபில் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியாச்சு.(அப்புடி ஞாபகப்படுத்துறாங்களாமா!) - SMS
- ஏப்ரல் 21 - ஈ பில் - ஈமெயில் ( ஓக்கே!)
- ஏப்ரல் 22-உங்கள் பில் அமெளண்ட் 33 ரூபாய், அதை மே ஐந்துக்குள் செலுத்தவும். SMS (சரி செலுத்திருவோம். )
- ஏப்ரல் 23 - மே-5ஆந்தேதிக்குள் உங்க 33 ரூபாயை செலுத்திடுங்க - ரிமைண்டர் - SMS (இன்னிக்கு 23 தானே? நற நற)
- ஏப்ரல் 23 - மே 5ஆந்தேதிக்குள் நீங்க கட்ட வேண்டிய 33 ரூபாயை கீழ்க்கண்ட முகவரிகளிலும் கட்டலாமே - SMS (மறுபடியும் ரிமைண்டர், உன் தலையில தீயை வெக்க)
- ஏப்ரல் 24 - உங்கள் கோரிக்கைக்கு நாங்க கொடுத்திருக்கும் ரெஃபரன்ஸ் எண் - xxxxxxx. SMS (என்ன கோரிக்கை? ஒரு எழவும் புரியலையே?ஓ அந்த ஈ பில்லுக்கா, அதுக்கெதுக்கு இப்போ கோரிக்கை எண்ணெல்லாம்? நாராயணா.. கட்டித்தொலைச்சுடலாம் இன்னிக்கே!)
33 ரூபாய்க்கு பில் கட்டியவுடன் ஒரு ரெஸீட் கொடுத்தார்கள். அப்பாடி இனிமே இந்த தொல்லை இருக்காதுன்னு நினைச்சுண்டேன்!
அடுத்த செகண்ட் SMS ”நீங்கள் கட்டின தொகையை நாங்கள் பெற்றுக்கொண்டோம், நன்றி” (நீங்க திருந்தவே மாட்டீங்களாடா?)
நேற்று மிகவும் முக்கியமான ஒரு மெயிலை எதிர்ப்பார்த்திருந்தேன். சதா ஆஃபீஸ் மெயிலை ரிஃப்ரெஷ் பண்ணிக்கொண்டும் மற்ற விண்டோக்களில் ஏதோ வேலை செய்தபடி இருந்தேனா.. திடீரென்று வெப் மெயிலில் New Email என்று காட்டிற்று! அடடே.. அவாகிட்டே இருந்து தான் ரிப்ளை வந்திருக்கோன்னு ஓ......டிப்போய் பார்த்தா, மீண்டும் 33 ரூபாய்! இவாளுக்கு ஈமெயில் முகவரி கொடுத்தா பெரிய பிரச்சனைன்னு, யாருமே இல்லாத கடையான என் ஆஃபீஸ் மெயில் ஐடியை கொடுத்தது தவறாச்சு.
ஈ ரெஸீட்டாம்! நேர்லேயும் ஃபோன்லேயும் ரெஸீட் அனுப்பியாசோல்லியோ? இப்போ ஆகாசமார்க்கமாவும் ஈமெயில் ரெஸீட் அவசியமா? ஏண்டா இப்படி உயிரை வாங்கறேள்? மூதேவிகளா!
இதைப்பற்றி ரங்குவிடன் புலம்பின போது, அவர் சொன்ன விஷயம் மஹா ஆச்சரியமாக இருந்தது.இதே மாதிரி இன்னொரு சர்வீஸ் ப்ரொவைடரின் போஸ்ட் பெய்ட் ஃபோன் கனெக்ஷன் வெச்சுண்டு இருக்கார். அந்த பில் கட்டும்போது, ஒவ்வொரு நிலையிலும் SMS வருமாம்! அடக்கஷ்டகாலமே! Payment process initialized, processing, successful இப்படி! கொடுமை! இந்தக் கண்றாவியெல்லாம் முடிஞ்சுட்டு, கடைசியில் மறுபடியும் ஒரு SMS, Email வருமாம்! சுத்தம்!
பேசாம FD மாதிரி ஒரு பல்க் அமவுண்டை கட்டிட்டா இந்த பிரச்சினையில இருந்து விடுபட முடியுமான்னு யோசிச்சேன், அதுக்கும் தொல்லை தான்.. “நீங்கள் கட்ட வேண்டிய 33 ரூபாயை மொத்தத் தொகையிலிருந்து நாங்கள் கழித்து விட்டோம் இப்போ உங்கள் பாக்கிப் பணம் ____ எங்களிடம் தான் இருக்கிறது, உங்கள் யூஸேஜுக்குக் தகுந்தபடி தினசரி எவ்ளோ பணம் குறைந்துள்ளதுன்னு உங்களுக்கு அப்டேட்ஸ் கொடுத்துண்டே இருப்போம். நீங்கள் நிம்மதியாகவும்(??!!!) இருக்கலாம் ப்ளஸ் ஆனந்தமாக பிரவுஸ் செய்யலாம்” ன்னு ஆகாசமார்க்கமாவும், சூக்ஷ்மரூபம் எடுத்தும் வந்து என்னை டார்ச்சர் செய்வார்கள்! கஷ்டம் கஷ்டம்!
32 comments:
அக்கா... இது கிட்டத்தட்ட எல்லாருக்கும் நடக்குற விஷயம் தான்... ஆனா அதை காமெடியா பார்த்து எழுதுறது உன்னை போல வெகு சிலருக்கு மட்டுமே வரும்... பதிவு நல்லா இருக்கு.
33 ரூபாய்க்கு மொத்தம் 33 மெயில் வ்ரலாம்,நான் சொல்றதை சொல்லிட்டேன்,இனி என்ன செய்வீங்க,இனி என்ன தான் செய்யப் போறீங்க...ஹா ஹா!
இந்த மெஸேஜஸை தடுப்பதற்கு
அதிலே ஒரு ஆப்ஷன் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
நானும் ட்ரை பண்ணிப்பார்த்தேன்.
சரிப்படல்ல.
நன்னா வேணுன்டா உனக்கு, அனுபவி ராஜா அனுபவி
அப்படின்னு பாடிட்டு
ஸ்விச் ஆஃப் பண்ணிட்டு வச்சிட்டேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
//நன்னா வேணுன்டா உனக்கு, அனுபவி ராஜா அனுபவி
அப்படின்னு பாடிட்டு
ஸ்விச் ஆஃப் பண்ணிட்டு வச்சிட்டேன். // தாத்தா நேக்கு ஒரு டெளட்டு, நீங்க சுப்புத்தாத்தாவா இல்லே சூப்பர் தாத்தாவா? :)))
ஆஹா.. வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி! நன்றி மகேஷ்! கொஞ்ச நாளாச்சு நீ என் ப்ளாக்ல வந்து கமெண்ட் போட்டுட்டு! :)
ஆஸியா அக்கா.. ஒன் டே எலிஃபெண்ட் ஒன் டே கேட்டாக்கும்... நீங்களும் ஒரு நாள் டேட்டாகார்ட் வாங்காமலா போவீங்க? ;-)
உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். நல்லா இருக்கு.
யுவர் ஆனர், ஏன் இந்த கொலைவெறி?
உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து விட்டேன். சூப்பர் பதிவு.
உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து விட்டேன். சூப்பர் பதிவு. உறவினர்களுக்கு இந்தப் பதிவை சிபாரிசு செய்யப் போகின்றேன்.
உங்களுடைய முப்பத்து மூன்று ரூபாய் பதிவைப் படித்து விட்டேன். சூப்பர் பதிவு. உறவினர்களுக்கு இந்தப் பதிவை சிபாரிசு செய்யப் போகின்றேன்.
நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யப் போகின்றேன்.
சிபாரிசு செய்தவுடன் வந்து, 'சிபாரிசு செய்தாகிவிட்டது' என்று பின்னூட்டம் போடுவேன் என்பதை இங்கு முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kalyanamahadevi Gopala Gouthaman உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும், சிரித்து மகிழ, இந்த பதிவை சிபாரிசு செய்கின்றேன்!
a few seconds ago · Like
முதற்கண்ணும் வேண்டாம், கடைசிக்கண்ணும் வேண்டாம், நான் இனிமே பஜிவே போடலை.. ஆளவுடுங்க ஜாமியோவ்!
33 ரூபாய்க்கே இப்படினா 33000 ரூபாயா இருந்தா ???????
நல்லது... பதிவை விட கருத்துரைகள் கலக்கல்... ஹிஹி...
33 தடவை சிரித்தேன்...
33 முறை பின்னூட்டம் போடலாம்னு வந்தால் கல்யாணமஹாதேவி கோபால கெளதமன் முந்திட்டு இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில், ரெக்கார்டட் கணினிக் குரல்களைப் பற்றி கூறியிருப்பார். அவர் எழுதிய 'ஆ' என்ற கதையில் கதாநாயகன் மூளையில் அவனுக்கு மட்டும் கேட்கும் ஒரு பேய்க்குரல் சதா பேசிக்கொண்டிருக்கும்... அது போக போக அவனை இம்சைப்படுத்தும்... அது போல் இந்த ரெக்கார்டட் கணினிக்குரல்கள் உணர்ச்சியே இல்லாமல் பேசி நமக்கு தகவல் தெரிவிப்பதை ஒப்பிட்டு கூறியிருப்பார். அந்த லிஸ்ட்டில் இந்த 33 ரூபாய் வகை ரிமைண்டர் எஸ்.எம்.எஸ்.களும் நிச்சயம் சேரும்...
ஒரு நள்ளிரவு நல்ல தூக்கத்தில் இருக்கும்போது ஒரு எஸ்.எம்.எஸ் வந்து அலாரம் அடித்து எழுப்பியது. அது ஒரு விளம்பர எஸ்.எம்.எஸ் என்று தெரிந்து தூக்கத்தில் திட்டவும் முடியாமல் டெலிட் செய்துவிட்டு தூங்கினேன்.
இதே ரேஞ்சில் போனால், வருங்காலத்தில், 'நீங்கள் குளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது', 'இன்னும் 5 நிமிடத்தில் நீங்கள் உணவு உண்ண வேண்டும். நன்றி', 'நீங்கள் சாப்பிட வேண்டிய மாத்திரை இன்றோடு நிறைவடைகிறது. நலம்பெற வாழ்த்துக்கள்' போன்ற எஸ்.எம்.எஸ்-கள் நம்மை மேலும் இம்சை படுத்தலாம்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
ஹா...(33)
OMG Dreamer, Amazing imagination - ”தங்கள் மாத்திரை இன்றோடு முடிவடைகிறது, நலம் பெற வாழ்த்துக்கள்” என்னா வில்லத்தனம்?? :) சூப்பர்! இந்த போஸ்ட்டுக்கெல்லாம் நீங்க இவ்ளோ பெரிய ரிஸெர்ச் கமெண்டு போட்டு என்னை ப்ளாகை தன்யனாக்கி இருக்கீங்க.. நன்றிகள் பல..
கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி!
ஸ்ரீராம் அண்ணா - நச் கமெண்டு.. நீங்க இணையத்துல நிறைய ப்ளாக் ஸ்பேஸ் ஸேவ் பண்ணலாம்! சூப்பரப்பு!
@ராஜா அவர்களே, //33 ரூபாய்க்கே இப்படினா 33000 ரூபாயா இருந்தா ???????// அதான் கனெக்ஷனே வேண்டாம்ன்னு சொல்லிட்டா? :)
@ராஜா, ஒரு வேளை ஆட்டோவில் வந்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்களோ?
:-)))))))))))))))))))))))))))))))))))))))
எப்பிடி காமடியா எழுதுறது என்பதை உங்களிடம் படிக்க வேணும். உண்மையில் பதிவு நல்லா இருக்கு.
So hilarious!! Made the negative into positive by blogging about it :-))))
amas32
Reptile in the Fence..
Putting in Ear..
Crying 'kuththuthe kodaiyuthe'..
:-)
இவ்ளோ ரிமைண்டேர்ஸ் கொஞ்சம் ஓவர் தான்... ஆனா நல்லா விசாரிச்சு பாரு, உனக்கு மட்டும் தான் இப்படி வருதோ. நீ ஒரு ஆப்சென்ட் மைன்டெட் மன்னினு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சோ...:)
கடைசி பேரா கிளாஸ் அனன்ஸ்... சிரிச்சுட்டே இருக்கேன்...:))))
2002ல என் கசின்ஸ் கூட சேந்து ஒரு ஆகாவளி படம் போனோம்... அது பேரு "நைனா", ஜெயராம் நடிச்சது. அதுல "22 வருசத்துக்கு முன்னாடி" அப்படின்னு ஒரு டைலாக் ஆயிரம் வாட்டி வரும், மறக்கவே முடியாது. அதே போல் இந்த 33 ரூபாயும் இனி மறக்க முடியாதுனு நினைக்கிறேன்...:)
//'நீங்கள் சாப்பிட வேண்டிய மாத்திரை இன்றோடு நிறைவடைகிறது. நலம்பெற வாழ்த்துக்கள்' //
Dreamer - கனடால இந்த ரிமைன்டர் சர்விஸ் ஏற்கனவே இருக்கு. பார்மசில இருந்து அனுப்புவாங்க. இங்கயும் விரைவில் வந்துடும்னு நினைக்கிறேன்..:)
kg gouthaman - ROFL....:))))
@ அனன்யாக்கா - 33 ரூபாய் மேட்டர் சூப்பரா இருக்கு! நம்ப ப்ரானணை வாங்கர்தே பொழப்பா போச்சு எல்லாருக்கும்! :)
அக்கா ஒரு டவுவுவுட்டு - எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கும் சேரன்மகாதேவி ஊர் தெரியும் இது என்ன கல்யாண மஹாதேவி? :)
தக்குடுஜி - கல்யாணமஹாதேவி அடியேனின் மூதாதையர்களின் ஊர். திருவாரூர் பக்கத்தில், முன்னாள் முதல்வரின் தொகுதியைச் சேர்ந்த ஊர். என் தாத்தாவும், தாத்தாவின் முன்னோர்களும் வாழ்ந்த ஊர்.
இப்படிக்கு,
கல்யாணமஹாதேவி சுப்ரமண்ய, சேஷாசல, சுப்ரமண்ய, கோபால, கௌதமன்!
ஹஹஹா.. செம்ம காமெடி..
(அது சரி ஒண்ணுமே இல்லாத விஷயத்த எப்படி உங்களால இவ்வளவு காமெடியா எழுத முடியுது?)
ஆனா ஹ்யூமர் சென்ஸ வளத்துக்க உங்க பதிவுகள் எனக்கு நன்னா ஹெல்ப் பண்றது.. ;)
Post a Comment